திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 554

தொடர்ந்து படிக்கread this section continuously

கொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன்நல்லான் அடக்க முடையான் நடுச்செய்யவல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்இல்லா னியமத் திடைநின் றானே.

உரை

எவருக்கும் மனதளவிலும் தீங்கு நினைக்காதவன், பொய் கூறாதவன், களவு செய்யாதவன், எட்டு நற்குணங்களைக் கொண்டவன், நன்மை மட்டுமே நினைப்பவன், பணிவுடையவன், நீதி தவறாமல் செய்யவல்லான், பகிர்ந்து கொடுத்து உண்பவன், குற்றம் இல்லாதவன், கள்ளும் காமமும் இல்லாத தன்மையுடையவன், ஆகிய இவர்களே இயம ஒழுக்கத்தின் நடுவே நிற்பவர் ஆவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    எவருக்கும் மனதளவிலும் தீங்கு நினைக்காதவன், பொய் கூறாதவன், களவு செய்யாதவன், எட்டு நற்குணங்களைக் கொண்டவன்,

  • வரி 2

    நன்மை மட்டுமே நினைப்பவன், பணிவுடையவன், நீதி தவறாமல் செய்யவல்லான்,

  • வரி 3

    பகிர்ந்து கொடுத்து உண்பவன், குற்றம் இல்லாதவன், கள்ளும் காமமும்

  • வரி 4

    இல்லாத தன்மையுடையவன், ஆகிய இவர்களே இயம ஒழுக்கத்தின் நடுவே நிற்பவர் ஆவார்கள்.

திருமந்திரம் பாடல் #554

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout