திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 555

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆதியை வேதத்தின் அகப்பொரு ளானைச்சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப்பாதியுள் மன்னும் பராசத்தி யோடுடன்நீதியை உணர்ந்து நியமத்த னாமே.

உரை

ஆதியாய் முதற்பொருளாக இருப்பவனை, வேதத்தின் பொருளாக இருப்பவனை, அக்கினி சொரூபமானவனை, அக்கினியின் வெப்பமானவனை, திருமேனியில் சரிபாதியாகப் பராசத்தியோடு இருக்கும் இறைவனை உணர்ந்து, சத்தியத்தைக் கடைப்பிடிப்பவனே நியமத்தைக் கடைப்பிடிப்பவன் ஆவான்.

வரி வாரியாக

  • வரி 1

    ஆதியாய் முதற்பொருளாக இருப்பவனை, வேதத்தின் பொருளாக இருப்பவனை,

  • வரி 2

    அக்கினி சொரூபமானவனை, அக்கினியின் வெப்பமானவனை,

  • வரி 3

    திருமேனியில் சரிபாதியாகப் பராசத்தியோடு இருக்கும் இறைவனை உணர்ந்து,

  • வரி 4

    சத்தியத்தைக் கடைப்பிடிப்பவனே நியமத்தைக் கடைப்பிடிப்பவன் ஆவான்.

திருமந்திரம் பாடல் #555

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout