திருமூலர் அருளிய திருமந்திரம்
1. அட்டாங்க யோகம்

மூன்றாம் தந்திரம் பாடல் 549–552 (4 பாடல்கள்)

உரைத்தன வற்கரி ஒன்று மூடியநிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்பிரைச்சதம் எட்டையும் பேசியே நந்திநிரைத்த இயமம் நியமஞ்செய் தானே.

செய்த இயம நியமஞ் சமாதிசென்றுய்யப் பராசத்தி உத்தர பூருவமெய்த கவச நியாசங்கள் முத்திரைஎய்தவே உரைசெய்வன் இந்நிலை தானே.

அந்நெறி இந்நெறி என்னாதட் டாங்கந்தன்நெறி சென்று சமாதியி லேநின்மின்நன்னெறி செல்வார்க்கு ஞானத்தி லேகலாம்புன்னெறி யாகத்திற் போக்கில்லை யாகுமே.

இயம நியமமே எண்ணிலா ஆதனம்நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்சயமிகு தாரணை தியானஞ் சமாதிஅயமுறும் அட்டாங்க மாவது மாமே.

திருமந்திரம் பாடல் #549

1 / 4

0:000:00
1. அட்டாங்க யோகம்பாடல் 549

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout