திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 550

மூன்றாம் தந்திரம்1. அட்டாங்க யோகம்

தொடர்ந்து படிக்கread this section continuously

செய்த இயம நியமஞ் சமாதிசென்றுய்யப் பராசத்தி உத்தர பூருவமெய்த கவச நியாசங்கள் முத்திரைஎய்தவே உரைசெய்வன் இந்நிலை தானே.

உரை

உயிர்கள் தீயவற்றை போக்கி நன்மை தரக்கூடியவற்றே செய்து, இறை நினைப்பில் தன்னையே மறந்து சமாதி நிலையை அடைந்து, ஆதியிலிருந்தே பரம்பொருளாக இருக்கும் இறைவனை அடைவதற்கு துணையாக கவசம், நியாசம், முத்திரை ஆகிய மூன்று யோகங்கள் முன்னும் பின்னும் பாதுகாப்பாக உடன் வரும். இந்த உயர்ந்த நிலையை உயிர்கள் அடைய வேண்டும் என்பதற்காக இந்த யோக வழிகளைப் பற்றி கூறுவோம். கவசம் என்பது, சமாதி நிலையில் உயிர்களுக்குப் பாதுகாப்பாக உடலை மூடியிருக்கும் கோசங்களை மந்திர ஜபம் செய்து அடக்கியாள்வது. நியாசம் என்பது, தமது உடல் உறுப்புகளையே இறைவனது உறுப்புகளாக பாவனை செய்வது. முத்திரை என்பது, கை விரல்கள் மூலம் முத்திரைகளை, அதாவது யோக நிலை எண்ணங்களை கை விரல்கள் மூலம் அபிநயம் செய்து காட்டும் யோக நிலை.

வரி வாரியாக

  • வரி 1

    உயிர்கள் தீயவற்றை போக்கி நன்மை தரக்கூடியவற்றே செய்து, இறை நினைப்பில் தன்னையே மறந்து சமாதி நிலையை அடைந்து,

  • வரி 2

    ஆதியிலிருந்தே பரம்பொருளாக இருக்கும் இறைவனை அடைவதற்கு துணையாக கவசம், நியாசம், முத்திரை ஆகிய மூன்று யோகங்கள் முன்னும் பின்னும் பாதுகாப்பாக உடன் வரும். இந்த உயர்ந்த நிலையை உயிர்கள் அடைய வேண்டும் என்பதற்காக இந்த யோக வழிகளைப் பற்றி கூறுவோம்.

  • வரி 3

    கவசம் என்பது, சமாதி நிலையில் உயிர்களுக்குப் பாதுகாப்பாக உடலை மூடியிருக்கும் கோசங்களை மந்திர ஜபம் செய்து அடக்கியாள்வது. நியாசம் என்பது, தமது உடல் உறுப்புகளையே இறைவனது உறுப்புகளாக பாவனை செய்வது.

  • வரி 4

    முத்திரை என்பது, கை விரல்கள் மூலம் முத்திரைகளை, அதாவது யோக நிலை எண்ணங்களை கை விரல்கள் மூலம் அபிநயம் செய்து காட்டும் யோக நிலை.

திருமந்திரம் பாடல் #550

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout