தொடர்ந்து படிக்கread this section continuously
உரைத்தன வற்கரி ஒன்று மூடியநிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்பிரைச்சதம் எட்டையும் பேசியே நந்திநிரைத்த இயமம் நியமஞ்செய் தானே.
உரைmeaning
குருநாதராகிய சிவபெருமான் அட்டாங்க யோகத்தை அருளத் திருவுள்ளங் கொண்டு, தீமையைப் போக்குவதற்கும் (இயமம்) நன்மையைப் பெறுவதற்கும் (நியமம்) வழிவகை செய்தருளினான். பிராணாயாமம் மூலம் மூச்சுக் காற்றை இழுக்கவும் அடக்கி வைக்கவும் விடவும் வேண்டிய அளவுகளை பன்னிரண்டங்குலம் முதலான பலவகைகளாக முறைப்படுத்தி, அவற்றை எட்டு அங்கங்களைக் கொண்ட யோகமாக அமைத்து அருளினான்.
Sivan, the guru, in his gracious will to bestow ashtanga yoga, provided the means for driving away evil, which is yama, and for gaining good, which is niyama. He set in order the measures needed for pranayama, for drawing the breath in, holding it and releasing it, into their several kinds beginning with twelve fingers'-width, and graciously arranged them into a yoga of eight limbs.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
குருநாதராகிய சிவபெருமான் அட்டாங்க யோகத்தை அருளத் திருவுள்ளங் கொண்டு,
Sivan, the guru, in his gracious will to bestow ashtanga yoga,
- வரி 2Line 2
தீமையைப் போக்குவதற்கும் (இயமம்) நன்மையைப் பெறுவதற்கும் (நியமம்) வழிவகை செய்தருளினான்.
provided the means for driving away evil, which is yama, and for gaining good, which is niyama.
- வரி 3Line 3
பிராணாயாமம் மூலம் மூச்சுக் காற்றை இழுக்கவும் அடக்கி வைக்கவும் விடவும் வேண்டிய அளவுகளை பன்னிரண்டங்குலம் முதலான பலவகைகளாக முறைப்படுத்தி,
He set in order the measures needed for pranayama, for drawing the breath in, holding it and releasing it, into their several kinds beginning with twelve fingers' width,
- வரி 4Line 4
அவற்றை எட்டு அங்கங்களைக் கொண்ட யோகமாக அமைத்து அருளினான்.
and graciously arranged them into a yoga of eight limbs.
திருமந்திரம் பாடல் #549





