திருமூலர் அருளிய திருமந்திரம்
25. பெரியாரைத் துணைக்கோடல்

இரண்டாம் தந்திரம் பாடல் 543–548 (6 பாடல்கள்)

ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்பாடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன்தேடவல் லார்க்கருள் தேவர்பி ரானொடுங்கூடவல் லாரடியே கூடுவன் யானே.

தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்மாமனத் தங்கன்பு வைத்த திலையாகும்நீயிடர்ப் பட்டிருந் தென்செய்வாய் நெஞ்சமேபோமிடத்து என்னொடும் போதுகண் டாயே.

அறிவார் அமரர் தலைவனை நாடிச்செறிவார் பெறுவர் சிவதத் துவத்தைநெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்பெரியா ருடன்கூடல் பேரின்ப மாமே.

தார்சடை யான்றன் தமராய் உலகினிற்போர்புக ழாவெந்தை பொன்னடி சேருவர்வாயடை யாவுள்ளந் தேர்வார்க் கருள்செய்யுங்கோவடைந் தந்நெறியைக் கூடலு மாமே.

உடையான் அடியார் அடியா ருடன்போய்ப்படையா ரழன்மேனி பதியைப் புக்கேன்கடையார நின்றவர் கண்டறி விப்பஉடையான் வருகென ஓலமென் றாரே.

அருமைவல் லோன்கலை ஞானத்துள் தோன்றும்பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்உரிமைவல் லோன்உணர்ந் தூழி யிருக்குந்திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #543

1 / 6

0:000:00
25. பெரியாரைத் துணைக்கோடல்பாடல் 543

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com