திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 546

இரண்டாம் தந்திரம்25. பெரியாரைத் துணைக்கோடல்

தொடர்ந்து படிக்கread this section continuously

தார்சடை யான்றன் தமராய் உலகினிற்போர்புக ழாவெந்தை பொன்னடி சேருவர்வாயடை யாவுள்ளந் தேர்வார்க் கருள்செய்யுங்கோவடைந் தந்நெறியைக் கூடலு மாமே.

உரை

இறைவனின் அடியவர்கள் உலகத்து மன்னர்களைப் பொய்யாகப் புகழாமல், கயிறு போலத் திரித்து விரித்த சடையைக் கொண்டு வீற்றிருக்கும் நமது தந்தையான இறைவனை உண்மையான பக்தியோடு புகழ்ந்து, அவரது பொன்னான திருவடிகளைச் சேருவார்கள். இறைவனை வெறும் சொற்களால் மட்டும் போற்றி வணங்காமல், உண்மையான பக்தியோடு உள்ளம் உருகி வேண்டினால், அந்த இறைவனின் அடியவர்களின் துணையைப் பெற்று, அவர்களது வழியிலேயே சென்று இறைவனை அடையலாம்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனின் அடியவர்கள், உலகத்து மன்னர்களைப் பொய்யாகப் புகழாமல்,

  • வரி 2

    கயிறு போலத் திரித்து விரித்த சடையைக் கொண்ட நமது தந்தையை உண்மையான பக்தியோடு புகழ்ந்து, அவரது பொன்னான திருவடிகளைச் சேருவார்கள்.

  • வரி 3

    இறைவனை வெறும் சொற்களால் மட்டும் போற்றாமல், உண்மையான பக்தியோடு உள்ளம் உருகி வேண்டினால்,

  • வரி 4

    அந்த இறைவனின் அடியவர்களின் துணையைப் பெற்று, அவர்களது வழியிலேயே சென்று இறைவனை அடையலாம்.

திருமந்திரம் பாடல் #546

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout