திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 543

இரண்டாம் தந்திரம்25. பெரியாரைத் துணைக்கோடல்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்பாடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன்தேடவல் லார்க்கருள் தேவர்பி ரானொடுங்கூடவல் லாரடியே கூடுவன் யானே.

உரை

திருத்தலங்களுக்கு யாத்திரை செல்பவர்களுடன் யானும் நடப்பேன். இறைவனை பக்தியுடன் பாடக்கூடியவர்களின் பாடலைக் கேட்டு யானும் இன்புறுவேன். இறைவனைத் தனக்குள்ளே தேடி அடையக்கூடியவர்களுக்கு அருள்செய்யும் மகாதேவனுடன் இணையக்கூடிய ஆற்றல் கொண்ட பெரியோர்களின் திருவடியோடும் யானும் இணைந்திருப்பேன்.

வரி வாரியாக

  • வரி 1

    திருத்தலங்களுக்கு யாத்திரை செல்பவர்களுடன் யானும் நடப்பேன்.

  • வரி 2

    இறைவனைப் பக்தியுடன் பாடக்கூடியவர்களின் பாடலைக் கேட்டு யானும் இன்புறுவேன்.

  • வரி 3

    இறைவனைத் தனக்குள்ளே தேடி அடையக்கூடியவர்களுக்கு அருள்செய்யும் மகாதேவனுடன்,

  • வரி 4

    இணையக்கூடிய ஆற்றல் கொண்ட பெரியோர்களின் திருவடியோடு யானும் இணைந்திருப்பேன்.

திருமந்திரம் பாடல் #543

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout