திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 558

தொடர்ந்து படிக்கread this section continuously

பங்கய மாதி பரந்தபல் ஆதனம்அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்சொங்கில்லை யாகச் சுவத்திக மெனமிகத்தங்க இருப்பத் தலைவனு மாமே

உரை

பத்மாசனம் முதலாக பல ஆசனங்கள் உள்ளன. அவற்றுள் எட்டு ஆசனங்கள் முக்கியமானவை ஆகும். அந்த எட்டில் முதலானது சுவத்திகாசனம் ஆகும்; இதைச் சுகாசனம் என்றும் கூறுவர். இதைத் தவறாமல் தினம் செய்து உணர்ந்து இருப்பவரே எட்டு ஆசனங்களின் தலைவராவார்.

வரி வாரியாக

  • வரி 1

    பத்மாசனம் முதலாக பல ஆசனங்கள் உள்ளன.

  • வரி 2

    அவற்றுள் எட்டு ஆசனங்கள் முக்கியமானவை ஆகும்.

  • வரி 3

    அந்த எட்டில் முதலானது சுவத்திகாசனம் ஆகும்; இதைச் சுகாசனம் என்றும் கூறுவர்.

  • வரி 4

    இதைத் தவறாமல் தினம் செய்து உணர்ந்து இருப்பவரே எட்டு ஆசனங்களின் தலைவராவார்.

திருமந்திரம் பாடல் #558

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout