தொடர்ந்து படிக்கread this section continuously
பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரிசொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழும்உத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப்பத்தொடு நூறு பலஆ சனமே.
உரைmeaning
பத்திரம் (பத்திராசனம்), கோமுகம் (கோமுகாசனம்), பங்கயம் (பத்மாசனம்), கேசரி (சிங்காசனம்), சொத்திரம் (குக்குட ஆசனம்), வீரம் (வீராசனம்), சுகாதனம் ஆகிய இந்த ஏழு ஆசனங்களோடு, மிகவும் சிறப்பான சுவத்திகாசனமும் சேர்ந்து, எட்டு ஆசனங்கள் இறைவனை அடைய உதவும் அட்டாங்க யோகத்திற்கு முக்கியமானவை ஆகும். மற்ற ஆசனங்கள் எட்டும் சேர்ந்து பதினாறு, அவற்றோடு நூற்றிப் பத்தும் சேர்ந்து, மொத்தம் நூற்றிருபத்தாறு ஆசனங்கள் உள்ளன.
Bhadram, that is bhadrasana, gomukham, that is gomukhasana, pankajam, that is padmasana, kesari, that is simhasana, sotram, that is kukkutasana, veeram, that is veerasana, and sukhasanam, these seven asanas, together with the most special svastikasana, make the eight asanas important for the ashtanga yoga that helps one reach God. The other eight asanas together make sixteen, and together with those and a further hundred and ten, there are in all one hundred and twenty six asanas.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பத்திரம் (பத்திராசனம்), கோமுகம் (கோமுகாசனம்), பங்கயம் (பத்மாசனம்), கேசரி (சிங்காசனம்),
Bhadram, that is bhadrasana, gomukham, that is gomukhasana, pankajam, that is padmasana, kesari, that is simhasana,
- வரி 2Line 2
சொத்திரம் (குக்குட ஆசனம்), வீரம் (வீராசனம்), சுகாதனம் ஆகிய இந்த ஏழு ஆசனங்களோடு,
sotram, that is kukkutasana, veeram, that is veerasana, and sukhasanam, these seven asanas,
- வரி 3Line 3
மிகவும் சிறப்பான சுவத்திகாசனமும் சேர்ந்து, எட்டு ஆசனங்கள் இறைவனை அடைய உதவும் அட்டாங்க யோகத்திற்கு முக்கியமானவை ஆகும்.
together with the most special svastikasana, make the eight asanas important for the ashtanga yoga that helps one reach God.
- வரி 4Line 4
மற்ற ஆசனங்கள் எட்டும் சேர்ந்து பதினாறு, அவற்றோடு நூற்றிப் பத்தும் சேர்ந்து, மொத்தம் நூற்றிருபத்தாறு ஆசனங்கள் உள்ளன.
The other eight asanas together make sixteen, and together with those and a further hundred and ten, there are in all one hundred and twenty six asanas.
திருமந்திரம் பாடல் #563





