திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 564

மூன்றாம் தந்திரம்5. பிராணாயாமம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்உய்யக் கொண்டேறுங் குதிரைமற் றொன்றுண்டுமெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்பொய்யரைத் துள்ளி விழுத்திவிடுந் தானே.

உரை

உடலின் ஐம்புலன்களையும் உடையதாக, உடலுக்குத் தலைவனாக இருக்கும் ஆத்மா, இறைவனை அடைய மேல்நிலைக்குச் செல்ல, மனத்துடன் இணைந்த மூச்சுக்காற்று ஒன்று உள்ளது. அந்த மூச்சுக்காற்றைப் பயின்று உண்மையான இறைவனை அடைய எண்ணம் கொண்டோர்க்கு அது மனத்தை ஒருநிலைப்படுத்த நன்கு உதவும். இறைவுணர்வு இல்லாமல் தேவையில்லாதவற்றை நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கோ, அந்த மூச்சுக்காற்று அடங்காமல் அவர்களைக் கீழ்நிலைக்குக் கொண்டுசெல்லும்.

வரி வாரியாக

  • வரி 1

    உடலின் ஐம்புலன்களையும் உடையதாக, உடலுக்குத் தலைவனாக இருக்கும் ஆத்மா,

  • வரி 2

    இறைவனை அடைய மேல்நிலைக்குச் செல்ல, மனத்துடன் இணைந்த மூச்சுக்காற்று ஒன்று உள்ளது.

  • வரி 3

    அந்த மூச்சுக்காற்றைப் பயின்று உண்மையான இறைவனை அடைய எண்ணம் கொண்டோர்க்கு அது மனத்தை ஒருநிலைப்படுத்த நன்கு உதவும்.

  • வரி 4

    இறைவுணர்வு இல்லாமல் தேவையில்லாதவற்றை நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கோ, அந்த மூச்சுக்காற்று அடங்காமல் அவர்களைக் கீழ்நிலைக்குக் கொண்டுசெல்லும்.

திருமந்திரம் பாடல் #564

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout