திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 565

மூன்றாம் தந்திரம்5. பிராணாயாமம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆரிய னல்லன் குதிரை இரண்டுளவீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லைகூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்வாரிப் பிடிக்க வசப்படுந் தானே.

உரை

மனம் என்னும் ஆரியன் மிகவும் நல்லவன்; அவனிடம் இடகலை, அதாவது மூக்கின் இடது நாசித் துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம், பிங்கலை, அதாவது மூக்கின் வலது நாசித் துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம், என இரண்டு சுவாசங்கள் உள்ளன. அந்தச் சுவாசத்தை வெளியே விட்டு உள்ளே நிறுத்தி வைக்கும் திறமையை அறிபவர் யாரும் இல்லை. சீடனைப் பற்றி அனைத்தும் அறிந்த குருவின் அருள் பெற்றால், இடகலை பிங்கலை ஆகிய இரண்டு சுவாசங்களையும் அடக்கி மனத்தை ஒருநிலைப்படுத்தி நிலையாக வைக்கலாம்.

வரி வாரியாக

  • வரி 1

    மனம் என்னும் ஆரியன் மிகவும் நல்லவன்; அவனிடம் இடகலை, அதாவது மூக்கின் இடது நாசித் துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம்,

  • வரி 2

    பிங்கலை, அதாவது மூக்கின் வலது நாசித் துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம், என இரண்டு சுவாசங்கள் உள்ளன. அந்தச் சுவாசத்தை வெளியே விட்டு உள்ளே நிறுத்தி வைக்கும் திறமையை அறிபவர் யாரும் இல்லை.

  • வரி 3

    சீடனைப் பற்றி அனைத்தும் அறிந்த குருவின் அருள் பெற்றால்,

  • வரி 4

    இடகலை பிங்கலை ஆகிய இரண்டு சுவாசங்களையும் அடக்கி மனத்தை ஒருநிலைப்படுத்தி நிலையாக வைக்கலாம்.

திருமந்திரம் பாடல் #565

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout