தொடர்ந்து படிக்கread this section continuously
புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்கள்ளுண்ணவும் வேண்டாந் தானே களிதருந்துள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும்உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.
உரைmeaning
பறவையை விட வேகமாகச் செல்லக்கூடிய சுவாசத்தைப் பிராணாயாமம் செய்து தலையிலுள்ள சகஸ்ரதளத்தை நோக்கி எடுத்துச் சென்றால், மதுவை அருந்தாமலேயே மனம் மகிழ்ச்சி அடையும், அதாவது தன்னை மறந்த நிலையை அடையும். உடல் சுறுசுறுப்புடன் இருக்கும்; உடல் சோர்வு நீங்கும். இறைவனை உணர வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கே இந்த உண்மையைக் கூறுகிறோம்.
If one performs pranayama and carries the breath, which can move faster than a bird, toward the sahasradala at the crown of the head, the mind attains joy, that is, a state of forgetting oneself, without even drinking liquor. The body remains lively; bodily fatigue departs. We speak this truth only to those who hold the wish to realize God.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பறவையை விட வேகமாகச் செல்லக்கூடிய சுவாசத்தைப் பிராணாயாமம் செய்து தலையிலுள்ள சகஸ்ரதளத்தை நோக்கி எடுத்துச் சென்றால்,
If one performs pranayama and carries the breath, which can move faster than a bird, toward the sahasradala at the crown of the head,
- வரி 2Line 2
மதுவை அருந்தாமலேயே மனம் மகிழ்ச்சி அடையும், அதாவது தன்னை மறந்த நிலையை அடையும்.
the mind attains joy, that is, a state of forgetting oneself, without even drinking liquor.
- வரி 3Line 3
உடல் சுறுசுறுப்புடன் இருக்கும்; உடல் சோர்வு நீங்கும்.
The body remains lively; bodily fatigue departs.
- வரி 4Line 4
இறைவனை உணர வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கே இந்த உண்மையைக் கூறுகிறோம்.
We speak this truth only to those who hold the wish to realize God.
திருமந்திரம் பாடல் #566





