திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 567

மூன்றாம் தந்திரம்5. பிராணாயாமம்

தொடர்ந்து படிக்கread this section continuously

பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப்பிராண னிருக்கிற் பிறப்பிறப் பில்லைபிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்பிராண னடைபேறு பெற்றுண்டீர் நீரே.

உரை

பிராணாயாமத்தின் மூலமாகச் சுவாசத்தையும் மனத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒருநிலைப்படுத்தி, மூச்சுக்காற்றை இடகலை, பிங்கலை ஆகிய இரண்டு சுவாசங்களின் வழியாகச் செலுத்தி, சமாதி நிலையை, அதாவது தன்னை மறந்த நிலையை அடைந்தால், இனி வேறு பிறப்பின்றி, பிராணாயாமத்தினால் அடையக்கூடிய பலன்கள் அனைத்தையும் பெற்று இன்புற்று இருப்பீர்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    பிராணாயாமத்தின் மூலமாகச் சுவாசத்தையும் மனத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒருநிலைப்படுத்தி,

  • வரி 2

    மூச்சுக்காற்றை இடகலை, பிங்கலை ஆகிய இரண்டு சுவாசங்களின் வழியாகச் செலுத்தி,

  • வரி 3

    சமாதி நிலையை, அதாவது தன்னை மறந்த நிலையை அடைந்தால்,

  • வரி 4

    இனி வேறு பிறப்பின்றி, பிராணாயாமத்தினால் அடையக்கூடிய பலன்கள் அனைத்தையும் பெற்று இன்புற்று இருப்பீர்கள்.

திருமந்திரம் பாடல் #567

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout