தொடர்ந்து படிக்கread this section continuously
பாத முழந்தாளிற் பாணி களைநீட்டிஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக்கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச்சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே.
உரைmeaning
பாத நுனிகள் தரையில் அழுந்தும்படி வைத்து முழந்தாளிட்டுக் காலின் மேல் அமர்ந்து, கைகளைப் பின்புறமாகப் பாதங்களில் படும்படி நீட்டி வைத்து, வாயை ஆவெனப் பிளந்துகொண்டு அழகாக, கண்களை வேறெங்கும் சுழற்றாமல் மூக்கின் நுனியை நோக்கிப் பார்த்துக்கொண்டு இருப்பதே புகழ்பெற்ற சிங்காசனம் என்று கூறப்படும்.
Placing the tips of the feet pressed into the ground, kneeling and sitting upon the legs, stretching both hands back so they touch the feet, opening the mouth wide, and beautifully gazing toward the tip of the nose without turning the eyes elsewhere, this alone is called the famed simhasana.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாத நுனிகள் தரையில் அழுந்தும்படி வைத்து முழந்தாளிட்டுக் காலின் மேல் அமர்ந்து,
Placing the tips of the feet pressed into the ground, kneeling and sitting upon the legs,
- வரி 2Line 2
கைகளைப் பின்புறமாகப் பாதங்களில் படும்படி நீட்டி வைத்து, வாயை ஆவெனப் பிளந்துகொண்டு அழகாக,
stretching both hands back so they touch the feet, opening the mouth wide, and beautifully
- வரி 3Line 3
கண்களை வேறெங்கும் சுழற்றாமல் மூக்கின் நுனியை நோக்கிப் பார்த்துக்கொண்டு இருப்பதே
gazing toward the tip of the nose without turning the eyes elsewhere, this alone is
- வரி 4Line 4
புகழ்பெற்ற சிங்காசனம் என்று கூறப்படும்.
called the famed simhasana.
திருமந்திரம் பாடல் #562





