தொடர்ந்து படிக்கread this section continuously
ஒக்க அடியிணை யூருவில் ஏறிட்டுமுக்கி யுடலை முழங்கை தனில்ஏற்றித்தொக்க அறிந்து துளங்கா திருந்திடிற்குக்குட ஆசனமுங் கொள்ளலு மாமே.
உரைmeaning
பத்மாசனத்தில் உள்ளது போல் இரு பாதங்களையும் தொடையின் மேல் மாற்றி வைத்து, இரு கைகளையும் அத்தொடைகளின் இடைவெளியில் நுழைத்துத் தரையில் ஊன்றி முக்கிக்கொண்டு, உடம்பின் பாரத்தைக் கைகளில் தாங்கி உடலைத் தூக்கி நிறுத்தி அசையாமல் இருப்பதே குக்குட ஆசனம் ஆகும்.
Just as in padmasana, crossing both feet onto the thighs, passing both hands through the gap between those thighs and pressing them firmly against the ground, bearing the weight of the body on the hands, lifting the body up and holding it still without moving, this is kukkutasana.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பத்மாசனத்தில் உள்ளது போல் இரு பாதங்களையும் தொடையின் மேல் மாற்றி வைத்து,
Just as in padmasana, crossing both feet onto the thighs,
- வரி 2Line 2
இரு கைகளையும் அத்தொடைகளின் இடைவெளியில் நுழைத்துத் தரையில் ஊன்றி முக்கிக்கொண்டு,
passing both hands through the gap between those thighs and pressing them firmly against the ground,
- வரி 3Line 3
உடம்பின் பாரத்தைக் கைகளில் தாங்கி உடலைத் தூக்கி நிறுத்தி அசையாமல் இருப்பதே
bearing the weight of the body on the hands, lifting the body up and holding it still without moving,
- வரி 4Line 4
குக்குட ஆசனம் ஆகும்.
this is kukkutasana.
திருமந்திரம் பாடல் #561





