திருமூலர் அருளிய திருமந்திரம்
7. சிவ லிங்கம்

ஏழாம் தந்திரம் பாடல் 1773–1777 (5 பாடல்கள்)

குரைக்கின்ற வாறிற் குவலைய நீரும்பரக்கின்ற காற்றும் பயில்கின்ற தீயும்நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானைவரைத்து வலம்செய்யு மாறறி யேனே.

வரைத்து வலஞ்செய்யு மாறுமிங் கொன்றுண்டுநிரைத்து வருங்கங்கை நீர்மல ரேந்தியுரைத்த வனாம முணர வல்லார்க்குப்புரைத் தெங்கும்போகான் புரிசடை யோனே.

ஒன்றெனக் கண்டே னெம்மீச னொருவனைநன்றென் றடியிணை நானவனைத் தொழவென்றைம் புலனு மிகக்கிடந் தின்புறவன்றென் றருள்செய்யு மாதிப் பிரானே.

மலர்ந் தயன்மாலு முருத்திர மகேசன்பலந்தெழு மைமுகன் பரவிந்து நாதம்நலந்தரு சத்தி சிவன் வடிவாகிப்பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே.

மேவி யெழுகின்ற செஞ்சுட ரூடுசென்றாவி யெழுமள வன்றே யுடலுறமேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்பாவித் தடக்கிற் பரகெதி தானே.

திருமந்திரம் பாடல் #1773

1 / 5

0:000:00
7. சிவ லிங்கம்பாடல் 1773

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout