தொடர்ந்து படிக்கread this section continuously
வரைத்து வலஞ்செய்யு மாறுமிங் கொன்றுண்டுநிரைத்து வருங்கங்கை நீர்மல ரேந்தியுரைத்த வனாம முணர வல்லார்க்குப்புரைத் தெங்கும்போகான் புரிசடை யோனே.
உரைmeaning
பாடல் #1773 இல் சொல்லப்பட்டபடி, பஞ்ச பூதங்களால் ஆகிய அனைத்துமாகவும், அவை அனைத்தையும் தாண்டியும், அளவில்லாமல் இருக்கின்ற இறைவனை ஒரு எல்லைக்குள் வரையறுத்துத் தாம் இருக்கின்ற இடத்திலேயே வழிபாடு செய்கின்ற முறை ஒன்று இருக்கின்றது. எப்போதும் அசைந்து ஓடி வருகின்ற கங்கையாகப் பாவித்த தூய்மையான நீரையும், வாசனை மிக்க தூய்மையான மலரையும் கைகளில் ஏந்திக்கொண்டு, மனதிற்குள் ஜெபிக்கின்ற இறைவனின் திருநாமத்தின் மூலம் இறைவனைத் தமக்குள்ளேயே உணர முடிந்தவர்களுக்கு, கயிறு போலத் திரிந்த சடைமுடியைத் தலையில் அணிந்திருக்கின்ற அருள் வடிவான இறைவன், எங்கும் பொய்த்துப் போகாமல் மாறாத சத்தியமாக எப்போதும் உடன் இருப்பான்.
As in verse 1773, the Lord is everything made of the five elements, is beyond them all, and is without measure. Even so there is one way of bounding him within a limit and worshipping him in the very place where one stands. Holding in the hands pure water taken as the Ganga that always moves and runs, and a pure and fragrant flower, and realizing the Lord within oneself through his sacred name recited within the mind: for those who are able to do this, the Lord of the form of grace, who wears on his head matted locks twisted like rope, will be with them always as an unfailing and unchanging truth, and will not depart anywhere.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1773 இல் சொல்லப்பட்டபடி அளவில்லாமல் இருக்கின்ற இறைவனை ஒரு எல்லைக்குள் வரையறுத்து, தாம் இருக்கின்ற இடத்திலேயே வழிபாடு செய்கின்ற முறை ஒன்று இருக்கின்றது.
As in verse 1773 the Lord is without measure, and even so there is one way of bounding him within a limit and worshipping him in the very place where one stands.
- வரி 2Line 2
எப்போதும் அசைந்து ஓடி வருகின்ற கங்கையாகப் பாவித்த தூய்மையான நீரையும், வாசனை மிக்க தூய்மையான மலரையும் கைகளில் ஏந்திக்கொள்ள வேண்டும்.
One holds in the hands pure water taken as the Ganga that always moves and runs, and a pure and fragrant flower.
- வரி 3Line 3
மனதிற்குள் ஜெபிக்கின்ற இறைவனின் திருநாமத்தின் மூலம் இறைவனைத் தமக்குள்ளேயே உணர முடிந்தவர்களுக்கு அவன் அருள் செய்கின்றான்.
To those who are able to realize the Lord within themselves through his sacred name recited within the mind, he grants his grace.
- வரி 4Line 4
கயிறு போலத் திரிந்த சடைமுடியைத் தலையில் அணிந்திருக்கின்ற அருள் வடிவான இறைவன், எங்கும் பொய்த்துப் போகாமல் மாறாத சத்தியமாக எப்போதும் அவர்களுடன் இருப்பான்.
The Lord of the form of grace, who wears on his head matted locks twisted like rope, will be with them always as an unfailing and unchanging truth, and will not depart anywhere.
திருமந்திரம் பாடல் #1774
1 / 2





