தொடர்ந்து படிக்கread this section continuously
ஒன்றெனக் கண்டே னெம்மீச னொருவனைநன்றென் றடியிணை நானவனைத் தொழவென்றைம் புலனு மிகக்கிடந் தின்புறவன்றென் றருள்செய்யு மாதிப் பிரானே.
உரைmeaning
ஐந்து விதமான பூதங்களால் உருவாகிய அசையும் பொருள், அசையாப் பொருள் ஆகிய அனைத்தும் ஒன்றே என்று கண்டு தரிசித்து, எம் பரம்பொருளாகிய இறைவன் ஒருவனே அவை அனைத்துமாகவும் இருப்பதை உணர்ந்துகொண்டோம். ஆகவே அவை அனைத்தும் நன்மையானவை என்றும், இறைவனின் திருவடிகளுக்குச் சரிசமமானவை என்றும் யாம் அறிந்துகொண்டு, ஐந்து பூதங்களால் ஆகிய அனைத்திலும் அவனைக் கண்டு வணங்கினோம். அதன் பயனால், உலக ஆசைகளிலிருந்து வெற்றி பெற்ற எமது ஐந்து புலன்களும் இறைவனுடனே மிகவும் சேர்ந்து கிடந்து பேரின்பத்தில் திளைத்திருக்கும்படி, அப்பொழுதிலிருந்து என்றும் அருள் செய்கின்றான் ஆதி மூலத் தலைவனாகிய இறைவன்.
Seeing that everything made of the five elements, moving and unmoving alike, is one, we realized that our Lord, the supreme reality, alone is all of it. And so, knowing that all of it is good and that all of it is equal to the sacred feet of the Lord, we saw him in everything made of the five elements and worshipped him there. As the fruit of that, our five senses, victorious over the desires of the world, lie closely joined with the Lord and are steeped in supreme bliss; and from that moment onward the Lord, the primal first one, grants that grace forever.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஐந்து விதமான பூதங்களால் உருவாகிய அசையும் பொருள், அசையாப் பொருள் ஆகிய அனைத்தும் ஒன்றே என்று கண்டு தரிசித்து, எம் பரம்பொருளாகிய இறைவன் ஒருவனே அவை அனைத்துமாகவும் இருப்பதை உணர்ந்துகொண்டோம்.
Seeing that everything made of the five elements, moving and unmoving alike, is one, we realized that our Lord, the supreme reality, alone is all of it.
- வரி 2Line 2
ஆகவே அவை அனைத்தும் நன்மையானவை என்றும், இறைவனின் திருவடிகளுக்குச் சரிசமமானவை என்றும் யாம் அறிந்துகொண்டு, ஐந்து பூதங்களால் ஆகிய அனைத்திலும் அவனைக் கண்டு வணங்கினோம்.
And so, knowing that all of it is good and that all of it is equal to the sacred feet of the Lord, we saw him in everything made of the five elements and worshipped him there.
- வரி 3Line 3
அதன் பயனால், உலக ஆசைகளிலிருந்து வெற்றி பெற்ற எமது ஐந்து புலன்களும் இறைவனுடனே மிகவும் சேர்ந்து கிடந்து பேரின்பத்தில் திளைத்திருக்கின்றன.
As the fruit of that, our five senses, victorious over the desires of the world, lie closely joined with the Lord and are steeped in supreme bliss.
- வரி 4Line 4
அப்பொழுதிலிருந்து என்றும் அப்படியே அருள் செய்கின்றான் ஆதி மூலத் தலைவனாகிய இறைவன்.
And from that moment onward the Lord, the primal first one, grants that grace forever.
திருமந்திரம் பாடல் #1775
1 / 2





