தொடர்ந்து படிக்கread this section continuously
மேவி யெழுகின்ற செஞ்சுட ரூடுசென்றாவி யெழுமள வன்றே யுடலுறமேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்பாவித் தடக்கிற் பரகெதி தானே.
உரைmeaning
அசையா சக்திக்குள் கலந்திருக்கின்ற ஆசைகளாகிய அசையும் சக்தியும் சேர்ந்து எழுகின்ற சிவந்த சுடராகிய பேரொளியை ஊடுருவிச் சென்று, ஆசைகளை அனுபவிப்பதற்கு ஏற்ற வலிமை பெற்ற ஆன்மாவாகப் பலவாறாகப் பிரிந்து எழுகின்றன உயிர்கள். அதனதன் ஆசைகளின் அளவுக்கு ஏற்ப அப்போதே அவற்றுக்கு ஏற்ற உடலைத் தமது அருளால் உருவாக்கிக் கொடுத்து, அதற்குள் பொருந்தியிருந்து செயல்படுவதும், அந்த ஆன்மாக்களை விட்டு அனைத்திற்கும் மேலாக இருந்து தமது பேரருளால் அனைத்தையும் இயக்குவதும் பரம்பொருளாகிய இறைவனின் செயல்களே. அந்தத் தன்மைகளைத் தமக்குள்ளே உணர்ந்து, தாமும் அவராகவே பாவனை செய்து, தமது ஐந்து புலன்களையும் அடக்கி எண்ணங்கள் அற்ற நிலையை அடைந்தால், அனைத்திற்கும் மேலான இறை நிலையைத் தாமும் அடைய முடியும்.
Souls pass through the great red flame of light that rises when the moving power that is desire, mingled within the still power, joins with it, and they rise divided in many ways as souls with the strength fitted to undergo their desires. Then and there, according to the measure of each one's desires, the Lord in his grace makes a body fitted to them and gives it, and he dwells within that body and acts in it; and he also leaves those souls, stands above all things, and by his great grace sets everything in motion. These are the ways of the Lord, the supreme reality. Those who realize these ways within themselves, who take on his very bearing, who restrain their five senses and reach the state where thought has ceased, can themselves reach the state of God that is above all things.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அசையா சக்திக்குள் கலந்திருக்கின்ற ஆசைகளாகிய அசையும் சக்தியும் சேர்ந்து எழுகின்ற சிவந்த சுடராகிய பேரொளியை ஊடுருவிச் செல்கின்றன உயிர்கள்.
Souls pass through the great red flame of light that rises when the moving power that is desire, mingled within the still power, joins with it.
- வரி 2Line 2
ஆசைகளை அனுபவிப்பதற்கு ஏற்ற வலிமை பெற்ற ஆன்மாவாகப் பலவாறாகப் பிரிந்து எழுந்து, அதனதன் ஆசைகளின் அளவுக்கு ஏற்ப அப்போதே அவற்றுக்கு ஏற்ற உடலை இறைவன் தமது அருளால் உருவாக்கிக் கொடுக்கின்றான்.
They rise divided in many ways as souls with the strength fitted to undergo their desires, and then and there, according to the measure of each one's desires, the Lord in his grace makes a body fitted to them and gives it.
- வரி 3Line 3
அந்த உடலுக்குள் பொருந்தியிருந்து செயல்படுவதும், அந்த ஆன்மாக்களை விட்டு அனைத்திற்கும் மேலாக இருந்து தமது பேரருளால் அனைத்தையும் இயக்குவதும் பரம்பொருளாகிய இறைவனின் செயல்களே.
His dwelling within that body and acting in it, and his leaving those souls to stand above all things and set everything in motion by his great grace, are alike the ways of the Lord, the supreme reality.
- வரி 4Line 4
அந்தத் தன்மைகளைத் தமக்குள்ளே உணர்ந்து, தாமும் அவராகவே பாவனை செய்து, தமது ஐந்து புலன்களையும் அடக்கி எண்ணங்கள் அற்ற நிலையை அடைந்தால், அனைத்திற்கும் மேலான இறை நிலையைத் தாமும் அடைய முடியும்.
Those who realize these ways within themselves, who take on his very bearing, who restrain their five senses and reach the state where thought has ceased, can themselves reach the state of God that is above all things.
திருமந்திரம் பாடல் #1777
1 / 2





