திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1778

ஏழாம் தந்திரம்8. சம்பிரதாயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

உடல்பொரு ளாவி யுதகத்தாற் கொண்டுபடர்வினை பற்றறப் பார்த்துக் கைவைத்துநொடியிலடி வைத்து நுண்ணுணர் வாக்கிக்கடிய பிறப்பறக் காட்டின னந்தியே.

உரை

உடல், அதற்குள் பொருளாக மறைந்திருக்கின்ற இறைவன், ஆன்மா ஆகிய மூன்றும் சேர்ந்து, தாயின் கர்ப்பப் பைக்குள் இருக்கின்ற தண்ணீரில் பிறவி எடுத்துக்கொண்டு வரும்படி இறைவன் செய்கின்றான். அந்தப் பிறவியில் தமது ஆசைகளைத் தீர்த்துக்கொள்ளும்போது, அதனால் சேர்ந்துகொள்ளுகின்ற பல விதமான வினைகளால் உருவாகுகின்ற பற்றுக்கள் நீங்கும்படி, தமது திருக்கண்ணால் பார்த்து நயன தீட்சையையும், தமது திருக்கரங்களை வைத்து அபயம் கொடுத்து ஸ்பரிச தீட்சையையும், ஒரு கண நேரத்தில் தமது திருவடிகளை வைத்துத் திருவடி தீட்சையையும் அருளுகின்றான். அதன் மூலம் ஞானமாகிய நுண்ணியமான உணர்வுகளை ஆக்கிக் கொடுத்து ஞான தீட்சையையும் அருளி, துன்பங்களால் நீண்டுகொண்டே இருக்கின்ற பிறவிச் சுழற்சியிலிருந்து நீங்குவதற்கான வழியைக் காட்டி அருளினான், உள்ளுக்குள் குருநாதனாக இருக்கின்ற இறைவன்.

வரி வாரியாக

  • வரி 1

    உடல், அதற்குள் பொருளாக மறைந்திருக்கின்ற இறைவன், ஆன்மா ஆகிய மூன்றும் சேர்ந்து, தாயின் கர்ப்பப் பைக்குள் இருக்கின்ற தண்ணீரில் பிறவி எடுத்துக்கொண்டு வரும்படி இறைவன் செய்கின்றான்.

  • வரி 2

    அந்தப் பிறவியில் தமது ஆசைகளைத் தீர்த்துக்கொள்ளும்போது சேர்ந்துகொள்ளுகின்ற பல விதமான வினைகளால் உருவாகுகின்ற பற்றுக்கள் நீங்கும்படி, தமது திருக்கண்ணால் பார்த்து நயன தீட்சையையும், தமது திருக்கரங்களை வைத்து அபயம் கொடுத்து ஸ்பரிச தீட்சையையும் அருளுகின்றான்.

  • வரி 3

    ஒரு கண நேரத்தில் தமது திருவடிகளை வைத்துத் திருவடி தீட்சையை அருளி, அதன் மூலம் ஞானமாகிய நுண்ணியமான உணர்வுகளை ஆக்கிக் கொடுத்து ஞான தீட்சையையும் அருளுகின்றான்.

  • வரி 4

    துன்பங்களால் நீண்டுகொண்டே இருக்கின்ற பிறவிச் சுழற்சியிலிருந்து நீங்குவதற்கான வழியைக் காட்டி அருளினான், உள்ளுக்குள் குருநாதனாக இருக்கின்ற இறைவன்.

திருமந்திரம் பாடல் #1778

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout