திருமூலர் அருளிய திருமந்திரம்
10. வயிரவச் சக்கரம்

நான்காம் தந்திரம் பாடல் 1291–1296 (6 பாடல்கள்)

அறிந்த பிரதமை யோடாறு மறிஞ்சுஅறிந்தவச் சத்தமி மேலிவை குற்றம்அறிந்தவை யொன்றுவிட் டொன்றுபத் தாகஅறிந்த வலமது வாக நடவே.

நடந்து வயிரவன் சூல கபாலிகடந்த பகைவனைக் கண்ணது போக்கித்தொடர்ந்த வுயிரது வுண்ணும் பொழுதுபடர்ந்த வுடல்கொடு பந்தாட லாமே.

ஆமேவப் பூண்டரு ளாதி வயிரவனாமே கபாலமுஞ் சூலமுங் கைக்கொண்டங்காமே தமருக பாசமுங் கையதுவாமே சிரத்தொடு வாளது கையே.

கையவை யாறுங் கருத்துற நோக்கிடுமெய்யது செம்மை விளங்கு வயிரவன்துய்யரு ளத்தில் துளங்குமெய் யுற்றதாய்ப்பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே.

பூசனை செய்யப் பொருந்தியோ ராயிரம்பூசனை செய்ய மதுவுட னாடுமால்பூசனை சாந்து சவாது புழுகுநெய்பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே.

வேண்டிய வாறு கலகமு மாயிடும்வேண்டிய வாறினுள் மெய்யது பெற்றபின்வேண்டிய வாறு வரும்வழி நீநடவேண்டிய வாறது வாகுங் கருத்தே.

திருமந்திரம் பாடல் #1291

1 / 6

0:000:00
10. வயிரவச் சக்கரம்பாடல் 1291

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout