தொடர்ந்து படிக்கread this section continuously
வேண்டிய வாறு கலகமு மாயிடும்வேண்டிய வாறினுள் மெய்யது பெற்றபின்வேண்டிய வாறு வரும்வழி நீநடவேண்டிய வாறது வாகுங் கருத்தே.
உரைmeaning
பாடல் #1295 இல் உள்ள முறைகளின்படி பைரவரைப் பூஜித்து வழிபடுவதன் மூலமும், பாடல் #1293 இல் உள்ளபடி ஏற்கெனவே பெற்ற ஆறு வகை அருள்களின் மூலமும், சாதகர்கள் தம்மை நாடிவரும் தீமைகளை நன்மைகளாக மாற்றிவிட முடியும் என்று பாடல் கூறுகிறது. அந்த ஆறு வகை அருள்களுக்குள் இருக்கும் பேருண்மையான பரம்பொருளையும் தமக்குள் பெற்று உணர்ந்தபின், சாதகர்களுக்குள்ளிருந்து பரம்பொருள் காட்டும் வழியைப் பின்பற்றி அவர்கள் சாதகம் செய்யவேண்டும் என்றும், அவ்வாறு செய்துவந்தால் அவர்கள் என்ன நினைத்தாலும் அது அப்படியே நடக்கும் என்றும் பாடல் உரைக்கிறது.
As in verse #1295, the verse declares that through worshipping and adoring Bhairava by the methods given there, and through the six kinds of grace already received as in verse #1293, sadhakas can turn away the evils that come seeking them and change them into good. It states that once they have realized within themselves the great truth, the Supreme Being present within those six kinds of grace, they should follow the path the Supreme Being shows from within them and continue their sadhana, and that if they do so, whatever they think will come to pass exactly as they think it.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1295 இல் உள்ள முறைகளின்படி பைரவரைப் பூஜித்து வழிபடுவதன் மூலமும், பாடல் #1293 இல் உள்ளபடி ஏற்கெனவே பெற்ற ஆறு வகை அருள்களின் மூலமும், சாதகர்கள் தம்மை நாடிவரும் தீமைகளை நன்மைகளாக மாற்றிவிட முடியும் என்று பாடல் கூறுகிறது.
As in verse #1295, the verse declares that through worshipping and adoring Bhairava by the methods given there, and through the six kinds of grace already received as in verse #1293, sadhakas can turn away the evils that come seeking them and change them into good.
- வரி 2Line 2
அந்த ஆறு வகை அருள்களுக்குள் இருக்கும் பேருண்மையான பரம்பொருளையும் தமக்குள் பெற்று உணரவேண்டும் என்று பாடல் உரைக்கிறது.
The verse states that they should realize within themselves the great truth, the Supreme Being present within those six kinds of grace.
- வரி 3Line 3
சாதகர்களுக்குள்ளிருந்து பரம்பொருள் காட்டும் வழியைப் பின்பற்றி அவர்கள் சாதகம் செய்யவேண்டும் என்று பாடல் கூறுகிறது.
The verse declares that they should follow the path the Supreme Being shows from within them and continue their sadhana.
- வரி 4Line 4
அவ்வாறு செய்துவந்தால் அவர்கள் என்ன நினைத்தாலும் அது அப்படியே நடக்கும் என்று பாடல் உரைக்கிறது.
It states that if they do so, whatever they think will come to pass exactly as they think it.
திருமந்திரம் பாடல் #1296





