தொடர்ந்து படிக்கread this section continuously
ஆமேவப் பூண்டரு ளாதி வயிரவனாமே கபாலமுஞ் சூலமுங் கைக்கொண்டங்காமே தமருக பாசமுங் கையதுவாமே சிரத்தொடு வாளது கையே.
உரைmeaning
பாடல் #1292 இல் உள்ளபடி, சாதகரைச் சுற்றிப் படர்ந்து சாதகர் தரித்திருக்கும் பைரவச் சக்கரம் ஆதிமூலமாகிய பைரவரே கொடுத்தருளியது என்று பாடல் கூறுகிறது. பைரவரது அருள், பைரவச் சக்கரத்தைத் தரித்த சாதகரின் கைகளில் நுட்பமாக, இறப்பில்லாத நிலையை அருளும் கபாலமாகவும், தீய சக்திகளைத் தடுத்துநிற்கும் திரிசூலமாகவும், நன்மை தீமை ஆகிய இரு வினைகளையும் சேரவிடாமல் இருபுறமும் வரும் நாதத்தால் காத்தருளும் தமருகமாகவும், உலகப் பற்றுகளை அறுக்கும் பாசக் கயிறாகவும், பிறவி எடுப்பதற்கான கர்மங்களை அழிக்கும் சிரமாகவும், இனிவரும் பிறவிகளையும் அறுக்கும் வாளாகவும் இருக்கிறது என்று பாடல் உரைக்கிறது. கருத்து: பைரவர் அருளால் சாதகர் பெற்ற பைரவச் சக்கரத்தின் மூலம் சாதகர் இறப்பில்லாத நிலையையும் பெறுகிறார், தீய சக்திகள் அண்டவிடாமல் தடுக்கவும் படுகிறது, பிறவி எடுப்பதற்குக் காரணமான நன்மை தீமை ஆகிய இரு வினைகளும் இல்லாதொழிக்கப்படுகின்றன, உலகப் பற்றுகள் நீங்குகின்றன, ஏற்கெனவே உள்ள கர்மங்களால் இனி எடுக்கவேண்டிய பிறவிகளும் அறுபடுகின்றன என்று பாடல் கூறுகிறது.
As in verse #1292, the verse declares that the Bhairava chakra which spreads around and is worn by the sadhaka was itself granted by Bhairava, the primal source. It states that Bhairava's grace, subtly present in the hands of the sadhaka wearing the Bhairava chakra, exists as the skull-cup that grants the state beyond death, as the trident that holds back evil powers, as the damaru whose sound on both sides guards against good and bad karma joining together, as the noose-cord that severs worldly attachments, as the severed head that destroys the karmas that cause rebirth, and as the sword that cuts off births yet to come. Its gist: through the Bhairava chakra the sadhaka receives by Bhairava's grace, the sadhaka gains the state beyond death, is protected from evil powers drawing near, has the good and bad karmas that cause rebirth undone, is freed of worldly attachments, and has the births still owed by existing karma severed.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1292 இல் உள்ளபடி, சாதகரைச் சுற்றிப் படர்ந்து சாதகர் தரித்திருக்கும் பைரவச் சக்கரம் ஆதிமூலமாகிய பைரவரே கொடுத்தருளியது என்று பாடல் கூறுகிறது.
As in verse #1292, the verse declares that the Bhairava chakra which spreads around and is worn by the sadhaka was itself granted by Bhairava, the primal source.
- வரி 2Line 2
பைரவரது அருள், சாதகரின் கைகளில் நுட்பமாக இறப்பில்லாத நிலையை அருளும் கபாலமாகவும், தீய சக்திகளைத் தடுத்துநிற்கும் திரிசூலமாகவும் இருக்கிறது என்று பாடல் உரைக்கிறது.
The verse states that Bhairava's grace, subtly present in the sadhaka's hands, exists as the skull-cup that grants the state beyond death and as the trident that holds back evil powers.
- வரி 3Line 3
நன்மை தீமை ஆகிய இரு வினைகளையும் சேரவிடாமல் காத்தருளும் தமருகமாகவும், உலகப் பற்றுகளை அறுக்கும் பாசக் கயிறாகவும் இருக்கிறது என்று பாடல் கூறுகிறது.
It declares that it also exists as the damaru that guards against good and bad karma joining together, and as the noose-cord that severs worldly attachments.
- வரி 4Line 4
பிறவி எடுப்பதற்கான கர்மங்களை அழிக்கும் சிரமாகவும், இனிவரும் பிறவிகளையும் அறுக்கும் வாளாகவும் இருக்கிறது என்று பாடல் உரைக்கிறது.
It states that it exists as the severed head that destroys the karmas that cause rebirth, and as the sword that cuts off births yet to come.
திருமந்திரம் பாடல் #1293





