தொடர்ந்து படிக்கread this section continuously
நடந்து வயிரவன் சூல கபாலிகடந்த பகைவனைக் கண்ணது போக்கித்தொடர்ந்த வுயிரது வுண்ணும் பொழுதுபடர்ந்த வுடல்கொடு பந்தாட லாமே.
உரைmeaning
பாடல் #1291 இல் உள்ளபடி, குறிப்பிட்ட திதிகளில் முறைப்படித் தியானம் செய்து பைரவரை மானசீகமாக வழிபடும்போது, திரிசூலத்தையும் கபாலத்தையும் தமது திருக்கைகளில் ஏந்திக்கொண்டு சாதகருக்குள்ளிருந்து பைரவர் வெளிப்பட்டு, இதுவரை சாதகர் கடந்துவந்த அனைத்துத் தீய கர்மங்களையும் தமது திருக்கண்களால் சுட்டெரித்து அழித்து அருள்வார் என்று பாடல் கூறுகிறது. அதன்பிறகு இனிவரும் தீய சக்திகளும் சாதகரைப் பாதிக்காதவாறு தடுத்துக் காப்பாற்றும் சக்கர அமைப்பைச் சாதகரைச் சுற்றிப் படரச் செய்து அருள்வார் என்றும், சாதகர் தமது வழிபாட்டைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கும்போது அவரைச் சுற்றிப் படர்ந்திருக்கும் இந்தச் சக்கர அமைப்பின் மூலம் இனிவரும் தீய கர்மங்களையும் நெருங்க விடாமல் விரட்ட முடியும் என்றும் பாடல் உரைக்கிறது.
As in verse #1291, the verse declares that when one performs proper meditation on the appointed tithis and worships Bhairava mentally, Bhairava, bearing the trident and the skull-cup in his sacred hands, emerges from within the sadhaka and, with his sacred eyes, burns away and destroys all the bad karmas the sadhaka has carried until then. It further states that thereafter he graciously spreads around the sadhaka a chakra-formation that protects and shields him from any evil power yet to come, and that as the sadhaka continues the worship, that chakra-formation surrounding him lets the sadhaka drive away and keep at bay any future bad karma before it can draw near.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1291 இல் உள்ளபடி, குறிப்பிட்ட திதிகளில் முறைப்படித் தியானம் செய்து பைரவரை மானசீகமாக வழிபடும்போது, திரிசூலத்தையும் கபாலத்தையும் தமது திருக்கைகளில் ஏந்திக்கொண்டு சாதகருக்குள்ளிருந்து பைரவர் வெளிப்படுவார் என்று பாடல் கூறுகிறது.
As in verse #1291, the verse declares that when one performs proper meditation on the appointed tithis and worships Bhairava mentally, Bhairava, bearing the trident and the skull-cup in his sacred hands, emerges from within the sadhaka.
- வரி 2Line 2
இதுவரை சாதகர் கடந்துவந்த அனைத்துத் தீய கர்மங்களையும் தமது திருக்கண்களால் சுட்டெரித்து அழித்து அருள்வார் என்று பாடல் கூறுகிறது.
The verse declares that, with his sacred eyes, he burns away and destroys all the bad karmas the sadhaka has carried until then.
- வரி 3Line 3
அதன்பிறகு இனிவரும் தீய சக்திகளும் சாதகரைப் பாதிக்காதவாறு தடுத்துக் காப்பாற்றும் சக்கர அமைப்பைச் சாதகரைச் சுற்றிப் படரச் செய்து அருள்வார் என்று பாடல் உரைக்கிறது.
It further states that thereafter he graciously spreads around the sadhaka a chakra-formation that protects and shields him from any evil power yet to come.
- வரி 4Line 4
சாதகர் தமது வழிபாட்டைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கும்போது, இந்தச் சக்கர அமைப்பின் மூலம் இனிவரும் தீய கர்மங்களையும் நெருங்க விடாமல் விரட்ட முடியும் என்று பாடல் கூறுகிறது.
It declares that as the sadhaka continues the worship, that chakra-formation surrounding him lets the sadhaka drive away and keep at bay any future bad karma before it can draw near.
திருமந்திரம் பாடல் #1292





