திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1294

நான்காம் தந்திரம்10. வயிரவச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கையவை யாறுங் கருத்துற நோக்கிடுமெய்யது செம்மை விளங்கு வயிரவன்துய்யரு ளத்தில் துளங்குமெய் யுற்றதாய்ப்பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே.

உரை

பாடல் #1293 இல் உள்ளபடி, சாதகரிடம் நுட்பமாக இருக்கும் ஆறு கைகளிலும் ஏந்தியிருக்கும் பைரவர் கொடுத்தருளிய ஆறு ஆயுதங்களையும் எண்ணத்தில் வைத்து ஆராய்ந்து பார்த்தால், சாதகரின் உடலுக்குள்ளேயே வந்து செம்மையான அருள் வடிவமாக வீற்றிருக்கும் பைரவரை அறிந்துகொள்ளலாம் என்று பாடல் கூறுகிறது. அதன்படி சாதகருக்குள் வந்து வீற்றிருக்கும் பைரவர் தமது தூய்மையான அருளைச் சாதகருக்குக் கொடுத்து, அவருக்குள் இருக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் நீக்கிப் பேருண்மையாக விளங்கும் பரம்பொருளை உணரும்படி அருள்வார் என்றும், அதன்பிறகு பொய்யான மாயை, அகங்காரம் ஆகியவற்றை விட்டுவிட்டுச் சாதகர்கள் பைரவரைப் பூஜித்து வழிபடுவார்கள் என்றும் பாடல் உரைக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1293 இல் உள்ளபடி, சாதகரிடம் நுட்பமாக இருக்கும் ஆறு கைகளிலும் ஏந்தியிருக்கும் பைரவர் கொடுத்தருளிய ஆறு ஆயுதங்களையும் எண்ணத்தில் வைத்து ஆராய்ந்து பார்த்தால், சாதகரின் உடலுக்குள்ளேயே வந்து வீற்றிருக்கும் பைரவரை அறிந்துகொள்ளலாம் என்று பாடல் கூறுகிறது.

  • வரி 2

    அதன்படி சாதகருக்குள் வந்து வீற்றிருக்கும் பைரவர் தமது தூய்மையான அருளைச் சாதகருக்குக் கொடுப்பார் என்று பாடல் உரைக்கிறது.

  • வரி 3

    அவருக்குள் இருக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் நீக்கிப் பேருண்மையாக விளங்கும் பரம்பொருளை உணரும்படி அருள்வார் என்று பாடல் கூறுகிறது.

  • வரி 4

    அதன்பிறகு பொய்யான மாயை, அகங்காரம் ஆகியவற்றை விட்டுவிட்டுச் சாதகர்கள் பைரவரைப் பூஜித்து வழிபடுவார்கள் என்று பாடல் உரைக்கிறது.

திருமந்திரம் பாடல் #1294

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout