திருவருட்பா · 112மெய்யருள் வியப்பு

தனிபெருங்கருணை

எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்த மோ
இந்தப் பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்த மோ.
1
தனக்கு நிகரிங் கில்லா துயர்ந்த தம்பம் ஒன்ற தே
தாவிப் போகப் போக நூலின் தரத்தில் நின்ற தே
கனக்கத் திகைப்புற் றங்கே நானும் கலங்கி வருந்த வே
கலக்கம் நீக்கித் தூக்கி வைத்தாய் நிலைபொ ருந்த வே.
எனக்கும் உனக்கும்
2
இங்கோர் மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் நணுக வே
ஏறிப் போகப் போக நூலின் இழைபோல் நுணுக வே
அங்கே திகைத்து நடுங்கும் போதென் நடுக்கம் நீக்கி யே
அதன்மேல் உயர்ந்த நிலையில் வைத்தாய் அடிமை ஆக்கி யே.
எனக்கும் உனக்கும்
3
இரவில் பெரிய வெள்ளம் பரவி எங்கும் தயங்க வே
யானும் சிலரும் படகில் ஏறி யேம யங்க வே
விரவில் தனித்தங் கென்னை ஒருகல் மேட்டில் ஏற்றி யே
விண்ணில் உயர்ந்த மாடத் திருக்க விதித்தாய் போற்றி யே.
எனக்கும் உனக்கும்
4
மேலைப் பாற்சிவ கங்கை என்னுமோர் தீர்த்தம் தன்னை யே
மேவிப் படியில் தவறி நீரில் விழுந்த என்னை யே
ஏலத் துகிலும் உடம்பும் நனையா தெடுத்த தேஒன் றோ
எடுத்தென் கரத்தில் பொற்பூண் அணிந்த இறைவன் நீயன் றோ.
எனக்கும் உனக்கும்
5
என்ன துடலும் உயிரும் பொருளும் நின்ன தல்ல வோ
எந்தாய் இதனைப் பெறுக எனநான் இன்று சொல்ல வோ
சின்ன வயதில் என்னை ஆண்ட திறத்தை நினைக்கு தே
சிந்தை நினைக்கக் கண்ர் பெருக்கி உடம்பை நனைக்கு தே.
எனக்கும் உனக்கும்
6
அப்பா நின்னை அன்றி எங்கும் அணைப்பார் இல்லை யே
அந்தோ நின்னை அன்றி எங்கும் அருள்வார் இல்லை யே
எப்பா லவர்க்கும் நின்னை அன்றி இறைமை இல்லை யே
எனக்கும் நின்மே லன்றி உலகில் இச்சை இல்லை யே.
எனக்கும் உனக்கும்
7
அரசே உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்கு தே
அணைப்போம் என்னும் உண்மை யால்என் ஆவி தங்கு தே
விரைசேர் பாதம் பிடிக்க என்கை விரைந்து நீளு தே
மேவிப் பிடித்துக் கொள்ளுந் தோறும் உவகை ஆளு தே.
எனக்கும் உனக்கும்
8
தனிஎன் மேல்நீ வைத்த தயவு தாய்க்கும் இல்லை யே
தகும்ஐந் தொழிலும் வேண்டுந் தோறும் தருதல் வல்லை யே
வினவும் எனக்கென் உயிரைப் பார்க்க மிகவும் நல்லை யே
மிகவும் நான்செய் குற்றம் குறித்து விடுவாய் அல்லை யே.
எனக்கும் உனக்கும்
9
என்னை ஆண்ட வண்ணம் எண்ணில் உள்ளம் உருகு தே
என்னை விழுங்கி எங்கும் இன்ப வெள்ளம் பெருகு தே
உன்ன உன்ன மனமும் உயிரும் உடம்பும் இனிக்கு தே
உன்னோ டென்னை வேறென் றெண்ணில் மிகவும் பனிக்கு தே.
எனக்கும் உனக்கும்
10
உன்பே ரருளை நினைக்குந் தோறும் உடம்பு பொடிக்கு தே
உண்டு பசிதீர்ந் தாற்போல் காதல் மிகவும் தடிக்கு தே
அன்பே அமையும் என்ற பெரியர் வார்த்தை போயிற் றே
அன்போர் அணுவும் இல்லா எனக்கிங் கருளல் ஆயிற் றே.
எனக்கும் உனக்கும்
11
நினைக்க நினைக்கத் தித்திப் பெனது நினைவில் கொடுக்கு தே
நின்பால் அன்றிப் பிறர்பால் செல்ல நெஞ்சம் நடுக்கு தே
எனைத்துன் பொழித்தாட் கொண்ட நின்னை அன்னை என்ப னோ
எந்தாய் அன்பி லேன்நின் னடிக்கு முன்னை அன்ப னோ.
எனக்கும் உனக்கும்
12
உன்னை மறக்கில் எந்தாய் உயிர்என் உடம்பில் வாழு மோ
உன்பால் அன்றிப் பிறர்பால் என்றன் உள்ளம் சூழு மோ
என்னைக் கொடுக்க வாங்கிக் கொண்ட தென்ன கருதி யோ
எந்தாய் நின்னைக் கொடுக்க என்பால் இன்று வருதி யோ.
எனக்கும் உனக்கும்
13
நெடுநாள் முயன்றும் காண்டற் கரிய நிலையைக் காட்டி யே
நிறைந்தென் அகத்தும் புறத்தும் சூழ்ந்தாய் ஒளியை நாட்டி யே
நடுநா டியநின் அருளுக் கென்மேல் என்ன நாட்ட மோ
நாய்க்குத் தவிசிட் டனைநின் தனக்கிங் கிதுவோர் ஆட்ட மோ.
எனக்கும் உனக்கும்
14
நாகா திபனும் அயனும் மாலும் நறுமு றென்ன வே
ஞான அமுதம் அளித்தாய் நானும் உண்டு துன்ன வே
சாகாக்கலையை எனக்குப் பயிற்றித் தந்த தயவை யே
சாற்றற் கரிது நினக்கென் கொடுப்ப தேதும் வியவை யே.
எனக்கும் உனக்கும்
15
யாது கருதி என்னை ஆண்ட தைய ஐய வோ
யானுன் அடிப்பொற் றுணைகட் குவந்து தொழும்பு செய்ய வோ
ஓது கடவுட் கூட்டம் அனைத்தும் அடிமை அல்ல வோ
உடையாய் அவர்க்குள் எனையும் ஒருவன் என்று சொல்ல வோ.
எனக்கும் உனக்கும்
16
தலையும் காலும் திரித்து நோக்கித் தருக்கி னேனை யே
தாங்கித் தெரித்த தயவை நினைக்கில் உருக்கு தூனை யே
புலையும் கொலையும் தவிர்ந்த நெறியில் புனிதர் மதிக்க வே
புகுவித் தாயை என்வாய் துடிப்ப தேத்தித் துதிக்க வே.
எனக்கும் உனக்கும்
17
தாயே எனக்குத் தயவு புரிந்த தருணத் தந்தை யே
தனியே நின்னை நினைக்கக் கிளர்வ தெனது சிந்தை யே
நாயேன் எண்ணம் அனைத்தும் முடித்துக் கொடுத்த பண்ப னே
நான்செய் தவத்தால் எனக்குக் கிடைத்த நல்ல நண்ப னே.
எனக்கும் உனக்கும்
18
ஏறா நிலையில் விரைந்து விரைந்திங் கென்னை ஏற்றி யே
இறங்கா திறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றி யே
மாறாக் கருணை என்மேல் வைக்க வந்த தென்னை யோ
மதியி லேன்நின் அருட்குச் செய்த தவந்தான் முன்னை யோ.
எனக்கும் உனக்கும்
19
இடமும் வலமும் இதுவென் றறியா திருந்த என்னை யே
எல்லாம் அறிவித் தருள்செய் கருணை என்னை என்னை யே
நடமும் நடஞ்செய் இடமும் எனக்கு நன்று காட்டி யே
நாயி னேனை வளர்க்கின் றாய்நல் லமுதம் ஊட்டி யே.
எனக்கும் உனக்கும்
20
விதுவும் கதிரும் இதுவென் றறியும் விளக்கம் இன்றி யே
விழித்து மயங்கி னேன்பால் பெரிய கருணை ஒன்றி யே
அதுவும் அதுவும் இதுவென் றெனக்குள் அறியக் காட்டி யே
அடிய னேனை வளர்க்கின் றாய்நல் லமுதம் ஊட்டி யே.
எனக்கும் உனக்கும்
21
இருளும் ஒளியும் வந்த வகையை எண்ணி எண்ணி யே
இரவும் பகலும் மயங்கி னேனை இனிது நண்ணி யே
அருளும் பொருளும் கொடுத்து மயக்கம் நீக்கிக் காட்டி யே
அன்பால் என்னை வளர்க்கின் றாய்நல் லமுதம் ஊட்டி யே.
எனக்கும் உனக்கும்
22
அண்டத் தகத்தும் புறத்தும் உன்றன் ஆணை செல்லு தே
அவனே எல்லாம் வல்லான் என்று மறைகள் சொல்லு தே
பிண்டத் தகத்தும் புறத்தும் நிறைந்த பெரிய சோதி யே
பேயேன் அளவில் விளங்கு கின்ற தென்ன நீதி யே.
எனக்கும் உனக்கும்
23
கருணா நிதிநின் தன்னைக் காணக் கண்கள் துடிக்கு தே
காண்போம் என்று நினைக்குந் தோறும் உடம்பு பொடிக்கு தே
அருள்நா டகஞ்செய் பதங்கள் பாடி ஆட விரைவ தே
ஆடும் பொதுவை நினைக்க நினைக்க நெஞ்சம் கரைவ தே.
எனக்கும் உனக்கும்
24
அருளார் சோதி என்னுள் விளங்க அளித்த காலத் தே
அடியேன் குறைகள் யாவும் தவிர்ந்த திந்த ஞாலத் தே
பொருளாய் எனையும் நினைக்க வந்த புதுமை என்னை யோ
பொன்னென் றைய மதிப்ப துதவாத் துரும்பு தன்னை யோ.
எனக்கும் உனக்கும்
25
எனக்குள் நீயும் உனக்குள் நானும்இருக்கும் தன்மை யே
இன்று காட்டிக் கலக்கம் தவிர்த்துக் கொடுத்தாய் நன்மை யே
தனக்குள் ளதுதன் தலைவர்க் குளதென் றறிஞர் சொல்வ தே
சரியென் றெண்ணி எனது மனது களித்து வெல்வ தே.
எனக்கும் உனக்கும்
26
கருணைப் பொதுவில் பெரிய சோதித் தருவில் கனித்த தே
கனித்த பெரிய தனித்த கனிஎன் கருத்துள் இனித்த தே
தருணத் துண்டு மகிழ்வுற் றேன்அம் மகிழ்ச்சி சொல்ல வே
தனித்துக் கரைந்த எனது கருத்தின் தரத்த தல்ல வே.
எனக்கும் உனக்கும்
27
என்னா ருயிர்க்குத் துணைவ நின்னை நான்து திக்க வே
என்ன தவஞ்செய் தேன்முன் உலகு ளோர்ம திக்க வே
பொன்னார் புயனும் அயனும் பிறரும் பொருந்தல் அரிய தே
புலைய னேனுக் களித்த கருணை மிகவும் பெரிய தே.
எனக்கும் உனக்கும்
28
என்கண் மணியுள் இருக்கும் தலைவ நின்னைக் காண வே
என்ன தவஞ்செய் தேன்முன் அயனும் அரியும் நாண வே
புன்கண் ஒழித்துத் தெள்ளா ரமுதம் புகட்டி என்னை யே
பொருளாய் எண்ணி வளர்க்கின் றாய்நீ எனக்கோர் அன்னை யே.
எனக்கும் உனக்கும்
29
அறிவி லேன்செய் குற்றம் அனைத்தும் பொறுத்த தன்றி யே
அமுதும் அளித்தாய் யார்செய் வார்கள் இந்த நன்றி யே
செறிவி லாத பொறியும் மனமும் செறிந்து நிற்க வே
செய்தாய் மேலும் தெரித்தாய் சாகாக் கல்வி கற்க வே.
எனக்கும் உனக்கும்
30
ஒருநா ழிகையில் யோக நிலையை உணர்த்தி மாலை யே
யோகப் பயனை முழுதும் அளித்தாய் மறுநாள் காலை யே
திருநாள் நிலையும் தீர்த்த நிலையும் தெய்வ நிலையு மே
சிறியேன் அறியக் காட்டித் தெரித்தாய் வேதக் கலையு மே.
எனக்கும் உனக்கும்
31
அண்டப் பரப்பின் திறங்கள் அனைத்தும்அறிய வேண்டி யே
ஆசைப் பட்ட தறிந்து தெரித்தாய் அறிவைத் தூண்டி யே
பிண்டத் துயிர்கள் பொருத்தும் வகையும்பிண்டம் தன்னை யே
பிரியும் வகையும் பிரியா வகையும்தெரித்தாய் பின்னை யே.
எனக்கும் உனக்கும்
32
வேதா கமங்கள் புகன்ற விரிவை ஒன்றொன் றாக வே
விளங்க விரைந்து தெரித்தாய் பயிலும் ஆசை போக வே
பூதா திகளைப் பொருத்தும் பகுதிப் பொருத்தம் முற்று மே
பொய்மை நீக்கிக் காணக் காட்டித் தெரித்தாய் மற்று மே.
எனக்கும் உனக்கும்
33
வள்ளால் உன்னைப் பாடப் பாட வாய்ம ணக்கு தே
வஞ்ச வினைகள் எனைவிட் டோடித் தலைவ ணக்கு தே
எள்ளா துனது புகழைக் கேட்கச் செவிந யக்கு தே
எந்தாய் தயவை எண்ணுந் தோறும் உளம்வி யக்கு தே.
எனக்கும் உனக்கும்
34
இறைவா நின்னைக் கனவி லேனும் யான்ம றப்ப னோ
எந்தாய் உலகத் தவர்கள் போல்நான் இனி இறப்ப னோ
மறைவா சகமும் பொருளும் பயனும் மதிக்கும் மதியி லே
வாய்க்கக் கருணை புரிந்து வைத்தாய் உயர்ந்த பதியி லே.
எனக்கும் உனக்கும்
35
தலைவா எனக்குக் கருணை அமுதம் தரஇத் தலத்தி லே
தவம்செய் தேன்அத் தவமும் உன்றன் அருள்வ லத்தி லே
அலைவா ரிதியில் துரும்பு போல அயனும் மாலு மே
அலைய எனக்கே அளிக்கின் றாய்நீ மேலும் மேலு மே.
எனக்கும் உனக்கும்
36
உடையாய் எனக்குப் புரிந்த தயவை உன்ன உன்ன வே
உடம்பு பூரிக் கின்ற தொளிர்பொன் மலைய தென்ன வே
தடையா தினிஉள் மூல மலத்தின் தடையும் போயிற் றே
சமய விகற்பம் எல்லாம் நீங்கிச் சமம தாயிற் றே.
எனக்கும் உனக்கும்
37
மயங்குந் தோறும் உள்ளும் புறத்தும் மயக்கம் நீக்கி யே
மகிழ்விக் கின்றாய் ஒருகால் ஊன்றி ஒருகால் தூக்கி யே
உயங்கு மலங்கள் ஐந்தும் பசையற் றொழிந்து வெந்த தே
உன்பே ரருட்பொற் சோதி வாய்க்குந் தருணம் வந்த தே.
எனக்கும் உனக்கும்
38
எனக்கும் நின்னைப் போல நுதற்கண் ஈந்துமதனை யே
எரிப்பித் தாய்பின் எழுப்பிக் கொடுத்தாய் அருவ மதனை யே
சினக்குங் கூற்றை உதைப்பித் தொழித்துச் சிதைவு மாற்றி யே
தேவர் கற்பம் பலவும் காணச் செய்தாய் போற்றி யே.
எனக்கும் உனக்கும்
39
கள்ளம் அறியேன் நின்னால் கண்ட காட்சி ஒன்று மே
கருத்தில் உளது வேறோர் விடயம் காணேன் என்று மே
உள்ள துரைக்கின் றேன்நின் அடிமேல் ஆணை முன்னை யே
உள்ளே விளங்கிக் காண்கின் றாய்க்கிங் கொளிப்ப தென்னை யே.
எனக்கும் உனக்கும்
40
என்னை அடிமை கொண்டாய் நானும் நினக்கு நல்ல னோ
எல்லாம் வல்ல தலைவ நினக்கு நல்லன் அல்ல னோ
முன்னை வினைகள் அனைத்தும் நீக்கி அமுதம் ஊட்டி யே
மூவர்க் கரிய நிலையில் வைத்தாய் என்னை நாட்டி யே.
எனக்கும் உனக்கும்
41
சோதி மலையில் கண்டேன் நின்னைக் கண்க ளிக்க வே
துய்த்தேன் அமுதம் அகத்தும் புறத்தும் பரிம ளிக்க வே
ஓதி உணர்தற் கரிய பெரிய உணர்வை நண்ணி யே
ஓதா தனைத்தும்உணர்கின்றேன்நின் அருளை எண்ணி யே.
எனக்கும் உனக்கும்
42
ஏழு நிலைகள் ஓங்கும் தெய்வ மாடம் ஒன்றி லே
ஏற்றிக் களிக்க வைத்தாய் அதன்மேல் இலங்கு குன்றி லே
வாழும் பரிசு கவிக்கும் குடையும் மதிக்கும் தூசு மே
மகிழ்ந்து கொடுத்துப் பின்னும் கொடுத்தாய் மணிப்பொற் காசு மே.
எனக்கும் உனக்கும்
43
இந்த உலகில் உள்ளார் பலரும் மிகவும் நன்மை யே
என்பால் செய்ய வைத்தாய் இதுநின் அருளின் தன்மை யே
அந்த உலகில் உள்ளார் பலரும் என்னை நோக்கி யே
அப்பா வாழி எனவும் புரிந்தாய் அடிமை யாக்கி யே.
எனக்கும் உனக்கும்
44
அழியாக் கருணை அமுத வடிவின் ஓங்கும் சோதி யே
அரசே எனக்குள் விளங்கும் ஆதி யாம்அ னாதி யே
ஒழியாத் துயரை ஒழித்த பெரிய கருணை யாள னே
ஒன்றாய் ஒன்றில் உபய மாகி ஒளிரும் தாள னே.
எனக்கும் உனக்கும்
45
பாலும் தேனும் கலந்த தென்ன என்னுள் இனிக்க வே
பரம ஞான அமுதம் அளிக்கின் றாய்த னிக்க வே
ஏலும் உயிர்கள் எல்லாம் நினக்குப் பொதுவ தென்ப ரே
இன்று நோக்கி ஓர வாரன் என்பர் அன்ப ரே.
எனக்கும் உனக்கும்
46
ஐயா நான்செய் பிழைகள் ஏழு கடலில் பெரிய தே
அனைத்தும் பொறுத்த தயவு பிறருக் கரிய தரிய தே
மெய்யா நீசெய் உதவி ஒருகைம் மாறு வேண்டு மே
வேண்டா தென்ன அறிந்தும் எனக்குள் ஆசை தூண்டு மே.
எனக்கும் உனக்கும்
47
பூத வெளியின் நடமும் பகுதி வெளியின் ஆட்ட மும்
போக வெளியில் கூத்தும் யோக வெளியுள் ஆட்ட மும்
நாத வெளியில் குனிப்பும் பரம நாத நடமு மே
நன்று காட்டிக் கொடுத்தாய் என்றும் நலியாத் திடமு மே.
எனக்கும் உனக்கும்
48
எட்டும் இரண்டும்இதுஎன் றெனக்குச் சுட்டிக் காட்டி யே
எட்டா நிலையில் இருக்கப் புரிந்தாய் இட்டுக் கூட்டி யே
துட்ட வினையைத் தீர்த்து ஞானச் சுடருள் ளேற்றி யே
தூண்டா தென்றும் விளங்க வைத்தாய் உண்மை சாற்றி யே.
எனக்கும் உனக்கும்
49
அருளாம் பெரிய வெளிக்குள் சோதி வடிவ னாகி யே
அரசு செலுத்தும் தனித்த தலைமைப் பரம யோகி யே
பொருளாய் எனையும் உளங்கொண் டளித்த புனித நாத னே
போற்று நாத முடிவில் நடஞ்செய் கமல பாத னே.
எனக்கும் உனக்கும்
50
  1. உருவும் அருவும் உபய நிலையும் உடைய நித்த னே உயிருள் நிறைந்த தலைவ எல்லாம் வல்ல சித்த னே மருவும் துரிய வரையுள் நிறைந்து வயங்கும் பரம மே மன்றில் பரமா னந்த நடஞ்செய் கின்ற பிரம மே. எனக்கும் உனக்கும்

    uruvum aruvum upaya nilaiyum uTaiya nitta nE uyiruL niRainta talaiva ellAm valla chitta nE maruvum turiya varaiyuL niRaintu vayangkum parama mE manRil paramA nanta naTanjchey kinRa pirama mE. enakkum unakkum

  2. அன்னே என்னை ஆண்ட தலைவ அடியன் உள்ள மே அமர்ந்த துணைவ எனக்குக் கிடைத்த அமுத வெள்ள மே பொன்னே பொன்னில் பொலிந்து நிறைந்த புனித வான மே புனித வானத் துள்ளே விளங்கும் பூரண ஞான மே. எனக்கும் உனக்கும்

    annE ennai ANTa talaiva aTiyan uLLa mE amarnta tuNaiva enakkuk kiTaitta amuta veLLa mE ponnE ponnil polintu niRainta punita vAna mE punita vAnat tuLLE viLangkum pUraNa njAna mE. enakkum unakkum

  3. சமயத் தெய்வம் பலவும் சிறிய துரும்ப தென்ன வே சாற்றப் புகினும் சாலார்அருளின் பெருமை உன்ன வே அமையும் அண்டப் பகுதி பலவும் அணுவின் பொடியி லே அனந்தத் தொன்றென் றுரைத்துஞ் சாலா நின்பொன் னடியி லே. எனக்கும் உனக்கும்

    chamayat teyvam palavum chiRiya turumpa tenna vE chARRap pukinum chAlAraruLin perumai unna vE amaiyum aNTap pakuti palavum aNuvin poTiyi lE anantat tonRen Ruraittunj chAlA ninpon naTiyi lE. enakkum unakkum

  4. அப்பா நின்னை அடைந்த என்னை ஒப்பார் யாவ ரே ஆறா றகன்ற நிலையை அடைந்தான் என்பர் தேவ ரே இப்பா ராதி பூதம் அடங்குங் காலும் நின்னை யே ஏத்திக் களித்து வாழ்வேன் இதற்கும் ஐய மென்னை யே. எனக்கும் உனக்கும்

    appA ninnai aTainta ennai oppAr yAva rE ARA RakanRa nilaiyai aTaintAn enpar tEva rE ippA rAti pUtam aTangkung kAlum ninnai yE Ettik kaLittu vAzhvEn itaRkum aiya mennai yE. enakkum unakkum

  5. என்னை மறைத்த மறைப்பை நீக்கி என்னைக் காட்டி யே இறைவ நினையும் காட்டி வளர்த்தாய் அமுதம் ஊட்டி யே முன்னை மறைக்கும் எட்டா நினது பெருமை தன்னை யே முன்னி மகிழ்ந்து பாடப் புரிந்தாய் அடிமை என்னை யே. எனக்கும் உனக்கும்

    ennai maRaitta maRaippai nIkki ennaik kATTi yE iRaiva ninaiyum kATTi vaLarttAy amutam UTTi yE munnai maRaikkum eTTA ninatu perumai tannai yE munni makizhntu pATap purintAy aTimai ennai yE. enakkum unakkum

  6. எண்ணுந் தோறும் எண்ணுந் தோறும் என்னுள் இனிக்கு தே இறைவ நின்னைப் பாட நாவில் அமுதம் சனிக்கு தே கண்ணும் கருத்தும் நின்பால் அன்றிப் பிறர்பால் செல்லு மோ கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லு மோ. எனக்கும் உனக்கும்

    eNNun tORum eNNun tORum ennuL inikku tE iRaiva ninnaip pATa nAvil amutam chanikku tE kaNNum karuttum ninpAl anRip piRarpAl chellu mO kaNTEn unnai inimEl ennai mAyai vellu mO. enakkum unakkum

  7. விந்தோ நாத வெளியும் கடந்து மேலும் நீளு தே மேலை வெளியும் கடந்துன் அடியர் ஆணை ஆளு தே அந்தோ உனது பெருமை சிறிதும் அறிவார் இல்லை யே அறிந்தால் உருகி இன்ப வடிவம் ஆவர் ஒல்லை யே. எனக்கும் உனக்கும்

    vintO nAta veLiyum kaTantu mElum nILu tE mElai veLiyum kaTantun aTiyar ANai ALu tE antO unatu perumai chiRitum aRivAr illai yE aRintAl uruki inpa vaTivam Avar ollai yE. enakkum unakkum

  8. இறுகப் பிடித்துக் கொண்டேன் பதத்தை இனிநான் விடுவ னோ எந்தாய் பாதம் பிடித்த கையால் வேறு தொடுவ னோ குறுகப் பயந்து கூற்றும் ஓடிக் குலைந்து போயிற் றே கோவே உன்றன் அருட்சிற் சோதி என்ன தாயிற் றே. எனக்கும் உனக்கும்

    iRukap piTittuk koNTEn patattai ininAn viTuva nO entAy pAtam piTitta kaiyAl vERu toTuva nO kuRukap payantu kURRum OTik kulaintu pOyiR RE kOvE unRan aruTchiR chOti enna tAyiR RE. enakkum unakkum

  9. காய்க்கும் பருவம் தன்னைப் பழுத்த பருவம் ஆக்கி யே கனக சபையில் நடிக்கின் றாய்ஓர் காலைத் தூக்கி யே நாய்க்குத் தவிசிட் டொருபொன் முடியும் நன்று சூட்டி யே நட்ட நடுவே வைத்தாய் கருணை அமுதம் ஊட்டி யே. எனக்கும் உனக்கும்

    kAykkum paruvam tannaip pazhutta paruvam Akki yE kanaka chapaiyil naTikkin RAyOr kAlait tUkki yE nAykkut tavichiT Torupon muTiyum nanRu chUTTi yE naTTa naTuvE vaittAy karuNai amutam UTTi yE. enakkum unakkum

  10. கல்லை நோக்கிக் கனிந்து பழுத்த கனிய தாக்கி யே கனக சபையில் நடிக்கின் றாய்ஓர் காலைத் தூக்கி யே புல்லை முடிக்கும் அணிகின் றாய்என் புன்சொல் மாலை யே புனைந்தென் உளத்தில் இருக்கப் புரிந்தாய் நின்பொற் காலையே. எனக்கும் உனக்கும்

    kallai nOkkik kanintu pazhutta kaniya tAkki yE kanaka chapaiyil naTikkin RAyOr kAlait tUkki yE pullai muTikkum aNikin RAyen punchol mAlai yE punainten uLattil irukkap purintAy ninpoR kAlaiyE. enakkum unakkum

  11. சாதல் பிறத்தல் என்னும் அவத்தைத் தவிர்த்துக் காலை யே தனித்துன் அருளின் அமுதம் புகட்டிக் கொடுத்தாய் மேலை யே ஓதல் உணர்தல் உவத்தல் எனக்கு நின்பொற் பாத மே உலக விடயக் காட்டில் செல்லா தெனது போத மே. எனக்கும் உனக்கும்

    chAtal piRattal ennum avattait tavirttuk kAlai yE tanittun aruLin amutam pukaTTik koTuttAy mElai yE Otal uNartal uvattal enakku ninpoR pAta mE ulaka viTayak kATTil chellA tenatu pOta mE. enakkum unakkum

  12. அருளும் பொருளும் பெற்றேன் அடிய னாகி நானு மே அஞ்சேன் மாயை வினைகட் கொருசிற் றளவ தேனு மே இருளும் நிறத்துக் கூற்றைத் துரத்தி அருள்சிற் சோதி யே என்றன் அகத்தும் புறத்தும் விளங்கு கின்ற தாதி யே. எனக்கும் உனக்கும்

    aruLum poruLum peRREn aTiya nAki nAnu mE anjchEn mAyai vinaikaT koruchiR RaLava tEnu mE iruLum niRattuk kURRait turatti aruLchiR chOti yE enRan akattum puRattum viLangku kinRa tAti yE. enakkum unakkum

  13. காமக் கடலைக் கடந்து வெகுளிக் கடலை நீந்தி னேன் கடிய மயக்கக் கடலைத் தாண்டி அடியை ஏந்தி னேன் சேமப் பொதுவில் நடங்கண் டெனது சிறுமை நீங்கி னேன் சிற்றம் பலத்து நடங்கண் டுவந்து மிகவும் ஓங்கி னேன். எனக்கும் உனக்கும்

    kAmak kaTalaik kaTantu vekuLik kaTalai nInti nEn kaTiya mayakkak kaTalait tANTi aTiyai Enti nEn chEmap potuvil naTangkaN Tenatu chiRumai nIngki nEn chiRRam palattu naTangkaN Tuvantu mikavum Ongki nEn. enakkum unakkum

  14. தாங்கல் விடுதல் இரண்டும் எனக்குச் சமம தாயிற் றே சகத்தில் வழங்கும் மாயை வழக்குத் தவிர்ந்து போயிற் றே ஏங்கல் சலித்தல் இரண்டும் இன்றி இளைப்பு நீங்கி னேன் எந்தாய் கருணை அமுதுண் டின்பப் பொருப்பில் ஓங்கி னேன். எனக்கும் உனக்கும்

    tAngkal viTutal iraNTum enakkuch chamama tAyiR RE chakattil vazhangkum mAyai vazhakkut tavirntu pOyiR RE Engkal chalittal iraNTum inRi iLaippu nIngki nEn entAy karuNai amutuN Tinpap poruppil Ongki nEn. enakkum unakkum

  15. உறவு பகைஎன் றிரண்டும் எனக்கிங் கொன்ற தாயிற் றே ஒன்றென் றிரண்டென் றுளறும் பேதம் ஓடிப் போயிற் றே மறவு நினைவென் றென்னை வலித்த வலிப்பு நீங்கி னேன் மன்றில் பரமா னந்த நடங்கண் டின்பம் ஓங்கி னேன். எனக்கும் உனக்கும்

    uRavu pakaien RiraNTum enakking konRa tAyiR RE onRen RiraNTen RuLaRum pEtam OTip pOyiR RE maRavu ninaiven Rennai valitta valippu nIngki nEn manRil paramA nanta naTangkaN Tinpam Ongki nEn. enakkum unakkum

  16. உன்னைக்கண்டு கொண்டேன் கண்ட வுடன்இங் கென்னை யே உலக மெல்லாம் கண்டு கொண்ட உவப்பி தென்னை யே என்னைக் கண்டு கொண்ட காலத் திறைவ நின்னை யே யாரும் கண்டு கொண்டார் இல்லை யாங்க தென்னை யே. எனக்கும் உனக்கும்

    unnaikkaNTu koNTEn kaNTa vuTaning kennai yE ulaka mellAm kaNTu koNTa uvappi tennai yE ennaik kaNTu koNTa kAlat tiRaiva ninnai yE yArum kaNTu koNTAr illai yAngka tennai yE. enakkum unakkum

  17. மலத்தில் புழுத்த புழுவும் நிகர மாட்டா நாயி னேன் வள்ளல் கருணை அமுதுண் டின்ப நாட்டான் ஆயி னேன் குலத்தில் குறியில் குணத்தில் பெருமை கொள்ளா நாயி னேன் கோதில் அமுதுண் டெல்லா நலமும் உள்ளான் ஆயி னேன். எனக்கும் உனக்கும்

    malattil puzhutta puzhuvum nikara mATTA nAyi nEn vaLLal karuNai amutuN Tinpa nATTAn Ayi nEn kulattil kuRiyil kuNattil perumai koLLA nAyi nEn kOtil amutuN TellA nalamum uLLAn Ayi nEn. enakkum unakkum

  18. கடைய நாயில் கடைய நாய்க்கும் கடையன் ஆயி னேன் கருணை அமுதுண் டின்ப நாட்டுக் குடையன் ஆயி னேன் விடயக் காட்டில் ஓடித் திரிந்த வெள்ளை நாயி னேன் விடையாய் நினக்கு மிகவும் சொந்தப் பிள்ளை ஆயி னேன். எனக்கும் உனக்கும்

    kaTaiya nAyil kaTaiya nAykkum kaTaiyan Ayi nEn karuNai amutuN Tinpa nATTuk kuTaiyan Ayi nEn viTayak kATTil OTit tirinta veLLai nAyi nEn viTaiyAy ninakku mikavum chontap piLLai Ayi nEn. enakkum unakkum

  19. அயனும் மாலும் தேடித் தேடி அலந்து போயி னார் அந்தோ இவன்முன் செய்த தவம்யா தென்ப ராயி னார் மயனும் கருத மாட்டாத் தவள மாடத் துச்சி யே வயங்கும் அணைமேல் வைத்தாய் சிறிய நாயை மெச்சி யே. எனக்கும் உனக்கும்

    ayanum mAlum tETit tETi alantu pOyi nAr antO ivanmun cheyta tavamyA tenpa rAyi nAr mayanum karuta mATTAt tavaLa mATat tuchchi yE vayangkum aNaimEl vaittAy chiRiya nAyai mechchi yE. enakkum unakkum

  20. வல்லாய் உனது கருணை அமுதென் வாய்க்கு வந்த தே மலமும் மாயைக் குலமும் வினையும் முழுதும் வெந்த தே எல்லா நலமும் ஆன அதனை உண்டு வந்த தே இறவா தென்றும் ஓங்கும் வடிவம் எனக்கு வந்த தே. எனக்கும் உனக்கும்

    vallAy unatu karuNai amuten vAykku vanta tE malamum mAyaik kulamum vinaiyum muzhutum venta tE ellA nalamum Ana atanai uNTu vanta tE iRavA tenRum Ongkum vaTivam enakku vanta tE. enakkum unakkum

  21. சிற்றம் பலத்தில் நடங்கண் டவர்காற் பொடிகொள் புல்ல தே சிருட்டி முதல்ஓர் ஐந்து தொழிலும் செய்ய வல்ல தே பற்றம் பலத்தில் வைத்தார் தம்மைப் பணியும் பத்த ரே பரம பதத்தர் என்று பகர்வர் பரம முத்த ரே. எனக்கும் உனக்கும்

    chiRRam palattil naTangkaN TavarkAR poTikoL pulla tE chiruTTi mutalOr aintu tozhilum cheyya valla tE paRRam palattil vaittAr tammaip paNiyum patta rE parama patattar enRu pakarvar parama mutta rE. enakkum unakkum

  22. சிருட்டி முதல்ஓர் ஐந்து தொழிலும் செய்யென் றென்னை யே செல்வப் பிள்ளை யாக்கி வளர்க்கின் றாய்இ தென்னை யே தெருட்டித் திருப்பொற் பதத்தைக் காட்டி அமுதம் ஊட்டி யே திகழ நடுவைத் தாய்சன் மார்க்க சங்கம்கூட்டி யே. எனக்கும் உனக்கும்

    chiruTTi mutalOr aintu tozhilum cheyyen Rennai yE chelvap piLLai yAkki vaLarkkin RAyi tennai yE teruTTit tiruppoR patattaik kATTi amutam UTTi yE tikazha naTuvait tAychan mArkka changkamkUTTi yE. enakkum unakkum

  23. அடியன்ஆக்கிப் பிள்ளைஆக்கி நேயன்ஆக்கி யே அடிகள்ஆக்கிக் கொண்டாய் என்னை அவலம் நீக்கி யே படியு ளோரும் வானு ளோரும் இதனை நோக்கி யே பதியும் ஓர வாரன் என்பர் பரிவு தேக்கி யே. எனக்கும் உனக்கும்

    aTiyanAkkip piLLaiAkki nEyanAkki yE aTikaLAkkik koNTAy ennai avalam nIkki yE paTiyu LOrum vAnu LOrum itanai nOkki yE patiyum Ora vAran enpar parivu tEkki yE. enakkum unakkum

  24. அண்ணா எனையும் பொருளென் றெண்ணி இரவும் பகலு மே அகத்தும் புறத்தும் திரிகின் றாய்இவ் வுலகென் புகலு மே தண்ணா ரமுதம் மிகவும் எனக்குத் தந்த தன்றி யே தனியே இன்னும் தருகின் றாய்என் னறிவின் ஒன்றி யே. எனக்கும் உனக்கும்

    aNNA enaiyum poruLen ReNNi iravum pakalu mE akattum puRattum tirikin RAyiv vulaken pukalu mE taNNA ramutam mikavum enakkut tanta tanRi yE taniyE innum tarukin RAyen naRivin onRi yE. enakkum unakkum

  25. வேதா கமத்தின் அடியும் நடுவும் முடியு மற்று மே வெட்ட வெளிய தாகி விளங்கக் கண்டேன் முற்று மே நாதா சிறிய நாய்க்கும் கடையேன் முற்றும் கண்ட தே நானோ கண்டேன் எந்தாய் கருணை நாட்டம் கண்ட தே. எனக்கும் உனக்கும்

    vEtA kamattin aTiyum naTuvum muTiyu maRRu mE veTTa veLiya tAki viLangkak kaNTEn muRRu mE nAtA chiRiya nAykkum kaTaiyEn muRRum kaNTa tE nAnO kaNTEn entAy karuNai nATTam kaNTa tE. enakkum unakkum

  26. புழுவில் புழுத்த புழுவும் நிகரப் போதா நாயி னேன் பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயி னேன் தழுவற் கரிய பெரிய துரியத் தம்பத் தேறி னேன் தனித்தப் பாலோர் தவள மாடத் திருந்து தேறி னேன். எனக்கும் உனக்கும்

    puzhuvil puzhutta puzhuvum nikarap pOtA nAyi nEn potuvil naTikkum talaiva ninakkE aTimai Ayi nEn tazhuvaR kariya periya turiyat tampat tERi nEn tanittap pAlOr tavaLa mATat tiruntu tERi nEn. enakkum unakkum

  27. கடையன் எனது கொடிய கடின நெஞ்சக் கல்லை யே கனிய தாக்கித் தூக்கிக் கொண்டாய் துரியத் தெல்லை யே உடையாய் துரியத் தலத்தின் மேல்நின் றோங்குந் தலத்தி லே உன்பால் இருக்க வைத்தாய் என்னை உவந்து வலத்தி லே. எனக்கும் உனக்கும்

    kaTaiyan enatu koTiya kaTina nenjchak kallai yE kaniya tAkkit tUkkik koNTAy turiyat tellai yE uTaiyAy turiyat talattin mElnin ROngkun talatti lE unpAl irukka vaittAy ennai uvantu valatti lE. enakkum unakkum

  28. அறிந்த நாள்கள் தொடங்கி இற்றைப் பகலின் வரையு மே அடியேன் பட்ட பாட்டை நினைக்கில் கல்லும் கரையு மே எறிந்தப் பாடு முழுதும் பெரிய இன்ப மாயிற் றே எந்தாய் கருணை எனக்கு மிகவும் சொந்த மாயிற் றே. எனக்கும் உனக்கும்

    aRinta nALkaL toTangki iRRaip pakalin varaiyu mE aTiyEn paTTa pATTai ninaikkil kallum karaiyu mE eRintap pATu muzhutum periya inpa mAyiR RE entAy karuNai enakku mikavum chonta mAyiR RE. enakkum unakkum

  29. பனிரண் டாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே படியில் பட்ட பாட்டை நினைக்கில் மலையும் கரையு மே துனியா தந்தப் பாடு முழுதும் சுகம தாயிற் றே துரையே நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற் றே. எனக்கும் உனக்கும்

    paniraN TANTu toTangkiiRRaip pakalin varaiyu mE paTiyil paTTa pATTai ninaikkil malaiyum karaiyu mE tuniyA tantap pATu muzhutum chukama tAyiR RE turaiyE ninmey aruLing kenakkuch chonta mAyiR RE. enakkum unakkum

  30. ஈரா றாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்பும் கரையு மே ஏராய் அந்தப் பாடு முழுதும் இன்ப மாயிற் றே இறைவா நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற் றே. எனக்கும் உனக்கும்

    IrA RANTu toTangkiiRRaip pakalin varaiyu mE eLiyEn paTTa pATTai ninaikkil irumpum karaiyu mE ErAy antap pATu muzhutum inpa mAyiR RE iRaivA ninmey aruLing kenakkuch chonta mAyiR RE. enakkum unakkum

  31. பாட்டால் உனது பதத்தை நாடிப் பாடும் வாய ரே பதியே இந்த உலகில் எனக்கு மிகவும் நேய ரே நாட்டார் எனினும் நின்னை உளத்து நாட்டார் ஆயி லோ நயவேன் சிறிதும் நயத்தல் கயக்கும் எட்டிக் காயி லோ. எனக்கும் உனக்கும்

    pATTAl unatu patattai nATip pATum vAya rE patiyE inta ulakil enakku mikavum nEya rE nATTAr eninum ninnai uLattu nATTAr Ayi lO nayavEn chiRitum nayattal kayakkum eTTik kAyi lO. enakkum unakkum

  32. சின்ன வயது தொடங்கி என்னைக் காக்கும் தெய்வ மே சிறியேன் மயங்கும் தோறும் மயக்கம் தீர்க்கும் தெய்வ மே என்னை அவத்தைக் கடல்நின் றிங்ஙன் எடுத்த தெய்வ மே எல்லா நலமும் தரும்இன் னமுதம் கொடுத்த தெய்வ மே. எனக்கும் உனக்கும்

    chinna vayatu toTangki ennaik kAkkum teyva mE chiRiyEn mayangkum tORum mayakkam tIrkkum teyva mE ennai avattaik kaTalnin Ringngan eTutta teyva mE ellA nalamum tarumin namutam koTutta teyva mE. enakkum unakkum

  33. அச்சம் தீர்த்திங் கென்னை ஆட்கொண் டருளும் அமுத னே அடியேன் பிழைகள் அனைத்தும் பொறுத்துள் அமர்ந்த அமுத னே இச்சை யாவும் முடித்துக் கொடுத்துள் இலங்கும் குரவ னே என்றும் இறவாக் கல்வி அடியேற் கீய்ந்த குரவ னே. எனக்கும் உனக்கும்

    achcham tIrtting kennai ATkoN TaruLum amuta nE aTiyEn pizhaikaL anaittum poRuttuL amarnta amuta nE ichchai yAvum muTittuk koTuttuL ilangkum kurava nE enRum iRavAk kalvi aTiyER kIynta kurava nE. enakkum unakkum

  34. உள்ளும் புறத்தும் கருணை அமுதம் ஊட்டும் அன்னை யே ஓதா துணர உணரும் உணர்வை உதவும் அன்னை யே தெள்ளும் கருணைச் செங்கோல் செலுத்தச் செய்த அப்ப னே செல்வப் பிள்ளை யாக்கி என்னுள் சேர்ந்த அப்ப னே. எனக்கும் உனக்கும்

    uLLum puRattum karuNai amutam UTTum annai yE OtA tuNara uNarum uNarvai utavum annai yE teLLum karuNaich chengkOl cheluttach cheyta appa nE chelvap piLLai yAkki ennuL chErnta appa nE. enakkum unakkum

  35. இரவும் பகலும் என்னைக் காத்துள் இருக்கும் இறைவ னே எல்லா உலகும் புகழ எனைமேல் ஏற்றும் இறைவ னே கரவு நினையா தெனக்கு மெய்ம்மை காட்டும் துணைவ னே களித்தென் தனையும் சன்மார்க் கத்தில் நாட்டும் துணைவ னே. எனக்கும் உனக்கும்

    iravum pakalum ennaik kAttuL irukkum iRaiva nE ellA ulakum pukazha enaimEl ERRum iRaiva nE karavu ninaiyA tenakku meymmai kATTum tuNaiva nE kaLitten tanaiyum chanmArk kattil nATTum tuNaiva nE. enakkum unakkum

  36. சற்றும் வருந்தப் பாரா தென்னைத் தாங்கும் நேய னே தான்நான் என்று பிரித்தற் கரிய தரத்து நேய னே முற்றும் தனதை எனக்குக் கொடுத்து முயங்கும் நேய னே முன்னே நான்செய் தவத்தில் எனக்குள் முளைத்த நேய னே. எனக்கும் உனக்கும்

    chaRRum varuntap pArA tennait tAngkum nEya nE tAnnAn enRu pirittaR kariya tarattu nEya nE muRRum tanatai enakkuk koTuttu muyangkum nEya nE munnE nAnchey tavattil enakkuL muLaitta nEya nE. enakkum unakkum

  37. நேயா நின்னை நினைக்க நினைக்க நெஞ்சம் களிக்கு தே நெடிய விழிகள் இரண்டும் இன்ப நீர்து ளிக்கு தே ஓயா துனது பெருமை நினைக்க உவகை நீடு தே உரைப்பார் எவர்என் றுலகில் பலரை ஓடித் தேடு தே. எனக்கும் உனக்கும்

    nEyA ninnai ninaikka ninaikka nenjcham kaLikku tE neTiya vizhikaL iraNTum inpa nIrtu Likku tE OyA tunatu perumai ninaikka uvakai nITu tE uraippAr evaren Rulakil palarai OTit tETu tE. enakkum unakkum

  38. பொன்னே நின்னை உன்ன உடம்பு புளகம் மூடு தே பொதுவைக் காண உள்ளே ஆசை பொங்கி ஆடு தே என்னே பிறர்தம் வரவு நோக்கக் கண்கள் வெதும்பு தே எந்தாய் வரவை நினைக்கக் களிப்புப் பொங்கித் ததும்பு தே. எனக்கும் உனக்கும்

    ponnE ninnai unna uTampu puLakam mUTu tE potuvaik kANa uLLE Achai pongki ATu tE ennE piRartam varavu nOkkak kaNkaL vetumpu tE entAy varavai ninaikkak kaLippup pongkit tatumpu tE. enakkum unakkum

  39. மணியே நின்னைப் பொதுவில் கண்ட மனிதர் தேவ ரே மனிதர் கண்ணிற் பட்ட புல்லும் மரமும் தேவ ரே அணியே நின்னைப் பாடும் அடியர் தாமோ மூவ ரே அவரைக் கண்டார் அவரைக் கண்டார் அவர்கள் மூவ ரே. எனக்கும் உனக்கும்

    maNiyE ninnaip potuvil kaNTa manitar tEva rE manitar kaNNiR paTTa pullum maramum tEva rE aNiyE ninnaip pATum aTiyar tAmO mUva rE avaraik kaNTAr avaraik kaNTAr avarkaL mUva rE. enakkum unakkum

  40. வாழ்வே நினது நடங்கண் டவரைச் சுத்தர் என்ப னோ மலங்கள் மூன்றும் தவிர்த்த சுத்த முத்தர் என்ப னோ ஏழ்வே தனையும் நீக்கி வாழும் நித்தர் என்ப னோ எல்லாம் செய்ய வல்ல ஞான சித்தர் என்ப னோ. எனக்கும் உனக்கும்

    vAzhvE ninatu naTangkaN Tavaraich chuttar enpa nO malangkaL mUnRum tavirtta chutta muttar enpa nO EzhvE tanaiyum nIkki vAzhum nittar enpa nO ellAm cheyya valla njAna chittar enpa nO. enakkum unakkum

  41. சிவமே நின்னைப் பொதுவில் கண்ட செல்வர் தம்மை யே தேவர் கண்டு கொண்டு வணங்கு கின்றார் இம்மை யே தவமே புரிந்து நின்னை உணர்ந்த சாந்த சித்த ரே தகும்ஐந் தொழிலும் தாமே இயற்ற வாய்ந்த சித்த ரே. எனக்கும் உனக்கும்

    chivamE ninnaip potuvil kaNTa chelvar tammai yE tEvar kaNTu koNTu vaNangku kinRAr immai yE tavamE purintu ninnai uNarnta chAnta chitta rE takumain tozhilum tAmE iyaRRa vAynta chitta rE. enakkum unakkum

  42. ஐவ ராலும் நின்னை அறிதற் கருமை அருமை யே ஆரே அறிவர் மறையும் அறியா நினது பெருமை யே பொய்வ ராத வாய்கொண் டுன்னைப் போற்றும் அன்ப ரே பொருளே நின்னை அறிவர் அவரே அழியா இன்ப ரே. எனக்கும் உனக்கும்

    aiva rAlum ninnai aRitaR karumai arumai yE ArE aRivar maRaiyum aRiyA ninatu perumai yE poyva rAta vAykoN Tunnaip pORRum anpa rE poruLE ninnai aRivar avarE azhiyA inpa rE. enakkum unakkum

  43. என்னைக் காட்டிஎன்னுள் இலங்கும் நின்னைக் காட்டியே இறங்கா நிலையில் ஏற்றி ஞான அமுதம் ஊட்டி யே பொன்னைக் காட்டிப் பொன்னே நினது புகழைப் பாடி யே புந்தி களிக்க வைத்தாய் அழியா தென்னை நாடி யே. எனக்கும் உனக்கும்

    ennaik kATTiennuL ilangkum ninnaik kATTiyE iRangkA nilaiyil ERRi njAna amutam UTTi yE ponnaik kATTip ponnE ninatu pukazhaip pATi yE punti kaLikka vaittAy azhiyA tennai nATi yE. enakkum unakkum

  44. அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தி யே அறிந்தேன் அங்கைக் கனிபோல் அவற்றில் உள்ள செய்தி யே பிண்ட கோடி முழுதும்காணப் பெற்று நின்னை யே பேசிப் பேசி வியக்கின் றேன்இப் பிறவி தன்னை யே. எனக்கும் உனக்கும்

    aNTa kOTi anaittum kANum kaNkaL eyti yE aRintEn angkaik kanipOl avaRRil uLLa cheyti yE piNTa kOTi muzhutumkANap peRRu ninnai yE pEchip pEchi viyakkin REnip piRavi tannai yE. enakkum unakkum

  45. சிற்றம் பலத்தின் நடனம் காட்டிச் சிவத்தைக் காட்டி யே சிறப்பாய் எல்லாம் வல்ல சித்தித் திறத்தைக் காட்டி யே குற்றம் பலவும் தீர்த்தென் தனக்கோர் முடியும் சூட்டி யே கோவே நீயும் என்னுள் கலந்து கொண்டாய் நாட்டி யே. எனக்கும் உனக்கும்

    chiRRam palattin naTanam kATTich chivattaik kATTi yE chiRappAy ellAm valla chittit tiRattaik kATTi yE kuRRam palavum tIrtten tanakkOr muTiyum chUTTi yE kOvE nIyum ennuL kalantu koNTAy nATTi yE. enakkum unakkum

  46. சுத்த நிலையின் நடுநின் றெங்கும் தோன்றும் சோதி யே துரிய வெளியைக் கடந்தப் பாலும் துலங்கும் சோதி யே சித்தர் உளத்தில் சுடர்செய் தோங்கும் தெய்வச் சோதி யே சிற்றம் பலத்தில் நடஞ்செய் தெனக்குள் சிறந்த சோதி யே. எனக்கும் உனக்கும்

    chutta nilaiyin naTunin Rengkum tOnRum chOti yE turiya veLiyaik kaTantap pAlum tulangkum chOti yE chittar uLattil chuTarchey tOngkum teyvach chOti yE chiRRam palattil naTanjchey tenakkuL chiRanta chOti yE. enakkum unakkum

  47. அன்றே என்னை அடியன்ஆக்கி ஆண்ட சோதி யே அதன்பின் பிள்ளை ஆக்கிஅருள்இங் களித்த சோதி யே நன்றே மீட்டும் நேயன் ஆக்கிநயந்த சோதி யே நானும் நீயும் ஒன்றென் றுரைத்துநல்கு சோதி யே. எனக்கும் உனக்கும்

    anRE ennai aTiyanAkki ANTa chOti yE atanpin piLLai AkkiaruLing kaLitta chOti yE nanRE mITTum nEyan Akkinayanta chOti yE nAnum nIyum onRen Ruraittunalku chOti yE. enakkum unakkum

  48. நீயே வலிந்திங் கென்னை ஆண்ட நீதிச் சோதி யே நின்னைப் பாட என்னை வளர்க்கும் நிமலச் சோதி யே தாயே எனவந் தென்னைக் காத்த தருமச் சோதி யே தன்மை பிறரால் அறிதற் கரிய தலைமைச் சோதி யே. எனக்கும் உனக்கும்

    nIyE valinting kennai ANTa nItich chOti yE ninnaip pATa ennai vaLarkkum nimalach chOti yE tAyE enavan tennaik kAtta tarumach chOti yE tanmai piRarAl aRitaR kariya talaimaich chOti yE. enakkum unakkum

  49. சாகாக் கல்விஎனக்குப் பயிற்றித் தந்த சோதி யே தன்னேர் முடிஒன் றெனது முடியில் தரித்த சோதி யே ஏகாக் கரப்பொற் பீடத்தென்னை ஏற்று சோதி யே எல்லாம் வல்ல சித்திஆட்சி ஈய்ந்த சோதி யே. எனக்கும் உனக்கும்

    chAkAk kalvienakkup payiRRit tanta chOti yE tannEr muTion Renatu muTiyil taritta chOti yE EkAk karappoR pITattennai ERRu chOti yE ellAm valla chittiATchi Iynta chOti yE. enakkum unakkum

  50. சோதி எவையும் விளங்க விளங்கும் சோதியே வாழி யே துரிய வெளியின் நடுநின் றோங்கும் சோதி வாழி யே சூதி லாமெய்ச் சிற்றம் பலத்துச் சோதி வெல்க வே துலங்கப் பொன்னம் பலத்தில் ஆடும் சோதி வெல்க வே. எனக்கும் உனக்கும்

    chOti evaiyum viLangka viLangkum chOtiyE vAzhi yE turiya veLiyin naTunin ROngkum chOti vAzhi yE chUti lAmeych chiRRam palattuch chOti velka vE tulangkap ponnam palattil ATum chOti velka vE. enakkum unakkum

  51. சுத்த சிவசன் மார்க்க நீதிச் சோதி போற்றி யே சுகவாழ் வளித்த சிற்றம் பலத்துச் சோதி போற்றி யே சுத்த சுடர்ப்பொற் சபையில் ஆடும் சோதி போற்றி யே சோதி முழுதும் விளங்க விளங்கும் சோதி போற்றி யே.

    chutta chivachan mArkka nItich chOti pORRi yE chukavAzh vaLitta chiRRam palattuch chOti pORRi yE chutta chuTarppoR chapaiyil ATum chOti pORRi yE chOti muzhutum viLangka viLangkum chOti pORRi yE.

  52. எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்த மோ இந்தப் பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்த மோ.

    enakkum unakkum ichainta poruttam enna porutta mO intap poruttam ulakil piRaruk keytum porutta mO.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout