
திருவருட்பா · 113அம்பலவாணர் வருகை
தனிபெருங்கருணை
1 / 2
உன்னுதோ றுன்னுதோ றுள்ளே இனிக்கின்ற உத்தம ரேஇங்கு வாரீர் உற்ற துணையானீர் வாரீர். வாரீர்
unnutO RunnutO RuLLE inikkinRa uttama rEingku vArIr uRRa tuNaiyAnIr vArIr. vArIr
உம்மாணை உம்மாணை உம்மைஅல் லால்எனக் குற்றவர் மற்றிலை வாரீர் உற்றறிந் தீர்இங்கு வாரீர். வாரீர்
ummANai ummANai ummaial lAlenak kuRRavar maRRilai vArIr uRRaRin tIringku vArIr. vArIr
ஊன நடந்தவிர்த் தான நடங்காட்டு மோன நடேசரே வாரீர் ஞான நடேசரே வாரீர். வாரீர்
Una naTantavirt tAna naTangkATTu mOna naTEcharE vArIr njAna naTEcharE vArIr. vArIr
ஊருமில் லீர்ஒரு பேருமில் லீர்அறி வோருமில் லீர்இங்கு வாரீர் யாருமில் லீர்இங்கு வாரீர். வாரீர்
Urumil lIroru pErumil lIraRi vOrumil lIringku vArIr yArumil lIringku vArIr. vArIr
ஊறு சிவானந்தப் பேறு தருகின்ற வீறுடை யீர்இங்கு வாரீர் நீறுடை யீர்இங்கு வாரீர். வாரீர்
URu chivAnantap pERu tarukinRa vIRuTai yIringku vArIr nIRuTai yIringku vArIr. vArIr
ஊன்றுநும் சேவடி சான்று தரிக்கிலேன் ஏன்றுகொள் வீர்இங்கு வாரீர் ஆன்றவ ரேஇங்கு வாரீர். வாரீர்
UnRunum chEvaTi chAnRu tarikkilEn EnRukoL vIringku vArIr AnRava rEingku vArIr. vArIr
ஊற்றை உடம்பிது மாற்றுயர் பொன்னென ஏற்றம் அருள்செய்வீர் வாரீர் தேற்றம் அருள்செய்வீர் வாரீர். வாரீர்
URRai uTampitu mARRuyar ponnena ERRam aruLcheyvIr vArIr tERRam aruLcheyvIr vArIr. vArIr
ஊடல்இல் லீர்எனைக் கூடல்வல் லீர்என்னுள் பாடல்சொல் வீர்இங்கு வாரீர் ஆடல்நல் லீர்இங்கு வாரீர். வாரீர்
UTalil lIrenaik kUTalval lIrennuL pATalchol vIringku vArIr ATalnal lIringku vArIr. vArIr
ஊக்கம் கொடுத்தென்றன் ஏக்கம் கெடுத்தருள் ஆக்க மடுத்தீரே வாரீர் தூக்கம் தவிர்த்தீரே வாரீர். வாரீர்
Ukkam koTuttenRan Ekkam keTuttaruL Akka maTuttIrE vArIr tUkkam tavirttIrE vArIr. vArIr
ஊமை எழுத்தினுள் ஆமை எழுத்துண்டென் றோமை அறிவித்தீர் வாரீர் சேமஞ் செறிவித்தீர் வாரீர். வாரீர்
Umai ezhuttinuL Amai ezhuttuNTen ROmai aRivittIr vArIr chEmanj cheRivittIr vArIr. vArIr
ஊக மிலேன்பெற்ற தேகம் அழியாத யோகம் கொடுத்தீரே வாரீர் போகம் கொடுத்தீரே வாரீர். வாரீர்
Uka milEnpeRRa tEkam azhiyAta yOkam koTuttIrE vArIr pOkam koTuttIrE vArIr. vArIr
ஊதியம் தந்தநல் வேதிய ரேஉண்மை ஓதிய நாதரே வாரீர் ஆதிஅ னாதியீர் வாரீர். வாரீர்
Utiyam tantanal vEtiya rEuNmai Otiya nAtarE vArIr Atia nAtiyIr vArIr. vArIr
என்குறை தீர்த்தென்னுள் நன்குறை வீர்இனி என்குறை என்முன்னீர் வாரீர் தன்குறை இல்லீரே வாரீர். வாரீர்
enkuRai tIrttennuL nankuRai vIrini enkuRai enmunnIr vArIr tankuRai illIrE vArIr. vArIr
என்னுயிர் ஆகிஎன் றன்உயிர்க் குள்ளேஓர் இன்னுயிர் ஆயினீர் வாரீர் என்னுயிர் நாதரே வாரீர். வாரீர்
ennuyir Akien Ranuyirk kuLLEOr innuyir AyinIr vArIr ennuyir nAtarE vArIr. vArIr
என்கண் அருள்செய்தென் புன்கண் விலக்கிய என்கண் ணனையீரே வாரீர் என்கண் ணுதலீரே வாரீர். வாரீர்
enkaN aruLcheyten punkaN vilakkiya enkaN NanaiyIrE vArIr enkaN NutalIrE vArIr. vArIr
எல்லா உயிர்களும் நல்லார் எனத்தொழும் எல்லாம்வல் லீர்இங்கு வாரீர் சொல்லா நிலையினீர் வாரீர். வாரீர்
ellA uyirkaLum nallAr enattozhum ellAmval lIringku vArIr chollA nilaiyinIr vArIr. vArIr
எட்டும் இரண்டுமென் றிட்டு வழங்குதல் எட்டும் படிசெய்தீர் வாரீர் எட்டுரு வாயினீர் வாரீர். வாரீர்
eTTum iraNTumen RiTTu vazhangkutal eTTum paTicheytIr vArIr eTTuru vAyinIr vArIr. vArIr
என்று கண்டாய்இது நன்றுகொண் டாளுக என்றுதந் தீர்இங்கு வாரீர் அன்றுவந் தீர்இன்று வாரீர். வாரீர்
enRu kaNTAyitu nanRukoN TALuka enRutan tIringku vArIr anRuvan tIrinRu vArIr. vArIr
எச்சம யங்களும் பொய்ச்சம யமென்றீர் இச்சம யம்இங்கு வாரீர் மெய்ச்சம யந்தந்தீர் வாரீர். வாரீர்
echchama yangkaLum poychchama yamenRIr ichchama yamingku vArIr meychchama yantantIr vArIr. vArIr
என்பாற் களிப்பொடும் அன்பால்ஒன் றீந்திதை இன்பால் பெறுகின்றீர் வாரீர் தென்பால் முகங்கொண்டீர் வாரீர். வாரீர்
enpAR kaLippoTum anpAlon RIntitai inpAl peRukinRIr vArIr tenpAl mukangkoNTIr vArIr. vArIr
எச்ச உரையன்றென் இச்சைஎல் லாம்உம திச்சைகண் டீர்இங்கு வாரீர் அச்சம்த விர்த்தீரே வாரீர். வாரீர்
echcha uraiyanRen ichchaiel lAmuma tichchaikaN TIringku vArIr achchamta virttIrE vArIr. vArIr
எண்ணமெல் லாம்உம தெண்ணமல் லால்வேறோர் எண்ணம் எனக்கில்லை வாரீர் வண்ணம் அளிக்கின்றீர் வாரீர். வாரீர்
eNNamel lAmuma teNNamal lAlvEROr eNNam enakkillai vArIr vaNNam aLikkinRIr vArIr. vArIr
ஏராய நான்முகர் நாராய ணர்மற்றும் பாராய ணம்செய்வீர் வாரீர் ஊராயம் ஆயினீர் வாரீர். வாரீர்
ErAya nAnmukar nArAya NarmaRRum pArAya NamcheyvIr vArIr UrAyam AyinIr vArIr. vArIr
ஏம மிகுந்திரு வாம சுகந்தரும் ஏம சபேசரே வாரீர் சோம சிகாமணி வாரீர். வாரீர்
Ema mikuntiru vAma chukantarum Ema chapEcharE vArIr chOma chikAmaNi vArIr. vArIr
ஏத மிலாப்பர நாத முடிப்பொருள் ஏதது சொல்லுவீர் வாரீர் ஈதல் உடையீரே வாரீர். வாரீர்
Eta milAppara nAta muTipporuL Etatu cholluvIr vArIr Ital uTaiyIrE vArIr. vArIr
ஏக பராபர யோக வெளிக்கப்பால் ஏக வெளிநின்றீர் வாரீர் ஏகர் அனேகரே வாரீர். வாரீர்
Eka parApara yOka veLikkappAl Eka veLininRIr vArIr Ekar anEkarE vArIr. vArIr
ஏறி இறங்கி இருந்தேன் இறங்காமல் ஏறவைத் தீர்இங்கு வாரீர் தேறவைத் தீர்இங்கு வாரீர். வாரீர்
ERi iRangki iruntEn iRangkAmal ERavait tIringku vArIr tERavait tIringku vArIr. vArIr
ஏகாந்த நன்னிலை யோகாந்தத் துள்ளதென் றேகாந்தம் சொல்லினீர் வாரீர் தேகாந்தம் இல்லீரே வாரீர். வாரீர்
EkAnta nannilai yOkAntat tuLLaten REkAntam chollinIr vArIr tEkAntam illIrE vArIr. vArIr
ஏகாத கல்விதான் சாகாத கல்வியென் றேகாத லாற்சொன்னீர் வாரீர் வேகாத காலினீர் வாரீர். வாரீர்
EkAta kalvitAn chAkAta kalviyen REkAta lARchonnIr vArIr vEkAta kAlinIr vArIr. vArIr
ஏடா யிரமென்னை கோடா மொழிஒன்றே ஏடாஎன் றீர்இங்கு வாரீர் ஈடாவார் இல்லீரே வாரீர். வாரீர்
ETA yiramennai kOTA mozhionRE ETAen RIringku vArIr ITAvAr illIrE vArIr. vArIr
ஏசாத தந்திரம் பேசாத மந்திரம் ஈசான மேலென்றீர் வாரீர் ஆசாதி இல்லீரே வாரீர். வாரீர்
EchAta tantiram pEchAta mantiram IchAna mElenRIr vArIr AchAti illIrE vArIr. vArIr
ஏனென்பார் வேறிலை நான்அன்பாற் கூவுகின் றேன்என்பால் ஏனென்பீர் வாரீர் ஆனின்பால் ஆடுவீர் வாரீர். வாரீர்
EnenpAr vERilai nAnanpAR kUvukin REnenpAl EnenpIr vArIr AninpAl ATuvIr vArIr. vArIr
ஐந்து மலங்களும் வெந்து விழஎழுத் தைந்துஞ் செயும்என்றீர் வாரீர் இந்து சிகாமணி வாரீர். வாரீர்
aintu malangkaLum ventu vizhaezhut taintunj cheyumenRIr vArIr intu chikAmaNi vArIr. vArIr
ஐயமுற் றேனைஇவ் வையங் கரியாக ஐயம் தவிர்த்தீரே வாரீர் மெய்யம் பலத்தீரே வாரீர். வாரீர்
aiyamuR REnaiiv vaiyang kariyAka aiyam tavirttIrE vArIr meyyam palattIrE vArIr. vArIr
ஐயர் நடம்புரி மெய்யர்என் றேஉணர்ந் தையர் தொழநின்றீர் வாரீர் துய்யர் உளநின்றீர் வாரீர். வாரீர்
aiyar naTampuri meyyaren REuNarn taiyar tozhaninRIr vArIr tuyyar uLaninRIr vArIr. vArIr
ஐவணங் காட்டுநும் மெய்வணம் வேட்டுநின் றைவணர் ஏத்துவீர் வாரீர் பொய்வணம் போக்குவீர் வாரீர். வாரீர்
aivaNang kATTunum meyvaNam vETTunin RaivaNar EttuvIr vArIr poyvaNam pOkkuvIr vArIr. vArIr
ஒன்றே சிவம்அதை ஒன்றுசன் மார்க்கமும் ஒன்றேஎன் றீர்இங்கு வாரீர் நன்றேநின் றீர்இங்கு வாரீர். வாரீர்
onRE chivamatai onRuchan mArkkamum onREen RIringku vArIr nanREnin RIringku vArIr. vArIr
ஒப்பாரில் லீர்உமக் கிப்பாரில் பிள்ளைநான் ஒப்பாரி அல்லகாண் வாரீர் முப்பாழ் கடந்தீரே வாரீர். வாரீர்
oppAril lIrumak kippAril piLLainAn oppAri allakAN vArIr muppAzh kaTantIrE vArIr. vArIr
ஒத்த இடந்தன்னில் நித்திரை செய்என்றீர் ஒத்த இடங்காட்ட வாரீர் சித்த சிகாமணி வாரீர். வாரீர்
otta iTantannil nittirai cheyenRIr otta iTangkATTa vArIr chitta chikAmaNi vArIr. vArIr
ஒட்டுமற் றில்லைநான் விட்டுப் பிரிகலேன் ஒட்டுவைத் தேனும்மேல் வாரீர் எட்டுக் குணத்தீரே வாரீர். வாரீர்
oTTumaR RillainAn viTTup pirikalEn oTTuvait tEnummEl vArIr eTTuk kuNattIrE vArIr. vArIr
ஒருமை நிலையில் இருமையும் தந்த ஒருமையி னீர்இங்கு வாரீர் பெருமையி னீர்இங்கு வாரீர். வாரீர்
orumai nilaiyil irumaiyum tanta orumaiyi nIringku vArIr perumaiyi nIringku vArIr. vArIr
ஒண்மை விரும்பினேன் அண்மையில் ஈகுவீர் உண்மைசொன் னேன்இங்கு வாரீர் பெண்மை இடங்கொண்டீர் வாரீர். வாரீர்
oNmai virumpinEn aNmaiyil IkuvIr uNmaichon nEningku vArIr peNmai iTangkoNTIr vArIr. vArIr
ஓங்கார நாடகம் பாங்காகச் செய்கின்ற ஓங்கார நாடரே வாரீர் ஆங்கார நீக்கினீர் வாரீர். வாரீர்
OngkAra nATakam pAngkAkach cheykinRa OngkAra nATarE vArIr AngkAra nIkkinIr vArIr. vArIr
ஓங்கும்பிண் டாண்டங்கள் தாங்கும் பெருவெளி ஓங்கு நடேசரே வாரீர் பாங்குசெய் வீர்இங்கு வாரீர். வாரீர்
OngkumpiN TANTangkaL tAngkum peruveLi Ongku naTEcharE vArIr pAngkuchey vIringku vArIr. vArIr
ஓசையின் உள்ளேஓர் ஆசை உதிக்கமெல் ஓசைசெய் வித்தீரே வாரீர் பாசம் அறுத்தீரே வாரீர். வாரீர்
Ochaiyin uLLEOr Achai utikkamel Ochaichey vittIrE vArIr pAcham aRuttIrE vArIr. vArIr
ஓரா துலகினைப் பாரா திருநினக் கோரா வகைஎன்றீர் வாரீர் பேரா நிலைதந்தீர் வாரீர். வாரீர்
OrA tulakinaip pArA tiruninak kOrA vakaienRIr vArIr pErA nilaitantIr vArIr. vArIr
ஓடாது மாயையை நாடாது நன்னெறி ஊடா திருஎன்றீர் வாரீர் வாடா திருஎன்றீர் வாரீர். வாரீர்
OTAtu mAyaiyai nATAtu nanneRi UTA tiruenRIr vArIr vATA tiruenRIr vArIr. vArIr
ஓலக் கபாடத்தைச் சாலத் திறந்தருள் ஓலக்கங் காட்டினீர் வாரீர் காலக் கணக்கில்லீர் வாரீர். வாரீர்
Olak kapATattaich chAlat tiRantaruL Olakkang kATTinIr vArIr kAlak kaNakkillIr vArIr. vArIr
ஓடத்தின் நின்றொரு மாடத்தில் ஏற்றிமெய் யூடத்தைக் காட்டினீர் வாரீர் வேடத்தைப் பூட்டினீர் வாரீர். வாரீர்
OTattin ninRoru mATattil ERRimey yUTattaik kATTinIr vArIr vETattaip pUTTinIr vArIr. vArIr
ஓமத்தி லேநடுச் சாமத்தி லேஎனை ஓமத்தன் ஆக்கினீர் வாரீர் சாமத்த நீக்கினீர் வாரீர். வாரீர்
Omatti lEnaTuch chAmatti lEenai Omattan AkkinIr vArIr chAmatta nIkkinIr vArIr. vArIr
ஓமென்ப தற்குமுன் ஆமென் றுரைத்துடன் ஊமென்று காட்டினீர் வாரீர் நாமென்று நாட்டினீர் வாரீர். வாரீர்
Omenpa taRkumun Amen RuraittuTan UmenRu kATTinIr vArIr nAmenRu nATTinIr vArIr. vArIr
ஔவிய மார்க்கத்தின் வெவ்வியல் நீக்கியே செவ்வியன் ஆக்கினீர் வாரீர் ஒவ்விஒன் றாக்கினீர் வாரீர். வாரீர்
auviya mArkkattin vevviyal nIkkiyE chevviyan AkkinIr vArIr ovvion RAkkinIr vArIr. vArIr
கண்ணனை யீர்உம்மைக் காணஎன் ஆசை கடல்பொங்கு கின்றது வாரீர் உடல்தங்கு கின்றது வாரீர். வாரீர்
kaNNanai yIrummaik kANaen Achai kaTalpongku kinRatu vArIr uTaltangku kinRatu vArIr. vArIr
கண்டணைந் தால்அன்றிக் காதல் அடங்காதென் கண்மணி யீர்இங்கு வாரீர் உண்மணி யீர்இங்கு வாரீர். வாரீர்
kaNTaNain tAlanRik kAtal aTangkAten kaNmaNi yIringku vArIr uNmaNi yIringku vArIr. vArIr
கட்டிக்கொண் டும்மைக் கலந்து கொளல்வேண்டும் காரண ரேஇங்கு வாரீர் பூரண ரேஇங்கு வாரீர். வாரீர்
kaTTikkoN Tummaik kalantu koLalvENTum kAraNa rEingku vArIr pUraNa rEingku vArIr. vArIr
வாரீர் சிதம்பர வல்லி சிவகாம வல்லி மணாளரே வாரீர் மணிமன்ற வாணரே வாரீர்.
vArIr chitampara valli chivakAma valli maNALarE vArIr maNimanRa vANarE vArIr.
