
திருவருட்பா · 7வடிவுடை மாணிக்க மாலை
தனிபெருங்கருணை
சினங்கடந் தோர்உள்ளச் செந்தா மரையில் செழித்துமற்றை மனங்கடந் தோதும்அவ் வாக்கும் கடந்த மறைஅன்னமே தினங்கடந் தோர்புகழ் ஒற்றிஎம் மானிடம் சேரமுதே வனங்கடந் தோன்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.
chinangkaTan tOruLLach chentA maraiyil chezhittumaRRai manangkaTan tOtumav vAkkum kaTanta maRaiannamE tinangkaTan tOrpukazh oRRiem mAniTam chEramutE vanangkaTan tOnpukazh mAnE vaTivuTai mANikkamE.
வல்லாரும் வல்லவர் அல்லாரும் மற்றை மனிதர்முதல் எல்லாரும் நின்செயல் அல்லா தணுவும் இயக்கிலரேல் இல்லாமை யால்உழல் புல்லேன்செய் குற்றங்கள் ஏதுகண்டாய் மல்லார் வயல்ஒற்றி நல்லாய் வடிவுடை மாணிக்கமே.
vallArum vallavar allArum maRRai manitarmutal ellArum nincheyal allA taNuvum iyakkilarEl illAmai yAluzhal pullEnchey kuRRangkaL EtukaNTAy mallAr vayaloRRi nallAy vaTivuTai mANikkamE.
எழுதா எழில்உயிர்ச் சித்திர மேஇன் இசைப்பயனே தொழுதாடும் அன்பர்தம் உட்களிப் பேசிற் சுகக்கடலே செழுவார் மலர்ப்பொழில் ஒற்றிஎம் மான்தன் திருத்துணையே வழுவா மறையின் பொருளே வடிவுடை மாணிக்கமே.
ezhutA ezhiluyirch chittira mEin ichaippayanE tozhutATum anpartam uTkaLip pEchiR chukakkaTalE chezhuvAr malarppozhil oRRiem mAntan tiruttuNaiyE vazhuvA maRaiyin poruLE vaTivuTai mANikkamE.
தெருட்பா லுறும்ஐங்கைச் செல்வர்க்கும் நல்லிளஞ் சேய்க்குமகிழ்ந் தருட்பால் அளிக்கும் தனத்தன மேஎம் அகங்கலந்த இருட்பால் அகற்றும் இருஞ்சுட ரேஒற்றி எந்தைஉள்ளம் மருட்பால் பயிலு மயிலே வடிவுடை மாணிக்கமே.
teruTpA luRumaingkaich chelvarkkum nalliLanj chEykkumakizhn taruTpAl aLikkum tanattana mEem akangkalanta iruTpAl akaRRum irunjchuTa rEoRRi entaiuLLam maruTpAl payilu mayilE vaTivuTai mANikkamE.
அயிலேந்தும் பிள்ளைநற் றாயே திருவொற்றி ஐயர்மலர்க் கயிலேந் தரும்பெறல் முத்தே இசையில் கனிந்தகுரல் குயிலே குயின்மென் குழற்பிடி யேமலைக் கோன்பயந்த மயிலே மதிமுக மானே வடிவுடை மாணிக்கமே.
ayilEntum piLLainaR RAyE tiruvoRRi aiyarmalark kayilEn tarumpeRal muttE ichaiyil kanintakural kuyilE kuyinmen kuzhaRpiTi yEmalaik kOnpayanta mayilE matimuka mAnE vaTivuTai mANikkamE.
செய்யகம் ஓங்கும் திருவொற்றி யூரில் சிவபெருமான் மெய்யகம் ஓங்குநல் அன்பேநின் பால்அன்பு மேவுகின்றோர் கையகம் ஓங்கும் கனியே தனிமெய்க் கதிநெறியே வையகம் ஓங்கு மருந்தே வடிவுடை மாணிக்கமே.
cheyyakam Ongkum tiruvoRRi yUril chivaperumAn meyyakam Ongkunal anpEnin pAlanpu mEvukinROr kaiyakam Ongkum kaniyE tanimeyk katineRiyE vaiyakam Ongku maruntE vaTivuTai mANikkamE.
தரும்பேர் அருளொற்றி யூருடை யான்இடஞ் சார்ந்தபசுங் கரும்பே இனியகற் கண்டே மதுரக் கனிநறவே இரும்பேய் மனத்தினர் பால்இசை யாத இளங்கிளியே வரும்பேர் ஒளிச்செஞ் சுடரே வடிவுடை மாணிக்கமே.
tarumpEr aruLoRRi yUruTai yAniTanj chArntapachung karumpE iniyakaR kaNTE maturak kaninaRavE irumpEy manattinar pAlichai yAta iLangkiLiyE varumpEr oLichchenj chuTarE vaTivuTai mANikkamE.
சேலேர் விழியருள் தேனே அடியருள் தித்திக்கும்செம் பாலே மதுரச்செம் பாகேசொல் வேதப் பனுவல்முடி மேலே விளங்கும் விளக்கே அருளொற்றி வித்தகனார் மாலே கொளும்எழில் மானே வடிவுடை மாணிக்கமே.
chElEr vizhiyaruL tEnE aTiyaruL tittikkumchem pAlE maturachchem pAkEchol vEtap panuvalmuTi mElE viLangkum viLakkE aruLoRRi vittakanAr mAlE koLumezhil mAnE vaTivuTai mANikkamE.
எம்பால் அருள்வைத் தெழிலொற்றி யூர்கொண் டிருக்கும் இறைச் செம்பால் கலந்தபைந் தேனே கதலிச் செழுங்கனியே வெம்பாலை நெஞ்சருள் மேவா மலர்ப்பத மென்கொடியே வம்பால் அணிமுலை மானே வடிவுடை மாணிக்கமே.
empAl aruLvait tezhiloRRi yUrkoN Tirukkum iRaich chempAl kalantapain tEnE katalich chezhungkaniyE vempAlai nenjcharuL mEvA malarppata menkoTiyE vampAl aNimulai mAnE vaTivuTai mANikkamE.
ஏமமுய்ப் போர்எமக் கென்றே இளைக்கில் எடுக்கவைத்த சேமவைப் பேஅன்பர் தேடுமெய்ஞ் ஞானத் திரவியமே தாமமைக் கார்மலர்க் கூந்தல் பிடிமென் தனிநடையாய் வாமநற் சீர்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
Emamuyp pOremak kenRE iLaikkil eTukkavaitta chEmavaip pEanpar tETumeynj njAnat tiraviyamE tAmamaik kArmalark kUntal piTimen taninaTaiyAy vAmanaR chIroRRi mAnE vaTivuTai mANikkamE.
மன்னேர் மலையன் மனையும்நற் காஞ்சன மாலையும்நீ அன்னே எனத்திரு வாயால் அழைக்கப்பெற் றார்அவர்தாம் முன்னே அருந்தவம் என்னே முயன்றனர் முன்னும் ஒற்றி வன்னேர் இளமுலை மின்னே வடிவுடை மாணிக்கமே.
mannEr malaiyan manaiyumnaR kAnjchana mAlaiyumnI annE enattiru vAyAl azhaikkappeR RAravartAm munnE aruntavam ennE muyanRanar munnum oRRi vannEr iLamulai minnE vaTivuTai mANikkamE.
கணமொன்றி லேனும்என் உள்ளக் கவலைக் கடல்கடந்தே குணமொன்றி லேன்எது செய்கேன்நின் உள்ளக் குறிப்பறியேன் பணமொன்று பாம்பணி ஒற்றிஎம் மானிடப் பாலில்தெய்வ மணமொன்று பச்சைக் கொடியே வடிவுடை மாணிக்கமே.
kaNamonRi lEnumen uLLak kavalaik kaTalkaTantE kuNamonRi lEnetu cheykEnnin uLLak kuRippaRiyEn paNamonRu pAmpaNi oRRiem mAniTap pAlilteyva maNamonRu pachchaik koTiyE vaTivuTai mANikkamE.
கருவே தனையற என்னெஞ் சகத்தில் களிப்பொடொற்றிக் குருவே எனும்நின் கணவனும் நீயும் குலவும்அந்தத் திருவே அருள்செந் திருவே முதற்பணி செய்யத் தந்த மருவே மருவு மலரே வடிவுடை மாணிக்கமே.
karuvE tanaiyaRa ennenj chakattil kaLippoToRRik kuruvE enumnin kaNavanum nIyum kulavumantat tiruvE aruLchen tiruvE mutaRpaNi cheyyat tanta maruvE maruvu malarE vaTivuTai mANikkamE.
எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்குன்அருள் பண்ணிய உள்ளங்கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும் புண்ணிய மல்லிகைப் போதே எழில்ஒற்றிப் பூரணர்பால் மண்ணிய பச்சை மணியே வடிவுடை மாணிக்கமே.
eNNiya eNNangkaL ellAm palikka enakkunaruL paNNiya uLLangkoL uLLum puRampum parimaLikkum puNNiya mallikaip pOtE ezhiloRRip pUraNarpAl maNNiya pachchai maNiyE vaTivuTai mANikkamE.
தீதுசெய் தாலும்நின் அன்பர்கள் தம்முன் செருக்கிநின்று வாதுசெய் தாலும்நின் தாள்மறந் தாலும் மதியிலியேன் ஏதுசெய் தாலும் பொறுத்தருள் வாய்ஒற்றி யின்னிடைப்பூ மாதுசெய் தாழ்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
tItuchey tAlumnin anparkaL tammun cherukkininRu vAtuchey tAlumnin tALmaRan tAlum matiyiliyEn Etuchey tAlum poRuttaruL vAyoRRi yinniTaippU mAtuchey tAzhkuzhal mAnE vaTivuTai mANikkamE.
மருந்தினின் றான்ஒற்றி யூர்வாழும் நின்றன் மகிழ்நன்முன்னும் திருந்திநின் றார்புகழ் நின்முன்னும் நல்லருள் தேன்விழைந்தே விருந்தினின் றேன்சற்றும் உள்ளிரங் காத விதத்தைக்கண்டு வருந்திநின் றேன்இது நன்றோ வடிவுடை மாணிக்கமே.
maruntinin RAnoRRi yUrvAzhum ninRan makizhnanmunnum tiruntinin RArpukazh ninmunnum nallaruL tEnvizhaintE viruntinin REnchaRRum uLLirang kAta vitattaikkaNTu varuntinin REnitu nanRO vaTivuTai mANikkamE.
என்போல் குணத்தில் இழிந்தவர் இல்லைஎப் போதும்எங்கும் நின்போல் அருளில் சிறந்தவர் இல்லைஇந் நீர்மையினால் பொன்போலும் நின்னருள் அன்னே எனக்கும் புரிதிகண்டாய் மன்போல் உயர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
enpOl kuNattil izhintavar illaiep pOtumengkum ninpOl aruLil chiRantavar illaiin nIrmaiyinAl ponpOlum ninnaruL annE enakkum puritikaNTAy manpOl uyaroRRi vAzhvE vaTivuTai mANikkamE.
துன்பே மிகும்இவ் அடியேன் மனத்தில்நின் துய்யஅருள் இன்பே மிகுவதெந் நாளோ எழிலொற்றி எந்தைஉயிர்க் கன்பேமெய்த் தொண்டர் அறிவே சிவநெறிக் கன்பிலர்பால் வன்பேமெய்ப் போத வடிவே வடிவுடை மாணிக்கமே.
tunpE mikumiv aTiyEn manattilnin tuyyaaruL inpE mikuvaten nALO ezhiloRRi entaiuyirk kanpEmeyt toNTar aRivE chivaneRik kanpilarpAl vanpEmeyp pOta vaTivE vaTivuTai mANikkamE.
சற்றே யெனினும்என் நெஞ்சத் துயரம் தவிரவும்நின் பொற்றே மலர்ப்பதம் போற்றவும் உள்ளம் புரிதிகண்டாய் சொற்றேர் அறிஞர் புகழ்ஒற்றி மேவும் துணைவர்தஞ்செம் மற்றேர் புயத்தணை மானே வடிவுடை மாணிக்கமே.
chaRRE yeninumen nenjchat tuyaram taviravumnin poRRE malarppatam pORRavum uLLam puritikaNTAy choRREr aRinjar pukazhoRRi mEvum tuNaivartanjchem maRREr puyattaNai mAnE vaTivuTai mANikkamE.
சந்தோட மாப்பிறர் எல்லாம் இருக்கவும் சஞ்சலத்தால் அந்தோ ஒருதமி யேன்மட்டும் வாடல் அருட்கழகோ நந்தோட நீக்கிய நங்காய் எனத்திரு நான்முகன்மால் வந்தோதும் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.
chantOTa mAppiRar ellAm irukkavum chanjchalattAl antO orutami yEnmaTTum vATal aruTkazhakO nantOTa nIkkiya nangkAy enattiru nAnmukanmAl vantOtum oRRi mayilE vaTivuTai mANikkamE.
அடியேன் மிசைஎப் பிழையிருந் தாலும் அவைபொறுத்துச் செடியேதம் நீக்கிநற் சீரருள் வாய்திகழ் தெய்வமறைக் கொடியே மரகதக் கொம்பே எழில்ஒற்றிக் கோமளமே வடியேர் அயில்விழி மானே வடிவுடை மாணிக்கமே.
aTiyEn michaiep pizhaiyirun tAlum avaipoRuttuch cheTiyEtam nIkkinaR chIraruL vAytikazh teyvamaRaik koTiyE marakatak kompE ezhiloRRik kOmaLamE vaTiyEr ayilvizhi mAnE vaTivuTai mANikkamE.
கண்ணப்பன் ஏத்துநற் காளத்தி யார்மங் கலங்கொள்ஒற்றி நண்ணப்பர் வேண்டும் நலமே பரானந்த நன்னறவே எண்ணப் படாஎழில் ஓவிய மேஎமை ஏன்றுகொண்ட வண்ணப் பசும்பொன் வடிவே வடிவுடை மாணிக்கமே.
kaNNappan EttunaR kALatti yArmang kalangkoLoRRi naNNappar vENTum nalamE parAnanta nannaRavE eNNap paTAezhil Oviya mEemai EnRukoNTa vaNNap pachumpon vaTivE vaTivuTai mANikkamE.
கற்பே விகற்பம் கடியும்ஒன் றேஎங்கள் கண்நிறைந்த பொற்பேமெய்த் தொண்டர்தம் புண்ணிய மேஅருட் போதஇன்பே சொற்பேர் அறிவுட் சுகப்பொரு ளேமெய்ச் சுயஞ்சுடரே மற்பேர் பெறும்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
kaRpE vikaRpam kaTiyumon REengkaL kaNniRainta poRpEmeyt toNTartam puNNiya mEaruT pOtainpE choRpEr aRivuT chukapporu LEmeych chuyanjchuTarE maRpEr peRumoRRi mAnE vaTivuTai mANikkamE.
மிகவே துயர்க்கடல் வீழ்ந்தேனை நீகை விடுதலருள் தகவே எனக்குநற் றாயே அகில சராசரமும் சுகவேலை மூழ்கத் திருவொற்றி யூரிடந் துன்னிப்பெற்ற மகவே எனப்புரக் கின்றோய் வடிவுடை மாணிக்கமே.
mikavE tuyarkkaTal vIzhntEnai nIkai viTutalaruL takavE enakkunaR RAyE akila charAcharamum chukavElai mUzhkat tiruvoRRi yUriTan tunnippeRRa makavE enappurak kinROy vaTivuTai mANikkamE.
வேதங்க ளாய்ஒற்றி மேவும் சிவத்தின் விளைவருளாய்ப் பூதங்க ளாய்ப்பொறி யாய்ப்புல னாகிப் புகல்கரண பேதங்க ளாய்உயிர் ஆகிய நின்னைஇப் பேதைஎன்வாய் வாதங்க ளால்அறி வேனோ வடிவுடை மாணிக்கமே.
vEtangka LAyoRRi mEvum chivattin viLaivaruLAyp pUtangka LAyppoRi yAyppula nAkip pukalkaraNa pEtangka LAyuyir Akiya ninnaiip pEtaienvAy vAtangka LAlaRi vEnO vaTivuTai mANikkamE.
மதியே மதிமுக மானே அடியர் மனத்துவைத்த நிதியே கருணை நிறைவே சுகாநந்த நீள்நிலையே கதியே கதிவழி காட்டுங்கண் ணேஒற்றிக் காவலர்பால் வதியேர் இளமட மானே வடிவுடை மாணிக்கமே.
matiyE matimuka mAnE aTiyar manattuvaitta nitiyE karuNai niRaivE chukAnanta nILnilaiyE katiyE kativazhi kATTungkaN NEoRRik kAvalarpAl vatiyEr iLamaTa mAnE vaTivuTai mANikkamE.
ஆறாத் துயரத் தழுந்துகின் றேனைஇங் கஞ்சல்என்றே கூறாக் குறைஎன் குறையே இனிநின் குறிப்பறியேன் தேறாச் சிறியர்க் கரிதாம் திருவொற்றித் தேவர்மகிழ் மாறாக் கருணை மழையே வடிவுடை மாணிக்கமே.
ARAt tuyarat tazhuntukin REnaiing kanjchalenRE kURAk kuRaien kuRaiyE ininin kuRippaRiyEn tERAch chiRiyark karitAm tiruvoRRit tEvarmakizh mARAk karuNai mazhaiyE vaTivuTai mANikkamE.
எற்றே நிலைஒன்றும் இல்லா துயங்கும் எனக்கருளச் சற்றேநின் உள்ளம் திரும்பிலை யான்செயத் தக்கதென்னே சொற்றேன் நிறைமறைக் கொம்பேமெய்ஞ் ஞானச் சுடர்க்கொழுந்தே மற்றேர் அணியொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
eRRE nilaionRum illA tuyangkum enakkaruLach chaRREnin uLLam tirumpilai yAncheyat takkatennE choRREn niRaimaRaik kompEmeynj njAnach chuTarkkozhuntE maRREr aNiyoRRi vAzhvE vaTivuTai mANikkamE.
செவ்வேலை வென்றகண் மின்னேநின் சித்தம் திரும்பிஎனக் கெவ்வேலை செய்என் றிடினும்அவ் வேலை இயற்றுவல்காண் தெவ்வேலை வற்றச்செய் அவ்வேலை யீன்றொற்றித் தேவர்நெஞ்சை வவ்வேல வார்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
chevvElai venRakaN minnEnin chittam tirumpienak kevvElai cheyen RiTinumav vElai iyaRRuvalkAN tevvElai vaRRachchey avvElai yInRoRRit tEvarnenjchai vavvEla vArkuzhal mAnE vaTivuTai mANikkamE.
தாயே மிகவும் தயவுடை யாள்எனச் சாற்றுவர்இச் சேயேன் படுந்துயர் நீக்கஎன் னேஉளம் செய்திலையே நாயேன் பிழைஇனி நாடாது நல்லருள் நல்கவரு வாயேஎம் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.
tAyE mikavum tayavuTai yALenach chARRuvarich chEyEn paTuntuyar nIkkaen nEuLam cheytilaiyE nAyEn pizhaiini nATAtu nallaruL nalkavaru vAyEem oRRi mayilE vaTivuTai mANikkamE.
நானே நினைக்கடி யேன்என் பிழைகளை நாடியநீ தானே எனைவிடில் அந்தோ இனிஎவர் தாங்குகின்றோர் தேனேநல் வேதத் தெளிவே கதிக்குச் செலுநெறியே வானேர் பொழில்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
nAnE ninaikkaTi yEnen pizhaikaLai nATiyanI tAnE enaiviTil antO inievar tAngkukinROr tEnEnal vEtat teLivE katikkuch cheluneRiyE vAnEr pozhiloRRi mAnE vaTivuTai mANikkamE.
கல்லா ரிடத்தில்என் இல்லாமை சொல்லிக் கலங்கிஇடர் நல்லாண்மை உண்டருள் வல்லாண்மை உண்டெனின் நல்குவையோ வல்லார் எவர்கட்கும் வல்லார் திருவொற்றி வாணரொடு மல்லார் பொழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
kallA riTattilen illAmai chollik kalangkiiTar nallANmai uNTaruL vallANmai uNTenin nalkuvaiyO vallAr evarkaTkum vallAr tiruvoRRi vANaroTu mallAr pozhiloRRi vAzhvE vaTivuTai mANikkamE.
சுந்தர வாண்முகத் தோகாய் மறைகள் சொலும்பைங்கிள்ளாய் கந்தர வார்குழற் பூவாய் கருணைக் கடைக்கண்நங்காய் அந்தர நேரிடைப் பாவாய் அருள்ஒற்றி அண்ணல்மகிழ் மந்தர நேர்கொங்கை மங்காய் வடிவுடை மாணிக்கமே.
chuntara vANmukat tOkAy maRaikaL cholumpaingkiLLAy kantara vArkuzhaR pUvAy karuNaik kaTaikkaNnangkAy antara nEriTaip pAvAy aruLoRRi aNNalmakizh mantara nErkongkai mangkAy vaTivuTai mANikkamE.
பத்தர்தம் உள்ளத் திருக்கோயில் மேவும் பரம்பரையே சுத்தமெய்ஞ் ஞான ஒளிப்பிழம் பேசிற் சுகாநந்தமே நித்தநின் சீர்சொல எற்கருள் வாய்ஒற்றி நின்மலர்உன் மத்தர்தம் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே.
pattartam uLLat tirukkOyil mEvum paramparaiyE chuttameynj njAna oLippizham pEchiR chukAnantamE nittanin chIrchola eRkaruL vAyoRRi ninmalarun mattartam vAma mayilE vaTivuTai mANikkamE.
பூவாய் மலர்க்குழல் பூவாய்மெய் அன்பர் புனைந்ததமிழ்ப் பாவாய் நிறைந்தபொற் பாவாய்செந் தேனிற் பகர்மொழியாய் காவாய் எனஅயன் காவாய் பவனும் கருதுமலர் மாவாய் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
pUvAy malarkkuzhal pUvAymey anpar punaintatamizhp pAvAy niRaintapoR pAvAychen tEniR pakarmozhiyAy kAvAy enaayan kAvAy pavanum karutumalar mAvAy ezhiloRRi vAzhvE vaTivuTai mANikkamE.
தாதா உணவுடை தாதா எனப்புல்லர் தம்மிடைப்போய் மாதாகம் உற்றவர் வன்நெஞ்சில் நின்அடி வைகுங்கொலோ காதார் நெடுங்கட் கரும்பேநல் ஒற்றிக் கருத்தர்நட வாதா ரிடம்வளர் மாதே வடிவுடை மாணிக்கமே.
tAtA uNavuTai tAtA enappullar tammiTaippOy mAtAkam uRRavar vannenjchil ninaTi vaikungkolO kAtAr neTungkaT karumpEnal oRRik karuttarnaTa vAtA riTamvaLar mAtE vaTivuTai mANikkamE.
களந்திரும் பாஇக் கடையேனை ஆளக் கருணைகொண்டுன் உளந்திரும் பாமைக்கென் செய்கேன் துயர்க்கட லூடலைந்தேன் குளந்திரும் பாவிழிக் கோமா னொடுந்தொண்டர் கூட்டமுற வளந்திரும் பாஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
kaLantirum pAik kaTaiyEnai ALak karuNaikoNTun uLantirum pAmaikken cheykEn tuyarkkaTa lUTalaintEn kuLantirum pAvizhik kOmA noTuntoNTar kUTTamuRa vaLantirum pAoRRi vAzhvE vaTivuTai mANikkamE.
ஆரணம் பூத்த அருட்கோ மளக்கொடி அந்தரிபூந் தோரணம் பூத்த எழில்ஒற்றி யூர்மகிழ் சுந்தரிசற் காரணம் பூத்த சிவைபார்ப் பதிநங் கவுரிஎன்னும் வாரணம் பூத்த தனத்தாய் வடிவுடை மாணிக்கமே.
AraNam pUtta aruTkO maLakkoTi antaripUn tOraNam pUtta ezhiloRRi yUrmakizh chuntarichaR kAraNam pUtta chivaipArp patinang kavuriennum vAraNam pUtta tanattAy vaTivuTai mANikkamE.
திருவல்லி ஏத்தும் அபிடேக வல்லிஎஞ் சென்னியிடை வருவல்லி கற்பக வல்லிஒண் பச்சை மணிவல்லிஎம் கருவல்லி நீக்கும் கருணாம் பகவல்லி கண்கொள்ஒற்றி மருவல்லி என்று மறைதேர் வடிவுடை மாணிக்கமே.
tiruvalli Ettum apiTEka vallienj chenniyiTai varuvalli kaRpaka vallioN pachchai maNivalliem karuvalli nIkkum karuNAm pakavalli kaNkoLoRRi maruvalli enRu maRaitEr vaTivuTai mANikkamE.
உடையென்ன ஒண்புலித் தோல்உடை யார்கண் டுவக்குமிள நடையன்ன மேமலர்ப் பொன்முத லாம்பெண்கள் நாயகமே படையன்ன நீள்விழி மின்னேர் இடைப்பொற் பசுங்கிளியே மடைமன்னு நீர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
uTaiyenna oNpulit tOluTai yArkaN TuvakkumiLa naTaiyanna mEmalarp ponmuta lAmpeNkaL nAyakamE paTaiyanna nILvizhi minnEr iTaippoR pachungkiLiyE maTaimannu nIroRRi vAzhvE vaTivuTai mANikkamE.
கற்பதும் கேட்பதும் எல்லாம்நின் அற்புதக் கஞ்சமலர்ப் பொற்பதம் காணும் பொருட்டென எண்ணுவர் புண்ணியரே சொற்பத மாய்அவைக் கப்புற மாய்நின்ற தூய்ச்சுடரே மற்பதம் சேரொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
kaRpatum kETpatum ellAmnin aRputak kanjchamalarp poRpatam kANum poruTTena eNNuvar puNNiyarE choRpata mAyavaik kappuRa mAyninRa tUychchuTarE maRpatam chEroRRi vAzhvE vaTivuTai mANikkamE.
நின்னால் எனக்குள எல்லா நலனும் நினைஅடைந்த என்னால் உனக்குள தென்னைகண் டாய்எமை ஈன்றவளே முன்னால் வருக்கருள் ஒற்றிஎம் மான்கண் முழுமணியே ம்ன்னான் மறையின் முடிவே வடிவுடை மாணிக்கமே.
ninnAl enakkuLa ellA nalanum ninaiaTainta ennAl unakkuLa tennaikaN TAyemai InRavaLE munnAl varukkaruL oRRiem mAnkaN muzhumaNiyE mnnAn maRaiyin muTivE vaTivuTai mANikkamE.
நன்றே சிவநெறி நாடுமெய்த் தொண்டர்க்கு நன்மைசெய்து நின்றேநின் சேவடிக் குற்றேவல் செய்ய நினைத்தனன் ஈ தென்றே முடிகுவ தின்றே முடியில் இனிதுகண்டாய் மன்றேர் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
nanRE chivaneRi nATumeyt toNTarkku nanmaicheytu ninREnin chEvaTik kuRREval cheyya ninaittanan I tenRE muTikuva tinRE muTiyil initukaNTAy manREr ezhiloRRi vAzhvE vaTivuTai mANikkamE.
அத்தனை ஒற்றிக் கிறைவனை அம்பலத் தாடுகின்ற முத்தனைச் சேர்ந்தஒண் முத்தே மதிய முகவமுதே இத்தனை என்றள வேலாத குற்றம் இழைத்திடும்இம் மத்தனை ஆளல் வழக்கோ வடிவுடை மாணிக்கமே.
attanai oRRik kiRaivanai ampalat tATukinRa muttanaich chErntaoN muttE matiya mukavamutE ittanai enRaLa vElAta kuRRam izhaittiTumim mattanai ALal vazhakkO vaTivuTai mANikkamE.
கூறாத வாழ்க்கைச் சிறுமையை நோக்கிக் குறித்திடும்என் தேறாத விண்ணப்பம் சற்றேனும் நின்றன் திருச்செவியில் ஏறாத வண்ணம்என் ஒற்றித் தியாகர் இடப்புறத்தின் மாறா தமர்ந்த மயிலே வடிவுடை மாணிக்கமே.
kURAta vAzhkkaich chiRumaiyai nOkkik kuRittiTumen tERAta viNNappam chaRREnum ninRan tiruchcheviyil ERAta vaNNamen oRRit tiyAkar iTappuRattin mARA tamarnta mayilE vaTivuTai mANikkamE.
ஓயா இடர்கொண் டுலைவேனுக் கன்பர்க் குதவுதல்போல் ஈயா விடினும்ஓர் எள்ளள வேனும் இரங்குகண்டாய் சாயா அருள்தரும் தாயே எழில்ஒற்றித் தற்பரையே மாயா நலம்அருள் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
OyA iTarkoN TulaivEnuk kanpark kutavutalpOl IyA viTinumOr eLLaLa vEnum irangkukaNTAy chAyA aruLtarum tAyE ezhiloRRit taRparaiyE mAyA nalamaruL vAzhvE vaTivuTai mANikkamE.
பெரும்பேதை யேன்சிறு வாழ்க்கைத் துயர்எனும் பேரலையில் துரும்பே எனஅலை கின்றேன் புணைநின் துணைப்பதமே கரும்பே கருணைக் கடலே அருண்முக் கனிநறவே வரும்பேர் அருள்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
perumpEtai yEnchiRu vAzhkkait tuyarenum pEralaiyil turumpE enaalai kinREn puNainin tuNaippatamE karumpE karuNaik kaTalE aruNmuk kaninaRavE varumpEr aruLoRRi vAzhvE vaTivuTai mANikkamE.
காதர வால்உட் கலங்கிநின் றேன்நின் கடைக்கண்அருள் ஆதர வால்மகிழ் கின்றேன் இனிஉன் அடைக்கலமே சீதரன் ஏத்தும் திருவொற்றி நாதர்தம் தேவிஎழில் மாதர சேஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
kAtara vAluT kalangkinin REnnin kaTaikkaNaruL Atara vAlmakizh kinREn iniun aTaikkalamE chItaran Ettum tiruvoRRi nAtartam tEviezhil mAtara chEoRRi vAzhvE vaTivuTai mANikkamE.
பொன்னுடை யார்அன்றிப் போற்றுநற் கல்விப் பொருளுடையார் என்னுடை யார்என ஏசுகின் றார்இஃ தென்னைஅன்னே மின்னுடை யாய்மின்னில் துன்னிடை யாய்ஒற்றி மேவுமுக்கண் மன்னுடை யாய்என் னுடையாய் வடிவுடை மாணிக்கமே.
ponnuTai yAranRip pORRunaR kalvip poruLuTaiyAr ennuTai yArena Echukin RAriஃ tennaiannE minnuTai yAyminnil tunniTai yAyoRRi mEvumukkaN mannuTai yAyen nuTaiyAy vaTivuTai mANikkamE.
பொய்விட்டி டாதவன் நெஞ்சகத் தேனைப் புலம்பும்வண்ணம் கைவிட்டி டாதின்னும் காப்பாய் அதுநின் கடன்கரும்பே மெய்விட்டி டாருள் விளைஇன்ப மேஒற்றி வித்தகமே மைவிட்டி டாவிழி மானே வடிவுடை மாணிக்கமே.
poyviTTi TAtavan nenjchakat tEnaip pulampumvaNNam kaiviTTi TAtinnum kAppAy atunin kaTankarumpE meyviTTi TAruL viLaiinpa mEoRRi vittakamE maiviTTi TAvizhi mAnE vaTivuTai mANikkamE.
நேயானு கூல மனமுடை யாய்இனி நீயும்என்றன் தாயாகில் யான்உன் தனையனும் ஆகில்என் தன்உளத்தில் ஓயா துறுந்துயர் எல்லாம் தவிர்த்தருள் ஒற்றியில்செவ் வாயார் அமுத வடிவே வடிவுடை மாணிக்கமே.
nEyAnu kUla manamuTai yAyini nIyumenRan tAyAkil yAnun tanaiyanum Akilen tanuLattil OyA tuRuntuyar ellAm tavirttaruL oRRiyilchev vAyAr amuta vaTivE vaTivuTai mANikkamE.
வாழிநின் சேவடி போற்றிநின் பூம்பத வாரிசங்கள் வாழிநின் தாண்மலர் போற்றிநின் தண்ணளி வாழிநின்சீர் வாழிஎன் உள்ளத்தில் நீயுநின் ஒற்றி மகிழ்நரும்நீ வாழிஎன் ஆருயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
vAzhinin chEvaTi pORRinin pUmpata vArichangkaL vAzhinin tANmalar pORRinin taNNaLi vAzhininchIr vAzhien uLLattil nIyunin oRRi makizhnarumnI vAzhien Aruyir vAzhvE vaTivuTai mANikkamE.
