
திருவருட்பா · 6திருவருண் முறையீடு
தனிபெருங்கருணை
சிற்பர மேஎஞ் சிவமே திருவருள் சீர்மிகுந்த கற்பக மேஉனைச் சார்ந்தோர்க் களிக்குநின் கைவழக்கம் அற்பமன் றேபல அண்டங் களின்அடங் காததென்றே நற்பர ஞானிகள் வாசகத் தால்கண்டு நாடினனே.
chiRpara mEenj chivamE tiruvaruL chIrmikunta kaRpaka mEunaich chArntOrk kaLikkunin kaivazhakkam aRpaman REpala aNTang kaLinaTang kAtatenRE naRpara njAnikaL vAchakat tAlkaNTu nATinanE.
வருஞ்செல்லுள் நீர்மறுத் தாலும் கருணை மறாதஎங்கள் பெருஞ்செல்வ மேஎஞ் சிவமே நினைத்தொழப் பெற்றும்இங்கே தருஞ்செல் அரிக்கு மரம்போல் சிறுமைத் தளர்நடையால் அருஞ்செல்லல் மூழ்கிநிற் கின்றேன் இதுநின் அருட்கழகே.
varunjchelluL nIrmaRut tAlum karuNai maRAtaengkaL perunjchelva mEenj chivamE ninaittozhap peRRumingkE tarunjchel arikku marampOl chiRumait taLarnaTaiyAl arunjchellal mUzhkiniR kinREn itunin aruTkazhakE.
கருமுக நீக்கிய பாணனுக் கேகன கங்கொடுக்கத் திருமுகம் சேரற் களித்தோய்என் றுன்னைத் தெரிந்தடுத்தென் ஒருமுகம் பார்த்தருள் என்கின்ற ஏழைக் குதவிலையேல் உருமுக வார்க்கும் விடையோய் எவர்மற் றுதவுவரே.
karumuka nIkkiya pANanuk kEkana kangkoTukkat tirumukam chEraR kaLittOyen Runnait terintaTutten orumukam pArttaruL enkinRa Ezhaik kutavilaiyEl urumuka vArkkum viTaiyOy evarmaR RutavuvarE.
மருப்பா வனத்துற்ற மாணிக்கு மன்னன் மனமறிந்தோர் திருப்பா சுரஞ்செய்து பொற்கிழி ஈந்தநின் சீர்நினைந்தே விருப்பா நினையடுத் தேன்எனக் கீந்திட வேஇன்றென்னை கருப்பாநின் சித்தம் திருப்பாய்என் மீது கறைக்கண்டனே.
maruppA vanattuRRa mANikku mannan manamaRintOr tiruppA churanjcheytu poRkizhi Intanin chIrninaintE viruppA ninaiyaTut tEnenak kIntiTa vEinRennai karuppAnin chittam tiruppAyen mItu kaRaikkaNTanE.
பீழையை மேவும்இவ் வாழ்க்கையி லேமனம் பேதுற்றஇவ் ஏழையை நீவிட லாமோ அடிமைக் கிரங்குகண்டாய் மாழையைப் போன்முன்னர்த் தாங்கொண்டு வைத்து வளர்த்தஇள வாழையைத் தாம்பின்னர் நீர்விட லின்றி மறுப்பதுண்டே.
pIzhaiyai mEvumiv vAzhkkaiyi lEmanam pEtuRRaiv Ezhaiyai nIviTa lAmO aTimaik kirangkukaNTAy mAzhaiyaip pOnmunnart tAngkoNTu vaittu vaLarttaiLa vAzhaiyait tAmpinnar nIrviTa linRi maRuppatuNTE.
கருத்தறி யாச்சிறி யேன்படுந் துன்பக் கலக்கமெல்லாம் உருத்தறி யாமை பொறுத்தருள் ஈபவர் உன்னையன்றித் திருத்தறி யார்பிறர் அன்றேமென் கன்றின் சிறுமைஒன்றும் எருத்தறி யாதுநற் சேதா அறியும் இரங்குகவே.
karuttaRi yAchchiRi yEnpaTun tunpak kalakkamellAm uruttaRi yAmai poRuttaruL Ipavar unnaiyanRit tiruttaRi yArpiRar anREmen kanRin chiRumaionRum eruttaRi yAtunaR chEtA aRiyum irangkukavE.
வான்வேண்டிக் கொண்ட மருந்தோமுக் கண்கொண்ட வள்ளலுன்னை நான்வேண்டிக் கொண்டது நின்னடி யார்க்கு நகைதருமீ தேன்வேண்டிக் கொண்டனை என்பார் இதற்கின்னும் ஏனிரங்காய் தான்வேண்டிக் கொண்ட அடிமைக்குக் கூழிடத் தாழ்ப்பதுண்டே.
vAnvENTik koNTa maruntOmuk kaNkoNTa vaLLalunnai nAnvENTik koNTatu ninnaTi yArkku nakaitarumI tEnvENTik koNTanai enpAr itaRkinnum EnirangkAy tAnvENTik koNTa aTimaikkuk kUzhiTat tAzhppatuNTE.
பையுரைத் தாடும் பணிப்புயத் தோய்தமைப் பாடுகின்றோர் உய்யுரைத் தாவுள்ள தில்லதென் றில்லதை உள்ளதென்றே பொய்யுரைத் தாலும் தருவார் பிறர்அது போலன்றிநான் மெய்யுரைத் தாலும் இரங்காமை நின்னருள் மெய்க்கழகே.
paiyurait tATum paNippuyat tOytamaip pATukinROr uyyurait tAvuLLa tillaten Rillatai uLLatenRE poyyurait tAlum taruvAr piRaratu pOlanRinAn meyyurait tAlum irangkAmai ninnaruL meykkazhakE.
மடல்வற்றி னாலும் மணம்வற்று றாத மலரெனஎன் உடல்வற்றி னாலும்என் உள்வற்று மோதுயர் உள்ளவெல்லாம் அடல்வற்று றாதநின் தாட்கன்றி ஈங்கய லார்க்குரையேன் கடல்வற்றி னாலும் கருணைவற் றாதமுக் கண்ணவனே.
maTalvaRRi nAlum maNamvaRRu RAta malarenaen uTalvaRRi nAlumen uLvaRRu mOtuyar uLLavellAm aTalvaRRu RAtanin tATkanRi Ingkaya lArkkuraiyEn kaTalvaRRi nAlum karuNaivaR RAtamuk kaNNavanE.
எள்ளிருக் கின்றதற் கேனுஞ் சிறிதிட மின்றிஎன்பான் முள்ளிருக் கின்றது போலுற்ற துன்ப முயக்கமெல்லாம் வெள்ளிருக் கின்றவர் தாமுங்கண் டார்எனில் மேவிஎன்றன் உள்ளிருக் கின்றநின் தாட்கோதல் என்எம் உடையவனே.
eLLiruk kinRataR kEnunj chiRitiTa minRienpAn muLLiruk kinRatu pOluRRa tunpa muyakkamellAm veLLiruk kinRavar tAmungkaN TArenil mEvienRan uLLiruk kinRanin tATkOtal enem uTaiyavanE.
பொன்கின்று பூத்த சடையாய்இவ் வேழைக்குன் பொன்னருளாம் நன்கின்று நீதரல் வேண்டும்அந் தோதுயர் நண்ணிஎன்னைத் தின்கின்ற தேகொடும் பாம்பையும் பாலுணச் செய்துகொலார் என்கின்ற ஞாலம் இழுக்குரை யாதெற் கிரங்கிடினே.
ponkinRu pUtta chaTaiyAyiv vEzhaikkun ponnaruLAm nankinRu nItaral vENTuman tOtuyar naNNiennait tinkinRa tEkoTum pAmpaiyum pAluNach cheytukolAr enkinRa njAlam izhukkurai yAteR kirangkiTinE.
வாய்மூடிக் கொல்பவர் போலேஎன் உள்ளத்தை வன்துயராம் பேய்மூடிக் கொண்டதென் செய்கேன் முகத்தில் பிறங்குகையைச் சேய்மூடிக் கொண்டுநற் பாற்கழக் கண்டுந் திகழ்முலையைத் தாய்மூடிக் கொள்ளுவ துண்டோ அருளுக சங்கரனே.
vAymUTik kolpavar pOlEen uLLattai vantuyarAm pEymUTik koNTaten cheykEn mukattil piRangkukaiyaich chEymUTik koNTunaR pARkazhak kaNTun tikazhmulaiyait tAymUTik koLLuva tuNTO aruLuka changkaranE.
கோள்வேண்டும் ஏழை மனத்தினை வேறுற்றுக் கொட்டக்கொள்ளித் தேள்வேண்டு மோசுடத் தீவேண்டு மோவதை செய்திடஓர் வாள்வேண்டு மோகொடுந் துன்பே அதில்எண் மடங்குகண்டாய் ஆள்வேண்டு மேல்என்னை ஆள்வேண்டும் என்னுள் அஞர்ஒழித்தே.
kOLvENTum Ezhai manattinai vERuRRuk koTTakkoLLit tELvENTu mOchuTat tIvENTu mOvatai cheytiTaOr vALvENTu mOkoTun tunpE atileN maTangkukaNTAy ALvENTu mElennai ALvENTum ennuL anjarozhittE.
விடையிலை யோஅதன் மேலேறி என்முன் விரைந்துவரப் படையிலை யோதுயர் எல்லாம் துணிக்கப் பதங்கொளருட் கொடையிலை யோஎன் குறைதீர நல்கக் குலவும்என்தாய் புடையிலை யோஎன் தனக்காகப் பேசஎம் புண்ணியனே.
viTaiyilai yOatan mElERi enmun viraintuvarap paTaiyilai yOtuyar ellAm tuNikkap patangkoLaruT koTaiyilai yOen kuRaitIra nalkak kulavumentAy puTaiyilai yOen tanakkAkap pEchaem puNNiyanE.
நறையுள தேமலர்க் கொன்றைகொண் டாடிய நற்சடைமேல் பிறையுள தேகங்கைப் பெண்ணுள தேபிறங் குங்கழுத்தில் கறையுள தேஅருள் எங்குள தேஇக் கடையவனேன் குறையுள தேஎன் றரற்றவும் சற்றுங் குறித்திலதே.
naRaiyuLa tEmalark konRaikoN TATiya naRchaTaimEl piRaiyuLa tEkangkaip peNNuLa tEpiRang kungkazhuttil kaRaiyuLa tEaruL engkuLa tEik kaTaiyavanEn kuRaiyuLa tEen RaraRRavum chaRRung kuRittilatE.
சினத்தாலும் காமத்தி னாலும்என் தன்னைத் திகைப்பிக்கும்இம் மனத்தால் உறுந்துயர் போதாமை என்று மதித்துச்சுற்றும் இனத்தாலும் வாழ்க்கை இடும்பையி னாலும் இளைக்கவைத்தாய் அனத்தான் புகழும் பதத்தோய் இதுநின் அருட்கழகே.
chinattAlum kAmatti nAlumen tannait tikaippikkumim manattAl uRuntuyar pOtAmai enRu matittuchchuRRum inattAlum vAzhkkai iTumpaiyi nAlum iLaikkavaittAy anattAn pukazhum patattOy itunin aruTkazhakE.
புல்லள வாயினும் ஈயார்தம் வாயில் புகுந்துபுகழ்ச் சொல்லள வாநின் றிரப்போர் இரக்கநற் சொன்னங்களைக் கல்லள வாத்தரு கின்றோர்தம் பாலுங் கருதிச்சென்றோர் நெல்லள வாயினும் கேளேன்நின் பாலன்றி நின்மலனே.
pullaLa vAyinum IyArtam vAyil pukuntupukazhch chollaLa vAnin RirappOr irakkanaR chonnangkaLaik kallaLa vAttaru kinROrtam pAlung karutichchenROr nellaLa vAyinum kELEnnin pAlanRi ninmalanE.
பிறைசூழ்ந்த வேணி முடிக்கனி யேஎம் பெருஞ்செல்வமே கறைசூழ்ந்த கண்டத்தெம் கற்பக மேநுதற் கட்கரும்பே மறைசூழ்ந்த மன்றொளிர் மாமணி யேஎன் மனமுழுதும் குறைசூழ்ந்து கொண்டதென் செய்கேன் அகற்றக் குறித்தருளே.
piRaichUzhnta vENi muTikkani yEem perunjchelvamE kaRaichUzhnta kaNTattem kaRpaka mEnutaR kaTkarumpE maRaichUzhnta manRoLir mAmaNi yEen manamuzhutum kuRaichUzhntu koNTaten cheykEn akaRRak kuRittaruLE.
கண்கட்டி ஆடும் பருவத்தி லேமுலை கண்டஒரு பெண்கட்டி யாள நினைக்கின்ற ஓர்சிறு பிள்ளையைப்போல் எண்கட்டி யானுன் அருள்விழைந் தேன்சிவ னேஎன்நெஞ்சம் புண்கட்டி யாய்அலைக் கின்றது மண்கட்டிப் போலுதிர்ந்தே.
kaNkaTTi ATum paruvatti lEmulai kaNTaoru peNkaTTi yALa ninaikkinRa OrchiRu piLLaiyaippOl eNkaTTi yAnun aruLvizhain tEnchiva nEennenjcham puNkaTTi yAyalaik kinRatu maNkaTTip pOlutirntE.
மெய்விட்ட வஞ்சக நெஞ்சால் படுந்துயர் வெந்நெருப்பில் நெய்விட்ட வாறிந்த வாழ்க்கையின் வாதனை நேரிட்டதால் பொய்விட்ட நெஞ்சுறும் பொற்பதத் தைய இப் பொய்யனைநீ கைவிட் டிடநினை யேல்அருள் வாய்கரு ணைக்கடலே.
meyviTTa vanjchaka nenjchAl paTuntuyar venneruppil neyviTTa vARinta vAzhkkaiyin vAtanai nEriTTatAl poyviTTa nenjchuRum poRpatat taiya ip poyyanainI kaiviT TiTaninai yElaruL vAykaru NaikkaTalE.
அருட்கட லேஅக் கடலமு தேஅவ் வமுதத்துற்ற தெருட்சுவை யேஅச் சுவைப்பய னேமறைச் சென்னிநின்ற பொருட்பத மேஅப் பதத்தர சேநின் புகழ்நினையா இருட்குண மாயை மனத்தே னையும்உவந் தேன்றுகொள்ளே.
aruTkaTa lEak kaTalamu tEav vamutattuRRa teruTchuvai yEach chuvaippaya nEmaRaich chennininRa poruTpata mEap patattara chEnin pukazhninaiyA iruTkuNa mAyai manattE naiyumuvan tEnRukoLLE.
அண்டங்கண் டானும் அளந்தானும் காண்டற் கரியவநின் கண்டங்கண் டார்க்குஞ் சடைமேல் குறைந்த கலைமதியின் துண்டங்கண் டார்க்கும் பயமுள தோஎனச் சூழ்ந்தடைந்தேன் தொண்டன்கண் டாள்பல தெண்டன்கண் டாய்நின் துணையடிக்கே.
aNTangkaN TAnum aLantAnum kANTaR kariyavanin kaNTangkaN TArkkunj chaTaimEl kuRainta kalaimatiyin tuNTangkaN TArkkum payamuLa tOenach chUzhntaTaintEn toNTankaN TALpala teNTankaN TAynin tuNaiyaTikkE.
தேட்டக்கண் டேர்மொழிப் பாகா உலகில் சிலர்குரங்கை ஆட்டக்கண் டேன்அன்றி அக்குரங் கால்அவர் ஆடச்சற்றும் கேட்டுக்கண் டேனிலை நானேழை நெஞ்சக் கிழக்குரங்கால் வேட்டுக்கொண் டாடுகின் றேன்இது சான்ற வியப்புடைத்தே.
tETTakkaN TErmozhip pAkA ulakil chilarkurangkai ATTakkaN TEnanRi akkurang kAlavar ATachchaRRum kETTukkaN TEnilai nAnEzhai nenjchak kizhakkurangkAl vETTukkoN TATukin REnitu chAnRa viyappuTaittE.
போகங்கொண் டார்த்த அருளார் அமுதப் புணர்முலையைப் பாகங்கொண் டார்த்த பரம்பொரு ளேநின் பதநினையா வேகங்கொண் டார்த்த மனத்தால்இவ் வேழை மெலிந்துமிகச் சோகங்கொண் டார்த்துநிற் கின்றேன் அருளத் தொடங்குகவே.
pOkangkoN TArtta aruLAr amutap puNarmulaiyaip pAkangkoN TArtta paramporu LEnin pataninaiyA vEkangkoN TArtta manattAliv vEzhai melintumikach chOkangkoN TArttuniR kinREn aruLat toTangkukavE.
இன்றல வேநெடு நாளாக ஏழைக் கெதிர்த்ததுன்பம் ஒன்றல வேபல எண்ணில வேஉற் றுரைத்ததயல் மன்றல வேபிறர் நன்றல வேயென வந்தகயக் கன்றல வேபசுங் கன்றடி யேன்றனைக் காத்தருளே.
inRala vEneTu nALAka Ezhaik ketirttatunpam onRala vEpala eNNila vEuR Ruraittatayal manRala vEpiRar nanRala vEyena vantakayak kanRala vEpachung kanRaTi yEnRanaik kAttaruLE.
படிபட்ட மாயையின் பாற்பட்ட சாலப் பரப்பிற்பட்டே மிடிபட்ட வாழ்க்கையின் மேற்பட்ட துன்ப விசாரத்தினால் அடிபட்ட நானுனக் காட்பட்டும் இன்னும் அலைதல்நன்றோ பிடிபட்ட நேரிடைப் பெண்பட்ட பாகப் பெருந்தகையே.
paTipaTTa mAyaiyin pARpaTTa chAlap parappiRpaTTE miTipaTTa vAzhkkaiyin mERpaTTa tunpa vichArattinAl aTipaTTa nAnunak kATpaTTum innum alaitalnanRO piTipaTTa nEriTaip peNpaTTa pAkap peruntakaiyE.
உடையாய்என் விண்ணப்பம் ஒன்றுண்டு கேட்டருள் உன்னடிச்சீர் தடையாதும் இன்றிப் புகல்வதல் லால்இச் சகத்திடைநான் நடையால் சிறுமைகொண் டந்தோ பிறரை நவின்றவர்பால் அடையா மையுநெஞ் சுடையாமை யுந்தந் தருளுகவே.
uTaiyAyen viNNappam onRuNTu kETTaruL unnaTichchIr taTaiyAtum inRip pukalvatal lAlich chakattiTainAn naTaiyAl chiRumaikoN TantO piRarai navinRavarpAl aTaiyA maiyunenj chuTaiyAmai yuntan taruLukavE.
தஞ்சமென் றேநின்ற நாயேன் குறையைத் தவிர்உனக்கோர் பஞ்சமின் றேஉல கெல்லாநின் சீரருட் பாங்குகண்டாய் எஞ்சநின் றேற்குனை யல்லால் துணைபிறி தில்லைஇது வஞ்சமன் றேநின் பதங்காண்க முக்கண் மணிச்சுடரே.
tanjchamen REninRa nAyEn kuRaiyait tavirunakkOr panjchamin REula kellAnin chIraruT pAngkukaNTAy enjchanin RERkunai yallAl tuNaipiRi tillaiitu vanjchaman REnin patangkANka mukkaN maNichchuTarE.
பொறுத்தாலும் நான்செயும் குற்றங்கள் யாவும் பொறாதெனைநீ ஒறுத்தாலும் நன்றினிக் கைவிட்டி டேல்என் னுடையவன்நீ வெறுத்தாலும் வேறிலை வேற்றோர் இடத்தை விரும்பிஎன்னை அறுத்தாலுஞ் சென்றிட மாட்டேன் எனக்குன் அருளிடமே.
poRuttAlum nAncheyum kuRRangkaL yAvum poRAtenainI oRuttAlum nanRinik kaiviTTi TElen nuTaiyavannI veRuttAlum vERilai vERROr iTattai virumpiennai aRuttAlunj chenRiTa mATTEn enakkun aruLiTamE.
சேல்வரும் ஏர்விழி மங்கைபங் காஎன் சிறுமைகண்டால் மேல்வரு நீவரத் தாழ்த்தாலும் உன்றன் வியன்அருட்பொற் கால்வரு மேஇளங் கன்றழத் தாய்ப்பசுக் காணின்மடிப் பால்வரு மேமுலைப் பால்வரு மேபெற்ற பாவைக்குமே.
chElvarum Ervizhi mangkaipang kAen chiRumaikaNTAl mElvaru nIvarat tAzhttAlum unRan viyanaruTpoR kAlvaru mEiLang kanRazhat tAyppachuk kANinmaTip pAlvaru mEmulaip pAlvaru mEpeRRa pAvaikkumE.
வன்பட்ட கூடலில் வான்பட்ட வையை வரம்பிட்டநின் பொன்பட்ட மேனியில் புண்பட்ட போதில் புவிநடையாம் துன்பட்ட வீரர்அந் தோவாத வூரர்தம் தூயநெஞ்சம் என்பட்ட தோஇன்று கேட்டஎன் நெஞ்சம் இடிபட்டதே.
vanpaTTa kUTalil vAnpaTTa vaiyai varampiTTanin ponpaTTa mEniyil puNpaTTa pOtil puvinaTaiyAm tunpaTTa vIraran tOvAta vUrartam tUyanenjcham enpaTTa tOinRu kETTaen nenjcham iTipaTTatE.
நீர்சிந்தும் கண்ணும் நிலைசிந்தும் நெஞ்சமும் நீணடையில் சீர்சிந்து வாழ்க்கையும் தேன்சிந்தி வாடிய செம்மலர்போல் கூர்சிந்து புந்தியும் கொண்டுநின் றேன்உட் குறைசிந்தும்வா றோர்சிந்து போலருள் நேர்சிந்தன் ஏத்தும் உடையவனே.
nIrchintum kaNNum nilaichintum nenjchamum nINaTaiyil chIrchintu vAzhkkaiyum tEnchinti vATiya chemmalarpOl kUrchintu puntiyum koNTunin REnuT kuRaichintumvA ROrchintu pOlaruL nErchintan Ettum uTaiyavanE.
கொடிகொண்ட ஏற்றின் நடையும் சடையும் குளிர்முகமும் துடிகொண்ட கையும் பொடிகொண்ட மேனியும் தோலுடையும் பிடிகொண்ட பாகமும் பேரருள் நோக்கமும் பெய்கழலும் குடிகொண்ட நன்மனம் என்மனம் போற்குறை கொள்வதின்றே.
koTikoNTa ERRin naTaiyum chaTaiyum kuLirmukamum tuTikoNTa kaiyum poTikoNTa mEniyum tOluTaiyum piTikoNTa pAkamum pEraruL nOkkamum peykazhalum kuTikoNTa nanmanam enmanam pORkuRai koLvatinRE.
விதிக்கும் பதிக்கும் பதிநதி ஆர்மதி வேணிப்பதி திதிக்கும் பதிக்கும் பதிமேற் கதிக்குந் திகழ்பதிவான் துதிக்கும் பதிக்கும் பதிஓங்கு மாபதி சொற்கடந்த பதிக்கும் பதிசிற் பதியெம் பதிநம் பசுபதியே.
vitikkum patikkum patinati Armati vENippati titikkum patikkum patimER katikkun tikazhpativAn tutikkum patikkum patiOngku mApati choRkaTanta patikkum patichiR patiyem patinam pachupatiyE.
எனையடைந் தாழ்த்திய துன்பச் சுமையை இறக்கெனவே நினையடைந் தேன்அடி நாயேற் கருள நினைதிகண்டாய் வினையடைந் தேமன வீறுடைந் தேநின்று வேற்றவர்தம் மனையடைந் தேமனம் வாடல்உன் தொண்டர் மரபல்லவே.
enaiyaTain tAzhttiya tunpach chumaiyai iRakkenavE ninaiyaTain tEnaTi nAyER karuLa ninaitikaNTAy vinaiyaTain tEmana vIRuTain tEninRu vERRavartam manaiyaTain tEmanam vATalun toNTar marapallavE.
வனம்போய் வருவது போலேவன் செல்வர் மனையிடத்தே தினம்போய் வருமிச் சிறியேன் சிறுமைச் செயலதுபோய்ச் சினம்போய்க் கொடும்பகைக் காமமும் போய்நின் திறநிகழ்த்தா இனம்போய்க் கொடிய மனம்போய் இருப்பதென் றென்னரசே.
vanampOy varuvatu pOlEvan chelvar manaiyiTattE tinampOy varumich chiRiyEn chiRumaich cheyalatupOych chinampOyk koTumpakaik kAmamum pOynin tiRanikazhttA inampOyk koTiya manampOy iruppaten RennarachE.
பெற்றா ளனையநின் குற்றேவல் செய்து பிழைக்கறியாச் சிற்றாள் பலரினும் சிற்றா ளெனுமென் சிறுமைதவிர்த் துற்றாள் கிலைஎனின் மற்றார் துணைஎனக் குன்கமலப் பொற்றாள் அருட்புகழ்க் கற்றாய்ந்து பாடப் புரிந்தருளே.
peRRA Lanaiyanin kuRREval cheytu pizhaikkaRiyAch chiRRAL palarinum chiRRA Lenumen chiRumaitavirt tuRRAL kilaienin maRRAr tuNaienak kunkamalap poRRAL aruTpukazhk kaRRAyntu pATap purintaruLE.
அந்நாணை யாதுநஞ் சேற்றயன் மால்மனை யாதியர்தம் பொன்னாணைக் காத்த அருட்கட லேபிறர் புன்மனைபோய் இந்நாணை யாவகை என்னாணைக் காத்தருள் ஏழைக்குநின் தன்னாணை ஐயநின் தாளாணை வேறு சரணில்லையே.
annANai yAtunanj chERRayan mAlmanai yAtiyartam ponnANaik kAtta aruTkaTa lEpiRar punmanaipOy innANai yAvakai ennANaik kAttaruL Ezhaikkunin tannANai aiyanin tALANai vERu charaNillaiyE.
பவசாத னம்பெறும் பாதகர் மேவும்இப் பாரிடைநல் சிவசாத னத்தரை ஏன்படைத் தாய்அத் திருவிலிகள் அவசாத னங்களைக் கண்டிவ ருள்ளம் அழுங்கஎன்றோ கவசா தனமெனக் கைம்மா னுரியைக் களித்தவனே.
pavachAta nampeRum pAtakar mEvumip pAriTainal chivachAta nattarai EnpaTait tAyat tiruvilikaL avachAta nangkaLaik kaNTiva ruLLam azhungkaenRO kavachA tanamenak kaimmA nuriyaik kaLittavanE.
நான்செய்த புண்ணிய மியாதோ சிவாய நமஎனவே ஊன்செய்த நாவைக்கொண் டோதப்பெற் றேன்எனை ஒப்பவரார் வான்செய்த நான்முகத் தோனும் திருநெடு மாலுமற்றைத் தேன்செய்த கற்பகத் தேவனும் தேவருஞ் செய்யரிதே.
nAncheyta puNNiya miyAtO chivAya namaenavE Uncheyta nAvaikkoN TOtappeR REnenai oppavarAr vAncheyta nAnmukat tOnum tiruneTu mAlumaRRait tEncheyta kaRpakat tEvanum tEvarunj cheyyaritE.
உற்றா யினுமறைக் கோர்வரி யோய்எனை உற்றுப்பெற்ற நற்றா யினும்இனி யானேநின் நல்லருள் நல்கில்என்னை விற்றா யினுங்கொள வேண்டுகின் றேன்என் விருப்பறிந்தும் சற்றா யினும்இரங் காதோநின் சித்தம் தயாநிதியே.
uRRA yinumaRaik kOrvari yOyenai uRRuppeRRa naRRA yinumini yAnEnin nallaruL nalkilennai viRRA yinungkoLa vENTukin REnen viruppaRintum chaRRA yinumirang kAtOnin chittam tayAnitiyE.
வான்மா றினுமொழி மாறாத மாறன் மனங்களிக்கக் கான்மாறி யாடிய கற்பக மேநின் கருணையென்மேல் தான்மா றினும்விட்டு நான்மாறி டேன்பெற்ற தாய்க்குமுலைப் பான்மாறி னும்பிள்ளை பான்மாறு மோஅதில் பல்லிடுமே.
vAnmA Rinumozhi mARAta mARan manangkaLikkak kAnmARi yATiya kaRpaka mEnin karuNaiyenmEl tAnmA RinumviTTu nAnmARi TEnpeRRa tAykkumulaip pAnmARi numpiLLai pAnmARu mOatil palliTumE.
அன்பரி தாமனத் தேழையன் யான்துய ரால்மெலிந்தே இன்பரி தாமிச் சிறுநடை வாழ்க்கையில் ஏங்குகின்றேன் என்பரி தாப நிலைநீ அறிந்தும் இரங்கிலையேல் வன்பரி தாந்தண் அருட்கட லேஎன்ன வாழ்வெனக்கே.
anpari tAmanat tEzhaiyan yAntuya rAlmelintE inpari tAmich chiRunaTai vAzhkkaiyil EngkukinREn enpari tApa nilainI aRintum irangkilaiyEl vanpari tAntaN aruTkaTa lEenna vAzhvenakkE.
மைகண்ட கண்டமும் மான்கண்ட வாமமும் வைத்தருளில் கைகண்ட நீஎங்கும் கண்கண்ட தெய்வம் கருதிலென்றே மெய்கண்ட நான்மற்றைப் பொய்கண்ட தெய்வங்கள் மேவுவனோ நெய்கண்ட ஊண்விட்டு நீர்கண்ட கூழுக்கென் நேடுவதே.
maikaNTa kaNTamum mAnkaNTa vAmamum vaittaruLil kaikaNTa nIengkum kaNkaNTa teyvam karutilenRE meykaNTa nAnmaRRaip poykaNTa teyvangkaL mEvuvanO neykaNTa UNviTTu nIrkaNTa kUzhukken nETuvatE.
வேணிக்கு மேலொரு வேணி வைத் தோய்முன் விரும்பிஒரு மாணிக்கு வேதம் வகுத்தே கிழிஒன்று வாங்கித்தந்த காணிக்குத் தானரைக் காணிமட் டாயினும் காட்டுகண்டாய் பாணிக்குமோ தரும் பாணி வந் தேற்றவர் பான்மைகண்டே.
vENikku mEloru vENi vait tOymun virumpioru mANikku vEtam vakuttE kizhionRu vAngkittanta kANikkut tAnaraik kANimaT TAyinum kATTukaNTAy pANikkumO tarum pANi van tERRavar pAnmaikaNTE.
மறைக்கொளித் தாய்நெடு மாற்கொளித் தாய்திசை மாமுகங்கொள் இறைக்கொளித் தாய்இங் கதிலோர் பழியிலை என்றன்மனக் குறைக்கொளித் தாலும் குறைதீர்த் தருளெனக் கூவிடும்என் முறைக்கொளித் தாலும் அரசேநின் பால்பழி மூடிடுமே.
maRaikkoLit tAyneTu mARkoLit tAytichai mAmukangkoL iRaikkoLit tAying katilOr pazhiyilai enRanmanak kuRaikkoLit tAlum kuRaitIrt taruLenak kUviTumen muRaikkoLit tAlum arachEnin pAlpazhi mUTiTumE.
முன்மழை வேண்டும் பருவப் பயிர்வெயில் மூடிக்கெட்ட பின்மழை பேய்ந்தென்ன பேறுகண் டாய்அந்தப் பெற்றியைப்போல் நின்மழை போற்கொடை இன்றன்றி மூப்பு நெருங்கியக்கால் பொன்மழை பேய்ந்தென்ன கன்மழை பேய்ந்தென்ன பூரணனே.
munmazhai vENTum paruvap payirveyil mUTikkeTTa pinmazhai pEyntenna pERukaN TAyantap peRRiyaippOl ninmazhai pORkoTai inRanRi mUppu nerungkiyakkAl ponmazhai pEyntenna kanmazhai pEyntenna pUraNanE.
நீளா தரவுகொண் டென்குறை யாவும் நிகழ்த்தவும்நீ கேளா தவன்என வாளா இருக்கின்ற கேண்மைஎன்னோ சூளாத முக்கண் மணியே விடேல்உனைச் சூழ்ந்தஎன்னை ஆளாகக் கொள்ளினும் மீளா நரகத் தழுத்தினுமே.
nILA taravukoN TenkuRai yAvum nikazhttavumnI kELA tavanena vALA irukkinRa kENmaiennO chULAta mukkaN maNiyE viTElunaich chUzhntaennai ALAkak koLLinum mILA narakat tazhuttinumE.
வளங்கன்று மாவனத் தீன்றதன் தாயின்றி வாடுகின்ற இளங்கன்று போல்சிறு வாழ்க்கையில் நின்அருள் இன்றிஅந்தோ உளங்கன்று நான்செய்வ தென்னே கருணை உதவுகண்டாய் களங்கன்று பேரருட் காரென்று கூறும் களத்தவனே.
vaLangkanRu mAvanat tInRatan tAyinRi vATukinRa iLangkanRu pOlchiRu vAzhkkaiyil ninaruL inRiantO uLangkanRu nAncheyva tennE karuNai utavukaNTAy kaLangkanRu pEraruT kArenRu kURum kaLattavanE.
காற்றுக்கு மேல்விட்ட பஞ்சாகி உள்ளம் கறங்கச்சென்றே சோற்றுக்கு மேற்கதி இன்றென வேற்றகந் தோறும்உண்போர் தூற்றுக்கு மேல்பெருந் தூறிலை ஆங்கென் துயரமெனும் சேற்றுக்கு மேல்பெருஞ் சேறிலை காண்அருட் செவ்வண்ணனே.
kARRukku mElviTTa panjchAki uLLam kaRangkachchenRE chORRukku mERkati inRena vERRakan tORumuNpOr tURRukku mElperun tURilai Angken tuyaramenum chERRukku mElperunj chERilai kANaruT chevvaNNanE.
அந்தோ துயரில் சுழன்றாடும் ஏழை அவலநெஞ்சம் சிந்தோத நீரில் சுழியோ இளையவர் செங்கைதொட்ட பந்தோ சிறுவர்தம் பம்பர மோகொட்டும் பஞ்சுகொலோ வந்தோ டுழலும் துரும்போஎன் சொல்வதெம் மாமணியே.
antO tuyaril chuzhanRATum Ezhai avalanenjcham chintOta nIril chuzhiyO iLaiyavar chengkaitoTTa pantO chiRuvartam pampara mOkoTTum panjchukolO vantO Tuzhalum turumpOen cholvatem mAmaNiyE.
பொன்வச மோபெண்க ளின்வச மோகடற் பூவசமோ மின்வச மோஎனும் மெய்வச மோஎன் விதிவசமோ தன்வச மோமலந் தன்வச மோஎன் சவலைநெஞ்சம் என்வச மோஇல்லை நின்வசம் நான்எனை ஏன்றுகொள்ளே.
ponvacha mOpeNka Linvacha mOkaTaR pUvachamO minvacha mOenum meyvacha mOen vitivachamO tanvacha mOmalan tanvacha mOen chavalainenjcham envacha mOillai ninvacham nAnenai EnRukoLLE.
நானடங் காதொரு நாட்செயும் குற்ற நடக்கைஎல்லாம் வானடங் காதிந்த மண்ணடங் காது மதிக்குமண்டம் தானடங் காதெங்குந் தானடங் காதெனத் தானறிந்தும் மானடங் காட்டு மணிஎனை ஆண்டது மாவியப்பே.
nAnaTang kAtoru nATcheyum kuRRa naTakkaiellAm vAnaTang kAtinta maNNaTang kAtu matikkumaNTam tAnaTang kAtengkun tAnaTang kAtenat tAnaRintum mAnaTang kATTu maNienai ANTatu mAviyappE.
பாம்பா யினும்உணப் பால்கொடுப் பார்வளர்ப் பார்மனைப்பால் வேம்பாயி னும்வெட்டல் செய்யார் வளர்த்த வெருட்சிக்கடாத் ` தாம்பா யினும் ஒரு தாம்பாயி னுங்கொடு தாம்பின்செல்வார் தேம்பாய் மலர்க்குழற் காம்பாக என்னையும் சேர்த்துக்கொள்ளே.
pAmpA yinumuNap pAlkoTup pArvaLarp pArmanaippAl vEmpAyi numveTTal cheyyAr vaLartta veruTchikkaTAt ` tAmpA yinum oru tAmpAyi nungkoTu tAmpinchelvAr tEmpAy malarkkuzhaR kAmpAka ennaiyum chErttukkoLLE.
நெருப்புக்கு முட்டையும் கூழ்க்கிட உப்பையும் நேடிச்செல்வோர் பருப்புக்கு நெய்யும்ஒண் பாலுக்கு வாழைப் பழமுங்கொள்ளத் தெருப்புக்கு வாரொடு சேர்கிலென் னாம்இச் சிறுநடையாம் இருப்புக்கு வேண்டிய நான்சிவ யோகர்பின் எய்திலென்னே.
neruppukku muTTaiyum kUzhkkiTa uppaiyum nETichchelvOr paruppukku neyyumoN pAlukku vAzhaip pazhamungkoLLat teruppukku vAroTu chErkilen nAmich chiRunaTaiyAm iruppukku vENTiya nAnchiva yOkarpin eytilennE.
எம்மத மாட்டு மரியோய்என் பாவி இடும்பைநெஞ்சை மும்மத யானையின் காலிட் டிடறினும் மொய்அனற்கண் விம்மத மாக்கினும் வெட்டினும் நன்றுன்னை விட்ட அதன் வெம்மத நீங்கலென் சம்மதங் காண்எவ் விதத்தினுமே.
emmata mATTu mariyOyen pAvi iTumpainenjchai mummata yAnaiyin kAliT TiTaRinum moyanaRkaN vimmata mAkkinum veTTinum nanRunnai viTTa atan vemmata nIngkalen chammatang kANev vitattinumE.
கல்லாத புந்தியும் அந்தோநின் தாளில் கணப்பொழுதும் நில்லாத நெஞ்சமும் பொல்லாத மாயையும் நீண்மதமும் கொல்லாமல் கொன்றெனைத் தின்னாமல் தின்கின்ற கொள்கையைஇங் கெல்லாம் அறிந்த உனக்கெளி யேனின் றிசைப்பதென்னே.
kallAta puntiyum antOnin tALil kaNappozhutum nillAta nenjchamum pollAta mAyaiyum nINmatamum kollAmal konRenait tinnAmal tinkinRa koLkaiyaiing kellAm aRinta unakkeLi yEnin RichaippatennE.
தெவ்வழி ஓடும் மனத்தேனுக் குன்றன் திருவுளந்தான் இவ்வழி ஏகென் றிருவழிக் குள்விட்ட தெவ்வழியோ அவ்வழி யேவழி செவ்வழி பாடநின் றாடுகின்றோய் வெவ்வழி நீர்ப்புணைக் கென்னே செயல்இவ் வியனிலத்தே.
tevvazhi OTum manattEnuk kunRan tiruvuLantAn ivvazhi Eken Riruvazhik kuLviTTa tevvazhiyO avvazhi yEvazhi chevvazhi pATanin RATukinROy vevvazhi nIrppuNaik kennE cheyaliv viyanilattE.
கண்ணார் நுதற்செங் கரும்பேநின் பொன்னருட் கான்மலரை எண்ணாத பாவிஇங் கேன்பிறந் தேன்நினை ஏத்துகின்றோர் உண்ணாத ஊணும் உடுக்கா உடையும் உணர்ச்சிசற்றும் நண்ணாத நெஞ்சமும் கொண்டுல கோர்முன்னர் நாணுறவே.
kaNNAr nutaRcheng karumpEnin ponnaruT kAnmalarai eNNAta pAviing kEnpiRan tEnninai EttukinROr uNNAta UNum uTukkA uTaiyum uNarchchichaRRum naNNAta nenjchamum koNTula kOrmunnar nANuRavE.
அம்மா வயிற்றெரிக் காற்றேன் எனநின் றழுதலறச் சும்மாஅச் சேய்முகந் தாய்பார்த் திருக்கத் துணிவள்கொலோ இம்மா நிலத்தமு தேற்றாயி னுந்தந் திடுவள்முக்கண் எம்மான்இங் கேழை அழுமுகம் பார்த்தும் இரங்கிலையே.
ammA vayiRRerik kARREn enanin RazhutalaRach chummAach chEymukan tAypArt tirukkat tuNivaLkolO immA nilattamu tERRAyi nuntan tiTuvaLmukkaN emmAning kEzhai azhumukam pArttum irangkilaiyE.
ஓயாக் கருணை முகிலே நுதற்கண் ஒருவநின்பால் தோயாக் கொடியவெந் நெஞ்சத்தை நான்சுடு சொல்லைச்சொல்லி வாயால் சுடினுந் தெரிந்தில தேஇனி வல்வடவைத் தீயால் சுடினுமென் அந்தோ சிறிதுந் தெரிவதன்றே.
OyAk karuNai mukilE nutaRkaN oruvaninpAl tOyAk koTiyaven nenjchattai nAnchuTu chollaichcholli vAyAl chuTinun terintila tEini valvaTavait tIyAl chuTinumen antO chiRitun terivatanRE.
மாலறி யான்மல ரோன்அறி யான்மக வான்அறியான் காலறி யான்மற்றை வானோர் கனவினுங் கண்டறியார் சேலறி யாவிழி மங்கைபங் காநின் திறத்தைமறை நாலறி யாஎனில் நானறி வேன்எனல் நாணுடைத்தே.
mAlaRi yAnmala rOnaRi yAnmaka vAnaRiyAn kAlaRi yAnmaRRai vAnOr kanavinung kaNTaRiyAr chElaRi yAvizhi mangkaipang kAnin tiRattaimaRai nAlaRi yAenil nAnaRi vEnenal nANuTaittE.
ஆறிட்ட வேணியும் ஆட்டிட்ட பாதமும் அம்மைஒரு கூறிட்ட பாகமும் கோத்திட்ட கொன்றையும் கோலமிக்க நீறிட்ட மேனியும் நான்காணும் நாள்என் னிலைத்தலைமேல் ஏறிட்ட கைகள்கண் டாணவப் பேய்கள் இறங்கிடுமே.
ARiTTa vENiyum ATTiTTa pAtamum ammaioru kURiTTa pAkamum kOttiTTa konRaiyum kOlamikka nIRiTTa mEniyum nAnkANum nALen nilaittalaimEl ERiTTa kaikaLkaN TANavap pEykaL iRangkiTumE.
அல்லுண்ட கண்டத் தரசேநின் சீர்த்தி அமுதமுண்டோர் கொல்லுண்ட தேவர்தங் கோளுண்ட சீரெனும் கூழுண்பரோ சொல்லுண்ட வாயினர் புல்லுண்ப ரோஇன் சுவைக்கண்டெனும் கல்லுண்ட பேர்கருங் கல்லுண்ப ரோஇக் கடலிடத்தே.
alluNTa kaNTat tarachEnin chIrtti amutamuNTOr kolluNTa tEvartang kOLuNTa chIrenum kUzhuNparO cholluNTa vAyinar pulluNpa rOin chuvaikkaNTenum kalluNTa pErkarung kalluNpa rOik kaTaliTattE.
காரே எனுமணி கண்டத்தி னான்பொற் கழலையன்றி யாரே துணைநமக் கேழைநெஞ் சேஇங் கிருந்துகழு நீரே எனினுந் தரற்கஞ்சு வாரொடு நீயுஞ்சென்று சேரேல் இறுகச் சிவாய நமஎனச் சிந்தைசெய்யே.
kArE enumaNi kaNTatti nAnpoR kazhalaiyanRi yArE tuNainamak kEzhainenj chEing kiruntukazhu nIrE eninun taraRkanjchu vAroTu nIyunjchenRu chErEl iRukach chivAya namaenach chintaicheyyE.
வலைப்பட்ட மானென வாட்பட்ட கண்ணியர் மையலென்னும் புலைப்பட்ட பேய்க்கு விலைப்பட்ட நான்மதி போய்ப்புலம்ப விலைப்பட்ட இம்மனம் அந்தோஇவ் வேழைக்கென் றெங்கிருந்து தலைப்பட்ட தோஇதற் கென்செய்கு வேன்முக்கட் சங்கரனே.
valaippaTTa mAnena vATpaTTa kaNNiyar maiyalennum pulaippaTTa pEykku vilaippaTTa nAnmati pOyppulampa vilaippaTTa immanam antOiv vEzhaikken Rengkiruntu talaippaTTa tOitaR kencheyku vEnmukkaT changkaranE.
குருந்தாமென் சோக மனமான பிள்ளைக் குரங்குக்கிங்கே வருந்தா ணவமென்னு மானிடப் பேயொன்று மாத்திரமோ பெருந்தா மதமென் றிராக்கதப் பேயும் பிடித்ததெந்தாய் திருந்தா அதன்குதிப் பென்ஒரு வாய்கொண்டு செப்பரிதே.
kuruntAmen chOka manamAna piLLaik kurangkukkingkE varuntA Navamennu mAniTap pEyonRu mAttiramO peruntA matamen RirAkkatap pEyum piTittatentAy tiruntA atankutip penoru vAykoNTu chepparitE.
பெண்மணி பாகப் பெருமணி யேஅருட் பெற்றிகொண்ட விண்மணி யான விழிமணி யேஎன் விருப்புறுநல் கண்மணி நேர்கட வுண்மணி யேஒரு கால்மணியைத் திண்மணிக் கூடலில் விற்றோங்கு தெய்வ சிகாமணியே.
peNmaNi pAkap perumaNi yEaruT peRRikoNTa viNmaNi yAna vizhimaNi yEen viruppuRunal kaNmaNi nErkaTa vuNmaNi yEoru kAlmaNiyait tiNmaNik kUTalil viRROngku teyva chikAmaNiyE.
அலையெழுத் துந்தெறும் ஐந்தெழுத் தாலுன்னைஅர்ச்சிக்கின்றோர் கலையெழுத் தும்புகழ் காலெழுத் திற்குக் கனிவிரக்கம் இலையெழுத் தும்பிறப் பீடெழுத் துங்கொண்ட எங்கள்புழுத் தலையெழுத் துஞ்சரி யாமோ நுதற்கண் தனிமுதலே.
alaiyezhut tunteRum aintezhut tAlunnaiarchchikkinROr kalaiyezhut tumpukazh kAlezhut tiRkuk kanivirakkam ilaiyezhut tumpiRap pITezhut tungkoNTa engkaLpuzhut talaiyezhut tunjchari yAmO nutaRkaN tanimutalE.
ஆட்சிகண் டார்க்குற்ற துன்பத்தைத் தான்கொண் டருளளிக்கும் மாட்சிகண் டாய்எந்தை வள்ளற் குணமென்பர் மற்றதற்குக் காட்சிகண் டேனிலை ஆயினும் உன்னருட் கண்டத்திலோர் சாட்சிகண் டேன்களி கொண்டேன் கருணைத் தடங்கடலே.
ATchikaN TArkkuRRa tunpattait tAnkoN TaruLaLikkum mATchikaN TAyentai vaLLaR kuNamenpar maRRataRkuk kATchikaN TEnilai Ayinum unnaruT kaNTattilOr chATchikaN TEnkaLi koNTEn karuNait taTangkaTalE.
கண்கொண்ட நெற்றியும் கார்கொண்ட கண்டமும் கற்பளிக்கும் பெண்கொண்ட பாகமும் கண்டேன்முன் மாறன் பிரம்படியால் புண்கொண்ட மேனிப் புறங்கண்டி லேன்அப் புறத்தைக்கண்டால் ஒண்கொண்ட கல்லும் உருகும்என் றோஇங் கொளித்தனையே.
kaNkoNTa neRRiyum kArkoNTa kaNTamum kaRpaLikkum peNkoNTa pAkamum kaNTEnmun mARan pirampaTiyAl puNkoNTa mEnip puRangkaNTi lEnap puRattaikkaNTAl oNkoNTa kallum urukumen ROing koLittanaiyE.
வேய்க்குப் பொரும்எழில் தோளுடைத் தேவி விளங்குமெங்கள் தாய்க்குக் கனிந்தொரு கூறளித் தோய்நின் தயவுமிந்த நாய்க்குக் கிடைக்கும் எனஒரு சோதிடம் நல்கில்அவர் வாய்க்குப் பழத்தொடு சர்க்கரை வாங்கி வழங்குவனே.
vEykkup porumezhil tOLuTait tEvi viLangkumengkaL tAykkuk kanintoru kURaLit tOynin tayavuminta nAykkuk kiTaikkum enaoru chOtiTam nalkilavar vAykkup pazhattoTu charkkarai vAngki vazhangkuvanE.
காண்டத்தின் மேவும் உலகீர்இத் தேகம் கரும்பணைபோல் நீண்டத்தி லென்ன நிலையல வேஇது நிற்றல்பசும் பாண்டத்தில் நீர்நிற்றல் அன்றோ நமைநம் பசுபதிதான் ஆண்டத்தில் என்ன குறையோநம் மேற்குறை ஆயிரமே.
kANTattin mEvum ulakIrit tEkam karumpaNaipOl nINTatti lenna nilaiyala vEitu niRRalpachum pANTattil nIrniRRal anRO namainam pachupatitAn ANTattil enna kuRaiyOnam mERkuRai AyiramE.
வேணிக்கண் நீர்வைத்த தேவே மதுரை வியன்தெருவில் மாணிக்கம் விற்றசெம் மாணிக்க மேஎனை வாழ்வித்ததோர் ஆணிப்பொன் னேதெள் ளமுதேநின் செய்ய அடிமலர்க்குக் காணிக்கை யாக்கிக்கொண் டாள்வாய் எனது கருத்தினையே.
vENikkaN nIrvaitta tEvE maturai viyanteruvil mANikkam viRRachem mANikka mEenai vAzhvittatOr ANippon nEteL LamutEnin cheyya aTimalarkkuk kANikkai yAkkikkoN TALvAy enatu karuttinaiyE.
மாகலை வாணர் பிறன்பால் எமக்கும் மனைக்கும்கட்ட நீகலை தாஒரு மேகலை தாஉண நென்மலைதா போகலை யாஎனப் பின்தொடர் வார்அவர் போல்மனனீ ஏகலை ஈகலர் ஏகம்ப வாண ரிடஞ்செல்கவே.
mAkalai vANar piRanpAl emakkum manaikkumkaTTa nIkalai tAoru mEkalai tAuNa nenmalaitA pOkalai yAenap pintoTar vAravar pOlmananI Ekalai Ikalar Ekampa vANa riTanjchelkavE.
ஊர்தரு வார்நல்ல ஊண்தரு வார்உடை யுந்தருவார் பார்தரு வார்உழற் கேர்தரு வார்பொன் பணந்தருவார் சோர்தரு வார்உள் ளறிவுகெ டாமல் சுகிப்பதற்கிங் கார்தரு வார்அம்மை யார்தரு பாகனை யன்றிநெஞ்சே.
Urtaru vArnalla UNtaru vAruTai yuntaruvAr pArtaru vAruzhaR kErtaru vArpon paNantaruvAr chOrtaru vAruL LaRivuke TAmal chukippataRking kArtaru vArammai yArtaru pAkanai yanRinenjchE.
பண்செய்த சொன்மங்கை பாகாவெண் பாற்கடல் பள்ளிகொண்டோன் திண்செய்த சக்கரங் கொள்வான் அருச்சனை செய்திட்டநாள் விண்செய்த நின்னருட் சேவடி மேற்பட வேண்டியவன் கண்செய்த நற்றவம் யாதோ கருத்தில் கணிப்பரிதே.
paNcheyta chonmangkai pAkAveN pARkaTal paLLikoNTOn tiNcheyta chakkarang koLvAn aruchchanai cheytiTTanAL viNcheyta ninnaruT chEvaTi mERpaTa vENTiyavan kaNcheyta naRRavam yAtO karuttil kaNipparitE.
மாப்பிட்டு நேர்ந்துண்டு வந்தியை வாழ்வித்த வள்ளல்உன்வெண் காப்பிட்டு மேற்பல பாப்பிட்ட மேனியைக் கண்டுதொழக் கூப்பிட்டு நானிற்க வந்திலை நாதனைக் கூடஇல்லாள் பூப்பிட்ட காலத்தில் கூப்பிட்ட போதினும் போவதுண்டே.
mAppiTTu nErntuNTu vantiyai vAzhvitta vaLLalunveN kAppiTTu mERpala pAppiTTa mEniyaik kaNTutozhak kUppiTTu nAniRka vantilai nAtanaik kUTaillAL pUppiTTa kAlattil kUppiTTa pOtinum pOvatuNTE.
என்மேற் பிழையிலை யானென்செய் கேன்என் இடத்திருந்தென் சொன்மேற் கொளாதெனை இன்மேல் துரும்பெனச் சுற்றுநெஞ்சத் தின்மேற் பிழையது புன்மேற் பனியெனச் செய்தொழிக்க நின்மேற் பரம்விடை தன்மேற்கொண் டன்பர்முன் நிற்பவனே.
enmER pizhaiyilai yAnenchey kEnen iTattirunten chonmER koLAtenai inmEl turumpenach chuRRunenjchat tinmER pizhaiyatu punmER paniyenach cheytozhikka ninmER paramviTai tanmERkoN Tanparmun niRpavanE.
மைவிட்டி டாமணி கண்டாநின் தன்னை வழுத்தும்என்னை நெய்விட்டி டாஉண்டி போல்இன்பி லான்மெய்ந் நெறியறியான் பொய்விட்டி டான்வெம் புலைவிட்டி டான்மயல் போகமெலாம் கைவிட்டி டான்எனக் கைவிட்டி டேல்வந்து காத்தருளே.
maiviTTi TAmaNi kaNTAnin tannai vazhuttumennai neyviTTi TAuNTi pOlinpi lAnmeyn neRiyaRiyAn poyviTTi TAnvem pulaiviTTi TAnmayal pOkamelAm kaiviTTi TAnenak kaiviTTi TElvantu kAttaruLE.
நல்லமு தம்சிவை தான்தரக் கொண்டுநின் நற்செவிக்குச் சொல்லமு தந்தந்த எங்கள் பிரான்வளஞ் சூழ்மயிலை இல்லமு தந்திகழ் பெண்ணாக என்பை எழுப்பியநாள் சில்லமு தம்பெற்ற தேவரை வானஞ் சிரித்ததன்றே.
nallamu tamchivai tAntarak koNTunin naRchevikkuch chollamu tantanta engkaL pirAnvaLanj chUzhmayilai illamu tantikazh peNNAka enpai ezhuppiyanAL chillamu tampeRRa tEvarai vAnanj chirittatanRE.
சொற்றுணைவேதியன் என்னும்பதிகச் சுருதியைநின் பொற்றுணை வார்கழற் கேற்றியப் பொன்னடிப் போதினையே நற்றுணை யாக்கரை ஏறிய புண்ணிய நாவரசைக் கற்றுணை யாதிந்தக் கற்றுணை யாமென் கடைநெஞ்சமே.
choRRuNaivEtiyan ennumpatikach churutiyainin poRRuNai vArkazhaR kERRiyap ponnaTip pOtinaiyE naRRuNai yAkkarai ERiya puNNiya nAvarachaik kaRRuNai yAtintak kaRRuNai yAmen kaTainenjchamE.
சடையவ நீமுன் தடுத்தாண்ட நம்பிக்குச் சற்றெனினும் கடையவ னேன்செயுங் கைம்மா றறிந்திலன் கால்வருந்தி நடையுற நின்னைப் பரவைதன் பாங்கர் நடத்திஅன்பர் இடைவரும் உன்றன் இரக்கத்தைத் தான்வெளி யிட்டதற்கே.
chaTaiyava nImun taTuttANTa nampikkuch chaRReninum kaTaiyava nEncheyung kaimmA RaRintilan kAlvarunti naTaiyuRa ninnaip paravaitan pAngkar naTattianpar iTaivarum unRan irakkattait tAnveLi yiTTataRkE.
திருவாத வூரெம் பெருமான் பொருட்டன்று தென்னன்முன்னே வெருவாத வைதிகப் பாய்பரி மேற்கொண்டு மேவிநின்ற ஒருவாத கோலத் தொருவாஅக் கோலத்தை உள்குளிர்ந்தே கருவாத நீங்கிடக் காட்டுகண் டாய்என் கனவினிலே.
tiruvAta vUrem perumAn poruTTanRu tennanmunnE veruvAta vaitikap pAypari mERkoNTu mEvininRa oruvAta kOlat toruvAak kOlattai uLkuLirntE karuvAta nIngkiTak kATTukaN TAyen kanavinilE.
சீர்தரு நாவுக் கரையரைப் போலிச் சிறியனும்ஓர் கார்தரு மாயைச் சமணான் மனக்கருங் கல்லிற்கட்டிப் பார்தரு பாவக் கடலிடை வீழ்த்திடப் பட்டுழன்றே ஏர்தரும் ஐந்தெழுத் தோதுகின் றேன்கரை ஏற்றரசே.
chIrtaru nAvuk karaiyaraip pOlich chiRiyanumOr kArtaru mAyaich chamaNAn manakkarung kalliRkaTTip pArtaru pAvak kaTaliTai vIzhttiTap paTTuzhanRE Ertarum aintezhut tOtukin REnkarai ERRarachE.
தூக்கமும் சோம்பலும் துக்கமும் வாழ்க்கையைத் தொட்டுவரும் ஏக்கமும் நோயும் இடையூறும் மற்றை இடரும்விட்ட நீக்கமும் நின்மல நெஞ்சமும் சாந்த நிறைவும் அருள் ஆக்கமும் நின்பதத் தன்பும் தருக அருட்சிவமே.
tUkkamum chOmpalum tukkamum vAzhkkaiyait toTTuvarum Ekkamum nOyum iTaiyURum maRRai iTarumviTTa nIkkamum ninmala nenjchamum chAnta niRaivum aruL Akkamum ninpatat tanpum taruka aruTchivamE.
பொய்வந்த வாயும் புலைவந்த செய்கையும் புன்மையெல்லாம் கைவந்த நெஞ்சமும் கண்டேன் இனிநற் கனிவுடன்யான் மெய்வந்த வாயும் விதிவந்த செய்கையும் வீறன்பினால் தைவந்த நெஞ்சமும் காண்பதென் றோசெஞ் சடைக்கனியே.
poyvanta vAyum pulaivanta cheykaiyum punmaiyellAm kaivanta nenjchamum kaNTEn ininaR kanivuTanyAn meyvanta vAyum vitivanta cheykaiyum vIRanpinAl taivanta nenjchamum kANpaten ROchenj chaTaikkaniyE.
கங்கைகொண் டாய்மலர் வேணியி லேஅருட் கண்ணிமலை மங்கைகொண் டாய்இடப் பாகத்தி லேஐய மற்றுமொரு நங்கைகொண் டால்எங்கு கொண்டருள் வாயென்று நண்ணுமன்பர் சங்கைகொண் டால்அதற் கென்சொல்லு வாய்முக்கட் சங்கரனே.
kangkaikoN TAymalar vENiyi lEaruT kaNNimalai mangkaikoN TAyiTap pAkatti lEaiya maRRumoru nangkaikoN TAlengku koNTaruL vAyenRu naNNumanpar changkaikoN TAlataR kenchollu vAymukkaT changkaranE.
வாட்கொண்ட கண்ணியர் மாயா விகார வலைபிழைத்துன் தாட்கொண்ட நீழலில் சார்ந்திடு மாறென் றனக்கருள்வாய் கீட்கொண்ட கோவணப் பேரழ காஎனைக் கேதமற ஆட்கொண்ட நீஇன்று வாளா இருப்ப தழகல்லவே.
vATkoNTa kaNNiyar mAyA vikAra valaipizhaittun tATkoNTa nIzhalil chArntiTu mARen RanakkaruLvAy kITkoNTa kOvaNap pErazha kAenaik kEtamaRa ATkoNTa nIinRu vALA iruppa tazhakallavE.
வீட்டுத் தலைவநின் தாள்வணங் கார்தம் விரிதலைசும் மாட்டுத் தலைபட்டி மாட்டுத் தலைபுன் வராகத்தலை ஆட்டுத் தலைவெறி நாய்த்தலை பாம்பின் அடுந்தலைகற் பூட்டுத் தலைவெம் புலைத்தலை நாற்றப் புழுத்தலையே.
vITTut talaivanin tALvaNang kArtam viritalaichum mATTut talaipaTTi mATTut talaipun varAkattalai ATTut talaiveRi nAyttalai pAmpin aTuntalaikaR pUTTut talaivem pulaittalai nARRap puzhuttalaiyE.
தெண்ர் முடியனைக் காணார்தங் கண்இருள் சேர்குருட்டுக் கண்ர் சொரிந்தகண் காசக்கண் புன்முலைக் கண்நகக்கண் புண்ர் ஒழுகுங் கொடுங்கண் பொறாமைக்கண் புன்கண்வன்கண் மண்ர்மை யுற்றகண் மாமணி நீத்தகண் மாலைக்கண்ணே.
teNr muTiyanaik kANArtang kaNiruL chErkuruTTuk kaNr chorintakaN kAchakkaN punmulaik kaNnakakkaN puNr ozhukung koTungkaN poRAmaikkaN punkaNvankaN maNrmai yuRRakaN mAmaNi nIttakaN mAlaikkaNNE.
கண்ணுத லான்புகழ் கேளார் செவிபொய்க் கதைஒலியும் அண்ணுற மாதரு மைந்தருங் கூடி அழுமொலியும் துண்ணெனுந் தீச்சொல் ஒலியும்அவ் வந்தகன் தூதர்கண்மொத் துண்ணுற வாவென் றுரப்பொலி யும்புகும் ஊன்செவியே.
kaNNuta lAnpukazh kELAr chevipoyk kataioliyum aNNuRa mAtaru maintarung kUTi azhumoliyum tuNNenun tIchchol oliyumav vantakan tUtarkaNmot tuNNuRa vAven Rurappoli yumpukum UncheviyE.
மணிகொண்ட கண்டனை வாழ்த்தார்தம் வாய்த்தெரு மண்ணுண்டவாய் பிணிகொண்ட வாய்விடப் பிச்சுண்ட வாய்வரும் பேச்சற்றவாய் துணிகொண்ட வாயனற் சூடுண்ட வாய்மலஞ் சோர்ந்திழிவாய் குணிகொண்ட உப்பிலிக் கூழுண்ட வாய்எனக் கூறுபவே.
maNikoNTa kaNTanai vAzhttArtam vAytteru maNNuNTavAy piNikoNTa vAyviTap pichchuNTa vAyvarum pEchchaRRavAy tuNikoNTa vAyanaR chUTuNTa vAymalanj chOrntizhivAy kuNikoNTa uppilik kUzhuNTa vAyenak kURupavE.
சகமிலை யேஎன் றுடையானை எண்ணலர் தங்கள்நெஞ்சம் சுகமிலை யேஉணச் சோறிலை யேகட்டத் தூசிலையே அகமிலை யேபொரு ளாவிலை யேவள்ள லாரிலையே இகமிலை யேஒன்றும் இங்கிலை யேஎன் றிரங்குநெஞ்சே.
chakamilai yEen RuTaiyAnai eNNalar tangkaLnenjcham chukamilai yEuNach chORilai yEkaTTat tUchilaiyE akamilai yEporu LAvilai yEvaLLa lArilaiyE ikamilai yEonRum ingkilai yEen RirangkunenjchE.
பொங்கரும் பேர்முலை மங்கைக் கிடந்தந்த புத்தமுதே செங்கரும் பேநறுந் தேனே மதுரச் செழுங்கனியே திங்களுங் கங்கையுஞ் சேர்ந்தொளிர் வேணிச் சிவக்கொழுந்தே எங்களை ஆட்கொண்டும் என்னே துயரில் இருத்துவதே.
pongkarum pErmulai mangkaik kiTantanta puttamutE chengkarum pEnaRun tEnE maturach chezhungkaniyE tingkaLung kangkaiyunj chErntoLir vENich chivakkozhuntE engkaLai ATkoNTum ennE tuyaril iruttuvatE.
வில்லைப்பொன் னாக்கரங் கொண்டோய்வன்தொண்டர் விரும்புறச்செங் கல்லைப்பொன் னாக்கிக் கொடுத்தோய்நின் பாதங் கருத்தில்வையார் புல்லைப்பொன் னாக்கொளும் புல்லர்கள் பாற்சென்று பொன்னளிக்க வல்லைப்பொன் னார்புய என்பார் இஃதென்சொல் வாணர்களே.
villaippon nAkkarang koNTOyvantoNTar virumpuRachcheng kallaippon nAkkik koTuttOynin pAtang karuttilvaiyAr pullaippon nAkkoLum pullarkaL pARchenRu ponnaLikka vallaippon nArpuya enpAr iஃtenchol vANarkaLE.
கூத்துடை யாய்என் னுடையாய்முத் தேவரும் கூறுகின்ற ஏத்துடை யாய்அன்பர் ஏத்துடை யாய்என்றன் எண்மைமொழிச் சாத்துடை யாய்நின் தனக்கே பரம்எனைத் தாங்குதற்கோர் வேத்துடை யார்மற் றிலைஅருள் ஈதென்றன் விண்ணப்பமே.
kUttuTai yAyen nuTaiyAymut tEvarum kURukinRa EttuTai yAyanpar EttuTai yAyenRan eNmaimozhich chAttuTai yAynin tanakkE paramenait tAngkutaRkOr vEttuTai yArmaR RilaiaruL ItenRan viNNappamE.
வெப்பிலை யேஎனும் தண்விளக் கேமுக்கண் வித்தகநின் ஒப்பிலை யேஎனும் சீர்புக லார்புற்கை உண்ணுதற்கோர் உப்பிலை யேபொரு ளொன்றிலை யேஎன் றுழல்பவர்மேல் தப்பிலை யேஅவர் புன்தலை ஏட்டில் தவமிலையே.
veppilai yEenum taNviLak kEmukkaN vittakanin oppilai yEenum chIrpuka lArpuRkai uNNutaRkOr uppilai yEporu LonRilai yEen RuzhalpavarmEl tappilai yEavar puntalai ETTil tavamilaiyE.
எனைப்பெற்ற தாயினும் அன்புடை யாய்எனக் கின்பநல்கும் உனைப்பெற்ற உள்ளத் தவர்மலர்ச் சேவடிக் கோங்கும்அன்பு தனைப்பெற்ற நன்மனம் தாம்பெற்ற மேலவர் சார்பைப்பெற்றால் வினைப்பெற்ற வாழ்வின் மனைப்பெற்றம் போல மெவிவதின்றே.
enaippeRRa tAyinum anpuTai yAyenak kinpanalkum unaippeRRa uLLat tavarmalarch chEvaTik kOngkumanpu tanaippeRRa nanmanam tAmpeRRa mElavar chArpaippeRRAl vinaippeRRa vAzhvin manaippeRRam pOla mevivatinRE.
நிறைமதி யாளர் புகழ்வோய் சடையுடை நீண்முடிமேல் குறைமதி தானொன்று கொண்டனை யேஅக் குறிப்பெனவே பொறைமதி யேன்றன் குறைமதி தன்னையும் பொன்னடிக்கீழ் உறைமதி யாக்கொண் டருள்வாய் உலகம் உவப்புறவே.
niRaimati yALar pukazhvOy chaTaiyuTai nINmuTimEl kuRaimati tAnonRu koNTanai yEak kuRippenavE poRaimati yEnRan kuRaimati tannaiyum ponnaTikkIzh uRaimati yAkkoN TaruLvAy ulakam uvappuRavE.
துடிவைத்த செங்கை அரசேநல் லூரில்நின் தூமலர்ப்பொன் அடிவைத்த போதெங்கள் அப்பர்தம் சென்னி யதுகுளிர்ந்தெப் படிவைத்த தோஇன்ப மியான்எணுந் தோறும்இப் பாவிக்குமால் குடிவைத்த புன்தலை ஒன்றோ மனமும் குளிர்கின்றதே.
tuTivaitta chengkai arachEnal lUrilnin tUmalarppon aTivaitta pOtengkaL appartam chenni yatukuLirntep paTivaitta tOinpa miyAneNun tORumip pAvikkumAl kuTivaitta puntalai onRO manamum kuLirkinRatE.
ஒருமுடி மேல்பிறை வைத்தோய் அரிஅயன் ஒண்மறைதம் பெருமுடி மேலுற வேண்ட வராதுனைப் பித்தனென்ற மருமுடி யூரன் முடிமேல் மறுப்பவும் வந்ததவர் திருமுடி மேலென்ன ஆசைகண் டாய்நின் திருவடிக்கே.
orumuTi mElpiRai vaittOy ariayan oNmaRaitam perumuTi mEluRa vENTa varAtunaip pittanenRa marumuTi yUran muTimEl maRuppavum vantatavar tirumuTi mElenna AchaikaN TAynin tiruvaTikkE.
வேல்கொண்ட கையுமுந் நூல்கொண்ட மார்பமும் மென்மலர்ப்பொற் கால்கொண்ட ஒண்கழற் காட்சியும் பன்னிரு கண்ணும்விடை மேல்கொண்ட செஞ்சுடர் மேனியும் சண்முக வீறுங்கண்டு மால்கொண்ட நெஞ்சம் மகிழ்வதெந் நாள்என்கண் மாமணியே.
vElkoNTa kaiyumun nUlkoNTa mArpamum menmalarppoR kAlkoNTa oNkazhaR kATchiyum panniru kaNNumviTai mElkoNTa chenjchuTar mEniyum chaNmuka vIRungkaNTu mAlkoNTa nenjcham makizhvaten nALenkaN mAmaNiyE.
விண்பூத்த கங்கையும் மின்பூத்த வேணியும் மென்முகமும் கண்பூத்த நெற்றியும் பெண்பூத்த பாகமும் கார்மிடறும் தண்பூத்த பாதமும் பொன்பூத்த மேனியும் சார்ந்துகண்டே மண்பூத்த வாழ்க்கையை விண்பூத்த பூவின் மதிப்பதென்றே.
viNpUtta kangkaiyum minpUtta vENiyum menmukamum kaNpUtta neRRiyum peNpUtta pAkamum kArmiTaRum taNpUtta pAtamum ponpUtta mEniyum chArntukaNTE maNpUtta vAzhkkaiyai viNpUtta pUvin matippatenRE.
தண்மதி யோஅதன் தண்ணமு தோஎனச் சார்ந்திருத் துண்மதி யோர்க்கின் புதவுநின் பேரருள் உற்றிடவே எண்மதி யோடிச்சை எய்தா தலையுமென் ஏழைமதி பெண்மதி யோஅன்றிப் பேய்மதி யோஎன்ன பேசுவதே.
taNmati yOatan taNNamu tOenach chArntirut tuNmati yOrkkin putavunin pEraruL uRRiTavE eNmati yOTichchai eytA talaiyumen Ezhaimati peNmati yOanRip pEymati yOenna pEchuvatE.
பிட்டுக்கும் வந்துமுன் மண்சுமந் தாயென்பர் பித்தனென்ற திட்டுக்கும் சீரருள் செய்தளித் தாயென்பர் தீவிறகுக் கட்டுக்கும் பொன்முடி காட்டிநின் றாயென்பர் கண்டிடஎன் மட்டுக்கும் வஞ்சகத் தெய்வமென் கோமுக்கண் மாணிக்கமே.
piTTukkum vantumun maNchuman tAyenpar pittanenRa tiTTukkum chIraruL cheytaLit tAyenpar tIviRakuk kaTTukkum ponmuTi kATTinin RAyenpar kaNTiTaen maTTukkum vanjchakat teyvamen kOmukkaN mANikkamE.
மையிட்ட கண்ணியர் பொய்யிட்ட வாழ்வின் மதிமயங்கிக் கையிட்ட நானும்உன் மெய்யிட்ட சீரருள் காண்குவனோ பையிட்ட பாம்பணி யையிட்ட மேனியும் பத்தருள்ள மொய்யிட்ட காலுஞ்செவ் வையிட்ட வேலுங்கொள் முன்னவனே.
maiyiTTa kaNNiyar poyyiTTa vAzhvin matimayangkik kaiyiTTa nAnumun meyyiTTa chIraruL kANkuvanO paiyiTTa pAmpaNi yaiyiTTa mEniyum pattaruLLa moyyiTTa kAlunjchev vaiyiTTa vElungkoL munnavanE.
தவமே புரியும் பருவமி லேன்பொய்ச் சகநடைக்கண் அவமே புரியும் அறிவிலி யேனுக் கருளுமுண்டோ உவமேய மென்னப்ப டாதெங்கு மாகி ஒளிர்ஒளியாம் சிவமேமுக் கண்ணுடைத் தேவேநின் சித்தந் தெரிந்திலனே.
tavamE puriyum paruvami lEnpoych chakanaTaikkaN avamE puriyum aRivili yEnuk karuLumuNTO uvamEya mennappa TAtengku mAki oLiroLiyAm chivamEmuk kaNNuTait tEvEnin chittan terintilanE.
மட்டுண்ட கொன்றைச் சடையர சேஅன்று வந்தியிட்ட பிட்டுண்ட பிச்சைப் பெருந்தகை யேகொடும் பெண்மயலால் கட்டுண்ட நான்சுகப் பட்டுண்டு வாழ்வன்இக் கன்மனமாம் திட்டுண்ட பேய்த்தலை வெட்டுண்ட நாளில்என் தீமையற்றே.
maTTuNTa konRaich chaTaiyara chEanRu vantiyiTTa piTTuNTa pichchaip peruntakai yEkoTum peNmayalAl kaTTuNTa nAnchukap paTTuNTu vAzhvanik kanmanamAm tiTTuNTa pEyttalai veTTuNTa nALilen tImaiyaRRE.
ஆட்டுக்குக் காலெடுத் தாய்நினைப் பாடலர் ஆங்கியற்றும் பாட்டுக்குப் பேரென்கொல் பண்ணென்கொல் நீட்டியப் பாட்டெழுதும் ஏட்டுக்கு மையென்கொல் சேற்றில் உறங்க இறங்குங்கடா மாட்டுக்கு வீடென்கொல் பஞ்சணை என்கொல் மதித்திடினே.
ATTukkuk kAleTut tAyninaip pATalar AngkiyaRRum pATTukkup pErenkol paNNenkol nITTiyap pATTezhutum ETTukku maiyenkol chERRil uRangka iRangkungkaTA mATTukku vITenkol panjchaNai enkol matittiTinE.
ஒப்பற்ற முக்கட் சுடரேநின் சீர்த்தி உறாதவெறும் துப்பற்ற பாட்டில் சுவையுள தோஅதைச் சூழ்ந்துகற்றுச் செப்பற்ற வாய்க்குத் திருவுள தோசிறி தேனும்உண்டேல் உப்பற்ற புன்கறி உண்டோர்தந் நாவுக் குவப்புளதே.
oppaRRa mukkaT chuTarEnin chIrtti uRAtaveRum tuppaRRa pATTil chuvaiyuLa tOataich chUzhntukaRRuch cheppaRRa vAykkut tiruvuLa tOchiRi tEnumuNTEl uppaRRa punkaRi uNTOrtan nAvuk kuvappuLatE.
சேல்வருங் கண்ணி இடத்தோய்நின் சீர்த்தியைச் சேர்த்தியந்த நால்வரும் செய்தமிழ் கேட்டுப் புறத்தில் நடக்கச்சற்றே கால்வரும் ஆயினும் இன்புரு வாகிக் கனிமனம்அப் பால்வரு மோஅதன் பாற்பெண் களைவிட்டுப் பார்க்கினுமே.
chElvarung kaNNi iTattOynin chIrttiyaich chErttiyanta nAlvarum cheytamizh kETTup puRattil naTakkachchaRRE kAlvarum Ayinum inpuru vAkik kanimanamap pAlvaru mOatan pARpeN kaLaiviTTup pArkkinumE.
கார்முக மாகப்பொற் கல்வளைத் தோய்இக் கடையவனேன் சோர்முக மாகநின் சீர்முகம் பார்த்துத் துவளுகின்றேன் போர்முக மாகநின் றோரையும் காத்தநின் பொன்னருள்இப் பார்முக மாகஎன் ஓர்முகம் பார்க்கப் பரிந்திலதே.
kArmuka mAkappoR kalvaLait tOyik kaTaiyavanEn chOrmuka mAkanin chIrmukam pArttut tuvaLukinREn pOrmuka mAkanin ROraiyum kAttanin ponnaruLip pArmuka mAkaen Ormukam pArkkap parintilatE.
வான்வளர்த் தாய்இந்த மண்வளர்த் தாய்எங்கும் மன்னுயிர்கள் தான்வளர்த் தாய்நின் தகைஅறி யாஎன் றனைஅரசே ஏன்வளர்த் தாய்கொடும் பாம்பையெல் லாந்தள் ளிலைவளர்த்தாய் மான்வளர்த் தாய்கரத் தார்நினைப் போல வளர்ப்பவரே.
vAnvaLart tAyinta maNvaLart tAyengkum mannuyirkaL tAnvaLart tAynin takaiaRi yAen RanaiarachE EnvaLart tAykoTum pAmpaiyel lAntaL LilaivaLarttAy mAnvaLart tAykarat tArninaip pOla vaLarppavarE.
அற்கண்டம் ஓங்கும் அரசேநின் றன்அடி யார்மதுரச் சொற்கண்ட போதும்என் புற்கண்ட நெஞ்சம் துணிந்துநில்லா திற்கண்ட மெய்த்தவர் போலோடு கின்ற தெறிந்ததுதீங் கற்கண் டெனினும்அக் கற்கண்ட காக்கைநிற் காதென்பரே.
aRkaNTam Ongkum arachEnin RanaTi yArmaturach choRkaNTa pOtumen puRkaNTa nenjcham tuNintunillA tiRkaNTa meyttavar pOlOTu kinRa teRintatutIng kaRkaN Teninumak kaRkaNTa kAkkainiR kAtenparE.
சொல்லுகின் றோர்க்கமு தம்போல் சுவைதரும் தொல்புகழோய் வெல்லுகின் றோரின்றிச் சும்மா அலையுமென் வேடநெஞ்சம் புல்லுகின் றோர்தமைக் கண்டால்என் னாங்கொல் புகல்வெறும்வாய் மெல்லுகின் றோர்க்கொரு நெல்லவல் வாய்க்கில் விடுவரன்றே.
chollukin ROrkkamu tampOl chuvaitarum tolpukazhOy vellukin ROrinRich chummA alaiyumen vETanenjcham pullukin ROrtamaik kaNTAlen nAngkol pukalveRumvAy mellukin ROrkkoru nellaval vAykkil viTuvaranRE.
சீரிடு வார்பொருட் செல்வர்க்க லாமல்இத் தீனர்கட்கிங் காரிடு வார்பிச்சை ஆயினும் பிச்சன் அசடன்என்றே பேரிடு வார்வம்புப் பேச்சிடு வார்இந்தப் பெற்றிகண்டும் போரிடு வார்நினைப் போற்றார்என் னேமுக்கட் புண்ணியனே.
chIriTu vArporuT chelvarkka lAmalit tInarkaTking kAriTu vArpichchai Ayinum pichchan achaTanenRE pEriTu vArvampup pEchchiTu vArintap peRRikaNTum pOriTu vArninaip pORRAren nEmukkaT puNNiyanE.
சேலுக்கு நேர்விழி மங்கைபங் காஎன் சிறுமதிதான் மேலுக்கு நெஞ்சையுட் காப்பது போல்நின்று வெவ்விடய மாலுக்கு வாங்கி வழங்கவுந் தான்சம் மதித்ததுகாண் பாலுக்குங் காவல்வெம் பூனைக்குந் தோழன்என் பார்இதுவே.
chElukku nErvizhi mangkaipang kAen chiRumatitAn mElukku nenjchaiyuT kAppatu pOlninRu vevviTaya mAlukku vAngki vazhangkavun tAncham matittatukAN pAlukkung kAvalvem pUnaikkun tOzhanen pArituvE.
இணையேதும் இன்றிய தேவே கனல்இனன் இந்தெனுமுக் கணையே கொளும்செங் கரும்பே பிறவிக் கடல்கடத்தும் புணையே திருவருட் பூரண மேமெய்ப் புலமளிக்கும் துணையேஎன் துன்பந் துடைத்தாண்டு கொள்ளத் துணிந்தருளே.
iNaiyEtum inRiya tEvE kanalinan intenumuk kaNaiyE koLumcheng karumpE piRavik kaTalkaTattum puNaiyE tiruvaruT pUraNa mEmeyp pulamaLikkum tuNaiyEen tunpan tuTaittANTu koLLat tuNintaruLE.
நிலைகாட்டி ஆண்டநின் தாட்கன்பி லாதன்பில் நீண்டவன்போல் புலைகாட் டியமனத் தேன்கொண்ட வேடம் புனைஇடைமேல் கலைகாட்டிக் கட்டு மயிர்த்தலை காட்டிப்புன் கந்தைசுற்றி முலைகாட்டி ஆண்மகன் பெண்வேடம் காட்டு முறைமையன்றே.
nilaikATTi ANTanin tATkanpi lAtanpil nINTavanpOl pulaikAT Tiyamanat tEnkoNTa vETam punaiiTaimEl kalaikATTik kaTTu mayirttalai kATTippun kantaichuRRi mulaikATTi ANmakan peNvETam kATTu muRaimaiyanRE.
விடநாகப் பூணணி மேலோய்என் நெஞ்சம் விரிதல்விட்டென் உடனாக மெய்அன்பு ளூற்றாக நின்னரு ளுற்றிடுதற் கிடனாக மெய்ந்நெறிக் கீடாகச் செய்குவ திங்குனக்கே கடனாக நிற்பது கண்டேன்பின் துன்பொன்றுங் கண்டிலனே.
viTanAkap pUNaNi mElOyen nenjcham viritalviTTen uTanAka meyanpu LURRAka ninnaru LuRRiTutaR kiTanAka meynneRik kITAkach cheykuva tingkunakkE kaTanAka niRpatu kaNTEnpin tunponRung kaNTilanE.
நயப்படும் ஓர்நின் அருளெனக் கின்றெனில் நாய்மனமென் வயப்படு மோதுயர் மண்படு மோநல்ல வாழ்வைஎன்னால் செயப்படு மோகுணம் சீர்ப்படு மோபவம் சேரச்சற்றும் பயப்படு மோமலம் பாழ்படு மோஎம் பசுபதியே.
nayappaTum Ornin aruLenak kinRenil nAymanamen vayappaTu mOtuyar maNpaTu mOnalla vAzhvaiennAl cheyappaTu mOkuNam chIrppaTu mOpavam chErachchaRRum payappaTu mOmalam pAzhpaTu mOem pachupatiyE.
சோபங்கண் டார்க்கருள் செய்வோய் மதிக்கன்றிச் சூழ்ந்திடுவெந் தீபங்கண் டாலும் இருள்போம்இவ் வேழை தியங்கும்பரி தாபங்கண் டாய்அருள் செய்யாதென் குற்றந் தனைக்குறித்துக் கோபங்கண் டாலுநன் றையாஎன் துன்பக் கொதிப்பறுமே.
chOpangkaN TArkkaruL cheyvOy matikkanRich chUzhntiTuven tIpangkaN TAlum iruLpOmiv vEzhai tiyangkumpari tApangkaN TAyaruL cheyyAten kuRRan tanaikkuRittuk kOpangkaN TAlunan RaiyAen tunpak kotippaRumE.
எல்லா முடைய இறையவ னேநினை ஏத்துகின்ற நல்லார் தமக்கொரு நாளேனும் பூசை நயந்தியற்றிச் சொல்லால் அவர்புகழ் சொல்லாதிவ் வண்ணம் துயர்வதற்கென் கல்லாமை ஒன்றுமற் றில்லாமை ஒன்றிரு காரணமே.
ellA muTaiya iRaiyava nEninai EttukinRa nallAr tamakkoru nALEnum pUchai nayantiyaRRich chollAl avarpukazh chollAtiv vaNNam tuyarvataRken kallAmai onRumaR RillAmai onRiru kAraNamE.
பிறையாறு கொண்டசெவ் வேணிப் பிரான்பதப் பேறடைவான் மறையாறு காட்டுநின் தண்ணரு ளேயன்றி மாயைஎன்னும் நிறையாறு சூழுந் துரும்பாய்ச் சுழலும்என் நெஞ்சினுள்ள குறையாறு தற்கிடம் வேறில்லை காண்இக் குவலையத்தே.
piRaiyARu koNTachev vENip pirAnpatap pERaTaivAn maRaiyARu kATTunin taNNaru LEyanRi mAyaiennum niRaiyARu chUzhun turumpAych chuzhalumen nenjchinuLLa kuRaiyARu taRkiTam vERillai kANik kuvalaiyattE.
மாலறி யாதவன் அன்றேஅத் தெய்வ வரதனுநின் காலறி யாதவன் என்றால்அக் காலைஎக் காலைஎமைப் போலறி யாதவர் காண்பார்முற் கண்டமெய்ப் புண்ணியர்தம் பாலறி யாதவன் நானிது கேட்டுணர் பாலனன்றே.
mAlaRi yAtavan anREat teyva varatanunin kAlaRi yAtavan enRAlak kAlaiek kAlaiemaip pOlaRi yAtavar kANpArmuR kaNTameyp puNNiyartam pAlaRi yAtavan nAnitu kETTuNar pAlananRE.
ஒன்றேஎன் ஆருயிர்க் கோருற வேஎனக் கோரமுதே நன்றேமுக் கண்ணுடை நாயக மேமிக்க நல்லகுணக் குன்றே நிறைஅருட் கோவே எனது குலதெய்வமே மன்றே ஒளிர்முழு மாணிக்க மேஎனை வாழ்விக்கவே.
onREen Aruyirk kOruRa vEenak kOramutE nanREmuk kaNNuTai nAyaka mEmikka nallakuNak kunRE niRaiaruT kOvE enatu kulateyvamE manRE oLirmuzhu mANikka mEenai vAzhvikkavE.
தாழ்வேதும் இன்றிய கோவே எனக்குத் தனித்தபெரு வாழ்வே நுதற்கண் மணியேஎன் உள்ள மணிவிளக்கே ஏழ்வேலை என்னினும் போதா இடும்பை இடுங்குடும்பப் பாழ்வே தனைப்பட மாட்டேன் எனக்குன் பதமருளே.
tAzhvEtum inRiya kOvE enakkut tanittaperu vAzhvE nutaRkaN maNiyEen uLLa maNiviLakkE EzhvElai enninum pOtA iTumpai iTungkuTumpap pAzhvE tanaippaTa mATTEn enakkun patamaruLE.
வண்டுகொண் டார்நறுங் கொன்றையி னான்றன் மலரடிக்குத் தொண்டுகொண் டார்தஞ் சுகத்துக்கும் வாழ்க்கைச் சுழலிற்றள்ளும் பெண்டுகொண் டார்தம் துயருக்கும் ஒப்பின்று பேசில்என்றே கண்டுகொண் டாய்இனி நெஞ்சேநின் உள்ளக் கருத்தெதுவே.
vaNTukoN TArnaRung konRaiyi nAnRan malaraTikkut toNTukoN TArtanj chukattukkum vAzhkkaich chuzhaliRRaLLum peNTukoN TArtam tuyarukkum oppinRu pEchilenRE kaNTukoN TAyini nenjchEnin uLLak karuttetuvE.
மலங்கவிழ்ந் தார்மனம் வான்கவிழ்ந் தாலும்அவ் வான்புறமாம் சலங்கவிழ்ந் தாலும் சலியாதென் புன்மனந் தான்கடலில் கலங்கவிழ்ந் தார்மனம் போலே சலிப்பது காண்குடும்ப விலங்கவிழ்ந் தாலன்றி நில்லாதென் செய்வல் விடையவனே.
malangkavizhn tArmanam vAnkavizhn tAlumav vAnpuRamAm chalangkavizhn tAlum chaliyAten punmanan tAnkaTalil kalangkavizhn tArmanam pOlE chalippatu kANkuTumpa vilangkavizhn tAlanRi nillAten cheyval viTaiyavanE.
மைகொடுத் தார்நெடுங் கண்மலை மானுக்கு வாய்ந்தொருபால் மெய்கொடுத் தாய்தவர் விட்டவெம் மானுக்கு மேவுறஓர் கைகொடுத் தாய்மயல் கண்ணியில் வீழ்ந்துட் கலங்குறும்என் கொய்கொடுத் தாழ்மன மானுக்குக் காலைக் கொடுத்தருளே.
maikoTut tArneTung kaNmalai mAnukku vAyntorupAl meykoTut tAytavar viTTavem mAnukku mEvuRaOr kaikoTut tAymayal kaNNiyil vIzhntuT kalangkuRumen koykoTut tAzhmana mAnukkuk kAlaik koTuttaruLE.
உடம்பார் உறுமயிர்க் கால்புழை தோறனல் ஊட்டிவெய்ய விடம்பாச் சியஇருப் பூசிகள் பாய்ச்சினும் மெத்தென்னும்இத் தடம்பார் சிறுநடைத் துன்பஞ்செய் வேதனைத் தாங்கரிதென் கடம்பாநற் பன்னிரு கண்ணா இனிஎனைக் காத்தருளே.
uTampAr uRumayirk kAlpuzhai tORanal UTTiveyya viTampAch chiyairup pUchikaL pAychchinum mettennumit taTampAr chiRunaTait tunpanjchey vEtanait tAngkariten kaTampAnaR panniru kaNNA inienaik kAttaruLE.
மண்ணாலும் மண்ணுற்ற வாழ்க்கையி னாலும்அவ் வாழ்க்கைக்குற்ற பெண்ணாலும் நொந்துவந் தாரை எலாம்அருட் பேறெனுமுக் கண்ணாலும் பார்த்தைந்து கையாலும் ஈயும் கணபதிநின் பண்ணாலும் மாமறை மேற்றாளை என்னுட் பதித்தருளே.
maNNAlum maNNuRRa vAzhkkaiyi nAlumav vAzhkkaikkuRRa peNNAlum nontuvan tArai elAmaruT pERenumuk kaNNAlum pArttaintu kaiyAlum Iyum kaNapatinin paNNAlum mAmaRai mERRALai ennuT patittaruLE.
வானாள மாலயன் வாழ்வாள அன்றிஇம் மண்முழுதும் தானாள நின்பதம் தாழ்பவர் தாழ்கஒண் சங்கையங்கை மானாள மெய்யிடந் தந்தோய்துன் பற்ற மனமதொன்றே நானாள எண்ணிநின் தாளேத்து கின்றனன் நல்குகவே.
vAnALa mAlayan vAzhvALa anRiim maNmuzhutum tAnALa ninpatam tAzhpavar tAzhkaoN changkaiyangkai mAnALa meyyiTan tantOytun paRRa manamatonRE nAnALa eNNinin tALEttu kinRanan nalkukavE.
ஈடறி யாதமுக் கண்ணாநின் அன்பர் இயல்பினைஇந் நாடறி யாதுன் அருளன்றி ஊண்சுவை நாவையன்றி மேடறி யாதுநற் பாட்டைக்கற் றோரன்றி மேற்சுமந்த ஏடறி யாதவை யேனறி யாஎன் றிகழ்வரன்றே.
ITaRi yAtamuk kaNNAnin anpar iyalpinaiin nATaRi yAtun aruLanRi UNchuvai nAvaiyanRi mETaRi yAtunaR pATTaikkaR ROranRi mERchumanta ETaRi yAtavai yEnaRi yAen RikazhvaranRE.
சூடுண்ட பூஞைக்குச் சோறுண்ட வாய்பின் துடிப்பதன்றி ஊடுண்ட பாலிட்ட ஊண்கண்ட தேனும் உணத்துணியா தீடுண்ட என்மனம் அந்தோ துயரில் இடியுண்டும்இவ் வீடுண்ட வாழ்க்கையில் வீழுண்ட தால்எம் விடையவனே.
chUTuNTa pUnjaikkuch chORuNTa vAypin tuTippatanRi UTuNTa pAliTTa UNkaNTa tEnum uNattuNiyA tITuNTa enmanam antO tuyaril iTiyuNTumiv vITuNTa vAzhkkaiyil vIzhuNTa tAlem viTaiyavanE.
கரங்காட்டி மையிட்ட கண்காட்டி என்பெருங் கன்மநெஞ்சக் குரங்காட்டிச் சேய்மையில் நிற்கின்ற மாதரைக் கொண்டுகல்லார் உரங்காட்டிக் கோலொன் றுடனீட்டிக் காட்டி உரப்பிஒரு மரங்காட் டியகுரங் காட்டுகின் றோரென் மணிகண்டனே.
karangkATTi maiyiTTa kaNkATTi enperung kanmanenjchak kurangkATTich chEymaiyil niRkinRa mAtaraik koNTukallAr urangkATTik kOlon RuTanITTik kATTi urappioru marangkAT Tiyakurang kATTukin ROren maNikaNTanE.
களங்கனி போல்மணி கண்டாநின் பொற்கழல் காணற்கென்சிற் றுளங்கனி யாதுநின் சீர்கேட் கினும்அன் புறஉருகா வளங்கனி காமஞ் சிறவாமல் சிற்றில் வகுத்துழலும் இளங்கனி போல்நின்ற தென்செய்கு வேன்எம் இறையவனே.
kaLangkani pOlmaNi kaNTAnin poRkazhal kANaRkenchiR RuLangkani yAtunin chIrkET kinuman puRaurukA vaLangkani kAmanj chiRavAmal chiRRil vakuttuzhalum iLangkani pOlninRa tencheyku vEnem iRaiyavanE.
மாமத்தி னால்சுழல் வெண்தயிர் போன்று மடந்தையர்தம் காமத்தி னால்சுழல் என்றன்நெஞ் சோஉன்றன் காலைஅன்பாம் தாமத்தி னால்தளை யிட்டநெஞ் சோஇத் தகைஇரண்டின் நாமத்தினால் பித்தன் என்போய் நினக்கெது நல்லநெஞ்சே.
mAmatti nAlchuzhal veNtayir pOnRu maTantaiyartam kAmatti nAlchuzhal enRannenj chOunRan kAlaianpAm tAmatti nAltaLai yiTTanenj chOit takaiiraNTin nAmattinAl pittan enpOy ninakketu nallanenjchE.
ஏற்றிலிட் டார்கொடி கொண்டோய் விளக்கினை ஏற்றபெருங் காற்றிலிட் டாலும் இடலாம்நெல் மாவைக் கலித்திடுநீர் ஆற்றிலிட் டாலும் பெறலாம்உட் காலை அடுங்குடும்பச் சேற்றிலிட் டால்பின் பரிதாம் எவர்க்கும் திருப்புவதே.
ERRiliT TArkoTi koNTOy viLakkinai ERRaperung kARRiliT TAlum iTalAmnel mAvaik kalittiTunIr ARRiliT TAlum peRalAmuT kAlai aTungkuTumpach chERRiliT TAlpin paritAm evarkkum tiruppuvatE.
தேரோங்கு காழிக்கண் மெய்ஞ்ஞானப்பாலுண்ட செம்மணியைச் சீரோங்கு முத்துச் சிவிகையின் மேல்வைத்த தேவஉன்றன் பேரோங்கும் ஐந்தெழுத் தன்றோ படைப்பைப் பிரமனுக்கும் ஏரோங்கு காப்பைத் திருநெடு மாலுக்கும் ஈந்ததுவே.
tErOngku kAzhikkaN meynjnjAnappAluNTa chemmaNiyaich chIrOngku muttuch chivikaiyin mElvaitta tEvaunRan pErOngkum aintezhut tanRO paTaippaip piramanukkum ErOngku kAppait tiruneTu mAlukkum IntatuvE.
வேதனை யாமது சூதனை யாஎன்று வேதனையால் போதனை யாநின் றுனைக்கூவு மேழையைப் போதனைகேள் வாதனை யாதிங்கு வாதனை யாவென்றுன் வாய்மலரச் சோதனை யாயினுஞ் சோதனை யாசிற் சுகப்பொருளே.
vEtanai yAmatu chUtanai yAenRu vEtanaiyAl pOtanai yAnin RunaikkUvu mEzhaiyaip pOtanaikEL vAtanai yAtingku vAtanai yAvenRun vAymalarach chOtanai yAyinunj chOtanai yAchiR chukapporuLE.
இன்பற்ற இச்சிறு வாழ்க்கையி லேவெயி லேறவெம்பும் என்பற்ற புன்புழுப் போல்தளர் ஏழை எனினுமிவன் அன்பற்ற பாவிஎன் றந்தோ எனைவிடில் ஐயவையத் தென்பற்ற தாகமற் றில்லைகண் டாய்எனை ஏன்றுகொள்ளே.
inpaRRa ichchiRu vAzhkkaiyi lEveyi lERavempum enpaRRa punpuzhup pOltaLar Ezhai eninumivan anpaRRa pAvien RantO enaiviTil aiyavaiyat tenpaRRa tAkamaR RillaikaN TAyenai EnRukoLLE.
களங்கொண்ட ஓர்மணிக் காட்சியும் முச்சுடர்க் கண்அருளும் வளங்கொண்ட தெய்வத் திருமுக மாட்சியும் வாய்ந்தபரி மளங்கொண்ட கொன்றைச் சடையும்பொற் சேவடி மாண்பும்ஒன்ற உளங்கொண்ட புண்ணியர் அன்றோஎன் தன்னை உடையவரே.
kaLangkoNTa OrmaNik kATchiyum muchchuTark kaNaruLum vaLangkoNTa teyvat tirumuka mATchiyum vAyntapari maLangkoNTa konRaich chaTaiyumpoR chEvaTi mANpumonRa uLangkoNTa puNNiyar anROen tannai uTaiyavarE.
காவிக்கு நேர்மணி கண்டாவண் டார்குழல் கற்பருளும் தேவிக்கு வாமங் கொடுத்தோய்நின் மாமலர்ச் சேவடிப்பால் சேவிக்கும் சேவகஞ் செய்வோரை ஆயினுஞ் சேவிக்கஇப் பாவிக்கு வாய்க்கில்என் ஆவிக்கு நீண்ட பயனதுவே.
kAvikku nErmaNi kaNTAvaN TArkuzhal kaRparuLum tEvikku vAmang koTuttOynin mAmalarch chEvaTippAl chEvikkum chEvakanj cheyvOrai Ayinunj chEvikkaip pAvikku vAykkilen Avikku nINTa payanatuvE.
கொங்கிட்ட கொன்றைச் சடையும்நின் னோர்பசுங் கோமளப்பெண் பங்கிட்ட வெண்திரு நீற்றொளி மேனியும் பார்த்திடில்பின் இங்கிட்ட மாயையை எங்கிட்ட வாஎன் றிசைப்பினும்போய்ச் சங்கிட்ட ஓசையில் பொங்கிட்ட வாய்கொடு தாண்டிடுமே.
kongkiTTa konRaich chaTaiyumnin nOrpachung kOmaLappeN pangkiTTa veNtiru nIRRoLi mEniyum pArttiTilpin ingkiTTa mAyaiyai engkiTTa vAen RichaippinumpOych changkiTTa Ochaiyil pongkiTTa vAykoTu tANTiTumE.
வெம்பெரு மானுக்குக் கைகொடுத் தாண்ட மிகுங்கருணை எம்பெரு மானுக்கு விண்ணப்பம் தேவர் இளம்பிடியார் தம்பெரு மானுக்கும் சார்மலை மானுக்கும் சாற்றுமைங்கைச் செம்பெரு மானுக்கும் எந்தாய்க்கும் நான்பணி செய்யச்செய்யே.
vemperu mAnukkuk kaikoTut tANTa mikungkaruNai emperu mAnukku viNNappam tEvar iLampiTiyAr tamperu mAnukkum chArmalai mAnukkum chARRumaingkaich chemperu mAnukkum entAykkum nAnpaNi cheyyachcheyyE.
சாற்றவ னேகநன் னாவுள்ள தாயினும் சாற்றரிதாம் வீற்றவ னேவெள்ளி வெற்பவ னேஅருள் மேவியவெண் நீற்றவ னேநின் னருள்தர வேண்டும் நெடுமுடிவெள் ஏற்றவ னேபலி ஏற்றவனே அன்பர்க் கேற்றவனே.
chARRava nEkanan nAvuLLa tAyinum chARRaritAm vIRRava nEveLLi veRpava nEaruL mEviyaveN nIRRava nEnin naruLtara vENTum neTumuTiveL ERRava nEpali ERRavanE anpark kERRavanE.
பதியே சரணம் பரமே சரணம் பரம்பரமாம் திதியே சரணம் சிவமே சரணம் சிவமுணர்ந்தோர் கதியே சரணம்என் கண்ணே சரணம்முக் கட்கருணா நிதியே சரணம் சரணம்என் பால்மெய்ந் நிலையருளே.
patiyE charaNam paramE charaNam paramparamAm titiyE charaNam chivamE charaNam chivamuNarntOr katiyE charaNamen kaNNE charaNammuk kaTkaruNA nitiyE charaNam charaNamen pAlmeyn nilaiyaruLE.
என்னுற வேஎன் குருவேஎன் உள்ளத் தெழும்இன்பமே என்னுயி ரேஎன்றன் அன்பே நிலைபெற்ற என்செல்வமே என்னறி வேஎன்றன் வாழ்வேஎன் வாழ்வுக் கிடுமுதலே என்னர சேஎன் குலதெய்வ மேஎனை ஏன்றுகொள்ளே.
ennuRa vEen kuruvEen uLLat tezhuminpamE ennuyi rEenRan anpE nilaipeRRa enchelvamE ennaRi vEenRan vAzhvEen vAzhvuk kiTumutalE ennara chEen kulateyva mEenai EnRukoLLE.
கான்போல் இருண்டஇவ் வஞ்சக வாழ்க்கையில் கன்னெஞ்சமே மான்போல் குதித்துக்கொண் டோடேல் அமுத மதிவிளங்கும் வான்போல் குளிர்ந்த சிவானந்த வாழ்க்கையின் வாழ்வுறச்செந் தேன்போல் இனிக்கும் சிவாய நமஎனச் சிந்தைசெய்யே.
kAnpOl iruNTaiv vanjchaka vAzhkkaiyil kannenjchamE mAnpOl kutittukkoN TOTEl amuta mativiLangkum vAnpOl kuLirnta chivAnanta vAzhkkaiyin vAzhvuRachchen tEnpOl inikkum chivAya namaenach chintaicheyyE.
வேதனென் கோதற வேண்டுமென் கோஎன விண்ணப்பஞ்செய் பாதனென் கோகடற் பள்ளிகொண் டான்தொழும் பண்பன்என்கோ நாதனென் கோபர நாதனென் கோஎங்கள் நம்பிக்குநல் தூதனென் கோஅவன் தோழனென் கோநினைத் தூய்மணியே.
vEtanen kOtaRa vENTumen kOena viNNappanjchey pAtanen kOkaTaR paLLikoN TAntozhum paNpanenkO nAtanen kOpara nAtanen kOengkaL nampikkunal tUtanen kOavan tOzhanen kOninait tUymaNiyE.
இயங்கா மனமும் கயங்கா நிலையும் இகபரத்தே மயங்கா அறிவும் தியங்கா நெறியும் மகிழ்ந்தருள்வாய் வயங்கா நிலத்தின் முயங்கா உயர்தவர் வாழ்த்துகின்ற புயங்கா துதித்தற் குயங்கா தவருட் புகுந்தவனே.
iyangkA manamum kayangkA nilaiyum ikaparattE mayangkA aRivum tiyangkA neRiyum makizhntaruLvAy vayangkA nilattin muyangkA uyartavar vAzhttukinRa puyangkA tutittaR kuyangkA tavaruT pukuntavanE.
சிவசங்க ராசிவ யோகா சிவகதிச் சீரளிக்கும் சிவசம்பு வேசிவ லோகா சிவாநந்தச் செல்வநல்கும் சிவசுந்த ராசிவ போகா சிவாகமச் செந்நெறிசொல் சிவபுங்க வாசிவ ஞானிகள் வாழ்த்தும் சிவகுருவே.
chivachangka rAchiva yOkA chivakatich chIraLikkum chivachampu vEchiva lOkA chivAnantach chelvanalkum chivachunta rAchiva pOkA chivAkamach chenneRichol chivapungka vAchiva njAnikaL vAzhttum chivakuruvE.
மதிதத்து வாந்த அருட்சிவ மேசின் மயசிவமே துதிசித் தெலாம்வல்ல மெய்ச்சிவ மேசிற் சுகசிவமே கதிநித்த சுத்தச் சிவமே விளங்குமுக் கட்சிவமே பதிசச்சி தாநந்த சிற்சிவ மேஎம் பரசிவமே.
matitattu vAnta aruTchiva mEchin mayachivamE tutichit telAmvalla meychchiva mEchiR chukachivamE katinitta chuttach chivamE viLangkumuk kaTchivamE patichachchi tAnanta chiRchiva mEem parachivamE.
கடும்புல வேடர்கள் ஓரைவர் இந்தியக் கள்வரைவர் கொடுங்கர ணத்துட்டர் நால்வர்கள் வன்மலக் கோளரைவர் அடும்படை கோடிகொண் டுற்றார்மற் றேழையன் யானொருவன் இடும்படை யாதுமி லேன்வெல்வ தெங்ஙன் இறையவனே.
kaTumpula vETarkaL Oraivar intiyak kaLvaraivar koTungkara NattuTTar nAlvarkaL vanmalak kOLaraivar aTumpaTai kOTikoN TuRRArmaR REzhaiyan yAnoruvan iTumpaTai yAtumi lEnvelva tengngan iRaiyavanE.
இடைக்கொடி வாமத் திறைவாமெய்ஞ் ஞானிகட் கின்பநல்கும் விடைக்கொடி ஏந்தும் வலத்தாய்நின் நாமம் வியந்துரையார் கடைக்கொடி போலக் கதறுகின் றார்பொய்க் கதையவர்தாம் புடைக்கொடி யாலன்றிப் புல்லால் எயிலைப் புனைபவரே.
iTaikkoTi vAmat tiRaivAmeynj njAnikaT kinpanalkum viTaikkoTi Entum valattAynin nAmam viyanturaiyAr kaTaikkoTi pOlak kataRukin RArpoyk kataiyavartAm puTaikkoTi yAlanRip pullAl eyilaip punaipavarE.
உருமத்தி லேபட்ட புன்புழுப் போல்இவ் உலகநடைக் கருமத்தி லேபட்ட என்மனந் தான்நின் கழலடையும் தருமத்தி லேபட்ட தின்றேஎன் றெண்ணுந் தனையுமந்தோ மருமத்தி லேபட்ட வாளியைப் போன்று வருத்துவதே.
urumatti lEpaTTa punpuzhup pOliv ulakanaTaik karumatti lEpaTTa enmanan tAnnin kazhalaTaiyum tarumatti lEpaTTa tinREen ReNNun tanaiyumantO marumatti lEpaTTa vALiyaip pOnRu varuttuvatE.
என்னிறை வாஇமை யோரிறை வாமறை யின்முடிபின் முன்னிறை வாமலை மின்னிறை வாமலர் முண்டகத்தோன் தன்னிறை வாதிதித் தானிறை வாமெய்த் தபோதனருள் மன்னிறை வாஇங்கு வாஎன் றெனக்குநல் வாழ்வருளே.
enniRai vAimai yOriRai vAmaRai yinmuTipin munniRai vAmalai minniRai vAmalar muNTakattOn tanniRai vAtitit tAniRai vAmeyt tapOtanaruL manniRai vAingku vAen Renakkunal vAzhvaruLE.
போற்றிஎன் ஆவித் துணையேஎன் அன்பில் புகுஞ்சிவமே போற்றிஎன் வாழ்வின் பயனேஎன் இன்பப் புதுநறவே போற்றிஎன் கண்ணுண் மணியேஎன் உள்ளம் புனைஅணியே போற்றிஎன் ஓர்பெருந் தேவே கருணை புரிந்தருளே.
pORRien Avit tuNaiyEen anpil pukunjchivamE pORRien vAzhvin payanEen inpap putunaRavE pORRien kaNNuN maNiyEen uLLam punaiaNiyE pORRien Orperun tEvE karuNai purintaruLE.
கஞ்சத்தி லேர்முக மஞ்சத்தி லேர்நடைக் கன்னியர்கண் நஞ்சத்தி லேஅவர் வஞ்சத்தி லேபட்டு நாணுறும்புன் நெஞ்சத்தி லேஅதன் தஞ்சத்தி லேமுக் கணித்தஎன்போல் பஞ்சத்தி லேபிர பஞ்சத்தி லேஉழப் பார்எவரே.
kanjchatti lErmuka manjchatti lErnaTaik kanniyarkaN nanjchatti lEavar vanjchatti lEpaTTu nANuRumpun nenjchatti lEatan tanjchatti lEmuk kaNittaenpOl panjchatti lEpira panjchatti lEuzhap pArevarE.
நான்முகத் தோனும் திருநெடு மாலுமெய்ஞ் ஞானமென்னும் வான்முகக் கண்கொண்டு காணாமல் தம்உரு மாறியும்நின் தேன்முகக் கொன்றை முடியும்செந் தாமரைச் சேவடியும் ஊன்முகக் கண்கொண்டு தேடிநின் றார்சற் றுணர்விலரே.
nAnmukat tOnum tiruneTu mAlumeynj njAnamennum vAnmukak kaNkoNTu kANAmal tamuru mARiyumnin tEnmukak konRai muTiyumchen tAmaraich chEvaTiyum Unmukak kaNkoNTu tETinin RArchaR RuNarvilarE.
இருவர்க் கறியப் படாதெழுந் தோங்கிநின் றேத்துகின்றோர் கருவர்க்க நீக்கும் கருணைவெற் பேஎன் கவலையைஇங் கொருவர்க்கு நான்சொல மாட்டேன் அவரென் னுடையவரோ வெருவற்க என்றெனை ஆண்டருள் ஈதென்றன் விண்ணப்பமே.
iruvark kaRiyap paTAtezhun tOngkinin REttukinROr karuvarkka nIkkum karuNaiveR pEen kavalaiyaiing koruvarkku nAnchola mATTEn avaren nuTaiyavarO veruvaRka enRenai ANTaruL ItenRan viNNappamE.
ஒண்ணுதல் ஏழை மடவார்தம் வாழ்க்கையின் உற்றிடினும் பண்ணுத லேர்மறை ஆயிரஞ் சூழுநின் பாதத்தையான் எண்ணுத லேதொழி லாகச்செய் வித்தென்னை ஏன்றுகொள்வாய் கண்ணுத லேகரு ணைக்கட லேஎன் கருத்திதுவே.
oNNutal Ezhai maTavArtam vAzhkkaiyin uRRiTinum paNNuta lErmaRai Ayiranj chUzhunin pAtattaiyAn eNNuta lEtozhi lAkachchey vittennai EnRukoLvAy kaNNuta lEkaru NaikkaTa lEen karuttituvE.
தளைக்கின்ற மாயக் குடும்பப் பெருந்துயர் தாங்கிஅந்தோ இளைக்கின்ற ஏழைக் கிரங்குகண் டாய்சிறி தேஇறகு முளைக்கின்ற போதறுப் பார்போல்நின் னாம மொழிந்திடுங்கால் வளைக்கின்ற மாயைக்கிங் காற்றேன்முக் கண்ணுடை மாமணியே.
taLaikkinRa mAyak kuTumpap peruntuyar tAngkiantO iLaikkinRa Ezhaik kirangkukaN TAychiRi tEiRaku muLaikkinRa pOtaRup pArpOlnin nAma mozhintiTungkAl vaLaikkinRa mAyaikking kARREnmuk kaNNuTai mAmaNiyE.
மஞ்சடை வான நிறத்தோன் அயன்முதல் வானவர்க்கா நஞ்சடை யாள மிடுமிடற் றோய்கங்கை நண்ணுகின்ற செஞ்சடை யாய்நின் திருப்பெய ராகச் சிறந்தஎழுத் தஞ்சடை யார்கண்கள் பஞ்சடை யாமுன் னறிவிலரே.
manjchaTai vAna niRattOn ayanmutal vAnavarkkA nanjchaTai yALa miTumiTaR ROykangkai naNNukinRa chenjchaTai yAynin tiruppeya rAkach chiRantaezhut tanjchaTai yArkaNkaL panjchaTai yAmun naRivilarE.
இலங்கா புரத்தன் இராக்கதர் மன்னன் இராவணன்முன் மலங்காநின் வெள்ளி மலைக்கீ ழிருந்து வருந்தநின்சீர் கலங்காமல் பாடிடக் கேட்டே இரங்கிக் கருணைசெய்த நலங்காணின் தன்மைஇன் றென்னள வியாண்டையின் நண்ணியதே.
ilangkA purattan irAkkatar mannan irAvaNanmun malangkAnin veLLi malaikkI zhiruntu varuntaninchIr kalangkAmal pATiTak kETTE irangkik karuNaicheyta nalangkANin tanmaiin RennaLa viyANTaiyin naNNiyatE.
உடையென்றும் பூணென்றும் ஊணென்றும் நாடி உழன்றிடும்இந் நடையென்றும் சஞ்சலஞ் சஞ்சலங் காணிதி னான்சிறியேன் புடையென்று வெய்ய லுறும்புழுப் போன்று புழுங்குகின்றேன் விடையென்று மாலறங் கொண்டோயென் துன்பம் விலக்குகவே.
uTaiyenRum pUNenRum UNenRum nATi uzhanRiTumin naTaiyenRum chanjchalanj chanjchalang kANiti nAnchiRiyEn puTaiyenRu veyya luRumpuzhup pOnRu puzhungkukinREn viTaiyenRu mAlaRang koNTOyen tunpam vilakkukavE.
அருள்அர சேஅருட் குன்றேமன் றாடும் அருளிறையே அருள்அமு தேஅருட் பேறே நிறைந்த அருட்கடலே அருள்அணி யேஅருட் கண்ணேவிண் ணோங்கும் அருள்ஒளியே அருள்அற மேஅருட் பண்பேமுக் கண்கொள் அருட்சிவமே.
aruLara chEaruT kunREman RATum aruLiRaiyE aruLamu tEaruT pERE niRainta aruTkaTalE aruLaNi yEaruT kaNNEviN NOngkum aruLoLiyE aruLaRa mEaruT paNpEmuk kaNkoL aruTchivamE.
நிலையறி யாத குடும்பத் துயரென்னும் நீத்தத்திலே தலையறி யாது விழுந்தேனை ஆண்டருள் தானளிப்பாய் அலையறி யாத கடலேமுக் கண்கொண்ட ஆரமுதே விலையறி யாத மணியே விடேலிதென் விண்ணப்பமே.
nilaiyaRi yAta kuTumpat tuyarennum nIttattilE talaiyaRi yAtu vizhuntEnai ANTaruL tAnaLippAy alaiyaRi yAta kaTalEmuk kaNkoNTa AramutE vilaiyaRi yAta maNiyE viTEliten viNNappamE.
மெய்யகத் தேகணப் போதும் விடாது விரும்புகின்றோர் கையகத் தேநின் றொளிர்கனி யேநுதற் கட்கரும்பே வையகத் தேநினை அல்லாமல் நற்றுணை மற்றிலைஇப் பொய்யகத் தேன்செயும் தீங்கா யிரமும் பொறுத்தருளே.
meyyakat tEkaNap pOtum viTAtu virumpukinROr kaiyakat tEnin RoLirkani yEnutaR kaTkarumpE vaiyakat tEninai allAmal naRRuNai maRRilaiip poyyakat tEncheyum tIngkA yiramum poRuttaruLE.
முலைக்கலங் கார மிடுமட வார்மயல் மூடிஅவர் தலைக்கலங் கார மலர்சூடு வார்நின் றனைவழுத்தார் இலைக்கலங் காரவ் வியமன்வந் தாலென் இசைப்பர்வெள்ளி மலைக்கலங் கார மணியேமுக் கண்கொண்ட மாமருந்தே.
mulaikkalang kAra miTumaTa vArmayal mUTiavar talaikkalang kAra malarchUTu vArnin RanaivazhuttAr ilaikkalang kArav viyamanvan tAlen ichaipparveLLi malaikkalang kAra maNiyEmuk kaNkoNTa mAmaruntE.
புரிகின்ற வீட்டகம் போந்தடி பட்டுப் புறங்கடையில் திரிகின்ற நாய்க்கும் சிரிப்பாம்என் பாவிச் சிறுபிழைப்பைச் சொரிகின்ற புண்ணில் கனலிடல் போலெணுந் தோறுநெஞ்சம் எரிகின்ற தென்செய்கு வேன்பிறை வார்சடை என்னமுதே.
purikinRa vITTakam pOntaTi paTTup puRangkaTaiyil tirikinRa nAykkum chirippAmen pAvich chiRupizhaippaich chorikinRa puNNil kanaliTal pOleNun tORunenjcham erikinRa tencheyku vEnpiRai vArchaTai ennamutE.
மனக்கேத மாற்று மருந்தே பொதுஒளிர் மாணிக்கமே கனக்கே துறஎன் கருத்தறி யாமல் கழறுகின்ற தனக்கேளர் பாற்சென் றடியேன் இதயம் தளர்வதெல்லாம் நினக்கே தெரிந்த தெனக்கே அருள நினைந்தருளே.
manakkEta mARRu maruntE potuoLir mANikkamE kanakkE tuRaen karuttaRi yAmal kazhaRukinRa tanakkELar pARchen RaTiyEn itayam taLarvatellAm ninakkE terinta tenakkE aruLa ninaintaruLE.
மோகங் கலந்த மனத்தேன் துயரங்கள் முற்றுமற்றுத் தேகங் கலந்த பவந்தீர்க்கும் நின்பதம் சிந்திக்கும்நாள் போகங் கலந்த திருநாள் மலையற் புதப்பசுந்தேன் பாகங் கலந்தசெம் பாலே நுதற்கட் பரஞ்சுடரே.
mOkang kalanta manattEn tuyarangkaL muRRumaRRut tEkang kalanta pavantIrkkum ninpatam chintikkumnAL pOkang kalanta tirunAL malaiyaR putappachuntEn pAkang kalantachem pAlE nutaRkaT paranjchuTarE.
கோலொன்று கண்ட இறைமகன் வாழ்வினும் கோடிபங்கு மேலொன்று கண்டனம் நெஞ்சேஎன் சொல்லை விரும்பினியஞ் சேலொன்று கண்ட மணியான் வரைப்பசுந் தேன்கலந்த பாலொன்று கண்டகண் கொண்டுயர் வாழ்வு பலித்ததுவே.
kOlonRu kaNTa iRaimakan vAzhvinum kOTipangku mElonRu kaNTanam nenjchEen chollai virumpiniyanj chElonRu kaNTa maNiyAn varaippachun tEnkalanta pAlonRu kaNTakaN koNTuyar vAzhvu palittatuvE.
புலையள வோஎனும் நெஞ்சக னேன்துயர்ப் போகமெட்டு மலையள வோஇந்த மண்ணள வோவந்த வானளவோ அலையள வோவன்று மன்றுணின் றோங்கும் அருமருந்தே இலையள வோஎனுந் தேவே அறிந்தும் இரங்கிலையே.
pulaiyaLa vOenum nenjchaka nEntuyarp pOkameTTu malaiyaLa vOinta maNNaLa vOvanta vAnaLavO alaiyaLa vOvanRu manRuNin ROngkum arumaruntE ilaiyaLa vOenun tEvE aRintum irangkilaiyE.
கல்லென்று வல்லென்று மின்னார் புளகக் கனதனத்தைச் சொல்லென்று சொல்லுமுன் சொல்லுமந் தோநின் துணையடிக்கண் நில்லென்று பல்ல நிகழ்த்தினும் என்மனம் நிற்பதன்றே அல்லென்று வெல்களங் கொண்டோய்என் செய்வ தறிந்திலனே.
kallenRu vallenRu minnAr puLakak kanatanattaich chollenRu chollumun cholluman tOnin tuNaiyaTikkaN nillenRu palla nikazhttinum enmanam niRpatanRE allenRu velkaLang koNTOyen cheyva taRintilanE.
கள்ளா டியகொன்றைச் செஞ்சடை யோய்நற் கனகமன்றின் உள்ளா டியமலர்ச் சேவடி யோய்இவ் வுலகியற்கண் எள்ளா டியசெக் கிடைப்படல் போல்துன் பிடைஇளைத்துத் தள்ளா டியநடை கொண்டேற்கு நன்னடை தந்தருளே.
kaLLA TiyakonRaich chenjchaTai yOynaR kanakamanRin uLLA Tiyamalarch chEvaTi yOyiv vulakiyaRkaN eLLA Tiyachek kiTaippaTal pOltun piTaiiLaittut taLLA TiyanaTai koNTERku nannaTai tantaruLE.
மருக்கா மலர்க்குழல் மின்னார் மயல்சண்ட மாருதத்தால் இருக்கா துழலுமென் ஏழைநெஞ் சேஇவ் விடும்பையிலே செருக்கா துருகிச் சிவாய நமஎனத் தேர்ந்தன்பினால் ஒருக்கால் உரைக்கில் பெருக்காகும் நல்லின்பம் ஓங்கிடுமே.
marukkA malarkkuzhal minnAr mayalchaNTa mArutattAl irukkA tuzhalumen Ezhainenj chEiv viTumpaiyilE cherukkA turukich chivAya namaenat tErntanpinAl orukkAl uraikkil perukkAkum nallinpam OngkiTumE.
மதிக்கண்ணி வேணிப் பெருந்தகை யேநின் மலரடிக்குத் துதிக்கண்ணி சூட்டுமெய்த் தொண்டரில் சேர்ந்துநின் தூயஒற்றிப் பதிக்கண்ணி நின்னைப் பணிந்தேத்தி உள்ளம் பரவசமாக் கதிக்கண்ணி வாழும் படிஅரு ளாயென் கருத்திதுவே.
matikkaNNi vENip peruntakai yEnin malaraTikkut tutikkaNNi chUTTumeyt toNTaril chErntunin tUyaoRRip patikkaNNi ninnaip paNintEtti uLLam paravachamAk katikkaNNi vAzhum paTiaru LAyen karuttituvE.
இரையேற்று துன்பக் குடும்ப விகார இருட்கடலில் புரையேற்று நெஞ்சம் புலர்ந்துநின் றேனைப் பொருட்படுத்திக் கரையேற்ற வேண்டுமென் கண்ணே பவத்தைக் கடிமருந்தே திரையேற்று செஞ்சடைத் தேவே அமரர் சிகாமணியே.
iraiyERRu tunpak kuTumpa vikAra iruTkaTalil puraiyERRu nenjcham pularntunin REnaip poruTpaTuttik karaiyERRa vENTumen kaNNE pavattaik kaTimaruntE tiraiyERRu chenjchaTait tEvE amarar chikAmaNiyE.
