
திருவருட்பா · 8இங்கித மாலை
உயிரு ளுறைவீர் திருவொற்றி யுடையீர் நீரென் மேற்பிடித்த வயிர மதனை விடுமென்றேன் வயிரி யலநீ மாதேயாஞ் செயிர தகற்றுன் முலையிடங்கொள் செல்வ னலகாண் டெளியென்றே யியல்கொண் முறுவல் புரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
uyiru LuRaivIr tiruvoRRi yuTaiyIr nIren mERpiTitta vayira matanai viTumenREn vayiri yalanI mAtEyAnj cheyira takaRRun mulaiyiTangkoL chelva nalakAN TeLiyenRE yiyalkoN muRuval purikinRA ritutAn chETi yennETI.
தண்கா வளஞ்சூழ் திருவொற்றித் தலத்தி லமர்ந்த சாமிநுங்கை யெண்கார் முகமாப் பொன் னென்றே னிடையிட் டறித லரிதென்றார் மண்கா தலிக்கு மாடென்றேன் மதிக்குங் கணைவி லன்றென்றே யெண்கா ணகைசெய் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
taNkA vaLanjchUzh tiruvoRRit talatti lamarnta chAminungkai yeNkAr mukamAp pon nenRE niTaiyiT TaRita laritenRAr maNkA talikku mATenREn matikkung kaNaivi lanRenRE yeNkA Nakaichey taruLkinRA ritutAn chETi yennETI.
செய்காண் வளஞ்சூ ழொற்றியுளீர் திருமான் முதன்முத் தேவர்கட்கு மைகாணீரென் றேனிதன்மே லணங்கே நீயே ழடைதி யென்றார் மெய்கா ணதுதா னென்னென்றேன் விளங்குஞ் சுட்டுப் பெயரென்றே யெய்கா ணுறவே நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
cheykAN vaLanjchU zhoRRiyuLIr tirumAn mutanmut tEvarkaTku maikANIren REnitanmE laNangkE nIyE zhaTaiti yenRAr meykA NatutA nennenREn viLangkunj chuTTup peyarenRE yeykA NuRavE nakaikkinRA ritutAn chETi yennETI.
விண்டு வணங்கு மொற்றியுளீர் மென்பூ விருந்தும் வன்பூவில் வண்டு விழுந்த தென்றேனெம் மலர்க்கை வண்டும் விழுந்ததென்றார் தொண்டர்க் கருள்வீர் மிகவென்றேன் றோகாய் நாமே தொண்டனென வெண்டங் குறவே நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
viNTu vaNangku moRRiyuLIr menpU viruntum vanpUvil vaNTu vizhunta tenREnem malarkkai vaNTum vizhuntatenRAr toNTark karuLvIr mikavenREn ROkAy nAmE toNTanena veNTang kuRavE nakaikkinRA ritutAn chETi yennETI.
மட்டார் மலர்க்கா வொற்றியுளீர் மதிக்குங் கலைமேல் விழுமென்றே னெட்டா மெழுத்தை யெடுத்ததுநா மிசைத்தே மென்றா ரெட்டாக வுட்டா வுறுமவ் வெழுத்தறிய வுரைப்பீ ரென்றே னந்தணரூர்க் கிட்டார் நாம மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
maTTAr malarkkA voRRiyuLIr matikkung kalaimEl vizhumenRE neTTA mezhuttai yeTuttatunA michaittE menRA reTTAka vuTTA vuRumav vezhuttaRiya vuraippI renRE nantaNarUrk kiTTAr nAma menkinRA ritutAn chETi yennETI.
ஒற்றி நகரீர் மனவசிதா னுடையார்க் கருள்வீர் நீரென்றேன் பற்றி யிறுதி தொடங்கியது பயிலு மவர்க்கே யருள்வதென்றார் மற்றி துணர்கி லேனென்றேன் வருந்தே லுள்ள வன்மையெலா மெற்றி லுணர்தி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
oRRi nakarIr manavachitA nuTaiyArk karuLvIr nIrenREn paRRi yiRuti toTangkiyatu payilu mavarkkE yaruLvatenRAr maRRi tuNarki lEnenREn varuntE luLLa vanmaiyelA meRRi luNarti yenkinRA ritutAn chETi yennETI.
வான்றோய் பொழில்சூ ழொற்றியுளீர் வருந்தா தணைவே னோவென்றே னூன்றோ யுடற்கென் றார்தெரிய வுரைப்பீ ரென்றே னோவிதுதான் சான்றோ ருமது மரபோர்ந்து தரித்த பெயர்க்குத் தகாதென்றே யேன்றோர் மொழிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
vAnROy pozhilchU zhoRRiyuLIr varuntA taNaivE nOvenRE nUnRO yuTaRken RArteriya vuraippI renRE nOvitutAn chAnRO rumatu marapOrntu taritta peyarkkut takAtenRE yEnROr mozhitan taruLkinRA ritutAn chETi yennETI.
தீது தவிர்க்கு மொற்றியுளீர் செல்ல லறுப்ப தென்றென்றே னீது நமக்குத் தெரிந்ததென்றா ரிறையா மோவிங் கிதுவென்றே னோது மடியார் மனக்கங்கு லோட்டு நாமே யுணரன்றி யேது மிறையன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
tItu tavirkku moRRiyuLIr chella laRuppa tenRenRE nItu namakkut terintatenRA riRaiyA mOving kituvenRE nOtu maTiyAr manakkangku lOTTu nAmE yuNaranRi yEtu miRaiyan RenkinRA ritutAn chETi yennETI.
ஒண்கை மழுவோ டனலுடையீ ரொற்றி நகர்வா ழுத்தமர்நீர் வண்கை யொருமை நாதரென்றேன் வண்கைப் பன்மை நாதரென்றா ரெண்கணடங்கா வதிசயங்கா ணென்றேன் பொருளன் றிவையதற்கென் றெண்சொன் மணிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
oNkai mazhuvO TanaluTaiyI roRRi nakarvA zhuttamarnIr vaNkai yorumai nAtarenREn vaNkaip panmai nAtarenRA reNkaNaTangkA vatichayangkA NenREn poruLan RivaiyataRken ReNchon maNitan taruLkinRA ritutAn chETi yennETI.
ஒருவ ரெனவா ழொற்றியுளீ ருமக்கம் மனையுண் டோவென்றே னிருவ ரொருபே ருடையவர்கா ணென்றா ரென்னென்றே னெம்பேர் மருவு மீறற் றயலகரம் வயங்கு மிகர மானதென்றே யிருவு மொழிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
oruva renavA zhoRRiyuLI rumakkam manaiyuN TOvenRE niruva rorupE ruTaiyavarkA NenRA rennenRE nempEr maruvu mIRaR Rayalakaram vayangku mikara mAnatenRE yiruvu mozhitan taruLkinRA ritutAn chETi yennETI.
பேரா ரொற்றி யீரும்பைப் பெற்றா ரெவரென் றேனவர்தம் மேரார் பெயரின் முன்பினிரண் டிரண்டா மெழுத்தா ரென்றாரென் னேரா யுரைப்பீ ரென்றேனீ நெஞ்ச நெகிழ்ந்தா லுரைப்பாமென் றேரா யுரைசெய் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
pErA roRRi yIrumpaip peRRA revaren REnavartam mErAr peyarin munpiniraN TiraNTA mezhuttA renRAren nErA yuraippI renREnI nenjcha nekizhntA luraippAmen RErA yuraichey taruLkinRA ritutAn chETi yennETI.
தளிநான் மறையீ ரொற்றிநகர் தழைக்க வாழ்வீர் தனிஞான வொளி நா வரசை யைந்தெழுத்தா லுவரி கடத்தி னீரென்றேன் களிநா வலனை யீரெழுத்தாற் கடலின் வீழ்த்தி னேமென்றே யெளியேற் குவப்பின் மொழிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
taLinAn maRaiyI roRRinakar tazhaikka vAzhvIr taninjAna voLi nA varachai yaintezhuttA luvari kaTatti nIrenREn kaLinA valanai yIrezhuttAR kaTalin vIzhtti nEmenRE yeLiyER kuvappin mozhikinRA ritutAn chETi yennETI.
ஓமூன் றுளத்தீ ரொற்றியுளீ ருற்றோர்க் களிப்பீ ரோவென்றேன் றாமூன் றென்பார்க் கயன்மூன்றுந் தருவே மென்றா ரம்மமிகத் தேமூன் றினநும் மொழியென்றேன் செவ்வா யுறுமுன் னகையென்றே யேமூன் றுறவே நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
OmUn RuLattI roRRiyuLI ruRROrk kaLippI rOvenREn RAmUn RenpArk kayanmUnRun taruvE menRA rammamikat tEmUn Rinanum mozhiyenREn chevvA yuRumun nakaiyenRE yEmUn RuRavE nakaikkinRA ritutAn chETi yennETI.
மன்னி விளங்கு மொற்றியுளீர் மடவா ரிரக்கும் வகையதுதான் முன்னி லொருதா வாமென்றேன் முத்தா வெனலே முறையென்றா ரென்னி லிதுதா னையமென்றே னெமக்குந் தெரியு மெனத்திருவா யின்ன லமுத முகுக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
manni viLangku moRRiyuLIr maTavA rirakkum vakaiyatutAn munni lorutA vAmenREn muttA venalE muRaiyenRA renni litutA naiyamenRE nemakkun teriyu menattiruvA yinna lamuta mukukkinRA ritutAn chETi yennETI.
வளஞ்சே ரொற்றி யீரெனக்கு மாலை யணிவீ ரோவென்றேன் குளஞ்சேர் மொழிப்பெண் பாவாய்நின் கோலமனைக்க ணாமகிழ்வா லுளஞ்சேர்ந் தடைந்த போதேநின் னுளத்தி லணிந்தே முணரென்றே யிளஞ்சீர் நகைசெய் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
vaLanjchE roRRi yIrenakku mAlai yaNivI rOvenREn kuLanjchEr mozhippeN pAvAynin kOlamanaikka NAmakizhvA luLanjchErn taTainta pOtEnin nuLatti laNintE muNarenRE yiLanjchIr nakaichey taruLkinRA ritutAn chETi yennETI.
வீற்றா ரொற்றி நகரமர்ந்தீர் விளங்கு மலரே விளம்புநெடு மாற்றா ரென்றே னிலைகாணெம் மாலை முடிமேற் பாரென்றார் சாற்றாச் சலமே யீதென்றேன் சடையின் முடிமே லன்றென்றே யேற்றா தரவான் மொழிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
vIRRA roRRi nakaramarntIr viLangku malarE viLampuneTu mARRA renRE nilaikANem mAlai muTimER pArenRAr chARRAch chalamE yItenREn chaTaiyin muTimE lanRenRE yERRA taravAn mozhikinRA ritutAn chETi yennETI.
புயப்பா லொற்றி யீரச்சம் போமோ வென்றே னாமென்றார் வயப்பா வலருக் கிறையானீர் வஞ்சிப் பாவிங் குரைத்ததென்றேன் வியப்பா நகையப் பாவெனும்பா வெண்பா கலிப்பா வுரைத்துமென்றே யியற்பான் மொழிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
puyappA loRRi yIrachcham pOmO venRE nAmenRAr vayappA valaruk kiRaiyAnIr vanjchip pAving kuraittatenREn viyappA nakaiyap pAvenumpA veNpA kalippA vuraittumenRE yiyaRpAn mozhitan taruLkinRA ritutAn chETi yennETI.
தண்ணம் பொழில்சூ ழொற்றியுளீர் சங்கங் கையிற்சேர்த் திடுமென்றேன் றிண்ணம் பலமேல் வருங்கையிற் சேர்த்தோ முன்னர் தெரியென்றார் வண்ணம் பலவிம் மொழிக்கென்றேன் மடவா யுனது மொழிக்கென்றே யெண்ணங் கொளநின் றுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
taNNam pozhilchU zhoRRiyuLIr changkang kaiyiRchErt tiTumenREn RiNNam palamEl varungkaiyiR chErttO munnar teriyenRAr vaNNam palavim mozhikkenREn maTavA yunatu mozhikkenRE yeNNang koLanin RuraikkinRA ritutAn chETi yennETI.
உகஞ்சே ரொற்றி யூருடையீ ரொருமா தவரோ நீரென்றேன் முகஞ்சேர் வடிவே லிரண்டுடையாய் மும்மா தவர்நா மென்றுரைத்தார் சுகஞ்சேர்ந் திடுநும் மொழிக்கென்றேன் றோகா யுனது மொழிக்கென்றே யிகஞ்சேர் நயப்பா லுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
ukanjchE roRRi yUruTaiyI rorumA tavarO nIrenREn mukanjchEr vaTivE liraNTuTaiyAy mummA tavarnA menRuraittAr chukanjchErn tiTunum mozhikkenREn ROkA yunatu mozhikkenRE yikanjchEr nayappA luraikkinRA ritutAn chETi yennETI.
ஊரா மொற்றி யீராசை யுடையே னென்றே னெமக்கலது நேரா வழக்குத் தொடுக்கின்றாய் நினக்கே தென்றார் நீரெனக்குச் சேரா வணமீ தென்றேன்முன் சேர்த்தீ தெழுதித் தந்தவர்தாம் யாரார் மடவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
UrA moRRi yIrAchai yuTaiyE nenRE nemakkalatu nErA vazhakkut toTukkinRAy ninakkE tenRAr nIrenakkuch chErA vaNamI tenREnmun chErttI tezhutit tantavartAm yArAr maTavA yenkinRA ritutAn chETi yennETI.
வருத்தந் தவிரீ ரொற்றியுளீர் மனத்தி லகாத முண்டென்றே னிருத்தந் தொழுநம் மடியவரை நினைக்கின் றோரைக் காணினது வுருத்தன் பெயர்முன் னெழுத்திலக்க முற்றே மற்ற வெல்லையகன் றிருத்த லறியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
varuttan tavirI roRRiyuLIr manatti lakAta muNTenRE niruttan tozhunam maTiyavarai ninaikkin ROraik kANinatu vuruttan peyarmun nezhuttilakka muRRE maRRa vellaiyakan Rirutta laRiyA yenkinRA ritutAn chETi yennETI.
மைய லகற்றீ ரொற்றியுளீர் வாவென் றுரைப்பீ ரோவென்றேன் செய்ய வதன்மேற் சிகரம்வைத்துச் செவ்வ னுரைத்தா லிருவாவென் றுய்ய வுரைப்பே மென்றார்நும் முரையென் னுரையென் றேனிங்கே யெய்யுன் னுரையை யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
maiya lakaRRI roRRiyuLIr vAven RuraippI rOvenREn cheyya vatanmER chikaramvaittuch chevva nuraittA liruvAven Ruyya vuraippE menRArnum muraiyen nuraiyen REningkE yeyyun nuraiyai yenkinRA ritutAn chETi yennETI.
தாவென் றருளு மொற்றியுளீர் தமியேன் மோக தாகமற வாவென் றருள்வீ ரென்றேனவ் வாவின் பின்னர் வருமெழுத்தை மேவென் றதனிற் சேர்த்ததிங்கே மேவி னன்றோ வாவென்பே னேவென் றிடுகண் ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
tAven RaruLu moRRiyuLIr tamiyEn mOka tAkamaRa vAven RaruLvI renREnav vAvin pinnar varumezhuttai mEven RataniR chErttatingkE mEvi nanRO vAvenpE nEven RiTukaN NenkinRA ritutAn chETi yennETI.
என்மே லருள்கூர்ந் தொற்றியுளீ ரென்னை யணைவா னினைவீரேற் பொன்மேல் வெள்ளி யாமென்றேன் பொன்மேற் பச்சை யாங்கதன்மே லன்மேற் குழலாய் சேயதன்மே லலவ னதன்மேன் ஞாயிறஃ தின்மே லொன்றின் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
enmE laruLkUrn toRRiyuLI rennai yaNaivA ninaivIrER ponmEl veLLi yAmenREn ponmER pachchai yAngkatanmE lanmER kuzhalAy chEyatanmE lalava natanmEn njAyiRaஃ tinmE lonRin RenkinRA ritutAn chETi yennETI.
வயலா ரொற்றி மேவுபிடி வாதர் நாம மியாதென்றேன் மயலா யிடுமிப் பெயர்ப்பின்னர் வந்த விளைய நாமமென்றார் செயலார் கால மறிந்தென்னைச் சேர்வீ ரென்றேன் சிரித்துனக்கிங் கியலா ரயலா ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
vayalA roRRi mEvupiTi vAtar nAma miyAtenREn mayalA yiTumip peyarppinnar vanta viLaiya nAmamenRAr cheyalAr kAla maRintennaich chErvI renREn chirittunakking kiyalA rayalA renkinRA ritutAn chETi yennETI.
நாலா ரணஞ்சூ ழொற்றியுளீர் நாகம் வாங்க லென்னென்றேன் காலாங் கிரண்டிற் கட்டவென்றார் கலைத்தோல் வல்லீர் நீரென்றேன் வேலார் விழிமாப் புலித்தோலும் வேழத் தோலும் வல்லேமென் றேலா வமுத முகுக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
nAlA raNanjchU zhoRRiyuLIr nAkam vAngka lennenREn kAlAng kiraNTiR kaTTavenRAr kalaittOl vallIr nIrenREn vElAr vizhimAp pulittOlum vEzhat tOlum vallEmen RElA vamuta mukukkinRA ritutAn chETi yennETI.
முடியா வளஞ்சூ ழொற்றியுளீர் முடிமே லிருந்த தென்னென்றேன் கடியா வுள்ளங் கையின்முதலைக் கடிந்த தென்றார் கமலமென வடிவார் கரத்தி லென்னென்றேன் வரைந்த வதனீ றகன்றதென்றே யிடியா நயத்தி னகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
muTiyA vaLanjchU zhoRRiyuLIr muTimE lirunta tennenREn kaTiyA vuLLang kaiyinmutalaik kaTinta tenRAr kamalamena vaTivAr karatti lennenREn varainta vatanI RakanRatenRE yiTiyA nayatti nakaikkinRA ritutAn chETi yennETI.
ஒன்றும் பெருஞ்சீ ரொற்றிநக ருடையீர் யார்க்கு முணர்வரியீ ரென்றும் பெரியீர் நீர்வருதற் கென்ன நிமித்த மென்றேன்யான் றுன்றும் விசும்பே காணென்றார் சூதா முமது சொல்லென்றே னின்றுன் முலைதா னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
onRum perunjchI roRRinaka ruTaiyIr yArkku muNarvariyI renRum periyIr nIrvarutaR kenna nimitta menREnyAn RunRum vichumpE kANenRAr chUtA mumatu chollenRE ninRun mulaitA nenkinRA ritutAn chETi yennETI.
வானார் வணங்கு மொற்றியுளீர் மதிவாழ் சடையீர் மரபிடைநீர் தானா ரென்றே னனிப்பள்ளித் தலைவ ரெனவே சாற்றினர்கா ணானா லொற்றி யிருமென்றே னாண்டே யிருந்து வந்தனஞ்சே யீனா தவ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
vAnAr vaNangku moRRiyuLIr mativAzh chaTaiyIr marapiTainIr tAnA renRE nanippaLLit talaiva renavE chARRinarkA NAnA loRRi yirumenRE nANTE yiruntu vantananjchE yInA tava yenkinRA ritutAn chETi yennETI.
பற்று முடித்தோர் புகழொற்றிப் பதியீர் நுமது பசுவினிடைக் கற்று முடித்த தென்னிருகைக் கன்று முழுதுங் காணென்றேன் மற்று முடித்த மாலையொடுன் மருங்குற் கலையுங் கற்றுமுடிந் திற்று முடித்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
paRRu muTittOr pukazhoRRip patiyIr numatu pachuviniTaik kaRRu muTitta tennirukaik kanRu muzhutung kANenREn maRRu muTitta mAlaiyoTun marungkuR kalaiyung kaRRumuTin tiRRu muTitta tenkinRA ritutAn chETi yennETI.
வானங் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீ ரன்று வந்தெனது மானங் கெடுத்தீ ரென்றுரைத்தேன் மாநன் றிஃதுன் மானன்றே யூனங் கலிக்குந் தவர்விட்டா ருலக மறியுங் கேட்டறிந்தே யீனந் தவிர்ப்பா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
vAnang koTuppIr tiruvoRRi vAzhvI ranRu vantenatu mAnang keTuttI renRuraittEn mAnan Riஃtun mAnanRE yUnang kalikkun tavarviTTA rulaka maRiyung kETTaRintE yInan tavirppA yenkinRA ritutAn chETi yennETI.
ஞானம் படைத்த யோகியர்வாழ் நகரா மொற்றி நலத்தீர்மா லேனம் புடைத்தீ ரணையென்பீ ரென்னை யுவந்திப் பொழுதென்றே னூனந் தவிர்த்த மலர்வாயி னுள்ளே நகைசெய் திஃதுரைக்கே மீனம் புகன்றா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
njAnam paTaitta yOkiyarvAzh nakarA moRRi nalattIrmA lEnam puTaittI raNaiyenpI rennai yuvantip pozhutenRE nUnan tavirtta malarvAyi nuLLE nakaichey tiஃturaikkE mInam pukanRA yenkinRA ritutAn chETi yennETI.
கருமை யளவும் பொழிலொற்றிக் கணத்தீர் முனிவர் கலக்கமறப் பெருமை நடத்தி னீரென்றேன் பிள்ளை நடத்தி னானென்றார் தரும மலவிவ் விடையென்றேன் றரும விடையு முண்டென்பா லிருமை விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
karumai yaLavum pozhiloRRik kaNattIr munivar kalakkamaRap perumai naTatti nIrenREn piLLai naTatti nAnenRAr taruma malaviv viTaiyenREn Raruma viTaiyu muNTenpA lirumai vizhiyA yenkinRA ritutAn chETi yennETI.
ஒசிய விடுகு மிடையாரை யொற்றி யிருந்தே மயக்குகின்ற வசியர் மிகநீ ரென்றேனெம் மகன்கா ணென்றார் வளர்காமப் பசிய தொடையுற் றேனென்றேன் பட்ட மவிழ்த்துக் காட்டுதியே லிசையக் காண்பே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
ochiya viTuku miTaiyArai yoRRi yiruntE mayakkukinRa vachiyar mikanI renREnem makankA NenRAr vaLarkAmap pachiya toTaiyuR REnenREn paTTa mavizhttuk kATTutiyE lichaiyak kANpE menkinRA ritutAn chETi yennETI.
கலையா ளுடையீ ரொற்றிநின்றீர் காம மளித்தீர் களித்தணைவீர் மலையா ளுமது மனையென்றேன் மருவின் மலையா ளல்லளென்றா ரலையாண் மற்றை யவளென்றே னறியி னலையா ளல்லளுனை யிலையா மணைவ தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
kalaiyA LuTaiyI roRRininRIr kAma maLittIr kaLittaNaivIr malaiyA Lumatu manaiyenREn maruvin malaiyA LallaLenRA ralaiyAN maRRai yavaLenRE naRiyi nalaiyA LallaLunai yilaiyA maNaiva tenkinRA ritutAn chETi yennETI.
சீலம் படைத்தீர் திருவொற்றித் தியாக ரேநீர் திண்மையிலோர் சூலம் படைத்தீ ரென்னென்றேன் றோன்று முலகுய்ந் திடவென்றா ராலங் களத்தீ ரென்றேனீ யாலம் வயிற்றா யன்றோநல் லேலங் குழலா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
chIlam paTaittIr tiruvoRRit tiyAka rEnIr tiNmaiyilOr chUlam paTaittI rennenREn ROnRu mulakuyn tiTavenRA rAlang kaLattI renREnI yAlam vayiRRA yanROnal lElang kuzhalA yenkinRA ritutAn chETi yennETI.
ஞால நிகழும் புகழொற்றி நடத்தீர் நீர்தா னாட்டமுறும் பால ரலவோ வென்றேனைம் பாலர் பாலைப் பருவத்திற் சால மயல்கொண் டிடவருமோர் தனிமைப் பால ரியாமென்றே யேல முறுவல் புரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
njAla nikazhum pukazhoRRi naTattIr nIrtA nATTamuRum pAla ralavO venREnaim pAlar pAlaip paruvattiR chAla mayalkoN TiTavarumOr tanimaip pAla riyAmenRE yEla muRuval purikinRA ritutAn chETi yennETI.
வண்மை தருவீ ரொற்றிநகர் வாழ்வீ ரென்னை மருவீரென் னுண்மை யறியீ ரென்றேன்யா முணர்ந்தே யகல நின்றதென்றார் கண்மை யிலரோ நீரென்றேன் களமை யுடையேங் கண்மையுற லெண்மை நீயே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
vaNmai taruvI roRRinakar vAzhvI rennai maruvIren nuNmai yaRiyI renREnyA muNarntE yakala ninRatenRAr kaNmai yilarO nIrenREn kaLamai yuTaiyEng kaNmaiyuRa leNmai nIyE yenkinRA ritutAn chETi yennETI.
தவந்தங் கியசீ ரொற்றிநகர் தனைப்போ னினைத்தென் மனையடைந்தீ ருவந்தென் மீதிற் றேவர்திரு வுள்ளந் திரும்பிற் றோவென்றேன் சிவந்தங் கிடநின் னுள்ளமெம்மேற் றிரும்பிற் றதனைத் தேர்ந்தன்றே யிவர்ந்திங் கணைந்தா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
tavantang kiyachI roRRinakar tanaippO ninaitten manaiyaTaintI ruvanten mItiR REvartiru vuLLan tirumpiR ROvenREn chivantang kiTanin nuLLamemmER RirumpiR Ratanait tErntanRE yivarnting kaNaintA menkinRA ritutAn chETi yennETI.
ஒன்னார் புரமூன் றெரிசெய்தீ ரொற்றி யுடையீ ரும்முடைய பொன்னார் சடைமேல் வெள்ளெருக்கம் பூவை மிலைந்தீ ரென்னென்றே னின்னா ரளகத் தணங்கேநீ நெட்டி மிலைந்தா யிதிலதுகீ ழென்னா ருலக ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
onnAr puramUn RericheytI roRRi yuTaiyI rummuTaiya ponnAr chaTaimEl veLLerukkam pUvai milaintI rennenRE ninnA raLakat taNangkEnI neTTi milaintA yitilatukI zhennA rulaka renkinRA ritutAn chETi yennETI.
கனிமா னிதழி முலைச்சுவடு களித்தீ ரொற்றிக் காதலர்நீர் தனிமா னேந்தி யாமென்றேன் றடங்கண் மடந்தாய் நின்முகமும் பனிமா னேந்தி யாமென்றார் பரைமான் மருவி னீரென்றே னினிமான் மருவி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
kanimA nitazhi mulaichchuvaTu kaLittI roRRik kAtalarnIr tanimA nEnti yAmenREn RaTangkaN maTantAy ninmukamum panimA nEnti yAmenRAr paraimAn maruvi nIrenRE ninimAn maruvi yenkinRA ritutAn chETi yennETI.
சிறியேன் றவமோ வெனைப்பெற்றார் செய்த தவமோ வீண்டடைந்தீ ரறியே னொற்றி யடிகேளிங் கடைந்த வாறென் னினைத்தென்றேன் பொறிநே ருனது பொற்கலையைப் பூவார் கலையாக் குறநினைத்தே யெறிவேல் விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
chiRiyEn RavamO venaippeRRAr cheyta tavamO vINTaTaintI raRiyE noRRi yaTikELing kaTainta vARen ninaittenREn poRinE runatu poRkalaiyaip pUvAr kalaiyAk kuRaninaittE yeRivEl vizhiyA yenkinRA ritutAn chETi yennETI.
அளிக்குங் குணத்தீர் திருவொற்றி யழக ரேநீ ரணிவேணி வெளிக்கொண் முடிமே லணிந்ததுதான் விளியா விளம்பத் திரமென்றேன் விளிக்கு மிளம்பத் திரமுமுடி மேலே மிலைந்தாம் விளங்கிழைநீ யெளிக்கொண் டுரையே லென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
aLikkung kuNattIr tiruvoRRi yazhaka rEnI raNivENi veLikkoN muTimE laNintatutAn viLiyA viLampat tiramenREn viLikku miLampat tiramumuTi mElE milaintAm viLangkizhainI yeLikkoN TuraiyE lenkinRA ritutAn chETi yennETI.
வாசங் கமழு மலர்ப்பூங்கா வனஞ்சூ ழொற்றி மாநகரீர் நேசங் குறிப்ப தென்னென்றே னீயோ நாமோ வுரையென்றார் தேசம் புகழ்வீர் யானென்றேன் றிகழ்தைத் திரிதித் திரியேயா மேசங் குறிப்ப தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
vAchang kamazhu malarppUngkA vananjchU zhoRRi mAnakarIr nEchang kuRippa tennenRE nIyO nAmO vuraiyenRAr tEcham pukazhvIr yAnenREn Rikazhtait tiritit tiriyEyA mEchang kuRippa tenkinRA ritutAn chETi yennETI.
பேசுங் கமலப் பெண்புகழும் பெண்மை யுடைய பெண்களெலாங் கூசும் படியிப் படியொற்றிக் கோவே வந்த தென்னென்றேன் மாசுந் தரிநீ யிப்படிக்கு மயங்கும் படிக்கு மாதருனை யேசும் படிக்கு மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
pEchung kamalap peNpukazhum peNmai yuTaiya peNkaLelAng kUchum paTiyip paTiyoRRik kOvE vanta tennenREn mAchun tarinI yippaTikku mayangkum paTikku mAtarunai yEchum paTikku menkinRA ritutAn chETi yennETI.
கொடியா லெயில்சூ ழொற்றியிடங் கொண்டீ ரடிகள் குருவுருவாம் படியா லடியி லிருந்தமறைப் பண்பை யுரைப்பீ ரென்றேனின் மடியா லடியி லிருந்தமறை மாண்பை வகுத்தா யெனிலதுநா மிடியா துரைப்பே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
koTiyA leyilchU zhoRRiyiTang koNTI raTikaL kuruvuruvAm paTiyA laTiyi liruntamaRaip paNpai yuraippI renREnin maTiyA laTiyi liruntamaRai mANpai vakuttA yenilatunA miTiyA turaippE menkinRA ritutAn chETi yennETI.
என்னே ருளத்தி னமர்ந்தீர்நல் லெழிலா ரொற்றி யிடையிருந்தீ ரென்னே யடிகள் பலியேற்ற லேழ்மை யுடையீர் போலுமென்றே னின்னே கடலி னிடைநீபத் தேழ்மை யுடையாய் போலுமென வின்னே யங்கொண் டுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
ennE ruLatti namarntIrnal lezhilA roRRi yiTaiyiruntI rennE yaTikaL paliyERRa lEzhmai yuTaiyIr pOlumenRE ninnE kaTali niTainIpat tEzhmai yuTaiyAy pOlumena vinnE yangkoN TuraikkinRA ritutAn chETi yennETI.
நல்லார் மதிக்கு மொற்றியுளீர் நண்ணு முயிர்க டொறுநின்றீ ரெல்லா மறிவீ ரென்னுடைய விச்சை யறியீர் போலுமென்றேன் வல்லா யறிவின் மட்டொன்று மனமட் டொன்று வாய்மட்டொன் றெல்லா மறிந்தே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
nallAr matikku moRRiyuLIr naNNu muyirka ToRuninRI rellA maRivI rennuTaiya vichchai yaRiyIr pOlumenREn vallA yaRivin maTTonRu manamaT TonRu vAymaTTon RellA maRintE menkinRA ritutAn chETi yennETI.
மறிநீர்ச் சடையீர் சித்தெல்லாம் வல்லீ ரொற்றி மாநகரீர் பொறிசே ருமது புகழ்பலவிற் பொருந்துங் குணமே வேண்டுமென்றேன் குறிநே ரெமது விற்குணத்தின் குணத்தா யதனால் வேண்டுற்றா யெறிவேல் விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
maRinIrch chaTaiyIr chittellAm vallI roRRi mAnakarIr poRichE rumatu pukazhpalaviR poruntung kuNamE vENTumenREn kuRinE rematu viRkuNattin kuNattA yatanAl vENTuRRA yeRivEl vizhiyA yenkinRA ritutAn chETi yennETI.
ஊரூ ரிருப்பீ ரொற்றிவைத்தீ ரூர்தான் வேறுண் டோவென்றே னோரூர் வழக்கிற் கரியையிறை யுன்னி வினவு மூரொன்றோ பேரூர் தினையூர் பெரும்புலியூர் பிடவூர் கடவூர் முதலாக வேரூ ரனந்த மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
UrU riruppI roRRivaittI rUrtAn vERuN TOvenRE nOrUr vazhakkiR kariyaiyiRai yunni vinavu mUronRO pErUr tinaiyUr perumpuliyUr piTavUr kaTavUr mutalAka vErU rananta menkinRA ritutAn chETi yennETI.
விழியொண் ணுதலீ ரொற்றியுளீர் வேதம் பிறவி யிலரென்றே மொழியு நுமைத்தான் வேயீன்ற முத்த ரெனலிங் கென்னென்றேன் பழியன் றணங்கே யவ்வேய்க்குப் படுமுத் தொருவித் தன்றதனா லிழியும் பிறப்போ வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
vizhiyoN NutalI roRRiyuLIr vEtam piRavi yilarenRE mozhiyu numaittAn vEyInRa mutta renaling kennenREn pazhiyan RaNangkE yavvEykkup paTumut toruvit tanRatanA lizhiyum piRappO venkinRA ritutAn chETi yennETI.
விண்ணார் பொழில்சூ ழொற்றியுளீர் விளங்குந் தாம மிகுவாசத் தண்ணார் மலர்வே தனையொழிக்கத் தருதல் வேண்டு மெனக்கென்றேன் பண்ணார் மொழியா யுபகாரம் பண்ணாப் பகைவ ரேனுமிதை யெண்ணா ரெண்ணா ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
viNNAr pozhilchU zhoRRiyuLIr viLangkun tAma mikuvAchat taNNAr malarvE tanaiyozhikkat tarutal vENTu menakkenREn paNNAr mozhiyA yupakAram paNNAp pakaiva rEnumitai yeNNA reNNA renkinRA ritutAn chETi yennETI.
செம்பான் மொழியார் முன்னரெனைச் சேர்வீரென்கோ திருவொற்றி யம்பார் சடையீ ருமதாட லறியே னருளல் வேண்டுமென்றேன் வம்பார் முலையாய் காட்டுகின்றா மன்னும் பொன்னா ரம்பலத்தே யெம்பால் வாவென் றுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
chempAn mozhiyAr munnarenaich chErvIrenkO tiruvoRRi yampAr chaTaiyI rumatATa laRiyE naruLal vENTumenREn vampAr mulaiyAy kATTukinRA mannum ponnA rampalattE yempAl vAven RuraikkinRA ritutAn chETi yennETI.
மைக்கொண் மிடற்றீ ரூரொற்றி வைத்தீ ருண்டோ மனையென்றேன் கைக்க ணிறைந்த தனத்தினுந்தந் கண்ணி னிறைந்த கணவனையே துய்க்கு மடவார் விழைவரெனச் சொல்லும் வழக்கீ தறிந்திலையோ வெய்க்கு மிடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
maikkoN miTaRRI rUroRRi vaittI ruNTO manaiyenREn kaikka NiRainta tanattinuntan kaNNi niRainta kaNavanaiyE tuykku maTavAr vizhaivarenach chollum vazhakkI taRintilaiyO veykku miTaiyA yenkinRA ritutAn chETi yennETI.
ஆறு முகத்தார் தமையீன்ற வைந்து முகத்தா ரிவர்தமைநான் மாறு முகத்தார் போலொற்றி வைத்தீர் பதியை யென்னென்றே னாறு மலர்ப்பூங் குழனீயோ நாமோ வைத்த துன்மொழிமன் றேறு மொழியன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
ARu mukattAr tamaiyInRa vaintu mukattA rivartamainAn mARu mukattAr pOloRRi vaittIr patiyai yennenRE nARu malarppUng kuzhanIyO nAmO vaitta tunmozhiman RERu mozhiyan RenkinRA ritutAn chETi yennETI.
வள்ளன் மதியோர் புகழொற்றி வள்ளா லுமது மணிச்சடையின் வெள்ள மகண்மேற் பிள்ளைமதி விளங்க லழகீ தென்றேனின் னுள்ள முகத்தும் பிள்ளைமதி யொளிகொண் முகத்தும் பிள்ளைமதி யெள்ள லுடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
vaLLan matiyOr pukazhoRRi vaLLA lumatu maNichchaTaiyin veLLa makaNmER piLLaimati viLangka lazhakI tenREnin nuLLa mukattum piLLaimati yoLikoN mukattum piLLaimati yeLLa luTaiyA yenkinRA ritutAn chETi yennETI.
உள்ளத் தனையே போலன்ப ருவக்குந் திருவா ழொற்றியுளீர் கள்ளத் தவர்போ லிவணிற்குங் கரும மென்னீ ரின்றென்றேன் மெள்ளக் கரவு செயவோநாம் வேட மெடுத்தோ நின்சொனினை யெள்ளப் புரிந்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
uLLat tanaiyE pOlanpa ruvakkun tiruvA zhoRRiyuLIr kaLLat tavarpO livaNiRkung karuma mennI rinRenREn meLLak karavu cheyavOnAm vETa meTuttO ninchoninai yeLLap purinta tenkinRA ritutAn chETi yennETI.
அச்சை யடுக்குந் திருவொற்றி யவர்க்கோர் பிச்சை கொடுமென்றேன் விச்சை யடுக்கும் படிநம்பான் மேவினோர்க்கிவ் வகில நடைப் பிச்சை யெடுப்பே மலதுன்போற் பிச்சை கொடுப்பே மலவென்றே யிச்சை யெடுப்பா யுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
achchai yaTukkun tiruvoRRi yavarkkOr pichchai koTumenREn vichchai yaTukkum paTinampAn mEvinOrkkiv vakila naTaip pichchai yeTuppE malatunpOR pichchai koTuppE malavenRE yichchai yeTuppA yuraikkinRA ritutAn chETi yennETI.
அள்ளற் பழனத் திருவொற்றி யழக ரிவர்தம் முகநோக்கி வெள்ளச் சடையீ ருள்ளத்தே விருப்பே துரைத்தாற் றருவலென்றேன் கொள்ளக் கிடையா வலர்குமுதங் கொண்ட வமுதங் கொணர்ந்தின்னு மெள்ளத் தனைதா வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
aLLaR pazhanat tiruvoRRi yazhaka rivartam mukanOkki veLLach chaTaiyI ruLLattE viruppE turaittAR RaruvalenREn koLLak kiTaiyA valarkumutang koNTa vamutang koNarntinnu meLLat tanaitA venkinRA ritutAn chETi yennETI.
விஞ்சு நெறியீ ரொற்றியுளீர் வியந்தீர் வியப்பென் னிவணென்றேன் கஞ்ச மிரண்டு நமையங்கே கண்டு குவிந்த விரிந்திங்கே வஞ்ச விருதா மரைமுகையை மறைக்கின் றனநின் பால்வியந்தா மெஞ்ச லறநா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
vinjchu neRiyI roRRiyuLIr viyantIr viyappen nivaNenREn kanjcha miraNTu namaiyangkE kaNTu kuvinta virintingkE vanjcha virutA maraimukaiyai maRaikkin Rananin pAlviyantA menjcha laRanA menkinRA ritutAn chETi yennETI.
அளியா ரொற்றி யுடையாருக் கன்ன நிரம்ப விடுமென்றே னளியார் குழலாய் பிடியன்ன மளித்தாற் போது மாங்கதுநின் னொளியார் சிலம்பு சூழ்கமலத் துளதாற் கடகஞ் சூழ்கமலத் தெளியார்க் கிடுநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
aLiyA roRRi yuTaiyAruk kanna nirampa viTumenRE naLiyAr kuzhalAy piTiyanna maLittAR pOtu mAngkatunin noLiyAr chilampu chUzhkamalat tuLatAR kaTakanj chUzhkamalat teLiyArk kiTunI yenkinRA ritutAn chETi yennETI.
விச்சைப் பெருமா னெனுமொற்றி விடங்கப் பெருமா னீர்முன்னம் பிச்சைப் பெருமா னின்றுமணப் பிள்ளைப் பெருமா னாமென்றே னச்சைப் பெறுநீ யம்மணப்பெண் ணாகி யிடையி லையங்கொள் ளிச்சைப் பெரும்பெண் ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
vichchaip perumA nenumoRRi viTangkap perumA nIrmunnam pichchaip perumA ninRumaNap piLLaip perumA nAmenRE nachchaip peRunI yammaNappeN NAki yiTaiyi laiyangkoL Lichchaip perumpeN NenkinRA ritutAn chETi yennETI.
படையம் புயத்தோன் புகழொற்றிப் பதியீ ரரவப் பணிசுமந்தீர் புடையம் புயத்தி லென்றேன்செம் பொன்னே கொடையம் புயத்தினுநன் னடையம் புயத்துஞ் சுமந்தனைநீ நானா வரவப் பணிமற்று மிடையம் பகத்து மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
paTaiyam puyattOn pukazhoRRip patiyI raravap paNichumantIr puTaiyam puyatti lenREnchem ponnE koTaiyam puyattinunan naTaiyam puyattunj chumantanainI nAnA varavap paNimaRRu miTaiyam pakattu menkinRA ritutAn chETi yennETI.
கூம்பா வொற்றி யூருடையீர் கொடும்பாம் பணிந்தீ ரென்னென்றே னோம்பா துரைக்கிற் பார்த்திடினுள் ளுன்னில் விடமேற் றுன்னிடைக்கீழ்ப் பாம்பா வதுவே கொடும்பாம்பெம் பணிப்பாம் பதுபோற் பாம்பலவென் றேம்பா நிற்ப விசைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
kUmpA voRRi yUruTaiyIr koTumpAm paNintI rennenRE nOmpA turaikkiR pArttiTinuL Lunnil viTamER RunniTaikkIzhp pAmpA vatuvE koTumpAmpem paNippAm patupOR pAmpalaven REmpA niRpa vichaikkinRA ritutAn chETi yennETI.
புயல்சூ ழொற்றி யுடையீரென் புடையென் குறித்தோ போந்ததென்றேன் கயல்சூழ் விழியாய் தனத்தவரைக் காண லிரப்போ ரெதற்கென்றார் மயல்சூழ் தனமிங் கிலையென்றேன் மறையா தெதிர்வைத் திலையென்ற லியல்சூ ழறமன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
puyalchU zhoRRi yuTaiyIren puTaiyen kuRittO pOntatenREn kayalchUzh vizhiyAy tanattavaraik kANa lirappO retaRkenRAr mayalchUzh tanaming kilaiyenREn maRaiyA tetirvait tilaiyenRa liyalchU zhaRaman RenkinRA ritutAn chETi yennETI.
நடவாழ் வொற்றி யுடையீர்நீர் நாக மணிந்த தழகென்றேன் மடவா யதுநீர் நாகமென மதியே லயன்மான் மனனடுங்க விடவா யுமிழும் படநாகம் வேண்டிற்காண்டி யென்றேயென் னிடவா யருகே வருகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
naTavAzh voRRi yuTaiyIrnIr nAka maNinta tazhakenREn maTavA yatunIr nAkamena matiyE layanmAn mananaTungka viTavA yumizhum paTanAkam vENTiRkANTi yenREyen niTavA yarukE varukinRA ritutAn chETi yennETI.
கோடா வொற்றி யுடையீர்நுங் குலந்தான் யாதோ கூறுமென்றேன் வீடார் பிரம குலந்தேவர் வேந்தர் குலநல் வினைவசியப் பாடார் குலமோர் சக்கரத்தான் பள்ளிக் குலமெல் லாமுடையே மேடார் குழலா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
kOTA voRRi yuTaiyIrnung kulantAn yAtO kURumenREn vITAr pirama kulantEvar vEntar kulanal vinaivachiyap pATAr kulamOr chakkarattAn paLLik kulamel lAmuTaiyE mETAr kuzhalA yenkinRA ritutAn chETi yennETI.
நலமா மொற்றி யுடையீர்நீர் நல்ல வழக ரானாலுங் குலமே துமக்கு மாலையிடக் கூடா தென்றே னின்குலம்போ லுலகோ துறுநங் குலமொன்றோ வோரா யிரத்தெட் டுயர்குலமிங் கிலகா நின்ற தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
nalamA moRRi yuTaiyIrnIr nalla vazhaka rAnAlung kulamE tumakku mAlaiyiTak kUTA tenRE ninkulampO lulakO tuRunang kulamonRO vOrA yiratteT Tuyarkulaming kilakA ninRa tenkinRA ritutAn chETi yennETI.
மதிலொற் றியினீர் நும்மனையாண் மலையின் குலநும் மைந்தருளோர் புதல்வர்க் கானைப் பெருங்குலமோர் புதல்வர்க் கிசையம் புலிக்குலமா மெதிரற் றருள்வீர் நுங்குலமிங் கெதுவோ வென்றேன் மனைவியருள் ளிதுமற் றொருத்திக் கென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
matiloR RiyinIr nummanaiyAN malaiyin kulanum maintaruLOr putalvark kAnaip perungkulamOr putalvark kichaiyam pulikkulamA metiraR RaruLvIr nungkulaming ketuvO venREn manaiviyaruL LitumaR Roruttik kenkinRA ritutAn chETi yennETI.
தேமாம் பொழில்சூ ழொற்றியுளீர் திகழுந் தகரக் காற்குலத்தைப் பூமா னிலத்தில் விழைந்துற்றீர் புதுமை யிஃதும் புகழென்றே னாமா குலத்தி லரைக்குலத்துள் ளணைந்தே புறமற் றரைக்குலங்கொண் டேமாந் தனைநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
tEmAm pozhilchU zhoRRiyuLIr tikazhun takarak kARkulattaip pUmA nilattil vizhaintuRRIr putumai yiஃtum pukazhenRE nAmA kulatti laraikkulattuL LaNaintE puRamaR RaraikkulangkoN TEmAn tanainI yenkinRA ritutAn chETi yennETI.
அனஞ்சூ ழொற்றிப் பதியுடையீ ரகில மறிய மன்றகத்தே மனஞ்சூழ் தகரக் கால்கொண்டீர் வனப்பா மென்றே னுலகறியத் தனஞ்சூ ழகத்தே யணங்கேநீ தானுந் தகரத் தலைகொண்டா யினஞ்சூ ழழகா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
ananjchU zhoRRip patiyuTaiyI rakila maRiya manRakattE mananjchUzh takarak kAlkoNTIr vanappA menRE nulakaRiyat tananjchU zhakattE yaNangkEnI tAnun takarat talaikoNTA yinanjchU zhazhakA menkinRA ritutAn chETi yennETI.
பங்கே ருகப்பூம் பணையொற்றிப் பதியீர் நடுவம் பரமென்னு மங்கே யாட்டுக் காலெடுத்தீ ரழகென் றேனவ் வம்பரமே லிங்கே யாட்டுத் தோலெடுத்தா யாமொன் றிரண்டு நீயென்றா லெங்கே நின்சொல் லென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
pangkE rukappUm paNaiyoRRip patiyIr naTuvam paramennu mangkE yATTuk kAleTuttI razhaken REnav vamparamE lingkE yATTut tOleTuttA yAmon RiraNTu nIyenRA lengkE ninchol lenkinRA ritutAn chETi yennETI.
மாணப் புகழ்சே ரொற்றியுளீர் மன்றார் தகர வித்தைதனைக் காணற் கினிநான் செயலென்னே கருதி யுரைத்தல் வேண்டுமென்றேன் வேணச் சுறுமெல் லியலேயாம் விளம்பு மொழியவ் வித்தையுனக் கேணப் புகலு மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
mANap pukazhchE roRRiyuLIr manRAr takara vittaitanaik kANaR kininAn cheyalennE karuti yuraittal vENTumenREn vENach chuRumel liyalEyAm viLampu mozhiyav vittaiyunak kENap pukalu menkinRA ritutAn chETi yennETI.
நல்லா ரொற்றி யுடையீர்யா னடக்கோ வெறும்பூ வணையணைய வல்லா லவணும் முடன்வருகோ வணையா தவலத் துயர்துய்க்கோ செல்லா வென்சொன் நடவாதோ திருக்கூத் தெதுவோ வெனவிடைக ளெல்லா நடவா தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
nallA roRRi yuTaiyIryA naTakkO veRumpU vaNaiyaNaiya vallA lavaNum muTanvarukO vaNaiyA tavalat tuyartuykkO chellA venchon naTavAtO tirukkUt tetuvO venaviTaika LellA naTavA tenkinRA ritutAn chETi yennETI.
ஆட்டுத் தலைவர் நீரொற்றி யழகீ ரதனாற் சிறுவிதிக்கோ ராட்டுத் தலைதந் தீரென்றே னன்றா லறவோ ரறம்புகல வாட்டுத் தலைமுன் கொண்டதனா லஃதே பின்ன ரளித்தாமென் றீட்டுத் தரமீந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
ATTut talaivar nIroRRi yazhakI ratanAR chiRuvitikkO rATTut talaitan tIrenRE nanRA laRavO raRampukala vATTut talaimun koNTatanA laஃtE pinna raLittAmen RITTut taramIn taruLkinRA ritutAn chETi yennETI.
ஒற்றிப் பெருமா னுமைவிழைந்தா ரூரில் வியப்பொன் றுண்டிரவிற் கொற்றக் கமலம் விரிந்தொருகீழ்க் குளத்தே குமுதங் குவிந்ததென்றேன் பொற்றைத் தனத்தீர் நுமைவிழைந்தார் புரத்தே மதியந் தேய்கின்ற தெற்றைத் தினத்து மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
oRRip perumA numaivizhaintA rUril viyappon RuNTiraviR koRRak kamalam virintorukIzhk kuLattE kumutang kuvintatenREn poRRait tanattIr numaivizhaintAr purattE matiyan tEykinRa teRRait tinattu menkinRA ritutAn chETi yennETI.
இடஞ்சே ரொற்றி யுடையீர்நீ ரென்ன சாதி யினரென்றேன் தடஞ்சேர் முலையாய் நாந்திறலாண் சாதி நீபெண் சாதியென்றார் விடஞ்சேர் களத்தீர் நும்மொழிதான் வியப்பா மென்றே னயப்பானின் னிடஞ்சேர் மொழிதா னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
iTanjchE roRRi yuTaiyIrnI renna chAti yinarenREn taTanjchEr mulaiyAy nAntiRalAN chAti nIpeN chAtiyenRAr viTanjchEr kaLattIr nummozhitAn viyappA menRE nayappAnin niTanjchEr mozhitA nenkinRA ritutAn chETi yennETI.
உடையா ரென்பா ருமையொற்றி யுடையீர் பணந்தா னுடையீரோ நடையா யேற்கின் றீரென்றே னங்காய் நின்போ லொருபணத்தைக் கடையா ரெனக்கீழ் வைத்தருமை காட்டேம் பணிகொள் பணங்கோடி யிடையா துடையே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
uTaiyA renpA rumaiyoRRi yuTaiyIr paNantA nuTaiyIrO naTaiyA yERkin RIrenRE nangkAy ninpO lorupaNattaik kaTaiyA renakkIzh vaittarumai kATTEm paNikoL paNangkOTi yiTaiyA tuTaiyE menkinRA ritutAn chETi yennETI.
என்னா ருயிர்க்குப் பெருந்துணையா மெங்கள் பெருமா னீரிருக்கு நன்னா டொற்றி யன்றோதா னவில வேண்டு மென்றுரைத்தேன் முன்னா ளொற்றி யெனினுமது மொழித லழகோ தாழ்தலுயர் விந்நா னிலத்துண் டென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
ennA ruyirkkup peruntuNaiyA mengkaL perumA nIrirukku nannA ToRRi yanROtA navila vENTu menRuraittEn munnA LoRRi yeninumatu mozhita lazhakO tAzhtaluyar vinnA nilattuN TenkinRA ritutAn chETi yennETI.
பெருந்தா ரணியோர் புகழொற்றிப் பெருமா னிவர்தம் முகநோக்கி யருந்தா வமுத மனையீரிங் கடுத்த பரிசே தறையுமென்றேன் வருந்தா திங்கே யருந்தமுத மனையா ளாக வாழ்வினொடு மிருந்தா யடைந்தே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
peruntA raNiyOr pukazhoRRip perumA nivartam mukanOkki yaruntA vamuta manaiyIring kaTutta parichE taRaiyumenREn varuntA tingkE yaruntamuta manaiyA LAka vAzhvinoTu miruntA yaTaintE menkinRA ritutAn chETi yennETI.
செம்மை வளஞ்சூ ழொற்றியுளீர் திகழாக் கரித்தோ லுடுத்தீரே யும்மை விழைந்த மடவார்க ளுடுக்கக் கலையுண் டோவென்றே னெம்மை யறியா யொருகலையோ விரண்டோ வனந்தங் கலைமெய்யி லிம்மை யுடையே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
chemmai vaLanjchU zhoRRiyuLIr tikazhAk karittO luTuttIrE yummai vizhainta maTavArka LuTukkak kalaiyuN TOvenRE nemmai yaRiyA yorukalaiyO viraNTO vanantang kalaimeyyi limmai yuTaiyE menkinRA ritutAn chETi yennETI.
கற்றைச் சடையீர் திருவொற்றிக் காவ லுடையீ ரீங்கடைந்தீ ரிற்றைப் பகலே நன்றென்றே னிற்றை யிரவே நன்றெமக்குப் பொற்றைத் தனத்தாய் கையமுதம் பொழியா தலர்வாய்ப் புத்தமுத மிற்றைக் களித்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
kaRRaich chaTaiyIr tiruvoRRik kAva luTaiyI rIngkaTaintI riRRaip pakalE nanRenRE niRRai yiravE nanRemakkup poRRait tanattAy kaiyamutam pozhiyA talarvAyp puttamuta miRRaik kaLittA yenkinRA ritutAn chETi yennETI.
கற்றீ ரொற்றீர் முன்பொருவான் காட்டிற் கவர்ந்தோர் நாட்டில்வளை வீற்றீ ரின்றென் வளைகொண்டீர் விற்கத் துணிந்தீ ரோவென்றேன் மற்றீர்ங் குழலாய் நீயெம்மோர் மனையின் வளையைக் கவர்ந்துகளத் திற்றீ தணிந்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
kaRRI roRRIr munporuvAn kATTiR kavarntOr nATTilvaLai vIRRI rinRen vaLaikoNTIr viRkat tuNintI rOvenREn maRRIrng kuzhalAy nIyemmOr manaiyin vaLaiyaik kavarntukaLat tiRRI taNintA yenkinRA ritutAn chETi yennETI.
உடுக்கும் புகழா ரொற்றியுளா ருடைதா வென்றார் திகையெட்டு முடுக்கும் பெரியீ ரெதுகண்டோ வுரைத்தீ ரென்றேன் றிகைமுழுது முடுக்கும் பெரிய வரைச்சிறிய வொருமுன் றானை யான்மூடி யெடுக்குந் திறங்கண் டென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
uTukkum pukazhA roRRiyuLA ruTaitA venRAr tikaiyeTTu muTukkum periyI retukaNTO vuraittI renREn Rikaimuzhutu muTukkum periya varaichchiRiya vorumun RAnai yAnmUTi yeTukkun tiRangkaN TenkinRA ritutAn chETi yennETI.
காவா யொற்றிப் பதியுடையீர் கல்லா னைக்குக் கரும்பன்று தேவாய் மதுரை யிடத்தளித்த சித்த ரலவோ நீரென்றேன் பாவா யிருகல் லானைக்குப் பரிவிற் கரும்பிங் கிரண்டொருநீ யீவா யிதுசித் தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
kAvA yoRRip patiyuTaiyIr kallA naikkuk karumpanRu tEvAy maturai yiTattaLitta chitta ralavO nIrenREn pAvA yirukal lAnaikkup pariviR karumping kiraNTorunI yIvA yituchit tenkinRA ritutAn chETi yennETI.
ஊட்டுந் திருவா ழொற்றியுளீ ருயிரை யுடலாஞ் செப்பிடைவைத் தாட்டுந் திறத்தீர் நீரென்றே னணங்கே யிருசெப் பிடையாட்டுந் தீட்டும் புகழன் றியுமுலகைச் சிறிதோர் செப்பி லாட்டுகின்றா யீட்டுந் திறத்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
UTTun tiruvA zhoRRiyuLI ruyirai yuTalAnj cheppiTaivait tATTun tiRattIr nIrenRE naNangkE yiruchep piTaiyATTun tITTum pukazhan Riyumulakaich chiRitOr cheppi lATTukinRA yITTun tiRattA yenkinRA ritutAn chETi yennETI.
கந்த வனஞ்சூ ழொற்றியுளீர் கண்மூன் றுடையீர் வியப்பென்றேன் வந்த வெமைத்தான் பிரிபோது மற்றை யவரைக் காண்போதுஞ் சந்த மிகுங்கண் ணிருமூன்றுந் தகுநான் கொன்றுந் தானடைந்தா யிந்த வியப்பென் னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
kanta vananjchU zhoRRiyuLIr kaNmUn RuTaiyIr viyappenREn vanta vemaittAn piripOtu maRRai yavaraik kANpOtunj chanta mikungkaN NirumUnRun takunAn konRun tAnaTaintA yinta viyappen nenkinRA ritutAn chETi yennETI.
ஆழி விடையீர் திருவொற்றி யமர்ந்தீ ரிருவர்க் ககமகிழ்வான் வீழி யதனிற் படிக்காசு வேண்டி யளித்தீ ராமென்றேன் வீழி யதனிற் படிக்காசு வேண்டா தளித்தா யளவொன்றை யேழி லகற்றி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
Azhi viTaiyIr tiruvoRRi yamarntI riruvark kakamakizhvAn vIzhi yataniR paTikkAchu vENTi yaLittI rAmenREn vIzhi yataniR paTikkAchu vENTA taLittA yaLavonRai yEzhi lakaRRi yenkinRA ritutAn chETi yennETI.
உற்ற விடத்தே பெருந்துணையா மொற்றிப் பெருமா னும்புகழைக் கற்ற விடத்தே முக்கனியுங் கரும்பு மமுதுங் கயவாவோ மற்ற விடச்சீ ரென்னென்றேன் மற்றை யுபய விடமுமுத லெற்ற விடமே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
uRRa viTattE peruntuNaiyA moRRip perumA numpukazhaik kaRRa viTattE mukkaniyung karumpu mamutung kayavAvO maRRa viTachchI rennenREn maRRai yupaya viTamumuta leRRa viTamE yenkinRA ritutAn chETi yennETI.
யான்செய் தவத்தின் பெரும்பயனே யென்னா ரமுதே யென்றுணையே வான்செ யரசே திருவொற்றி வள்ளால் வந்த தென்னென்றேன் மான்செய் விழிப்பெண் ணேநீயாண் வடிவா னதுகேட் டுள்ளம்வியந் தேன்கண் டிடவே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
yAnchey tavattin perumpayanE yennA ramutE yenRuNaiyE vAnche yarachE tiruvoRRi vaLLAl vanta tennenREn mAnchey vizhippeN NEnIyAN vaTivA natukET TuLLamviyan tEnkaN TiTavE yenkinRA ritutAn chETi yennETI.
கருணைக் கடலே யென்னிரண்டு கண்ணே முக்கட் கரும்பேசெவ் வருணப் பொருப்பே வளரொற்றி வள்ளன் மணியே மகிழ்ந்தணையத் தருணப் பருவ மிஃதென்றேன் றவிரன் றெனக்காட் டியதுன்ற னிருணச் சளக மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
karuNaik kaTalE yenniraNTu kaNNE mukkaT karumpEchev varuNap poruppE vaLaroRRi vaLLan maNiyE makizhntaNaiyat taruNap paruva miஃtenREn Raviran RenakkAT TiyatunRa niruNach chaLaka menkinRA ritutAn chETi yennETI.
காவிக் களங்கொள் கனியேயென் கண்ணுண் மணியே யணியேயென் னாவித் துணையே திருவொற்றி யரசே யடைந்த தென்னென்றேன் பூவிற் பொலியுங் குழலாய்நீ பொன்னி னுயர்ந்தா யெனக்கேட்டுன் னீவைக் கருதி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
kAvik kaLangkoL kaniyEyen kaNNuN maNiyE yaNiyEyen nAvit tuNaiyE tiruvoRRi yarachE yaTainta tennenREn pUviR poliyung kuzhalAynI ponni nuyarntA yenakkETTun nIvaik karuti yenkinRA ritutAn chETi yennETI.
கண்ணும் மனமுங் களிக்குமெழிற் கண்மூன் றுடையீர் கலையுடையீர் நண்ணுந் திருவா ழொற்றியுளீர் நடஞ்செய் வல்லீர் நீரென்றேன் வண்ண முடையாய் நின்றனைப்போன் மலர்வாய் நடஞ்செய் வல்லோமோ வெண்ண வியப்பா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
kaNNum manamung kaLikkumezhiR kaNmUn RuTaiyIr kalaiyuTaiyIr naNNun tiruvA zhoRRiyuLIr naTanjchey vallIr nIrenREn vaNNa muTaiyAy ninRanaippOn malarvAy naTanjchey vallOmO veNNa viyappA menkinRA ritutAn chETi yennETI.
தாங்கும் விடைமே லழகீரென் றன்னைக் கலந்துந் திருவொற்றி யோங்குந் தளியி லொளித்தீர்நீ ரொளிப்பில் வல்ல ராமென்றேன் வாங்கு நுதலாய் நீயுமெனை மருவிக் கலந்து மலர்த்தளியி லீங்கின் றொளித்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
tAngkum viTaimE lazhakIren Rannaik kalantun tiruvoRRi yOngkun taLiyi loLittIrnI roLippil valla rAmenREn vAngku nutalAy nIyumenai maruvik kalantu malarttaLiyi lIngkin RoLittA yenkinRA ritutAn chETi yennETI.
அம்மை யடுத்த திருமேனி யழகீ ரொற்றி யணிநகரீ ரும்மை யடுத்தோர் மிகவாட்ட முறுத லழகோ வென்றுரைத்தேன் நம்மை யடுத்தாய் நமையடுத்தோர் நம்போ லுறுவ ரன்றெனிலே தெம்மை யடுத்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
ammai yaTutta tirumEni yazhakI roRRi yaNinakarI rummai yaTuttOr mikavATTa muRuta lazhakO venRuraittEn nammai yaTuttAy namaiyaTuttOr nampO luRuva ranRenilE temmai yaTutta tenkinRA ritutAn chETi yennETI.
உண்கண் மகிழ்வா லளிமிழற்று மொற்றி நகரீ ரொருமூன்று கண்க ளுடையீ ரென்காதல் கண்டு மிரங்கீ ரென்னென்றேன் பண்கொண் மொழியாய் நின்காதல் பன்னாண் சுவைசெய் பழம்போலு மெண்கொண் டிருந்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
uNkaN makizhvA laLimizhaRRu moRRi nakarI rorumUnRu kaNka LuTaiyI renkAtal kaNTu mirangkI rennenREn paNkoN mozhiyAy ninkAtal pannAN chuvaichey pazhampOlu meNkoN Tirunta tenkinRA ritutAn chETi yennETI.
வணங்கே ழிலங்குஞ் செஞ்சடையீர் வளஞ்சே ரொற்றி மாநகரீர் குணங்கேழ் மிடற்றோர் பாலிருளைக் கொண்டீர் கொள்கை யென்னென்றே னணங்கே யொருபா லன்றிநின்போ லைம்பா லிருள்கொண் டிடச்சற்று மிணங்கே மிணங்கே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
vaNangkE zhilangkunj chenjchaTaiyIr vaLanjchE roRRi mAnakarIr kuNangkEzh miTaRROr pAliruLaik koNTIr koLkai yennenRE naNangkE yorupA lanRininpO laimpA liruLkoN TiTachchaRRu miNangkE miNangkE menkinRA ritutAn chETi yennETI.
கரும்பி லினியீ ரென்னிரண்டு கண்க ளனையீர் கறைமிடற்றீர் பெரும்பை யணியீர் திருவொற்றிப் பெரியீ ரெதுநும் பெயரென்றே னரும்பண் முலையாய் பிறர்கேட்க வறைந்தா லளிப்பீ ரெனச்சூழ்வ ரிரும்பொ னிலையே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
karumpi liniyI renniraNTu kaNka LanaiyIr kaRaimiTaRRIr perumpai yaNiyIr tiruvoRRip periyI retunum peyarenRE narumpaN mulaiyAy piRarkETka vaRaintA laLippI renachchUzhva rirumpo nilaiyE yenkinRA ritutAn chETi yennETI.
நிலையைத் தவறார் தொழுமொற்றி நிமலப் பெருமானீர்முன்ன மலையைச் சிலையாக் கொண்டீர்நும் மாவல் லபமற் புதமென்றேன் வலையத் தறியாச் சிறுவர்களு மலையைச் சிலையாக் கொள்வர்களீ திலையற் புதந்தா னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
nilaiyait tavaRAr tozhumoRRi nimalap perumAnIrmunna malaiyaich chilaiyAk koNTIrnum mAval lapamaR putamenREn valaiyat taRiyAch chiRuvarkaLu malaiyaich chilaiyAk koLvarkaLI tilaiyaR putantA nenkinRA ritutAn chETi yennETI.
உதயச் சுடரே யனையீர்நல் லொற்றி யுடையீ ரென்னுடைய விதயத் தமர்ந்தீ ரென்னேயென் னெண்ண மறியீ ரோவென்றேன் சுதையிற் றிகழ்வா யறிந்தன்றோ துறந்து வெளிப்பட் டெதிரடைந்தா மிதையுற் றறிநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
utayach chuTarE yanaiyIrnal loRRi yuTaiyI rennuTaiya vitayat tamarntI rennEyen neNNa maRiyI rOvenREn chutaiyiR RikazhvA yaRintanRO tuRantu veLippaT TetiraTaintA mitaiyuR RaRinI yenkinRA ritutAn chETi yennETI.
புரக்குங் குணத்தீர் திருவொற்றிப் புனித ரேநீர் போர்க்களிற்றை யுரக்குங் கலக்கம் பெறவுரித்தீ ருள்ளத் திரக்க மென்னென்றேன் கரக்கு மிடையாய் நீகளிற்றின் கன்றைக் கலக்கம் புரிந்தனைநின் னிரக்க மிதுவோ வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
purakkung kuNattIr tiruvoRRip punita rEnIr pOrkkaLiRRai yurakkung kalakkam peRavurittI ruLLat tirakka mennenREn karakku miTaiyAy nIkaLiRRin kanRaik kalakkam purintanainin nirakka mituvO venkinRA ritutAn chETi yennETI.
பதங்கூ றொற்றிப் பதியீர்நீர் பசுவி லேறும் பரிசதுதான் விதங்கூ றறத்தின் விதிதானோ விலக்கோ விளம்பல் வேண்டுமென்றே னிதங்கூ றிடுநற் பசுங் கன்றை நீயுமேறி யிடுகின்றா யிதங்கூ றிடுக வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
patangkU RoRRip patiyIrnIr pachuvi lERum parichatutAn vitangkU RaRattin vititAnO vilakkO viLampal vENTumenRE nitangkU RiTunaR pachung kanRai nIyumERi yiTukinRA yitangkU RiTuka venkinRA ritutAn chETi yennETI.
யோக முடையார் புகழொற்றி யூரிற் பரம யோகியராந் தாக முடையா ரிவர்தமக்குத் தண்ர் தரநின் றனையழைத்தேன் போக முடையாய் புறத்தண்ர் புரிந்து விரும்பா மகத்தண் ரீக மகிழ்வி னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
yOka muTaiyAr pukazhoRRi yUriR parama yOkiyarAn tAka muTaiyA rivartamakkut taNr taranin RanaiyazhaittEn pOka muTaiyAy puRattaNr purintu virumpA makattaN rIka makizhvi nenkinRA ritutAn chETi yennETI.
வளநீ ரொற்றி வாணரிவர் வந்தார் நின்றார் மாதேநா முளநீர்த் தாக மாற்றுறுநீ ருதவ வேண்டு மென்றார்நான் குளநீ ரொன்றே யுளதென்றேன் கொள்ளே மிடைமேற் கொளுமிந்த விளநீர் தருக வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
vaLanI roRRi vANarivar vantAr ninRAr mAtEnA muLanIrt tAka mARRuRunI rutava vENTu menRArnAn kuLanI ronRE yuLatenREn koLLE miTaimER koLuminta viLanIr taruka venkinRA ritutAn chETi yennETI.
மெய்ந்நீ ரொற்றி வாணரிவர் வெம்மை யுளநீர் வேண்டுமென்றா ரந்நீ ரிலைநீர் தண்ர்தா னருந்தி லாகா தோவென்றேன் முந்நீர் தனையை யனையீரிம் முதுநீ ருண்டு தலைக்கேறிற் றிந்நீர் காண்டி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
meynnI roRRi vANarivar vemmai yuLanIr vENTumenRA rannI rilainIr taNrtA narunti lAkA tOvenREn munnIr tanaiyai yanaiyIrim mutunI ruNTu talaikkERiR RinnIr kANTi yenkinRA ritutAn chETi yennETI.
சீலஞ் சேர்ந்த வொற்றியுளீர் சிறிதாம் பஞ்ச காலத்துங் கோலஞ் சார்ந்து பிச்சைகொளக் குறித்து வருவீ ரென்னென்றேன் காலம் போகும் வார்த்தைநிற்குங் கண்டா யிதுசொற் கடனாமோ வேலங் குழலா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
chIlanj chErnta voRRiyuLIr chiRitAm panjcha kAlattung kOlanj chArntu pichchaikoLak kuRittu varuvI rennenREn kAlam pOkum vArttainiRkung kaNTA yituchoR kaTanAmO vElang kuzhalA yenkinRA ritutAn chETi yennETI.
ஊற்றார் சடையீ ரொற்றியுளீ ரூரூ ரிரக்கத் துணிவுற்றீர் நீற்றால் விளங்குந் திருமேனி நேர்ந்திங் கிளைத்தீர் நீரென்றேன் சோற்றா லிளைத்தே மன்றுமது சொல்லா லிளைத்தே மின்றினிநா மேற்றா லிகழ்வே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
URRAr chaTaiyI roRRiyuLI rUrU rirakkat tuNivuRRIr nIRRAl viLangkun tirumEni nErnting kiLaittIr nIrenREn chORRA liLaittE manRumatu chollA liLaittE minRininA mERRA likazhvE yenkinRA ritutAn chETi yennETI.
நீரை விழுங்குஞ் சடையுடையீ ருளது நுமக்கு நீரூருந் தேரை விழுங்கும் பசுவென்றேன் செறிநின் கலைக்கு ளொன்றுளது காரை விழுங்கு மெமதுபசுக் கன்றின் றேரை நீர்த்தேரை யீர விழுங்கு மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
nIrai vizhungkunj chaTaiyuTaiyI ruLatu numakku nIrUrun tErai vizhungkum pachuvenREn cheRinin kalaikku LonRuLatu kArai vizhungku mematupachuk kanRin RErai nIrttErai yIra vizhungku menkinRA ritutAn chETi yennETI.
பொன்னேர் மணிமன் றுடையீர்நீர் புரிந்த தெதுவெம் புடையென்றே னின்னே யுரைத்தற் கஞ்சுதுமென் றாரென் னென்றே னியம்புதுமேன் மின்னே நினது நடைப்பகையா மிருகம் பறவை தமைக்குறிக்கு மென்னே யுரைப்ப தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
ponnEr maNiman RuTaiyIrnIr purinta tetuvem puTaiyenRE ninnE yuraittaR kanjchutumen RAren nenRE niyamputumEn minnE ninatu naTaippakaiyA mirukam paRavai tamaikkuRikku mennE yuraippa tenkinRA ritutAn chETi yennETI.
அடையார் புரஞ்செற் றம்பலத்தே யாடு மழகீ ரெண்பதிற்றுக் கடையா முடலின் றலைகொண்டீர் கரமொன் றினிலற் புதமென்றே னுடையாத் தலைமேற் றலையாக வுன்கை யீரைஞ் ஞாறுகொண்ட திடையா வளைக்கே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
aTaiyAr puranjcheR RampalattE yATu mazhakI reNpatiRRuk kaTaiyA muTalin RalaikoNTIr karamon RinilaR putamenRE nuTaiyAt talaimER RalaiyAka vunkai yIrainj njARukoNTa tiTaiyA vaLaikkE yenkinRA ritutAn chETi yennETI.
தேவர்க் கரிய வானந்தத் திருத்தாண் டவஞ்செய் பெருமானீர் மேவக் குகுகு குகுகுவணி வேணி யுடையீ ராமென்றேன் தாவக் குகுகு குகுகுகுகுத் தாமே யைந்து விளங்கவணி யேவற் குணத்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
tEvark kariya vAnantat tiruttAN Tavanjchey perumAnIr mEvak kukuku kukukuvaNi vENi yuTaiyI rAmenREn tAvak kukuku kukukukukut tAmE yaintu viLangkavaNi yEvaR kuNattA yenkinRA ritutAn chETi yennETI.
கொன்றைச் சடையீர் கொடுங்கோளூர் குறித்தீர் வருதற் கஞ்சுவல்யா னொன்றப் பெருங்கோ ளென்மீது முரைப்பா ருண்டென் றுணர்ந்தென்றேன் நன்றப் படியேற் கோளிலியா நகரு முடையே நங்காய்நீ யின்றச் சுறலென் னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
konRaich chaTaiyIr koTungkOLUr kuRittIr varutaR kanjchuvalyA nonRap perungkO LenmItu muraippA ruNTen RuNarntenREn nanRap paTiyER kOLiliyA nakaru muTaiyE nangkAynI yinRach chuRalen nenkinRA ritutAn chETi yennETI.
புரியுஞ் சடையீ ரமர்ந்திடுமூர் புலியூ ரெனிலெம் போல்வார்க்கு முரியும் புலித்தோ லுடையீர்போ லுறுதற் கியலு மோவென்றேன் றிரியும் புலியூ ரன்றுநின் போற் றெரிவை யரைக்கண் டிடிற்பயந்தே யிரியும் புலியூ ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
puriyunj chaTaiyI ramarntiTumUr puliyU renilem pOlvArkku muriyum pulittO luTaiyIrpO luRutaR kiyalu mOvenREn Ririyum puliyU ranRunin pOR Rerivai yaraikkaN TiTiRpayantE yiriyum puliyU renkinRA ritutAn chETi yennETI.
தெவ்வூர் பொடிக்குஞ் சிறுநகையித் தேவர் தமைநா னீரிருத்த லெவ்வூ ரென்றே னகைத்தணங்கே யேழூர் நாலூ ரென்றார்பின் னவ்வூர்த் தொகையி னிருத்தலரி தாமென் றேன்மற் றதிலொவ்வூ ரிவ்வூ ரெடுத்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
tevvUr poTikkunj chiRunakaiyit tEvar tamainA nIrirutta levvU renRE nakaittaNangkE yEzhUr nAlU renRArpin navvUrt tokaiyi niruttalari tAmen REnmaR RatilovvU rivvU reTuttA yenkinRA ritutAn chETi yennETI.
மணங்கொ ளிதழிச் சடையீர்நீர் வாழும் பதியா தென்றேனின் குணங்கொண் மொழிகேட் டோரளவு குறைந்த குயிலாம் பதியென்றா ரணங்கின் மறையூ ராமென்றே னஃதன் றருளோத் தூரிஃது மிணங்க வுடையே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
maNangko Litazhich chaTaiyIrnIr vAzhum patiyA tenREnin kuNangkoN mozhikET TOraLavu kuRainta kuyilAm patiyenRA raNangkin maRaiyU rAmenRE naஃtan RaruLOt tUriஃtu miNangka vuTaiyE menkinRA ritutAn chETi yennETI.
ஆற்றுச் சடையா ரிவர்பலியென் றடைந்தார் நுமதூ ரியாதென்றேன் சோற்றுத் துறையென் றார்நுமக்குச் சோற்றுக் கருப்பேன் சொலுமென்றேன் றோற்றுத் திரிவே மன்றுநின்போற் சொல்லுங் கருப்பென் றுலகியம்ப வேற்றுத் திரியே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
ARRuch chaTaiyA rivarpaliyen RaTaintAr numatU riyAtenREn chORRut tuRaiyen RArnumakkuch chORRuk karuppEn cholumenREn RORRut tirivE manRuninpOR chollung karuppen Rulakiyampa vERRut tiriyE menkinRA ritutAn chETi yennETI.
ஓங்குஞ் சடையீர் நெல்வாயி லுடையே மென்றீ ருடையீரேற் றாங்கும் புகழ்நும் மிடைச்சிறுமை சார்ந்த தெவனீர் சாற்றுமென்றே னேங்கும் படிநும் மிடைச்சிறுமை யெய்திற் றலதீண் டெமக்கின்றா லீங்குங் காண்டி ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
Ongkunj chaTaiyIr nelvAyi luTaiyE menRI ruTaiyIrER RAngkum pukazhnum miTaichchiRumai chArnta tevanIr chARRumenRE nEngkum paTinum miTaichchiRumai yeytiR RalatIN TemakkinRA lIngkung kANTi renkinRA ritutAn chETi yennETI.