
திருவருட்பா · 3நெஞ்சறிவுறுத்தல்
ஈண்டாண் டருளும் இறையோர் தமையாறில் ஆண்டாண்டு கண்டா றகன்றவராய் - ஈண்டாது
INTAN TaruLum iRaiyOr tamaiyARil ANTANTu kaNTA RakanRavarAy - INTAtu
வாழியுற்ற வானோரும் வந்து தமக்கிரண்டோ டேழியற்ற ஏழும் இகந்தவராய் - ஊழியற்றக்
vAzhiyuRRa vAnOrum vantu tamakkiraNTO TEzhiyaRRa Ezhum ikantavarAy - UzhiyaRRak
கட்டிநின்றுட் சோதியொன்று காணத் தொடங்குகின்றோர் எட்டுகின்ற எட்டின்மேல் எய்தினராய்க் கட்டுகின்ற
kaTTininRuT chOtiyonRu kANat toTangkukinROr eTTukinRa eTTinmEl eytinarAyk kaTTukinRa
தேன்தோய் கருணைச் சிவங்கலந்து தேக்குகின்ற சான்றோர்தம் உள்ளம் தணவாதாய் - மான்றமலத்
tEntOy karuNaich chivangkalantu tEkkukinRa chAnROrtam uLLam taNavAtAy - mAnRamalat
தாக்கொழிந்து தத்துவத்தின் சார்பாம் - தனுவொழிந்து வாக்கொழிந்து மாணா மனமொழிந்து - ஏக்கமுற
tAkkozhintu tattuvattin chArpAm - tanuvozhintu vAkkozhintu mANA manamozhintu - EkkamuRa
வாய்க்கும் சுகமொழிந்து மண்ணொழிந்து விண்ணொழிந்து சாய்க்கும் இராப்பகலும் தானொழிந்து - நீக்கொழிந்து
vAykkum chukamozhintu maNNozhintu viNNozhintu chAykkum irAppakalum tAnozhintu - nIkkozhintu
நானுமொழி யாதொழிந்து ஞானமொழி யாதொழிந்து தானும் ஒழியாமற் றானொழிந்து - மோனநிலை
nAnumozhi yAtozhintu njAnamozhi yAtozhintu tAnum ozhiyAmaR RAnozhintu - mOnanilai
நிற்கும் பிரம நிரதிசயா னந்தமதாய் நிற்கும் பரம நிருத்தனெவன் - தற்பரமாய்
niRkum pirama niratichayA nantamatAy niRkum parama niruttanevan - taRparamAy
நின்றான் எவனன்பர் நேயமனத் தேவிரைந்து சென்றான் எவன்சர்வ தீர்த்தனெவன் - வன்தீமை
ninRAn evananpar nEyamanat tEviraintu chenRAn evancharva tIrttanevan - vantImai
இல்லான் எவன்யார்க்கும் ஈசன் எவன்யாவும் வல்லான் எவனந்தி வண்ணனெவன் - கல்லாலில்
illAn evanyArkkum Ichan evanyAvum vallAn evananti vaNNanevan - kallAlil
சுட்டகன்ற ஞான சுகாதீதம் காட்டிமுற்றும் விட்டகன்ற யோக வினோதனெவன் - மட்டகன்ற
chuTTakanRa njAna chukAtItam kATTimuRRum viTTakanRa yOka vinOtanevan - maTTakanRa
அண்டங்கள் எல்லாம் அணுவில் அடைத்தருளித் திண்டங்கு மாறிருத்தும் சித்தனெவன் - பண்டங்கு
aNTangkaL ellAm aNuvil aTaittaruLit tiNTangku mARiruttum chittanevan - paNTangku
வீயாச் சிறுபெண் விளையாட்டுள் அண்டமெலாம் தேயாது கூட்டுவிக்கும் சித்தனெவன் - யாயாதும்
vIyAch chiRupeN viLaiyATTuL aNTamelAm tEyAtu kUTTuvikkum chittanevan - yAyAtum
வேண்டாமை வேண்டுவது மேவாத சித்தர்தமைத் தீண்டாது தீண்டுகின்ற சித்தனெவன் - ஈண்டோது
vENTAmai vENTuvatu mEvAta chittartamait tINTAtu tINTukinRa chittanevan - INTOtu
பற்றுருவாய்ப் பற்றாப் பரவணுவின் உள்விளங்கும் சிற்றுருவாய் உள்ளொளிக்கும் சித்தனெவன் - மற்றுருவின்
paRRuruvAyp paRRAp paravaNuvin uLviLangkum chiRRuruvAy uLLoLikkum chittanevan - maRRuruvin
வையாது வைத்துலகை மாவிந் திரசாலம் செய்யாது செய்விக்கும் சித்தனெவன் - நையாமல்
vaiyAtu vaittulakai mAvin tirachAlam cheyyAtu cheyvikkum chittanevan - naiyAmal
அப்பிடைவைப் பாமுலகில் ஆருயிரை மாயையெனும் செப்பிடைவைத் தாட்டுகின்ற சித்தனெவன் - ஒப்புறவே
appiTaivaip pAmulakil Aruyirai mAyaiyenum cheppiTaivait tATTukinRa chittanevan - oppuRavE
நில்லாத காற்றை நிலையாக் கடத்தடைத்துச் செல்லாது வைக்கின்ற சித்தனெவன் - பொல்லாத
nillAta kARRai nilaiyAk kaTattaTaittuch chellAtu vaikkinRa chittanevan - pollAta
வெம்பாம்பை மேலணிந்தோர் வெம்புற்றின் உள்ளிருந்தே செம்பாம்பை ஆட்டுகின்ற சித்தனெவன் - தம்பாங்கர்
vempAmpai mElaNintOr vempuRRin uLLiruntE chempAmpai ATTukinRa chittanevan - tampAngkar
ஒண்கயிற்றான் ஒன்றின்றி உண்ணின் றுயிர்களையூழ்த் திண்கயிற்றான் ஆட்டுகின்ற சித்தனெவன் - வண்கையுடைத்
oNkayiRRAn onRinRi uNNin RuyirkaLaiyUzht tiNkayiRRAn ATTukinRa chittanevan - vaNkaiyuTait
தானசைந்தால் மற்றைச் சகமசையும் என்றுமறை தேனசையச் சொல்லுகின்ற சித்தனெவன் - ஊனமின்றிப்
tAnachaintAl maRRaich chakamachaiyum enRumaRai tEnachaiyach chollukinRa chittanevan - UnaminRip
பேர்த்துயிர்க ளெல்லாம்ஓர் பெண்பிள்ளை யின்வசமாய்ச் சேர்த்து வருவிக்கும் சித்தனெவன் - போர்த்துமிக
pErttuyirka LellAmOr peNpiLLai yinvachamAych chErttu varuvikkum chittanevan - pOrttumika
அல்விரவுங் காலை அகிலமெலாம் தன்பதத்தோர் சில்விரலில் சேர்க்கின்ற சித்தனெவன் - பல்வகையாய்க்
alviravung kAlai akilamelAm tanpatattOr chilviralil chErkkinRa chittanevan - palvakaiyAyk
கைகலந்த வண்மைக் கருப்பா சயப்பையுள் செய்கருவுக் கூட்டுவிக்கும் சித்தனெவன் - உய்கருவை
kaikalanta vaNmaik karuppA chayappaiyuL cheykaruvuk kUTTuvikkum chittanevan - uykaruvai
மெய்வைத்த வேர்வையினும் வீழ்நிலத்தும் அண்டத்தும் செய்வித்தங் கூட்டுவிக்கும் சித்தனெவன் - உய்விக்கும்
meyvaitta vErvaiyinum vIzhnilattum aNTattum cheyvittang kUTTuvikkum chittanevan - uyvikkum
வித்தொன்றும் இன்றி விளைவித் தருளளிக்கும் சித்தென்றும் வல்லவொரு சித்தனெவன் - சத்துடனே
vittonRum inRi viLaivit taruLaLikkum chittenRum vallavoru chittanevan - chattuTanE
உற்பத்தி யாயுலகில் ஒன்பதுவாய்ப் பாவைகள்செய் சிற்பத் தொழில்வல்ல சித்தனெவன் - பற்பலவாம்
uRpatti yAyulakil onpatuvAyp pAvaikaLchey chiRpat tozhilvalla chittanevan - paRpalavAm
காரா ழிகளைக் கரையின்றி எல்லையிலாச் சேரூழி நிற்கவைத்த சித்தனெவன் - பேராத
kArA zhikaLaik karaiyinRi ellaiyilAch chErUzhi niRkavaitta chittanevan - pErAta
நீர்மேல் நெருப்பை நிலையுறவைத் தெவ்வுலகும் சீர்மே வுறச்செய்யும் சித்தனெவன் - பாராதி
nIrmEl neruppai nilaiyuRavait tevvulakum chIrmE vuRachcheyyum chittanevan - pArAti
ஐந்திலைந்து நான்கொருமூன் றாமிரண்டொன் றாய்முறையே சிந்தையுற நின்றருளும் சித்தனெவன் - பந்தமுற
aintilaintu nAnkorumUn RAmiraNTon RAymuRaiyE chintaiyuRa ninRaruLum chittanevan - pantamuRa
ஆண்பெண்ணாய்ப் பெண்ணாணாய் அண்மை தனைவானின் சேண்பண்ண வல்லவொரு சித்தனெவன் - மாண்பண்ணாப்
ANpeNNAyp peNNANAy aNmai tanaivAnin chENpaNNa vallavoru chittanevan - mANpaNNAp
பேடாணாய்ப் பெண்ணாயப் பெண்ணாண் பெரும்பேடாய்ச் சேடாகச் செய்யவல்ல சித்தனெவன் - சேடாய
pETANAyp peNNAyap peNNAN perumpETAych chETAkach cheyyavalla chittanevan - chETAya
வெண்மை கிழமாய் விருத்தமந்த வெண்மையதாய்த் திண்மை பெறச்செய்யும் சித்தனெவன் - ஒண்மையிலா
veNmai kizhamAy viruttamanta veNmaiyatAyt tiNmai peRachcheyyum chittanevan - oNmaiyilA
ஓட்டினைச்செம் பொன்னா யுயர்செம்பொன் ஓடாகச் சேட்டையறச் செய்கின்ற சித்தனெவன் - காட்டிலுறு
OTTinaichchem ponnA yuyarchempon OTAkach chETTaiyaRach cheykinRa chittanevan - kATTiluRu
காஞ்சிரத்தைக் கற்பகமாய்க் கற்பகத்தைக் காஞ்சிரமாய்த் தேஞ்சிவணச் செய்கின்ற சித்தனெவன் - வாஞ்சையுற
kAnjchirattaik kaRpakamAyk kaRpakattaik kAnjchiramAyt tEnjchivaNach cheykinRa chittanevan - vAnjchaiyuRa
நாரணன்சேய் நான்முகனாய் நான்முகன்சேய் நாரணனாய்ச் சீரணவச் செய்யவல்ல சித்தனெவன் - பேரணவக்
nAraNanchEy nAnmukanAy nAnmukanchEy nAraNanAych chIraNavach cheyyavalla chittanevan - pEraNavak
கொம்மை பெறுங்கோடா கோடியண்டம் எல்லாமோர் செம்மயிர்க்கால் உட்புகுத்தும் சித்தனெவன் - செம்மையிலா
kommai peRungkOTA kOTiyaNTam ellAmOr chemmayirkkAl uTpukuttum chittanevan - chemmaiyilA
வெம்புலியை வெண்பால் விளைபசுவாய் அப்பசுவைச் செம்புலியாச் செய்யவல்ல சித்தனெவன் - அம்புலியை
vempuliyai veNpAl viLaipachuvAy appachuvaich chempuliyAch cheyyavalla chittanevan - ampuliyai
அங்கதிரொண் செங்கதிராய் அம்புலியாய்ப் பம்புகின்ற செங்கதிரைச் செய்யவல்ல சித்தனெவன் - துங்கமுறா
angkatiroN chengkatirAy ampuliyAyp pampukinRa chengkatiraich cheyyavalla chittanevan - tungkamuRA
ஓரணுவோர் மாமலையாய் ஓர்மா மலையதுவோர் சீரணுவாய்ச் செய்யவல்ல சித்தனெவன் - வீரமுடன்
OraNuvOr mAmalaiyAy OrmA malaiyatuvOr chIraNuvAych cheyyavalla chittanevan - vIramuTan
முன்னகையா நின்றதொரு முப்புரத்தை அன்றொருகால் சின்னகையால் தீமடுத்த சித்தனெவன் - முன்னயன்மால்
munnakaiyA ninRatoru muppurattai anRorukAl chinnakaiyAl tImaTutta chittanevan - munnayanmAl
மற்றிருந்த வானவரும் வாய்ந்தசைக்கா வண்ணமொரு சிற்றுரும்பை நாட்டிநின்ற சித்தனெவன் - மற்றவர்போல்
maRRirunta vAnavarum vAyntachaikkA vaNNamoru chiRRurumpai nATTininRa chittanevan - maRRavarpOl
அல்லா அயனும் அரியும் உருத்திரனும் செல்லா நெறிநின்ற சித்தனெவன் - ஒல்லாத
allA ayanum ariyum uruttiranum chellA neRininRa chittanevan - ollAta
கல்லிற் சுவையாய்க் கனியிற் சுவையிலதாய்ச் செல்லப் பணிக்கவல்ல சித்தனெவன் - அல்லலறப்
kalliR chuvaiyAyk kaniyiR chuvaiyilatAych chellap paNikkavalla chittanevan - allalaRap
பார்க்கின்ற யாவர்கட்கும் பாவனா தீதனெனச் சீர்க்கின்ற மெய்ஞ்ஞானச் சித்தனெவன் - மார்க்கங்கள்
pArkkinRa yAvarkaTkum pAvanA tItanenach chIrkkinRa meynjnjAnach chittanevan - mArkkangkaL
ஒன்றென்ற மேலவரை ஒன்றென் றுரைத்தவர்பால் சென்றொன்றி நிற்கின்ற சித்தனெவன் - அன்றொருநாள்
onRenRa mElavarai onRen RuraittavarpAl chenRonRi niRkinRa chittanevan - anRorunAL
கல்லானை தின்னக் கரும்பளித்துப் பாண்டியன்வீண் செல்லா தளித்தமகா சித்தனெவன் - சொல்லாத
kallAnai tinnak karumpaLittup pANTiyanvIN chellA taLittamakA chittanevan - chollAta
ஒன்றே இரண்டேமேல் ஒன்றிரண்டே என்பவற்றுள் சென்றே நடுநின்ற சித்தனெவன் - சென்றேறும்
onRE iraNTEmEl onRiraNTE enpavaRRuL chenRE naTuninRa chittanevan - chenRERum
அத்திரத்தை மென்மலராய் அம்மலரை அத்திரமாய்ச் சித்திரத்தைப் பேசுவிக்கும் சித்தனெவன் - எத்தலத்தும்
attirattai menmalarAy ammalarai attiramAych chittirattaip pEchuvikkum chittanevan - ettalattum
சங்கமதே தாபரமாய்த் தாபரமே சங்கமதாய்ச் செங்கையிடா தாற்றவல்ல சித்தனெவன் - தங்குகின்ற
changkamatE tAparamAyt tAparamE changkamatAych chengkaiyiTA tARRavalla chittanevan - tangkukinRa
சத்தெல்லாம் ஆகிச் சயம்புவாய் ஆனந்தச் சித்தெல்லாம் வல்லசிவ சித்தனெவன் - தத்தெல்லாம்
chattellAm Akich chayampuvAy Anantach chittellAm vallachiva chittanevan - tattellAm
நீட்டாது நெஞ்சம் நிலைத்தவர்க்கும் தன்னுண்மை காட்டாது காட்டிநிற்கும் கள்வனெவன் - பாட்டோடு
nITTAtu nenjcham nilaittavarkkum tannuNmai kATTAtu kATTiniRkum kaLvanevan - pATTOTu
வண்டாலுங் கொன்றை மலரோய் எனமறைகள் கண்டாலும் காணாத கள்வனெவன் - தொண்டாக
vaNTAlung konRai malarOy enamaRaikaL kaNTAlum kANAta kaLvanevan - toNTAka
அள்ளம் செறியார்க்கே அன்றி அறிவார்க்குக் கள்ளம் செறியாத கள்வனெவன் - எள்ளலறக்
aLLam cheRiyArkkE anRi aRivArkkuk kaLLam cheRiyAta kaLvanevan - eLLalaRak
கொண்டவெலாந் தன்பால் கொடுக்குமவர் தம்மிடத்தில் கண்டவெலாம் கொள்ளைகொளுங் கள்வனெவன் - கொண்டுளத்தில்
koNTavelAn tanpAl koTukkumavar tammiTattil kaNTavelAm koLLaikoLung kaLvanevan - koNTuLattil
தன்னையொளிக் கின்றோர்கள் தம்முளொளித் துள்ளவெலாம் கன்னமிடக் கைவந்த கள்வனெவன் - மண்ணுலகைச்
tannaiyoLik kinROrkaL tammuLoLit tuLLavelAm kannamiTak kaivanta kaLvanevan - maNNulakaich
சற்பனைசெய் கின்றதிரோ தானமெனும் சத்தியினால் கற்பனைசெய் தேமயக்கும் கள்வனெவன் - முற்படுமித்
chaRpanaichey kinRatirO tAnamenum chattiyinAl kaRpanaichey tEmayakkum kaLvanevan - muRpaTumit
தொண்டுலகில் உள்ளஉயிர் தோறுமொளித் தாற்றலெலாம் கண்டுலவு கின்றதொரு கள்வனெவன் - விண்டகலா
toNTulakil uLLauyir tORumoLit tARRalelAm kaNTulavu kinRatoru kaLvanevan - viNTakalA
மண்மயக்கும் பொன்மயக்கும் மாதர் மயக்குமெனும் கண்மயக்கம் காட்டிநிற்கும் கள்வனெவன் - உண்மயக்கு
maNmayakkum ponmayakkum mAtar mayakkumenum kaNmayakkam kATTiniRkum kaLvanevan - uNmayakku
மாசு பறிக்கும் மதியுடையோர் தம்முடைய காசு பறிக்கின்ற கள்வனெவன் - ஆசகன்ற
mAchu paRikkum matiyuTaiyOr tammuTaiya kAchu paRikkinRa kaLvanevan - AchakanRa
பெண்ணால் எவையும் பிறப்பித்து மற்றைநுதற் கண்ணால் அழிக்கின்ற கள்வனெவன் - எண்ணாது
peNNAl evaiyum piRappittu maRRainutaR kaNNAl azhikkinRa kaLvanevan - eNNAtu
நானென்று நிற்கின் நடுவேயந் நானாணத் தானென்று நிற்கும் சதுரனெவன் - மானென்ற
nAnenRu niRkin naTuvEyan nAnANat tAnenRu niRkum chaturanevan - mAnenRa
மாயைதனைக் காட்டி மறைப்பித்தம் மாயையிற்றன் சாயைதனைக் காட்டும் சதுரனெவன் - நேயமுடன்
mAyaitanaik kATTi maRaippittam mAyaiyiRRan chAyaitanaik kATTum chaturanevan - nEyamuTan
நான்மறையும் நான்முகனும் நாரணனும் நாடுதொறும் தான்மறையும் மேன்மைச் சதுரனெவன் - வான்மறையாம்
nAnmaRaiyum nAnmukanum nAraNanum nATutoRum tAnmaRaiyum mEnmaich chaturanevan - vAnmaRaiyAm
முன்னை மறைக்கும் முடிப்பொருளென் றாய்பவர்க்கும் தன்னை மறைக்கும் சதுரனெவன் - உன்னுகின்றோர்
munnai maRaikkum muTipporuLen RAypavarkkum tannai maRaikkum chaturanevan - unnukinROr
சித்தத்திற் சுத்த சிதாகாசம் என்றொருசிற் சத்தத்திற் காட்டும் சதுரனெவன் - முத்தரென
chittattiR chutta chitAkAcham enRoruchiR chattattiR kATTum chaturanevan - muttarena
யாவர் இருந்தார் அவர்காண வீற்றிருக்கும் தேவர் புகழ்தலைமைத் தேவனெவன் - யாவர்களும்
yAvar iruntAr avarkANa vIRRirukkum tEvar pukazhtalaimait tEvanevan - yAvarkaLum
இவ்வணத்தன் இவ்விடத்தன் இவ்வியலன் என்றறியாச் செவ்வணத்தன் ஆம்தலைமைத் தேவனெவன் - மெய்வணத்தோர்
ivvaNattan ivviTattan ivviyalan enRaRiyAch chevvaNattan Amtalaimait tEvanevan - meyvaNattOr
தாம்வாழ அண்ட சராசரங்கள் தாம்வாழ நாம்வாழத் தன்னுரையாம் நான்மறைகள் - தாம்வாழச்
tAmvAzha aNTa charAcharangkaL tAmvAzha nAmvAzhat tannuraiyAm nAnmaRaikaL - tAmvAzhach
சாருருவின் நல்லருளே சத்தியாய் மெய்யறிவின் சீருருவே ஓருருவாம் தேவனெவன் - ஈருருவும்
chAruruvin nallaruLE chattiyAy meyyaRivin chIruruvE OruruvAm tEvanevan - Iruruvum
ஒன்றென் றுணர உணர்த்தி அடியருளம் சென்றங் கமர்ந்தருளும் தேவனெவன் - என்றென்றும்
onRen RuNara uNartti aTiyaruLam chenRang kamarntaruLum tEvanevan - enRenRum
தற்சகசம் என்றே சமயம் சமரசமாம் சிற்சபையில் வாழ்கின்ற தேவனெவன் - பிற்படுமோர்
taRchakacham enRE chamayam chamarachamAm chiRchapaiyil vAzhkinRa tEvanevan - piRpaTumOr
பொய்விட்டு மெய்ந்நெறியைப் போற்றித்தற் போதத்தைக் கைவிட் டுணர்வே கடைப்பிடித்து - நெய்விட்ட
poyviTTu meynneRiyaip pORRittaR pOtattaik kaiviT TuNarvE kaTaippiTittu - neyviTTa
தீப்போற் கனலும் செருக்கறவே செங்கமலப் பூப்போலும் தன்தாள் புணைபற்றிக் - காப்பாய
tIppOR kanalum cherukkaRavE chengkamalap pUppOlum tantAL puNaipaRRik - kAppAya
வெண் றணிந்து விதிர்விதிர்த்து மெய்பொடிப்பக் கண்ர் அருவி கலந்தாடி- உண்ர்மை
veN RaNintu vitirvitirttu meypoTippak kaNr aruvi kalantATi- uNrmai
என்புருகி உள்ளுருகி இன்பார் உயிருருகி அன்புருகி அன்புருவம் ஆகிப்பின் - வன்பகன்று
enpuruki uLLuruki inpAr uyiruruki anpuruki anpuruvam Akippin - vanpakanRu
புண்ணியா திங்கட் புரிசடையாய் பொன்னிதழிக் கண்ணியா எங்கள் களைகண்ணே - எண்ணியாங்
puNNiyA tingkaT purichaTaiyAy ponnitazhik kaNNiyA engkaL kaLaikaNNE - eNNiyAng
கன்பர்க் கருளும் அரசே அமுதேபே ரின்பக் கடலே எமதுறவே - மன்பெற்று
kanpark karuLum arachE amutEpE rinpak kaTalE ematuRavE - manpeRRu
மாற்றுரையாப் பொன்னே மணியேஎம் கண்மணியே ஏற்றுவந்த மெய்ப்பொருளே என்றுநிதம் - போற்றிநின்றால்
mARRuraiyAp ponnE maNiyEem kaNmaNiyE ERRuvanta meypporuLE enRunitam - pORRininRAl
உள்ளூறி உள்ளத் துணர்வூறி அவ்வுணர்வின் அள்ளூறி அண்ணித் தமுதூறித் - தெள்ளூறும்
uLLURi uLLat tuNarvURi avvuNarvin aLLURi aNNit tamutURit - teLLURum
வான்போல் பரவி மதிபோல் குளிர்ந்துயர்கோல் தேன்போல் மதுரிக்கும் தேவனெவன் - வான்போனார்
vAnpOl paravi matipOl kuLirntuyarkOl tEnpOl maturikkum tEvanevan - vAnpOnAr
மாண்கொடுக்கும் தெய்வ மடந்தையர்க்கு மங்கலப்பொன் நாண்கொடுக்க நஞ்சுவந்த நாதனெவன் - நாண்மலர்பெய்
mANkoTukkum teyva maTantaiyarkku mangkalappon nANkoTukka nanjchuvanta nAtanevan - nANmalarpey
தார்த்தியாய்த் தேவர் அரகரவென் றேத்தஅட்ட மூர்த்தியாய் நின்ற முதல்வனெவன் - சீர்த்திபெற
tArttiyAyt tEvar arakaraven REttaaTTa mUrttiyAy ninRa mutalvanevan - chIrttipeRa
ஈண்டற் புதவடிவாய் எத்தேவ ரேனுநின்று காண்டற் கரிதாம் கணேசனெவன் - வேண்டுற்றுப்
INTaR putavaTivAy ettEva rEnuninRu kANTaR karitAm kaNEchanevan - vENTuRRup
பூமியெங்கும் வாழ்த்திப் புகழ்வார் விரும்புமிட்ட காமியங்கள் ஈயும் கணேசனெவன் - நாமியங்க
pUmiyengkum vAzhttip pukazhvAr virumpumiTTa kAmiyangkaL Iyum kaNEchanevan - nAmiyangka
ஏண வருமிடையூ றெல்லாம் அகற்றியருள் காண எமக்கீயும் கணேசனெவன் - மாணவரு
ENa varumiTaiyU RellAm akaRRiyaruL kANa emakkIyum kaNEchanevan - mANavaru
முந்த மறையின் முழுப்பொருளை நான்முகற்குத் தந்த அருட்கடலாம் சாமியெவன் - தந்தமக்காம்
munta maRaiyin muzhupporuLai nAnmukaRkut tanta aruTkaTalAm chAmiyevan - tantamakkAm
வாதகற்றி உண்மை மரபளித்து வஞ்சமலக் கோதகற்றும் நெஞ்சக் குகேசனெவன் - தீதகற்றித்
vAtakaRRi uNmai marapaLittu vanjchamalak kOtakaRRum nenjchak kukEchanevan - tItakaRRit
தங்கும் உலகங்கள் சாயாமற் செஞ்சடைமேல் கங்கைதனைச் சேர்த்த கடவுளெவன் - எங்குறினும்
tangkum ulakangkaL chAyAmaR chenjchaTaimEl kangkaitanaich chErtta kaTavuLevan - engkuRinum
கூம்பா நிலைமைக் குணத்தோர் தொழுகின்ற பாம்பா பரணப் பரமனெவன் - கூம்பாது
kUmpA nilaimaik kuNattOr tozhukinRa pAmpA paraNap paramanevan - kUmpAtu
போற்றுரைத்து நிற்கும் புனிதன்மேல் வந்தகொடுங் கூற்றுதைத்த செந்தாள் குழகனெவன் - ஆற்றலுறு
pORRuraittu niRkum punitanmEl vantakoTung kURRutaitta chentAL kuzhakanevan - ARRaluRu
வையம் துதிக்கும் மகாலிங்க மூர்த்திமுதல் ஐயைந்து மூர்த்தியெனும் ஐயனெவன் - ஐயந்தீர்
vaiyam tutikkum makAlingka mUrttimutal aiyaintu mUrttiyenum aiyanevan - aiyantIr
வல்லார்சொல் வண்ணமெந்த வண்ணமந்த வண்ணங்கள் எல்லாம் உடைய விதத்தனெவன் - எல்லார்க்கும்
vallArchol vaNNamenta vaNNamanta vaNNangkaL ellAm uTaiya vitattanevan - ellArkkum
தாம்தலைவ ராகத்தம் தாள்தொழுமெத் தேவர்க்கும் ஆந்தலைமை ஈந்தபர மார்த்தனெவன் - போந்துயிர்கள்
tAmtalaiva rAkattam tALtozhumet tEvarkkum Antalaimai Intapara mArttanevan - pOntuyirkaL
எங்கெங் கிருந்துமனத் தியாது விழைந்தாலும் அங்கங் கிருந்தளிக்கும் அண்ணலெவன் - புங்கமிகும்
engkeng kiruntumanat tiyAtu vizhaintAlum angkang kiruntaLikkum aNNalevan - pungkamikum
அண்ணல் திருமலர்க்கை ஆழிபெறக் கண்ணிடந்த கண்ணற் கருளியமுக் கண்ணனெவன் - மண்ணிடத்தில்
aNNal tirumalarkkai AzhipeRak kaNNiTanta kaNNaR karuLiyamuk kaNNanevan - maNNiTattil
ஓயாது சூல்முதிர்ந்த ஓர்பெண் தனக்காகத் தாயாகி வந்த தயாளனெவன் - சேயாக
OyAtu chUlmutirnta OrpeN tanakkAkat tAyAki vanta tayALanevan - chEyAka
வேல்பிடித்த கண்ணப்பன் மேவுமெச்சில் வேண்டுமிதத் தாற்பொசித்து நேர்ந்த தயாளனெவன் - பாற்குடத்தைத்
vElpiTitta kaNNappan mEvumechchil vENTumitat tARpochittu nErnta tayALanevan - pARkuTattait
தான்தந்தை என்றெறிந்தோன் தாளெறிந்த தண்டிக்குத் தான்தந்தை ஆன தயாளனெவன் - தான்கொண்டு
tAntantai enReRintOn tALeRinta taNTikkut tAntantai Ana tayALanevan - tAnkoNTu
சம்பு நறுங்கனியின் தன்விதையைத் தாள்பணிந்த சம்பு முனிக்கீயும் தயாளனெவன் - அம்புவியில்
champu naRungkaniyin tanvitaiyait tALpaNinta champu munikkIyum tayALanevan - ampuviyil
ஆண்டவனென் றேத்தப்பொன் னம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம்செய் கின்ற தயாளனெவன் - காண்தகைய
ANTavanen REttappon nampalattil Anantat tANTavamchey kinRa tayALanevan - kANtakaiya
முத்துச்சிவிகையின்மேல் முன்காழி ஓங்குமுழு முத்தைத் தனிவைத்த முத்தனெவன் - பத்திபெறு
muttuchchivikaiyinmEl munkAzhi Ongkumuzhu muttait tanivaitta muttanevan - pattipeRu
நாவொன்றரசர்க்கு நாம்தருவேம் நல்லூரில் வாஎன்று வாய்மலர்ந்த வள்ளலெவன் - பூவொன்று
nAvonRaracharkku nAmtaruvEm nallUril vAenRu vAymalarnta vaLLalevan - pUvonRu
நன்றொண்டர் சுந்தரரை நாம்தடுக்க வந்தமையால் வன்றொண்டன் நீஎன்ற வள்ளலெவன் - நன்றொண்டின்
nanRoNTar chuntararai nAmtaTukka vantamaiyAl vanRoNTan nIenRa vaLLalevan - nanRoNTin
காணிக்கை யாகக் கருத்தளித்தார் தம்மொழியை மாணிக்கம் என்றுரைத்த வள்ளலெவன் - தாணிற்கும்
kANikkai yAkak karuttaLittAr tammozhiyai mANikkam enRuraitta vaLLalevan - tANiRkum
தன்னன்பர் தாம்வருந்தில் சற்றுந் தரியாது மன்னன் பருளளிக்கும் வள்ளலெவன் - முன்னன்பில்
tannanpar tAmvaruntil chaRRun tariyAtu mannan paruLaLikkum vaLLalevan - munnanpil
சால்புடைய நல்லோர்க்குத் தண்ணருள்தந் தாட்கொளவோர் மால்விடைமேல் வந்தருளும் வள்ளலெவன் - மான்முதலோர்
chAlpuTaiya nallOrkkut taNNaruLtan tATkoLavOr mAlviTaimEl vantaruLum vaLLalevan - mAnmutalOr
தாமலையா வண்ணம் தகையருளி ஓங்குவெள்ளி மாமலைவாழ் கின்றஅருள் வள்ளலெவன் - ஆமவனே
tAmalaiyA vaNNam takaiyaruLi OngkuveLLi mAmalaivAzh kinRaaruL vaLLalevan - AmavanE
நம்மைப் பணிகொண்டு நாரணனும் நாடரிதாம் செம்மைக் கதியருள்நம் தெய்வங்காண் - எம்மையினும்
nammaip paNikoNTu nAraNanum nATaritAm chemmaik katiyaruLnam teyvangkAN - emmaiyinum
நாடக் கிடைத்தல் நமக்கன்றி நான்முகற்கும் தேடக் கிடையாநம் தெய்வங்காண் - நீடச்சீர்
nATak kiTaittal namakkanRi nAnmukaRkum tETak kiTaiyAnam teyvangkAN - nITachchIr
நல்வந் தனைசெய்யும் நம்போல்வார்க் கோர்ஞானச் செல்வந் தருநமது தெய்வம்காண் - சொல்வந்த
nalvan tanaicheyyum nampOlvArk kOrnjAnach chelvan tarunamatu teyvamkAN - cholvanta
எண்மைபெறும் நாமுலகில் என்றும் பிறந்திறவாத் திண்மை அளித்தருள்நம் தெய்வம்காண் - வண்மையுற
eNmaipeRum nAmulakil enRum piRantiRavAt tiNmai aLittaruLnam teyvamkAN - vaNmaiyuRa
முப்பாழ் கடந்த முழுப்பாழுக் கப்பாலைச் செப்பாது செப்புறுநம் தேசிகன்காண் - தப்பாது
muppAzh kaTanta muzhuppAzhuk kappAlaich cheppAtu cheppuRunam tEchikankAN - tappAtu
தீரா இடும்பைத் திரிபென்பதி யாதொன்றும் சேரா நெறியருள்நம் தேசிகன்காண் - ஆராது
tIrA iTumpait tiripenpati yAtonRum chErA neRiyaruLnam tEchikankAN - ArAtu
நித்தம் தெரியா நிலைமே வியநமது சித்தம் தெளிவிக்கும் தேசிகன்காண் - வித்தரென
nittam teriyA nilaimE viyanamatu chittam teLivikkum tEchikankAN - vittarena
யாதொன்றும் தேரா திருந்தநமக் கிவ்வுலகம் தீதென் றறிவித்த தேசிகன்காண் - கோதின்றி
yAtonRum tErA tiruntanamak kivvulakam tIten RaRivitta tEchikankAN - kOtinRi
ஓசை பெறுகடல்சூ ழுற்ற வுலகினம்மை ஆசை யுடனீன்ற அப்பன்காண் - மாசுறவே
Ochai peRukaTalchU zhuRRa vulakinammai Achai yuTanInRa appankAN - mAchuRavE
வன்பாய் வளர்க்கின்ற மற்றையர்போ லல்லாமல் அன்பாய் நமைவளர்க்கும் அப்பன்காண் - இன்பாக
vanpAy vaLarkkinRa maRRaiyarpO lallAmal anpAy namaivaLarkkum appankAN - inpAka
இப்பாரில் சேயார் இதயம் மலர்ந்தம்மை அப்பா எனும்நங்கள் அப்பன்காண் - செப்பாமல்
ippAril chEyAr itayam malarntammai appA enumnangkaL appankAN - cheppAmal
எள்ளித் திரிந்தாலும் இந்தா என் றின்னமுதம் அள்ளிக் கொடுக்குநம தப்பன்காண் - உள்ளிக்கொண்
eLLit tirintAlum intA en Rinnamutam aLLik koTukkunama tappankAN - uLLikkoN
டின்றே அருள்வாய் எனத்துதிக்கில் ஆங்குநமக் கன்றே அருளுநம தப்பன்காண் - நன்றேமுன்
TinRE aruLvAy enattutikkil Angkunamak kanRE aruLunama tappankAN - nanREmun
காதரவு செய்து நலம் கற்பித்துப் பின்பெரிய ஆதரவு செய்யுநங்கள் அப்பன்காண் - கோதுறுமா
kAtaravu cheytu nalam kaRpittup pinperiya Ataravu cheyyunangkaL appankAN - kOtuRumA
வஞ்சமலத் தால்வருந்தி வாடுகின்ற நந்தமையே அஞ்சலஞ்ச லென்றருளும் அப்பன்காண் - துஞ்சலெனும்
vanjchamalat tAlvarunti vATukinRa nantamaiyE anjchalanjcha lenRaruLum appankAN - tunjchalenum
நச்சென்ற வாதனையை நாளுமெண்ணி நாமஞ்சும் அச்சம் கெடுத்தாண்ட அப்பன்காண் - நிச்சலுமிங்
nachchenRa vAtanaiyai nALumeNNi nAmanjchum achcham keTuttANTa appankAN - nichchaluming
கேயிரவும் எல்லும் எளியேம் பிழைத்தபிழை ஆயிரமும் தான்பொறுக்கும் அப்பன்காண் - சேயிரங்கா
kEyiravum ellum eLiyEm pizhaittapizhai Ayiramum tAnpoRukkum appankAN - chEyirangkA
முன்னம் எடுத்தணைத்து முத்தமிட்டுப் பாலருத்தும் அன்னையினும் அன்புடைய அப்பன்காண் - மன்னுலகில்
munnam eTuttaNaittu muttamiTTup pAlaruttum annaiyinum anpuTaiya appankAN - mannulakil
வன்மை யறப்பத்து மாதம் சுமந்துநமை நன்மை தரப்பெற்ற நற்றாய்காண் - இம்மைதனில்
vanmai yaRappattu mAtam chumantunamai nanmai tarappeRRa naRRAykAN - immaitanil
அன்றொருநாள் நம்பசிகண் டந்தோ தரியாது நன்றிரவில்சோறளித்த நற்றாய்காண் - என்றுமருட்
anRorunAL nampachikaN TantO tariyAtu nanRiravilchORaLitta naRRAykAN - enRumaruT
செம்மை இலாச்சிறிய தேவர்கள்பால் சேர்க்காது நம்மை வளர்க்கின்ற நற்றாய்காண் - சும்மையென
chemmai ilAchchiRiya tEvarkaLpAl chErkkAtu nammai vaLarkkinRa naRRAykAN - chummaiyena
மூளும் பெருங்குற்றம் முன்னிமேல் மேற்செயினும் நாளும் பொறுத்தருளும் நற்றாய்காண் - மூளுகின்ற
mULum perungkuRRam munnimEl mERcheyinum nALum poRuttaruLum naRRAykAN - mULukinRa
வன்னெறியிற் சென்றாலும் வாவென் றழைத்துநமை நன்னெறியிற் சேர்க்கின்ற நற்றாய்காண் - செந்நெறியின்
vanneRiyiR chenRAlum vAven Razhaittunamai nanneRiyiR chErkkinRa naRRAykAN - chenneRiyin
நாம்தேடா முன்னம் நமைத்தேடிப் பின்புதனை நாம்தேடச் செய்கின்ற நற்றாய்காண் - ஆம்தோறும்
nAmtETA munnam namaittETip pinputanai nAmtETach cheykinRa naRRAykAN - AmtORum
காலம் அறிந்தே கனிவோடு நல்லருட்பால் ஞாலம் மிசையளிக்கும் நற்றாய்காண் - சாலவுறு
kAlam aRintE kanivOTu nallaruTpAl njAlam michaiyaLikkum naRRAykAN - chAlavuRu
வெம்பிணியும் வேதனையும் வேசறிக்கை யும்துயரும் நம்பசியும் தீர்த்தருளும் நற்றாய்காண் - அம்புவியில்
vempiNiyum vEtanaiyum vEchaRikkai yumtuyarum nampachiyum tIrttaruLum naRRAykAN - ampuviyil
வெந்நீரில் ஆட்டிடிலெம் மெய்நோகும் என்றருளாம் நன்னீரில் ஆட்டுகின்ற நற்றாய்காண் - எந்நீரின்
vennIril ATTiTilem meynOkum enRaruLAm nannIril ATTukinRa naRRAykAN - ennIrin
மேலாய் நமக்கு வியனுலகில் அன்புடைய நாலா யிரம்தாயில் நற்றாய்காண் - ஏலாது
mElAy namakku viyanulakil anpuTaiya nAlA yiramtAyil naRRAykAN - ElAtu
வாடியழு தாலெம் வருத்தம் தரியாது நாடிஎடுத் தணைக்கும் நற்றாய்காண் - நீடுலகில்
vATiyazhu tAlem varuttam tariyAtu nATieTut taNaikkum naRRAykAN - nITulakil
தான்பாடக்கேட்டுத் தமியேன் களிக்குமுன்னம் நான்பாடக்கேட்டுவக்கும் நற்றாய்காண் - வான்பாடும்
tAnpATakkETTut tamiyEn kaLikkumunnam nAnpATakkETTuvakkum naRRAykAN - vAnpATum
ஞானமணம் செய்யருளாம் நங்கைதனைத் தந்துநமக் கானமணம் செய்விக்கும் அம்மான்காண் - தேனினொடும்
njAnamaNam cheyyaruLAm nangkaitanait tantunamak kAnamaNam cheyvikkum ammAnkAN - tEninoTum
இன்பால் அமுதாதி ஏக்கமுற இன்னருள்கொண் டன்பால் விருந்தளிக்கும் அம்மான்காண் - வன்பாவ
inpAl amutAti EkkamuRa innaruLkoN TanpAl viruntaLikkum ammAnkAN - vanpAva
ஆழ்கடல்வீழ்ந் துள்ளம் அழுந்தும் நமையெடுத்துச் சூழ்கரையில் ஏற்றும் துணைவன்காண் - வீழ்குணத்தால்
AzhkaTalvIzhn tuLLam azhuntum namaiyeTuttuch chUzhkaraiyil ERRum tuNaivankAN - vIzhkuNattAl
இன்பம் எனைத்தும் இதுவென் றறியாநம் துன்பம் துடைக்கும் துணைவன்காண் - வன்பவமாம்
inpam enaittum ituven RaRiyAnam tunpam tuTaikkum tuNaivankAN - vanpavamAm
தீநெறியிற் சென்று தியங்குகின்ற நந்தமக்குத் தூநெறியைக் காட்டும் துணைவன்காண் - மாநிலத்தில்
tIneRiyiR chenRu tiyangkukinRa nantamakkut tUneRiyaik kATTum tuNaivankAN - mAnilattil
இன்றுதொட்ட தன்றி யியற்கையாய் நந்தமக்குத் தொன்றுதொட்டு வந்தவருட் சுற்றங்காண் - தொன்றுதொட்டே
inRutoTTa tanRi yiyaRkaiyAy nantamakkut tonRutoTTu vantavaruT chuRRangkAN - tonRutoTTE
ஆயுமுடற் கன்புடைத்தாம் ஆருயிரிற் றான்சிறந்த நேயம்வைத்த நம்முடைய நேசன்காண் - பேயரென
AyumuTaR kanpuTaittAm AruyiriR RAnchiRanta nEyamvaitta nammuTaiya nEchankAN - pEyarena
வாங்காது நாமே மறந்தாலும் நம்மைவிட்டு நீங்காத நம்முடைய நேசன்காண் - தீங்காக
vAngkAtu nAmE maRantAlum nammaiviTTu nIngkAta nammuTaiya nEchankAN - tIngkAka
ஈட்டுகின்ற ஆபத்தில் இந்தா எனஅருளை நீட்டுகின்ற நம்முடைய நேசன்காண் - கூட்டுலகில்
ITTukinRa Apattil intA enaaruLai nITTukinRa nammuTaiya nEchankAN - kUTTulakil
புல்லென்ற மாயையிடைப் போந்தோறும் நம்மையிங்கு நில்லென் றிருத்துகின்ற நேசன்காண் - சில்லென்றென்
pullenRa mAyaiyiTaip pOntORum nammaiyingku nillen RiruttukinRa nEchankAN - chillenRen
உட்டூவும் தன்னைமறந் துண்டாலும் மற்றதற்கு நிட்டூரம் செய்யாத நேசன்காண் - நட்டூர்ந்து
uTTUvum tannaimaRan tuNTAlum maRRataRku niTTUram cheyyAta nEchankAN - naTTUrntu
வஞ்சமது நாமெண்ணி வாழ்ந்தாலும் தான்சிறிதும் நெஞ்சிலது வையாத நேசன்காண் - எஞ்சலிலாப்
vanjchamatu nAmeNNi vAzhntAlum tAnchiRitum nenjchilatu vaiyAta nEchankAN - enjchalilAp
பார்நின்ற நாம்கிடையாப் பண்டமெது வேண்டிடினும் நேர்நின் றளித்துவரு நேசன்காண் - ஆர்வமுடன்
pArninRa nAmkiTaiyAp paNTametu vENTiTinum nErnin RaLittuvaru nEchankAN - ArvamuTan
ஆர்ந்தநமக் கிவ்விடத்தும் அவ்விடத்தும் எவ்விடத்தும் நேர்ந்தஉயிர் போற்கிடைத்த நேசன்காண் - சேர்ந்துமிகத்
Arntanamak kivviTattum avviTattum evviTattum nErntauyir pORkiTaitta nEchankAN - chErntumikat
தாபஞ்செய் குற்றம் தரினும் பொறுப்பதன்றிக் கோபஞ் செயாநமது கோமான்காண் - பாபமற
tApanjchey kuRRam tarinum poRuppatanRik kOpanj cheyAnamatu kOmAnkAN - pApamaRa
விள்ளுமிறை நாமன்பு மேவலன்றி வேற்றரசர் கொள்ளுமிறை வாங்காநம் கோமான்காண் - உள்ளமுற
viLLumiRai nAmanpu mEvalanRi vERRarachar koLLumiRai vAngkAnam kOmAnkAN - uLLamuRa
உண்டளிக்கும் ஊணுடைபூண் ஊரா திகள்தானே கொண்டுநமக் கிங்களிக்கும் கோமான்காண் - மண்டலத்தில்
uNTaLikkum UNuTaipUN UrA tikaLtAnE koNTunamak kingkaLikkum kOmAnkAN - maNTalattil
ஒன்றாலும் நீங்கா துகங்கள் பலபலவாய்ச் சென்றாலும் செல்லாநம் செல்வம்காண் - முன்தாவி
onRAlum nIngkA tukangkaL palapalavAych chenRAlum chellAnam chelvamkAN - muntAvi
நாடிவைக்கும் நல்லறிவோர் நாளும் தவம்புரிந்து தேடிவைத்த நம்முடைய செல்வம்காண் - மாடிருந்து
nATivaikkum nallaRivOr nALum tavampurintu tETivaitta nammuTaiya chelvamkAN - mATiruntu
நாமெத் தனைநாளும் நல்கிடினும் தானுலவாச் சேமித்த வைப்பின் திரவியம்காண் - பூமிக்கண்
nAmet tanainALum nalkiTinum tAnulavAch chEmitta vaippin tiraviyamkAN - pUmikkaN
ஈங்குறினும் வானாதி யாங்குறினும் விட்டகலா தோங்கருளால் நம்மை உடையவன்காண் - ஆங்கவன்தன்
IngkuRinum vAnAti yAngkuRinum viTTakalA tOngkaruLAl nammai uTaiyavankAN - Angkavantan
கங்கைச் சடையழகும் காதன்மிகும் அச்சடைமேல் திங்கட் கொழுந்தின் திருவழகும் - திங்கள்தன்மேல்
kangkaich chaTaiyazhakum kAtanmikum achchaTaimEl tingkaT kozhuntin tiruvazhakum - tingkaLtanmEl
சார்ந்திலங்கும் கொன்றைமலர்த் தாரழகும் அத்தார்மேல் ஆர்ந்திலங்கும் வண்டின் அணியழகும் - தேர்ந்தவர்க்கும்
chArntilangkum konRaimalart tArazhakum attArmEl Arntilangkum vaNTin aNiyazhakum - tErntavarkkum
நோக்கரிய நோக்கழகும் நோக்கார் நுதலழகும் போக்கரிய நன்னுதலில் பொட்டழகும் - தேக்குதிரி
nOkkariya nOkkazhakum nOkkAr nutalazhakum pOkkariya nannutalil poTTazhakum - tEkkutiri
புண்டரத்தின் நல்லழகும் பொன்னருள்தான் தன்னெழிலைக் கண்டவர்பால் ஊற்றுகின்ற கண்ணழகும் - தொண்டர்கள்தம்
puNTarattin nallazhakum ponnaruLtAn tannezhilaik kaNTavarpAl URRukinRa kaNNazhakum - toNTarkaLtam
நேசித்த நெஞ்சமலர் நீடு மணமுகந்த நாசித் திருக்குமிழின் நல்லழகும் - தேசுற்ற
nEchitta nenjchamalar nITu maNamukanta nAchit tirukkumizhin nallazhakum - tEchuRRa
முல்லை முகையாம் முறுவலழ கும்பவள எல்லை வளர்செவ் விதழழகும் - நல்லவரைத்
mullai mukaiyAm muRuvalazha kumpavaLa ellai vaLarchev vitazhazhakum - nallavarait
தேவென்ற தீம்பாலில் தேன்கலந்தாற் போலினிக்க வாவென் றருளுமலர் வாயழகும் - பூவொன்றும்
tEvenRa tImpAlil tEnkalantAR pOlinikka vAven RaruLumalar vAyazhakum - pUvonRum
கோன்பரவும் சங்கக் குழையழகும் அன்பர்மொழித் தேன்பரவும் வள்ளைச் செவியழகும் - நான்பரவி
kOnparavum changkak kuzhaiyazhakum anparmozhit tEnparavum vaLLaich cheviyazhakum - nAnparavi
வேட்டவையை நின்றாங்கு விண்ணப்பம் செய்யவது கேட்டருளும் வார்செவியின் கேழழகும் - நாட்டிலுயர்
vETTavaiyai ninRAngku viNNappam cheyyavatu kETTaruLum vArcheviyin kEzhazhakum - nATTiluyar
சைவம் முதலாய்த் தழைக்க அருள்சுரக்கும் தெய்வ முகத்தின் திருவழகும் - தெய்வமுகத்
chaivam mutalAyt tazhaikka aruLchurakkum teyva mukattin tiruvazhakum - teyvamukat
துள்ளம் குளிர உயிர்குளிர மெய்குளிரக் கொள்ளும் கருணைக் குறிப்பழகும் - உள்ளறிவின்
tuLLam kuLira uyirkuLira meykuLirak koLLum karuNaik kuRippazhakum - uLLaRivin
எள்ளாத மேன்மையுல கெல்லாம் தழைப்பவொளிர் தெள்ளார் அமுதச் சிரிப்பழகும் - உள்ளோங்கும்
eLLAta mEnmaiyula kellAm tazhaippavoLir teLLAr amutach chirippazhakum - uLLOngkum
சீல அருளின் திறத்துக் கிலச்சினையாம் நீல மணிமிடற்றின் நீடழகும் - மாலகற்றி
chIla aruLin tiRattuk kilachchinaiyAm nIla maNimiTaRRin nITazhakum - mAlakaRRi
வாழ்ந்தொளிரும் அன்பர் மனம்போலும் வெண்று சூழ்ந்தொளிகொண் டோங்குதிருத் தோளழகும் - தாழ்ந்திலவாய்த்
vAzhntoLirum anpar manampOlum veNRu chUzhntoLikoN TOngkutirut tOLazhakum - tAzhntilavAyt
தானோங்கும் அண்டமெலாம் சத்தமுறக் கூவுமொரு மானோங்கும் செங்கை மலரழகும் - ஊனோங்கும்
tAnOngkum aNTamelAm chattamuRak kUvumoru mAnOngkum chengkai malarazhakum - UnOngkum
ஆணவத்தின் கூற்றை அழிக்க ஒளிர்மழுவைக் காணவைத்த செங்கமலக் கையழகும் - நாணமுற்றே
ANavattin kURRai azhikka oLirmazhuvaik kANavaitta chengkamalak kaiyazhakum - nANamuRRE
ஏங்கும் பரிசுடைய எம்போல்வார் அச்சமெலாம் வாங்கும் அபய மலரழகும் - தீங்கடையாச்
Engkum parichuTaiya empOlvAr achchamelAm vAngkum apaya malarazhakum - tIngkaTaiyAch
சீர்வரவும் எல்லாச் சிறப்பும் பெறவுமருள் சார்வரத வொண்கைத் தலத்தழகும் - பேரரவப்
chIrvaravum ellAch chiRappum peRavumaruL chArvarata voNkait talattazhakum - pEraravap
பூணிலங்க வெண்பொற் பொடியிலங்க என்பணித்தார் மாணிலங்க மேவுதிரு மார்பழகும் - சேணிலத்தர்
pUNilangka veNpoR poTiyilangka enpaNittAr mANilangka mEvutiru mArpazhakum - chENilattar
மேலுடுத்த ஆடையெலாம் வெஃக வியாக்கிரமத் தோலுடுத்த ஒண்மருங்கில் துன்னழகும் - பாலடுத்த
mEluTutta ATaiyelAm veஃka viyAkkiramat tOluTutta oNmarungkil tunnazhakum - pAlaTutta
கேழ்க்கோல மேவுதிருக் கீளழகும் அக்கீளின் கீழ்க்கோ வணத்தின் கிளரழகும் - கீட்கோலம்
kEzhkkOla mEvutiruk kILazhakum akkILin kIzhkkO vaNattin kiLarazhakum - kITkOlam
ஒட்டிநின்ற மெய்யன்பர் உள்ள மெலாஞ்சேர்த்துக் கட்டிநின்ற வீரக் கழலழகும் - எட்டிரண்டும்
oTTininRa meyyanpar uLLa melAnjchErttuk kaTTininRa vIrak kazhalazhakum - eTTiraNTum
சித்திக்கும் யோகியர்தம் சிந்தைதனில் தேன்போன்று தித்திக்கும் சேவடியின் சீரழகும் - சத்தித்து
chittikkum yOkiyartam chintaitanil tEnpOnRu tittikkum chEvaTiyin chIrazhakum - chattittu
மல்வைத்த மாமறையும் மாலயனும் காண்பரிய செல்வத் திருவடியின் சீரழகும் - சொல்வைத்த
malvaitta mAmaRaiyum mAlayanum kANpariya chelvat tiruvaTiyin chIrazhakum - cholvaitta
செம்மை மணிமலையைச் சேர்ந்த - மரகதம்போல் அம்மையொரு பால்வாழ்ந் தருளழகும் - அம்மமிகச்
chemmai maNimalaiyaich chErnta - marakatampOl ammaiyoru pAlvAzhn taruLazhakum - ammamikach
சீர்த்திநிகழ் செம்பவளச் செம்மே னியினழகும் பார்த்திருந்தால் நம்முட் பசிபோங்காண் - தீர்த்தருளம்
chIrttinikazh chempavaLach chemmE niyinazhakum pArttiruntAl nammuT pachipOngkAN - tIrttaruLam
கொண்டிருந்தான் பொன்மேனிக் கோலமதை நாம்தினமுங் கண்டிருந்தால் அல்லலெலாம் கட்டறுங்காண் - தொண்டடைந்து
koNTiruntAn ponmEnik kOlamatai nAmtinamung kaNTiruntAl allalelAm kaTTaRungkAN - toNTaTaintu
பாட்டால் அவன்புகழைப் பாடுகின்றோர் பக்கநின்று கேட்டால் வினைகள்விடை கேட்கும்காண் - நீட்டாமல்
pATTAl avanpukazhaip pATukinROr pakkaninRu kETTAl vinaikaLviTai kETkumkAN - nITTAmal
ஒன்னார் புரம்பொடித்த உத்தமனே என்றொருகால் சொன்னா லுலகத் துயரறுங்காண் - எந்நாளும்
onnAr purampoTitta uttamanE enRorukAl chonnA lulakat tuyaraRungkAN - ennALum
பன்னுமுள்ளத் துள்ளாம் பரசிவமே என்றொருகால் உன்னுமுன்னம் தீமையெலாம் ஓடிடுங்காண் - அன்னவன்றன்
pannumuLLat tuLLAm parachivamE enRorukAl unnumunnam tImaiyelAm OTiTungkAN - annavanRan
ஆட்டியல்காற் பூமாட் டடையென்றால் அந்தோமுன் நீட்டியகால் பின்வாங்கி நிற்கின்றாய் - ஊட்டுமவன்
ATTiyalkAR pUmAT TaTaiyenRAl antOmun nITTiyakAl pinvAngki niRkinRAy - UTTumavan
மாற்கடவு ளாமோர் மகவலறக் கண்டுதிருப் பாற்கடலை யீந்தவருட் பான்மைதனை - நூற்கடலின்
mARkaTavu LAmOr makavalaRak kaNTutirup pARkaTalai yIntavaruT pAnmaitanai - nURkaTalin
மத்தியில்நீ கேட்டும் வணங்குகிலாய் அன்படையப் புத்தியுளோர்க் கீதொன்றும் போதாதோ - முத்திநெறி
mattiyilnI kETTum vaNangkukilAy anpaTaiyap puttiyuLOrk kItonRum pOtAtO - muttineRi
மாணா அரக்கன் மலைக்கீழ் இருந்தேத்த வாணாள் வழங்கியதோர் வண்மைதனை - நாணாளும்
mANA arakkan malaikkIzh iruntEtta vANAL vazhangkiyatOr vaNmaitanai - nANALum
நண்ணி உரைத்தும் நயந்திலைநீ அன்புகொளப் புண்ணியருக் கீதொன்றும் போதாதோ - புண்ணியராம்
naNNi uraittum nayantilainI anpukoLap puNNiyaruk kItonRum pOtAtO - puNNiyarAm
சுந்தரர்க்குக் கச்சூரில் தோழமையைத் தான்தெரிக்க வந்திரப்புச் சோறளித்த வண்மைதனை - முந்தகத்தில்
chuntararkkuk kachchUril tOzhamaiyait tAnterikka vantirappuch chORaLitta vaNmaitanai - muntakattil
பேதமறக் கேட்டும் பிறழ்ந்தனையே அன்படையப் போதமுளோர்க் கீதொன்றும் போதாதோ - போதவும்நெய்
pEtamaRak kETTum piRazhntanaiyE anpaTaiyap pOtamuLOrk kItonRum pOtAtO - pOtavumney
அங்கோர் எலிதான் அருந்தவகல் தூண்டவதைச் செங்கோலன் ஆக்கியவச் சீர்த்திதனை - இங்கோதச்
angkOr elitAn aruntavakal tUNTavataich chengkOlan Akkiyavach chIrttitanai - ingkOtach
சந்ததம்நீ கேட்டுமவன் தாள்நினையாய் அன்படையப் புந்தியுளோர்க் கீதொன்றும் போதாதோ - முந்தவரும்
chantatamnI kETTumavan tALninaiyAy anpaTaiyap puntiyuLOrk kItonRum pOtAtO - muntavarum
நற்றுணையென் றேத்துமந்த நாவரசர்க் கன்றுகடற் கற்றுணையோர் தெப்பமெனக் காட்டியதை - இற்றெனநீ
naRRuNaiyen REttumanta nAvarachark kanRukaTaR kaRRuNaiyOr teppamenak kATTiyatai - iRRenanI
மாவுலகில் கேட்டும் வணங்குகிலாய் அன்படையப் பூவுலகர்க் கீதொன்றும் போதாதோ - தாவுநுதல்
mAvulakil kETTum vaNangkukilAy anpaTaiyap pUvulakark kItonRum pOtAtO - tAvunutal
கண்சுமந்தான் அன்பன் கலங்கா வகைவைகை மண்சுமந்தான் என்றுரைக்கும் வாய்மைதனைப் - பண்புடையோர்
kaNchumantAn anpan kalangkA vakaivaikai maNchumantAn enRuraikkum vAymaitanaip - paNpuTaiyOr
மாணவுரைப் பக்கேட்டும் வாய்ந்தேத்தாய் மெய்யன்பு பூணவென்றால் ஈதொன்றும் போதாதோ - நீணரகத்
mANavuraip pakkETTum vAyntEttAy meyyanpu pUNavenRAl ItonRum pOtAtO - nINarakat
தீங்குறுமா பாதகத்தைத் தீர்த்தோர் மறையவனைப் பாங்கடையச் செய்தஅருட் பண்பதனை - ஈங்குலகர்
tIngkuRumA pAtakattait tIrttOr maRaiyavanaip pAngkaTaiyach cheytaaruT paNpatanai - Ingkulakar
துங்கம் உறஉரைத்துஞ் சூழ்கின் றிலையன்பு பொங்கவென்றால் ஈதொன்றும் போதாதோ - தங்கியஇப்
tungkam uRauraittunj chUzhkin Rilaiyanpu pongkavenRAl ItonRum pOtAtO - tangkiyaip
பாரறியாத் தாயாகிப் பன்றிக் குருளைகட்கு ஊரறிய நன்முலைப்பால் ஊட்டியதைச் - சீரறிவோர்
pAraRiyAt tAyAkip panRik kuruLaikaTku UraRiya nanmulaippAl UTTiyataich - chIraRivOr
சொல்லிநின்றார் கேட்டும் துதிக்கின் றிலையன்பு புல்லஎன்றால் ஈதொன்றும் போதாதோ - நல்லதிருப்
chollininRAr kETTum tutikkin Rilaiyanpu pullaenRAl ItonRum pOtAtO - nallatirup
பாத மலர்வருந்தப் பாணன் தனக்காளாய்க் கோதில்விற கேற்றுவிலை கூறியதை - நீதியுளோர்
pAta malarvaruntap pANan tanakkALAyk kOtilviRa kERRuvilai kURiyatai - nItiyuLOr
சாற்றிநின்றார் கேட்டுமவன் தாள்நினையாய் மெய்யன்பில் போற்றவென்றால் ஈதொன்றும் போதாதோ - போற்றுகின்ற
chARRininRAr kETTumavan tALninaiyAy meyyanpil pORRavenRAl ItonRum pOtAtO - pORRukinRa
ஆடும் கரியும் அணிலும் குரங்குமன்பு தேடுஞ் சிலம்பியொடு சிற்றெறும்பும் - நீடுகின்ற
ATum kariyum aNilum kurangkumanpu tETunj chilampiyoTu chiRReRumpum - nITukinRa
பாம்பும் சிவார்ச்சனைதான் பண்ணியதென் றால்பூசை ஓம்புவதற் கியார்தா முவவாதார் - சோம்புறுநீ
pAmpum chivArchchanaitAn paNNiyaten RAlpUchai OmpuvataR kiyArtA muvavAtAr - chOmpuRunI
வன்பென்ப தெல்லாம் மறுத்தவன்தாள் பூசிக்கும் அன்பென்பதி யாதோ அறியாயே - அன்புடனே
vanpenpa tellAm maRuttavantAL pUchikkum anpenpati yAtO aRiyAyE - anpuTanE
செஞ்சடைகொள் நம்பெருமான் சீர்கேட் டிரையருந்தா தஞ்சடக்கி யோகம் அமர்ந்துலகின் - வஞ்சமற
chenjchaTaikoL namperumAn chIrkET TiraiyaruntA tanjchaTakki yOkam amarntulakin - vanjchamaRa
நாரையே முத்தியின்பம் நாடியதென் றால்மற்றை யாரையே நாடாதார் என்றுரைப்பேன் - ஈரமிலாய்
nAraiyE muttiyinpam nATiyaten RAlmaRRai yAraiyE nATAtAr enRuraippEn - IramilAy
நீயோ சிறிதும் நினைந்திலைஅவ் வின்பமென்னை யேயோநின் தன்மை இருந்தவிதம் - ஓயாத
nIyO chiRitum ninaintilaiav vinpamennai yEyOnin tanmai iruntavitam - OyAta
அன்புடையார் யாரினும்பேர் அன்புடையான் நம்பெருமான் நின்புடையான் நித்தம் நிகழ்த்துகின்றேன் - உன்புடையோர்
anpuTaiyAr yArinumpEr anpuTaiyAn namperumAn ninpuTaiyAn nittam nikazhttukinREn - unpuTaiyOr
அன்பவன்மேல் கொண்ட தறியேன் புறச்சமயத் தின்புடையா ரேனும் இணங்குவரே - அன்புடனே
anpavanmEl koNTa taRiyEn puRachchamayat tinpuTaiyA rEnum iNangkuvarE - anpuTanE
தாவென்றால் நல்லருள்இந் தாவென்பான் நம்பெருமான் ஆஉன்பால் ஓதி அலுக்கின்றேன் - நீவன்பால்
tAvenRAl nallaruLin tAvenpAn namperumAn AunpAl Oti alukkinREn - nIvanpAl
நின்றாய் அலதவனை நேர்ந்துநினை யாய்பித்தர் என்றாலும் என்சொற் கிணங்குவரே - குன்றாது
ninRAy alatavanai nErntuninai yAypittar enRAlum enchoR kiNangkuvarE - kunRAtu
பித்தா எனினும் பிறப்பறுப்பான் நம்முடையான் அத்தோஉனக்கீ தறைகின்றேன் - சற்றேனும்
pittA eninum piRappaRuppAn nammuTaiyAn attOunakkI taRaikinREn - chaRREnum
கேள்வியிலார் போலதனைக் கேளாய் கெடுகின்றாய் வேள்வியிலார் கூட்டம் விழைகின்றாய் - வேள்வியென்ற
kELviyilAr pOlatanaik kELAy keTukinRAy vELviyilAr kUTTam vizhaikinRAy - vELviyenRa
வேலைவருங் காலொளித்து மேவுகின்றாய் நின்தலைக்கங் கோலைவருங் காலிங் கொளிப்பாயே - மாலையுறும்
vElaivarung kAloLittu mEvukinRAy nintalaikkang kOlaivarung kAling koLippAyE - mAlaiyuRum
இப்பார் வெறும்பூ இதுநயவேல் என்றுனக்குச் செப்பா முனம்விரைந்து செல்கின்றாய் - அப்பாழில்
ippAr veRumpU itunayavEl enRunakkuch cheppA munamviraintu chelkinRAy - appAzhil
செல்லாதே சைவநெறி செல்லென்றால் என்னுடனும் சொல்லாது போய்மயக்கம் தோய்கின்றாய் - பொல்லாத
chellAtE chaivaneRi chellenRAl ennuTanum chollAtu pOymayakkam tOykinRAy - pollAta
அஞ்சருந்தென் றாலமுதி னார்கின்றாய் விட்டிடென்றால் நஞ்சருந்தென் றாற்போல் நலிகின்றாய் - வஞ்சகத்தில்
anjcharunten RAlamuti nArkinRAy viTTiTenRAl nanjcharunten RARpOl nalikinRAy - vanjchakattil
ஓடுகின்றாய் மீளாமல் உன்னிச்சை யின்வழியே ஆடுகின்றாய் மற்றங் கயர்கின்றாய் - நீடுலகைச்
OTukinRAy mILAmal unnichchai yinvazhiyE ATukinRAy maRRang kayarkinRAy - nITulakaich
சூழ்கின்றாய் வேறொன்றில் சுற்றுகின்றாய் மற்றொன்றில் வீழ்கின்றாய் மேலொன்றில் மீள்கின்றாய் - தாழ்வொன்றே
chUzhkinRAy vERonRil chuRRukinRAy maRRonRil vIzhkinRAy mElonRil mILkinRAy - tAzhvonRE
ஈகின்றாய் வன்னெறியில் என்னை வலதழிக்கப் போகின்றாய் மீட்டும் புகுகின்றாய் - யோகின்றி
IkinRAy vanneRiyil ennai valatazhikkap pOkinRAy mITTum pukukinRAy - yOkinRi
ஒன்றைமறைக் கின்றாய்மற் றொன்றைநினைக் கின்றாயென் நன்றைமறைக் கின்றாய் நலிகின்றாய் - வென்றிபெறும்
onRaimaRaik kinRAymaR RonRaininaik kinRAyen nanRaimaRaik kinRAy nalikinRAy - venRipeRum
சேவிற் பரமன்தாள் சேரென்றால் மற்றொருசார் மேவிப் பலவாய் விரிகின்றாய் - பாவித்துக்
chEviR paramantAL chErenRAl maRRoruchAr mEvip palavAy virikinRAy - pAvittuk
குன்றும் உனக்கனந்தம் கோடிதெண்ட னிட்டாலும் ஒன்றும் இரங்காய் உழல்கின்றாய் - நன்றுருகாக்
kunRum unakkanantam kOTiteNTa niTTAlum onRum irangkAy uzhalkinRAy - nanRurukAk
கல்லென்பேன் உன்னைக் கரணம் கலந்தறியாக் கல்லென்றால் என்சொல் கடவாதே - புல்லநினை
kallenpEn unnaik karaNam kalantaRiyAk kallenRAl enchol kaTavAtE - pullaninai
வல்லிரும்பென் பேன்அந்த வல்லிரும்பேல் கூடத்தில் கொல்லன்குறிப் பைவிட்டுக் கோணாதே - அல்லலெலாம்
vallirumpen pEnanta vallirumpEl kUTattil kollankuRip paiviTTuk kONAtE - allalelAm
கூட்டுகின்ற வன்மைக் குரங்கென்பேன் அக்குரங்கேல் ஆட்டுகின்றோன் சொல்வழிவிட் டாடாதே - நீட்டுலகர்
kUTTukinRa vanmaik kurangkenpEn akkurangkEl ATTukinROn cholvazhiviT TATAtE - nITTulakar
ஏசுகின்ற பேயென்பேன் எப்பேயும் அஞ்செழுத்தைப் பேசுகின்றோர் தம்மைப் பிடியாதே - கூசுகிற்பக்
EchukinRa pEyenpEn eppEyum anjchezhuttaip pEchukinROr tammaip piTiyAtE - kUchukiRpak
கண்டோரைக் கவ்வுங் கடுஞ்சுணங்கன் என்பனது கொண்டோரைக் கண்டால் குலையாதே - அண்டார்க்கும்
kaNTOraik kavvung kaTunjchuNangkan enpanatu koNTOraik kaNTAl kulaiyAtE - aNTArkkum
பூவில் அடங்காப் புலியென்பேன் எப்புலியும் மேவில் வயப்பட்டால் எதிராதே - நோவியற்றி
pUvil aTangkAp puliyenpEn eppuliyum mEvil vayappaTTAl etirAtE - nOviyaRRi
வீறுகின்ற மும்மதமால் வெற்பென்பேன் ஆங்கதுவும் ஏறுகின்றோன் சொல்வழிவிட் டேறாதே - சீறுகின்ற
vIRukinRa mummatamAl veRpenpEn Angkatuvum ERukinROn cholvazhiviT TERAtE - chIRukinRa
வென்னடைசேர் மற்றை விலங்கென்பேன் எவ்விலங்கும் மன்னவன்சேர் நாட்டில் வழங்காதே - நின்னையினி
vennaTaichEr maRRai vilangkenpEn evvilangkum mannavanchEr nATTil vazhangkAtE - ninnaiyini
என்னென்பேன் என்மொழியை ஏற்றனையேல் மாற்றுயர்ந்த பொன்னென்பேன் என்வழியில் போந்திலையே - கொன்னுறநீ
ennenpEn enmozhiyai ERRanaiyEl mARRuyarnta ponnenpEn envazhiyil pOntilaiyE - konnuRanI
போம்வழியும் பொய்நீ புரிவதுவும் பொய்அதனால் ஆம்விளைவும் பொய்நின் னறிவும்பொய் - தோம்விளைக்கும்
pOmvazhiyum poynI purivatuvum poyatanAl AmviLaivum poynin naRivumpoy - tOmviLaikkum
நின்னுடலும் பொய்யிங்கு நின்தவமும் பொய்நிலையா நின்னிலையும் பொய்யன்றி நீயும்பொய் - என்னிலிவண்
ninnuTalum poyyingku nintavamum poynilaiyA ninnilaiyum poyyanRi nIyumpoy - ennilivaN
ஏதும் உணர்ந்திலையே இம்மாய வாழ்க்கையெனும் வாதிலிழுத் தென்னை மயக்கினையே - தீதுறுநீ
Etum uNarntilaiyE immAya vAzhkkaiyenum vAtilizhut tennai mayakkinaiyE - tItuRunI
வன்னேர் விடங்காணின் வன்பெயரின் முன்பொருகீற் றென்னே அறியாமல் இட்டழைத்தேன் - கொன்னேநீ
vannEr viTangkANin vanpeyarin munporukIR RennE aRiyAmal iTTazhaittEn - konnEnI
நோவ தொழியா நொறிற் காம வெப்பினிடை ஆவ தறியா தழுந்தினையே - மேவுமதில்
nOva tozhiyA noRiR kAma veppiniTai Ava taRiyA tazhuntinaiyE - mEvumatil
உள்ளெரிய மேலாம் உணர்வும் கருகவுடல் நள்ளெரிய நட்பின் நலம்வெதும்ப - விள்வதின்றி
uLLeriya mElAm uNarvum karukavuTal naLLeriya naTpin nalamvetumpa - viLvatinRi
வாடிப் பிலஞ்சென்று வான்சென் றொளித்தாலும் தேடிச் சுடுங்கொடிய தீக்கண்டாய் - ஓடிஅங்கு
vATip pilanjchenRu vAnchen RoLittAlum tETich chuTungkoTiya tIkkaNTAy - OTiangku
பேர்ந்தால் அலது பெருங்காமத் தீநின்னைச் சேர்ந்தா ரையுஞ்சுடும்செந் தீக்கண்டாய் - சார்ந்தாங்கு
pErntAl alatu perungkAmat tIninnaich chErntA raiyunjchuTumchen tIkkaNTAy - chArntAngku
சந்தீ யெனவருவார் தம்மைச் சுடுங்காமஞ் செந்தீ யையுஞ் சுடுமோர் தீக்கண்டாய் - வந்தீங்கு
chantI yenavaruvAr tammaich chuTungkAmanj chentI yaiyunj chuTumOr tIkkaNTAy - vantIngku
மண்ணில் தனைக்காணா வண்ணம் நினைத்தாலும் நண்ணித் தலைக்கேறு நஞ்சங்காண் - எண்ணற்ற
maNNil tanaikkANA vaNNam ninaittAlum naNNit talaikkERu nanjchangkAN - eNNaRRa
போருறுமுட் காமப் புதுமயக்கம் நின்னுடைய பேரறிவைக் கொள்ளைகொளும் பித்தங்காண் - சோரறிவில்
pOruRumuT kAmap putumayakkam ninnuTaiya pEraRivaik koLLaikoLum pittangkAN - chOraRivil
கள்ளடைக்கும் காமக் கடுமயக்கம் மெய்ந்நெறிக்கோர் முள்ளடைக்கும் பொல்லா முரண்கண்டாய் - அள்ளலுற
kaLLaTaikkum kAmak kaTumayakkam meynneRikkOr muLLaTaikkum pollA muraNkaNTAy - aLLaluRa
ஏதமெலாம் தன்னுள் இடுங்காமம் பாதகத்தின் பேதமெலாம் ஒன்றிப் பிறப்பிடங்காண் - ஆதலினால்
EtamelAm tannuL iTungkAmam pAtakattin pEtamelAm onRip piRappiTangkAN - AtalinAl
வெம்மால் மடந்தையரை மேவவொணா தாங்கவர்கள் தம்மாசை இன்னும் தவிர்ந்திலையே - இம்மாய
vemmAl maTantaiyarai mEvavoNA tAngkavarkaL tammAchai innum tavirntilaiyE - immAya
மன்ற வணங்கினர்செவ் வாய்மடவார் பேதையர்கள் என்றகொடுஞ் சொற்பொருளை எண்ணிலையே - தொன்றுலகில்
manRa vaNangkinarchev vAymaTavAr pEtaiyarkaL enRakoTunj choRporuLai eNNilaiyE - tonRulakil
பெண்ணென் றுரைப்பிற் பிறப்பேழும் ஆந்துயரம் எண்ணென்ற நல்லோர்சொல் எண்ணிலையே - பெண்ணிங்கு
peNNen RuraippiR piRappEzhum Antuyaram eNNenRa nallOrchol eNNilaiyE - peNNingku
மாமாத் திரையின் வருத்தனமென் றெண்ணினைஅந் நாமார்த்தம் ஆசையென நாடிலையே - யாமார்த்தம்
mAmAt tiraiyin varuttanamen ReNNinaian nAmArttam Achaiyena nATilaiyE - yAmArttam
மந்திரத்தும் பூசை மரபினுமற் றெவ்விதமாம் தந்திரத்தும் சாயாச் சழக்கன்றோ - மந்திரத்தில்
mantirattum pUchai marapinumaR RevvitamAm tantirattum chAyAch chazhakkanRO - mantirattil
பேய்பிடித்தால் தீர்ந்திடுமிப் பெண்பேய் விடாதேசெந் நாய்பிடித்தால் போலுமென்று நாடிலையே - ஆய்விலுன்றன்
pEypiTittAl tIrntiTumip peNpEy viTAtEchen nAypiTittAl pOlumenRu nATilaiyE - AyvilunRan
ஏழைமைஎன் னென்பேன் இவர்மயக்கம் வல்நரகின் தோழைமையென் றந்தோ துணிந்திலையே - ஊழமைந்த
Ezhaimaien nenpEn ivarmayakkam valnarakin tOzhaimaiyen RantO tuNintilaiyE - Uzhamainta
காரிருளில் செல்லக் கலங்குகின்றாய் மாதர்சூழல் பேரிருளில் செல்வதனைப் பேர்த்திலையே - பாரிடையோர்
kAriruLil chellak kalangkukinRAy mAtarchUzhal pEriruLil chelvatanaip pErttilaiyE - pAriTaiyOr
எண்வாள் எனிலஞ்சி ஏகுகின்றாய் ஏந்திழையார் கண்வாள் அறுப்பக் கனிந்தனையே - மண்வாழும்
eNvAL enilanjchi EkukinRAy EntizhaiyAr kaNvAL aRuppak kanintanaiyE - maNvAzhum
ஓரானை யைக்கண்டால் ஓடுகின்றாய் மாதர்முலை ஈரானை யைக்கண் டிசைந்தனையே - சீரான
OrAnai yaikkaNTAl OTukinRAy mAtarmulai IrAnai yaikkaN TichaintanaiyE - chIrAna
வெற்பென்றால் ஏற விரைந்தறியாய் மாதர்முலை வெற்பென்றால் ஏற விரைந்தனையே - பொற்பொன்றும்
veRpenRAl ERa viraintaRiyAy mAtarmulai veRpenRAl ERa viraintanaiyE - poRponRum
சிங்கமென்றால் வாடித் தியங்குகின்றாய் மாதரிடைச் சிங்கமெனில் காணத் திரும்பினையே - இங்குசிறு
chingkamenRAl vATit tiyangkukinRAy mAtariTaich chingkamenil kANat tirumpinaiyE - ingkuchiRu
பாம்பென்றால் ஓடிப் பதுங்குகின்றாய் மாதரல்குல் பாம்பென்றால் சற்றும் பயந்திலையே - ஆம்பண்டைக்
pAmpenRAl OTip patungkukinRAy mAtaralkul pAmpenRAl chaRRum payantilaiyE - AmpaNTaik
கீழ்க்கடலில் ஆடென்றால் கேட்கிலைநீ மாதரல்குல் பாழ்க்கடலில் கேளாது பாய்ந்தனையே - கீழ்க்கதுவும்
kIzhkkaTalil ATenRAl kETkilainI mAtaralkul pAzhkkaTalil kELAtu pAyntanaiyE - kIzhkkatuvum
கல்லென்றால் பின்னிடுவாய் காரிகையார் காற்சிலம்பு கல்லென்றால் மேலெழும்பக் கற்றனையே - அல்அளகம்
kallenRAl pinniTuvAy kArikaiyAr kARchilampu kallenRAl mElezhumpak kaRRanaiyE - alaLakam
மையோ கருமென் மணலோஎன் பாய்மாறி ஐயோ நரைப்ப தறிந்திலையோ - பொய்யோதி
maiyO karumen maNalOen pAymARi aiyO naraippa taRintilaiyO - poyyOti
ஒண்பிறையே ஒண்ணுதலென் றுன்னுகின்றாய் உள்ளெலும்பாம் வெண்பிறையன் றேயதனை விண்டிலையே - கண்புருவம்
oNpiRaiyE oNNutalen RunnukinRAy uLLelumpAm veNpiRaiyan REyatanai viNTilaiyE - kaNpuruvam
வில்லென்றாய் வெண்மயிராய் மேவி உதிர்ந்திடுங்கால் சொல்லென்றால் சொல்லத் துணியாயே - வல்லம்பில்
villenRAy veNmayirAy mEvi utirntiTungkAl chollenRAl chollat tuNiyAyE - vallampil
கட்கு வளைஎன்றாய்க் கண்ர் உலர்ந்துமிக உட்குழியும் போதில் உரைப்பாயே - கட்குலவு
kaTku vaLaienRAyk kaNr ularntumika uTkuzhiyum pOtil uraippAyE - kaTkulavu
மெய்க்குமிழே நாசியென வெஃகினையால் வெண்மலத்தால் உய்க்குமிழுஞ் சீந்த லுளதேயோ - எய்த்தலிலா
meykkumizhE nAchiyena veஃkinaiyAl veNmalattAl uykkumizhunj chInta luLatEyO - eyttalilA
வள்ளையென்றாய் வார்காது வள்ளைதனக் குட்புழையோ டுள்ளுநரம் பின்புனைவும் உண்டேயோ - வெள்ளைநகை
vaLLaiyenRAy vArkAtu vaLLaitanak kuTpuzhaiyO TuLLunaram pinpunaivum uNTEyO - veLLainakai
முல்லையென்றாய் முல்லை முறித்தொருகோல் கொண்டுநிதம் ஒல்லை அழுக்கெடுப்ப துண்டேயோ - நல்லதொரு
mullaiyenRAy mullai muRittorukOl koNTunitam ollai azhukkeTuppa tuNTEyO - nallatoru
கொவ்வை யெனஇதழைக் கொள்கின்றாய் மேல்குழம்பும் செவ்வை இரத்தமெனத் தேர்ந்திலையே - செவ்வியகண்
kovvai yenaitazhaik koLkinRAy mElkuzhampum chevvai irattamenat tErntilaiyE - chevviyakaN
ணாடி யெனக்கவுட்கே ஆசைவைத்தாய் மேல்செழுந்தோல் வாடியக்கால் என்னுரைக்க மாட்டுவையே - கூடியதோர்
NATi yenakkavuTkE AchaivaittAy mElchezhuntOl vATiyakkAl ennuraikka mATTuvaiyE - kUTiyatOr
அந்த மதிமுகமென் றாடுகின்றாய் ஏழ்துளைகள் எந்தமதிக் குண்டதனை எண்ணிலையே - நந்தெனவே
anta matimukamen RATukinRAy EzhtuLaikaL entamatik kuNTatanai eNNilaiyE - nantenavE
கண்டமட்டும் கூறினைஅக் கண்டமட்டும் அன்றியுடல் கொண்டமட்டும் மற்றதன்மெய்க் கூறன்றோ - விண்டவற்றைத்
kaNTamaTTum kURinaiak kaNTamaTTum anRiyuTal koNTamaTTum maRRatanmeyk kURanRO - viNTavaRRait
தோளென் றுரைத்துத் துடிக்கின்றாய் அவ்வேய்க்கு மூளொன்று வெள்ளெலும்பின் மூட்டுண்டே - நாளொன்றும்
tOLen Ruraittut tuTikkinRAy avvEykku mULonRu veLLelumpin mUTTuNTE - nALonRum
செங்காந்தள் அங்கையெனச் செப்புகின்றாய் அம்மலர்க்குப் பொங்காப் பலவிரலின் பூட்டுண்டே - மங்காத
chengkAntaL angkaiyenach cheppukinRAy ammalarkkup pongkAp palaviralin pUTTuNTE - mangkAta
செவ்விளநீர் கொங்கையெனச் செப்பினைவல் ஊன்றடிப்பிங் கெவ்விளநீர்க் குண்டதனை எண்ணிலையே - செவ்வைபெறும்
chevviLanIr kongkaiyenach cheppinaival UnRaTipping kevviLanIrk kuNTatanai eNNilaiyE - chevvaipeRum
செப்பென் றனைமுலையைச் சீசீ சிலந்தியது துப்பென் றவர்க்கியாது சொல்லுதியே - வப்பிறுகச்
cheppen Ranaimulaiyaich chIchI chilantiyatu tuppen RavarkkiyAtu chollutiyE - vappiRukach
சூழ்ந்தமுலை மொட்டென்றே துள்ளுகின்றாய் கீழ்த்துவண்டு வீழ்ந்தமுலைக் கென்ன விளம்புதியே - தாழ்ந்தஅவை
chUzhntamulai moTTenRE tuLLukinRAy kIzhttuvaNTu vIzhntamulaik kenna viLamputiyE - tAzhntaavai
மண்கட்டும் பந்தெனவே வாழ்ந்தாய் முதிர்ந்துடையாப் புண்கட்டி என்பவர்வாய்ப் பொத்துவையே - திண்கட்டும்
maNkaTTum pantenavE vAzhntAy mutirntuTaiyAp puNkaTTi enpavarvAyp pottuvaiyE - tiNkaTTum
அந்நீர்க் குரும்பை அவையென்றாய் மேலெழும்பும் செந்நீர்ப் புடைப்பென்பார் தேர்ந்திலையே - அந்நீரார்
annIrk kurumpai avaiyenRAy mElezhumpum chennIrp puTaippenpAr tErntilaiyE - annIrAr
கண்ர் தரும்பருவாய்க் கட்டுரைப்பார் சான்றாக வெண்ர் வரல்கண்டும் வெட்கிலையே - தண்ர்மைச்
kaNr tarumparuvAyk kaTTuraippAr chAnRAka veNr varalkaNTum veTkilaiyE - taNrmaich
சாடியென்பாய் நீஅயலோர் தாதுக் கடத்திடுமேன் மூடியென்பார் மற்றவர்வாய் மூடுதியோ - மேடதனை
chATiyenpAy nIayalOr tAtuk kaTattiTumEn mUTiyenpAr maRRavarvAy mUTutiyO - mETatanai
ஆலிலையே என்பாய் அடர்குடரோ டீருளொடும் தோலிலையே ஆலிலைக்கென் சொல்லுதியே - நூலிடைதான்
AlilaiyE enpAy aTarkuTarO TIruLoTum tOlilaiyE Alilaikken chollutiyE - nUliTaitAn
உண்டோ இலையோஎன் றுட்புகழ்வாய் கைதொட்டுக் கண்டோர்பூட் டுண்டென்பார் கண்டிலையே - விண்டோங்கும்
uNTO ilaiyOen RuTpukazhvAy kaitoTTuk kaNTOrpUT TuNTenpAr kaNTilaiyE - viNTOngkum
ஆழ்ங்கடலென் பாய்மடவார் அல்குலினைச் சிற்சிலர்கள் பாழ்ங்கிணறென் பாரதனைப் பார்த்திலையே - தாழ்ங்கொடிஞ்சித்
AzhngkaTalen pAymaTavAr alkulinaich chiRchilarkaL pAzhngkiNaRen pAratanaip pArttilaiyE - tAzhngkoTinjchit
தேராழி என்பாயச் சீக்குழியை அன்றுசிறு நீராழி யென்பவர்க்கென் நேருதியே - ஆராப்புன்
tErAzhi enpAyach chIkkuzhiyai anRuchiRu nIrAzhi yenpavarkken nErutiyE - ArAppun
நீர்வீழியை ஆசை நிலையென்றாய் வன்மலம்தான் சோர்வழியை என்னென்று சொல்லுதியே - சார்முடைதான்
nIrvIzhiyai Achai nilaiyenRAy vanmalamtAn chOrvazhiyai ennenRu chollutiyE - chArmuTaitAn
ஆறாச் சிலைநீர்கான் ஆறாய் ஒழுக்கிடவும் வீறாப்புண் என்று விடுத்திலையே - ஊறாக்கி
ARAch chilainIrkAn ARAy ozhukkiTavum vIRAppuN enRu viTuttilaiyE - URAkki
மூலை எறும்புடன்ஈ மொய்ப்பதஞ்சி மற்றதன்மேல் சீலையிடக் கண்டும் தெரிந்திலையே - மேலையுறு
mUlai eRumpuTanI moyppatanjchi maRRatanmEl chIlaiyiTak kaNTum terintilaiyE - mElaiyuRu
மேநரகம் என்றால் விதிர்ப்புறுநீ மாதரல்குல் கோநரகம் என்றால் குலைந்திலையே - ஊனமிதைக்
mEnarakam enRAl vitirppuRunI mAtaralkul kOnarakam enRAl kulaintilaiyE - Unamitaik
கண்டால் நமதாசை கைவிடுவார் என்றதனைத் தண்டா தொளித்திடவும் சார்ந்தனையே - அண்டாது
kaNTAl namatAchai kaiviTuvAr enRatanait taNTA toLittiTavum chArntanaiyE - aNTAtu
போதவிடா யாகிப் புலம்புகின்றாய் மற்றதன்பால் மாதவிடாய் உண்டால் மதித்திலையே - மாதரவர்
pOtaviTA yAkip pulampukinRAy maRRatanpAl mAtaviTAy uNTAl matittilaiyE - mAtaravar
தங்குறங்கை மெல்லரம்பைத் தண்டென்றாய் தண்டூன்றி வெங்குரங்கின் மேவுங்கால் விள்ளுதியே - நன்கிலவாய்
tangkuRangkai mellarampait taNTenRAy taNTUnRi vengkurangkin mEvungkAl viLLutiyE - nankilavAy
ஏய்ந்த முழந்தாளைவரால் என்றாய் புலாற்சிறிதே வாய்ந்து வராற்றோற்கு மதித்திலையே - சேந்தவடி
Eynta muzhantALaivarAl enRAy pulARchiRitE vAyntu varARRORku matittilaiyE - chEntavaTi
தண்டா மரையென்றாய் தன்மை விளர்ப்படைந்தால் வெண்டா மரையென்று மேவுதியோ - வண்டாரா
taNTA maraiyenRAy tanmai viLarppaTaintAl veNTA maraiyenRu mEvutiyO - vaNTArA
மேனாட்டுஞ் சண்பகமே மேனியென்றாய் தீயிடுங்கால் தீநாற்றம் சண்பகத்தில் தேர்ந்தனையோ - வானாட்டும்
mEnATTunj chaNpakamE mEniyenRAy tIyiTungkAl tInARRam chaNpakattil tErntanaiyO - vAnATTum
மின்றேர் வடிவென்றாய் மேல்நீ உரைத்தவுளீ தொன்றே ஒருபுடையாய் ஒத்ததுகாண் - ஒன்றாச்சொல்
minREr vaTivenRAy mElnI uraittavuLI tonRE orupuTaiyAy ottatukAN - onRAchchol
வேள்வா கனமென்றாய் வெய்யநமன் விட்டிடுந்தூ தாள்வா கனமென்றால் ஆகாதோ - வேளானோன்
vELvA kanamenRAy veyyanaman viTTiTuntU tALvA kanamenRAl AkAtO - vELAnOn
காகளமாய் இன்குரலைக் கட்டுரைத்தாய் காலனென்போன் காகளமென் பார்க்கென் கழறுதியே - நாகளவும்
kAkaLamAy inkuralaik kaTTuraittAy kAlanenpOn kAkaLamen pArkken kazhaRutiyE - nAkaLavum
சாயைமயில் என்றே தருக்குகின்றாய் சார்பிரம சாயையஃ தென்பார்க்கென் சாற்றுதியே - சேயமலர்
chAyaimayil enRE tarukkukinRAy chArpirama chAyaiyaஃ tenpArkken chARRutiyE - chEyamalar
அன்ன நடைஎன்பாய் அஃதன் றருந்துகின்ற அன்னநடை என்பார்க்கென் ஆற்றுதியே - அன்னவரை
anna naTaienpAy aஃtan RaruntukinRa annanaTai enpArkken ARRutiyE - annavarai
ஓரோ வியமென்பாய் ஓவியமேல் ஆங்கெழுபத் தீரா யிரநாடி யாண்டுடைத்தே - பாரார்ந்த
OrO viyamenpAy OviyamEl Angkezhupat tIrA yiranATi yANTuTaittE - pArArnta
முன்னுமலர்க் கொம்பென்பாய் மூன்றொடரைக் கோடியெனத் துன்னு முரோமத் துவாரமுண்டே - இன்னமுதால்
munnumalark kompenpAy mUnRoTaraik kOTiyenat tunnu murOmat tuvAramuNTE - innamutAl
செய்தவடி வென்பாயச் செய்கைமெய்யேல் நீயவர்கள் வைதிடினும் மற்றதனை வையாயே - பொய்தவிராய்
cheytavaTi venpAyach cheykaimeyyEl nIyavarkaL vaitiTinum maRRatanai vaiyAyE - poytavirAy
ஒள்ளிழையார் தம்முருவோர் உண்கரும்பென் றாய்சிறிது கிள்ளியெடுத் தால்இரத்தங் கீழ்வருமே - கொள்ளுமவர்
oLLizhaiyAr tammuruvOr uNkarumpen RAychiRitu kiLLiyeTut tAlirattang kIzhvarumE - koLLumavar
ஈடில்பெயர் நல்லார் எனநயந்தாய் நாய்ப்பெயர்தான் கேடில்பெருஞ் சூரனென்பர் கேட்டிலையோ - நாடிலவர்
ITilpeyar nallAr enanayantAy nAyppeyartAn kETilperunj chUranenpar kETTilaiyO - nATilavar
மெல்லியலார் என்பாய் மிகுகருப்ப வேதனையை வல்லியலார் யார்பொறுக்க வல்லார்காண் - வில்லியல்பூண்
melliyalAr enpAy mikukaruppa vEtanaiyai valliyalAr yArpoRukka vallArkAN - villiyalpUN
வேய்ந்தால் அவர்மேல் விழுகின்றாய் வெந்தீயில் பாய்ந்தாலும் அங்கோர் பலனுண்டே - வேய்ந்தாங்கு
vEyntAl avarmEl vizhukinRAy ventIyil pAyntAlum angkOr palanuNTE - vEyntAngku
சென்றால் அவர்பின்னர்ச் செல்கின்றாய் வெம்புலிப்பின் சென்றாலும் அங்கோர் திறனுண்டே - சென்றாங்கு
chenRAl avarpinnarch chelkinRAy vempulippin chenRAlum angkOr tiRanuNTE - chenRAngku
நின்றால் அவர்பின்னர் நிற்கின்றாய் கண்மூடி நின்றாலும் அங்கோர் நிலையுண்டே - ஒன்றாது
ninRAl avarpinnar niRkinRAy kaNmUTi ninRAlum angkOr nilaiyuNTE - onRAtu
கண்டால் அவருடம்பைக் கட்டுகின்றாய்கல்லணைத்துக் கொண்டாலும் அங்கோர் குணமுண்டே - பெண்டானார்
kaNTAl avaruTampaik kaTTukinRAykallaNaittuk koNTAlum angkOr kuNamuNTE - peNTAnAr
வைதாலும் தொண்டு வலித்தாய் பிணத்தொண்டு செய்தாலும் அங்கோர் சிறப்புளதே - கைதாவி
vaitAlum toNTu valittAy piNattoNTu cheytAlum angkOr chiRappuLatE - kaitAvi
மெய்த்தாவும் செந்தோல் மினுக்கால் மயங்கினைநீ செத்தாலும் அங்கோர் சிறப்புளதே - வைத்தாடும்
meyttAvum chentOl minukkAl mayangkinainI chettAlum angkOr chiRappuLatE - vaittATum
மஞ்சள் மினுக்கால் மயங்கினைநீ மற்றொழிந்து துஞ்சுகினும் அங்கோர் சுகமுளதே - வஞ்சியரைப்
manjchaL minukkAl mayangkinainI maRRozhintu tunjchukinum angkOr chukamuLatE - vanjchiyaraip
பார்த்தாடி ஓடிப் படர்கின்றாய் வெந்நரகைப் பார்த்தாலும் அங்கோர் பலனுண்டே - சேர்த்தார்கைத்
pArttATi OTip paTarkinRAy vennarakaip pArttAlum angkOr palanuNTE - chErttArkait
தொட்டால் களித்துச் சுகிக்கின்றாய் வன்பூதம் தொட்டாலும் அங்கோர் துணையுண்டே - நட்டாலும்
toTTAl kaLittuch chukikkinRAy vanpUtam toTTAlum angkOr tuNaiyuNTE - naTTAlum
தெவ்வின்மட வாரைத் திளைக்கின்றாய் தீவிடத்தை வவ்வுகினும் அங்கோர் மதியுண்டே - செவ்விதழ்நீர்
tevvinmaTa vArait tiLaikkinRAy tIviTattai vavvukinum angkOr matiyuNTE - chevvitazhnIr
உண்டால் மகிழ்வாய்நீ ஒண்சிறுவர் தம்சிறுநீர் உண்டாலும் அங்கோ ருரனுண்டே - கண்டாகக்
uNTAl makizhvAynI oNchiRuvar tamchiRunIr uNTAlum angkO ruranuNTE - kaNTAkak
கவ்வுகின்றாய் அவ்விதழைக் கார்மதுகம் வேம்பிவற்றைக் கவ்வுகினும் அங்கோர் கதியுண்டே - அவ்விளையர்
kavvukinRAy avvitazhaik kArmatukam vEmpivaRRaik kavvukinum angkOr katiyuNTE - avviLaiyar
மென்றீயும் மிச்சில் விழைகின்றாய் நீவெறும்வாய் மென்றாலும் அங்கோர் விளைவுண்டே - முன்றானை
menRIyum michchil vizhaikinRAy nIveRumvAy menRAlum angkOr viLaivuNTE - munRAnai
பட்டால் மகிழ்வு பதிந்தாய் பதைக்கவம்பு பட்டாலும் அங்கோர் பலனுண்டே - கிட்டாமெய்த்
paTTAl makizhvu patintAy pataikkavampu paTTAlum angkOr palanuNTE - kiTTAmeyt
தீண்டிடிலுள் ளோங்கிச் சிரிக்கின்றாய் செந்தேள்முன் தீண்டிடினும் அங்கோர் திறனுண்டே - வேண்டியவர்
tINTiTiluL LOngkich chirikkinRAy chentELmun tINTiTinum angkOr tiRanuNTE - vENTiyavar
வாய்க்கிடயா தானுமொன்று வாங்குகின்றாய் மற்றதையோர் நாய்க்கிடினும் அங்கோர் நலனுண்டே - தாக்கவர்க்காய்த்
vAykkiTayA tAnumonRu vAngkukinRAy maRRataiyOr nAykkiTinum angkOr nalanuNTE - tAkkavarkkAyt
தேட்டாண்மை செய்வாயத் தேட்டாண்மை யைத்தெருவில் போட்டாலும் அங்கோர் புகழுண்டே - வாட்டாரைக்
tETTANmai cheyvAyat tETTANmai yaitteruvil pOTTAlum angkOr pukazhuNTE - vATTAraik
கொண்டா ருடனுணவு கொள்கின்றாய் குக்கலுடன் உண்டாலும் அங்கோர் உறவுண்டே - மிண்டாகும்
koNTA ruTanuNavu koLkinRAy kukkaluTan uNTAlum angkOr uRavuNTE - miNTAkum
இங்கிவர்வாய்ப் பாகிலையை ஏற்கின்றாய் புன்மலத்தை நுங்கினுமங் கோர்நல் நொறிலுண்டே - மங்கையர்தம்
ingkivarvAyp pAkilaiyai ERkinRAy punmalattai nungkinumang kOrnal noRiluNTE - mangkaiyartam
ஏத்தா மனைகாத் திருக்கின்றாய் ஈமமது காத்தாலும் அங்கோர் கனமுண்டே - பூத்தாழ்வோர்
EttA manaikAt tirukkinRAy Imamatu kAttAlum angkOr kanamuNTE - pUttAzhvOr
காட்டாக் குரல்கேட்பாய் கர்த்தபத்தின் பாழ்ங்குரலைக் கேட்டாலும் அங்கோர் கிளருண்டே - கோட்டாவி
kATTAk kuralkETpAy karttapattin pAzhngkuralaik kETTAlum angkOr kiLaruNTE - kOTTAvi
ஆழ்ந்தா ருடன்வாழ ஆதரித்தாய் ஆழ்ங்கடலில் வீழ்ந்தாலும் அங்கோர் விரகுண்டே - வீழ்ந்தாருள்
AzhntA ruTanvAzha AtarittAy AzhngkaTalil vIzhntAlum angkOr virakuNTE - vIzhntAruL
வீட்டால் முலையுமெதிர் வீட்டால் முகமுமுறக் காட்டாநின் றார்கண்டும் காய்ந்திலையே - கூட்டாட்குச்
vITTAl mulaiyumetir vITTAl mukamumuRak kATTAnin RArkaNTum kAyntilaiyE - kUTTATkuch
செய்கை யிடும்படிதன் சீமான் தனதுபணப் பைகையிடல் கண்டும் பயந்திலையே - சைகையது
cheykai yiTumpaTitan chImAn tanatupaNap paikaiyiTal kaNTum payantilaiyE - chaikaiyatu
கையால் ஒருசிலர்க்கும் கண்ணால் ஒருசிலர்க்கும் செய்யா மயக்குகின்றார் தேர்ந்திலையே - எய்யாமல்
kaiyAl oruchilarkkum kaNNAl oruchilarkkum cheyyA mayakkukinRAr tErntilaiyE - eyyAmal
ஈறிகந்த இவ்வகையாய் இம்மடவார் செய்கையெலாம் கூறுவனேல் அம்ம குடர்குழம்பும் - கூறுமிவர்
IRikanta ivvakaiyAy immaTavAr cheykaiyelAm kURuvanEl amma kuTarkuzhampum - kURumivar
வாயொருபால் பேச மனமொருபால் செல்லவுடல் ஆயொருபால் செய்ய அழிவார்காண் - ஆயஇவர்
vAyorupAl pEcha manamorupAl chellavuTal AyorupAl cheyya azhivArkAN - Ayaivar
நன்றறியார் தீதே நயப்பார் சிவதலத்தில் சென்றறியார் பேய்க்கே சிறப்பெடுப்பார் - இன்றிவரை
nanRaRiyAr tItE nayappAr chivatalattil chenRaRiyAr pEykkE chiRappeTuppAr - inRivarai
வஞ்சமென்கோ வெவ்வினையாம் வல்லியமென் கோபவத்தின் புஞ்சமென்கோ மாநரக பூமியென்கோ - அஞ்சுறுமீர்
vanjchamenkO vevvinaiyAm valliyamen kOpavattin punjchamenkO mAnaraka pUmiyenkO - anjchuRumIr
வாளென்கோ வாய்க்கடங்கா மாயமென்கோ மண்முடிவு நாளென்கோ வெய்ய நமனென்கோ - கோளென்கோ
vALenkO vAykkaTangkA mAyamenkO maNmuTivu nALenkO veyya namanenkO - kOLenkO
சாலமென்கோ வானிந்த்ர சாலமென்கோ வீறால காலமென்கோ நின்பொல்லாக் காலமென்கோ - ஞாலமதில்
chAlamenkO vAnintra chAlamenkO vIRAla kAlamenkO ninpollAk kAlamenkO - njAlamatil
பெண்என்றால் யோகப் பெரியோர் நடுங்குவரேல் மண்நின்றார் யார்நடுங்க மாட்டார்காண் - பெண்என்றால்
peNenRAl yOkap periyOr naTungkuvarEl maNninRAr yArnaTungka mATTArkAN - peNenRAl
பேயும் இரங்குமென்பார் பேய்ஒன்றோ தாம்பயந்த சேயும் இரங்குமவர் தீமைக்கே - ஆயுஞ்செம்
pEyum irangkumenpAr pEyonRO tAmpayanta chEyum irangkumavar tImaikkE - Ayunjchem
பொன்னால் துகிலால் புனையா விடிலவர்மெய் என்னாகும் மற்றிதைநீ எண்ணிலையே - இன்னாமைக்
ponnAl tukilAl punaiyA viTilavarmey ennAkum maRRitainI eNNilaiyE - innAmaik
கொத்தென்ற அம்மடவார் கூட்டம் எழுமைக்கும் வித்தென் றறிந்துமதை விட்டிலையே - தொத்தென்று
kottenRa ammaTavAr kUTTam ezhumaikkum vitten RaRintumatai viTTilaiyE - tottenRu
பாச வினைக்குட் படுத்துறும்அப் பாவையர்மேல் ஆசையுனக் கெவ்வா றடைந்ததுவே - நேசமிலாய்
pAcha vinaikkuT paTuttuRumap pAvaiyarmEl Achaiyunak kevvA RaTaintatuvE - nEchamilAy
நின்னாசை என்னென்பேன் நெய்வீழ் நெருப்பெனவே பொன்னாசை மேன்மேலும் பொங்கினையே - பொன்னாசை
ninnAchai ennenpEn neyvIzh neruppenavE ponnAchai mEnmElum pongkinaiyE - ponnAchai
வைத்திழந்து வீணே வயிறெரிந்து மண்ணுலகில் எத்தனைபேர் நின்கண் எதிர்நின்றார் - தத்துகின்ற
vaittizhantu vINE vayiRerintu maNNulakil ettanaipEr ninkaN etirninRAr - tattukinRa
பொன்னுடையார் துன்பப் புணரியொன்றே அல்லதுமற் றென்னுடையார் கண்டிங் கிருந்தனையே - பொன்னிருந்தால்
ponnuTaiyAr tunpap puNariyonRE allatumaR RennuTaiyAr kaNTing kiruntanaiyE - ponniruntAl
ஆற்றன்மிகு தாயுமறி யாவகையால் வைத்திடவோர் ஏற்றவிடம் வேண்டுமதற் கென்செய்வாய் - ஏற்றவிடம்
ARRanmiku tAyumaRi yAvakaiyAl vaittiTavOr ERRaviTam vENTumataR kencheyvAy - ERRaviTam
வாய்த்தாலும் அங்கதனை வைத்தவிடம் காட்டாமல் ஏய்த்தால் சிவசிவமற் றென்செய்வாய் - ஏய்க்காது
vAyttAlum angkatanai vaittaviTam kATTAmal EyttAl chivachivamaR RencheyvAy - EykkAtu
நின்றாலும் பின்னதுதான் நீடும் கரியான தென்றால் அரகரமற் றென்செய்வாய் - நன்றாக
ninRAlum pinnatutAn nITum kariyAna tenRAl arakaramaR RencheyvAy - nanRAka
ஒன்றொருசார் நில்லென்றால் ஓடுகின்ற நீஅதனை என்றும் புரப்பதனுக் கென்செய்வாய் - வென்றியொடு
onRoruchAr nillenRAl OTukinRa nIatanai enRum purappatanuk kencheyvAy - venRiyoTu
பேர்த்துப் புரட்டிப் பெருஞ்சினத்தால் மாற்றலர்கள் ஈர்த்துப் பறிக்கிலதற் கென்செய்வாய் - பேர்த்தெடுக்கக்
pErttup puraTTip perunjchinattAl mARRalarkaL Irttup paRikkilataR kencheyvAy - pErtteTukkak
கைபுகுத்தும் காலுட் கருங்குளவி செங்குளவி எய்புகுத்தக் கொட்டிடின்மற் றென்செய்வாய் - பொய்புகுத்தும்
kaipukuttum kAluT karungkuLavi chengkuLavi eypukuttak koTTiTinmaR RencheyvAy - poypukuttum
பொன்காவல் பூதமது போயெடுக்கும் போதுமறித் தென்காவல் என்றால்மற் றென்செய்வாய் - பொன்காவல்
ponkAval pUtamatu pOyeTukkum pOtumaRit tenkAval enRAlmaR RencheyvAy - ponkAval
வீறுங்கால் ஆணவமாம் வெங்கூளி நின்தலைமேல் ஏறுங்கால் மற்றதனுக் கென்செய்வாய் - மாறும்சீர்
vIRungkAl ANavamAm vengkULi nintalaimEl ERungkAl maRRatanuk kencheyvAy - mARumchIr
உன்நேயம் வேண்டி உலோபம் எனும்குறும்பன் இன்னே வருவனதற் கென்செய்வாய் - முன்னேதும்
unnEyam vENTi ulOpam enumkuRumpan innE varuvanataR kencheyvAy - munnEtum
இல்லா நமக்குண்டோ இல்லையோ என்னுநலம் எல்லாம் அழியுமதற் கென்செய்வாய் - நில்லாமல்
illA namakkuNTO illaiyO ennunalam ellAm azhiyumataR kencheyvAy - nillAmal
ஆய்ந்தோர் சிலநாளில் ஆயிரம்பேர் பக்கலது பாய்ந்தோடிப் போவதுநீ பார்த்திலையே - ஆய்ந்தோர்சொல்
AyntOr chilanALil AyirampEr pakkalatu pAyntOTip pOvatunI pArttilaiyE - AyntOrchol
கூத்தாட் டவைசேர் குழாம்விளிந்தாற் போலுமென்ற சீர்த்தாட் குறள்மொழியும் தேர்ந்திலையே- பேர்த்தோடும்
kUttAT TavaichEr kuzhAmviLintAR pOlumenRa chIrttAT kuRaLmozhiyum tErntilaiyE- pErttOTum
நாட்கொல்லி என்றால் நடுங்குகின்றாய் நாளறியா ஆட்கொல்லி என்பரிதை ஆய்ந்திலையே - கீழ்க்கொல்லைப்
nATkolli enRAl naTungkukinRAy nALaRiyA ATkolli enparitai AyntilaiyE - kIzhkkollaip
பச்சிலையால் பொன்னைப் படைப்பாரேல் மற்றதன்மேல் இச்சையுனக் கெவ்வா றிருந்ததுவே - இச்சையிலார்
pachchilaiyAl ponnaip paTaippArEl maRRatanmEl ichchaiyunak kevvA RiruntatuvE - ichchaiyilAr
இட்டமலம் பட்டவிடம் எல்லாம்பொன் னாம்என்றால் இட்டமதை விட்டற் கிசைந்திலையே - முட்டகற்றப்
iTTamalam paTTaviTam ellAmpon nAmenRAl iTTamatai viTTaR kichaintilaiyE - muTTakaRRap
பொன்னடப்ப தன்றியது போனகமே யாதியவாய் என்னடுத்த தொன்றுமிஃ தெண்ணிலையே - இந்நிலத்தில்
ponnaTappa tanRiyatu pOnakamE yAtiyavAy ennaTutta tonRumiஃ teNNilaiyE - innilattil
நீண்மயக்கம் பொன்முன் நிலையாய் உலகியலாம் வீண்மயக்கம் என்றதனை விட்டிலையே -நீண்வலயத்
nINmayakkam ponmun nilaiyAy ulakiyalAm vINmayakkam enRatanai viTTilaiyE -nINvalayat
திச்செல்வ மின்றி இயலாதேல் சிற்றுயிர்கள் எச்செல்வம் கொண்டிங் கிருந்தனவே - வெச்சென்ற
tichchelva minRi iyalAtEl chiRRuyirkaL echchelvam koNTing kiruntanavE - vechchenRa
மண்ணாசை கொண்டனைநீ மண்ணாளும் மன்னரெலாம் மண்ணால் அழிதல் மதித்திலையே - எண்ணாது
maNNAchai koNTanainI maNNALum mannarelAm maNNAl azhital matittilaiyE - eNNAtu
மண்கொண்டார் மாண்டார்தம் மாய்ந்தவுடல் வைக்கவயல் மண்கொண்டார் தம்மிருப்பில் வைத்திலரே - திண்கொண்ட
maNkoNTAr mANTArtam mAyntavuTal vaikkavayal maNkoNTAr tammiruppil vaittilarE - tiNkoNTa
விண்ணேகுங் காலங்கு வேண்டுமென ஈண்டுபிடி மண்ணேனுங் கொண்டேக வல்லாரோ - மண்நேயம்
viNNEkung kAlangku vENTumena INTupiTi maNNEnung koNTEka vallArO - maNnEyam
என்னதென்றான் முன்னொருவன் என்னதென்றான் பின்னொருவன் இன்னதுநீ கேட்டிங் கிருந்திலையோ - மன்னுலகில்
ennatenRAn munnoruvan ennatenRAn pinnoruvan innatunI kETTing kiruntilaiyO - mannulakil
கண்காணி யாய்நீயே காணியல்லாய் நீயிருந்த மண்காணி என்று மதித்தனையே - கண்காண
kaNkANi yAynIyE kANiyallAy nIyirunta maNkANi enRu matittanaiyE - kaNkANa
மண்காணி வேண்டி வருந்துகின்றாய் நீமேலை விண்காணி வேண்டல் வியப்பன்றே - எண்காண
maNkANi vENTi varuntukinRAy nImElai viNkANi vENTal viyappanRE - eNkANa
அந்தரத்தில் நின்றாய்நீ அந்தோ நினைவிடமண் அந்தரத்தில் நின்ற தறிந்திலையே - தந்திரத்தில்
antarattil ninRAynI antO ninaiviTamaN antarattil ninRa taRintilaiyE - tantirattil
மண்கொடுப்பேன் என்றுரைக்கில் வைவார் சிறுவர்களும் மண்கொடுக்கில் நீதான் மகிழ்ந்தனையே - வண்கொடுக்கும்
maNkoTuppEn enRuraikkil vaivAr chiRuvarkaLum maNkoTukkil nItAn makizhntanaiyE - vaNkoTukkum
வீடென்றேன் மற்றதைமண் வீடென்றே நீநினைந்தாய் வீடென்ற சொற்பொருளை விண்டிலையே - நாடொன்றும்
vITenREn maRRataimaN vITenRE nIninaintAy vITenRa choRporuLai viNTilaiyE - nATonRum
மண்ணால் மரத்தால் வனைகின்ற வீடனைத்தும் கண்ணாரக் கட்டழிதல் கண்டிலையோ - மண்ணான
maNNAl marattAl vanaikinRa vITanaittum kaNNArak kaTTazhital kaNTilaiyO - maNNAna
மேல்வீடும் அங்குடைய வேந்தர்களும் மேல்வீட்டப் பால்வீடும் பாழாதல் பார்த்திலையோ - மேல்வீட்டில்
mElvITum angkuTaiya vEntarkaLum mElvITTap pAlvITum pAzhAtal pArttilaiyO - mElvITTil
ஏறுவனே என்பாய் இயமன் கடாமிசைவந் தேறுவனேல் உன்னாசை என்னாமோ - கூறிடும்இம்
ERuvanE enpAy iyaman kaTAmichaivan tERuvanEl unnAchai ennAmO - kURiTumim
மண்ணளித்த வேதியனும் மண்விருப்பம் கொள்ளானேல் எண்ணமுனக் கெவ்வா றிருந்ததுவே - மண்ணிடத்தில்
maNNaLitta vEtiyanum maNviruppam koLLAnEl eNNamunak kevvA RiruntatuvE - maNNiTattil
ஆகாத் துரும்பிடத்தும் ஆசைவைத்தாய் - என்னிலுன்றன் ஏகாப் பெருங்காமம் என்சொல்கேன் - போகாத
AkAt turumpiTattum AchaivaittAy - ennilunRan EkAp perungkAmam encholkEn - pOkAta
பாபக் கடற்கோர் படுகடலாம் பாழ்வெகுளிக் கோபக் கடலில் குளித்தனையே - தாபமுறச்
pApak kaTaRkOr paTukaTalAm pAzhvekuLik kOpak kaTalil kuLittanaiyE - tApamuRach
செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்லதனில் தீயதென்ற தெண்ணிலையே - மல்லல்பெறத்
chellA viTattuch chinantItu chelliTattum illatanil tIyatenRa teNNilaiyE - mallalpeRat
தன்னைத்தான் காக்கில் சினங்காக்க என்றதனைப் பொன்னைப்போல்போற்றிப் புகழ்ந்திலையே - துன்னி
tannaittAn kAkkil chinangkAkka enRatanaip ponnaippOlpORRip pukazhntilaiyE - tunni
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல என்னுந் திகழ்வாய் மையும்நீ தெளியாய் - இகழ்வாரை
akazhvArait tAngkum nilampOla ennun tikazhvAy maiyumnI teLiyAy - ikazhvArai
எவ்வண்ணம் நம்மை இகழ்வார் அறிவோமென் றிவ்வண்ணம் என்னைவெளி யிட்டனையே - தெவ்வென்ன
evvaNNam nammai ikazhvAr aRivOmen RivvaNNam ennaiveLi yiTTanaiyE - tevvenna
ஓரா வெகுளி யுடையான் தவமடையான் தீராயென் பாரதுவும் தேர்ந்திலையே - பேராநின்
OrA vekuLi yuTaiyAn tavamaTaiyAn tIrAyen pAratuvum tErntilaiyE - pErAnin
வெவ்வினைக்கீ டாகஅரன் வெம்மைபுரி வானென்றால் இவ்வெகுளி யார்மாட் டிருத்துவதே - செவ்வையிலாய்
vevvinaikkI TAkaaran vemmaipuri vAnenRAl ivvekuLi yArmAT TiruttuvatE - chevvaiyilAy
ஏய்ந்தனையன் போரிடத்தில் இன்னாமை செய்தவரைக் காய்ந்தனைமற் றென்னபலன் கண்டனையே - வாய்ந்தறிவோர்
Eyntanaiyan pOriTattil innAmai cheytavaraik kAyntanaimaR Rennapalan kaNTanaiyE - vAyntaRivOr
எல்லா நலமும் இஃதேயென் றேத்துகின்ற கொல்லா நலம்சிறிதுங் கொண்டிலையே - பொல்லாத
ellA nalamum iஃtEyen REttukinRa kollA nalamchiRitung koNTilaiyE - pollAta
வன்போ டிருக்கு மதியிலிநீ மன்னுயிர்க்கண் அன்போ டிரக்கம் அடைந்திலையே - இன்போங்கு
vanpO Tirukku matiyilinI mannuyirkkaN anpO Tirakkam aTaintilaiyE - inpOngku
தூய்மையென்ப தெல்லாம் துணையாய் அணைவதுதான் வாய்மையென்ப தொன்றே மதித்திலையே - தூய்மையிலாய்
tUymaiyenpa tellAm tuNaiyAy aNaivatutAn vAymaiyenpa tonRE matittilaiyE - tUymaiyilAy
மானொருகை ஏந்திநின்ற வள்ளலன்பர் தங்களுளே நானொருவன் என்று நடித்தனையே - ஆனமற்றைப்
mAnorukai EntininRa vaLLalanpar tangkaLuLE nAnoruvan enRu naTittanaiyE - AnamaRRaip
பாதகங்க ளெல்லாம் பழகிப் பழகியதில் சாதகஞ்செய் வோரில் தலைநின்றாய் - பாதகத்தில்
pAtakangka LellAm pazhakip pazhakiyatil chAtakanjchey vOril talaininRAy - pAtakattil
ஓயா விகார உணர்ச்சியினால் இவ்வுலக மாயா விகாரம் மகிழ்ந்தனையே - சாயாது
OyA vikAra uNarchchiyinAl ivvulaka mAyA vikAram makizhntanaiyE - chAyAtu
நீஇளமை மெய்யாய் நினைந்தாய் நினைப்பெற்ற தாயிளமை எத்தனைநாள் தங்கியதே - ஆயிளமை
nIiLamai meyyAy ninaintAy ninaippeRRa tAyiLamai ettanainAL tangkiyatE - AyiLamai
மெய்கொடுத்த தென்பாய் விருத்தர்கட்கு நின்போல்வார் கைகொடுத்துப் போவதனைக் கண்டிலையோ - மெய்கொடுத்த
meykoTutta tenpAy viruttarkaTku ninpOlvAr kaikoTuttup pOvatanaik kaNTilaiyO - meykoTutta
கூனொடும்கைக் கோலூன்றிக் குந்தி நடைதளர்ந்து கானடுங்க நிற்பவரைக் கண்டிலையோ - ஊனொடுங்க
kUnoTumkaik kOlUnRik kunti naTaitaLarntu kAnaTungka niRpavaraik kaNTilaiyO - UnoTungka
ஐயநட வென்றே அரும்புதல்வர் முன்செலப்பின் பைய நடப்பவரைப் பார்த்திலையோ - வெய்யநமன்
aiyanaTa venRE arumputalvar munchelappin paiya naTappavaraip pArttilaiyO - veyyanaman
நாடழைக்கச் சேனநரி நாயழைக்க நாறுசுடு காடழைக்க மூத்துநின்றார் கண்டிலையோ - பீடடைந்த
nATazhaikkach chEnanari nAyazhaikka nARuchuTu kATazhaikka mUttuninRAr kaNTilaiyO - pITaTainta
மெய்யுலர்ந்து நீரின் விழியுலர்ந்து வாயுலர்ந்து கையுலர்ந்து நிற்பவரைக் கண்டிலையோ - மெய்யுலர்ந்தும்
meyyularntu nIrin vizhiyularntu vAyularntu kaiyularntu niRpavaraik kaNTilaiyO - meyyularntum
சாகான் கிழவன் தளர்கின்றான் என்றிவண்நீ ஓகாளம் செய்வதனை ஓர்ந்திலையோ - ஆகாத
chAkAn kizhavan taLarkinRAn enRivaNnI OkALam cheyvatanai OrntilaiyO - AkAta
கண்டமிது பொல்லாக் கடுநோய் எனுங்குமர கண்டமிஃ தென்பவரைக் கண்டிலையோ - கொண்டவுடல்
kaNTamitu pollAk kaTunOy enungkumara kaNTamiஃ tenpavaraik kaNTilaiyO - koNTavuTal
குட்டமுறக் கைகால் குறுக்குமிது பொல்லாத குட்டமென நோவார் குறித்திலையோ - துட்டவினை
kuTTamuRak kaikAl kuRukkumitu pollAta kuTTamena nOvAr kuRittilaiyO - tuTTavinai
மாலையினும் காலையினும் மத்தியினும் குத்துமிது சூலையென நோவாரைச் சூழ்ந்திலையோ - சாலவுமித்
mAlaiyinum kAlaiyinum mattiyinum kuttumitu chUlaiyena nOvAraich chUzhntilaiyO - chAlavumit
தேக மதுநலியச் செய்யுங்காண் உய்வரிதாம் மேகமிஃ தென்பாரை மேவிலையோ - தாகமுறச்
tEka matunaliyach cheyyungkAN uyvaritAm mEkamiஃ tenpArai mEvilaiyO - tAkamuRach
சித்தநோய் செய்கின்ற சீதநோய் வாதமொடு பித்தநோய் கொண்டவர்பால் பேர்ந்திலையோ - மெத்தரிய
chittanOy cheykinRa chItanOy vAtamoTu pittanOy koNTavarpAl pErntilaiyO - mettariya
கைப்பிணியும் காற்பிணியும் கட்பிணியோ டெண்ணரிய மெய்ப்பிணியும் கொண்டவரை விண்டிலையோ - எய்ப்புடைய
kaippiNiyum kARpiNiyum kaTpiNiyO TeNNariya meyppiNiyum koNTavarai viNTilaiyO - eyppuTaiya
முட்டூறும் கைகால் முடங்கூன் முதலாய எட்டூறுங் கொண்டவரை எண்ணிலையோ - தட்டூறிங்
muTTURum kaikAl muTangkUn mutalAya eTTURung koNTavarai eNNilaiyO - taTTURing
கெண்ணற்ற துண்டேல் இளமை ஒருபொருளாய் எண்ணப் படுமோவென் றெண்ணிலையோ - எண்ணத்தில்
keNNaRRa tuNTEl iLamai oruporuLAy eNNap paTumOven ReNNilaiyO - eNNattil
பொய்யென் றறவோர் புலம்புறவும் இவ்வுடம்பை மெய்யென்று பொய்ம்மயக்கம் மேவினையே - கைநின்று
poyyen RaRavOr pulampuRavum ivvuTampai meyyenRu poymmayakkam mEvinaiyE - kaininRu
கூகா எனமடவார் கூடி அழல்கண்டும் நீகாதல் வைத்து நிகழ்ந்தனையே - மாகாதல்
kUkA enamaTavAr kUTi azhalkaNTum nIkAtal vaittu nikazhntanaiyE - mAkAtal
பெண்டிருந்து மாழ்கப் பிணங்கொண்டு செல்வாரைக் கண்டிருந்தும் அந்தோ கலங்கிலையே - பண்டிருந்த
peNTiruntu mAzhkap piNangkoNTu chelvAraik kaNTiruntum antO kalangkilaiyE - paNTirunta
ஊரார் பிணத்தின் உடன்சென்று நாம்மீண்டு நீராடல் சற்றும் நினைந்திலையே - சீராக
UrAr piNattin uTanchenRu nAmmINTu nIrATal chaRRum ninaintilaiyE - chIrAka
இன்றிருந்தார் நாளைக் கிருப்பதுபொய் என்றறவோர் நன்றிருந்த வார்த்தையும்நீ நாடிலையே - ஒன்றி
inRiruntAr nALaik kiruppatupoy enRaRavOr nanRirunta vArttaiyumnI nATilaiyE - onRi
உறங்குவது போலுமென்ற ஒண்குறளின் வாய்மை மறங்கருதி அந்தோ மறந்தாய் - கறங்கின்
uRangkuvatu pOlumenRa oNkuRaLin vAymai maRangkaruti antO maRantAy - kaRangkin
நெருநல் உளனொருவன் என்னும் நெடுஞ்சொல் மருவும் குறட்பா மறந்தாய் - தெருவில்
nerunal uLanoruvan ennum neTunjchol maruvum kuRaTpA maRantAy - teruvil
இறந்தார் பிறந்தா ரிறந்தா ரெனுஞ்சொல் மறந்தாய் மறந்தாய் மறந்தாய் - இறந்தார்
iRantAr piRantA riRantA renunjchol maRantAy maRantAy maRantAy - iRantAr
பறையோசை அண்டம் படீரென் றொலிக்க மறையோசை யன்றே மறந்தாய் - இறையோன்
paRaiyOchai aNTam paTIren Rolikka maRaiyOchai yanRE maRantAy - iRaiyOn
புலனைந்தும்என்றருளும் பொன்மொழியை மாயா மலமொன்றி அந்தோ மறந்தாய் - நிலனொன்றி
pulanaintumenRaruLum ponmozhiyai mAyA malamonRi antO maRantAy - nilanonRi
விக்குள் எழநீர் விடுமி னெனஅயலோர் நெக்குருகல் அந்தோ நினைந்திலையே - மிக்கனலில்
vikkuL ezhanIr viTumi nenaayalOr nekkurukal antO ninaintilaiyE - mikkanalil
நெய்விடல்போல் உற்றவர்கண்ணீர்விட் டழவுயிர்பல் மெய்விடலும் கண்டனைநீ விண்டிலையே - செய்வினையின்
neyviTalpOl uRRavarkaNNIrviT Tazhavuyirpal meyviTalum kaNTanainI viNTilaiyE - cheyvinaiyin
வாள்கழியச் செங்கதிரோன் வான்கழிய நம்முடைய நாள்கழிதற் கந்தோ நடுங்கிலையே - கோள்கழியும்
vALkazhiyach chengkatirOn vAnkazhiya nammuTaiya nALkazhitaR kantO naTungkilaiyE - kOLkazhiyum
நாழிகையோர் நாளாக நாடினையே நாளைஒரு நாழிகையாய் எண்ணி நலிந்திலையே - நாழிகைமுன்
nAzhikaiyOr nALAka nATinaiyE nALaioru nAzhikaiyAy eNNi nalintilaiyE - nAzhikaimun
நின்றார் இருந்தார் நிலைகுலைய வீழ்ந்துயிர்தான் சென்றார் எனக்கேட்டும் தேர்ந்திலையே - பின்றாது
ninRAr iruntAr nilaikulaiya vIzhntuyirtAn chenRAr enakkETTum tErntilaiyE - pinRAtu
தொட்டார் உணவுடனே தும்மினார் அம்மஉயிர் விட்டார் எனக்கேட்டும் வெட்கிலையே - தட்டாமல்
toTTAr uNavuTanE tumminAr ammauyir viTTAr enakkETTum veTkilaiyE - taTTAmal
உண்டார் படுத்தார் உறங்கினார் பேருறக்கம் கொண்டார் எனக்கேட்டும் கூசிலையே - வண்தாரார்
uNTAr paTuttAr uRangkinAr pEruRakkam koNTAr enakkETTum kUchilaiyE - vaNtArAr
நேற்று மணம்புரிந்தார் நீறானார் இன்றென்று சாற்றுவது கேட்டும் தணந்திலையே - வீற்றுறுதேர்
nERRu maNampurintAr nIRAnAr inRenRu chARRuvatu kETTum taNantilaiyE - vIRRuRutEr
ஊர்ந்தார் தெருவில் உலாப்போந்தார் வானுலகம் சேர்ந்தார் எனக்கேட்டும் தேர்ந்திலையே - சேர்ந்தாங்கு
UrntAr teruvil ulAppOntAr vAnulakam chErntAr enakkETTum tErntilaiyE - chErntAngku
என்னே இருந்தார் இருமினார் ஈண்டிறந்தார் அன்னே எனக்கேட்டும் ஆய்ந்திலையே - கொன்னே
ennE iruntAr iruminAr INTiRantAr annE enakkETTum AyntilaiyE - konnE
மருவும் கருப்பைக்குள் வாய்ந்தே முதிராக் கருவும் பிதிர்ந்துதிரக் கண்டாய் - கருவொன்
maruvum karuppaikkuL vAyntE mutirAk karuvum pitirntutirak kaNTAy - karuvon
றொடுதிங்கள் ஐயைந்தில் ஒவ்வொன்றில் அந்தோ கெடுகின்ற தென்றதுவும் கேட்டாய் - படுமிந்
RoTutingkaL aiyaintil ovvonRil antO keTukinRa tenRatuvum kETTAy - paTumin
நிலைமுற்ற யோனி நெருக்கில் உயிர்போய்ப் பலனற்று வீழ்ந்ததுவும் பார்த்தாய் - பலனுற்றே
nilaimuRRa yOni nerukkil uyirpOyp palanaRRu vIzhntatuvum pArttAy - palanuRRE
காவென்று வீழ்ந்தக் கணமே பிணமாகக் கோவென் றழுவார் குறித்திலையோ - நோவின்றிப்
kAvenRu vIzhntak kaNamE piNamAkak kOven RazhuvAr kuRittilaiyO - nOvinRip
பாலனென்றே அன்னைமுலைப் பாலருந்தும் காலையிலே காலன் உயிர்குடிக்கக் கண்டிலையோ - மேலுவந்து
pAlanenRE annaimulaip pAlaruntum kAlaiyilE kAlan uyirkuTikkak kaNTilaiyO - mEluvantu
பெற்றார் மகிழ்வெய்தப் பேசிவிளை யாடுங்கால் அற்றாவி போவ தறிந்திலையோ - கற்றாயப்
peRRAr makizhveytap pEchiviLai yATungkAl aRRAvi pOva taRintilaiyO - kaRRAyap
பள்ளியிடுங் காலவனைப் பார நமன்வாயில் அள்ளியிடுந் தீமை அறிந்திலையோ - பள்ளிவிடும்
paLLiyiTung kAlavanaip pAra namanvAyil aLLiyiTun tImai aRintilaiyO - paLLiviTum
காளைப் பருவமதில் கண்டார் இரங்கிடஅவ் ஆளைச் சமன்கொள்வ தாய்ந்திலையோ - வேளைமண
kALaip paruvamatil kaNTAr irangkiTaav ALaich chamankoLva tAyntilaiyO - vELaimaNa
மாப்பிள்ளை ஆகி மணமுடிக்கும் அன்றவனே சாப்பிள்ளை யாதலெண்ணிச் சார்ந்திலையே - மேற்பிள்ளை
mAppiLLai Aki maNamuTikkum anRavanE chAppiLLai yAtaleNNich chArntilaiyE - mERpiLLai
மாடையேர்ப் பெண்டுடனில் வாழுங்கால் பற்பலர்தாம் பாடைமேல் சேர்தலினைப் பார்த்திலையோ - வீடலிஃ
mATaiyErp peNTuTanil vAzhungkAl paRpalartAm pATaimEl chErtalinaip pArttilaiyO - vITaliஃ
திக்கணமோ மேல்வந் திடுங்கணமோ அன்றிமற்றை எக்கணமோ என்றார்நீ எண்ணிலையே - தொக்குறுதோல்
tikkaNamO mElvan tiTungkaNamO anRimaRRai ekkaNamO enRArnI eNNilaiyE - tokkuRutOl
கூடென்கோ இவ்வுடம்பைக் கோள்வினைநீர் ஓட்டில்விட்ட ஏடென்கோ நீர்மேல் எழுத்தென்கோ - காடென்கோ
kUTenkO ivvuTampaik kOLvinainIr OTTilviTTa ETenkO nIrmEl ezhuttenkO - kATenkO
பாழென்கோ ஒன்பதுவாய்ப் பாவையென்கோ வன்பிறவி ஏழென்கோ கன்மமதற் கீடென்கோ - தாழ்மண்ணின்
pAzhenkO onpatuvAyp pAvaiyenkO vanpiRavi EzhenkO kanmamataR kITenkO - tAzhmaNNin
பாண்டமென்கோ வெஞ்சரக்குப் பையென்கோ பாழ்ங்கரும காண்டமென்கோ ஆணவத்தின் கட்டென்கோ - கோண்தகையார்
pANTamenkO venjcharakkup paiyenkO pAzhngkaruma kANTamenkO ANavattin kaTTenkO - kONtakaiyAr
மெய்யென்கோ மாய விளைவென்கோ மின்னென்கோ பொய்யென்கோ மாயப் பொடியென்கோ - மெய்யென்ற
meyyenkO mAya viLaivenkO minnenkO poyyenkO mAyap poTiyenkO - meyyenRa
மங்கலத்தை மங்கலத்தால் வாஞ்சித் தனருலகர் அங்கவற்றை எண்ணா தலைந்தனையே - தங்குலகில்
mangkalattai mangkalattAl vAnjchit tanarulakar angkavaRRai eNNA talaintanaiyE - tangkulakil
மற்றிதனை ஓம்பி வளர்க்க உழன்றனைநீ கற்றதனை எங்கே கவிழ்த்தனையே - அற்றவரை
maRRitanai Ompi vaLarkka uzhanRanainI kaRRatanai engkE kavizhttanaiyE - aRRavarai
இக்கட் டவிழ்த்திங் கெரிமூட் டெனக்கேட்டும் முக்கட்டும் தேட முயன்றனையே - இக்கட்டு
ikkaT Tavizhtting kerimUT TenakkETTum mukkaTTum tETa muyanRanaiyE - ikkaTTu
மண்பட்டு வெந்தீ மரம்பட் டிடக்கண்டும் வெண்பட் டுடுக்க விரைந்தனையே - பண்ப ட்ட
maNpaTTu ventI marampaT TiTakkaNTum veNpaT TuTukka viraintanaiyE - paNpa TTa
ஐயா அரைநாண் அவிழுமெனக் கேட்டுநின்றும் மெய்யா பரணத்தின் மேவினையே - எய்யாமல்
aiyA arainAN avizhumenak kETTuninRum meyyA paraNattin mEvinaiyE - eyyAmal
காதிற் கடுக்கன் கழற்றுமெனக் கேட்டுநின்றும் ஏதிற் பணியினிடத் தெய்தினையே - தாதிற்குத்
kAtiR kaTukkan kazhaRRumenak kETTuninRum EtiR paNiyiniTat teytinaiyE - tAtiRkut
துற்கந்த மாகச் சுடுங்கால் முகர்ந்திருந்தும் நற்கந்தத் தின்பால் நடந்தனையே - புற்கென்ற
tuRkanta mAkach chuTungkAl mukarntiruntum naRkantat tinpAl naTantanaiyE - puRkenRa
வன்சுவைத்தீ நாற்ற மலமாய் வரல்கண்டும் இன்சுவைப்பால் எய்தி யிருந்தனையே - முன்சுவைத்துப்
vanchuvaittI nARRa malamAy varalkaNTum inchuvaippAl eyti yiruntanaiyE - munchuvaittup
பாறுண்ட காட்டில் பலர்வெந் திடக்கண்டும் சோறுண் டிருக்கத் துணிந்தனையே - மாறுண்டு
pARuNTa kATTil palarven tiTakkaNTum chORuN Tirukkat tuNintanaiyE - mARuNTu
கூம்புலகம் பொய்யெனநான் கூவுகின்றேன் கேட்டுமிகு சோம்பலுடன் தூக்கந் தொடர்ந்தனையே - ஆம்பலனோர்
kUmpulakam poyyenanAn kUvukinREn kETTumiku chOmpaluTan tUkkan toTarntanaiyE - AmpalanOr
நல்வாழ்வை எண்ணி நயந்தோர் நயவாத இல்வாழ்வை மெய்யென் றிருந்தனையே - சொல்லாவி
nalvAzhvai eNNi nayantOr nayavAta ilvAzhvai meyyen RiruntanaiyE - chollAvi
ஈன்றோன் தனைநாளும் எண்ணாமல் இவ்வுடம்பை ஈன்றோரை ஈன்றோரென் றெண்ணினையே - ஈன்றோர்கள்
InROn tanainALum eNNAmal ivvuTampai InROrai InROren ReNNinaiyE - InROrkaL
நொந்தால் உடனின்று நோவார் வினைப்பகைதான் வந்தால் அதுநீக்க வல்லாரோ - வந்தாடல்
nontAl uTaninRu nOvAr vinaippakaitAn vantAl atunIkka vallArO - vantATal
உற்றசிறார் நம்மடையா தோட்டுகிற்பார் தென்றிசைவாழ் மற்றவன்வந் தால்தடுக்க வல்லாரோ - சிற்றுணவை
uRRachiRAr nammaTaiyA tOTTukiRpAr tenRichaivAzh maRRavanvan tAltaTukka vallArO - chiRRuNavai
ஈங்கென்றால் வாங்கி யிடுவார் அருளமுதம் வாங்கென்றால் வாங்கியிட வல்லாரோ - தீங்ககற்றத்
IngkenRAl vAngki yiTuvAr aruLamutam vAngkenRAl vAngkiyiTa vallArO - tIngkakaRRat
தூண்டா மனையாதிச் சுற்றமெலாம் சுற்றியிட நீண்டாய் அவர்நன் னெறித்துணையோ - மாண்டார்பின்
tUNTA manaiyAtich chuRRamelAm chuRRiyiTa nINTAy avarnan neRittuNaiyO - mANTArpin
கூடி அழத்துணையாய்க் கூடுவார் வன்னரகில் வாடியழும் போது வருவாரோ - நீடியநீ
kUTi azhattuNaiyAyk kUTuvAr vannarakil vATiyazhum pOtu varuvArO - nITiyanI
இச்சீவர் தன்துணையோ ஈங்கிவர்கள் நின்துணையோ சீச்சீ இதென்ன திறங்கண்டாய் - இச்சீவர்
ichchIvar tantuNaiyO IngkivarkaL nintuNaiyO chIchchI itenna tiRangkaNTAy - ichchIvar
நின்னைவைத்து முன்சென்றால் நீசெய்வ தென்னவர்முன் இந்நிலத்தில் நீசென்றால் என்செய்வர் - நின்னியல்பின்
ninnaivaittu munchenRAl nIcheyva tennavarmun innilattil nIchenRAl encheyvar - ninniyalpin
எத்தனைதாய் எத்தனைபேர் எத்தனையூர் எத்தனைவாழ் வெத்தனையோ தேகம் எடுத்தனையே - அத்தனைக்கும்
ettanaitAy ettanaipEr ettanaiyUr ettanaivAzh vettanaiyO tEkam eTuttanaiyE - attanaikkum
அவ்வவ் விடங்கடொறும் அவ்வவரை ஆண்டாண்டிங் கெவ்வெவ் விதத்தால் இழந்தனையோ - அவ்விதத்தில்
avvav viTangkaToRum avvavarai ANTANTing kevvev vitattAl izhantanaiyO - avvitattil
ஒன்றேனும் நன்றாய் உணர்ந்திருத்தி யேலிவரை இன்றே துறத்தற் கிசையாயோ - நின்றோரில்
onREnum nanRAy uNarntirutti yElivarai inRE tuRattaR kichaiyAyO - ninROril
தாயார் மனையார் தனயரார் தம்மவரார் நீயார் இதனை நினைந்திலையே - சேயேகில்
tAyAr manaiyAr tanayarAr tammavarAr nIyAr itanai ninaintilaiyE - chEyEkil
ஏங்குவரே என்றாய் இயமன்வரின் நின்னுயிரை வாங்கிமுடி யிட்டகத்தில் வைப்பாரோ - நீங்கியிவண்
EngkuvarE enRAy iyamanvarin ninnuyirai vAngkimuTi yiTTakattil vaippArO - nIngkiyivaN
உன்தந்தை தன்றனக்கிங் கோர்தந்தை நாடுவனீ என்தந்தை என்றுரைப்ப தெவ்வாறே - சென்றுபின்னின்
untantai tanRanakking kOrtantai nATuvanI entantai enRuraippa tevvARE - chenRupinnin
தன்மனையாள் மற்றொருவன் தன்மனையாள் ஆவளெனில் என்மனையாள் என்பதுநீ எவ்வணமே - நன்மைபெறும்
tanmanaiyAL maRRoruvan tanmanaiyAL AvaLenil enmanaiyAL enpatunI evvaNamE - nanmaipeRum
நட்பமைந்த நன்னெறிநீ நாடா வகைதடுக்கும் உட்பகைவர் என்றிவரை ஓர்ந்திலையே - நட்புடையாய்
naTpamainta nanneRinI nATA vakaitaTukkum uTpakaivar enRivarai OrntilaiyE - naTpuTaiyAy
எம்மான் படைத்தஉயிர் இத்தனைக்குட் சில்லுயிர்பால் இம்மால் அடைந்ததுநீ என்னினைந்தோ - வம்மாறில்
emmAn paTaittauyir ittanaikkuT chilluyirpAl immAl aTaintatunI enninaintO - vammARil
எம்பந்த மேநினக்கிங் கில்லையென்றால் மற்றையவர் தம்பந்தம் எவ்வாறு தங்கியதே - சம்பந்தர்
empanta mEninakking killaiyenRAl maRRaiyavar tampantam evvARu tangkiyatE - champantar
அற்றவருக் கற்றசிவனாமெனுமப் பொன்மொழியை மற்றைமொழி போன்று மறந்தனையே - சிற்றுயிர்க்குக்
aRRavaruk kaRRachivanAmenumap ponmozhiyai maRRaimozhi pOnRu maRantanaiyE - chiRRuyirkkuk
கற்பனையில் காய்ப்புளதாய்க் காட்டும் பிரபஞ்சக் கற்பனையை மெய்யென்று கண்டனையே - பற்பலவாம்
kaRpanaiyil kAyppuLatAyk kATTum pirapanjchak kaRpanaiyai meyyenRu kaNTanaiyE - paRpalavAm
தூரியத்தில் தோன்றொலிபோல் தோன்றிக் கெடுமாயா காரியத்தை மெய்யெனநீ கண்டனையே - சீரியற்றும்
tUriyattil tOnRolipOl tOnRik keTumAyA kAriyattai meyyenanI kaNTanaiyE - chIriyaRRum
ஆடகத்தில் பித்தளையை ஆலித் திடுங்கபட நாடகத்தை மெய்யென்று நம்பினையே - நீடகத்தில்
ATakattil pittaLaiyai Alit tiTungkapaTa nATakattai meyyenRu nampinaiyE - nITakattil
காயவித்தை யாலக் கடவுள் இயற்றுமிந்த மாயவித்தை மெய்யெனநீ வாழ்ந்தனையே - வாயவித்தை
kAyavittai yAlak kaTavuL iyaRRuminta mAyavittai meyyenanI vAzhntanaiyE - vAyavittai
இப்படக மாயை யிருள்தமமே என்னுமொரு முப்படகத் துள்ளே முயங்கினையே - ஒப்பிறைவன்
ippaTaka mAyai yiruLtamamE ennumoru muppaTakat tuLLE muyangkinaiyE - oppiRaivan
ஆனவொளி யிற்பரையாம் ஆதபத்தி னால்தோன்றும் கானலினை நீராய்க் களித்தனையே - ஆனகிரி
AnavoLi yiRparaiyAm Atapatti nAltOnRum kAnalinai nIrAyk kaLittanaiyE - Anakiri
யாசத்தி யென்றிடுமோர் அம்மைவிளை யாட்டெனுமிப் பாசத்தி னுள்ளே படர்ந்தனையே - நேசத்தின்
yAchatti yenRiTumOr ammaiviLai yATTenumip pAchatti nuLLE paTarntanaiyE - nEchattin
பொய்யொன்றுண் மெய்யிற் புகும்பால லீலைதனை மெய்யென்று வீணில் விரிந்தனையே - பொய்யென்று
poyyonRuN meyyiR pukumpAla lIlaitanai meyyenRu vINil virintanaiyE - poyyenRu
மீட்டுநின்ற லீலா வினோத மெனுங்கதையைக் கேட்டுநின்றும் அந்தோ கிளர்ந்தனையே - ஈட்டிநின்ற
mITTuninRa lIlA vinOta menungkataiyaik kETTuninRum antO kiLarntanaiyE - ITTininRa
காலத்தை வீணில் கழிக்கும் படிமேக சாலத்தை மெய்யாய்த் தருக்கினையே - சாலத்தில்
kAlattai vINil kazhikkum paTimEka chAlattai meyyAyt tarukkinaiyE - chAlattil
கண்மையகன் றோங்குமந்த காரத்தில் செம்மாப்புற் றுண்மையொன்றுங் காணா துழன்றனையே - வண்மையிலாய்
kaNmaiyakan ROngkumanta kArattil chemmAppuR RuNmaiyonRung kANA tuzhanRanaiyE - vaNmaiyilAy
இங்கு நினைப்பெரியோர் என்னினைப்பார் ஏமாப்பில் கங்கு லினைப்பகலாய்க் கண்டனையே - தங்குறுமித்
ingku ninaipperiyOr enninaippAr EmAppil kangku linaippakalAyk kaNTanaiyE - tangkuRumit
தேகாதி பொய்யெனவே தேர்ந்தார் உரைக்கவும்நீ மோகாதிக் குள்ளே முயல்கின்றாய் - ஓகோநும்
tEkAti poyyenavE tErntAr uraikkavumnI mOkAtik kuLLE muyalkinRAy - OkOnum
கோமுடிக்கண் தீப்பற்றிக் கொண்டதென்றால் மற்றதற்குப் பூமுடிக்கத் தேடுகின்றோர் போன்றனையே - மாமுடிக்கும்
kOmuTikkaN tIppaRRik koNTatenRAl maRRataRkup pUmuTikkat tETukinROr pOnRanaiyE - mAmuTikkum
வாழ்வுநிலை யன்றிமைப்பில் மாறுகின்ற தென்றுரைத்தும் வீழ்வுகொடு வாளா விழுகின்றாய் - தாழ்வுறநும்
vAzhvunilai yanRimaippil mARukinRa tenRuraittum vIzhvukoTu vALA vizhukinRAy - tAzhvuRanum
விண்டுறுங்கை வீடனலால் வேகின்ற தென்னவுட்போய் உண்டுறங்கு கின்றோரை ஒத்தனையே - தொண்டுலகங்
viNTuRungkai vITanalAl vEkinRa tennavuTpOy uNTuRangku kinROrai ottanaiyE - toNTulakang
கானமுயற் கொம்பாய்க் கழிகின்ற தென்கின்றேன் நீநயமுற் றந்தோ நிகழ்கின்றாய் - ஆனநும்மூர்
kAnamuyaR kompAyk kazhikinRa tenkinREn nInayamuR RantO nikazhkinRAy - AnanummUr
வெள்ளத்தி னால்முழுகி விட்டதென்றால் சென்றுகடை கொள்ளத் திரிபவர்போல் கூடினையே - கொள்ளவிங்கு
veLLatti nAlmuzhuki viTTatenRAl chenRukaTai koLLat tiripavarpOl kUTinaiyE - koLLavingku
கண்டனவெல் லாம்நிலையாக் கைதவமென் கின்றேன்நீ கொண்டவைமுற் சேரக் குறிக்கின்றாய் - உண்டழிக்க
kaNTanavel lAmnilaiyAk kaitavamen kinREnnI koNTavaimuR chErak kuRikkinRAy - uNTazhikka
ஊழிவெள்ளம் வந்ததென்றால் உண்பதற்கும் ஆடுதற்கும் ஊழிநன்னீரோவென்பார் ஒத்தனையே - ஏழியற்றும்
UzhiveLLam vantatenRAl uNpataRkum ATutaRkum UzhinannIrOvenpAr ottanaiyE - EzhiyaRRum
தற்புவனம் போகம் தனுகரணம் என்கின்ற சொற்பனத்தில் அந்தோ துவன்றினையே - பற்பகலும்
taRpuvanam pOkam tanukaraNam enkinRa choRpanattil antO tuvanRinaiyE - paRpakalum
உண்டனவே உண்கின்றாய் ஓர்ந்தனவே ஓர்கின்றாய் கண்டனவே கண்டு களிக்கின்றாய் - கொண்டனவே
uNTanavE uNkinRAy OrntanavE OrkinRAy kaNTanavE kaNTu kaLikkinRAy - koNTanavE
கொண்டியங்கு கின்றாய் குறித்தனவே பிற்குறித்துப் பண்டறியார் போலப் படர்கின்றாய் - பண்டறிந்து
koNTiyangku kinRAy kuRittanavE piRkuRittup paNTaRiyAr pOlap paTarkinRAy - paNTaRintu
சொல்லாடி நின்றனவே சொல்கின்றாய் மற்றிதனை நல்லோர்கள் கண்டால் நகையாரோ - செல்லான
chollATi ninRanavE cholkinRAy maRRitanai nallOrkaL kaNTAl nakaiyArO - chellAna
காலம்போல் இங்குநிகழ் காலமும்காண் கின்றியெதிர் காலமற்றும் அத்திறம்மேற் காண்குவையேல் - சாலவுமுன்
kAlampOl ingkunikazh kAlamumkAN kinRiyetir kAlamaRRum attiRammER kANkuvaiyEl - chAlavumun
போதுசெலா முன்னமனு பூதியைநீ நாடாமல் யாதுபயன் எண்ணி இனைகின்றாய் - தீதுசெயும்
pOtuchelA munnamanu pUtiyainI nATAmal yAtupayan eNNi inaikinRAy - tItucheyum
வீணவத்தை யெல்லாம் விளைக்கும் திறல்மூல ஆணவத்தி னாலே அழிந்தனையே - ஆணவத்தில்
vINavattai yellAm viLaikkum tiRalmUla ANavatti nAlE azhintanaiyE - ANavattil
நீயார் எனஅறியாய் நின்னெதிரில் நின்றவரை நீயார் எனவினவி நீண்டனையே - ஓயாமல்
nIyAr enaaRiyAy ninnetiril ninRavarai nIyAr enavinavi nINTanaiyE - OyAmal
ஊனின்ற ஒன்றின் உளவறியாய் அந்தோநீ நானென்று சொல்லி நலிந்தனையே - நானென்று
UninRa onRin uLavaRiyAy antOnI nAnenRu cholli nalintanaiyE - nAnenRu
சொல்லுதியோ சொல்லாயோ துவ்வாமை பெற்றொருநீ அல்லலுறுங் காலத் தறைகண்டாய் - அல்லவெலாம்
chollutiyO chollAyO tuvvAmai peRRorunI allaluRung kAlat taRaikaNTAy - allavelAm
நீஇங்கே நான்அங்கே நிற்கநடு வேகுதித்தால் நீஎங்கே நான்எங்கே நின்றறிகாண் - நீஇங்கு
nIingkE nAnangkE niRkanaTu vEkutittAl nIengkE nAnengkE ninRaRikAN - nIingku
ஒன்றெடுக்கச் சென்றுமற்றை ஒன்றெடுக்கக் காண்கின்றேன் இன்றடுத்த நீஎங் கிருந்தனையே - மன்றடுத்த
onReTukkach chenRumaRRai onReTukkak kANkinREn inRaTutta nIeng kiruntanaiyE - manRaTutta
தாளா தரித்தேநின் றன்னைமறந் துய்யாது வாளா மதத்தின் மலிகின்றாய் - கேளாயிச்
tALA tarittEnin RannaimaRan tuyyAtu vALA matattin malikinRAy - kELAyich
சார்பிலொன்று விட்டொழிந்தால் சாலமகிழ் கிற்பேனான் சோர்புகொண்டு நீதான் துயர்கின்றாய் - சார்புபெருந்
chArpilonRu viTTozhintAl chAlamakizh kiRpEnAn chOrpukoNTu nItAn tuyarkinRAy - chArpuperun
தூவென்று நானிவணஞ் சும்மா இருந்தாலும் வாவென் றெனையும் வலிக்கின்றாய் - ஓவுன்றன்
tUvenRu nAnivaNanj chummA iruntAlum vAven Renaiyum valikkinRAy - OvunRan
சூழ்ச்சியறி யேன்நீ சுழல்கின்ற போதெல்லாம் சூழ்ச்சியிலே நானும் சுழல்கின்றேன் - நீட்சியில்நீ
chUzhchchiyaRi yEnnI chuzhalkinRa pOtellAm chUzhchchiyilE nAnum chuzhalkinREn - nITchiyilnI
காலசைத்தால் யானும் கடிதில் தலையசைப்பேன் மாலசைத்த நின்புணர்ப்பின் வாறெதுவோ - வாலுமண்டக்
kAlachaittAl yAnum kaTitil talaiyachaippEn mAlachaitta ninpuNarppin vARetuvO - vAlumaNTak
கூவத்தில் யானோர் குடநீ கயிற்றோடும் ஏவல்கொ ளுமேழை என்கேனோ - பாவத்தில்
kUvattil yAnOr kuTanI kayiRROTum Evalko LumEzhai enkEnO - pAvattil
சுற்றுண்ட நீகடலில் தோன்றுசுழி யாகஅதில் எற்றுண்ட நான்திரணம் என்கேனோ - பற்றிடுநீ
chuRRuNTa nIkaTalil tOnRuchuzhi yAkaatil eRRuNTa nAntiraNam enkEnO - paRRiTunI
சங்கற்ப மாஞ்சூறை தானாக நானாடும் அங்கட் சருகென் றறைகேனோ - பொங்குற்ற
changkaRpa mAnjchURai tAnAka nAnATum angkaT charuken RaRaikEnO - pongkuRRa
சேலைவிரா யோர்தறியில் செல்குழைநீ பின்தொடரும் நூலிழைநான் என்று நுவல்கேனோ - மாலிடுநீ
chElaivirA yOrtaRiyil chelkuzhainI pintoTarum nUlizhainAn enRu nuvalkEnO - mAliTunI
துள்ளுறுப்பின் மட்பகைஞன் சுற்றாழி யாகவதின் உள்ளுறுப்பே நானென் றுரைக்கேனோ - எள்ளுறுநீ
tuLLuRuppin maTpakainjan chuRRAzhi yAkavatin uLLuRuppE nAnen RuraikkEnO - eLLuRunI
பாழலைவா னேகும் பருந்தாக அப்பருந்தின் நீழலைநான் என்று நினைகேனோ - நீழலுறா
pAzhalaivA nEkum paruntAka apparuntin nIzhalainAn enRu ninaikEnO - nIzhaluRA
நின்வசம்நான் என்றுலகு நிந்தைமொழி கின்றதலால் என்வசம்நீ என்ப திலைகண்டாய் - என்வசம்நீ
ninvachamnAn enRulaku nintaimozhi kinRatalAl envachamnI enpa tilaikaNTAy - envachamnI
ஆனால் எளியேனுக் காகாப் பொருளுளவோ வானாடர் வந்து வணங்காரோ - ஆனாமல்
AnAl eLiyEnuk kAkAp poruLuLavO vAnATar vantu vaNangkArO - AnAmal
எண்ணுதற்கும் பேசுதற்கும் எட்டாப் பரஞ்சோதிக் கண்ணுதலும் அங்கைக் கனியன்றோ - எண்ணுமிடத்
eNNutaRkum pEchutaRkum eTTAp paranjchOtik kaNNutalum angkaik kaniyanRO - eNNumiTat
தென்செய்வே னோர்கணமும் என்சொல்வழி நில்லாமல் கொன்செய்வேன் என்று குதிக்கின்றாய் - வன்செய்யும்
tencheyvE nOrkaNamum encholvazhi nillAmal koncheyvEn enRu kutikkinRAy - vancheyyum
சிந்தோடும் ஓர்வடவைத் தீயும் கரத்தடைப்பர் அந்தோ உனையார் அடக்குவரே - வந்தோடும்
chintOTum OrvaTavait tIyum karattaTaippar antO unaiyAr aTakkuvarE - vantOTum
கச்சோதம் என்னக் கதிரோன் தனையெடுப்பர் அச்சோ உனையார் அடக்குவரே - வைச்சோங்கு
kachchOtam ennak katirOn tanaiyeTuppar achchO unaiyAr aTakkuvarE - vaichchOngku
மூவுலகும் சேர்த்தொருதம் முன்றானை யின்முடிவர் ஆவுனையும் இங்கார் அடக்குவரே - மேவுபல
mUvulakum chErttorutam munRAnai yinmuTivar Avunaiyum ingkAr aTakkuvarE - mEvupala
தேசமென்றும் காலமென்றும் திக்கென்றும் பற்பலவாம் வாசமென்றும் அவ்வவ் வழக்கென்றும் - மாசுடைய
tEchamenRum kAlamenRum tikkenRum paRpalavAm vAchamenRum avvav vazhakkenRum - mAchuTaiya
போகமென்றும் மற்றைப் புலனென்றும் பொய்அகலா யோகமென்றும் பற்பலவாம் யூகமென்றும் - மேகமென்றும்
pOkamenRum maRRaip pulanenRum poyakalA yOkamenRum paRpalavAm yUkamenRum - mEkamenRum
வானென்றும் முந்நீர் மலையென்றும் மண்ணென்றும் ஊனென்றும் மற்றை உறவென்றும் - மேல்நின்ற
vAnenRum munnIr malaiyenRum maNNenRum UnenRum maRRai uRavenRum - mElninRa
சாதியென்றும் வாழ்வென்றும் தாழ்வென்றும் இவ்வுலக நீதியென்றும் கன்ம நெறியென்றும் - ஓதரிய
chAtiyenRum vAzhvenRum tAzhvenRum ivvulaka nItiyenRum kanma neRiyenRum - Otariya
அண்டமென்றும் அண்டத் தசைவும் அசைவுமலாப் பண்டமென்றும் சொல்பவெலாம் பன்முகங்கள் - கொண்டிருந்த
aNTamenRum aNTat tachaivum achaivumalAp paNTamenRum cholpavelAm panmukangkaL - koNTirunta
உன்நினைவி னுள்ளே உதித்திட் டுலவிநிற்ப எந்நினைவு கொண்டோமற் றிவ்வுலகர் - எந்நவையும்
unninaivi nuLLE utittiT TulaviniRpa enninaivu koNTOmaR Rivvulakar - ennavaiyum
தந்தோன் எவனோ சதுமுகனுண் டென்பார்கள் அந்தோநின் செய்கை அறியாரே - அந்தோநான்
tantOn evanO chatumukanuN TenpArkaL antOnin cheykai aRiyArE - antOnAn
ஆமென்றால் மற்றதனை அல்லவென்பாய் அல்லவென்றால் ஆமென்பாய் என்னை அலைக்கின்றாய் - நாம்அன்பாய்
AmenRAl maRRatanai allavenpAy allavenRAl AmenpAy ennai alaikkinRAy - nAmanpAy
என்றும் பிறந்திறவா இன்பம் அடைதுமென்றால் நன்றென் றொருப்படுவாய் நண்ணுங்கால் - தொன்றெனவே
enRum piRantiRavA inpam aTaitumenRAl nanRen RoruppaTuvAy naNNungkAl - tonRenavE
செல்கிற்பாய் செல்லாச் சிறுநடையில் தீமையெலாம் நல்கிற்பாய் என்னேநின் நட்புடைமை - சொல்கிற்பில்
chelkiRpAy chellAch chiRunaTaiyil tImaiyelAm nalkiRpAy ennEnin naTpuTaimai - cholkiRpil
ஆவதுவும் நின்னால் அழிவதுவும்நின் னாலெனயான் நோவதுவும் கண்டயலில் நோக்கினையே - தாவுமெனக்
Avatuvum ninnAl azhivatuvumnin nAlenayAn nOvatuvum kaNTayalil nOkkinaiyE - tAvumenak
காணவலம் பெண்ணவலம் ஆகும் பொருளவலம் ஊணவலம் உற்றாரோ டூரவலம் - பூணவலம்
kANavalam peNNavalam Akum poruLavalam UNavalam uRRArO TUravalam - pUNavalam
ஊன்அவலம் அன்றியும்என் உற்றதுணை யாம்நீயும் தான்அவலம் என்றாலென் சாற்றுவதே - நான்இவணம்
Unavalam anRiyumen uRRatuNai yAmnIyum tAnavalam enRAlen chARRuvatE - nAnivaNam
இன்பமெது கண்டேமால் இச்சையெலாம் துன்பமதில் துன்பம் பிறப்பென்றே சோர்கின்றேன் - வன்புடைய
inpametu kaNTEmAl ichchaiyelAm tunpamatil tunpam piRappenRE chOrkinREn - vanpuTaiya
இப்பிறவித் துன்பத்தி னும்திதியில் துன்பமது செப்பரிதாம் என்றே திகைக்கின்றேன் - செப்பிறப்பின்
ippiRavit tunpatti numtitiyil tunpamatu chepparitAm enRE tikaikkinREn - cheppiRappin
ஓயாத துன்பம் உரைக்க உடம்பெல்லாம் வாயாகி னும்போத மாட்டாதேல் - ஏஏநாம்
OyAta tunpam uraikka uTampellAm vAyAki numpOta mATTAtEl - EEnAm
செய்வதென்னோ என்று தியங்குகின்றேன் இவ்வணம்நான் நைவதெல்லாம் கண்டு நடந்தனையே - கைவருமிவ்
cheyvatennO enRu tiyangkukinREn ivvaNamnAn naivatellAm kaNTu naTantanaiyE - kaivarumiv
இல்லிக் குடமுடைந்தால் யாதாமென் றுன்னுடன்யான் சொல்லித் திரிந்துமெனைச் சூழ்ந்திலையே - வல்இயமன்
illik kuTamuTaintAl yAtAmen RunnuTanyAn chollit tirintumenaich chUzhntilaiyE - valiyaman
நாளையோ இன்றோ நடக்கின்ற நாட்களிலெவ் வேளையோ தூது விடில்அவர்கள் - கேளையோ
nALaiyO inRO naTakkinRa nATkaLilev vELaiyO tUtu viTilavarkaL - kELaiyO
நல்லோம் எனினும் நடவார் நடவார்நாம் செல்லோம் எனினுமது செல்லாதே - வல்லீர்யாம்
nallOm eninum naTavAr naTavArnAm chellOm eninumatu chellAtE - vallIryAm
இன்சொலினோம் இன்றிங் கிருந்துவரு வோம்எனயாம் என்சொலினும் அச்சொலெலாம் ஏலாதே - மன்சொலுடைத்
incholinOm inRing kiruntuvaru vOmenayAm encholinum achcholelAm ElAtE - mancholuTait
தாமரையோன் மான்முதலோர் தாம்அறையா ராயிலன்று நாமறைவோம் என்றல் நடவாதே - நாமிவணம்
tAmaraiyOn mAnmutalOr tAmaRaiyA rAyilanRu nAmaRaivOm enRal naTavAtE - nAmivaNam
அந்நாள் வருமுன்னர் ஆதி அருளடையும் நன்னாள் அடைதற்கு நாடுதுங்காண் - என்னாநின்
annAL varumunnar Ati aruLaTaiyum nannAL aTaitaRku nATutungkAN - ennAnin
றோதுகின்றேன் கேட்டும் உறார்போன் றுலகியலில் போதுகின்றாய் யாது புரிகிற்பேன் - தீதுநன்றோ
ROtukinREn kETTum uRArpOn Rulakiyalil pOtukinRAy yAtu purikiRpEn - tItunanRO
டேற்றவடி நாள்உறவாம் என்னைவிட்டுத் தாமதமா நேற்றையுற வோடுறவு நேர்ந்தனையே - சாற்றுமந்த
TERRavaTi nALuRavAm ennaiviTTut tAmatamA nERRaiyuRa vOTuRavu nErntanaiyE - chARRumanta
தாமதமே ஓரவித்தை தாமதமே ஆவரணம் தாமதமே மோக சமுத்திரம்காண் - தாமதமென்
tAmatamE Oravittai tAmatamE AvaraNam tAmatamE mOka chamuttiramkAN - tAmatamen
றையோ ஒருநீ அதனோடு கூடினையால் பொய்யோநாம் என்று புகன்றதுவே - கையாமல்
RaiyO orunI atanOTu kUTinaiyAl poyyOnAm enRu pukanRatuvE - kaiyAmal
ஒன்னலர்போல் கூடுவா ரோடொருநீ கூடுங்கால் என்னைநினை யாயென்சொ லெண்ணுதியோ - பன்னுறுநின்
onnalarpOl kUTuvA rOTorunI kUTungkAl ennaininai yAyencho leNNutiyO - pannuRunin
தீதெல்லாம் நானாதி சேடர்பல ராய்ப்பிரமன் போதெல்லாம் சொல்லிடினும் போதாதே - ஆதலினால்
tItellAm nAnAti chETarpala rAyppiraman pOtellAm cholliTinum pOtAtE - AtalinAl
வைகின்றேன் வாழ்த்தாய் மதித்தொருநீ செய்வதெல்லாம் செய்கின்றாய் ஈதோர் திறமன்றே - உய்கிற்பான்
vaikinREn vAzhttAy matittorunI cheyvatellAm cheykinRAy ItOr tiRamanRE - uykiRpAn
வாடுகின்றேன் நின்னை மதித்தொருநான் நீமலத்தை நாடுகின்றாய் ஈதோர் நலமன்றே - கூடுகின்ற
vATukinREn ninnai matittorunAn nImalattai nATukinRAy ItOr nalamanRE - kUTukinRa
ஈண்டோர் அணுவாய் இருந்தநீ எண்டிசைபோல் நீண்டாய் இஃதோர் நெறியன்றே - வேண்டாநீ
INTOr aNuvAy iruntanI eNTichaipOl nINTAy iஃtOr neRiyanRE - vENTAnI
மற்றவர்போல் அன்றே மனனேநின் வண்புகழை முற்றுமிவண் ஆர்தான் மொழிவாரே - சுற்றிமனம்
maRRavarpOl anRE mananEnin vaNpukazhai muRRumivaN ArtAn mozhivArE - chuRRimanam
தானடங்கின் எல்லாச் சகமும் அடங்குமொரு மானடங்கொள் பாத மலர்வாய்க்கும் - வானடங்க
tAnaTangkin ellAch chakamum aTangkumoru mAnaTangkoL pAta malarvAykkum - vAnaTangka
எல்லா நலமும் இதனால் எனமறைகள் எல்லாம் நின்சீரே எடுத்தியம்பும் - எல்லார்க்கும்
ellA nalamum itanAl enamaRaikaL ellAm ninchIrE eTuttiyampum - ellArkkum
மாகமங்கொண் டுற்ற மனோலயமே வான்கதியென் றாமகங்கள் நின்சீர் அறைந்திடுங்காண் - ஆகுமிந்த
mAkamangkoN TuRRa manOlayamE vAnkatiyen RAmakangkaL ninchIr aRaintiTungkAN - Akuminta
நன்மை பெறுமேன்மை நண்ணியநீ நின்னுடைய தன்மைவிடல் அந்தோ சதுரலஇப் - புன்மையெலாம்
nanmai peRumEnmai naNNiyanI ninnuTaiya tanmaiviTal antO chaturalaip - punmaiyelAm
விட்டொழித்து நான்மொழியும் மெய்ச்சுகத்தை நண்ணுதிநீ இட்டிழைத்த அச்சுகந்தான் யாதென்னில் - கட்டழித்த
viTTozhittu nAnmozhiyum meychchukattai naNNutinI iTTizhaitta achchukantAn yAtennil - kaTTazhitta
வேடம் சுகமென்றும் மெய்யுணர்வை யின்றிநின்ற மூடம் சுகமென்றும் முன்பலவாம் - தோடம்செய்
vETam chukamenRum meyyuNarvai yinRininRa mUTam chukamenRum munpalavAm - tOTamchey
போகம் சுகமென்றும் போகம் தரும்கரும யோகம் சுகமென்றும் உண்டிலையென் - றாகஞ்செய்
pOkam chukamenRum pOkam tarumkaruma yOkam chukamenRum uNTilaiyen - RAkanjchey
போதம் சுகமென்றும் பொன்றல்சுகம் என்றும்விந்து நாதம் சுகமென்றும் நாம்பொருளென் - றோதலஃ
pOtam chukamenRum ponRalchukam enRumvintu nAtam chukamenRum nAmporuLen - ROtalaஃ
தொன்றே சுகமென்றும் உட்கண் டிருக்குமந்த நன்றே சுகமென்றும் நாம்புறத்தில் - சென்றேகண்
tonRE chukamenRum uTkaN Tirukkumanta nanRE chukamenRum nAmpuRattil - chenREkaN
டாற்றல் சுகமென்றும் அன்பறியாச் சூனியமே ஏற்ற சுகமென்றும் இவ்வண்ணம் - ஏற்றபடி
TARRal chukamenRum anpaRiyAch chUniyamE ERRa chukamenRum ivvaNNam - ERRapaTi
வெல்லுகின்றோர் போன்று விரிநீர் உலகிடையே சொல்லுகின்றோர் சொல்லும் சுகமன்று - சொல்லுகின்ற
vellukinROr pOnRu virinIr ulakiTaiyE chollukinROr chollum chukamanRu - chollukinRa
வானாதி தத்துவங்கள் மாய்த்தாண் டுறுகின்ற நானாதி மூன்றிலொன்று நாடாமல் - ஆனாமை
vAnAti tattuvangkaL mAyttAN TuRukinRa nAnAti mUnRilonRu nATAmal - AnAmai
எள்ளும் பகலும் இரவுமிலா ஓரிடத்தில் உள்ளும் புறம்பும் ஒருபடித்தாய் - வள்ளலென
eLLum pakalum iravumilA OriTattil uLLum puRampum orupaTittAy - vaLLalena
வாழும் பரசிவத்தின் வன்னிவெப்பம் போலமுற்றும் சூழும் சுகமே சுகம்கண்டாய் - சூழ்வதனுக்
vAzhum parachivattin vanniveppam pOlamuRRum chUzhum chukamE chukamkaNTAy - chUzhvatanuk
கெவ்வா றிருந்தால் இயலும் எனிலம்ம இவ்வா றிருந்தால் இயலாதால் - செவ்வாற்றில்
kevvA RiruntAl iyalum enilamma ivvA RiruntAl iyalAtAl - chevvARRil
பற்றற்றான் பற்றினையே பற்றியிடல் வேண்டுமது பற்றற்றால் அன்றிப் பலியாதால் - பற்றற்றல்
paRRaRRAn paRRinaiyE paRRiyiTal vENTumatu paRRaRRAl anRip paliyAtAl - paRRaRRal
வேதனையால் ஈங்கு விரியும் சகப்பழக்க வாதனைபோய் நீங்கிலன்றி வாராதால் - வாதனையும்
vEtanaiyAl Ingku viriyum chakappazhakka vAtanaipOy nIngkilanRi vArAtAl - vAtanaiyum
ஈனமந்தோ இவ்வுலகம் என்றருளை நாடுகின்ற ஞானம்வந்தால் அன்றி நலியாதால் - ஞானமது
InamantO ivvulakam enRaruLai nATukinRa njAnamvantAl anRi naliyAtAl - njAnamatu
போகமுற்றும் பொய்யெனவே போதும் அனித்தியவி வேகமுற்றால் அன்றி விளங்காதால் - ஆகவஃ
pOkamuRRum poyyenavE pOtum anittiyavi vEkamuRRAl anRi viLangkAtAl - Akavaஃ
துண்ணவந்தால் போலுமிவண் உற்றுவிசா ரித்திடுமோர் எண்ணம்வந்தால் அன்றி இசையாதால் - எண்ணமது
tuNNavantAl pOlumivaN uRRuvichA rittiTumOr eNNamvantAl anRi ichaiyAtAl - eNNamatu
பங்கமடைந் தார்அவையைப் பாராது சாதுக்கள் சங்கமடைந் தாலன்றிச் சாராதால் - இங்கதனால்
pangkamaTain tAravaiyaip pArAtu chAtukkaL changkamaTain tAlanRich chArAtAl - ingkatanAl
வீழ்முகத்த ராகிநிதம் வெண் றணிந்தறியாப் பாழ்முகத்தோர் தம்பால் படர்ந்துறையேல் - பாழ்முகத்தில்
vIzhmukatta rAkinitam veN RaNintaRiyAp pAzhmukattOr tampAl paTarntuRaiyEl - pAzhmukattil
பேயாட உள்ளறியாப் பித்தாட நின்னுடனே வாயாடு வோர்பால் மருவிநில்லேல் - நீயாடிப்
pEyATa uLLaRiyAp pittATa ninnuTanE vAyATu vOrpAl maruvinillEl - nIyATip
பேதித் திடவும் பிறழ்ந்திடவும் நின்னுடனே வாதித் திடுவோர்பால் வாய்ந்துறையேல் - சாதித்துச்
pEtit tiTavum piRazhntiTavum ninnuTanE vAtit tiTuvOrpAl vAyntuRaiyEl - chAtittuch
சைவமெங்கே வெண்ற்றின் சார்பெங்கே மெய்யான தெய்வமெங்கே என்பவரைச் சேர்ந்துறையேல் - உய்வதெங்கே
chaivamengkE veNRRin chArpengkE meyyAna teyvamengkE enpavaraich chErntuRaiyEl - uyvatengkE
தீராச் சிவநிந்தை செய்துசிறு தேவர்களை நேராய்ப் பிதற்றுவர்பால் நேர்ந்துறையேல் - ஓராமல்
tIrAch chivanintai cheytuchiRu tEvarkaLai nErAyp pitaRRuvarpAl nErntuRaiyEl - OrAmal
எள்ளென்றும் தெய்வமென்ப தில்லை இதுதெளிந்து கொள்ளென்றும் துள்ளுகின்றோர் கூட்டமுறேல் - நள்ளொன்று
eLLenRum teyvamenpa tillai ituteLintu koLLenRum tuLLukinROr kUTTamuREl - naLLonRu
நாமென்றும் நம்மையன்றி நண்ணும் பிரமமில்லை ஆமென்றும் சொல்பவர்பால் ஆர்ந்துறையேல் - தாமொன்ற
nAmenRum nammaiyanRi naNNum piramamillai AmenRum cholpavarpAl ArntuRaiyEl - tAmonRa
எல்லா அறிவும் எமதறிவே என்றுரைக்கும் பொல்லா வலக்காரர் பொய்உகவேல் - புல்லாக
ellA aRivum emataRivE enRuraikkum pollA valakkArar poyukavEl - pullAka
அற்பமே மற்றவெலாம் ஆயிலழி யாக்காய கற்பமே வத்துவென்பார் கண்ணடையேல் - சிற்சிலவாம்
aRpamE maRRavelAm Ayilazhi yAkkAya kaRpamE vattuvenpAr kaNNaTaiyEl - chiRchilavAm
சித்திகளே வத்துவென்போர்ச் சேர்ந்துறையேல் பன்மாயா சத்திகளே வத்துவென்போர் சார்படையேல் - பொத்தியஇச்
chittikaLE vattuvenpOrch chErntuRaiyEl panmAyA chattikaLE vattuvenpOr chArpaTaiyEl - pottiyaich
சன்மமே தோற்றும் தரமாம் திரமனித்த கன்மமே வத்துவென்போர் கண்ணுறையேல் - கன்மமிகு
chanmamE tORRum taramAm tiramanitta kanmamE vattuvenpOr kaNNuRaiyEl - kanmamiku
மாகம் கதியென்பார் மாட்டுறையேல் பல்போக யோகம் பொருளென்பா ரூடுறையேல் - ஏகம்கொள்
mAkam katiyenpAr mATTuRaiyEl palpOka yOkam poruLenpA rUTuRaiyEl - EkamkoL
மண்ணென்பார் வானென்பார் வாய்முச் சுடரென்பார் பெண்ணென்பார் மற்றவர்தம் பேருரையேல் - மண்ணின்பால்
maNNenpAr vAnenpAr vAymuch chuTarenpAr peNNenpAr maRRavartam pEruraiyEl - maNNinpAl
மன்னுரையாச் சில்லோர் மரந்தெய்வம் என்பார்மற் றென்னுரையார் ஈண்டவர்பால் எய்தியிடேல் - மன்நலங்கள்
mannuraiyAch chillOr maranteyvam enpArmaR RennuraiyAr INTavarpAl eytiyiTEl - mannalangkaL
பூத்தால் சிறுவர்களும் பூசா பலம்என்பார் தேற்றார் சிவபூசை செய்யாராய்ப் - பூத்தாவி
pUttAl chiRuvarkaLum pUchA palamenpAr tERRAr chivapUchai cheyyArAyp - pUttAvi
வீறுகின்ற பூசையிலென் வீண்என்று வீண்பாழ்வாய்க் கூறுகின்ற பேயர்கள்பால் கூடியுறேல் - மாறுகின்ற
vIRukinRa pUchaiyilen vINenRu vINpAzhvAyk kURukinRa pEyarkaLpAl kUTiyuREl - mARukinRa
நீட்கோல வாழ்க்கையெலாம் நீத்திடுவோன் பொன்அறைக்குத் தாட்கோல் இடுவாரைச் சார்ந்துறையேல் - நீட்கோல
nITkOla vAzhkkaiyelAm nIttiTuvOn ponaRaikkut tATkOl iTuvAraich chArntuRaiyEl - nITkOla
மெய்யொழுக்கத் தார்போல் வெளிநின் றகத்தொழியாப் பொய்யொழுக்கத் தார்பால் பொருந்தியுறேல் - பொய்யொழுக்கில்
meyyozhukkat tArpOl veLinin RakattozhiyAp poyyozhukkat tArpAl poruntiyuREl - poyyozhukkil
பொய்ந்நூல் பதறிப் புலம்புகின்ற பித்தர்கள்பால் அந்நூல் விரும்பி அடைந்தலையேல் - கைந்நேர்ந்து
poynnUl pataRip pulampukinRa pittarkaLpAl annUl virumpi aTaintalaiyEl - kainnErntu
கோடாது கோடி கொடுத்தாலும் சைவநெறி நாடா தவரவையை நண்ணியிடேல் - கோடாது
kOTAtu kOTi koTuttAlum chaivaneRi nATA tavaravaiyai naNNiyiTEl - kOTAtu
கொல்லா விரதமது கொள்ளாரைக் காணிலொரு புல்லாக எண்ணிப் புறம்பொழிக - எல்லாமும்
kollA viratamatu koLLAraik kANiloru pullAka eNNip puRampozhika - ellAmum
ஆகநவில் கின்றதென்நம் ஐயனுக்கன் பில்லாரை நீகனவி லேனும் நினையற்க - ஏகனடிக்
Akanavil kinRatennam aiyanukkan pillArai nIkanavi lEnum ninaiyaRka - EkanaTik
கன்பே வடிவாய் அருளே உயிராய்ப்பே ரின்பே உணர்வாய் இசைந்தாரும் - அன்பாகிக்
kanpE vaTivAy aruLE uyirAyppE rinpE uNarvAy ichaintArum - anpAkik
கண்டிகையே பூணிற் கலவையே வெண்றாய்க் கொண்டிகவாச் சார்பு குறித்தாரும் - தொண்டுடனே
kaNTikaiyE pUNiR kalavaiyE veNRAyk koNTikavAch chArpu kuRittArum - toNTuTanE
வாய்மலரால் மாலை வகுத்தலொடு நம்மிறைக்குத் தூய்மலரால் மாலை தொடுப்பாரும் - சார்மலரோன்
vAymalarAl mAlai vakuttaloTu nammiRaikkut tUymalarAl mAlai toTuppArum - chArmalarOn
ஏர்நந்த னப்பணிகண் டிச்சையுற நம்மிறைக்குச் சீர்நந்த னப்பணிகள் செய்வோரும் - நார்நந்தாத்
Ernanta nappaNikaN TichchaiyuRa nammiRaikkuch chIrnanta nappaNikaL cheyvOrum - nArnantAt
தீயின்மெழு காச்சிந்தை சேர்ந்துருகி நம்மிறைவாழ் கோயில்மெழு காநின்ற கொள்கையரும் - மேயினரைத்
tIyinmezhu kAchchintai chErnturuki nammiRaivAzh kOyilmezhu kAninRa koLkaiyarum - mEyinarait
தாயில் வளர்க்கும் தயவுடைய நம்பெருமான் கோயில் விளக்கும் குணத்தோரும் - தூயஅருள்
tAyil vaLarkkum tayavuTaiya namperumAn kOyil viLakkum kuNattOrum - tUyaaruL
இன்புடனே தீபமுதல் எல்லாச் சரியைகளும் அன்புடனே செய்தங் கமர்வாரும் - அன்புடனே
inpuTanE tIpamutal ellAch chariyaikaLum anpuTanE cheytang kamarvArum - anpuTanE
அண்ணியமேல் அன்பர்க் கமுதீத லாதிசிவ புண்ணியமே நாளும் புரிவோரும் - புண்ணியமாம்
aNNiyamEl anpark kamutIta lAtichiva puNNiyamE nALum purivOrum - puNNiyamAm
தேனே அமுதே சிவமே சிவமேஎம் மானேஎன் றேத்தி மகிழ்வாரும் - வானான
tEnE amutE chivamE chivamEem mAnEen REtti makizhvArum - vAnAna
மன்னே அருட்கடலே மாணிக்க மேஎங்கள் அன்னேஎன் றுன்னி அமர்வோரும் - நன்னேயப்
mannE aruTkaTalE mANikka mEengkaL annEen Runni amarvOrum - nannEyap
பண்ர் மொழியால் பரிந்தேத்தி ஆனந்தக் கண்ர்கொண் டுள்ளம் களிப்போரும் - உண்ரில்
paNr mozhiyAl parintEtti Anantak kaNrkoN TuLLam kaLippOrum - uNril
பண்டுகண்டும் காணாப் பரிசினராய்ப் பொன்மேனி கண்டுகண்டு நாளும் களிப்போரும் - தொண்டடையும்
paNTukaNTum kANAp parichinarAyp ponmEni kaNTukaNTu nALum kaLippOrum - toNTaTaiyum
பொற்பதிகம் என்றெண்ணிப் போற்றிஒரு மூவர்களின் சொற்பதிகம் கொண்டு துதிப்போரும் - சொற்பனத்தும்
poRpatikam enReNNip pORRioru mUvarkaLin choRpatikam koNTu tutippOrum - choRpanattum
மாசகத்தில் சேர்க்காத மாணிக்கம் என்றதிரு வாசகத்தை வாயால் மலர்வோரும் - வாசகத்தின்
mAchakattil chErkkAta mANikkam enRatiru vAchakattai vAyAl malarvOrum - vAchakattin
மன்னிசைப்பால் மேலோர் வகுத்தேத்தி நின்றதிரு இன்னிசைப்பா ஆதி இசைப்போரும் - மன்னிசைப்பின்
mannichaippAl mElOr vakuttEtti ninRatiru innichaippA Ati ichaippOrum - mannichaippin
நல்வாழ் வருளுகின்ற நம்பெருமான் மான்மியங்கள் சொல்வோரும் கேட்டுத் தொழுவோரும் - சொல்வாய்ந்த
nalvAzh varuLukinRa namperumAn mAnmiyangkaL cholvOrum kETTut tozhuvOrum - cholvAynta
தாதாவென் றன்புடனே சாமகீ தங்கள்முதல் வேதாக மங்கள் விரிப்போரும் - வேதாந்தம்
tAtAven RanpuTanE chAmakI tangkaLmutal vEtAka mangkaL virippOrum - vEtAntam
சேர்ந்தோர்க் கருளும் சிவமே பொருளென்று தேர்ந்தே சிவபூசை செய்வோரும் - ஆர்ந்தேத்தி
chErntOrk karuLum chivamE poruLenRu tErntE chivapUchai cheyvOrum - ArntEtti
நன்னெஞ்சே கோயிலென நம்பெருமான் தன்னைவைத்து மன்னும் சிவநேயம் வாய்ந்தோரும் - முன்அயன்றன்
nannenjchE kOyilena namperumAn tannaivaittu mannum chivanEyam vAyntOrum - munayanRan
அஞ்செழுத்தெல் லாம்கேட்கில் அஞ்செழுத்தாம் எம்பெருமான் அஞ்செழுத்தால் அர்ச்சித் தமர்வோரும் - அஞ்செனவே
anjchezhuttel lAmkETkil anjchezhuttAm emperumAn anjchezhuttAl archchit tamarvOrum - anjchenavE
விஞ்சும் பொறியின் விடயமெலாம் நம்பெருமான் செஞ்சுந் தரப்பதத்தில் சேர்த்தோரும் - வஞ்சம்செய்
vinjchum poRiyin viTayamelAm namperumAn chenjchun tarappatattil chErttOrum - vanjchamchey
பொய்வே தனைநீக்கும் புண்ணியன்பால் தம்முயிரை நைவே தனமாக்கும் நல்லோரும் - செய்வேலை
poyvE tanainIkkum puNNiyanpAl tammuyirai naivE tanamAkkum nallOrum - cheyvElai
நீட நடத்தலொடு நிற்றல்முதல் நம்பெருமான் ஆடல் அடித்தியானம் ஆர்ந்தோரும் - வாடலறத்
nITa naTattaloTu niRRalmutal namperumAn ATal aTittiyAnam ArntOrum - vATalaRat
தூய நனவிற் சுழுத்தியொடு நம்பெருமான் நேயம் நிகழ்த்தும் நெறியோரும் - மாயமுறு
tUya nanaviR chuzhuttiyoTu namperumAn nEyam nikazhttum neRiyOrum - mAyamuRu
மானதுவாய் நின்ற வயம்நீக்கித் தானற்றுத் தானதுவாய் நிற்கும் தகையோரும் - வானமதில்
mAnatuvAy ninRa vayamnIkkit tAnaRRut tAnatuvAy niRkum takaiyOrum - vAnamatil
வானங்கண் டாடும் மயில்போன்று நம்பெருமான் தானங்கண் டாடும் தவத்தோரும் - மோனமொடு
vAnangkaN TATum mayilpOnRu namperumAn tAnangkaN TATum tavattOrum - mOnamoTu
தாழ்சடையும் நீறும் சரிகோவ ணக்கீளும் வாழ்சிவமும் கொண்டு வதிவோரும் - ஆழ்நிலைய
tAzhchaTaiyum nIRum charikOva NakkILum vAzhchivamum koNTu vativOrum - Azhnilaiya
வாரியலை போன்றசுத்த மாயையினால் ஆம்பூத காரியங்க ளாதியெலாம் கண்டொழித்து - ஊர்இயங்கத்
vAriyalai pOnRachutta mAyaiyinAl AmpUta kAriyangka LAtiyelAm kaNTozhittu - Uriyangkat
தஞ்சம் தருமலரோன் தத்துவமாம் பூதங்கள் ஐஞ்சும் பொறியஞ்சும் அஞ்சறிவும் - அஞ்செனுமோர்
tanjcham tarumalarOn tattuvamAm pUtangkaL ainjchum poRiyanjchum anjchaRivum - anjchenumOr
வாக்குமுதல் ஐஞ்சுமற்று மாலோன்தன் தத்துவமாம் ஊக்கும் கலைமுதலாம் ஓரேழும் - நீக்கிஅப்பால்
vAkkumutal ainjchumaRRu mAlOntan tattuvamAm Ukkum kalaimutalAm OrEzhum - nIkkiappAl
மேவி விளங்குசுத்த வித்தைமுதல் நாதமட்டும் தாவி வயங்குசுத்த தத்துவத்தில் - மேவிஅகன்
mEvi viLangkuchutta vittaimutal nAtamaTTum tAvi vayangkuchutta tattuvattil - mEviakan
றப்பால் அருள்கண் டருளால் தமைத்தாம்கண் டப்பால் பரவெளிகண் டப்பாலுக் - கப்பாலும்
RappAl aruLkaN TaruLAl tamaittAmkaN TappAl paraveLikaN TappAluk - kappAlum
தீராச் சுயமாய்ச் சிதானந்த மாம்ஒளியைப் பாரா இருந்த படியிருந்து - பேராது
tIrAch chuyamAych chitAnanta mAmoLiyaip pArA irunta paTiyiruntu - pErAtu
கண்டதுவென் றொன்றும் கலவாது தாம்கலந்து கொண்டசிவ யோகியராம் கொற்றவரும் - அண்டரிய
kaNTatuven RonRum kalavAtu tAmkalantu koNTachiva yOkiyarAm koRRavarum - aNTariya
சத்துவத்தில் சத்துவமே தம்முருவாய்க் கொண்டுபர தத்துவத்தின் நிற்கும் தகவோரும் - அத்துவத்தில்
chattuvattil chattuvamE tammuruvAyk koNTupara tattuvattin niRkum takavOrum - attuvattil
தீதும் சுகமும் சிவன்செயலென் றெண்ணிவந்த யாதும் சமமா இருப்போரும் - கோதுபடக்
tItum chukamum chivancheyalen ReNNivanta yAtum chamamA iruppOrum - kOtupaTak
கூறும் குறியும் குணமும் குலமுமடி ஈறும் கடையும் இகந்தோரும் - வீறுகின்ற
kURum kuRiyum kuNamum kulamumaTi IRum kaTaiyum ikantOrum - vIRukinRa
சேந்தி னடைந்தவெலாஞ் சீரணிக்கச் சேர்சித்த சாந்தி யுடனே சரிப்போரும் - சாந்திபெறத்
chEnti naTaintavelAnj chIraNikkach chErchitta chAnti yuTanE charippOrum - chAntipeRat
தம்மையுறும் சித்தெவையும் தாமுவத்தல் செய்யாமல் செம்மையுடன் வாழும் திறலோரும் - எம்மையினும்
tammaiyuRum chittevaiyum tAmuvattal cheyyAmal chemmaiyuTan vAzhum tiRalOrum - emmaiyinum
ஆராமை ஓங்கும் அவாக்கடல்நீர் மான்குளம்பின் நீராக நீந்தி நிலைத்தோரும் - சேராது
ArAmai Ongkum avAkkaTalnIr mAnkuLampin nIrAka nInti nilaittOrum - chErAtu
தம்பொருளைக் கண்டே சதானந்த வீட்டினிடைச் செம்பொருளைச் சார்ந்த திறத்தோரும் - மண்பொருள்போய்த்
tamporuLaik kaNTE chatAnanta vITTiniTaich chemporuLaich chArnta tiRattOrum - maNporuLpOyt
தாயர் எனமாதர் தம்மையெண்ணிப் பாலர்பித்தர் பேயரென நண்ணும் பெரியோரு - மீயதனின்
tAyar enamAtar tammaiyeNNip pAlarpittar pEyarena naNNum periyOru - mIyatanin
எய்ப்பரிசாம் ஓர்திரணம் எவ்வுலகும் செய்தளிக்க மெய்ப்பரிசஞ் செய்யவல்ல வித்தகரும் - மெய்ப்படவே
eypparichAm OrtiraNam evvulakum cheytaLikka meypparichanj cheyyavalla vittakarum - meyppaTavE
யாவும் அறிந்தும் அறியார்போன் றெப்பொழுதும் சாவும் பிறப்பும் தவிர்ந்தோரும் - ஓவலின்றி
yAvum aRintum aRiyArpOn Reppozhutum chAvum piRappum tavirntOrum - OvalinRi
வைதிடினும் வாழ்கஎன வாழ்த்தி உபசாரம் செய்திடினும் தன்மை திறம்பாரும் - மெய்வகையில்
vaitiTinum vAzhkaena vAzhtti upachAram cheytiTinum tanmai tiRampArum - meyvakaiyil
தேறா வுலகம் சிவமயமாய்க் கண்டெங்கும் ஏறா திழியா திருப்போரும் - மாறாது
tERA vulakam chivamayamAyk kaNTengkum ERA tizhiyA tiruppOrum - mARAtu
மோனந்தான் கொண்டு முடிந்தவிடத் தோங்குபர மானந்தா தீதத் தமர்ந்தோரும் - தாம்நந்தாச்
mOnantAn koNTu muTintaviTat tOngkupara mAnantA tItat tamarntOrum - tAmnantAch
சாதுக்கள் ஆமவர்தம் சங்க மகத்துவத்தைச் சாதுக்க ளன்றியெவர் தாமறிவார் - நீதுக்கம்
chAtukkaL Amavartam changka makattuvattaich chAtukka LanRiyevar tAmaRivAr - nItukkam
நீங்கிஅன்னோர் சங்கத்தில் நின்றுமகிழ்ந் தேத்திநிதம் ஆங்கவர்தாட் குற்றேவல் ஆய்ந்தியற்றி - ஓங்குசிவ
nIngkiannOr changkattil ninRumakizhn tEttinitam AngkavartAT kuRREval AyntiyaRRi - Ongkuchiva
பஞ்சாட் சரத்தைப் பகரருளே நாவாக எஞ்சாப் பரிவுடனே எண்ணியருள் - செஞ்சோதித்
panjchAT charattaip pakararuLE nAvAka enjchAp parivuTanE eNNiyaruL - chenjchOtit
தாதொன்று தும்பைமுடித் தாணுஅடி யொன்றிமற்றை யாதொன்றும் நோக்கா தமைந்திடுக - தீதென்ற
tAtonRu tumpaimuTit tANuaTi yonRimaRRai yAtonRum nOkkA tamaintiTuka - tItenRa
பாழ்வாழ்வு நீங்கப் பதிவாழ்வில் எஞ்ஞான்றும் வாழ்வாய்என் னோடும் மகிழ்ந்து.
pAzhvAzhvu nIngkap pativAzhvil enjnjAnRum vAzhvAyen nOTum makizhntu.