
திருவருட்பா · 4சிவநேச வெண்பா
ஆயாக் கொடியேனுக் கன்புடையாய் நீஅருளிங் கீயாக் குறையே இலைகண்டாய் - மாயாற்கும் விள்ளாத் திருவடிக்கீழ் விண்ணப்பம் யான்செய்து கொள்ளாக் குறையே குறை.
AyAk koTiyEnuk kanpuTaiyAy nIaruLing kIyAk kuRaiyE ilaikaNTAy - mAyARkum viLLAt tiruvaTikkIzh viNNappam yAncheytu koLLAk kuRaiyE kuRai.
பெற்றிடுதாய் போல்வதுநின் பெற்றியென்பேன் பிள்ளையது மற்றழுதால் கேட்டும் வராதங்கே - சற்றிருக்கப் பெற்றாள் பொறுப்பள் பிரானீ பொறுக்கினுநின் பொற்றாள் பொறாஎம் புலம்பு.
peRRiTutAy pOlvatunin peRRiyenpEn piLLaiyatu maRRazhutAl kETTum varAtangkE - chaRRirukkap peRRAL poRuppaL pirAnI poRukkinunin poRRAL poRAem pulampu.
பொன்போல் பொறுமையுளார் புந்திவிடாய் நீஎன்பார் என்போல் பொறுமையுளார் யார்கண்டாய் - புன்போக அல்லாம் படிசினங்கொண் டாணவஞ்செய் இன்னாமை எல்லாம் பொறுக்கின்றேன் யான்.
ponpOl poRumaiyuLAr puntiviTAy nIenpAr enpOl poRumaiyuLAr yArkaNTAy - punpOka allAm paTichinangkoN TANavanjchey innAmai ellAm poRukkinREn yAn.
முன்மணத்தில் சுந்தரரை முன்வலுவில் கொண்டதுபோல் என்மணத்தில் நீவந் திடாவிடினும் - நின்கணத்தில் ஒன்றும் ஒருகணம்வந் துற்றழைக்கில் செய்ததன்றி இன்றும் ஒருமணஞ்செய் வேன்.
munmaNattil chuntararai munvaluvil koNTatupOl enmaNattil nIvan tiTAviTinum - ninkaNattil onRum orukaNamvan tuRRazhaikkil cheytatanRi inRum orumaNanjchey vEn.
செய்யார் அழலேநின் செம்மேனி என்னினும்என் அய்யாநின் கால்பிடித்தற் கஞ்சேன்காண் - மெய்யாஇஞ் ஞான்றுகண்டு நான்மகிழ நந்தொண்டன் என்றெனையும் ஏன்றுகொண் டால்போதும் எனக்கு.
cheyyAr azhalEnin chemmEni enninumen ayyAnin kAlpiTittaR kanjchEnkAN - meyyAinj njAnRukaNTu nAnmakizha nantoNTan enRenaiyum EnRukoN TAlpOtum enakku.
என்பாலோ என்பால் இராதோடு கின்றமனத் தின்பாலோ அம்மனத்தைச் சேர்மாயை - தன்பாலோ யார்பால் பிழையுளதோ யானறியேன் என்னம்மை ஓர்பால் கொளநின்றோய் ஓது.
enpAlO enpAl irAtOTu kinRamanat tinpAlO ammanattaich chErmAyai - tanpAlO yArpAl pizhaiyuLatO yAnaRiyEn ennammai OrpAl koLaninROy Otu.
நாணவத்தி னேன்றனையோ நாயேனை மூடிநின்ற ஆணவத்தை யோநான் அறியேனே - வீணவத்தில் தீங்குடையாய் என்னஇவண் செய்பிழையை நோக்கிஅருட் பாங்குடையாய் தண்டிப் பது.
nANavatti nEnRanaiyO nAyEnai mUTininRa ANavattai yOnAn aRiyEnE - vINavattil tIngkuTaiyAy ennaivaN cheypizhaiyai nOkkiaruT pAngkuTaiyAy taNTip patu.
எச்சம் பெறுமுலகோர் எட்டிமர மானாலும் பச்சென் றிருக்கப் பகர்வார்காண் - வெச்சென்ற நஞ்சனையேன் குற்றமெலாம் நாடாது நாதஎனை அஞ்சனையேல் என்பாய் அமர்ந்து.
echcham peRumulakOr eTTimara mAnAlum pachchen Rirukkap pakarvArkAN - vechchenRa nanjchanaiyEn kuRRamelAm nATAtu nAtaenai anjchanaiyEl enpAy amarntu.
கற்றறியேன் நின்னடிச்சீர் கற்றார் கழகத்தில் உற்றறியேன் உண்மை உணர்ந்தறியேன் - சிற்றறிவேன் வன்செய்வேல் நேர்விழியார் மையலினேன் மாதேவா என்செய்வேன் நின்னருளின் றேல்.
kaRRaRiyEn ninnaTichchIr kaRRAr kazhakattil uRRaRiyEn uNmai uNarntaRiyEn - chiRRaRivEn vancheyvEl nErvizhiyAr maiyalinEn mAtEvA encheyvEn ninnaruLin REl.
மெய்தான் உடையோர் விரும்புகின்ற நின்அருளென் செய்தால் வருமோ தெரியேனே - பொய்தாவு நெஞ்சினேன் மன்றுள் நிருத்தா நினைக்கேட்க அஞ்சினேன் அன்பின்மை யால்.
meytAn uTaiyOr virumpukinRa ninaruLen cheytAl varumO teriyEnE - poytAvu nenjchinEn manRuL niruttA ninaikkETka anjchinEn anpinmai yAl.
மாதேவா ஓவா மருந்தேவா மாமணிஇப் போதேவா என்றே புலம்புற்றேன் - நீதாவா யானாலுன் சித்த மறியேன் உடம்பொழிந்து போனாலென் செய்வேன் புகல்.
mAtEvA OvA maruntEvA mAmaNiip pOtEvA enRE pulampuRREn - nItAvA yAnAlun chitta maRiyEn uTampozhintu pOnAlen cheyvEn pukal.
கொன்செய்தாற் கேற்றிடுமென் குற்றமெலாம் ஐயஎனை என்செய்தால் தீர்ந்திடுமோ யானறியேன் - முன்செய்தோய் நின்பால் எனைக்கொடுத்தேன் நீசெய்க அன்றிஇனி என்பால் செயலொன் றிலை.
koncheytAR kERRiTumen kuRRamelAm aiyaenai encheytAl tIrntiTumO yAnaRiyEn - muncheytOy ninpAl enaikkoTuttEn nIcheyka anRiini enpAl cheyalon Rilai.
எண்ணிலெளி யேன்தவிர எல்லா உயிர்களுநின் தண்ணிலகுந் தாழல் சார்ந்திடுங்காண் - மண்ணில்வருந் தீங்கென்ற எல்லாமென் சிந்தையிசைந் துற்றனமற் றாங்கொன்றும் இல்லாமை யால்.
eNNileLi yEntavira ellA uyirkaLunin taNNilakun tAzhal chArntiTungkAN - maNNilvarun tIngkenRa ellAmen chintaiyichain tuRRanamaR RAngkonRum illAmai yAl.
தாரம்விற்றுஞ் சேய்விற்றுந் தன்னைவிற்றும் பொய்யாத வாரம்வைத்தான் முன்னிங்கோர் மன்னனென்பர் - நாரம்வைத்த வேணிப் பிரானதுதான் மெய்யாமேல் அன்றெனைநீ ஏணிற் பிறப்பித்த தில்.
tAramviRRunj chEyviRRun tannaiviRRum poyyAta vAramvaittAn munningkOr mannanenpar - nAramvaitta vENip pirAnatutAn meyyAmEl anRenainI ENiR piRappitta til.
உள்ளொன்ற நின்னடிக்கன் புற்றறியேன் என்னுளத்தின் வெள்ளென்ற வன்மை விளங்காதோ - நள்ளொன்ற அச்சங்கொண் டேனைநினக் கன்பனென்பர் வேழத்தின் எச்சங்கண் டாற்போல வே.
uLLonRa ninnaTikkan puRRaRiyEn ennuLattin veLLenRa vanmai viLangkAtO - naLLonRa achchangkoN TEnaininak kanpanenpar vEzhattin echchangkaN TARpOla vE.
நீத்தாடுஞ் செஞ்சடையாய் நீள்வேடங் கட்டிவஞ்சக் கூத்தாடு கின்றேனைக் கொண்டுசிலர் - கூத்தாநின் பத்தனென்பர் என்னோ பகல்வேடத் தார்க்குமிங்கு வித்தமிலா நாயேற்கும் வேறு.
nIttATunj chenjchaTaiyAy nILvETang kaTTivanjchak kUttATu kinREnaik koNTuchilar - kUttAnin pattanenpar ennO pakalvETat tArkkumingku vittamilA nAyERkum vERu.
அன்புடையார் இன்சொல் அமுதேறு நின்செவிக்கே இன்புடையாய் என்பொய்யும் ஏற்குங்கொல் - துன்புடையேன் பொய்யுடையேன் ஆயினுநின் பொன்னருளை வேண்டுமொரு மெய்யுடையேன் என்கோ விரைந்து.
anpuTaiyAr inchol amutERu ninchevikkE inpuTaiyAy enpoyyum ERkungkol - tunpuTaiyEn poyyuTaiyEn Ayinunin ponnaruLai vENTumoru meyyuTaiyEn enkO viraintu.
என்னா ருயிர்க்குயிராம் எம்பெருமான் நின்பதத்தை உன்னார் உயிர்க்குறுதி உண்டோதான் - பொன்னாகத் தார்க்கும் சதுமுகர்க்கும் தானத்தவர்க்குமற்றை யார்க்கும் புகலுன் அருள்.
ennA ruyirkkuyirAm emperumAn ninpatattai unnAr uyirkkuRuti uNTOtAn - ponnAkat tArkkum chatumukarkkum tAnattavarkkumaRRai yArkkum pukalun aruL.
வெள்ளைப் பிறைஅணிந்த வேணிப் பிரானேநான் பிள்ளைப் பிராயத்தில் பெற்றாளை - எள்ளப் பொறுத்தாள்அத் தாயில் பொறுப்புடையோய் நீதான் வெறுத்தால் இனிஎன்செய் வேன்.
veLLaip piRaiaNinta vENip pirAnEnAn piLLaip pirAyattil peRRALai - eLLap poRuttALat tAyil poRuppuTaiyOy nItAn veRuttAl inienchey vEn.
ஆயிரமன்றேநூறும் அன்றேஈ ரைந்தன்றே ஆயிரம்பேர் எந்தைஎழுத் தைந்தேகாண் - நீஇரவும் எல்லு நினைத்தியென ஏத்துகினும் எந்தாய்வீண் செல்லுமனம் என்செய்கேன் செப்பு.
AyiramanREnURum anREI raintanRE AyirampEr entaiezhut taintEkAN - nIiravum ellu ninaittiyena Ettukinum entAyvIN chellumanam encheykEn cheppu.
வஞ்சந் தருங்காம வாழ்க்கையிடைச் சிக்கியஎன் நெஞ்சந் திருத்தி நிலைத்திலையே - எஞ்சங் கரனே மழுக்கொள் கரனே அரனே வரனே சிதம்பரனே வந்து.
vanjchan tarungkAma vAzhkkaiyiTaich chikkiyaen nenjchan tirutti nilaittilaiyE - enjchang karanE mazhukkoL karanE aranE varanE chitamparanE vantu.
தாழ்விக்கும் வஞ்சச் சகமால் ஒழித்தென்னை வாழ்விக்கும் நல்ல மருந்தென்கோ - வீழ்விக்கும் ஈங்கான மாயை இகந்தோர்க் கருள்வோய்நின் பாங்கான செம்பொற் பதம்.
tAzhvikkum vanjchach chakamAl ozhittennai vAzhvikkum nalla maruntenkO - vIzhvikkum IngkAna mAyai ikantOrk karuLvOynin pAngkAna chempoR patam.
ஏசொலிக்கு மானிடனாய் ஏன்பிறந்தேன் தொண்டர்கடந் தூசொலிப்பான் கல்லாகத் தோன்றிலனே - தூசொலிப்பான் கல்லாகத் தோன்றுவனேல் காளகண்டா நாயேனுக் கெல்லா நலமுமுள தே.
Echolikku mAniTanAy EnpiRantEn toNTarkaTan tUcholippAn kallAkat tOnRilanE - tUcholippAn kallAkat tOnRuvanEl kALakaNTA nAyEnuk kellA nalamumuLa tE.
குற்றம் பலசெயினுங் கோபஞ் செயாதவருள் சிற்றம் பலமுறையுஞ் சிற்பரனே - வெற்றம்பல் பொய்விட்டால் அன்றிப் புரந்தருளேன் என்றெனைநீ கைவிட்டால் என்செய்கேன் காண்.
kuRRam palacheyinung kOpanj cheyAtavaruL chiRRam palamuRaiyunj chiRparanE - veRRampal poyviTTAl anRip purantaruLEn enRenainI kaiviTTAl encheykEn kAN.
தீக்குணத்தார் யாவருமென் சீடரெனில் என்னுடைய தீக்குணத்தின் எல்லைஎவர் தேர்கிற்பார் - ஊக்கமிகு நல்லோர்க் களிக்கு நதிச்சடையோய் எற்கருளில் எல்லோர்க்கும் ஐயுறவா மே.
tIkkuNattAr yAvarumen chITarenil ennuTaiya tIkkuNattin ellaievar tErkiRpAr - Ukkamiku nallOrk kaLikku natichchaTaiyOy eRkaruLil ellOrkkum aiyuRavA mE.
இன்படையான் றன்புடையான் என்றேழை யேன்தலைமேல் அன்புடையாய் நீயமைப்பித் தாயிதற்கு - வன்படையா தெவ்வண்ணம் நின்னெஞ் சிசைந்ததோ அந்நாளில் இவ்வண்ணம் என்றறிகி லேன்.
inpaTaiyAn RanpuTaiyAn enREzhai yEntalaimEl anpuTaiyAy nIyamaippit tAyitaRku - vanpaTaiyA tevvaNNam ninnenj chichaintatO annALil ivvaNNam enRaRiki lEn.
ஏய்ப்பிறப்பொன் றில்லாதோய் என்பிறப்பின் ஏழ்மடங்கோர் பேய்ப்பிறப்பே நல்ல பிறப்பந்தோ - வாய்ப்புலகம் வஞ்சமெனத் தேக மறைத்தடிமண் வையாமல் அஞ்சிநின்னோ டாடும் அது.
EyppiRappon RillAtOy enpiRappin EzhmaTangkOr pEyppiRappE nalla piRappantO - vAyppulakam vanjchamenat tEka maRaittaTimaN vaiyAmal anjchininnO TATum atu.
கோடும் பிறைச்சடையோய் கோளுங் குறும்புஞ்சாக் காடும் பிணிமூப்புங் காணார்காண் - நீடுநினைக் கண்டார் அடிப்பொடியைக் கண்டார் திருவடியைக் கண்டார் வடிவுகண்டார் கள்.
kOTum piRaichchaTaiyOy kOLung kuRumpunjchAk kATum piNimUppung kANArkAN - nITuninaik kaNTAr aTippoTiyaik kaNTAr tiruvaTiyaik kaNTAr vaTivukaNTAr kaL.
மாலெங்கே வேதனுயர் வாழ்வெங்கே இந்திரன்செங் கோலெங்கே வானோர் குடியெங்கே - கோலஞ்சேர் அண்டமெங்கே அவ்வவ் வரும்பொருளெங் கேநினது கண்டமங்கே நீலமுறாக் கால்.
mAlengkE vEtanuyar vAzhvengkE intirancheng kOlengkE vAnOr kuTiyengkE - kOlanjchEr aNTamengkE avvav varumporuLeng kEninatu kaNTamangkE nIlamuRAk kAl.
எவ்வேளை யோவருங்கூற் றெம்பாலென் றெண்ணுகின்ற அவ்வேளை தோறும் அழுங்குற்றேன் - செவ்வேளை மிக்களித்தோய் நின்கழற்கால் வீரத்தை எண்ணுதொறும் எக்களித்து வாழ்கின்றேன் யான்.
evvELai yOvarungkUR RempAlen ReNNukinRa avvELai tORum azhungkuRREn - chevvELai mikkaLittOy ninkazhaRkAl vIrattai eNNutoRum ekkaLittu vAzhkinREn yAn.
துற்சங்கத் தோர்கணமுந் தோயாது நின்னடியர் சற்சங்கத் தென்றனைநீ தான்கூட்டி - நற்சங்கக் காப்பான் புகழுன் கழற்புகழைக் கேட்பித்துக் காப்பாய் இஃதென் கருத்து.
tuRchangkat tOrkaNamun tOyAtu ninnaTiyar chaRchangkat tenRanainI tAnkUTTi - naRchangkak kAppAn pukazhun kazhaRpukazhaik kETpittuk kAppAy iஃten karuttu.
என்னமுதே முக்கண் இறையே நிறைஞான இன்னமுதே நின்னடியை ஏத்துகின்றோர் - பொன்னடிக்கே காதலுற்றுத் தொண்டுசெயக் காதல்கொண்டேன் எற்கரு காதலுற்றுச் செய்தல் கடன்.
ennamutE mukkaN iRaiyE niRainjAna innamutE ninnaTiyai EttukinROr - ponnaTikkE kAtaluRRut toNTucheyak kAtalkoNTEn eRkaru kAtaluRRuch cheytal kaTan.
ஆரா அமுதே அருட்கடலே நாயேன்றன் பேராத வஞ்சப் பிழைநோக்கி - யாரேனு நின்போல்வார் இல்லாதோய் நீயே புறம்பழித்தால் என்போல்வார் என்சொல்லார் ஈங்கு.
ArA amutE aruTkaTalE nAyEnRan pErAta vanjchap pizhainOkki - yArEnu ninpOlvAr illAtOy nIyE puRampazhittAl enpOlvAr enchollAr Ingku.
மெய்யாக நின்னைவிட வேறோர் துணையில்லேன் ஐயா அதுநீ அறிந்ததுகாண் - பொய்யான தீதுசெய்வேன் தன்பிழையைச் சித்தங் குறித்திடில்யான் யாதுசெய்வேன் அந்தோ இனி.
meyyAka ninnaiviTa vEROr tuNaiyillEn aiyA atunI aRintatukAN - poyyAna tItucheyvEn tanpizhaiyaich chittang kuRittiTilyAn yAtucheyvEn antO ini.
திண்ணம் அறியாச் சிறியேன் உளத்திருக்கும் எண்ணம் அறிந்தாய் இரங்குகிலாய் - அண்ணலுன்பால் நித்தம் இரங்காஎன் நெஞ்சமர்ந்த தாலோநின் சித்தம் இரங்காச் செயல்.
tiNNam aRiyAch chiRiyEn uLattirukkum eNNam aRintAy irangkukilAy - aNNalunpAl nittam irangkAen nenjchamarnta tAlOnin chittam irangkAch cheyal.
கொன்னஞ்சேன் தன்பிழையைக் கூர்ந்துற்று நானினைக்கில் என்நெஞ்சே என்னை எரிக்குங்காண் - மன்னுஞ்சீர் எந்தாய்நின் சித்தத்திற் கேதாமோ நானறியேன் சிந்தா குலனென்செய் வேன்.
konnanjchEn tanpizhaiyaik kUrntuRRu nAninaikkil ennenjchE ennai erikkungkAN - mannunjchIr entAynin chittattiR kEtAmO nAnaRiyEn chintA kulanenchey vEn.
நின்னன்பர் தம்பால் நிறுத்துதியோ அன்றிஎனைப் பொன்னன்பர் தம்பால் புணர்த்துதியோ - பொன்னன்பர் வைவமே என்னும் வறியேன் அறியேனென் தெய்வமே நின்றன் செயல்.
ninnanpar tampAl niRuttutiyO anRienaip ponnanpar tampAl puNarttutiyO - ponnanpar vaivamE ennum vaRiyEn aRiyEnen teyvamE ninRan cheyal.
என்சிறுமை நோக்கா தெனக்கருளல் வேண்டுமென்றே நின்பெருமை நோக்கிஇங்கு நிற்கின்றேன் - என்பெரும யாதோநின் சித்தம் அறியேன் அடியேற்கெப் போதோ அருள்வாய் புகல்.
enchiRumai nOkkA tenakkaruLal vENTumenRE ninperumai nOkkiingku niRkinREn - enperuma yAtOnin chittam aRiyEn aTiyERkep pOtO aruLvAy pukal.
எந்தாயென் குற்றமெலாம் எண்ணுங்கால் உள்நடுங்கி நொந்தா குலத்தின் நுழைகின்றேன் - சிந்தாத காள மகிழ்நின் களக்கருணை எண்ணுதொறும் மீளமகிழ் கின்றேன் விரைந்து.
entAyen kuRRamelAm eNNungkAl uLnaTungki nontA kulattin nuzhaikinREn - chintAta kALa makizhnin kaLakkaruNai eNNutoRum mILamakizh kinREn viraintu.
எள்ளலே என்னினுமோர் ஏத்துதலாய்க் கொண்டருளெம் வள்ளலே என்றனைநீ வாழ்வித்தால் - தள்ளலே வேண்டுமென யாரே விளம்புவார் நின்னடியர் காண்டுமெனச் சூழ்வார் களித்து.
eLLalE enninumOr EttutalAyk koNTaruLem vaLLalE enRanainI vAzhvittAl - taLLalE vENTumena yArE viLampuvAr ninnaTiyar kANTumenach chUzhvAr kaLittu.
வேணிக்க மேவைத்த வெற்பே விலையில்லா மாணிக்க மேகருணை மாகடலே - மாணிக்கு முன்பொற் கிழியளித்த முத்தேஎன் ஆருயிர்க்கு நின்பொற் கழலே நிலை.
vENikka mEvaitta veRpE vilaiyillA mANikka mEkaruNai mAkaTalE - mANikku munpoR kizhiyaLitta muttEen Aruyirkku ninpoR kazhalE nilai.
முத்தேவர் போற்று முதற்றேவ நின்னையன்றி எத்தேவர் சற்றே எடுத்துரைநீ - பித்தேன்செய் குற்றமெலாம் இங்கோர் குணமாகக் கொண்டென்னை அற்றமிலா தாள்கின் றவர்.
muttEvar pORRu mutaRREva ninnaiyanRi ettEvar chaRRE eTutturainI - pittEnchey kuRRamelAm ingkOr kuNamAkak koNTennai aRRamilA tALkin Ravar.
கங்கைச் சடையாய்முக் கண்ணுடையாய் கட்செவியாம் அங்கச் சுடையாய் அருளுடையாய் - மங்கைக் கொருகூ றளித்தாய் உனைத்தொழுமிந் நாயேன் இருகூ றளித்தேன் இடர்க்கு.
kangkaich chaTaiyAymuk kaNNuTaiyAy kaTcheviyAm angkach chuTaiyAy aruLuTaiyAy - mangkaik korukU RaLittAy unaittozhumin nAyEn irukU RaLittEn iTarkku.
பேசத் தெரியேன் பிழையறியேன் பேதுறினும் கூசத் தெரியேன் குணமறியேன் - நேசத்தில் கொள்ளுவார் உன்னடிமைக் கூட்டத்தார் அல்லாதார் எள்ளுவார் கண்டாய் எனை.
pEchat teriyEn pizhaiyaRiyEn pEtuRinum kUchat teriyEn kuNamaRiyEn - nEchattil koLLuvAr unnaTimaik kUTTattAr allAtAr eLLuvAr kaNTAy enai.
ஊணே உடையேஎன் றுட்கருதி வெட்கமிலேன் வீணேநன் னாளை விடுகின்றேன் - காணேனின் செம்பாத மேஎன்றுந் தீராப் பொருளென்று நம்பாத நாயடியேன் நான்.
UNE uTaiyEen RuTkaruti veTkamilEn vINEnan nALai viTukinREn - kANEnin chempAta mEenRun tIrAp poruLenRu nampAta nAyaTiyEn nAn.
சிவமே சிவஞானச் செல்வமே அன்பர் நவமே தவமே நலமே நவமாம் வடிவுற்ற தேவேநின் மாக்கருணை யன்றோ படிவுற்ற என்னுட் பயன்.
chivamE chivanjAnach chelvamE anpar navamE tavamE nalamE navamAm vaTivuRRa tEvEnin mAkkaruNai yanRO paTivuRRa ennuT payan.
கோளாக்கிக் கொள்ளுங் கொடியே னையுநினக்கோர் ஆளாக்கிக் கொள்ளற் கமைவாயேல் - நீளாக்குஞ் செங்கேச வேணிச் சிவனேஎன் ஆணவத்திற் கெங்கே இடங்காண் இயம்பு.
kOLAkkik koLLung koTiyE naiyuninakkOr ALAkkik koLLaR kamaivAyEl - nILAkkunj chengkEcha vENich chivanEen ANavattiR kengkE iTangkAN iyampu.
திண்ணஞ்சற் றீந்திடநின் சித்தம் இரங்காத வண்ணஞ்சற் றேதெரிய வந்ததுகாண் - எண்ணெஞ்சில் இத்தனையு மென்வினைகள் நீங்கில் இருக்கஅண்டம் எத்தனையும் போதாமை என்று.
tiNNanjchaR RIntiTanin chittam irangkAta vaNNanjchaR REteriya vantatukAN - eNNenjchil ittanaiyu menvinaikaL nIngkil irukkaaNTam ettanaiyum pOtAmai enRu.
இண்டைச் சடையோய் எனக்கருள எண்ணுதியேல் தொண்டைப் பெறுமென் துயரெல்லாம் - சண்டைக்கிங் குய்ஞ்சே மெனஓடும் ஓட்டத்திற் கென்னுடைய நெஞ்சே பிறகிடுங்காண் நின்று.
iNTaich chaTaiyOy enakkaruLa eNNutiyEl toNTaip peRumen tuyarellAm - chaNTaikking kuynjchE menaOTum OTTattiR kennuTaiya nenjchE piRakiTungkAN ninRu.
கண்ணா ணிழுதைகள்பாற் காட்டிக் கொடுக்கிலெனை அண்ணா அருளுக் கழகன்றே - உண்ணாடு நின்னடியார் கூட்டத்தில் நீரிவனைச் சேர்த்திடுமின் என்னடியான் என்பாய் எடுத்து.
kaNNA NizhutaikaLpAR kATTik koTukkilenai aNNA aruLuk kazhakanRE - uNNATu ninnaTiyAr kUTTattil nIrivanaich chErttiTumin ennaTiyAn enpAy eTuttu.
கண்ணப்பன் ஏத்துநுதற் கண்ணப்ப மெய்ஞ்ஞான விண்ணப்ப நின்றனக்கோர் விண்ணப்பம் - மண்ணிற்சில் வானவரைப் போற்றும் மதத்தோர் பலருண்டு நானவரைச் சேராமல் நாட்டு.
kaNNappan EttunutaR kaNNappa meynjnjAna viNNappa ninRanakkOr viNNappam - maNNiRchil vAnavaraip pORRum matattOr palaruNTu nAnavaraich chErAmal nATTu.
பொன்னின் றொளிரும் புரிசடையோய் நின்னையன்றிப் பின்னொன் றறியேன் பிழைநோக்கி - என்னை அடித்தாலு நீயே அணைத்தாலு நீயே பிடித்தேனுன் பொற்பாதப் பேறு.
ponnin RoLirum purichaTaiyOy ninnaiyanRip pinnon RaRiyEn pizhainOkki - ennai aTittAlu nIyE aNaittAlu nIyE piTittEnun poRpAtap pERu.
துற்குணத்தில் வேறு தொடர்வேன் எனினுமற்றை நற்குணத்தில் உன்சீர் நயப்பேன்காண் - சிற்குணத்தோய் கூற்றுதைத்த நின்பொற் குரைகழற்பூந் தாளறிக வேற்றுரைத்தே னில்லை விரித்து.
tuRkuNattil vERu toTarvEn eninumaRRai naRkuNattil unchIr nayappEnkAN - chiRkuNattOy kURRutaitta ninpoR kuraikazhaRpUn tALaRika vERRuraittE nillai virittu.
இப்பாரில் என்பிழைகள் எல்லாம் பொறுத்தருளென் அப்பாநின் தாட்கே அடைக்கலங்காண் - இப்பாரில் நானினது தாழல் நண்ணுமட்டும் நின்னடியர் பானினது சீர்கேட்கப் பண்.
ippAril enpizhaikaL ellAm poRuttaruLen appAnin tATkE aTaikkalangkAN - ippAril nAninatu tAzhal naNNumaTTum ninnaTiyar pAninatu chIrkETkap paN.