
திருவருட்பா · 2விண்ணப்பக் கலிவெண்பா
காத்தும் படைத்துங் கலைத்துநிற்போர் நாடோறும் ஏத்துங் குரங்காட்டின் என்னட்பே - மாத்தழைத்த
kAttum paTaittung kalaittuniRpOr nATORum Ettung kurangkATTin ennaTpE - mAttazhaitta
வண்பழனத் தின்குவிவெண் வாயிற்றேன் வாக்கியிட உண்பழனத் தென்றன் உயிர்க்குயிரே - பண்பகன்ற
vaNpazhanat tinkuviveN vAyiRREn vAkkiyiTa uNpazhanat tenRan uyirkkuyirE - paNpakanRa
வெய்யாற்றி னின்றவரை மெய்யாற்றி னேற்றுதிரு ஐயாற்றின் மேவியஎன் னாதரவே - பொய்யாற்றி
veyyARRi ninRavarai meyyARRi nERRutiru aiyARRin mEviyaen nAtaravE - poyyARRi
மெய்த்தான நின்றோர் வெளித்தான மேவுதிரு நெய்த்தானத் துள்ளமர்ந்த நித்தியமே - மைத்த
meyttAna ninROr veLittAna mEvutiru neyttAnat tuLLamarnta nittiyamE - maitta
கரும்புலியூர்க் காளையொடுங் கண்ணோட்டங் கொள்ளும் பெரும்புலியூர் வாழ்கருணைப் பேறே - விரும்பிநிதம்
karumpuliyUrk kALaiyoTung kaNNOTTang koLLum perumpuliyUr vAzhkaruNaip pERE - virumpinitam
பொன்னுங் கௌத்துவமும் பூண்டோன் புகழ்ந்தருளை மன்னு மழபாடி வச்சிரமே - துன்னுகின்ற
ponnung kauttuvamum pUNTOn pukazhntaruLai mannu mazhapATi vachchiramE - tunnukinRa
நாய்க்குங் கடையேன் நவைதீர நற்கருணை வாய்க்கும் பழுவூர் மரகதமே - தேய்க்களங்கில்
nAykkung kaTaiyEn navaitIra naRkaruNai vAykkum pazhuvUr marakatamE - tEykkaLangkil
வானூர் மதிபோன் மணியாற் குமுதமலர் கானூ ருயர்தங்கக் கட்டியே - நானூறு
vAnUr matipOn maNiyAR kumutamalar kAnU ruyartangkak kaTTiyE - nAnURu
கோலந் துறை கொண்ட கோவையருள் கோவைமகிழ் ஆலந் துறையின் அணிமுத்தே - நீலங்கொள்
kOlan tuRai koNTa kOvaiyaruL kOvaimakizh Alan tuRaiyin aNimuttE - nIlangkoL
தேந்துறையி லன்னமகிழ் சேக்கை பலநிலவு மாந்துறைவாழ் மாணிக்க மாமலையே - ஏந்தறிவாம்
tEntuRaiyi lannamakizh chEkkai palanilavu mAntuRaivAzh mANikka mAmalaiyE - EntaRivAm
நூற்றுறையில் நின்றவர்கள் நோக்கிமகிழ் வெய்துதிருப் பாற்றுறையில் நின்ற பரஞ்சுடரே - நாற்றிசையுந்
nURRuRaiyil ninRavarkaL nOkkimakizh veytutirup pARRuRaiyil ninRa paranjchuTarE - nARRichaiyun
தேனைக்கா வுள்மலர்கள் தேங்கடலென் றாக்குவிக்கும் ஆனைக்கா மேவியமர் அற்புதமே - மானைப்போல்
tEnaikkA vuLmalarkaL tEngkaTalen RAkkuvikkum AnaikkA mEviyamar aRputamE - mAnaippOl
மைஞ்ஞீல வாட்கண் மலராள் மருவுதிருப் பைஞ்ஞீலி மேவும் பரம்பரமே - எஞ்ஞான்றும்
mainjnjIla vATkaN malarAL maruvutirup painjnjIli mEvum paramparamE - enjnjAnRum
ஏச்சிரா மங்கலத்தோ டின்பந் தரும்பாச்சி லாச்சிரா மஞ்சேர் அருள்நிலையே - நீச்சறியா
EchchirA mangkalattO Tinpan tarumpAchchi lAchchirA manjchEr aruLnilaiyE - nIchchaRiyA
தாங்கோய் மலைப்பிறவி யார்கலிக்கோர் வார்கலமாம் ஈங்கோய் மலைவாழ் இலஞ்சியமே - ஓங்காது
tAngkOy malaippiRavi yArkalikkOr vArkalamAm IngkOy malaivAzh ilanjchiyamE - OngkAtu
நாட்போக்கி நிற்கு நவையுடையார் நாடரிதாம் வாட்போக்கி மேவுகின்ற வள்ளலே - கோட்போக்கி
nATpOkki niRku navaiyuTaiyAr nATaritAm vATpOkki mEvukinRa vaLLalE - kOTpOkki
நில்லுங் கடம்ப நெறிபோ லெனப்பூவை சொல்லுங் கடம்பந் துறைநிறைவே - மல்லலொடு
nillung kaTampa neRipO lenappUvai chollung kaTampan tuRainiRaivE - mallaloTu
வாழும் பராய்த்துறைவான் மன்னவரு மன்னவருஞ் சூழும் பராய்த்துறைவாழ் தோன்றலே - கூழும்பல்
vAzhum parAyttuRaivAn mannavaru mannavarunj chUzhum parAyttuRaivAzh tOnRalE - kUzhumpal
நற்குடியு மோங்கி நலம்பெருகு மேன்மைதிருக் கற்குடியிற் சந்தான கற்பகமே - சிற்சுகத்தார்
naRkuTiyu mOngki nalamperuku mEnmaitiruk kaRkuTiyiR chantAna kaRpakamE - chiRchukattAr
பிற்சநந மில்லாப் பெருமை தருமுறையூர்ச் சற்சனர்சேர் மூக்கீச் சரத்தணியே - மற்செய்
piRchanana millAp perumai tarumuRaiyUrch chaRchanarchEr mUkkIch charattaNiyE - maRchey
அராப்பள்ளி மேவு மவனின்று வாழ்த்தும் சிராப்பள்ளி ஞானத் தெளிவே - இராப்பள்ளி
arAppaLLi mEvu mavaninRu vAzhttum chirAppaLLi njAnat teLivE - irAppaLLi
நின்றெழன்மெய் யன்றெனவே நேர்ந்துலகு வாழ்த்துகின்ற நன்றெறும்பி யூரிலங்கு நன்னெறியே - துன்றுகயற்
ninRezhanmey yanRenavE nErntulaku vAzhttukinRa nanReRumpi yUrilangku nanneRiyE - tunRukayaR
கண்ணார் நெடுங்களத்தைக் கட்டழித்த மெய்த்தவர்சூழ் தண்ணார் நெடுங்களமெய்த் தாரகமே - எண்ணார்
kaNNAr neTungkaLattaik kaTTazhitta meyttavarchUzh taNNAr neTungkaLameyt tArakamE - eNNAr
தருக்காட்டுப் பள்ளித் தகைகொண்டோர் சூழுந் திருக்காட்டுப் பள்ளியில்வாழ் தேவே - மருக்காட்டு
tarukkATTup paLLit takaikoNTOr chUzhun tirukkATTup paLLiyilvAzh tEvE - marukkATTu
நீலம் பொழிற்குள் நிறைதடங்கட் கேர்காட்டும் ஆலம் பொழிற்சிவயோ கப்பயனே - சீலநிறை
nIlam pozhiRkuL niRaitaTangkaT kErkATTum Alam pozhiRchivayO kappayanE - chIlaniRai
வாந்துருத்தி கொண்டுள் ளனலெழுப்பு வோர்புகழும் பூந்துருத்தி மேவுசிவ புண்ணியமே - காந்தருவத்
vAnturutti koNTuL Lanalezhuppu vOrpukazhum pUnturutti mEvuchiva puNNiyamE - kAntaruvat
தண்டியூர் போற்றுந் தகைகாசிக் கட்செய்து கண்டியூர் வாழுங் களைகண்ணே - கொண்டியல்பின்
taNTiyUr pORRun takaikAchik kaTcheytu kaNTiyUr vAzhung kaLaikaNNE - koNTiyalpin
வேற்றுத் துறையுள் விரவா தவர்புகழும் சோற்றுத் துறையுட் சுகவளமே - ஆற்றலிலாத்
vERRut tuRaiyuL viravA tavarpukazhum chORRut tuRaiyuT chukavaLamE - ARRalilAt
தீதிக் குடியென்று செப்பப் படார்மருவும் வேதிக் குடி யின்ப வெள்ளமே - கோதியலும்
tItik kuTiyenRu cheppap paTArmaruvum vEtik kuTi yinpa veLLamE - kOtiyalum
வன்குடித் திட்டை மருவார் மருவுதிருத் தென்குடித் திட்டைச் சிவபதமே - நன்குடைய
vankuTit tiTTai maruvAr maruvutirut tenkuTit tiTTaich chivapatamE - nankuTaiya
உள்ளமங்கை மார்மே லுறுத்தா தவர்புகழும் புள்ளமங்கை வாழ்பரம போகமே - கள்ளமிலஞ்
uLLamangkai mArmE luRuttA tavarpukazhum puLLamangkai vAzhparama pOkamE - kaLLamilanj
சக்கரப் பள்ளிதனிற் றாம்பயின்ற மைந்தர்கள்சூழ் சக்கரப் பள்ளிதனில் தண்ணளியே - மிக்க
chakkarap paLLitaniR RAmpayinRa maintarkaLchUzh chakkarap paLLitanil taNNaLiyE - mikka
அருகாவூர் சூழ்ந்தே அழகுபெற வோங்கும் கருகாவூர் இன்பக் கதியே - முருகார்ந்த
arukAvUr chUzhntE azhakupeRa vOngkum karukAvUr inpak katiyE - murukArnta
சோலைத் துறையிற் சுகஞ்சிவநூல் வாசிக்கும் பாலைத் துறையிற் பரிமளமே - சீலத்தர்
chOlait tuRaiyiR chukanjchivanUl vAchikkum pAlait tuRaiyiR parimaLamE - chIlattar
சொல்லூ ரடியப்பர் தூயமுடி மேல்வைத்த நல்லூ ரமர்ந்தநடு நாயகமே - மல்லார்ந்த
chollU raTiyappar tUyamuTi mElvaitta nallU ramarntanaTu nAyakamE - mallArnta
மாவூ ரிரவியின்பொன் வையமள வுஞ்சிகரி ஆவூரி லுற்றவெங்கள் ஆண்தகையே - ஓவாது
mAvU riraviyinpon vaiyamaLa vunjchikari AvUri luRRavengkaL ANtakaiyE - OvAtu
சித்திமுற்ற யோகஞ் செழும்பொழிலிற் பூவைசெயும் சத்திமுற்ற மேவுஞ் சதாசிவமே - பத்தியுற்றோர்
chittimuRRa yOkanj chezhumpozhiliR pUvaicheyum chattimuRRa mEvunj chatAchivamE - pattiyuRROr
முட்டீச் சுரத்தின் முயலா வகையருளும் பட்டீச் சரத்தெம் பராபரமே - துட்டமயல்
muTTIch churattin muyalA vakaiyaruLum paTTIch charattem parAparamE - tuTTamayal
தீங்குவிழை யார்தமைவான் சென்றமரச் செய்விக்க ஓங்குபழை யாறையிலென் னுள்ளுவப்பே - பாங்குபெற
tIngkuvizhai yArtamaivAn chenRamarach cheyvikka Ongkupazhai yARaiyilen nuLLuvappE - pAngkupeRa
ஆர்ந்த வடவிலையான் அன்னத்தான் போற்றிநிதம் சார்ந்த வடதளிவாழ் தற்பரமே - சேர்ந்த
Arnta vaTavilaiyAn annattAn pORRinitam chArnta vaTataLivAzh taRparamE - chErnta
மலஞ்சுழி கின்ற மனத்தர்க் கரிதாம் வலஞ்சுழி வாழ்பொன் மலையே - நிலஞ்சுழியா
malanjchuzhi kinRa manattark karitAm valanjchuzhi vAzhpon malaiyE - nilanjchuzhiyA
தோணத்தில் வந்தோ னுடன்றுதித்து வாழ்கும்ப கோணத்தில் தெய்வக் குலக்கொழுந்தே - மாணுற்றோர்
tONattil vantO nuTanRutittu vAzhkumpa kONattil teyvak kulakkozhuntE - mANuRROr
காழ்க்கோட்ட நீங்கக் கருதுங் குடமூக்கிற் கீழ்க்கோட்ட மேவுமன்பர் கேண்மையே - வாழ்க்கோட்டத்
kAzhkkOTTa nIngkak karutung kuTamUkkiR kIzhkkOTTa mEvumanpar kENmaiyE - vAzhkkOTTat
தேரோண மட்டுந் திகழ்குடந்தை மட்டுமின்றிக் காரோண மட்டுங் கமழ்மலரே - சீரோங்கும்
tErONa maTTun tikazhkuTantai maTTuminRik kArONa maTTung kamazhmalarE - chIrOngkum
யோகீச் சுரர்நின் றுவந்து வணங்குதிரு நாகீச் சுரமோங்கு நங்கனிவே - ஓகையுளம்
yOkIch churarnin Ruvantu vaNangkutiru nAkIch churamOngku nangkanivE - OkaiyuLam
தேக்கும் வரகுணனாந் தென்னவன்கண் சூழ்பழியைப் போக்கும் இடைமருதிற் பூரணமே - நீக்கமிலா
tEkkum varakuNanAn tennavankaN chUzhpazhiyaip pOkkum iTaimarutiR pUraNamE - nIkkamilA
நன்குரங் காணு நடையோ ரடைகின்ற தென்குரங் காடுதுறைச் செம்மலே - புன்குரம்பை
nankurang kANu naTaiyO raTaikinRa tenkurang kATutuRaich chemmalE - punkurampai
ஏலக் குடிபுகுந்த எம்மனோர்க் குண்மைதரு நீலக் குடியிலங்கு நிட்களமே - ஞாலத்து
Elak kuTipukunta emmanOrk kuNmaitaru nIlak kuTiyilangku niTkaLamE - njAlattu
நீடக்கோர் நாளும் நினைந்தேத் திடும்வைகல் மாடக்கோ யிற்குண் மதுரமே - பாடச்சீர்
nITakkOr nALum ninaintEt tiTumvaikal mATakkO yiRkuN maturamE - pATachchIr
வல்ல தமிழ்ப்புலவர் மன்னி வணங்குதிரு நல்லமகிழ் இன்ப நவவடிவே - இல்லமயல்
valla tamizhppulavar manni vaNangkutiru nallamakizh inpa navavaTivE - illamayal
ஆழம்பங் கென்ன வறிந்தோர் செறிந்தேத்தும் கோழம்பம் வாழ்கருணைக் கொண்டலே - வீழும்பொய்
Azhampang kenna vaRintOr cheRintEttum kOzhampam vAzhkaruNaik koNTalE - vIzhumpoy
தீரா வடுவுடையார் சேர்தற் கருந்தெய்வச் சீரா வடுதுறையெஞ் செல்வமே - பேராக்
tIrA vaTuvuTaiyAr chErtaR karunteyvach chIrA vaTutuRaiyenj chelvamE - pErAk
கருத்திருத்தி யேத்துங் கருத்தர்க் கருள்செய் திருத்துருத்தி இன்பச் செழிப்பே - வருத்துமயல்
karuttirutti yEttung karuttark karuLchey tirutturutti inpach chezhippE - varuttumayal
நாளு மெழுந்தூர் நவையறுக்கு மன்பருள்ளம் நீளும் அழுந்தூர் நிறைதடமே - வேளிமையோர்
nALu mezhuntUr navaiyaRukku manparuLLam nILum azhuntUr niRaitaTamE - vELimaiyOr
வாயூரத் தேமா மலர் சொரிந்து வாழ்த்துகின்ற மாயூரத் தன்பர் மனோரதமே - தேயா
vAyUrat tEmA malar chorintu vAzhttukinRa mAyUrat tanpar manOratamE - tEyA
வளநகரென் றெவ்வுலகும் வாழ்த்தப் படுஞ்சீர் விளநகர்வா ழெங்கண் விருந்தே - இளமைச்
vaLanakaren Revvulakum vAzhttap paTunjchIr viLanakarvA zhengkaN viruntE - iLamaich
செறியலூர் கூந்தல் திருவனையா ராடும் பறியலூர் வாழ்மெய்ப் பரமே - நெறிகொண்டே
cheRiyalUr kUntal tiruvanaiyA rATum paRiyalUr vAzhmeyp paramE - neRikoNTE
அன்பள்ளி யோங்கு மறிவுடையோர் வாழ்த்துஞ்செம் பொன்பள்ளி வாழ்ஞான போதமே - இன்புள்ளித்
anpaLLi yOngku maRivuTaiyOr vAzhttunjchem ponpaLLi vAzhnjAna pOtamE - inpuLLit
தெள்ளியார் போற்றித் திகழுந் திருநன்னிப் பள்ளியார்ந் தோங்கும் பரசிவமே - எள்ளுறுநோய்
teLLiyAr pORRit tikazhun tirunannip paLLiyArn tOngkum parachivamE - eLLuRunOy
ஏய வலம்புரத்தை யெண்ணாம லெண்ணுகின்றோர் மேய வலம்புரத்து மேதகவே - தூயகொடி
Eya valampurattai yeNNAma leNNukinROr mEya valampurattu mEtakavE - tUyakoTi
அங்காடு கோபுரம்வா னாற்றாடு கின்றதலைச் சங்காடு மேவுஞ் சயம்புவே - பொங்குமிருட்
angkATu kOpuramvA nARRATu kinRatalaich changkATu mEvunj chayampuvE - pongkumiruT
கூறுதிரு வாக்கூர் கொடுப்பனபோற் சூழ்ந்துமதில் வீறுதிரு வாக்கூர் விளக்கமே - மாறகற்றி
kURutiru vAkkUr koTuppanapOR chUzhntumatil vIRutiru vAkkUr viLakkamE - mARakaRRi
நன்கடையூர் பற்பலவு நன்றிமற வாதேத்தும் தென்கடையூர் ஆனந்தத் தேறலே - வன்மையிலாச்
nankaTaiyUr paRpalavu nanRimaRa vAtEttum tenkaTaiyUr Anantat tERalE - vanmaiyilAch
சொற்கடவி மேலோர் துதித்தலொழி யாதோங்கு நற்கடவூர் வீரட்ட நாயகனே - வற்கடத்தும்
choRkaTavi mElOr tutittalozhi yAtOngku naRkaTavUr vIraTTa nAyakanE - vaRkaTattum
வாட்டக் குடிசற்றும் வாய்ப்பதே யில்லையெனும் வேட்டக் குடிமேவு மேலவனே - நாட்டமுற்ற
vATTak kuTichaRRum vAyppatE yillaiyenum vETTak kuTimEvu mElavanE - nATTamuRRa
வாக்குந் தெளிச்சேரி மாதவத்தர்க் கின்பநலம் ஆக்குந் தெளிச்சேரி அங்கணனே - நீக்கும்
vAkkun teLichchEri mAtavattark kinpanalam Akkun teLichchEri angkaNanE - nIkkum
கரும புரத்திற் கலவா தருள்செய் தரும புரஞ்செய் தவமே - இருமையினும்
karuma purattiR kalavA taruLchey taruma puranjchey tavamE - irumaiyinum
எள்ளாற்றின் மேவாத ஏற்புடையோர் சூழ்ந்திறைஞ்சு நள்ளாற்றின் மேவியஎன் நற்றுணையே - தெள்ளாற்றின்
eLLARRin mEvAta ERpuTaiyOr chUzhntiRainjchu naLLARRin mEviyaen naRRuNaiyE - teLLARRin
நீட்டாறு கொண்டரம்பை நின்று கவின்காட்டும் கோட்டாறு மேவுங் குளிர்துறையே - கூட்டாக்
nITTARu koNTarampai ninRu kavinkATTum kOTTARu mEvung kuLirtuRaiyE - kUTTAk
கருவம்பர் தம்மைக் கலவாத மேன்மைத் திருவம்பர் ஞானத் திரட்டே - ஒருவந்தர்
karuvampar tammaik kalavAta mEnmait tiruvampar njAnat tiraTTE - oruvantar
மாகாளங் கொள்ள மதனைத் துரத்துகின்ற மாகாளாத் தன்பர் மனோலயமே - யோகாளக்
mAkALang koLLa matanait turattukinRa mAkALAt tanpar manOlayamE - yOkALak
காயச்சூர் விட்டுக் கதிசேர வேட்டவர்சூழ் மீயச்சூர் தண்ணென்னும் வெண்ணெருப்பே - மாயக்
kAyachchUr viTTuk katichEra vETTavarchUzh mIyachchUr taNNennum veNNeruppE - mAyak
களங்கோயில் நெஞ்சக் கயவர் மருவா இளங்கோயின் ஞான இனிப்பே - வளங்கோ€
kaLangkOyil nenjchak kayavar maruvA iLangkOyin njAna inippE - vaLangkO€
நாடுந் திலத நயப்புலவர் நாடோறும் பாடுந் திலதைப் பதிநிதியே - ஆடுமயில்
nATun tilata nayappulavar nATORum pATun tilataip patinitiyE - ATumayil
காம்புரங்கொள் தோளியர்பொற் காவிற் பயில்கின்ற பாம்புரங்கொள் உண்மைப் பரம்பொருளே - ஆம்புவனம்
kAmpurangkoL tOLiyarpoR kAviR payilkinRa pAmpurangkoL uNmaip paramporuLE - Ampuvanam
துன்னும் பெருங்குடிகள் சூழ்ந்துவலஞ் செய்துவகை மன்னுஞ் சிறுகுடிஆன் மார்த்தமே - முன்னரசும்
tunnum perungkuTikaL chUzhntuvalanj cheytuvakai mannunj chiRukuTiAn mArttamE - munnarachum
காழி மிழலையருங் கண்டுதொழக் காசளித்த வீழி மிழலை விராட்டுருவே - ஊழிதொறும்
kAzhi mizhalaiyarung kaNTutozhak kAchaLitta vIzhi mizhalai virATTuruvE - UzhitoRum
மன்னியூர் மால்விடையாய் வானவா வென்றுதொழ வன்னியூர் வாழு மணிகண்டா - இந்நிமிடம்
manniyUr mAlviTaiyAy vAnavA venRutozha vanniyUr vAzhu maNikaNTA - innimiTam
சிந்துங் கருவலியின் திண்மையென்று தேர்ந்தவர்கள் முந்துங் கருவிலிவாழ் முக்கண்ணா - மந்தணத்தைக்
chintung karuvaliyin tiNmaiyenRu tErntavarkaL muntung karuvilivAzh mukkaNNA - mantaNattaik
காணு மருந்துறையிக் காமர்தல மென்றெவரும் பேணு பெருந்துறையிற் பெம்மானே - ஏணுடன்கா
kANu maruntuRaiyik kAmartala menRevarum pENu peruntuRaiyiR pemmAnE - ENuTankA
ஈட்டும் பெருநறையா றென்ன வயலோடி நாட்டும் பெருநறையூர் நம்பனே - காட்டும்
ITTum perunaRaiyA Renna vayalOTi nATTum perunaRaiyUr nampanE - kATTum
பரிசிற் கரைப்புற்றோர் பாங்குபெற வோங்கும் அரிசிற் கரைப்புத்தூ ரானே - தரிசனத்தெக்
parichiR karaippuRROr pAngkupeRa vOngkum arichiR karaipputtU rAnE - tarichanattek
காலுஞ் சிவபுரத்தைக் காதலித்தோர் தங்கள்துதி ஏலுஞ் சிவபுரத்தி லெம்மானே - மாலுங்கொள்
kAlunj chivapurattaik kAtalittOr tangkaLtuti Elunj chivapuratti lemmAnE - mAlungkoL
வெப்புங் கலையநல்லோர் மென்மதுரச் சொன்மாலை செப்புங் கலயநல்லூர்ச் சின்மயனே - செப்பமுடன்
veppung kalaiyanallOr menmaturach chonmAlai cheppung kalayanallUrch chinmayanE - cheppamuTan
ஓங்குந் திருத்தொண்டர் உள்குளிர நல்லருளால் தாங்குங் கருக்குடிவாழ் சங்கரனே - ஆங்ககனந்
Ongkun tiruttoNTar uLkuLira nallaruLAl tAngkung karukkuTivAzh changkaranE - Angkakanan
தாஞ்சியத்தை வேங்கைத் தலையாற் றடுக்கின்ற வாஞ்சியத்தின் மேவு மறையோனே - ஆஞ்சியிலா
tAnjchiyattai vEngkait talaiyAR RaTukkinRa vAnjchiyattin mEvu maRaiyOnE - AnjchiyilA
திந்நிலத்தும் வானாதி யெந்நிலத்து மோங்குபெரு நன்னிலத்து வாழ்ஞான நாடகனே - மன்னுமலர்
tinnilattum vAnAti yennilattu mOngkuperu nannilattu vAzhnjAna nATakanE - mannumalar
வண்டீச் சுரம்பாடி வார்மதுவுண் டுள்களிக்குங் கொண்டீச் சுரத்தமர்ந்த கோமானே - கண்டீச
vaNTIch churampATi vArmatuvuN TuLkaLikkung koNTIch churattamarnta kOmAnE - kaNTIcha
நண்பனையூ ரன்புகழும் நம்பவென உம்பர்தொழத் தண்பனையூர் மேவுஞ் சடாதரனே - பண்புடனே
naNpanaiyU ranpukazhum nampavena umpartozhat taNpanaiyUr mEvunj chaTAtaranE - paNpuTanE
எற்குடியா னங்கொண் டிருக்க மகிழ்ந்தளித்த விற்குடியின் வீரட்ட மேயவனே - சொற்கொடிய
eRkuTiyA nangkoN Tirukka makizhntaLitta viRkuTiyin vIraTTa mEyavanE - choRkoTiya
வன்புகலா நெஞ்சின் மருவும் ஒருதகைமைத் தென்புகலூர் வாழ்மகா தேவனே - இன்பமறை
vanpukalA nenjchin maruvum orutakaimait tenpukalUr vAzhmakA tEvanE - inpamaRai
அர்த்தமா நீக்கரிய வாதார மாகிநின்ற வர்த்தமா நேச்சரத்து வாய்ந்தவனே - மித்தையுற்ற
arttamA nIkkariya vAtAra mAkininRa varttamA nEchcharattu vAyntavanE - mittaiyuRRa
காமனதீ சங்கெடவே கண்பார்த் தருள்செய்த ராமனதீ சம்பெறுநி ராமயனே - தோமுண்
kAmanatI changkeTavE kaNpArt taruLcheyta rAmanatI champeRuni rAmayanE - tOmuN
மயற்றூர் பறித்த மனத்தில் விளைந்த பயற்றூர் திசையம் பரனே - இயற்றுஞ்சீர்
mayaRRUr paRitta manattil viLainta payaRRUr tichaiyam paranE - iyaRRunjchIr
ஆச்சிரமே வுஞ்செங்காட் டங்குடியி னங்கணப தீச்சரம்வா ழுஞ்சந்த்ர சேகரனே - ஏச்சகல
AchchiramE vunjchengkAT TangkuTiyi nangkaNapa tIchcharamvA zhunjchantra chEkaranE - Echchakala
விண்மருவி னோனை விடநீக்க நல்லருள்செய் வண்மருகல் மாணிக்க வண்ணனே - திண்மைகொண்ட
viNmaruvi nOnai viTanIkka nallaruLchey vaNmarukal mANikka vaNNanE - tiNmaikoNTa
மாத்தமங்கை யுள்ளம் மருவிப் பிரியாத சாத்தமங்கைக் கங்கைச் சடாமுடியோய் - தூத்தகைய
mAttamangkai yuLLam maruvip piriyAta chAttamangkaik kangkaich chaTAmuTiyOy - tUttakaiya
பாகைக்கா ரென்னும் பணிமொழியார் வாழ்த்தோவா நாகைக்கா ரோணம் நயந்தோனே - ஓகையற
pAkaikkA rennum paNimozhiyAr vAzhttOvA nAkaikkA rONam nayantOnE - OkaiyaRa
விக்கல் வருங்கால் விடாய்தீர்த் துலகிடைநீ சிக்கலெனுஞ் சிக்கல் திறலோனே - மிக்கமினார்
vikkal varungkAl viTAytIrt tulakiTainI chikkalenunj chikkal tiRalOnE - mikkaminAr
வாளூர் தடங்கண் வயல்காட்டி யோங்குங்கீழ் வேளூரிற் செங்கண் விடையோனே - நீளுவகைப்
vALUr taTangkaN vayalkATTi yOngkungkIzh vELUriR chengkaN viTaiyOnE - nILuvakaip
பாவூ ரிசையிற் பயன்சுவையிற் பாங்குடைய தேவூர் வளர்தேவ தேவனே - பூவினிடை
pAvU richaiyiR payanchuvaiyiR pAngkuTaiya tEvUr vaLartEva tEvanE - pUviniTai
இக்கூடன் மைந்த வினிக்கூட லென்றுபள்ளி முக்கூடன் மேவியமர் முன்னவனே - தக்கநெடுந்
ikkUTan mainta vinikkUTa lenRupaLLi mukkUTan mEviyamar munnavanE - takkaneTun
தேரூ ரணிவீதிச் சீரூர் மணிமாட ஆரூரி லெங்கள் அருமருந்தே - நீரூர்ந்த
tErU raNivItich chIrUr maNimATa ArUri lengkaL arumaruntE - nIrUrnta
காரூர் பொழிலுங் கனியீந் திளைப்பகற்றும் ஆரூ ரரனெறிவே ளாண்மையே - ஏரார்ந்த
kArUr pozhilung kaniyIn tiLaippakaRRum ArU raraneRivE LANmaiyE - ErArnta
மண்மண் டலிகர் மருவுமா ரூர்ப்பரவை உண்மண் டலி எம் உடைமையே - திண்மைக்
maNmaN Talikar maruvumA rUrpparavai uNmaN Tali em uTaimaiyE - tiNmaik
களமர் மகிழக் கடைசியர் பாடும் விளமர் கொளுமெம் விருப்பே - வளமை
kaLamar makizhak kaTaichiyar pATum viLamar koLumem viruppE - vaLamai
எருக்கரவீ ரஞ்சே ரெழில்வேணி கொண்டு திருக்கரவீ ரஞ்சேர் சிறப்பே - உருக்க
erukkaravI ranjchE rezhilvENi koNTu tirukkaravI ranjchEr chiRappE - urukka
வருவேளூர் மாவெல்லா மாவேறுஞ் சோலைப் பெருவேளூர் இன்பப் பெருக்கே - கருமை
varuvELUr mAvellA mAvERunj chOlaip peruvELUr inpap perukkE - karumai
மிலையாலங் காட்டு மிடற்றாயென் றேத்தும் தலையாலங் காட்டுத் தகவே - நிலைகொள்
milaiyAlang kATTu miTaRRAyen REttum talaiyAlang kATTut takavE - nilaikoL
தடவாயில் வெண்மணிகள் சங்கங்க ளீனும் குடவாயில் அன்பர் குறிப்பே - மடவாட்கோர்
taTavAyil veNmaNikaL changkangka LInum kuTavAyil anpar kuRippE - maTavATkOr
கூறை யுவந்தளித்த கோவேயென் றன்பர்தொழச் சேறை யுவந்திருந்த சிற்பரமே - வேறுபடாப்
kURai yuvantaLitta kOvEyen Ranpartozhach chERai yuvantirunta chiRparamE - vERupaTAp
பாலூர் நிலவிற் பணிலங்கள் தண்கதிர்செய் நாலூரில் அன்பர்பெறு நன்னயமே - மேலூரும்
pAlUr nilaviR paNilangkaL taNkatirchey nAlUril anparpeRu nannayamE - mElUrum
நோய்க்கரையுட் செய்யாத நோன்மையோர் சூழ்ந்தகடு வாய்க்கரையுண் மேவுகின்ற வண்மையே - வாய்த்த
nOykkaraiyuT cheyyAta nOnmaiyOr chUzhntakaTu vAykkaraiyuN mEvukinRa vaNmaiyE - vAytta
பெரும்பூகந் தெங்கிற் பிறங்க வளங்கொள்ளும் இரும்பூளை மேவி யிருந்தோய் - விரும்பும்
perumpUkan tengkiR piRangka vaLangkoLLum irumpULai mEvi yiruntOy - virumpum
விரதப் பெரும்பாழி விண்ணவர்க ளேத்தும் அரதைப் பெரும்பாழி ஆர்ந்தோய் - சரதத்தால்
viratap perumpAzhi viNNavarka LEttum arataip perumpAzhi ArntOy - charatattAl
ஏதும் அவணிவணென் றெண்ணா தவரிறைஞ்சி ஓதும் அவளிவணல் லூருடையோய் - கோதகன்ற
Etum avaNivaNen ReNNA tavariRainjchi Otum avaLivaNal lUruTaiyOy - kOtakanRa
நீட்டுஞ் சுருதி நியமத்தோர்க் கின்னருளை நீட்டும் பரிதி நியமத்தோய் - காட்டியநந்
nITTunj churuti niyamattOrk kinnaruLai nITTum pariti niyamattOy - kATTiyanan
தேவனூ ரென்று திசைமுகன்மால் வாழ்த்துகின்ற பூவனூர் மேவும் புகழுடையோய் - பூவலகாம்
tEvanU renRu tichaimukanmAl vAzhttukinRa pUvanUr mEvum pukazhuTaiyOy - pUvalakAm
ஈங்கும்பா தாளமுத லெவ்வுலகு மெஞ்ஞான்றுந் தாங்கும்பா தாளேச் சரத்தமர்ந்தோய் - ஓங்குபுத்தி
IngkumpA tALamuta levvulaku menjnjAnRun tAngkumpA tALEch charattamarntOy - Ongkuputti
மான்களரி லோட்டி மகிழ்வோ டிருந்தேத்தும் வான்களரில் வாழு மறைமுடிபே - மேன்மைதரும்
mAnkaLari lOTTi makizhvO TiruntEttum vAnkaLaril vAzhu maRaimuTipE - mEnmaitarum
முற்றேமம் வாய்ந்த முனிவர் தினம்பரவும் சிற்றேமம் வாய்ந்த செழுங்கதிரே - கற்றவர்கள்
muRREmam vAynta munivar tinamparavum chiRREmam vAynta chezhungkatirE - kaRRavarkaL
எங்குமுசாத் தான மிருங்கழக மன்றமுதல் தங்குமுசாத் தானத் தனிமுதலே - பொங்குபவ
engkumuchAt tAna mirungkazhaka manRamutal tangkumuchAt tAnat tanimutalE - pongkupava
வல்லலிடும் பாவநத்த மட்டொளிசெய் கின்றதிரு மல்லலிடும் பாவனத்து மாட்சிமையே - தொல்லைப்
vallaliTum pAvanatta maTToLichey kinRatiru mallaliTum pAvanattu mATchimaiyE - tollaip
படிக்குள் நோவாத பண்புடையோர் வாழ்த்தும் கடிக்குளத் தன்பர் களிப்பே - கடிக்குளத்தின்
paTikkuL nOvAta paNpuTaiyOr vAzhttum kaTikkuLat tanpar kaLippE - kaTikkuLattin
வண்டலைக்கத் தேனலரின் வார்ந்தோர் தடமாக்கும் தண்டலைக்குள் நீணெறிச்சிந் தாமணியே - கொண்டலென
vaNTalaikkat tEnalarin vArntOr taTamAkkum taNTalaikkuL nINeRichchin tAmaNiyE - koNTalena
மன்கோட்டூர் சோலை வளர்கோட்டூர் தண்பழனத் தென்கோட்டூர் தேவ சிகாமணியே - தென்கூட்டிப்
mankOTTUr chOlai vaLarkOTTUr taNpazhanat tenkOTTUr tEva chikAmaNiyE - tenkUTTip
போய்வண் டுறைதடமும் பூம்பொழிலுஞ் சூழ்ந்தமரர் ஆய்வெண் டுமறைமாசி லாமணியே - தோய்வுண்ட
pOyvaN TuRaitaTamum pUmpozhilunj chUzhntamarar AyveN TumaRaimAchi lAmaNiyE - tOyvuNTa
கள்ளம்பூ தாதிநிலை கண்டுணர்வு கொண்டவர்சூழ் கொள்ளம்பூ தூர்வான் குலமணியே - வெள்ளிடைவான்
kaLLampU tAtinilai kaNTuNarvu koNTavarchUzh koLLampU tUrvAn kulamaNiyE - veLLiTaivAn
வாம்பே ரெயிற்சூழ்ந்த மாண்பாற் றிருநாமம் ஆம்பே ரெயிலொப்பி லாமணியே - தாம்பேரா
vAmpE reyiRchUzhnta mANpAR RirunAmam AmpE reyiloppi lAmaNiyE - tAmpErA
வீட்டிலன்ப ரானந்தம் மேவச் செயுங்கொள்ளிக் காட்டி லமர்ந்தஎன்கண் காட்சியே - நீட்டுமொளி
vITTilanpa rAnantam mEvach cheyungkoLLik kATTi lamarntaenkaN kATchiyE - nITTumoLi
ஆங்கூ ரிலைவே லவனா தியர்சூழத் தேங்கூரில் வாழ்தேவ சிங்கமே - ஓங்குமலை
AngkU rilaivE lavanA tiyarchUzhat tEngkUril vAzhtEva chingkamE - Ongkumalai
வல்லிக்கா தார மணிப்புயவென் றன்பர்தொழ நெல்லிக்கா வாழ்மெய்ந் நியமமே - எல்அல்கண்
vallikkA tAra maNippuyaven Ranpartozha nellikkA vAzhmeyn niyamamE - elalkaN
சேட்டியத் தானே தெரிந்துசுரர் வந்தேத்து நாட்டியத் தான்குடிவாழ் நல்லினமே - நாட்டுமொரு
chETTiyat tAnE terintuchurar vantEttu nATTiyat tAnkuTivAzh nallinamE - nATTumoru
நூறாயி லன்பர்தமை நோக்கி யருள்செய்திருக் காறாயின் மேலோர் கடைப்பிடியே - வீறாகும்
nURAyi lanpartamai nOkki yaruLcheytiruk kARAyin mElOr kaTaippiTiyE - vIRAkum
இன்றாப்பூர் வந்தொட் டிருந்ததிவ்வூ ரென்னவுயர் கன்றாப்பூர் பஞ்சாக் கரப்பொருளே - துன்றாசை
inRAppUr vantoT TiruntativvU rennavuyar kanRAppUr panjchAk karapporuLE - tunRAchai
வெய்ய வலிவலத்தை வீட்டியன்பர்க் கின்னருள்செய் துய்ய வலிவலத்துச் சொன்முடிபே - நையுமன
veyya valivalattai vITTiyanpark kinnaruLchey tuyya valivalattuch chonmuTipE - naiyumana
மைச்சினத்தை விட்டோர் மனத்திற் சுவைகொடுத்துக் கைச்சினத்தி னுட்கரையாக் கற்கண்டே - நெற்சுமக்க
maichchinattai viTTOr manattiR chuvaikoTuttuk kaichchinatti nuTkaraiyAk kaRkaNTE - neRchumakka
ஆளிலையென் றாரூர னார்துதிக்கத் தந்தருளும் கோளிலியின் அன்பர்குலங் கொள்ளுவப்பே - நீளுலகம்
ALilaiyen RArUra nArtutikkat tantaruLum kOLiliyin anparkulang koLLuvappE - nILulakam
காய்மூர்க்க ரேனுங் கருதிற் கதிகொடுக்கும் வாய்ழூர்க் கமைந்த மறைக்கொழுந்தே - நேயமுணத்
kAymUrkka rEnung karutiR katikoTukkum vAyzhUrk kamainta maRaikkozhuntE - nEyamuNat
தேடெலியை மூவுலகுந் தேர்ந்துதொழச் செய்தருளும் ஈடின்மறைக் காட்டிலென்றன் எய்ப்பில்வைப்பே - நாடுமெனை
tETeliyai mUvulakun tErntutozhach cheytaruLum ITinmaRaik kATTilenRan eyppilvaippE - nATumenai
நின்னகத்தி யான்பள்ளி நேர்ந்தேனென் றாட்கொண்ட தென்னகத்தி யான்பள்ளிச் செம்பொன்னே - தொன்னெறியோர்
ninnakatti yAnpaLLi nErntEnen RATkoNTa tennakatti yAnpaLLich chemponnE - tonneRiyOr
நாடிக் குழக நலமருளென் றேத்துகின்ற கோடிக் குழகரருட் கோலமே - நீடுலகில்
nATik kuzhaka nalamaruLen REttukinRa kOTik kuzhakararuT kOlamE - nITulakil
நாட்டும் புகழீழ நாட்டிற் பவவிருளை வாட்டுந் திருக்கோண மாமலையாய் - வேட்டுலகின்
nATTum pukazhIzha nATTiR pavaviruLai vATTun tirukkONa mAmalaiyAy - vETTulakin
மூதீச் சரமென்று முன்னோர் வணங்குதிருக் கேதீச் சரத்திற் கிளர்கின்றோய் - ஓதுகின்றோர்
mUtIch charamenRu munnOr vaNangkutiruk kEtIch charattiR kiLarkinROy - OtukinROr
பாலவாய் நிற்கும் பரையோடு வாழ்மதுரை ஆலவாய்ச் சொக்கழகா னந்தமே - சீலர்தமைக்
pAlavAy niRkum paraiyOTu vAzhmaturai AlavAych chokkazhakA nantamE - chIlartamaik
காப்பனூ ரில்லாக் கருணையா லென்றுபுகும் ஆப்பனூர் மேவுசதா னந்தமே - மாப்புலவர்
kAppanU rillAk karuNaiyA lenRupukum AppanUr mEvuchatA nantamE - mAppulavar
ஞானபரங் குன்றமென நண்ணிமகிழ் கூர்ந்தேத்த வானபரங் குன்றலின்பா னந்தமே - வானவர்கோன்
njAnaparang kunRamena naNNimakizh kUrntEtta vAnaparang kunRalinpA nantamE - vAnavarkOn
தேமே டகத்தனொடு சீதரனும் வாழ்த்துஞ்சீ ராமே டகத்தறிவா னந்தமே - பூமீதில்
tEmE TakattanoTu chItaranum vAzhttunjchI rAmE TakattaRivA nantamE - pUmItil
நற்றவருங் கற்ற நவசித்த ரும்வாழ்த்தி உற்றகொடுங் குன்றத்தெம் ஊதியமே - முற்றுகதிர்
naRRavarung kaRRa navachitta rumvAzhtti uRRakoTung kunRattem UtiyamE - muRRukatir
இத்தூர மன்றி யினித்தூர மில்லையெனப் புத்தூர் வருமடியார் பூரிப்பே - சித்தாய்ந்து
ittUra manRi yinittUra millaiyenap puttUr varumaTiyAr pUrippE - chittAyntu
நாமீச ராகும் நலந்தருமென் றும்பர்தொழும் ராமீசம் வாழ்சீவ ரத்தினமே - பூமீது
nAmIcha rAkum nalantarumen Rumpartozhum rAmIcham vAzhchIva rattinamE - pUmItu
நீடானை சூழும் நிலமன்னர் வாழ்த்துதிரு வாடானை மேவுகரு ணாகரமே - சேடான
nITAnai chUzhum nilamannar vAzhttutiru vATAnai mEvukaru NAkaramE - chETAna
வானப்பே ராற்றை மதியை முடிசூடுங் கானப்பேர் ஆனந்தக் காளையே - மோனருளே
vAnappE rARRai matiyai muTichUTung kAnappEr Anantak kALaiyE - mOnaruLE
பூவணமும் பூமணமும் போலவ மர்ந்ததிருப் பூவணத்தில் ஆனந்தப் பொக்கிஷமே - தீவணத்தில்
pUvaNamum pUmaNamum pOlava marntatirup pUvaNattil Anantap pokkiSamE - tIvaNattil
கண்சுழிய லென்று கருணையளித் தென்னுளஞ்சேர் தண்சுழியல் வாழ்சீவ சாக்ஷியே - பண்செழிப்பக்
kaNchuzhiya lenRu karuNaiyaLit tennuLanjchEr taNchuzhiyal vAzhchIva chAkSiyE - paNchezhippak
கற்றாலங் குண்மைக் கதிதருமென் றற்றவர்சூழ் குற்றாலத் தன்பர் குதுகலிப்பே - பொற்றாம
kaRRAlang kuNmaik katitarumen RaRRavarchUzh kuRRAlat tanpar kutukalippE - poRRAma
நல்வேலி சூழ்ந்து நயன்பெறுமொண் செஞ்சாலி நெல்வேலி உண்மை நிலயமே - வல்வேலை
nalvEli chUzhntu nayanpeRumoN chenjchAli nelvEli uNmai nilayamE - valvElai
நஞ்சைக் களத்துவைத்த நாதவெனத் தொண்டர்தொழ அஞ்சைக் களஞ்சேர் அருவுருவே - நெஞ்சடக்கி
nanjchaik kaLattuvaitta nAtavenat toNTartozha anjchaik kaLanjchEr aruvuruvE - nenjchaTakki
ஆன்று நிறைந்தோர்க் கருளளிக்கும் புக்கொளியூர்த் தோன்றுமவி நாசிச் சுயம்புவே - சான்றவர்கள்
AnRu niRaintOrk karuLaLikkum pukkoLiyUrt tOnRumavi nAchich chuyampuvE - chAnRavarkaL
தம்முருகன் பூணுட் டலம்போல வாழ்கின்ற எம்முருகன் பூண்டி இருநிதியே - செம்மையுடன்
tammurukan pUNuT TalampOla vAzhkinRa emmurukan pUNTi irunitiyE - chemmaiyuTan
அங்குன்றா தோங்கு மணிகொள் கொடிமாடச் செங்குன்றூர் வாழுஞ்சஞ் சீவியே - தங்குமன
angkunRA tOngku maNikoL koTimATach chengkunRUr vAzhunjchanj chIviyE - tangkumana
வஞ்சமாக் கூடல் வரையா தவர்சூழும் வெஞ்சமாக் கூடல் விரிசுடரே - துஞ்சலெனும்
vanjchamAk kUTal varaiyA tavarchUzhum venjchamAk kUTal virichuTarE - tunjchalenum
இன்ன லகற்ற இலங்குபவா னிக்கூடல் என்னு நணாவினிடை இன்னிசையே - துன்னியருள்
inna lakaRRa ilangkupavA nikkUTal ennu naNAviniTai innichaiyE - tunniyaruL
வேண்டிக் கொடுமுடியா மேன்மைபெறு மாதவர்சூழ் பாண்டிக் கொடுமுடியிற் பண்மயமே - தீண்டரிய
vENTik koTumuTiyA mEnmaipeRu mAtavarchUzh pANTik koTumuTiyiR paNmayamE - tINTariya
வெங்கருவூர் வஞ்ச வினைதீர்த் தவர்சூழ்ந்த நங்கருவூர்ச் செய்யுள் நவரசமே - தங்களற்றின்
vengkaruvUr vanjcha vinaitIrt tavarchUzhnta nangkaruvUrch cheyyuL navarachamE - tangkaLaRRin
தீங்கார் பிறதெய்வத் தீங்குழியில் வீழ்ந்தவரைத் தாங்கா வரத்துறையில் தாணுவே - பூங்குழலார்
tIngkAr piRateyvat tIngkuzhiyil vIzhntavarait tAngkA varattuRaiyil tANuvE - pUngkuzhalAr
வீங்கானை மாடஞ்சேர் விண்ணென் றகல்கடந்தைத் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே - நீங்காது
vIngkAnai mATanjchEr viNNen RakalkaTantait tUngkAnai mATach chuTarkkozhuntE - nIngkAtu
நீடலை யாற்றூர் நிழன்மணிக்குன் றோங்குதிருக் கூடலை யாற்றூர்க் குணநிதியே - நாடியவான்
nITalai yARRUr nizhanmaNikkun ROngkutiruk kUTalai yARRUrk kuNanitiyE - nATiyavAn
அம்புலியூர் சோலை யணிவயல்க ளோங்கெருக்கத் தம்புலியூர் வேத சமரசமே - நம்புவிடை
ampuliyUr chOlai yaNivayalka LOngkerukkat tampuliyUr vEta chamarachamE - nampuviTai
ஆங்குந் தினையூர்ந் தருளாயென் றன்பர்தொழு தோங்குந் தினையூர் உமாபதியே - தீங்குறுமொன்
Angkun tinaiyUrn taruLAyen Ranpartozhu tOngkun tinaiyUr umApatiyE - tIngkuRumon
னார்புரத்தை வெண்ணகைத்தீ யாலழித்தா யென்றுதொழச் சோபுரத்தின் வாழ்ஞான தீவகமே - வார்கெடிலச்
nArpurattai veNNakaittI yAlazhittA yenRutozhach chOpurattin vAzhnjAna tIvakamE - vArkeTilach
சென்னதிகை யோங்கித் திலதவதி யார்பரவும் மன்னதிகை வீரட்ட மாதவமே - பன்னரிதாம்
chennatikai yOngkit tilatavati yArparavum mannatikai vIraTTa mAtavamE - pannaritAm
ஆவலூ ரெங்களுடை ஆரூர னாரூரா நாவலூர் ஞானியருண் ஞாபகமே - தேவகமாம்
AvalU rengkaLuTai ArUra nArUrA nAvalUr njAniyaruN njApakamE - tEvakamAm
மன்ற மமர்ந்த வளம்போற் றிகழ்ந்தமுது குன்ற மமர்ந்தஅருட் கொள்கையே - அன்றகத்தின்
manRa mamarnta vaLampOR Rikazhntamutu kunRa mamarntaaruT koLkaiyE - anRakattin
நல்வெண்ணெ யுண்டொளித்த நாரணன்வந் தேத்துகின்ற நெல்வெண்ணெய் மேவுசிவ நிட்டையே - சொல்வண்ணம்
nalveNNe yuNToLitta nAraNanvan tEttukinRa nelveNNey mEvuchiva niTTaiyE - cholvaNNam
நாவலர் போற்றி நலம்பெறவே யோங்குதிருக் கோவலூர் வீரட்டங் கொள்பரிசே - ஆவலர்மா
nAvalar pORRi nalampeRavE yOngkutiruk kOvalUr vIraTTang koLparichE - AvalarmA
தேவா இறைவா சிவனே யெனுமுழக்கம் ஓவா அறையணிநல் லூருயர்வே - தாவாக்
tEvA iRaivA chivanE yenumuzhakkam OvA aRaiyaNinal lUruyarvE - tAvAk
கடையாற்றி னன்பர்தமைக் கல்லாற்றி னீக்கும் இடையாற்றின் வாழ்நல் இயல்பே - இடையாது
kaTaiyARRi nanpartamaik kallARRi nIkkum iTaiyARRin vAzhnal iyalpE - iTaiyAtu
சொல்லூரன் றன்னைத் தொழும்புகொளுஞ் சீர்வெண்ணெய் நல்லூ ரருட்டுறையின் நற்பயனே - மல்லார்ந்து
chollUran Rannait tozhumpukoLunj chIrveNNey nallU raruTTuRaiyin naRpayanE - mallArntu
மாசுந் துறையூர் மகிபன்முதல் மூவருஞ்சீர் பேசுந் துறையூர்ப் பிறைசூடீ - நேசமுற
mAchun tuRaiyUr makipanmutal mUvarunjchIr pEchun tuRaiyUrp piRaichUTI - nEchamuRa
வேற்றா வடுகூ ரிதயத்தி னார்க்கென்றுந் தோற்றா வடுகூர்ச் சுயஞ்சுடரே - ஆற்றமயல்
vERRA vaTukU ritayatti nArkkenRun tORRA vaTukUrch chuyanjchuTarE - ARRamayal
காணிக் குழிவீழ் கடையர்க்குக் காண்பரிய மாணிக் குழிவாழ் மகத்துவமே - மாணுற்ற
kANik kuzhivIzh kaTaiyarkkuk kANpariya mANik kuzhivAzh makattuvamE - mANuRRa
பூப்பா திரிகொன்றை புன்னைமுதற் சூழ்ந்திலங்கும் ஏர்ப்பா திரிப்புலியூர் ஏந்தலே - சீர்ப்பொலியப்
pUppA tirikonRai punnaimutaR chUzhntilangkum ErppA tirippuliyUr EntalE - chIrppoliyap
பண்டீச் சுரனிப் பதியே விழைந்ததெனும் முண்டீச் சுரத்தின் முழுமுதலே - பெண்தகையார்
paNTIch churanip patiyE vizhaintatenum muNTIch churattin muzhumutalE - peNtakaiyAr
ஏர்ப்பனங்காட் டூரென் றிருநிலத்தோர் வாழ்த்துகின்ற சீர்ப்பனங்காட் டூர்மகிழ்நி க்ஷேபமே - சூர்ப்புடைத்த
ErppanangkAT TUren RirunilattOr vAzhttukinRa chIrppanangkAT TUrmakizhni kSEpamE - chUrppuTaitta
தாமாத்தூர் வீழத் தடிந்தோன் கணேசனொடும் ஆமாத்தூர் வாழ்மெய் அருட்பிழம்பே - யாமேத்தும்
tAmAttUr vIzhat taTintOn kaNEchanoTum AmAttUr vAzhmey aruTpizhampE - yAmEttum
உண்ணா முலையாள் உமையோடு மேவுதிரு அண்ணா மலைவாழ் அருட்சுடரே - கண்ணார்ந்த
uNNA mulaiyAL umaiyOTu mEvutiru aNNA malaivAzh aruTchuTarE - kaNNArnta
நாகம்ப ராந்தொண்ட நாட்டி லுயர்காஞ்சி ஏகம்ப மேவும்பே ரின்பமே - ஆகுந்தென்
nAkampa rAntoNTa nATTi luyarkAnjchi Ekampa mEvumpE rinpamE - Akunten
காற்றளிவண் பூமணத்தைக் காட்டும் பொழிற்கச்சி மேற்றளிவாழ் ஆனந்த வீட்டுறவே - நாற்றமலர்ப்
kARRaLivaN pUmaNattaik kATTum pozhiRkachchi mERRaLivAzh Ananta vITTuRavE - nARRamalarp
பூந்தண் டளிவிரித்துப் புக்கிசைக்குஞ் சீரோண காந்தன் றளிஅருட்ப்ர காசமே - சேர்ந்தவர்க்கே
pUntaN TaLivirittup pukkichaikkunj chIrONa kAntan RaLiaruTpra kAchamE - chErntavarkkE
இங்கா பதஞ்சற்று மில்லா தவனேக தங்கா பதஞ்சேர் தயாநிதியே - மங்காது
ingkA patanjchaRRu millA tavanEka tangkA patanjchEr tayAnitiyE - mangkAtu
மெச்சி நெறிக்கார்வ மேவிநின்றோர் சூழ்ந்ததிருக் கச்சி நெறிக்காரைக் காட்டிறையே - முச்சகமும்
mechchi neRikkArva mEvininROr chUzhntatiruk kachchi neRikkAraik kATTiRaiyE - muchchakamum
ஆயுங் குரங்கணின்முட் டப்பெயர்கொண் டோங்குபுகழ் ஏயுந் தலம்வா ழியன்மொழியே - தோயுமன
Ayung kurangkaNinmuT TappeyarkoN TOngkupukazh Eyun talamvA zhiyanmozhiyE - tOyumana
யோகறலி லாத்தவத்தோ ருன்ன விளங்குதிரு மாகறலில் அன்பரபி மானமே - ஓகையிலா
yOkaRali lAttavattO runna viLangkutiru mAkaRalil anparapi mAnamE - OkaiyilA
வீத்தூர மாவோட மெய்த்தவர்கள் சூழ்ந்ததிரு ஓத்தூரில் வேதாந்த உண்மையே - பூத்தவிசின்
vIttUra mAvOTa meyttavarkaL chUzhntatiru OttUril vEtAnta uNmaiyE - pUttavichin
ஆர்த்தான் பனகத் தவனிந் திரன்புகழ்வன் பார்த்தான் பனங்காட்டூர் பாக்கியமே - பார்த்துலகில்
ArttAn panakat tavanin tiranpukazhvan pArttAn panangkATTUr pAkkiyamE - pArttulakil
இல்ல மெனச்சென் றிரவா தவர்வாழும் வல்லமகி ழன்பர் வசித்துவமே - சொல்லரிக்குக்
illa menachchen RiravA tavarvAzhum vallamaki zhanpar vachittuvamE - chollarikkuk
காற்பேறு கச்சியின்முக் காற்பே றிவணென்னும் மாற்பேற்றி னன்பர் மனோபலமே - ஏற்புடைவாய்
kARpERu kachchiyinmuk kARpE RivaNennum mARpERRi nanpar manOpalamE - ERpuTaivAy
ஊற லடியா ருறத்தொழுது மேவுதிரு ஊற லழியா உவகையே - மாறுபடு
URa laTiyA ruRattozhutu mEvutiru URa lazhiyA uvakaiyE - mARupaTu
தீது மிலம்பயங்கோட் டீரென் றடியர்புகழ் ஓது மிலம்பயங்கோட் டூர்நலமே - தீதுடைய
tItu milampayangkOT TIren RaTiyarpukazh Otu milampayangkOT TUrnalamE - tItuTaiya
பொற்கோலம் ஆமெயிற்குப் போர்க்கோலம் கொண்டதிரு விற்கோலம் மேவுபர மேட்டிமையே - சொற்போரில்
poRkOlam AmeyiRkup pOrkkOlam koNTatiru viRkOlam mEvupara mETTimaiyE - choRpOril
ஓலங்காட் டும்பழைய னூர்நீலி வாதடக்கும் ஆலங்காட் டிற்சூழ் அருள்மயமே - ஞாலம்சேர்
OlangkAT Tumpazhaiya nUrnIli vAtaTakkum AlangkAT TiRchUzh aruLmayamE - njAlamchEr
மாசூர் அகற்றும் மதியுடையோர் சூழ்ந்ததிருப் பாசூரில் உண்மைப் பரத்துவமே - தேசூரன்
mAchUr akaRRum matiyuTaiyOr chUzhntatirup pAchUril uNmaip parattuvamE - tEchUran
கண்பார்க்க வேண்டுமெனக் கண்டூன்று கோற்கொடுத்த வெண்பாக்கத் தன்பர்பெறும் வீறாப்பே - பண்பார்க்கு
kaNpArkka vENTumenak kaNTUnRu kORkoTutta veNpAkkat tanparpeRum vIRAppE - paNpArkku
நள்ளிப் பதியே நலந்தருமென் றன்பர்புகுங் கள்ளிற் பதிநங் கடப்பாடே - எள்ளலுறுங்
naLLip patiyE nalantarumen Ranparpukung kaLLiR patinang kaTappATE - eLLaluRung
கோளத்தி நீக்குங் குணத்தோர்க் கருள்செய்திருக் காளத்தி ஞானக் களஞ்சியமே - ஆள்அத்தா
kOLatti nIkkung kuNattOrk karuLcheytiruk kALatti njAnak kaLanjchiyamE - ALattA
வெற்றியூ ரென்ன வினையேன் வினைதவிர்த்த ஒற்றியூர் மேவியஎன் உள்ளன்பே - தெற்றிகளில்
veRRiyU renna vinaiyEn vinaitavirtta oRRiyUr mEviyaen uLLanpE - teRRikaLil
பொங்குமணிக் கால்கள் பொலஞ்செய்திரு வொற்றிநகர் தங்குஞ் சிவபோக சாரமே - புங்கவர்கள்
pongkumaNik kAlkaL polanjcheytiru voRRinakar tangkunj chivapOka chAramE - pungkavarkaL
சேர்ந்துவலங் கொள்ளுந் திருவொற்றி யூர்க்கோயிற் சார்ந்து மகிழ்அமுத சாரமே - தேர்ந்துலகர்
chErntuvalang koLLun tiruvoRRi yUrkkOyiR chArntu makizhamuta chAramE - tErntulakar
போற்றுந் திருவொற்றிப் பூங்கோயிற் குட்பெரியோர் சாற்றும் புகழ்வேத சாரமே - ஊற்றுறுமெய்
pORRun tiruvoRRip pUngkOyiR kuTperiyOr chARRum pukazhvEta chAramE - URRuRumey
அன்புமிகுந் தொண்டர்குழு ஆயும்வலி தாயத்தில் இன்பமிகு ஞான இலக்கணமே - துன்பமற
anpumikun toNTarkuzhu Ayumvali tAyattil inpamiku njAna ilakkaNamE - tunpamaRa
எல்லைவாயற் குள்மட்டும் ஏகில்வினை யேகுமெனும் முல்லைவாயிற் குள்வைத்த முத்திவித்தே - மல்லல்பெறு
ellaivAyaR kuLmaTTum Ekilvinai yEkumenum mullaivAyiR kuLvaitta muttivittE - mallalpeRu
வேற்காட்ட ரேத்துதிரு வேற்காட்டின் மேவியமுன் நூற்காட் டுயர்வேத நுட்பமே - பாற்காட்டும்
vERkATTa rEttutiru vERkATTin mEviyamun nURkAT TuyarvEta nuTpamE - pARkATTum
ஆர்த்திபெற்ற மாதுமயி லாய்ப்பூசித் தார்மயிலைக் கீர்த்திபெற்ற நல்வேத கீதமே - கார்த்திரண்டு
ArttipeRRa mAtumayi lAyppUchit tArmayilaik kIrttipeRRa nalvEta kItamE - kArttiraNTu
வாவுகின்ற சோலை வளர்வான்மி யூர்த்தலத்தில் மேவுகின்ற ஞான விதரணமே - தூவிமயில்
vAvukinRa chOlai vaLarvAnmi yUrttalattil mEvukinRa njAna vitaraNamE - tUvimayil
ஆடும் பொழிற்கச்சூ ராலக்கோ யிற்குளன்பர் நீடுங் கனதூய நேயமே - ஈடில்லை
ATum pozhiRkachchU rAlakkO yiRkuLanpar nITung kanatUya nEyamE - ITillai
என்னுந் திருத்தொண்ட ரேத்து மிடைச்சுரத்தின் மன்னுஞ் சிவானந்த வண்ணமே - நன்னெறியோர்
ennun tiruttoNTa rEttu miTaichchurattin mannunj chivAnanta vaNNamE - nanneRiyOr
துன்னுநெறிக் கோர்துணையாந் தூயகழுக் குன்றினிடை முன்னுமறி வானந்த மூர்த்தமே - துன்னுபொழில்
tunnuneRik kOrtuNaiyAn tUyakazhuk kunRiniTai munnumaRi vAnanta mUrttamE - tunnupozhil
அம்மதுரத் தேன்பொழியும் அச்சிறுபாக் கத்துலகர் தம்மதநீக் குஞ்ஞான சம்மதமே - எம்மதமும்
ammaturat tEnpozhiyum achchiRupAk kattulakar tammatanIk kunjnjAna chammatamE - emmatamum
சார்ந்தால் வினைநீக்கித் தாங்குதிரு வக்கரையுள் நேர்ந்தார் உபநிடத நிச்சயமே - தேர்ந்தவர்கள்
chArntAl vinainIkkit tAngkutiru vakkaraiyuL nErntAr upaniTata nichchayamE - tErntavarkaL
தத்த மதுமதியாற் சாரும் அரசிலியூர் உத்தமமெய்ஞ் ஞான ஒழுக்கமே - பத்தியுள்ளோர்
tatta matumatiyAR chArum arachiliyUr uttamameynj njAna ozhukkamE - pattiyuLLOr
எண்ணும் புகழ்கொள் இரும்பைமா காளத்து நண்ணுஞ் சிவயோக நாட்டமே - மண்ணகத்துள்
eNNum pukazhkoL irumpaimA kALattu naNNunj chivayOka nATTamE - maNNakattuL
கோபலத்திற் காண்பரிய கோகரணங் கோயில்கொண்ட மாபலத்து மாபலமா மாபலமே - தாபமிலாப்
kOpalattiR kANpariya kOkaraNang kOyilkoNTa mApalattu mApalamA mApalamE - tApamilAp
பாகியற்சொல் மங்கையொடும் பாங்கார் பருப்பதத்தில் யோகியர்க ளேத்திடவாழ் ஒப்புரவே - போகிமுதல்
pAkiyaRchol mangkaiyoTum pAngkAr paruppatattil yOkiyarka LEttiTavAzh oppuravE - pOkimutal
பாடியுற்ற நீலப் பருப்பதத்தில் நல்லோர்கள் தேடிவைத்த தெய்வத் திலகமே - நீடுபவம்
pATiyuRRa nIlap paruppatattil nallOrkaL tETivaitta teyvat tilakamE - nITupavam
தங்கா தவனேக தங்கா பதஞ்சேர்ந்த நங்கா தலான நயப்புணர்வே - சிங்காது
tangkA tavanEka tangkA patanjchErnta nangkA talAna nayappuNarvE - chingkAtu
தண்ணிறைந்து நின்றவர்தாஞ் சார்திருக்கே தாரத்திற் பண்ணிறைந்த கீதப் பனுவலே - எண்ணிறைந்த
taNNiRaintu ninRavartAnj chArtirukkE tArattiR paNNiRainta kItap panuvalE - eNNiRainta
சான்றோர் வணங்குநொடித் தான்மலையில் வாழ்கின்ற தேன்றோய் அமுதச் செழுஞ்சுவையே - வான்தோய்ந்த
chAnROr vaNangkunoTit tAnmalaiyil vAzhkinRa tEnROy amutach chezhunjchuvaiyE - vAntOynta
இந்திரரும் நாரணரும் எண்ணில் பிரமர்களும் வந்திறைஞ்சும் வெள்ளி மலையானே - தந்திடுநல்
intirarum nAraNarum eNNil piramarkaLum vantiRainjchum veLLi malaiyAnE - tantiTunal
தாய்க்குங் கிடையாத தண்ணருள்கொண் டன்பருளம் வாய்க்குங் கயிலை மலையானே - தூய்க்குமரன்
tAykkung kiTaiyAta taNNaruLkoN TanparuLam vAykkung kayilai malaiyAnE - tUykkumaran
தந்தையே என்னருமைத் தந்தையே தாயேயென் சிந்தையே கோயில்கொண்ட தீர்த்தனே - சந்தமிகும்
tantaiyE ennarumait tantaiyE tAyEyen chintaiyE kOyilkoNTa tIrttanE - chantamikum
எண்டோ ளுடையாய் எனையுடையாய் மார்பகத்தில் வண்டோ லிடுங்கொன்றை மாலையாய் - தொண்டர்விழி
eNTO LuTaiyAy enaiyuTaiyAy mArpakattil vaNTO liTungkonRai mAlaiyAy - toNTarvizhi
உண்ணற் கெளியாய் உருத்திரன்மா லாதியர்தங் கண்ணிற் கனவினிலுங் காண்பரியாய் - மண்ணுலகில்
uNNaR keLiyAy uruttiranmA lAtiyartang kaNNiR kanavinilung kANpariyAy - maNNulakil
என்போன் றவர்க்கும் இருள்நீக்கி இன்புதவும் பொன்போன்ற மேனிப் புராதனனே - மின்போன்ற
enpOn Ravarkkum iruLnIkki inputavum ponpOnRa mEnip purAtananE - minpOnRa
செஞ்சடையாய் மூவருக்கும் தேவருக்கு மியாவருக்கும் அஞ்சடையா வண்ணம் அளிப்போனே - விஞ்சுலகில்
chenjchaTaiyAy mUvarukkum tEvarukku miyAvarukkum anjchaTaiyA vaNNam aLippOnE - vinjchulakil
எல்லார்க்கு நல்லவனே எல்லாஞ்செய் வல்லவனே எல்லார்க்கும் ஒன்றா யிருப்போனே - தொல்லூழி
ellArkku nallavanE ellAnjchey vallavanE ellArkkum onRA yiruppOnE - tollUzhi
ஆர்ந்த சராசரங்க ளெல்லா மடிநிழலில் சேர்ந்தொடுங்க மாநடனஞ் செய்வோனே - சார்ந்துலகில்
Arnta charAcharangka LellA maTinizhalil chErntoTungka mAnaTananj cheyvOnE - chArntulakil
எத்தேவர் மெய்த்தேவ ரென்றுரைக்கப் பட்டவர்கள் அத்தேவர்க் கெல்லாமுன் னானோனே - சத்தான
ettEvar meyttEva renRuraikkap paTTavarkaL attEvark kellAmun nAnOnE - chattAna
வெண்மைமுதல் ஐவணமு மேவிஐந்து தேவர்களாய்த் திண்மைபெறும் ஐந்தொழிலுஞ் செய்வோனே - மண்முதலாம்
veNmaimutal aivaNamu mEviaintu tEvarkaLAyt tiNmaipeRum aintozhilunj cheyvOnE - maNmutalAm
ஐந்தா யிருசுடரா யான்மாவாய் நாதமுடன் விந்தா கியெங்கும் விரிந்தோனே - அந்தணவெண்
aintA yiruchuTarA yAnmAvAy nAtamuTan vintA kiyengkum virintOnE - antaNaveN
நீறுடையா யாறுடைய நீண்முடியாய் நேடரிய வீறுடையாய் நின்றனக்கோர் விண்ணப்பம் - மாறுபட
nIRuTaiyA yARuTaiya nINmuTiyAy nETariya vIRuTaiyAy ninRanakkOr viNNappam - mARupaTa
எள்ள லடியேன் எனக்குள் ஒளியாமல் உள்ள படியே யுரைக்கின்றேன் - விள்ளுறுமியான்
eLLa laTiyEn enakkuL oLiyAmal uLLa paTiyE yuraikkinREn - viLLuRumiyAn
வன்சொ லுடன்அன்றி வள்ளலுன தன்பர்தமக் கின்சொ லுடன்பணிந்தொன் றீந்ததிலை - புன்சொலெனும்
vancho luTananRi vaLLaluna tanpartamak kincho luTanpaNinton RIntatilai - puncholenum
பொய்யுரைக்க வென்றாற் புடையெழுவேன் அன்றியொரு மெய்யுரைக்க வென்றும் விழைந்ததிலை - வையகத்தில்
poyyuraikka venRAR puTaiyezhuvEn anRiyoru meyyuraikka venRum vizhaintatilai - vaiyakattil
பொல்லா விரதத்தைப் போற்றியுவந் துண்பதல்லால் கொல்லா விரதத்தைக் கொண்டதிலை - அல்லாதார்
pollA viratattaip pORRiyuvan tuNpatallAl kollA viratattaik koNTatilai - allAtAr
வன்புகழைக் கேட்க மனங்கொண்ட தல்லாமல் நின்புகழைக் கேட்க நினைந்ததிலை - வன்புகொண்டே
vanpukazhaik kETka manangkoNTa tallAmal ninpukazhaik kETka ninaintatilai - vanpukoNTE
இன்னடிக்கு நுண்ணிடையார்க் கேவல்புரிந் தேனலதுன் பொன்னடிக்குத் தொண்டு புரிந்ததிலை - பன்னுகின்ற
innaTikku nuNNiTaiyArk kEvalpurin tEnalatun ponnaTikkut toNTu purintatilai - pannukinRa
செக்குற்ற எள்ளெனவே சிந்தைநசிந் தேனலது முக்குற்றந் தன்னை முறித்ததிலை - துக்கமிகுந்
chekkuRRa eLLenavE chintainachin tEnalatu mukkuRRan tannai muRittatilai - tukkamikun
தாவில் வலங்கொண்டு சஞ்சரித்தேன் அல்லதுநின் கோவில்வலங் கொள்ளக் குறித்தநிலை - பூவுலகில்
tAvil valangkoNTu chanjcharittEn allatunin kOvilvalang koLLak kuRittanilai - pUvulakil
வன்னிதியோர் முன்கூப்பி வாழ்த்தினேன் அன்றியுன்றன் சன்னிதியிற் கைகூப்பித் தாழ்ந்ததிலை - புன்னெறிசேர்
vannitiyOr munkUppi vAzhttinEn anRiyunRan channitiyiR kaikUppit tAzhntatilai - punneRichEr
மிண்டரொடு கூடி வியந்ததல்லா லையாநின் தொண்ட ரொடுங்கூடிச் சூழ்ந்ததிலை - கண்டவரைக்
miNTaroTu kUTi viyantatallA laiyAnin toNTa roTungkUTich chUzhntatilai - kaNTavaraik
கன்றுமுகங் கொண்டு கடுகடுத்துப் பார்ப்பதல்லால் என்று முகமலர்ச்சி யேற்றதிலை - நன்றுபெறு
kanRumukang koNTu kaTukaTuttup pArppatallAl enRu mukamalarchchi yERRatilai - nanRupeRu
நன்னெஞ்ச ருன்சீர் நவில வதுகேட்டுக் கன்னெஞ்சைச் சற்றுங் கரைத்ததிலை - பின்னெஞ்சாப்
nannenjcha runchIr navila vatukETTuk kannenjchaich chaRRung karaittatilai - pinnenjchAp
பண்ர்மை கொண்டதமிழ்ப் பாமாலை யாற்றுதித்துக் கண்ர்கொண் டுன்பாற் கனிந்ததிலை - தண்ர்போல்
paNrmai koNTatamizhp pAmAlai yARRutittuk kaNrkoN TunpAR kanintatilai - taNrpOl
நெஞ்சம் உருகி நினைக்குமன்பர் போலெனைநீ அஞ்சலென நின்றாள் அடுத்தநிலை - விஞ்சுலகர்
nenjcham uruki ninaikkumanpar pOlenainI anjchalena ninRAL aTuttanilai - vinjchulakar
மெய்யடிய னென்றுரைக்க வித்தகநின் பொன்னடிக்குப் பொய்யடிமை வேடங்கள் பூண்டதுண்டு - நையமிகு
meyyaTiya nenRuraikka vittakanin ponnaTikkup poyyaTimai vETangkaL pUNTatuNTu - naiyamiku
மையல் வினைக்குவந்த மாதர் புணர்ச்சியெனும் வெய்ய வினைக்குழியில் வீழ்ந்ததுண்டு - துய்யர்தமை
maiyal vinaikkuvanta mAtar puNarchchiyenum veyya vinaikkuzhiyil vIzhntatuNTu - tuyyartamai
என்னொன்று மில்லா தியல்பாகப் பின்னொன்று முன்னொன்று மாக மொழிந்ததுண்டு - மன்னுகின்ற
ennonRu millA tiyalpAkap pinnonRu munnonRu mAka mozhintatuNTu - mannukinRa
மானஞ் செயாது மனநொந் திரப்போர்க்குத் தானஞ்செய் வாரைத் தடுத்ததுண்டு - ஈனமிலா
mAnanj cheyAtu mananon tirappOrkkut tAnanjchey vArait taTuttatuNTu - InamilA
வாரமுரை யாது வழக்கி னிடையோர வார முரைத்தே மலைந்ததுண்டு - ஈரமிலா
vAramurai yAtu vazhakki niTaiyOra vAra muraittE malaintatuNTu - IramilA
நெஞ்ச ருடன்கூடி நேசஞ்செய் தும்மடியே தஞ்சமெனத் தாழாது தாழ்ந்ததுண்டு - எஞ்சலிலாத்
nenjcha ruTankUTi nEchanjchey tummaTiyE tanjchamenat tAzhAtu tAzhntatuNTu - enjchalilAt
தாயனையா யுன்றனது சந்நிதிநேர் வந்துமொரு நேயமுமில் லாதொதி போல் நின்றதுண்டு - தீயவினை
tAyanaiyA yunRanatu channitinEr vantumoru nEyamumil lAtoti pOl ninRatuNTu - tIyavinai
மாளாக் கொடிய மனச்செல்வர் வாயிலிற்போய்க் கேளாச் சிவநிந்தை கேட்டதுண்டு - மீளாத
mALAk koTiya manachchelvar vAyiliRpOyk kELAch chivanintai kETTatuNTu - mILAta
பொல்லாப் புலையரைப்போற் புண்ணியரை வன்மதத்தால் சொல்லா வசையெல்லாஞ் சொன்னதுண்டு - நல்லோரைப்
pollAp pulaiyaraippOR puNNiyarai vanmatattAl chollA vachaiyellAnj chonnatuNTu - nallOraip
போற்றாது பொய்யுடம்பைப் போற்றிச் சிவபூசை ஆற்றாது சோற்றுக் கலைந்ததுண்டு - தேற்றாமல்
pORRAtu poyyuTampaip pORRich chivapUchai ARRAtu chORRuk kalaintatuNTu - tERRAmal
ஈபத்தா என்றிங் கிரப்போர் தமைக்கண்டு கோபத்தால் நாய்போற் குரைத்ததுண்டு - பாபத்தால்
IpattA enRing kirappOr tamaikkaNTu kOpattAl nAypOR kuraittatuNTu - pApattAl
சிந்தையொன்று வாக்கொன்று செய்கையொன்றாய்ப் போகவிட்டே எந்தைநினை யேத்தா திருந்ததுண்டு - புந்தியிந்த
chintaiyonRu vAkkonRu cheykaiyonRAyp pOkaviTTE entaininai yEttA tiruntatuNTu - puntiyinta
சொல்லைக்கல் லென்றுநல்லோர் சொன்னபுத்தி கேளாமல் எல்லைக்கல் லொத்தே யிருந்ததுண்டு - தொல்லைவினை
chollaikkal lenRunallOr chonnaputti kELAmal ellaikkal lottE yiruntatuNTu - tollaivinai
ஆழ்த்தா மயவுலகி லற்ப மகிழ்ச்சியினால் வாழ்த்தாம லுன்னை மறந்ததுண்டு - தாழ்த்தாமற்
AzhttA mayavulaki laRpa makizhchchiyinAl vAzhttAma lunnai maRantatuNTu - tAzhttAmaR
பூணா வெலும்பணியாய்ப் பூண்டோய்நின் பொன்வடிவங் காணாது வீழ்நாள் கழித்ததுண்டு - மாணாத
pUNA velumpaNiyAyp pUNTOynin ponvaTivang kANAtu vIzhnAL kazhittatuNTu - mANAta
காடுபோன் ஞாலக் கடுநடையி லேயிருகான் மாடுபோல் நின்றுழைத்து வாழ்ந்ததுண்டு - நாடகன்ற
kATupOn njAlak kaTunaTaiyi lEyirukAn mATupOl ninRuzhaittu vAzhntatuNTu - nATakanRa
கள்ளிவா யோங்குபெருங் காமக் கடுங்காட்டிற் கொள்ளிவாய்ப் பேய்போற் குதித்ததுண்டு - ஒள்ளியரால்
kaLLivA yOngkuperung kAmak kaTungkATTiR koLLivAyp pEypOR kutittatuNTu - oLLiyarAl
எள்ளுண்ட மாயா இயல்புறுபுன் கல்வியெலாங் கள்ளுண்ட பித்தனைப்போற் கற்றதுண்டு - நள்ளுலகில்
eLLuNTa mAyA iyalpuRupun kalviyelAng kaLLuNTa pittanaippOR kaRRatuNTu - naLLulakil
சீராசை யெங்குஞ்சொற் சென்றிடவே வேண்டுமெனும் பேராசைப் பேய்தான் பிடித்ததுண்டு - தீராவென்
chIrAchai yengkunjchoR chenRiTavE vENTumenum pErAchaip pEytAn piTittatuNTu - tIrAven
சாதகமோ தீவினையின் சாதனையோ நானறியேன் பாதகமென் றாலெனக்குப் பாற்சோறு - தீதகன்ற
chAtakamO tIvinaiyin chAtanaiyO nAnaRiyEn pAtakamen RAlenakkup pARchORu - tItakanRa
தூய்மைநன்றா மென்கின்ற தொன்மையினார் வாய்க்கினிய வாய்மையென்றால் என்னுடைய வாய்குமட்டுங் - காய்மைதரும்
tUymainanRA menkinRa tonmaiyinAr vAykkiniya vAymaiyenRAl ennuTaiya vAykumaTTung - kAymaitarum
கற்கு நிகராங் கடுஞ்சொலன்றி நன்மதுரச் சொற்கும் எனக்கும்வெகு தூரங்காண் - பொற்புமிக
kaRku nikarAng kaTunjcholanRi nanmaturach choRkum enakkumveku tUrangkAN - poRpumika
நண்ணியுனைப் போற்றுகின்ற நல்லோர்க் கினியசிவ புண்ணியமென் றாலெனக்குப் போராட்டம் - அண்ணலுனை
naNNiyunaip pORRukinRa nallOrk kiniyachiva puNNiyamen RAlenakkup pOrATTam - aNNalunai
நாளுரையா தேத்துகின்ற நல்லோர்மேல் இல்லாத கோளுரையென் றாலெனக்குக் கொண்டாட்டம் - நீளநினை
nALuraiyA tEttukinRa nallOrmEl illAta kOLuraiyen RAlenakkuk koNTATTam - nILaninai
நேசிக்கு நல்ல நெறியாஞ் சிவாகமநூல் வாசிக்க வென்றாலென் வாய்நோகுங் - காசிக்கு
nEchikku nalla neRiyAnj chivAkamanUl vAchikka venRAlen vAynOkung - kAchikku
நீடிக்கி லானாலு நேர்ந்தறிவ தல்லதுவீண் வேடிக்கை யென்றால் விடுவதிலை - நாடயலில்
nITikki lAnAlu nErntaRiva tallatuvIN vETikkai yenRAl viTuvatilai - nATayalil
வீறா முனது விழாச்செயினும் அவ்விடந்தான் ஆறா யிரங்காத மாங்கண்டாய் - மாறான
vIRA munatu vizhAchcheyinum avviTantAn ARA yirangkAta mAngkaNTAy - mARAna
போகமென்றா லுள்ளமிகப் பூரிக்கும் அன்றிசிவ யோகமென்றா லென்னுடைய உண்ணடுங்கும் - சோகமுடன்
pOkamenRA luLLamikap pUrikkum anRichiva yOkamenRA lennuTaiya uNNaTungkum - chOkamuTan
துள்ளலொழிந் தென்னெஞ்சஞ் சோர்ந்தழியுங் காலத்திற் கள்ளமென்றா லுள்ளே களித்தெழும்பும் - அள்ளனெறி
tuLLalozhin tennenjchanj chOrntazhiyung kAlattiR kaLLamenRA luLLE kaLittezhumpum - aLLaneRi
செல்லென்றால் அன்றிச் சிவசிவா வென்றொருகால் சொல்லென்றால் என்றனக்குத் துக்கம்வரும் - நல்லநெறி
chellenRAl anRich chivachivA venRorukAl chollenRAl enRanakkut tukkamvarum - nallaneRi
வாம்பலன்கொண் டோர்கள் மறந்தும் பெறாக்கொடிய சோம்பலென்ப தென்னுடைய சொந்தங்காண் - ஏம்பலுடன்
vAmpalankoN TOrkaL maRantum peRAkkoTiya chOmpalenpa tennuTaiya chontangkAN - EmpaluTan
எற்றோ இரக்கமென்ப தென்றனைக்கண் டஞ்சியெனை உற்றோ ரையுமுடன்விட் டோடுங்காண் - சற்றேனும்
eRRO irakkamenpa tenRanaikkaN Tanjchiyenai uRRO raiyumuTanviT TOTungkAN - chaRREnum
ஆக்கமே சேரா தறத்துரத்து கின்றவெறுந் தூக்கமே யென்றனக்குச் சோபனங்காண் - ஊக்கமிகும்
AkkamE chErA taRatturattu kinRaveRun tUkkamE yenRanakkuch chOpanangkAN - Ukkamikum
ஏறுடையாய் நீறணியா ஈனர்மனை யாயினும்வெண் சோறுகிடைத் தாலதுவே சொர்க்கங்காண் - வீறுகின்ற
ERuTaiyAy nIRaNiyA Inarmanai yAyinumveN chORukiTait tAlatuvE chorkkangkAN - vIRukinRa
வாழ்வுரைக்கு நல்ல மனத்தர்தமை யெஞ்ஞான்றுந் தாழ்வுரைத்தல் என்னுடைய சாதகங்காண் - வேள்விசெயுந்
vAzhvuraikku nalla manattartamai yenjnjAnRun tAzhvuraittal ennuTaiya chAtakangkAN - vELvicheyun
தொண்டர் தமைத்துதியாத் துட்டரைப்போ லெப்பொழுதுஞ் சண்டையென்ப தென்றனக்குத் தாய்தந்தை - கொண்டஎழு
toNTar tamaittutiyAt tuTTaraippO leppozhutunj chaNTaiyenpa tenRanakkut tAytantai - koNTaezhu
தாதாட ஓங்கித் தலையாட வஞ்சரொடு வாதாட என்றாலென் வாய்துடிக்குங் - கோதாடச்
tAtATa Ongkit talaiyATa vanjcharoTu vAtATa enRAlen vAytuTikkung - kOtATach
சிந்தை திரிந்துழலுந் தீயரைப்போல் நற்றரும நிந்தையென்ப தென்பழைய நேசங்காண் - முந்தநினை
chintai tirintuzhalun tIyaraippOl naRRaruma nintaiyenpa tenpazhaiya nEchangkAN - muntaninai
எண்ணென்றால் அன்றி யிடர்செய் திடுங்கொடிய பெண்ணென்றால் தூக்கம் பிடியாது - பெண்களுடன்
eNNenRAl anRi yiTarchey tiTungkoTiya peNNenRAl tUkkam piTiyAtu - peNkaLuTan
புல்லென்றால் தேகம் புளகிக்கும் அன்றிவிட்டு நில்லென்றால் என்கண்ணி னீரரும்பும் - புல்லரென்ற
pullenRAl tEkam puLakikkum anRiviTTu nillenRAl enkaNNi nIrarumpum - pullarenRa
பேர்க்கும்விருப் பெய்தாத பெண்பேய்கள் வெய்யசிறு நீர்க்குழியே யான்குளிக்கு நீர்ப்பொய்கை - சீர்க்கரையின்
pErkkumvirup peytAta peNpEykaL veyyachiRu nIrkkuzhiyE yAnkuLikku nIrppoykai - chIrkkaraiyin
ஏறாப்பெண் மாத ரிடைக்கு ளளிந்தென்றும் ஆறாப்புண் ணுக்கே யடிமைநான் - தேறாத
ERAppeN mAta riTaikku LaLintenRum ARAppuN NukkE yaTimainAn - tERAta
வெஞ்சலஞ்செய் மாயா விகாரத்தி னால்வரும்வீண் சஞ்சலமெல்லா மெனது சம்பந்தம் - அஞ்செழுத்தை
venjchalanjchey mAyA vikAratti nAlvarumvIN chanjchalamellA menatu champantam - anjchezhuttai
நேர்ந்தார்க் கருள்புரியு நின்னடியர் தாமேயுஞ் சார்ந்தா லதுபெரிய சங்கட்டம் - ஆர்ந்திடுமான்
nErntArk karuLpuriyu ninnaTiyar tAmEyunj chArntA latuperiya changkaTTam - ArntiTumAn
காந்தும் விழிப்புலியைக் கண்டதுபோல் நல்லகுண சாந்த மெனைக் கண்டால் தலைசாய்க்கும் - ஆந்தகையோர்
kAntum vizhippuliyaik kaNTatupOl nallakuNa chAnta menaik kaNTAl talaichAykkum - AntakaiyOr
சேர மனத்திற் செறிவித் திடும்புருட தீரமெனைக் கண்டாற் சிரிக்குங்காண் - கோரமதைக்
chEra manattiR cheRivit tiTumpuruTa tIramenaik kaNTAR chirikkungkAN - kOramataik
காணி லுலகிற் கருத்துடையோர் கொள்ளுகின்ற நாண மெனைக்கண்டு நாணுங்காண் - ஏணுலகில்
kANi lulakiR karuttuTaiyOr koLLukinRa nANa menaikkaNTu nANungkAN - ENulakil
ஞானங் கொளாவெனது நாமமுரைத் தாலுமபி மானம் பயங்கொண்டு மாய்ந்துவிடும் - ஆனவுன்றன்
njAnang koLAvenatu nAmamurait tAlumapi mAnam payangkoNTu mAyntuviTum - AnavunRan
கேண்மைக் குலத்தொண்டர் கீர்த்தி பெறக்கொண்ட ஆண்மைக்கு நானென்றா லாகாது - வாண்மைபெறும்
kENmaik kulattoNTar kIrtti peRakkoNTa ANmaikku nAnenRA lAkAtu - vANmaipeRum
ஐயநின்றாட் பூசிக்கு மன்பருள்ளத் தன்பிற்கும் பொய்ய னெனக்கும் பொருத்தமிலை - வையகத்தோர்
aiyaninRAT pUchikku manparuLLat tanpiRkum poyya nenakkum poruttamilai - vaiyakattOr
இல்லெனினுஞ் சும்மாநீ யீகின்றே னென்றொருசொல் சொல்லெனினுஞ் சொல்லத் துணிவுகொளேன் - நல்லையெமக்
illeninunj chummAnI yIkinRE nenRoruchol cholleninunj chollat tuNivukoLEn - nallaiyemak
கீயென்பா ரன்றியன்னை யென்பயத்தா னின்சோற்றில் ஈயென்ப தற்கு மிசையாள்காண் - ஈயென்பார்க்
kIyenpA ranRiyannai yenpayattA ninchORRil Iyenpa taRku michaiyALkAN - IyenpArk
கெண்ணுஞ் சிலர்மண் ணிடுவா ரெனக்கந்த மண்ணுங் கொடுக்கமனம் வாராது - அண்ணுறுமென்
keNNunj chilarmaN NiTuvA renakkanta maNNung koTukkamanam vArAtu - aNNuRumen
இல்லை யடைந்தே யிரப்பவருக் கெப்போதும் இல்லையென்ப தென்வாய்க் கியல்புகாண் - தொல்லுலகை
illai yaTaintE yirappavaruk keppOtum illaiyenpa tenvAyk kiyalpukAN - tollulakai
ஆண்டாலு மன்றி அயலார்புன் கீரைமணிப் பூண்டாலு மென்கண் பொறுக்காது - நீண்டஎழு
ANTAlu manRi ayalArpun kIraimaNip pUNTAlu menkaN poRukkAtu - nINTaezhu
தீப முறுவோர் திசையோர்மற் றியாவர்க்குங் கோப மதுநான் கொடுக்கிலுண்டு - ஆபத்தில்
tIpa muRuvOr tichaiyOrmaR RiyAvarkkung kOpa matunAn koTukkiluNTu - Apattil
வீசங் கொடுத்தெட்டு வீச மெனப்பிறரை மோசஞ் செயநான் முதற்பாதம் - பாசமுளோர்
vIchang koTutteTTu vIcha menappiRarai mOchanj cheyanAn mutaRpAtam - pAchamuLOr
கைக்குடைய வேயெழுதிக் கட்டிவைத்த இவ்வுலகப் பொய்க்கதையே யான்படிக்கும் புத்தகங்கள் - மெய்ப்படுநின்
kaikkuTaiya vEyezhutik kaTTivaitta ivvulakap poykkataiyE yAnpaTikkum puttakangkaL - meyppaTunin
மந்திரத்தை உச்சரியா வாயுடையேன் என்போலத் தந்திரத்தில் கைதேர்ந் தவரில்லை - எந்தைஇனி
mantirattai uchchariyA vAyuTaiyEn enpOlat tantirattil kaitErn tavarillai - entaiini
ஏதென் றுரைப்பே னிருங்கடல்சூழ் வையகத்தில் சூதென்ப தெல்லாமென் சுற்றங்காண் - ஓதுகின்ற
Eten RuraippE nirungkaTalchUzh vaiyakattil chUtenpa tellAmen chuRRangkAN - OtukinRa
நஞ்சமெலாங் கூட்டி நவின்றிடினும் ஒவ்வாத வஞ்சமெலா மென்கை வசங்கண்டாய் - அஞ்சவரும்
nanjchamelAng kUTTi navinRiTinum ovvAta vanjchamelA menkai vachangkaNTAy - anjchavarum
வீணவமாம் வஞ்ச வினைக்குமுத லாகிநின்ற ஆணவமே என்காணி ஆட்சியதாம் - மாணிறைந்த
vINavamAm vanjcha vinaikkumuta lAkininRa ANavamE enkANi ATchiyatAm - mANiRainta
நல்லறிவே என்னைநெடு நாட்பகைத்த தன்றிமற்றைப் புல்லறிவே என்னுட் பொருள்கண்டாய் - சொல்லவொணா
nallaRivE ennaineTu nATpakaitta tanRimaRRaip pullaRivE ennuT poruLkaNTAy - chollavoNA
வேடருக்குங் கிட்டாத வெங்குணத்தா லிங்குழலும் மூடருக்குள் யானே முதல்வன்காண் - வீடடுத்த
vETarukkung kiTTAta vengkuNattA lingkuzhalum mUTarukkuL yAnE mutalvankAN - vITaTutta
மேதையர்கள் வேண்டா விலங்காய்த் திரிகின்ற பேதையென்ப தென்னுரிமைப் பேர்கண்டாய் - பேதமுற
mEtaiyarkaL vENTA vilangkAyt tirikinRa pEtaiyenpa tennurimaip pErkaNTAy - pEtamuRa
ஓதுவதென் பற்பலவாய் உற்றதவத் தோர்நீத்த தீதுகளெல் லாமெனது செல்வங்காண் - ஆதலினால்
Otuvaten paRpalavAy uRRatavat tOrnItta tItukaLel lAmenatu chelvangkAN - AtalinAl
பேயினையொத் திவ்வுலகில் பித்தாகி நின்றவிந்த நாயினைநீ ஆண்டிடுதல் நன்கன்றே - ஆயினுமுன்
pEyinaiyot tivvulakil pittAki ninRavinta nAyinainI ANTiTutal nankanRE - Ayinumun
மண்ணா ருயிர்களுக்கும் வானவர்க்குந் தானிரங்கி உண்ணாக் கொடுவிடமும் உண்டனையே - எண்ணாமல்
maNNA ruyirkaLukkum vAnavarkkun tAnirangki uNNAk koTuviTamum uNTanaiyE - eNNAmal
வேய்த்தவள வெற்பெடுத்த வெய்யஅரக் கன்தனக்கும் வாய்த்தவர மெல்லாம் வழங்கினையே - சாய்த்தமன
vEyttavaLa veRpeTutta veyyaarak kantanakkum vAyttavara mellAm vazhangkinaiyE - chAyttamana
வீம்புடைய வன்முனிவர் வேள்விசெய்து விட்டகொடும் பாம்பையெல் லாந்தோளிற் பரித்தனையே - நாம்பெரியர்
vImpuTaiya vanmunivar vELvicheytu viTTakoTum pAmpaiyel lAntOLiR parittanaiyE - nAmperiyar
எஞ்சேமென் றாணவத்தா லேற்ற இருவரையும் அஞ்சேலென் றாட்கொண் டருளினையே - துஞ்சுபன்றித்
enjchEmen RANavattA lERRa iruvaraiyum anjchElen RATkoN TaruLinaiyE - tunjchupanRit
தோயாக் குருளைகளின் துன்பம் பொறாதன்று தாயாய் முலைப்பாலுந் தந்தனையே - வாயிசைக்குப்
tOyAk kuruLaikaLin tunpam poRAtanRu tAyAy mulaippAlun tantanaiyE - vAyichaikkup
பாண்டியன்முன் சொல்லிவந்த பாணன் பொருட்டடிமை வேண்டி விறகெடுத்து விற்றனையே - ஆண்டொருநாள்
pANTiyanmun chollivanta pANan poruTTaTimai vENTi viRakeTuttu viRRanaiyE - ANTorunAL
வாய்முடியாத் துன்புகொண்ட வந்திக்கோ ராளாகித் தூய்முடிமேல் மண்ணுஞ் சுமந்தனையே - ஆய்துயர
vAymuTiyAt tunpukoNTa vantikkO rALAkit tUymuTimEl maNNunj chumantanaiyE - Aytuyara
மாவகஞ்சேர் மாணிக்க வாசகருக் காய்க்குதிரைச் சேவகன்போல் வீதிதனில் சென்றனையே - மாவிசயன்
mAvakanjchEr mANikka vAchakaruk kAykkutiraich chEvakanpOl vItitanil chenRanaiyE - mAvichayan
வில்லடிக்கு நெஞ்சம் விரும்பியதல் லால்எறிந்த கல்லடிக்கும் உள்ளங் களித்தனையே - மல்லலுறும்
villaTikku nenjcham virumpiyatal lAleRinta kallaTikkum uLLang kaLittanaiyE - mallaluRum
வில்வக் கிளையுதிர்த்த வெய்ய முசுக்கலையைச் செல்வத் துரைமகனாய்ச் செய்தனையே - சொல்லகலின்
vilvak kiLaiyutirtta veyya muchukkalaiyaich chelvat turaimakanAych cheytanaiyE - chollakalin
நீளுகின்ற நெய்யருந்த நேரெலியை மூவுலகும் ஆளுகின்ற மன்னவனாய் ஆக்கினையே - கோளகல
nILukinRa neyyarunta nEreliyai mUvulakum ALukinRa mannavanAy AkkinaiyE - kOLakala
வாய்ச்சங்கு நூலிழைத்த வாய்ச்சிலம்பி தன்னைஉயர் கோச்செங்கட் சோழனெனக் கூட்டினையே - ஏச்சறுநல்
vAychchangku nUlizhaitta vAychchilampi tannaiuyar kOchchengkaT chOzhanenak kUTTinaiyE - EchchaRunal
ஆறடுத்த வாகீசர்க் காம்பசியைக் கண்டுகட்டுச் சோறெடுத்துப் பின்னே சுமந்தனையே - கூறுகின்ற
ARaTutta vAkIchark kAmpachiyaik kaNTukaTTuch chOReTuttup pinnE chumantanaiyE - kURukinRa
தொன்மைபெருஞ் சுந்தரர்க்குத் தோழனென்று பெண்பரவை நன்மனைக்குத் தூது நடந்தனையே - நன்மைபெற
tonmaiperunj chuntararkkut tOzhanenRu peNparavai nanmanaikkut tUtu naTantanaiyE - nanmaipeRa
இற்றென்ற இற்றென்னா எத்தனையோ பேர்கள்செய்த குற்றங் குணமாகக் கொண்டனையே - பற்றுலகில்
iRRenRa iRRennA ettanaiyO pErkaLcheyta kuRRang kuNamAkak koNTanaiyE - paRRulakil
அன்புடைய தாயர்களோ ராயிரம்பே ரானாலும் அன்புடையாய் நின்னைப்போ லாவாரோ - இன்பமுடன்
anpuTaiya tAyarkaLO rAyirampE rAnAlum anpuTaiyAy ninnaippO lAvArO - inpamuTan
ஈண்டவரும் தந்தையர்கள் எண்ணிலரே ஆயினுமென் ஆண்டவனே நின்னைப்போ லாவாரோ - பூண்டகைகொள்
INTavarum tantaiyarkaL eNNilarE Ayinumen ANTavanE ninnaippO lAvArO - pUNTakaikoL
ஏணுடைய நின்னையன்றி எந்தை பிரானேஉன் ஆணைஎனக் குற்றதுணை யாருமில்லை - நாணமுளன்
ENuTaiya ninnaiyanRi entai pirAnEun ANaienak kuRRatuNai yArumillai - nANamuLan
ஆனேன் பிழைக ளனைத்தினையு மையாநீ தானே பொறுக்கத் தகுங்கண்டாய் - மேல்நோற்ற
AnEn pizhaika Lanaittinaiyu maiyAnI tAnE poRukkat takungkaNTAy - mElnORRa
மாற்றனுக்கு மெட்டா மலர்க்கழலோய் நீயென்னைக் கூற்றனுக்குக் காட்டிக் கொடுக்கற்க - பாற்றவள
mARRanukku meTTA malarkkazhalOy nIyennaik kURRanukkuk kATTik koTukkaRka - pARRavaLa
நந்தக் கடற்புவியில் நானின்னும் வன்பிறவிப் பந்தக் கடலழுந்தப் பண்ணற்க - முந்தைநெறி
nantak kaTaRpuviyil nAninnum vanpiRavip pantak kaTalazhuntap paNNaRka - muntaineRi
நின்றேயுன் பொற்றாள் நினையாதார் பாழ்மனையில் சென்றே உடலோம்பச் செய்யற்க - நன்றேநின்
ninREyun poRRAL ninaiyAtAr pAzhmanaiyil chenRE uTalOmpach cheyyaRka - nanREnin
றோங்கு நெறியோர் உளத்தமர்ந்தோய் என்றன்னைத் தீங்கு நெறியில் செலுத்தற்க - வீங்கடங்கி
ROngku neRiyOr uLattamarntOy enRannait tIngku neRiyil cheluttaRka - vIngkaTangki
வாழி யெனத்தான் வழுத்தினுமென் சொற்கடங்கா ஏழை மனத்தா லிளைக்கின்றேன் - வாழுமரக்
vAzhi yenattAn vazhuttinumen choRkaTangkA Ezhai manattA liLaikkinREn - vAzhumarak
கோடேறும் பொல்லாக் குரங்கெனவே பொய்யுலகக் காடேறு நெஞ்சாற் கலங்குகின்றேன் - பாடேறும்
kOTERum pollAk kurangkenavE poyyulakak kATERu nenjchAR kalangkukinREn - pATERum
உள்ளறியா மாயையெனு முட்பகையார் காமமெனுங் கள்ளறியா துண்டு கவல்கின்றேன் - தெள்ளுறுமென்
uLLaRiyA mAyaiyenu muTpakaiyAr kAmamenung kaLLaRiyA tuNTu kavalkinREn - teLLuRumen
கண்ணனையாய் நின்தாள் கமலங் களைவழுத்தா மண்ணனையார் பாற்போய் மயங்குகின்றேன் - திண்ணமிலாக்
kaNNanaiyAy nintAL kamalang kaLaivazhuttA maNNanaiyAr pARpOy mayangkukinREn - tiNNamilAk
காதரவாந் துன்பக் கவலைக் கடல்வீழ்ந்தே ஆதரவொன் றின்றி அலைகின்றேன் - ஓதுமறை
kAtaravAn tunpak kavalaik kaTalvIzhntE Ataravon RinRi alaikinREn - OtumaRai
ஆத்த ரெனுமுன் அடியார் தமைக்கண்டு நாத்திகஞ்சொல் வார்க்கு நடுங்குகின்றேன் - பாத்துண்டே
Atta renumun aTiyAr tamaikkaNTu nAttikanjchol vArkku naTungkukinREn - pAttuNTE
உய்வ தறியா உளத்தினே னுய்யும்வகை செய்வ தறியேன் திகைக்கின்றேன் - சைவநெறி
uyva taRiyA uLattinE nuyyumvakai cheyva taRiyEn tikaikkinREn - chaivaneRi
உண்ணிரம்பு நின்கருணை உண்டோ இலையோஎன் றெண்ணியெண்ணி உள்ளம் இளைக்கின்றேன் - மண்ணினிடைக்
uNNirampu ninkaruNai uNTO ilaiyOen ReNNiyeNNi uLLam iLaikkinREn - maNNiniTaik
கொன்செய்கை கொண்டகொடுங் கூற்றன் குறுகிலதற் கென்செய்வோ மென்றெண்ணி எய்க்கின்றேன் - முன்செய்வினை
koncheykai koNTakoTung kURRan kuRukilataR kencheyvO menReNNi eykkinREn - muncheyvinai
ஆமறையா நோயா லகமெலிவுற் றையோநான் தாமரையி னீர்போல் தயங்குகின்றேன் - தாமமுடி
AmaRaiyA nOyA lakamelivuR RaiyOnAn tAmaraiyi nIrpOl tayangkukinREn - tAmamuTi
வள்ளல் அருள்கொடுக்க வந்திலனே இன்னுமென உள்ளமது நீரா யுருகுகின்றேன் - எள்ளலுறு
vaLLal aruLkoTukka vantilanE innumena uLLamatu nIrA yurukukinREn - eLLaluRu
மாலைபாய்ந் தின்னுமென்ன வந்திடுமோ என்றுநெஞ்சம் ஆலைபாய்ந் துள்ளம் அழிகின்றேன் - ஞாலமிசைக்
mAlaipAyn tinnumenna vantiTumO enRunenjcham AlaipAyn tuLLam azhikinREn - njAlamichaik
கோட்பார வாழ்க்கைக் கொடுஞ்சிறையி னின்றென்னை மீட்பா ரிலாது விழிக்கின்றேன் - மீட்பாகும்
kOTpAra vAzhkkaik koTunjchiRaiyi ninRennai mITpA rilAtu vizhikkinREn - mITpAkum
ஆற்றி லொருகாலும் அடங்காச் சமுசாரச் சேற்றிலொரு காலும்வைத்துத் தேய்கின்றேன் - தோற்றுமயற்
ARRi lorukAlum aTangkAch chamuchArach chERRiloru kAlumvaittut tEykinREn - tORRumayaR
பாகமுறு வாழ்க்கையெனும் பாலைவனத் துன்னருள்நீர்த் தாகமது கொண்டே தவிக்கின்றேன் - மோகமதில்
pAkamuRu vAzhkkaiyenum pAlaivanat tunnaruLnIrt tAkamatu koNTE tavikkinREn - mOkamatil
போய்ப்படுமோர் பஞ்சப் பொறிகளால் வெம்பாம்பின் வாய்ப்படுமோர் தேரையைப்போல் வாடுகின்றேன் - மாய்ப்பவரு
pOyppaTumOr panjchap poRikaLAl vempAmpin vAyppaTumOr tEraiyaippOl vATukinREn - mAyppavaru
மீன்போலு மாதர் விழியால் வலைப்பட்ட மான்போலுஞ் சோர்ந்து மடங்குகின்றேன் - கான்போல
mInpOlu mAtar vizhiyAl valaippaTTa mAnpOlunj chOrntu maTangkukinREn - kAnpOla
வீற்று முலக விகாரப் பிரளயத்தில் தோற்றுஞ் சுழியுட் சுழல்கின்றேன் - ஆற்றவுநான்
vIRRu mulaka vikArap piraLayattil tORRunj chuzhiyuT chuzhalkinREn - ARRavunAn
இப்பாரில் உன்மேலன் பில்லெனினும் அன்பனென ஒப்பாரி யேனும் உடையேன்காண் - தப்பாய்ந்த
ippAril unmElan pilleninum anpanena oppAri yEnum uTaiyEnkAN - tappAynta
மட்டுவிடேன் உன்தாள் மறக்கினும்வெண்ணீற்றுநெறி விட்டுவிடேன் என்றனைக்கை விட்டுவிடேல் - துட்டனென
maTTuviTEn untAL maRakkinumveNNIRRuneRi viTTuviTEn enRanaikkai viTTuviTEl - tuTTanena
மாலுந் திசைமுகனும் வானவரும் வந்துதடுத் தாலுஞ் சிறியேனைத் தள்ளிவிடேல்- சாலுலக
mAlun tichaimukanum vAnavarum vantutaTut tAlunj chiRiyEnait taLLiviTEl- chAlulaka
வாதனைகொண் டோனென்று மற்றெவரா னாலும்வந்து போதனைசெய் தாலுமெனைப் போக்கிவிடேல் - நீதயவு
vAtanaikoN TOnenRu maRRevarA nAlumvantu pOtanaichey tAlumenaip pOkkiviTEl - nItayavu
சூழ்ந்திடுக என்னையுநின் தொண்டருடன் சேர்த்தருள்க வாழ்ந்திடுக நின்தாள் மலர்.
chUzhntiTuka ennaiyunin toNTaruTan chErttaruLka vAzhntiTuka nintAL malar.