
திருவருட்பா · 94தனித் திருவிருத்தம்
உடுக்க வோஒரு கந்தைக்கு மேலிலை உண்ண வோஉண வுக்கும் வழியிலை படுக்க வோபழம் பாய்க்கும் கதியிலை பாரில் நல்லவர் பால்சென்று பிச்சைதான் எடுக்க வோதிடம் இல்லைஎன் பால்உனக் கிரக்கம் என்பதும் இல்லை உயிரைத்தான் விடுக்க வோமனம் இல்லைஎன் செய்குவேன் வெண்பி றைச்சடை வித்தக வள்ளலே.
uTukka vOoru kantaikku mElilai uNNa vOuNa vukkum vazhiyilai paTukka vOpazham pAykkum katiyilai pAril nallavar pAlchenRu pichchaitAn eTukka vOtiTam illaien pAlunak kirakkam enpatum illai uyiraittAn viTukka vOmanam illaien cheykuvEn veNpi RaichchaTai vittaka vaLLalE.
தொடுக்க வோநல்ல சொன்மலர் இல்லைநான் துதிக்கவோ பத்தி சுத்தமும் இல்லைஉள் ஒடுக்க வோமனம் என்வசம் இல்லைஊ டுற்ற ஆணவ மாதிம லங்களைத் தடுக்க வோதிடம் இல்லைஎன் மட்டிலே தயவு தான்நினக் கில்லை உயிரையும் விடுக்க வோமனம் இல்லைஎன் செய்குவேன் விளங்கு மன்றில் விளங்கிய வள்ளலே.
toTukka vOnalla chonmalar illainAn tutikkavO patti chuttamum illaiuL oTukka vOmanam envacham illaiU TuRRa ANava mAtima langkaLait taTukka vOtiTam illaien maTTilE tayavu tAnninak killai uyiraiyum viTukka vOmanam illaien cheykuvEn viLangku manRil viLangkiya vaLLalE.
இறகெடுத்த அமணர்குலம் வேரறுத்த சொக்கேஈ தென்ன ஞாயம் அறுகடுத்த சடைமுடிமேல் மண்ணெடுக்க மாட்டாமல் அடிபட் டையோ பிறகெடுத்தீர் வளையல்விற்றீர் சொற்கேளாப்பிள்ளைகளைப் பெற்றதோஷம் விறகெடுத்தீர் என்செய்வீர் விதிவசந்தான் யாவரையும் விடாது தானே. கலி விருத்தம்
iRakeTutta amaNarkulam vEraRutta chokkEI tenna njAyam aRukaTutta chaTaimuTimEl maNNeTukka mATTAmal aTipaT TaiyO piRakeTuttIr vaLaiyalviRRIr choRkELAppiLLaikaLaip peRRatOSam viRakeTuttIr encheyvIr vitivachantAn yAvaraiyum viTAtu tAnE. kali viruttam
சச்சிதா நந்தசிற் சபையில் நாடகம் பச்சிதாந் திருவுருப் பாவை நோக்கிட மெச்சிதா காரமா விளைப்பர் மெல்லடி உச்சிதாழ் குவர்நமக் குடையர் நெஞ்சமே.
chachchitA nantachiR chapaiyil nATakam pachchitAn tiruvurup pAvai nOkkiTa mechchitA kAramA viLaippar mellaTi uchchitAzh kuvarnamak kuTaiyar nenjchamE.
தத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனிநடிப்பா தத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனிநடிப்பா தத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனிநடிப்பா தத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனஞ்சொல்லுமே.
tattA tanattattait tAven Rarangkan RaninaTippA tattA tanattattait tAven Rarangkan RaninaTippA tattA tanattattait tAven Rarangkan RaninaTippA tattA tanattattait tAven Rarangkan RananjchollumE.
இம்மை யறையனைய வேசூர மாதருமா இம்மையுமை யிம்மையையோ என்செய்த - தம்மைமதன் மாமாமா மாமாமா மாமாமா மாமாமா மாமாமா மாமாமா மா.
immai yaRaiyanaiya vEchUra mAtarumA immaiyumai yimmaiyaiyO encheyta - tammaimatan mAmAmA mAmAmA mAmAmA mAmAmA mAmAmA mAmAmA mA.
ஆவியீ ரைந்தை அபரத்தே வைத்தோதில் ஆவியீ ரைந்தை அகற்றலாம் - ஆவியீர் ஐந்துறலா மாவியீ ரைந்தறலா மாவியீ ரைந்திடலா மோரிரண்டோ டாய்ந்து.
AviyI raintai aparattE vaittOtil AviyI raintai akaRRalAm - AviyIr aintuRalA mAviyI raintaRalA mAviyI raintiTalA mOriraNTO TAyntu.