திருவருட்பா · 20பிள்ளைப் பெரு விண்ணப்பம்

அருட்பெருஞ்ஜோதி

1 / 2

தனிப்பெருஞ் சோதித் தலைவனே எனது தந்தையே திருச்சிற்றம் பலத்தே
கனிப்பெருங் கருணைக் கடவுளே அடியேன் கருதிநின் றுரைக்கும்விண் ணப்பம்
இனிப்புறும் நினது திருவுளத் தடைத்தே எனக்கருள் புரிகநீ விரைந்தே
இனிச்சிறு பொழுதும் தரித்திடேன் உன்றன் இணைமலர்ப் பொன்னடி ஆணை.
1
திரிபிலாப் பொருளே திருச்சிற்றம் பலத்தே திகழ்கின்ற தெய்வமே அன்பர்
பரிவுறுந் தோறும் விரைந்துவந் தருளும் பண்பனே பரையிடப் பாகா
பெரியபொற் சபையில் நடம்புரி கின்ற பேரருட் சோதியே எனக்கே
உரியநல் தந்தைவள்ளலே அடியேன் உரைக்கின்றேன் கேட்டருள் இதுவே.
2
தானலா திறையும் உயிர்க்கசை வில்லாத் தலைவனே திருச்சிற்றம் பலத்தே
வானலால் வேறொன் றிலைஎன உரைப்ப வயங்கிய மெய்யின்ப வாழ்வே
ஊனலால் உயிரும் உளமும்உள் உணர்வும் உவப்புற இனிக்குந்தெள் ளமுதே
ஞானநா டகஞ்செய் தந்தையே அடியேன் நவில்கின்றேன் கேட்டருள் இதுவே.
3
என்னுயிர்க் குயிராம் தெய்வமே என்னை எழுமையும் காத்தருள் இறைவா
என்னுளத் தினிக்கும் தீஞ்சுவைக் கனியே எனக்கறி வுணர்த்திய குருவே
என்னுடை அன்பே திருச்சிற்றம் பலத்தே எனக்கருள் புரிந்தமெய் இன்பே
என்னைஈன் றெடுத்த தந்தையே அடியேன் இசைக்கின்றேன் கேட்கஇம் மொழியே.
4
கருணையார் அமுதே என்னுயிர்க் குயிரே கனிந்தசிற் றம்பலக் கனியே
வருணமா மறையின் மெய்ப்பொருள் ஆகி வயங்கிய வள்ளலே அன்பர்
தெருள்நிறை உளத்தே திகழ்தனித் தலைமைத் தெய்வமே திருவருட்சிவமே
தருணம்என் ஒருமைத் தந்தையே தாயே தரித்தருள் திருச்செவிக் கிதுவே.
5
என்னைஆண் டருளி என்பிழை பொறுத்த இறைவனே திருச்சிற்றம் பலத்தே
என்னைஆண் டஞ்சேல் உனக்குநல் அருளிங் கீகுதும் என்றஎன் குருவே
என்னைவே றெண்ணா துள்ளதே உணர்த்தி எனக்குளே விளங்குபே ரொளியே
என்னைஈன் றளித்த தந்தையே விரைந்திங் கேற்றருள்திருச்செவிக்கிதுவே.
6
இரும்புநேர் மனத்தேன் பிழையெலாம் பொறுத்தென் இதயத்தில் எழுந்திருந் தருளி
விரும்புமெய்ப் பொருளாம் தன்னியல் எனக்கு விளங்கிடவிளக்கியுட் கலந்தே
கரும்புமுக் கனிபால் அமுதொடு செழுந்தேன் கலந்தென இனிக்கின்றோய் பொதுவில்
அரும்பெருஞ் சோதி அப்பனே உளத்தே அடைத்தருள் என்மொழி இதுவே.
7
மலத்திலே கிடந்தேன் தனையெடுத் தருளி மன்னிய வடிவளித் தறிஞர்
குலத்திலே பயிலுந் தரமுமிங் கெனக்குக் கொடுத்துளே விளங்குசற் குருவே
பலத்திலே சிற்றம் பலத்திலே பொன்னம் பலத்திலே அன்பர்தம் அறிவாம்
தலத்திலே ஓங்கும் தலைவனே எனது தந்தையே கேட்கஎன் மொழியே.
8
விண்டபோ தகரும் அறிவரும் பொருளே மெய்யனே ஐயனே உலகில்
தொண்டனேன் தன்னை அடுத்தவர் நேயர் சூழ்ந்தவர் உறவினர் தாயர்
கொண்டுடன் பிறந்தோர் அயலவர் எனும்இக் குறிப்பினர் முகங்களில் இளைப்பைக்
கண்டபோ தெல்லாம் மயங்கிஎன் னுள்ளம் கலங்கிய கலக்கம்நீ அறிவாய்.
9
சீர்த்தசிற் சபைஎன் அப்பனே எனது தெய்வமே என்பெருஞ் சிறப்பே
ஆர்த்தஇவ் வுலகில் அம்மையர் துணைவர் அடுத்தவர் உறவினர் நேயர்
வேர்த்தமற் றயலார் பசியினால் பிணியால்மெய்யுளம்வெதும்பியவெதுப்பைப்
பார்த்தபோ தெல்லாம் பயந்தென துள்ளம் பதைத்ததுன் உளம்அறி யாதோ.
10
பரைத்தனி வெளியில் நடம்புரிந் தருளும் பரமனே அரும்பெரும் பொருளே
தரைத்தலத் தியன்ற வாழ்க்கையில் வறுமைச் சங்கடப் பாவியால் வருந்தி
நரைத்தவர் இளைஞர் முதலினோர் எனையோர் நண்பன்என் றவரவர் குறைகள்
உரைத்தபோ தெல்லாம் நடுங்கிஎன் னுள்ளம் உடைந்ததுன் உளம்அறி யாதோ.
11
அன்னையே அப்பா திருச்சிற்றம் பலத்தென் ஐயனே இவ்வுல கதிலே
பொன்னையே உடையார் வறியவர் மடவார் புகலும்ஆடவர்இவர் களுக்குள்
தன்னையே அறியாப் பிணியினால் ஆவி தளர்கின்றார் தருணம்ஈ தெனவே
சொன்னபோ தெல்லாம் பயந்துநான் அடைந்த சோபத்தை நீஅறி யாயோ.
12
உண்டதோ றெல்லாம் அமுதென இனிக்கும் ஒருவனே சிற்சபை உடையாய்
விண்டபே ருலகில் அம்மஇவ் வீதி மேவும்ஓர் அகத்திலே ஒருவர்
ஒண்டுயிர் மடிந்தார் அலறுகின் றார்என் றொருவரோ டொருவர்தாம் பேசிக்
கொண்டபோ தெல்லாம் கேட்டென துள்ளம் குலைநடுங் கியதறிந் திலையோ.
13
காவிநேர் கண்ணாள் பங்கனே தலைமைக் கடவுளே சிற்சபை தனிலே
மேவிய ஒளியே இவ்வுல கதில்ஊர் வீதிஆ திகளிலே மனிதர்
ஆவிபோ னதுகொண் டுறவினர் அழுத அழுகுரல் கேட்டபோ தெல்லாம்
பாவியேன் உள்ளம் பகீர்என நடுங்கிப் பதைத்ததுன் உளம்அறி யாதோ.
14
நாதனே என்னை நம்பிய மாந்தர் ஞாலத்தில் பிணிபல அடைந்தே
ஏதநேர்ந் திடக்கண் டையகோ அடியேன் எய்திய சோபமும் இளைப்பும்
ஓதநேர் உள்ள நடுக்கமும் திகைப்பும் உற்றபேர் ஏக்கமா திகளும்
தீதனேன் இன்று நினைத்திட உள்ளம் திடுக்கிடல் நீஅறிந் திலையோ.
15
கற்றவர் உளத்தே கரும்பினில் இனிக்கும் கண்ணுதற் கடவுளே என்னைப்
பெற்றதாய் நேயர் உறவினர் துணைவர் பெருகிய பழக்கமிக் குடையோர்
மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து மறைந்திட்ட தோறும்அப் பிரிவை
உற்றுநான் நினைக்குந் தோறும்உள் நடுங்கி உடைந்தனன் உடைகின்றேன் எந்தாய்.
16
என்றும்நா டுறுவோர்க் கின்பமே புரியும் எந்தையே என்றனைச் சூழ்ந்தே
நன்றுநா டியநல் லோர்உயிர்ப் பிரிவை நாயினேன் கண்டுகேட் டுற்ற
அன்றுநான் அடைந்த நடுக்கமுந் துயரும் அளவிலை அளவிலை அறிவாய்
இன்றவர் பிரிவை நினைத்திடுந் தோறும் எய்திடும் துயரும்நீ அறிவாய்.
17
நிலைபுரிந் தருளும் நித்தனே உலகில் நெறியலா நெறிகளில் சென்றே
கொலைபுரிந் திட்ட கொடியவர் இவர்என் றயலவர் குறித்தபோ தெல்லாம்
உலைபுரிந் திடுவெந் தீவயிற் றுள்ளே உற்றென நடுநடுக் குற்றே
துலைபுரிந் தோடிக் கண்களை மூடித் துயர்ந்ததும் நீஅறிந் ததுவே.
18
ஓர்ந்தஉள் ளகத்தே நிறைந்தொளிர் கின்ற ஒருவனே உலகியல் அதிலே
மாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின் வல்லொலி கேட்டபோ தெல்லாம்
காந்திஎன் உள்ளம் கலங்கிய கலக்கம் கடவுள்நீ யேஅறிந் திடுவாய்
ஏந்தும்இவ் வுலகில் இறப்பெனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.
19
மறைமுடி வயங்கும் ஒருதனித் தலைமை வள்ளலே உலகர சாள்வோர்
உறைமுடி வாள்கொண் டொருவரை ஒருவர் உயிரறச் செய்தனர் எனவே
தறையுறச் சிறியேன் கேட்டபோ தெல்லாம் தளர்ந்துள நடுங்கிநின் றயர்ந்தேன்
இறையும்இவ் வுலகில் கொலைஎனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.
20
தாய்மொழி குறித்தே கணக்கிலே மற்றோர் தாய்க்குநால் என்பதை இரண்டாய்
வாய்மொழி வஞ்சம் புகன்றனன் வரைந்தேன் நடுங்கினேன் நினைத்ததை மனத்தே
தூய்மொழி நேயர் நம்பினோர் இல்லில் சூழ்ந்தனன் நினைத்தது துயர்ந்தேன்
காய்மொழி புகன்றேன் பொய்மொழி புகன்றேன்கலங்கினேன் அதுநினைத் தெந்தாய்.
21
எட்டரும் பொருளே திருச்சிற்றம் பலத்தே இலகிய இறைவனே உலகில்
பட்டினி உற்றோர் பசித்தனர் களையால் பரதவிக் கின்றனர் என்றே
ஒட்டிய பிறரால் கேட்டபோ தெல்லாம் உளம்பகீர் எனநடுக் குற்றேன்
இட்டஇவ் வுலகில் பசிஎனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.
22
பல்லிகள் பலவா யிடத்தும்உச் சியினும் பகரும்நேர் முதற்பல வயினும்
சொல்லிய தோறும் பிறர்துயர் கேட்கச் சொல்கின் றவோஎனச் சூழ்ந்தே
மெல்லிய மனம்நொந் திளைத்தனன் கூகை வெங்குரல் செயுந்தொறும் எந்தாய்
வல்லியக் குரல்கேட் டயர்பசுப் போல வருந்தினேன் எந்தைநீ அறிவாய்.
23
காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின் கடுங்குரல்கேட்டுளங்குலைந்தேன்
தாக்கிய ஆந்தை குரல்செயப் பயந்தேன் சாக்குரல் பறவையால் தளர்ந்தேன்
வீக்கிய வேறு கொடுஞ்சகு னஞ்செய் வீக்களால் மயங்கினேன் விடத்தில்
ஊக்கிய பாம்பைக் கண்டபோ துள்ளம் ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய்.
24
வேறுபல் விடஞ்செய் உயிர்களைக் கண்டு வெருவினேன் வெய்யநாய்க் குழுவின்
சீரிய குரலோ டழுகுரல் கேட்டுத் தியங்கினேன் மற்றைவெஞ் சகுனக்
கூறதாம் விலங்கு பறவைஊர் வனவெங் கோள்செயும் ஆடவர் மடவார்
ஊறுசெய்கொடுஞ்சொல் இவைக்கெலாம்உள்ளம்உயங்கினேன்மயங்கினேன்எந்தாய்.
25
நிறமுறு விழிக்கீழ்ப் புறத்தொடு தோளும் நிறைஉடம் பிற்சில உறுப்பும்
உறவுதோல் தடித்துத் துடித்திடுந் தோறும் உன்னிமற் றவைகளை அந்தோ
பிறர்துயர் காட்டத் துடித்தவோ என்று பேதுற்று மயங்கிநெஞ் சுடைந்தேன்
நறுவிய துகிலில் கறைஉறக் கண்டே நடுங்கினேன் எந்தைநீ அறிவாய்.
26
மங்கையர் எனைத்தாம் வலிந்துறுந் தோறும் மயங்கிநாம் இவரொடு முயங்கி
இங்குளங் களித்தால் களித்தவர்க் குடனே இன்னல்உற் றிடும்நமக் கின்னல்
தங்கிய பிறர்தம் துயர்தனைக் காண்டல் ஆகும்அத் துயருறத் தரியேம்
பங்கமீ தெனவே எண்ணிநான் உள்ளம் பயந்ததும் எந்தைநீ அறிவாய்.
27
வலிந்தெனை அழைக்கும் மடந்தையர் தெருவில் மறைந்துவந் தடுத்தபின் நினைந்தே
மலிந்திவர் காணில் விடுவர்அன் றிவரால் மயங்கிஉள் மகிழ்ந்தனம் எனிலோ
நலிந்திடு பிறர்தந் துயர்தனைக் கண்டே நடுங்குற வரும்எனப் பயந்தே
மெலிந்துடன் ஒளித்து வீதிவேறொன்றின் மேவினேன் எந்தைநீ அறிவாய்.
28
களிப்புறு சுகமாம் உணவினைக் கண்ட காலத்தும் உண்டகா லத்தும்
நெளிப்புறு மனத்தோ டஞ்சினேன் எனைத்தான் நேர்ந்தபல் சுபங்களில் நேயர்
அளிப்புறு விருந்துண் டமர்கஎன் றழைக்க அவர்களுக் கன்பினோ டாங்கே
ஒளிப்புறு வார்த்தை உரைத்தயல் ஒளித்தே பயத்தொடும் உற்றனன் எந்தாய்.
29
இன்புறும் உணவு கொண்டபோ தெல்லாம் இச்சுகத் தால்இனி யாது
துன்புறுங் கொல்லோ என்றுளம் நடுங்கிச்சூழ்வெறுவயிற்றொடும் இருந்தேன்
அன்பிலே அன்பர் கொடுத்தவை எல்லாம்ஐயகோ தெய்வமே இவற்றால்
வன்புறச் செய்யேல் என்றுளம் பயந்து வாங்கியுண் டிருந்தனன் எந்தாய்.
30
உற்றதா ரணியில் எனக்குலக் குணர்ச்சி உற்றநாள் முதல்ஒரு சிலநாள்
பெற்றதாய் வாட்டம் பார்ப்பதற் கஞ்சிப் பேருண வுண்டனன் சிலநாள்
உற்றவர் நேயர் அன்புளார் வாட்டம் உறுவதற் கஞ்சினேன் உண்டேன்
மற்றிவை அல்லால் சுகஉணாக் கொள்ள மனநடுங் கியதுநீ அறிவாய்.
31
தொழுந்தகை உடைய சோதியே அடியேன் சோம்பலால் வருந்திய தோறும்
அழுந்தஎன் உள்ளம் பயந்ததை என்னால் அளவிடற் கெய்துமோ பகலில்
விழுந்துறு தூக்கம் வரவது தடுத்தும் விட்டிடா வன்மையால் தூங்கி
எழுந்தபோ தெல்லாம் பயத்தொடும் எழுந்தேன் என்செய்வேன் என்செய்வேன் என்றே.
32
அந்தமோ டாதி இல்லதோர் பொதுவில் அரும்பெருஞ் சோதியே அடியேன்
சொந்தமோ அறியேன் பகலிர வெல்லாம் தூக்கமே கண்டனன் தூக்கம்
வந்தபோ தெல்லாம் பயத்தொடு படுத்தேன் மற்றுநான் எழுந்தபோதெல்லாம்
தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் தொலைவதெக் காலம்என் றெழுந்தேன்.
33
உடையஅம் பலத்தில் ஒருவனே என்றன் உயிர்க்குயிர் ஆகிய ஒளியே
கடையன்நான் நனவில் நடுங்கிய நடுக்கம் கணக்கிலே சிறிதுறும் கனவில்
இடையுறு நடுக்கம் கருதவும் சொலவும் எண்ணவும் எழுதவும் படுமோ
நடையுறு சிறியேன் கனவுகண் டுள்ளம் நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ.
34
பகலிர வடியேன் படுத்தபோ தெல்லாம் தூக்கமாம் பாவிவந் திடுமே
இகலுறு கனவாம் கொடியவெம் பாவி எய்துமே என்செய்வோம் என்றே
உகலுற உள்ளே நடுங்கிய நடுக்கம் உன்னுளம் அறியுமே எந்தாய்
நகலுறச் சிறியேன் கனவுகண் டுள்ளம் நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ.
35
தொகுப்புறு சிறுவர் பயிலுங்கால் பயிற்றும் தொழிலிலே வந்தகோ பத்தில்
சகிப்பிலா மையினால் அடித்தனன் அடித்த தருணம்நான் கலங்கிய கலக்கம்
வகுப்புற நினது திருவுளம் அறியும் மற்றுஞ்சில் உயிர்களில் கோபம்
மிகப்புகுந் தடித்துப் பட்டபா டெல்லாம் மெய்யநீ அறிந்ததே அன்றோ.
36
ஒடித்தஇவ் வுலகில் சிறுவர்பால் சிறிய உயிர்கள்பால் தீமைகண் டாங்கே
அடித்திடற் கஞ்சி உளைந்தனன் என்னால் ஆற்றிடாக் காலத்தில் சிறிதே
பொடித்துநான் பயந்த பயமெலாம் உனது புந்தியில் அறிந்ததே எந்தாய்
வெடித்தவெஞ் சினம்என் உளமுறக் கண்டே வெதும்பிய நடுக்கம்நீ அறிவாய்.
37
கோபமே வருமோ காமமே வருமோ கொடியமோ கங்களே வருமோ
சாபமே அனைய தடைமதம் வருமோ தாமதப் பாவிவந் திடுமோ
பாபமே புரியும் லோபமே வருமோ பயனில்மாற் சரியம்வந் திடுமோ
தாபஆங் கார மேஉறு மோஎன் றையநான் தளர்ந்ததும் அறிவாய்.
38
காமமா மதமாங் காரமா திகள்என் கருத்தினில் உற்றபோ தெல்லாம்
நாமம்ஆர் உளத்தோ டையவோ நான்தான் நடுங்கிய நடுக்கம்நீ அறிவாய்
சேமமார் உலகில் காமமா திகளைச் செறிந்தவர் தங்களைக் கண்டே
ஆமைபோல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும் ஐயநின் திருவுளம் அறியும்.
39
கருத்துவே றாகிக் கோயிலில் புகுந்துன் காட்சியைக் கண்டபோ தெல்லாம்
வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி வந்துநொந் திளைத்தனன் எந்தாய்
நிருத்தனே நின்னைத் துதித்தபோ தெல்லாம் நெகிழ்ச்சிஇல் லாமையால் நடுங்கிப்
பருத்தஎன் உடம்பைப் பார்த்திடா தஞ்சிப் படுத்ததும் ஐயநீ அறிவாய்.
40
புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில் புகுந்துநான் இருக்கின்ற புணர்ப்பும்
என்பொலா மணியே எண்ணிநான் எண்ணி ஏங்கிய ஏக்கம்நீ அறிவாய்
வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு மயங்கிஉள் நடுங்கிஆற் றாமல்
என்பெலாம் கருக இளைத்தனன் அந்த இளைப்பையும் ஐயநீ அறிவாய்.
41
இந்தவிர் சடைஎம் இறைவனே என்னோ டியல்கலைத் தருக்கஞ்செய் திடவே
வந்தவர் தம்மைக் கண்டபோ தெல்லாம் மனம்மிக நடுங்கினேன் அறிவாய்
சந்தியுற் றொருகால் படித்தசாத் திரத்தைத் தமியனேன் மீளவுங் கண்டே
நொந்ததும் உலகப் படிப்பில்என் உள்ளம் நொந்ததும் ஐயநீ அறிவாய்.
42
முனித்தவெவ் வினையோ நின்னருட் செயலோ தெரிந்திலேன் மோகமே லின்றித்
தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள்ஒருத்தியைக்கைதொடச்சார்ந்தேன்
குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக் கலப்பிலேன் மற்றிது குறித்தே
பனித்தனன் நினைத்த தோறும்உள் உடைந்தேன் பகர்வதென் எந்தைநீ அறிவாய்.
43
பதியனே பொதுவில் பரமநா டகஞ்செய் பண்பனே நண்பனே உலகில்
ஒதியனேன் பிறர்பால் உரத்தவார்த் தைகளால் ஒருசில வாதங்கள் புரிந்தே
மதியிலா மையினால் அகங்கரித் ததன்பின்வள்ளல்உன்அருளினால்அறிந்தே
விதியைநான் நொந்து நடுங்கிய தெல்லாம் மெய்யனே நீஅறிந் ததுவே.
44
அருளினை அளிக்கும் அப்பனே உலகில் அன்புளார் வலிந்தெனக் கீந்த
பொருளினை வாங்கிப் போனபோ தெல்லாம் புழுங்கிய புழுக்கம்நீ அறிவாய்
மருளும்அப் பொருளைச் சாலகத் தெறிந்து மனமிகஇளைத்ததும்பொருளால்
இருளுரும் எனநான் உளம்நடுங் கியதும் எந்தைநின் திருவுளம் அறியும்.
45
பொருளிலே உலகம் இருப்பதா தலினால் புரிந்துநாம் ஒருவர்பால் பலகால்
மருவினால் பொருளின் இச்சையால் பலகால் மருவுகின் றான்எனக் கருதி
வெருவுவர் எனநான் அஞ்சிஎவ் விடத்தும் மேவிலேன் எந்தைநீ அறிவாய்
ஒருவும்அப் பொருளை நினைத்தபோ தெல்லாம் உவட்டினேன் இதுவும்நீ அறிவாய்.
46
தகைத்தபே ருலகில் ஐயனே அடியேன் தடித்தஉள் ளத்தொடு களித்தே
நகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் இங்கே நல்லவா கனங்களில் ஏறி
உகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் விரைந்தே ஓட்டிய போதெலாம் பயந்தேன்
பகைத்தபோ தயலார் பகைகளுக் கஞ்சிப் பதுங்கினேன் ஒதுங்கினேன் எந்தாய்.
47
சகப்புற வாழ்வைப் பார்த்திடில் கேட்கில் சஞ்சலம் உறும்எனப் பயந்தே
நகர்புறத் திருக்குந் தோட்டங்கள் தோறும்நண்ணியும் பிறவிடத்தலைந்தும்
பகற்பொழு தெல்லாம் நாடொறுங் கழித்தேன் பகலன்றி இரவும்அப் படியே
மிகப்பல விடத்தும் திரிந்தனன் அடியேன் விளம்பலென் நீஅறிந் ததுவே.
48
உருவுள மடவார் தங்களை நான்கண் ணுற்றபோ துளநடுக் குற்றேன்
ஒருவுளத் தவரே வலிந்திட வேறோர் உவளகத் தொளித்தயல் இருந்தேன்
கருவுளச் சண்டைக் கூக்குரல் கேட்ட காலத்தில் நான்உற்ற கலக்கம்
திருவுளம் அறியும் உரத்தசொல் எனது செவிபுகில் கனல்புகு வதுவே.
49
பண்ணிகா ரங்கள் பொசித்தஅப் போதும் பராக்கிலே செலுத்திய போதும்
எண்ணிய மடவார் தங்களை விழைந்தே இசைந்தனு பவித்தஅப் போதும்
நண்ணிய தயிலம் முழுக்குற்ற போதும் நவின்றசங் கீதமும் நடமும்
கண்ணுறக் கண்டு கேட்டஅப் போதும் கலங்கிய கலக்கம்நீ அறிவாய்.
50
  1. நயந்தபொற் சரிகைத் துகில்எனக் கெனது நண்பினர் உடுத்திய போது பயந்தஅப் பயத்தை அறிந்தவர் எல்லாம் பயந்தனர் வெய்யிலிற் கவிகை வியந்துமேற் பிடித்த போதெலாம் உள்ளம் வெருவினேன் கைத்துகில் வீசி அயந்தரு தெருவில் நடப்பதற் கஞ்சி அரைக்குமேல் வீக்கினன் எந்தாய்.

    nayantapoR charikait tukilenak kenatu naNpinar uTuttiya pOtu payantaap payattai aRintavar ellAm payantanar veyyiliR kavikai viyantumER piTitta pOtelAm uLLam veruvinEn kaittukil vIchi ayantaru teruvil naTappataR kanjchi araikkumEl vIkkinan entAy.

  2. கையுற வீசி நடப்பதை நாணிக் கைகளைக் கட்டியே நடந்தேன் மெய்யுறக் காட்ட வெருவிவெண் துகிலால் மெய்எலாம் ஐயகோ மறைத்தேன் வையமேல் பிறர்தங் கோலமும் நடையும் வண்ணமும் அண்ணலே சிறிதும் பையநான் ஊன்றிப் பார்த்ததே இல்லைப் பார்ப்பனேல் பயமிகப் படைப்பேன்.

    kaiyuRa vIchi naTappatai nANik kaikaLaik kaTTiyE naTantEn meyyuRak kATTa veruviveN tukilAl meyelAm aiyakO maRaittEn vaiyamEl piRartang kOlamum naTaiyum vaNNamum aNNalE chiRitum paiyanAn UnRip pArttatE illaip pArppanEl payamikap paTaippEn.

  3. வைகிய நகரில் எழிலுடை மடவார் வலிந்தெனைக் கைபிடித் திழுத்தும் சைகைவே றுரைத்தும் சரசவார்த் தைகளால் தனித்தெனைப் பலவிசை அறிந்தும் பொய்கரைந் தாணை புகன்றுமேல் விழுந்தும் பொருள்முத லியகொடுத் திசைத்தும் கைகலப் பறியேன் நடுங்கினேன் அவரைக் கடிந்ததும் இல்லைநீ அறிவாய்.

    vaikiya nakaril ezhiluTai maTavAr valintenaik kaipiTit tizhuttum chaikaivE Ruraittum charachavArt taikaLAl tanittenaip palavichai aRintum poykarain tANai pukanRumEl vizhuntum poruLmuta liyakoTut tichaittum kaikalap paRiyEn naTungkinEn avaraik kaTintatum illainI aRivAy.

  4. எளியரை வலியார் அடித்தபோது ஐயோ என்மனம் கலங்கிய கலக்கம் தெளியநான் உரைக்க வல்லவன் அல்லேன் திருவுளம் அறியுமே எந்தாய் களியரைக் கண்டு பயந்தஎன் பயந்தான் கடலினும் பெரியது கண்டாய் அளியர்பால் கொடியர் செய்தவெங் கொடுமை அறிந்தஎன் நடுக்கம்ஆர் அறிவார்.

    eLiyarai valiyAr aTittapOtu aiyO enmanam kalangkiya kalakkam teLiyanAn uraikka vallavan allEn tiruvuLam aRiyumE entAy kaLiyaraik kaNTu payantaen payantAn kaTalinum periyatu kaNTAy aLiyarpAl koTiyar cheytaveng koTumai aRintaen naTukkamAr aRivAr.

  5. இரவிலே பிறர்தம் இடத்திலே இருந்த இருப்பெலாம் கள்ளர்கள் கூடிக் கரவிலே கவர்ந்தார் கொள்ளைஎன் றெனது காதிலே விழுந்தபோ தெல்லாம் விரவிலே நெருப்பை மெய்யிலே மூட்டி வெதுப்பல்போல் வெதும்பினேன் எந்தாய் உரவிலே ஒருவர் திடுக்கென வரக்கண் டுளம்நடுக் குற்றனன் பலகால்.

    iravilE piRartam iTattilE irunta iruppelAm kaLLarkaL kUTik karavilE kavarntAr koLLaien Renatu kAtilE vizhuntapO tellAm viravilE neruppai meyyilE mUTTi vetuppalpOl vetumpinEn entAy uravilE oruvar tiTukkena varakkaN TuLamnaTuk kuRRanan palakAl.

  6. உரத்தொரு வருக்கங் கொருவர் பேசியபோ துள்ளகம் நடுங்கினேன் பலகால் கரத்தினால் உரத்துக் கதவுதட் டியபோ தையவோ கலங்கினேன் கருத்தில் புரத்திலே அம்மா அப்பனே ஐயோ எனப்பிறர் புகன்றசொல் புகுந்தே தரத்தில்என் உளத்தைக் கலக்கிய கலக்கம் தந்தைநீ அறிந்தது தானே.

    urattoru varukkang koruvar pEchiyapO tuLLakam naTungkinEn palakAl karattinAl urattuk katavutaT TiyapO taiyavO kalangkinEn karuttil purattilE ammA appanE aiyO enappiRar pukanRachol pukuntE tarattilen uLattaik kalakkiya kalakkam tantainI aRintatu tAnE.

  7. மண்ணினீள் நடையில் வந்தவெந் துயரை மதித்துளம் வருந்திய பிறர்தம் கண்ணினீர் விடக்கண் டையவோ நானும் கண்ணினீர் விட்டுளங் கவன்றேன் நண்ணிநின் றொருவர் அசப்பிலே என்னை அழைத்தபோ தடியனேன் எண்ணா தெண்ணியா துற்ற தோஎனக் கலங்கி ஏன்எனல் மறந்தனன் எந்தாய்.

    maNNinIL naTaiyil vantaven tuyarai matittuLam varuntiya piRartam kaNNinIr viTakkaN TaiyavO nAnum kaNNinIr viTTuLang kavanREn naNNinin Roruvar achappilE ennai azhaittapO taTiyanEn eNNA teNNiyA tuRRa tOenak kalangki Enenal maRantanan entAy.

  8. தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் சிலுகுறும் என்றுளம் பயந்தே நாட்டிலே சிறிய ஊர்ப்புறங் களிலே நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க் களத்திலே திரிந்துற்ற இளைப்பை ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் எந்தைநீ அறிந்தது தானே.

    tETTilE mikunta chennaiyil iruntAl chilukuRum enRuLam payantE nATTilE chiRiya UrppuRang kaLilE naNNinEn UrppuRam aTutta kATTilE parukkaik kallilE puncheyk kaLattilE tirintuRRa iLaippai ETTilE ezhuta muTiyumO ivaikaL entainI aRintatu tAnE.

  9. என்புடை வந்தார் தம்முகம் நோக்கி என்கொலோ என்கொலோ இவர்தாம் துன்புடை யவரோ இன்புடை யவரோ சொல்லுவ தென்னையோ என்றே வன்புடை மனது கலங்கிஅங் கவரை வாஎனல் மறந்தனன் எந்தாய் அன்புடை யவரைக் கண்டபோ தெல்லாம் என்கொலோ என்றயர்ந் தேனே.

    enpuTai vantAr tammukam nOkki enkolO enkolO ivartAm tunpuTai yavarO inpuTai yavarO cholluva tennaiyO enRE vanpuTai manatu kalangkiang kavarai vAenal maRantanan entAy anpuTai yavaraik kaNTapO tellAm enkolO enRayarn tEnE.

  10. காணுறு பசுக்கள் கன்றுக ளாதி கதறிய போதெலாம் பயந்தேன் ஏணுறு மாடு முதல்பல விருகம் இளைத்தவை கண்டுளம் இளைத்தேன் கோணுறு கோழி முதல்பல பறவை கூவுதல் கேட்டுளங் குலைந்தேன் வீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல்கண் டென்என வெருண்டேன்.

    kANuRu pachukkaL kanRuka LAti kataRiya pOtelAm payantEn ENuRu mATu mutalpala virukam iLaittavai kaNTuLam iLaittEn kONuRu kOzhi mutalpala paRavai kUvutal kETTuLang kulaintEn vINuRu koTiyar kaiyilE vALai vitirttalkaN Tenena veruNTEn.

  11. பிதிர்ந்தமண் உடம்பை மறைத்திட வலியார் பின்முன்நோக் காதுமேல் நோக்கி அதிர்ந்திட நடந்த போதெலாம் பயந்தேன் அவர்புகன் றிட்டதீ மொழிகள் பொதிந்திரு செவியில் புகுந்தொறும் பயந்தேன் புண்ணியா நின்துதி எனும்ஓர் முதிர்ந்ததீங் கனியைக் கண்டிலேன் வேர்த்து முறிந்தகாய் கண்டுளம் தளர்ந்தேன்.

    pitirntamaN uTampai maRaittiTa valiyAr pinmunnOk kAtumEl nOkki atirntiTa naTanta pOtelAm payantEn avarpukan RiTTatI mozhikaL potintiru cheviyil pukuntoRum payantEn puNNiyA nintuti enumOr mutirntatIng kaniyaik kaNTilEn vErttu muRintakAy kaNTuLam taLarntEn.

  12. வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன் ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.

    vATiya payiraik kaNTapO tellAm vATinEn pachiyinAl iLaittE vITutO Rirantum pachiyaRA tayarnta veRRaraik kaNTuLam pataittEn nITiya piNiyAl varuntukin ROren nEruRak kaNTuLan tuTittEn ITinmA nikaLAy Ezhaika LAynenj chiLaittavar tamaikkaNTE iLaittEn.

  13. நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப் பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப் பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்திநொந் துளநடுக் குற்றேன் கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் கண்டகா லத்திலும் பயந்தேன்.

    nalitaru chiRiya teyvamen RaiyO nATTilE palapeyar nATTip palitara ATu panRikuk kuTangkaL palikkaTA mutaliya uyiraip polivuRak koNTE pOkavum kaNTE puntinon tuLanaTuk kuRREn kaliyuRu chiRiya teyvaveng kOyil kaNTakA lattilum payantEn.

  14. துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் தொடங்கிய போதெலாம் பயந்தேன் கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக் கண்டகா லத்திலும் பதைத்தேன் மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்டபோ தெல்லாம் எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தைநின் திருவுளம் அறியும்.

    tuNNenak koTiyOr piRavuyir kollat toTangkiya pOtelAm payantEn kaNNinAl aiyO piRauyir pataikkak kaNTakA lattilum pataittEn maNNinil valaiyum tUNTilum kaNNi vakaikaLum kaNTapO tellAm eNNien uLLam naTungkiya naTukkam entainin tiruvuLam aRiyum.

  15. நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை நண்ணிடா அரையரை நாளும் கெடுநிலை நினைக்கும் சிற்றதி காரக் கேடரைப் பொய்யலால் கிளத்தாப் படுநிலை யவரைப் பார்த்தபோ தெல்லாம் பயந்தனன் சுத்தசன் மார்க்கம் விடுநிலை உலக நடைஎலாங் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய்.

    naTunilai illAk kUTTattaik karuNai naNNiTA araiyarai nALum keTunilai ninaikkum chiRRati kArak kETaraip poyyalAl kiLattAp paTunilai yavaraip pArttapO tellAm payantanan chuttachan mArkkam viTunilai ulaka naTaielAng kaNTE veruvinEn veruvinEn entAy.

  16. ஓங்கிய திருச்சிற் றம்பல முடைய ஒருதனித் தலைவனே என்னைத் தாங்கிய தாயே தந்தையே குருவே தயாநிதிக் கடவுளே நின்பால் நீங்கிய மனத்தார் யாவரே எனினும் அவர்தமை நினைத்தபோ தெல்லாம் தேங்கிய உள்ளம் பயந்தனன் அதுநின் திருவுளம் அறியுமே எந்தாய்.

    Ongkiya tiruchchiR Rampala muTaiya orutanit talaivanE ennait tAngkiya tAyE tantaiyE kuruvE tayAnitik kaTavuLE ninpAl nIngkiya manattAr yAvarE eninum avartamai ninaittapO tellAm tEngkiya uLLam payantanan atunin tiruvuLam aRiyumE entAy.

  17. காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன் காலின்மேல் கால்வைக்கப் பயந்தேன் பாட்டயல் கேட்கப் பாடவும் பயந்தேன் பஞ்சணை படுக்கவும் பயந்தேன் நாட்டிய உயர்ந்த திண்ணைமேல் இருந்து நன்குறக் களித்துக் கால்கீழே நீட்டவும் பயந்தேன் நீட்டிப்பே சுதலை நினைக்கவும் பயந்தனன் எந்தாய்.

    kATTuyar aNaimEl irukkavum payantEn kAlinmEl kAlvaikkap payantEn pATTayal kETkap pATavum payantEn panjchaNai paTukkavum payantEn nATTiya uyarnta tiNNaimEl iruntu nankuRak kaLittuk kAlkIzhE nITTavum payantEn nITTippE chutalai ninaikkavum payantanan entAy.

  18. தலைநெறி ஞான சுத்தசன் மார்க்கம் சார்ந்திட முயலுறா தந்தோ கலைநெறி உலகக் கதியிலே கருத்தைக் கனிவுற வைத்தனர் ஆகிப் புலைநெறி விரும்பி னார்உல குயிர்கள் பொதுஎனக் கண்டிரங் காது கொலைநெறி நின்றார் தமக்குளம் பயந்தேன் எந்தைநான் கூறுவ தென்னே.

    talaineRi njAna chuttachan mArkkam chArntiTa muyaluRA tantO kalaineRi ulakak katiyilE karuttaik kanivuRa vaittanar Akip pulaineRi virumpi nArula kuyirkaL potuenak kaNTirang kAtu kolaineRi ninRAr tamakkuLam payantEn entainAn kURuva tennE.

  19. இவ்வணஞ் சிறியேற் குலகியல் அறிவிங் கெய்திய நாளது தொடங்கி நைவணம் இற்றைப் பகல்வரை அடைந்த நடுக்கமும் துன்பமும் உரைக்க எவ்வணத் தவர்க்கும் அலகுறா தெனில்யான் இசைப்பதென் இசைத்ததே அமையும் செவ்வணத் தருணம் இது தலை வாநின் திருவுளம் அறிந்ததே எல்லாம்.

    ivvaNanj chiRiyER kulakiyal aRiving keytiya nALatu toTangki naivaNam iRRaip pakalvarai aTainta naTukkamum tunpamum uraikka evvaNat tavarkkum alakuRA tenilyAn ichaippaten ichaittatE amaiyum chevvaNat taruNam itu talai vAnin tiruvuLam aRintatE ellAm.

  20. தரைத்தலத் தெனைநீ எழுமையும் பிரியாத் தம்பிரான் அல்லையோ மனத்தைக் கரைத்துளே புகுந்தென் உயிரினுட் கலந்த கடவுள்நீ அல்லையோ எனைத்தான் இரைத்திவ ணளித்தோர் சிற்சபை விளங்கும் எந்தைநீ அல்லையோ நின்பால் உரைத்தல்என் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன் நீஅறி யாததொன் றுண்டோ.

    taraittalat tenainI ezhumaiyum piriyAt tampirAn allaiyO manattaik karaittuLE pukunten uyirinuT kalanta kaTavuLnI allaiyO enaittAn iraittiva NaLittOr chiRchapai viLangkum entainI allaiyO ninpAl uraittalen ozhukkam AtalAl uraittEn nIaRi yAtaton RuNTO.

  21. கைதலத் தோங்கும் கனியின் என் னுள்ளே கனிந்தஎன் களைகண்நீ அலையோ மெய்தலத் தகத்தும் புறத்தும்விட் டகலா மெய்யன்நீ அல்லையோ எனது பைதல்தீர்த் தருளுந் தந்தைநீ அலையோ பரிந்துநின் திருமுன்விண் ணப்பம் செய்தல்என் ஒழுக்கம் ஆதலால் செய்தேன் திருவுளம் தெரிந்ததே எல்லாம்.

    kaitalat tOngkum kaniyin en nuLLE kanintaen kaLaikaNnI alaiyO meytalat takattum puRattumviT TakalA meyyannI allaiyO enatu paitaltIrt taruLun tantainI alaiyO parintunin tirumunviN Nappam cheytalen ozhukkam AtalAl cheytEn tiruvuLam terintatE ellAm.

  22. இன்னவா றடியேன் அச்சமுந் துயரும் எய்திநின் றிளைத்தனன் அந்தோ துன்னஆ ணவமும் மாயையும் வினையும் சூழ்ந்திடும் மறைப்பும்இங் குனைத்தான் உன்னவா சற்றே உரைக்கவா ஒட்டேம் என்பவால் என்செய்வேன் எனது மன்னவா ஞான மன்றவா எல்லாம் வல்லவா இதுதகு மேயோ.

    innavA RaTiyEn achchamun tuyarum eytinin RiLaittanan antO tunnaA Navamum mAyaiyum vinaiyum chUzhntiTum maRaippuming kunaittAn unnavA chaRRE uraikkavA oTTEm enpavAl encheyvEn enatu mannavA njAna manRavA ellAm vallavA itutaku mEyO.

  23. எள்ளலாம் பயத்தால் துயரினால் அடைந்த இளைப்பெலாம் இங்குநான் ஆற்றிக் கொள்ளவே அடுத்தேன் மாயையா திகள்என் கூடவே அடுத்ததென் அந்தோ வள்ளலே எனது வாழ்முதற் பொருளே மன்னவா நின்னலால் அறியேன் உள்ளல்வே றிலைஎன் உடல்பொருள்ஆவி உன்னதே என்னதன் றெந்தாய்.

    eLLalAm payattAl tuyarinAl aTainta iLaippelAm ingkunAn ARRik koLLavE aTuttEn mAyaiyA tikaLen kUTavE aTuttaten antO vaLLalE enatu vAzhmutaR poruLE mannavA ninnalAl aRiyEn uLLalvE Rilaien uTalporuLAvi unnatE ennatan RentAy.

  24. என்சுதந் தரம்ஓர் எட்டுணை யேனும் இல்லையே எந்தைஎல் லாம்உன் தன்சுதந் தரமே அடுத்தஇத் தருணம் தமியனேன் தனைப்பல துயரும் வன்சுமை மயக்கும் அச்சமும் மறைப்பும் மாயையும் வினையும்ஆ ணவமும் இன்சுவைக் கனிபோல் உண்கின்ற தழகோ இவைக்கெலாம் நான்இலக் கலவே.

    enchutan taramOr eTTuNai yEnum illaiyE entaiel lAmun tanchutan taramE aTuttait taruNam tamiyanEn tanaippala tuyarum vanchumai mayakkum achchamum maRaippum mAyaiyum vinaiyumA Navamum inchuvaik kanipOl uNkinRa tazhakO ivaikkelAm nAnilak kalavE.

  25. அறிவொரு சிறிதிங் கறிந்தநாள் முதல்என் அப்பனே நினைமறந் தறியேன் செறிவிலாச் சிறிய பருவத்தும் வேறு சிந்தைசெய் தறிந்திலேன் உலகில் பிறிதொரு பிழையுஞ் செய்திலேன் அந்தோ பிழைத்தனன் ஆயினும்என்னைக் குறியுறக் கொண்டே குலங்குறிப் பதுநின் குணப்பெருங் குன்றினுக் கழகோ.

    aRivoru chiRiting kaRintanAL mutalen appanE ninaimaRan taRiyEn cheRivilAch chiRiya paruvattum vERu chintaichey taRintilEn ulakil piRitoru pizhaiyunj cheytilEn antO pizhaittanan Ayinumennaik kuRiyuRak koNTE kulangkuRip patunin kuNapperung kunRinuk kazhakO.

  26. ஐயநான் ஆடும் பருவத்திற் றானே அடுத்தநன் னேயனோ டப்பா பொய்யுல காசை எனக்கிலை உனக்கென் புகல்என அவனும்அங் கிசைந்தே மெய்யுறத் துறப்போம் என்றுபோய் நினது மெய்யருள் மீட்டிட மீண்டேம் துய்யநின் உள்ளம் அறிந்ததே எந்தாய் இன்றுநான் சொல்லுவ தென்னே.

    aiyanAn ATum paruvattiR RAnE aTuttanan nEyanO TappA poyyula kAchai enakkilai unakken pukalena avanumang kichaintE meyyuRat tuRappOm enRupOy ninatu meyyaruL mITTiTa mINTEm tuyyanin uLLam aRintatE entAy inRunAn cholluva tennE.

  27. தேர்விலாச் சிறிய பருவத்திற் றானே தெய்வமே தெய்வமே எனநின் சார்வுகொண் டெல்லாச் சார்வையும் விடுத்தேன் தந்தையும் குருவும்நீ என்றேன் பேர்விலா துளத்தே வந்தவா பாடிப் பிதற்றினேன் பிறர்மதிப் பறியேன் ஓர்விலாப் பிழைகள் ஒன்றையும் அறியேன் இன்றுநான் உரைப்பதிங் கென்னே.

    tErvilAch chiRiya paruvattiR RAnE teyvamE teyvamE enanin chArvukoN TellAch chArvaiyum viTuttEn tantaiyum kuruvumnI enREn pErvilA tuLattE vantavA pATip pitaRRinEn piRarmatip paRiyEn OrvilAp pizhaikaL onRaiyum aRiyEn inRunAn uraippating kennE.

  28. பொறித்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை புரிந்தது போலவே இன்றும் செறித்துநிற் கின்றேன் அன்றிஎன் உரிமைத் தெய்வமும் குருவும்மெய்ப் பொருளும் நெறித்தநற் றாயுந் தந்தையும் இன்பும் நேயமும் நீஎனப் பெற்றே குறித்தறிந் ததன்பின் எந்தைநான் ஏறிக் குதித்ததென் கூறுக நீயே.

    poRittunaip patiyAp peRRanAL aTimai purintatu pOlavE inRum cheRittuniR kinREn anRien urimait teyvamum kuruvummeyp poruLum neRittanaR RAyun tantaiyum inpum nEyamum nIenap peRRE kuRittaRin tatanpin entainAn ERik kutittaten kURuka nIyE.

  29. பரிந்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை பணிபுரிந் தாங்கிது வரையில் புரிந்துறு கின்றேன் அன்றிஎன் உயிரும் பொருளும்என் புணர்ப்பும்என் அறிவும் விரிந்தஎன் சுகமும் தந்தையுங் குருவும் மெய்ம்மையும் யாவும்நீ என்றே தெரிந்தபின் அந்தோ வேறுநான் செய்த செய்கைஎன் செப்புக நீயே.

    parintunaip patiyAp peRRanAL aTimai paNipurin tAngkitu varaiyil purintuRu kinREn anRien uyirum poruLumen puNarppumen aRivum virintaen chukamum tantaiyung kuruvum meymmaiyum yAvumnI enRE terintapin antO vERunAn cheyta cheykaien cheppuka nIyE.

  30. மைதவழ் விழிஎன் அம்மைஓர் புடைகொள் வள்ளலே நின்னைஅன் பாலும் வைதவர் தமைநான் மதித்திலேன் அன்பால் வாழ்த்துகின் றோர்தமை வாழ்த்தி உய்தவர் இவர்என் றுறுகின்றேன் அல்லால் உன்அருள் அறியநான் வேறு செய்ததொன் றிலையே செய்தனன் எனினும் திருவுளத் தடைத்திடல் அழகோ.

    maitavazh vizhien ammaiOr puTaikoL vaLLalE ninnaian pAlum vaitavar tamainAn matittilEn anpAl vAzhttukin ROrtamai vAzhtti uytavar ivaren RuRukinREn allAl unaruL aRiyanAn vERu cheytaton RilaiyE cheytanan eninum tiruvuLat taTaittiTal azhakO.

  31. ஆரணம் உரைத்த வரைப்பெலாம் பலவாம் ஆகமம் உரைவரைப் பெல்லாம் காரண நினது திருவருட் செங்கோல் கணிப்பருங் களிப்பிலே ஓங்கி நாரணர் முதலோர் போற்றிட விளங்கி நடக்கின்ற பெருமைநான் அறிந்தும் தாரணி யிடைஇத் துன்பமா திகளால் தனையனேன் தளருதல் அழகோ.

    AraNam uraitta varaippelAm palavAm Akamam uraivaraip pellAm kAraNa ninatu tiruvaruT chengkOl kaNipparung kaLippilE Ongki nAraNar mutalOr pORRiTa viLangki naTakkinRa perumainAn aRintum tAraNi yiTaiit tunpamA tikaLAl tanaiyanEn taLarutal azhakO.

  32. பார்முதல் நாதப் பதிஎலாங் கடந்தப் பாலும்அப் பாலும்அப் பாலும் ஓர்முதல் ஆகித் திருவருட் செங்கோல் உரைப்பரும் பெருமையின் ஓங்கிச் சீர்பெற விளங்க நடத்திமெய்ப் பொதுவில் சிறந்தமெய்த் தந்தைநீ இருக்க வார்கடல் உலகில் அச்சமா திகளால் மகன்மனம் வருந்துதல் அழகோ.

    pArmutal nAtap patielAng kaTantap pAlumap pAlumap pAlum Ormutal Akit tiruvaruT chengkOl uraipparum perumaiyin Ongkich chIrpeRa viLangka naTattimeyp potuvil chiRantameyt tantainI irukka vArkaTal ulakil achchamA tikaLAl makanmanam varuntutal azhakO.

  33. ஆர்ந்தவே தாந்தப் பதிமுதல் யோகாந் தப்பதி வரையும்அப் பாலும் தேர்ந்தருள் ஆணைத் திருநெறிச் செங்கோல் செல்லஓர் சிற்சபை இடத்தே சார்ந்தபே ரின்பத் தனியர சியற்றும் தந்தையே தனிப்பெருந் தலைவா பேர்ந்திடேன் எந்த விதத்திலும் நினக்கே பிள்ளைநான் வருந்துதல் அழகோ.

    ArntavE tAntap patimutal yOkAn tappati varaiyumap pAlum tErntaruL ANait tiruneRich chengkOl chellaOr chiRchapai iTattE chArntapE rinpat taniyara chiyaRRum tantaiyE tanipperun talaivA pErntiTEn enta vitattilum ninakkE piLLainAn varuntutal azhakO.

  34. சித்திகள் எல்லாம் வல்லதோர் ஞானத் திருச்சபை தன்னிலே திகழும் சத்திகள் எல்லாம் சத்தர்கள் எல்லாம் தழைத்திடத் தனிஅருட் செங்கோல் சத்திய ஞானம் விளக்கியே நடத்தும் தனிமுதல் தந்தையே தலைவா பித்தியல் உடையேன் எனினும்நின் தனக்கே பிள்ளைநான் வாடுதல் அழகோ.

    chittikaL ellAm vallatOr njAnat tiruchchapai tannilE tikazhum chattikaL ellAm chattarkaL ellAm tazhaittiTat taniaruT chengkOl chattiya njAnam viLakkiyE naTattum tanimutal tantaiyE talaivA pittiyal uTaiyEn eninumnin tanakkE piLLainAn vATutal azhakO.

  35. சாற்றுபே ரண்டப் பகுதிகள் அனைத்தும் தனித்தனி அவற்றுளே நிரம்பித் தோற்றுமா பிண்டப் பகுதிகள் அனைத்தும் சோதியால் விளக்கிஆ னந்த ஆற்றிலே நனைத்து வளர்த்திடும் பொதுவில் அரும்பெருந் தந்தையே இன்பப் பேற்றிலே விழைந்தேன் தலைவநின் தனக்கே பிள்ளைநான் பேதுறல் அழகோ.

    chARRupE raNTap pakutikaL anaittum tanittani avaRRuLE nirampit tORRumA piNTap pakutikaL anaittum chOtiyAl viLakkiA nanta ARRilE nanaittu vaLarttiTum potuvil arumperun tantaiyE inpap pERRilE vizhaintEn talaivanin tanakkE piLLainAn pEtuRal azhakO.

  36. சிறந்ததத் துவங்கள் அனைத்துமாய் அலவாய்த் திகழ்ஒளி யாய்ஒளி எல்லாம் பிறங்கிய வெளியாய் வெளிஎலாம் விளங்கும் பெருவெளி யாய்அதற் கப்பால் நிறைந்தசிற் சபையில் அருளர சியற்றும் நீதிநல் தந்தையே இனிமேல் பிறந்திடேன் இறவேன் நின்னைவிட் டகலேன் பிள்ளைநான் வாடுதல் அழகோ.

    chiRantatat tuvangkaL anaittumAy alavAyt tikazhoLi yAyoLi ellAm piRangkiya veLiyAy veLielAm viLangkum peruveLi yAyataR kappAl niRaintachiR chapaiyil aruLara chiyaRRum nItinal tantaiyE inimEl piRantiTEn iRavEn ninnaiviT TakalEn piLLainAn vATutal azhakO.

  37. எண்ணிய எல்லாம் வல்லபே ரருளாம் இணையிலாத் தனிநெடுஞ் செங்கோல் நண்ணிய திருச்சிற் றம்பலத் தமர்ந்தே நடத்தும்ஓர் ஞானநா யகனே தண்ணருள் அளிக்கும் தந்தையே உலகில் தனையன்நான் பயத்தினால் துயரால் அண்ணிய மலங்கள் ஐந்தினால் இன்னும் ஐயகோ வாடுதல் அழகோ.

    eNNiya ellAm vallapE raruLAm iNaiyilAt tanineTunj chengkOl naNNiya tiruchchiR Rampalat tamarntE naTattumOr njAnanA yakanE taNNaruL aLikkum tantaiyE ulakil tanaiyannAn payattinAl tuyarAl aNNiya malangkaL aintinAl innum aiyakO vATutal azhakO.

  38. கலைஎலாம் புகலும் கதிஎலாம் கதியில் காண்கின்ற காட்சிகள் எல்லாம் நிலையெலாம் நிலையில் நேர்ந்தனு பவஞ்செய் நிறைவெலாம் விளங்கிடப் பொதுவில் மலைவிலாச் சோதி அருட்பெருஞ் செங்கோல் வாய்மையான் நடத்தும்ஓர் தனிமைத் தலைவனே எனது தந்தையே நினது தனையன்நான் தளருதல் அழகோ.

    kalaielAm pukalum katielAm katiyil kANkinRa kATchikaL ellAm nilaiyelAm nilaiyil nErntanu pavanjchey niRaivelAm viLangkiTap potuvil malaivilAch chOti aruTperunj chengkOl vAymaiyAn naTattumOr tanimait talaivanE enatu tantaiyE ninatu tanaiyannAn taLarutal azhakO.

  39. ஆதியே நடுவே அந்தமே எனும்இவ் வடைவெலாம் இன்றிஒன் றான சோதியே வடிவாய்த் திருச்சிற்றம் பலத்தே தூயபே ரருள்தனிச் செங்கோல் நீதியே நடத்தும் தனிப்பெருந் தலைமை நிருத்தனே ஒருத்தனே நின்னை ஓதியே வழுத்தும் தனையன்நான் இங்கே உறுகணால் தளருதல் அழகோ.

    AtiyE naTuvE antamE enumiv vaTaivelAm inRion RAna chOtiyE vaTivAyt tiruchchiRRam palattE tUyapE raruLtanich chengkOl nItiyE naTattum tanipperun talaimai niruttanE oruttanE ninnai OtiyE vazhuttum tanaiyannAn ingkE uRukaNAl taLarutal azhakO.

  40. அத்தனே திருச்சிற் றம்பலத் தரசே அரும்பெருஞ் சோதியே அடியார் பித்தனே எனினும் பேயனே எனினும் பெரிதருள் புரிதனித் தலைமைச் சித்தனே எல்லாம் செய்திட வல்ல செல்வனே சிறப்பனே சிவனே சுத்தனே நினது தனையன்நான் மயங்கித் துயர்ந்துளம் வாடுதல் அழகோ.

    attanE tiruchchiR Rampalat tarachE arumperunj chOtiyE aTiyAr pittanE eninum pEyanE eninum peritaruL puritanit talaimaich chittanE ellAm cheytiTa valla chelvanE chiRappanE chivanE chuttanE ninatu tanaiyannAn mayangkit tuyarntuLam vATutal azhakO.

  41. உற்றதோர் திருச்சிற் றம்பலத் தோங்கும் ஒருதனித் தந்தையே நின்பால் குற்றம்நான் புரிந்திங் கறிந்திலேன் குற்றம் குயிற்றினேன் என்னில்அக் குற்றம் இற்றென அறிவித் தறிவுதந் தென்னை இன்புறப் பயிற்றுதல் வேண்டும் மற்றய லார்போன் றிருத்தலோ தந்தை வழக்கிது நீஅறி யாயோ.

    uRRatOr tiruchchiR Rampalat tOngkum orutanit tantaiyE ninpAl kuRRamnAn purinting kaRintilEn kuRRam kuyiRRinEn ennilak kuRRam iRRena aRivit taRivutan tennai inpuRap payiRRutal vENTum maRRaya lArpOn RiruttalO tantai vazhakkitu nIaRi yAyO.

  42. குற்றமோ குணமோ நான்அறி யேன்என் குறிப்பெலாம் திருச்சிற்றம் பலத்தே உற்றதா தலினால் உலகியல் வழக்கில் உற்றன மற்றென தலவே தெற்றென அருட்கே குற்றம்என் பதுநான் செய்திடில் திருத்தலே அன்றி மற்றய லார்போன் றிருப்பதோ தந்தை மரபிது நீஅறி யாயோ.

    kuRRamO kuNamO nAnaRi yEnen kuRippelAm tiruchchiRRam palattE uRRatA talinAl ulakiyal vazhakkil uRRana maRRena talavE teRRena aruTkE kuRRamen patunAn cheytiTil tiruttalE anRi maRRaya lArpOn RiruppatO tantai marapitu nIaRi yAyO.

  43. மாயையால் வினையால் அரிபிர மாதி வானவர் மனமதி மயங்கித் தீயகா ரியங்கள் செய்திடில் அந்தோ சிறியனேன் செய்வது புதிதோ ஆயினும் தீய இவைஎன அறியேன் அறிவித்துத் திருத்துதல் அன்றி நீயிவண் பிறர்போன் றிருப்பது தந்தை நெறிக்கழ கல்லவே எந்தாய்.

    mAyaiyAl vinaiyAl aripira mAti vAnavar manamati mayangkit tIyakA riyangkaL cheytiTil antO chiRiyanEn cheyvatu putitO Ayinum tIya ivaiena aRiyEn aRivittut tiruttutal anRi nIyivaN piRarpOn Riruppatu tantai neRikkazha kallavE entAy.

  44. கருணையும் சிவமே பொருள்எனக் காணும் காட்சியும் பெறுகமற் றெல்லாம் மருள்நெறி எனநீ எனக்கறி வித்த வண்ணமே பெற்றிருக் கின்றேன் இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்திய தென்செய்வேன் எந்தாய் தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் சிறுநெறி பிடித்ததொன் றிலையே.

    karuNaiyum chivamE poruLenak kANum kATchiyum peRukamaR RellAm maruLneRi enanI enakkaRi vitta vaNNamE peRRiruk kinREn iruLneRi mAyai vinaikaLAl kalakkam eytiya tencheyvEn entAy teruLnilai inRik kalangkinEn eninum chiRuneRi piTittaton RilaiyE.

  45. கலங்கிய போதும் திருச்சிற்றம் பலத்தில் கருணையங் கடவுளே நின்பால் இலங்கிய நேயம் விலங்கிய திலையே எந்தைநின் உளம்அறி யாதோ மலங்கிய மனத்தேன் புகல்வதென் வினையால் மாயையால் வரும்பிழை எல்லாம் அலங்கும்என் பிழைகள் அல்லஎன் றுன்னோ டடிக்கடி அறைந்தனன் ஆண்டே.

    kalangkiya pOtum tiruchchiRRam palattil karuNaiyang kaTavuLE ninpAl ilangkiya nEyam vilangkiya tilaiyE entainin uLamaRi yAtO malangkiya manattEn pukalvaten vinaiyAl mAyaiyAl varumpizhai ellAm alangkumen pizhaikaL allaen RunnO TaTikkaTi aRaintanan ANTE.

  46. இரும்பினும் கொடிய மனஞ்செயும் பிழையும் என்பிழை அன்றெனப் பலகால் விரும்பிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன் வேறுநான் செய்ததிங் கென்னே அரும்பொனே திருச்சிற் றம்பலத் தமுதே அப்பனே என்றிருக் கின்றேன் துரும்பினுஞ் சிறியேன் புகல்வதென் நினது தூயதாம் திருவுளம் அறியும்.

    irumpinum koTiya mananjcheyum pizhaiyum enpizhai anRenap palakAl virumpinin aTikkE viNNappit tiruntEn vERunAn cheytating kennE arumponE tiruchchiR Rampalat tamutE appanE enRiruk kinREn turumpinunj chiRiyEn pukalvaten ninatu tUyatAm tiruvuLam aRiyum.

  47. வருமுயிர் இரக்கம் பற்றியே உலக வழக்கில்என் மனஞ்சென்ற தோறும் வெருவிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன் விண்ணப்பஞ் செய்கின்றேன் இன்றும் உருவஎன் உயிர்தான் உயிர்இரக் கந்தான் ஒன்றதே இரண்டிலை இரக்கம் ஒருவில்என் உயிரும் ஒருவும்என் உள்ளத் தொருவனே நின்பதத் தாணை.

    varumuyir irakkam paRRiyE ulaka vazhakkilen mananjchenRa tORum veruvinin aTikkE viNNappit tiruntEn viNNappanj cheykinREn inRum uruvaen uyirtAn uyirirak kantAn onRatE iraNTilai irakkam oruvilen uyirum oruvumen uLLat toruvanE ninpatat tANai.

  48. தலைவர்கள் எல்லாம் தனித்தனி வணங்கும் தலைவனே இன்றும்என் உளமும் மலைவில்என் அறிவும் நானும்இவ் வுலக வழக்கிலே உயிர்இரக் கத்தால் இலகுகின் றனம்நான் என்செய்வேன் இரக்கம் என்னுயிர் என்னவே றிலையே நிலைபெறும் இரக்கம் நீங்கில்என் உயிரும் நீங்கும்நின் திருவுளம் அறியும்.

    talaivarkaL ellAm tanittani vaNangkum talaivanE inRumen uLamum malaivilen aRivum nAnumiv vulaka vazhakkilE uyirirak kattAl ilakukin RanamnAn encheyvEn irakkam ennuyir ennavE RilaiyE nilaipeRum irakkam nIngkilen uyirum nIngkumnin tiruvuLam aRiyum.

  49. ஆதலால் இரக்கம் பற்றிநான் உலகில் ஆடலே அன்றிஓர் விடயக் காதலால் ஆடல் கருதிலேன் விடயக் கருத்தெனக் கில்லைஎன் றிடல்இப் போதலால் சிறிய போதும்உண் டதுநின் புந்தியில் அறிந்தது தானே ஈதலால் வேறோர் தீதென திடத்தே இல்லைநான் இசைப்பதென் எந்தாய்.

    AtalAl irakkam paRRinAn ulakil ATalE anRiOr viTayak kAtalAl ATal karutilEn viTayak karuttenak killaien RiTalip pOtalAl chiRiya pOtumuN Tatunin puntiyil aRintatu tAnE ItalAl vEROr tItena tiTattE illainAn ichaippaten entAy.

  50. என்னையும் இரக்கந் தன்னையும் ஒன்றாய் இருக்கவே இசைவித் திவ்வுலகில் மன்னிவாழ் வுறவே வருவித்த கருணை வள்ளல்நீ நினக்கிது விடயம் பன்னல்என் அடியேன் ஆயினும் பிள்ளைப் பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய் இன்னவா றெனநீ சொன்னவா றியற்றா திருந்ததோர் இறையும்இங்கிலையே.

    ennaiyum irakkan tannaiyum onRAy irukkavE ichaivit tivvulakil mannivAzh vuRavE varuvitta karuNai vaLLalnI ninakkitu viTayam pannalen aTiyEn Ayinum piLLaip pAngkinAl uraikkinREn entAy innavA RenanI chonnavA RiyaRRA tiruntatOr iRaiyumingkilaiyE.

  51. உறுவினை தவிர்க்கும் ஒருவனே உலகில் ஓடியும் ஆடியும் உழன்றும் சிறுவர்தாம் தந்தை வெறுப்பஆர்க் கின்றார் சிறியனேன் ஒருதின மேனும் மறுகிநின் றாடிஆர்த்ததிங் குண்டோ நின்பணி மதிப்பலால் எனக்குச் சிறுவிளை யாட்டில் சிந்தையே இலைநின் திருவுளம் அறியுமே எந்தாய்.

    uRuvinai tavirkkum oruvanE ulakil OTiyum ATiyum uzhanRum chiRuvartAm tantai veRuppaArk kinRAr chiRiyanEn orutina mEnum maRukinin RATiArttating kuNTO ninpaNi matippalAl enakkuch chiRuviLai yATTil chintaiyE ilainin tiruvuLam aRiyumE entAy.

  52. தந்தையர் வெறுப்ப மக்கள்தாம் பயனில் சழக்குரை யாடிவெங் காமச் சிந்தைய ராகித் திரிகின்றார் அந்தோ சிறியனேன் ஒருதின மேனும் எந்தைநின் உள்ளம் வெறுப்பநின் பணிவிட் டிவ்வுல கியலில்அவ் வாறு தெந்தன என்றே திரிந்ததுண் டேயோ திருவுளம் அறியநான் அறியேன்.

    tantaiyar veRuppa makkaLtAm payanil chazhakkurai yATiveng kAmach chintaiya rAkit tirikinRAr antO chiRiyanEn orutina mEnum entainin uLLam veRuppanin paNiviT Tivvula kiyalilav vARu tentana enRE tirintatuN TEyO tiruvuLam aRiyanAn aRiyEn.

  53. அம்புவி தனிலே தந்தையர் வெறுப்ப அடிக்கடி அயலவர் உடனே வம்புறு சண்டை விளைக்கின்றார் சிறுவர் வள்ளலே நின்பணி விடுத்தே இம்பர்இவ் வுலகில் ஒருதின மேனும் ஏழையேன் பிறரொடு வெகுண்டே வெம்புறு சண்டை விளைத்ததுண் டேயோ மெய்யநின் ஆணைநான் அறியேன்.

    ampuvi tanilE tantaiyar veRuppa aTikkaTi ayalavar uTanE vampuRu chaNTai viLaikkinRAr chiRuvar vaLLalE ninpaNi viTuttE impariv vulakil orutina mEnum EzhaiyEn piRaroTu vekuNTE vempuRu chaNTai viLaittatuN TEyO meyyanin ANainAn aRiyEn.

  54. வள்ளல்இவ் வுலகில் தந்தையர் வெறுப்ப மக்கள்தாம் ஒழுக்கத்தை மறந்தே கள்ளருந் துதல்சூ தாடுதல் காமக் கடைதொறும் மயங்குதல் பொய்யே விள்ளுதல் புரிவார் ஐயகோ அடியேன் மெய்யநின் திருப்பணி விடுத்தே எள்ளிஅவ் வாறுபுரிந்ததொன் றுண்டோ எந்தைநின் ஆணைநான் அறியேன்.

    vaLLaliv vulakil tantaiyar veRuppa makkaLtAm ozhukkattai maRantE kaLLarun tutalchU tATutal kAmak kaTaitoRum mayangkutal poyyE viLLutal purivAr aiyakO aTiyEn meyyanin tiruppaNi viTuttE eLLiav vARupurintaton RuNTO entainin ANainAn aRiyEn.

  55. மலைவிலாத் திருச்சிற் றம்பலத் தமர்ந்த வள்ளலே உலகினில் பெற்றோர் குலைநடுக் குறவே கடுகடுத் தோடிக் கொடியதீ நெறியிலே மக்கள் புலைகொலை களவே புரிகின்றார் அடியேன் புண்ணிய நின்பணி விடுத்தே உலையஅவ் வாறு புரிந்ததொன் றுண்டோ உண்பதத் தாணைநான் அறியேன்.

    malaivilAt tiruchchiR Rampalat tamarnta vaLLalE ulakinil peRROr kulainaTuk kuRavE kaTukaTut tOTik koTiyatI neRiyilE makkaL pulaikolai kaLavE purikinRAr aTiyEn puNNiya ninpaNi viTuttE ulaiyaav vARu purintaton RuNTO uNpatat tANainAn aRiyEn.

  56. தனிப்பெருஞ் சோதித் தந்தையே உலகில் தந்தையர் பற்பல காலும் இனிப்புறு மொழியால் அறிவுற மக்கட் கேற்கவே பயிற்றிடுந் தோறும் பனிப்புற ஓடிப் பதுங்கிடு கின்றார் பண்பனே என்னைநீ பயிற்றத் தினைத்தனை யேனும் பதுங்கிய துண்டோ திருவுளம் அறியநான் அறியேன்.

    tanipperunj chOtit tantaiyE ulakil tantaiyar paRpala kAlum inippuRu mozhiyAl aRivuRa makkaT kERkavE payiRRiTun tORum panippuRa OTip patungkiTu kinRAr paNpanE ennainI payiRRat tinaittanai yEnum patungkiya tuNTO tiruvuLam aRiyanAn aRiyEn.

  57. தன்னைநே ரில்லாத் தந்தையே உலகில் தந்தையர் தங்களை அழைத்தே சொன்னசொல் மறுத்தே மக்கள்தம் மனம்போம் சூழலே போகின்றார் அடியேன் என்னைநீ உணர்த்தல் யாதது மலையின் இலக்கெனக் கொள்கின்றேன் அல்லால் பின்னைஓர் இறையும் மறுத்ததொன் றுண்டோபெரியநின் ஆணைநான் அறியேன்.

    tannainE rillAt tantaiyE ulakil tantaiyar tangkaLai azhaittE chonnachol maRuttE makkaLtam manampOm chUzhalE pOkinRAr aTiyEn ennainI uNarttal yAtatu malaiyin ilakkenak koLkinREn allAl pinnaiOr iRaiyum maRuttaton RuNTOperiyanin ANainAn aRiyEn.

  58. போற்றுவார் போற்றும் புனிதனே மக்கள் பொருந்து தம் தந்தையர் தமையே வேற்றுவாழ் வடைய வீடுதா பணந்தா மெல்லிய சரிகைவத் திரந்தா ஏற்றஆ பரணந் தாஎனக் கேட்டே இரங்குவார் இவைகுறித் தடியேன் தேற்றுவாய் நின்னைக் கேட்டதொன் றுண்டோ திருவுளம் அறியநான் அறியேன்.

    pORRuvAr pORRum punitanE makkaL poruntu tam tantaiyar tamaiyE vERRuvAzh vaTaiya vITutA paNantA melliya charikaivat tirantA ERRaA paraNan tAenak kETTE irangkuvAr ivaikuRit taTiyEn tERRuvAy ninnaik kETTaton RuNTO tiruvuLam aRiyanAn aRiyEn.

  59. குணம்புரி எனது தந்தையே உலகில் கூடிய மக்கள்தந் தையரைப் பணம்புரி காணி பூமிகள் புரிநற் பதிபுரி ஏற்றபெண் பார்த்தே மணம்புரி எனவே வருத்துகின் றார்என் மனத்திலே ஒருசிறி தேனும் எணம்புரிந் துனைநான் வருத்திய துண்டோ எந்தைநின் ஆணைநான் அறியேன்.

    kuNampuri enatu tantaiyE ulakil kUTiya makkaLtan taiyaraip paNampuri kANi pUmikaL purinaR patipuri ERRapeN pArttE maNampuri enavE varuttukin RAren manattilE oruchiRi tEnum eNampurin tunainAn varuttiya tuNTO entainin ANainAn aRiyEn.

  60. இகத்திலே எனைவந் தாண்டமெய்ப் பொருளே என்னுயிர்த் தந்தையே இந்தச் சகத்திலே மக்கள் தந்தையர் இடத்தே தாழ்ந்தவ ராய்ப்புறங் காட்டி அகத்திலே வஞ்சம் வைத்திருக் கின்றார் ஐயவோ வஞ்சம்நின் அளவில் முகத்திலே என்றன் அகத்திலே உண்டோ முதல்வநின் ஆணைநான் அறியேன்.

    ikattilE enaivan tANTameyp poruLE ennuyirt tantaiyE intach chakattilE makkaL tantaiyar iTattE tAzhntava rAyppuRang kATTi akattilE vanjcham vaittiruk kinRAr aiyavO vanjchamnin aLavil mukattilE enRan akattilE uNTO mutalvanin ANainAn aRiyEn.

  61. தன்மைகாண் பரிய தலைவனே எனது தந்தையே சகத்திலே மக்கள் வன்மைவார்த் தைகளால் தந்தையர் தம்மை வைகின்றார் வள்ளலே மருந்தே என்மனக் கனிவே என்னிரு கண்ணே என்னுயிர்க் கிசைந்தமெய்த் துணையே நின்மனம் வெறுப்பப் பேசிய துண்டோ நின்பதத் தாணைநான் அறியேன்.

    tanmaikAN pariya talaivanE enatu tantaiyE chakattilE makkaL vanmaivArt taikaLAl tantaiyar tammai vaikinRAr vaLLalE maruntE enmanak kanivE enniru kaNNE ennuyirk kichaintameyt tuNaiyE ninmanam veRuppap pEchiya tuNTO ninpatat tANainAn aRiyEn.

  62. ஒப்பிலா மணிஎன் அப்பனே உலகில் உற்றிடு மக்கள்தந் தையரை வைப்பில்வே றொருவர் வைதிடக்கேட்டு மனம்பொறுத் திருக்கின்றார் அடியேன் தப்பிலாய் நினைவே றுரைத்திடக் கேட்டால் தரிப்பனோ தரித்திடேன் அன்றி வெப்பில்என் உயிர்தான் தரிக்குமோ யாதாய் விளையுமோ அறிந்திலேன் எந்தாய்.

    oppilA maNien appanE ulakil uRRiTu makkaLtan taiyarai vaippilvE Roruvar vaitiTakkETTu manampoRut tirukkinRAr aTiyEn tappilAy ninaivE RuraittiTak kETTAl tarippanO tarittiTEn anRi veppilen uyirtAn tarikkumO yAtAy viLaiyumO aRintilEn entAy.

  63. இத்தகை உலகில் இங்ஙனம் சிறியேன் எந்தைநின் திருப்பணி விடுத்தே சித்தம்வே றாகித் திரிந்ததே இலைநான் தெரிந்தநாள் முதல்இது வரையும் அத்தனே அரசே ஐயனே அமுதே அப்பனே அம்பலத் தாடும் சித்தனே சிவனே என்றென துளத்தே சிந்தித்தே இருக்கின்றேன் இன்றும்.

    ittakai ulakil ingnganam chiRiyEn entainin tiruppaNi viTuttE chittamvE RAkit tirintatE ilainAn terintanAL mutalitu varaiyum attanE arachE aiyanE amutE appanE ampalat tATum chittanE chivanE enRena tuLattE chintittE irukkinREn inRum.

  64. பொய்வகை மனத்தேன் என்னினும் எந்தாய் பொய்யுல காசைசற் றறியேன் நைவகை தவிரத் திருச்சிற்றம் பலத்தே நண்ணிய மெய்ப்பொருள் நமது கைவகைப் படல்எக் கணத்திலோ எனநான் கருதினேன் கருத்தினை முடிக்கச் செய்வகை அறியேன் என்செய்வேன் ஐயோ தெய்வமே என்றிருக் கின்றேன்.

    poyvakai manattEn enninum entAy poyyula kAchaichaR RaRiyEn naivakai tavirat tiruchchiRRam palattE naNNiya meypporuL namatu kaivakaip paTalek kaNattilO enanAn karutinEn karuttinai muTikkach cheyvakai aRiyEn encheyvEn aiyO teyvamE enRiruk kinREn.

  65. அன்னையே என்றன் அப்பனே திருச்சிற் றம்பலத் தமுதனே எனநான் உன்னையே கருதி உன்பணி புரிந்திங் குலகிலே கருணைஎன் பதுதான் என்னையே நிலையாய் இருத்தஉள் வருந்தி இருக்கின்றேன் என்உள மெலிவும் மன்னும்என் உடம்பின் மெலிவும்நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.

    annaiyE enRan appanE tiruchchiR Rampalat tamutanE enanAn unnaiyE karuti unpaNi purinting kulakilE karuNaien patutAn ennaiyE nilaiyAy iruttauL varunti irukkinREn enuLa melivum mannumen uTampin melivumnAn irukkum vaNNamum tiruvuLam aRiyum.

  66. பொய்படாப் பயனே பொற்சபை நடஞ்செய் புண்ணியா கண்ணினுள் மணியே கைபடாக் கனலே கறைபடா மதியே கணிப்பருங் கருணையங் கடலே தெய்வமே எனநான் நின்னையே கருதித் திருப்பணி புரிந்திருக் கின்றேன் மைபடா உள்ள மெலிவும்நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.

    poypaTAp payanE poRchapai naTanjchey puNNiyA kaNNinuL maNiyE kaipaTAk kanalE kaRaipaTA matiyE kaNipparung karuNaiyang kaTalE teyvamE enanAn ninnaiyE karutit tiruppaNi purintiruk kinREn maipaTA uLLa melivumnAn irukkum vaNNamum tiruvuLam aRiyum.

  67. தன்னிகர் அறியாத் தலைவனே தாயே தந்தையே தாங்குநற் றுணையே என்னிறு கண்ணே என்னுயிர்க் குயிரே என்னுடை எய்ப்பினில் வைப்பே உன்னுதற் கினிய வொருவனே எனநான் உன்னையே நினைத்திருக் கின்றேன் மன்னும்என் உள்ள மெலிவும்நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.

    tannikar aRiyAt talaivanE tAyE tantaiyE tAngkunaR RuNaiyE enniRu kaNNE ennuyirk kuyirE ennuTai eyppinil vaippE unnutaR kiniya voruvanE enanAn unnaiyE ninaittiruk kinREn mannumen uLLa melivumnAn irukkum vaNNamum tiruvuLam aRiyum.

  68. திருவளர் திருஅம் பலத்திலே அந்நாள் செப்பிய மெய்ம்மொழிப் பொருளும் உருவளர் திருமந் திரத்திரு முறையால் உணர்த்திய மெய்ம்மொழிப் பொருளும் கருவளர் அடியேன் உளத்திலே நின்று காட்டிய மெய்ம்மொழிப் பொருளும் மருவிஎன் உளத்தே நம்பிநான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.

    tiruvaLar tiruam palattilE annAL cheppiya meymmozhip poruLum uruvaLar tiruman tirattiru muRaiyAl uNarttiya meymmozhip poruLum karuvaLar aTiyEn uLattilE ninRu kATTiya meymmozhip poruLum maruvien uLattE nampinAn irukkum vaNNamum tiruvuLam aRiyum.

  69. உவந்தென துளத்தே உணர்த்திய எல்லாம் உறுமலை இலக்கென நம்பி நிவந்ததோள் பணைப்ப மிகஉளங் களிப்ப நின்றதும் நிலைத்தமெய்ப் பொருள்இப் பவந்தனில் பெறுதல் சத்தியம் எனவே பற்பல குறிகளால் அறிந்தே சிவந்தபொன் மலைபோல் இருந்ததும் இந்நாள் திகைப்பதும் திருவுளம் அறியும்.

    uvantena tuLattE uNarttiya ellAm uRumalai ilakkena nampi nivantatOL paNaippa mikauLang kaLippa ninRatum nilaittameyp poruLip pavantanil peRutal chattiyam enavE paRpala kuRikaLAl aRintE chivantapon malaipOl iruntatum innAL tikaippatum tiruvuLam aRiyum.

  70. ஏய்ந்தபொன் மலைமேல் தம்பத்தில் ஏறி ஏகவும் ஏகவும் நுணுகித் தேய்ந்துபோ தடியேன் பயந்தவெம் பயத்தைத் தீர்த்துமேல் ஏற்றிய திறத்தை வாய்ந்துளே கருதி மலைஎனப் பணைத்தே மனங்களிப் புற்றுமெய் இன்பம் தோய்ந்துநின் றாடிச்சுழன்றதும் இந்நாள் சுழல்வதும் திருவுளம் அறியும்.

    Eyntapon malaimEl tampattil ERi Ekavum Ekavum nuNukit tEyntupO taTiyEn payantavem payattait tIrttumEl ERRiya tiRattai vAyntuLE karuti malaienap paNaittE manangkaLip puRRumey inpam tOyntunin RATichchuzhanRatum innAL chuzhalvatum tiruvuLam aRiyum.

  71. வாட்டமோ டிருந்த சிறியனேன் தனது வாட்டமும் மாயையா திகளின் ஈட்டமும் தவிர்க்கத் திருவுளத் திரங்கி என்னைஓர் பொருள்என மதித்தே தீட்டரும் புகழ்சேர் திருவடித் துணைகள் செலுத்திய திருச்சிலம் பொலிநான் கேட்டபோ திருந்த கிளர்ச்சியும் இந்நாள் கிலேசமுந் திருவுளம் அறியும்.

    vATTamO Tirunta chiRiyanEn tanatu vATTamum mAyaiyA tikaLin ITTamum tavirkkat tiruvuLat tirangki ennaiOr poruLena matittE tITTarum pukazhchEr tiruvaTit tuNaikaL cheluttiya tiruchchilam polinAn kETTapO tirunta kiLarchchiyum innAL kilEchamun tiruvuLam aRiyum.

  72. கற்றவர் கல்லார் பிறர்பிறர் குரல்என் காதிலே கிடைத்தபோ தெல்லாம் மற்றவர் தமக்கென் உற்றதோ அவர்தம் மரபினர் உறவினர் தமக்குள் உற்றதிங் கெதுவோ என்றுளம் நடுங்கி ஓடிப்பார்த் தோடிப்பார்த் திரவும் எற்றரு பகலும் ஏங்கிநான் அடைந்த ஏக்கமுந் திருவுளம் அறியும்.

    kaRRavar kallAr piRarpiRar kuralen kAtilE kiTaittapO tellAm maRRavar tamakken uRRatO avartam marapinar uRavinar tamakkuL uRRating ketuvO enRuLam naTungki OTippArt tOTippArt tiravum eRRaru pakalum EngkinAn aTainta Ekkamun tiruvuLam aRiyum.

  73. கருணையம் பதிநங் கண்ணுள்மா மணிநம் கருத்திலே கலந்ததெள் ளமுதம் மருள்நெறி தவிர்க்கும் மருந்தெலாம் வல்ல வள்ளல்சிற் றம்பலம் மன்னும் பொருள்நிறை இன்பம் நம்மைஆண் டளித்த புண்ணியம் வருகின்ற தருணம் தருணம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும்.

    karuNaiyam patinang kaNNuLmA maNinam karuttilE kalantateL Lamutam maruLneRi tavirkkum maruntelAm valla vaLLalchiR Rampalam mannum poruLniRai inpam nammaiAN TaLitta puNNiyam varukinRa taruNam taruNamip pOten ReNNinAn irukkum tanmaiyum tiruvuLam aRiyum.

  74. இமையவர் பிரமர் நாரணர் முதலோர் எய்துதற் கரியபே ரின்பம் தமைஅறிந் தவருட் சார்ந்தபே ரொளிநம் தயாநிதி தனிப்பெருந் தந்தை அமையும்நம் உயிர்க்குத் துணைதிருப் பொதுவில் ஐயர் தாம் வருகின்ற சமயம் சமயம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும்.

    imaiyavar piramar nAraNar mutalOr eytutaR kariyapE rinpam tamaiaRin tavaruT chArntapE roLinam tayAniti tanipperun tantai amaiyumnam uyirkkut tuNaitirup potuvil aiyar tAm varukinRa chamayam chamayamip pOten ReNNinAn irukkum tanmaiyum tiruvuLam aRiyum.

  75. அடியனேன் உள்ளம் திருச்சிற்றம் பலத்தென் அமுதநின் மேல்வைத்த காதல் நெடியஏழ் கடலில் பெரிதெனக் கிந்நாள் நிகழ்கின்ற ஆவலும் விரைவும் படியஎன் தன்னால் சொலமுடி யாது பார்ப்பறப் பார்த்திருக் கின்றேன் செடியனேன் இருக்கும் வண்ணங்கள் எல்லாம் திருவுளங் கண்டதே எந்தாய்.

    aTiyanEn uLLam tiruchchiRRam palatten amutanin mElvaitta kAtal neTiyaEzh kaTalil peritenak kinnAL nikazhkinRa Avalum viraivum paTiyaen tannAl cholamuTi yAtu pArppaRap pArttiruk kinREn cheTiyanEn irukkum vaNNangkaL ellAm tiruvuLang kaNTatE entAy.

  76. பன்னிரண் டாண்டு தொடங்கிநான் இற்றைப் பகல்வரை அடைந்தவை எல்லாம் உன்னிநின் றுரைத்தால் உலப்புறா ததனால் ஒருசில உரைத்தனன் எனினும் என்னுளத் தகத்தும் புறத்தும்உட் புறத்தும் இயல்புறப் புறத்தினும் விளங்கி மன்னிய சோதி யாவும்நீ அறிந்த வண்ணமே வகுப்பதென் நினக்கே.

    panniraN TANTu toTangkinAn iRRaip pakalvarai aTaintavai ellAm unninin RuraittAl ulappuRA tatanAl oruchila uraittanan eninum ennuLat takattum puRattumuT puRattum iyalpuRap puRattinum viLangki manniya chOti yAvumnI aRinta vaNNamE vakuppaten ninakkE.

  77. இதுவரை அடியேன் அடைந்தவெம் பயமும் இடர்களும் துன்பமும் எல்லாம் பொதுவளர் பொருளே பிறர்பொருட் டல்லால் புலையனேன் பொருட்டல இதுநின் மதுவளர் மலர்ப்பொற் பதத்துணை அறிய வகுத்தனன் அடியனேன் தனக்கே எதிலும்ஓர் ஆசை இலைஇலை பயமும் இடரும்மற் றிலைஇலை எந்தாய்.

    ituvarai aTiyEn aTaintavem payamum iTarkaLum tunpamum ellAm potuvaLar poruLE piRarporuT TallAl pulaiyanEn poruTTala itunin matuvaLar malarppoR patattuNai aRiya vakuttanan aTiyanEn tanakkE etilumOr Achai ilaiilai payamum iTarummaR Rilaiilai entAy.

  78. என்னள விலையே என்னினும் பிறர்பால் எய்திய கருணையால் எந்தாய் உன்னுறு பயமும் இடருமென் தன்னை உயிரொடும் தின்கின்ற தந்தோ இன்னும்என் றனக்கிவ் விடரொடு பயமும் இருந்திடில் என்உயிர் தரியா தன்னையும் குருவும் அப்பனும் ஆன அமுதனே அளித்தருள் எனையே.

    ennaLa vilaiyE enninum piRarpAl eytiya karuNaiyAl entAy unnuRu payamum iTarumen tannai uyiroTum tinkinRa tantO innumen Ranakkiv viTaroTu payamum iruntiTil enuyir tariyA tannaiyum kuruvum appanum Ana amutanE aLittaruL enaiyE.

  79. பயத்தொடு துயரும் மறைப்புமா மாயைப் பற்றொடு வினையும்ஆ ணவமும் கயத்தவன் மயக்கும் மருட்சியும் எனது கருத்திலே இனிஒரு கணமும் வியத்திடத் தரியேன் இவையெலாந் தவிர்த்துன் மெய்யருள் அளித்திடல் வேண்டும் உயத்தரு வாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடு கின்றனன் இன்றே.

    payattoTu tuyarum maRaippumA mAyaip paRRoTu vinaiyumA Navamum kayattavan mayakkum maruTchiyum enatu karuttilE inioru kaNamum viyattiTat tariyEn ivaiyelAn tavirttun meyyaruL aLittiTal vENTum uyattaru vAyEl irukkinREn ilaiyEl uyirviTu kinRanan inRE.

  80. ஐயநான் பயத்தால் துயரினால் அடைந்த அடைவைஉள் நினைத்திடுந் தோறும் வெய்யதீ மூட்டிவிடுதல் ஒப் பதுநான் மிகஇவற் றால்இளைத் திட்டேன் வையமேல் இனிநான் இவைகளால் இளைக்க வசமிலேன் இவைஎலாம் தவிர்த்தே உய்யவைப் பாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடு கின்றனன் இன்றே.

    aiyanAn payattAl tuyarinAl aTainta aTaivaiuL ninaittiTun tORum veyyatI mUTTiviTutal op patunAn mikaivaR RAliLait tiTTEn vaiyamEl ininAn ivaikaLAl iLaikka vachamilEn ivaielAm tavirttE uyyavaip pAyEl irukkinREn ilaiyEl uyirviTu kinRanan inRE.

  81. பயந்துயர் இடர்உள் மருட்சியா தியஇப் பகைஎலாம் பற்றறத் தவிர்த்தே நயந்தநின் அருளார் அமுதளித் தடியேன் நாடிஈண் டெண்ணிய எல்லாம் வியந்திடத் தருதல் வேண்டும்ஈ தெனது விண்ணப்பம் நின்திரு உளத்தே வயந்தரக் கருதித் தயவுசெய் தருள்க வள்ளலே சிற்சபை வாழ்வே.

    payantuyar iTaruL maruTchiyA tiyaip pakaielAm paRRaRat tavirttE nayantanin aruLAr amutaLit taTiyEn nATiIN TeNNiya ellAm viyantiTat tarutal vENTumI tenatu viNNappam nintiru uLattE vayantarak karutit tayavuchey taruLka vaLLalE chiRchapai vAzhvE.

  82. என்னுயிர் காத்தல் கடன்உனக் கடியேன் இசைத்தவிண் ணப்பம்ஏற் றருளி உன்னுமென் உள்ளத் துறும்பயம் இடர்கள் உறுகண்மற் றிவைஎலாம் ஒழித்தே நின்னருள் அமுதம் அளித்தென தெண்ணம் நிரப்பியாட் கொள்ளுதல் வேண்டும் மன்னுபொற் சபையில் வயங்கிய மணியே வள்ளலே சிற்சபை வாழ்வே.

    ennuyir kAttal kaTanunak kaTiyEn ichaittaviN NappamER RaruLi unnumen uLLat tuRumpayam iTarkaL uRukaNmaR RivaielAm ozhittE ninnaruL amutam aLittena teNNam nirappiyAT koLLutal vENTum mannupoR chapaiyil vayangkiya maNiyE vaLLalE chiRchapai vAzhvE.

  83. பரிக்கிலேன் பயமும் இடரும்வெந் துயரும் பற்றறத் தவிர்த்தருள் இனிநான் தரிக்கிலேன் சிறிதும்தரிக்கிலேன் உள்ளம்தரிக்கிலேன் தரிக்கிலேன் அந்தோ புரிக்கிலே சத்தை அகற்றிஆட் கொள்ளும் பொற்சபை அண்ணலே கருணை வரிக்கணேர் மடந்தை பாகனே சிவனே வள்ளலே சிற்சபை வாழ்வே.

    parikkilEn payamum iTarumven tuyarum paRRaRat tavirttaruL ininAn tarikkilEn chiRitumtarikkilEn uLLamtarikkilEn tarikkilEn antO purikkilE chattai akaRRiAT koLLum poRchapai aNNalE karuNai varikkaNEr maTantai pAkanE chivanE vaLLalE chiRchapai vAzhvE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout