திருவருட்பா  129. அக்கச்சி

வானத்தின்  மீது  மயிலாடக்  கண்டேன் 
மயில்குயில்  ஆச்சுத  டி  -  அக்கச்சி 
மயில்குயில்  ஆச்சுத  டி. 
1
துள்ளலை  விட்டுத்  தொடங்கினேன்  மன்றாடும் 
வள்ளலைக்  கண்டேன  டி  -  அக்கச்சி 
வள்ளலைக்  கண்டேன  டி. 
2
சாதி  சமயச்  சழக்கைவிட்  டேன்அருட் 
சோதியைக்  கண்டேன  டி  -  அக்கச்சி 
சோதியைக்  கண்டேன  டி. 
3
பொய்யை  ஒழித்துப்  புறப்பட்டேன்  மன்றாடும் 
ஐயரைக்  கண்டேன  டி  -  அக்கச்சி 
ஐயரைக்  கண்டேன  டி. 
4

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com