திருவருட்பா  122. என்ன புண்ணியம் செய்தேனோ

என்ன  புண்ணியம்  செய்தே  னோ  -  அம்  மாநான் 
என்ன  புண்ணியம்  செய்தே  னோ. 
1
மன்னர்நாதர்  அம்பலவர்  வந்தார்வந்தார்  என்றுதிருச் 
சின்னநாதம்  என்னிரண்டு  செவிகளினுள்  சொல்கின்றதே.  என்ன 
2
பொருள்நான்  முகனுமாலும்  தெருள்நான்ம  றையுநாளும் 
போற்றும்சிற்  றம்பலத்தே  ஏற்றும  ணிவிளக்காய் 
அருள்நாட  கம்புரியும்  கருணாநி  தியர்உன்னை 
ஆளவந்தார்  வந்தார்என்றெக்  காளநாதம்  சொல்கின்றதே.  என்ன 
3
பாடியநல்  லோர்தமக்கே  நாடியதெல்  லாம்அளிப்பார் 
பத்திவலை  யுட்படுவார்  சத்தியர்நித்  தியர்மன்றில் 
ஆடியபொற்  பாதர்வேதம்  தேடியசிற்  போதர்உன்னை 
அணையவந்தார்  வந்தார்என்றே  இணையில்நாதம்  சொல்கின்றதே.  என்ன 
4
எந்தரமுட்  கொண்டஞான  சுந்தரர்என்  மணவாளர் 
எல்லாம்செய்  வல்லசித்தர்  நல்லோர்  உளத்தமர்ந்தார் 
மந்திரமா  மன்றில்இன்பம்  தந்தநட  ராஜர்உன்னை 
மருவவந்தார்  வந்தார்என்று  தெருவில்நாதம்  சொல்கின்றதே.  என்ன 
5
ஓதிஎந்த  விதத்தாலும்  வேதியனும்  தேர்வரியார் 
ஓங்கார  பஞ்சகத்தே  பாங்காக  நடிக்கின்றார் 
ஆதியந்தம்  காண்பரிய  ஜோதிசுயஞ்  ஜோதிஉன்னோ 
டாடவந்தார்  வந்தார்என்றே  நாடிநாதம்  சொல்கின்றதே.  என்ன 
6
அற்புதப்பே  ரழகாளர்  சொற்பதம்  கடந்துநின்றார் 
அன்பரெலாம்  தொழமன்றில்  இன்பநடம்  புரிகின்றார் 
சிற்பரர்எல்  லாமும்வல்ல  தற்பரர்  விரைந்திங்குன்னைச் 
சேரவந்தார்  வந்தார்என்றோங்  காரநாதம்  சொல்கின்றதே.  என்ன 
7
ஆரணர்நா  ரணர்எல்லாம்  பூரணர்என்  றேத்துகின்ற 
ஐயர்திரு  வம்பலவர்  மெய்யர்எல்லாம்  வல்லசித்தர் 
காரணமும்  காரியமும்  தாரணிநீ  யாகஉன்னைக் 
காணவந்தார்  வந்தார்என்றே  வேணுநாதம்  சொல்கின்றதே.  என்ன 
8
பாகார்மொழி  யாள்சிவ  மாகாம  வல்லிநாளும் 
பார்த்தாட  மணிமன்றில்  கூத்தாடு  கின்றசித்தர் 
வாகாஉனக்கே  என்றும்  சாகா  வரங்கொடுக்க 
வலியவந்தார்  வந்தார்என்றே  வலியநாதம்  சொல்கின்றதே. 
9
என்ன  புண்ணியம்  செய்தே  னோ  -  அம்  மாநான் 
என்ன  புண்ணியம்  செய்தே  னோ. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com