திருவருட்பா  48. தேவ ஆசிரியம்

யாரை  யுங்கடு  விழியினால்  மயக்குறும்  ஏந்திழை  அவர்வெந்நீர்த் 
தாரை  தன்னையும்  விரும்பிவீழ்த்  தாழ்ந்தஎன்  தனக்கருள்  உண்டேயோ 
காரை  முட்டிஅப்  புறம்செலும்  செஞ்சுடர்க்  கதிரவன்  இவர்ஆழித் 
தேரை  எட்டுறும்  பொழில்செறி  தணிகையில்  தேவர்கள்  தொழும்தேவே. 
1
மறிக்கும்  வேற்கணார்  மலக்குழி  ஆழ்ந்துழல்  வன்தசை  அறும்என்பைக் 
கறிக்கும்  நாயினும்  கடையநாய்க்  குன்திருக்  கருணையும்  உண்டேயோ 
குறிக்கும்  வேய்மணி  களைக்கதிர்  இரதவான்  குதிரையைப்  புடைத்தெங்கும் 
தெறிக்கும்  நல்வளம்  செறிதிருத்  தணிகையில்  தேவர்கள்  தொழும்தேவே. 
2
பிரியம்  மேயவன்  மடந்தையர்  தங்களைப்  பிடித்தலைத்  திடுவஞ்சக் 
கரிய  பேயினும்  பெரியபேய்க்  குன்திருக்  கருணையும்  உண்டேயோ 
அரிய  மால்அயன்  இந்திரன்  முதலினோர்  அமர்உல  கறிந்தப்பால் 
தெரிய  ஓங்கிய  சிகரிசூழ்  தணிகையில்  தேவர்கள்  தொழும்தேவே. 
3

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com