திருமூலர் அருளிய திருமந்திரம்
6. கொல்லாமை

முதல் தந்திரம் பாடல் 197–198 (2 பாடல்கள்)

பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே.

கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களைவல்லடிக் காரர் வலிக்கயிற்றாற் கட்டிச்செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடைநில்லிடும் என்று நிறுத்துமவர் தாமே.

திருமந்திரம் பாடல் #197

1 / 2

0:000:00
6. கொல்லாமைபாடல் 197

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout