திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 197

முதல் தந்திரம்6. கொல்லாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே.

உரை

குருவாக இருந்து இறைவனின் திருவடிகளைப் பற்றிக்கொள்ள வழிகாட்டும் இறைவனுக்குச் செய்யும் பூஜைக்குப் பலவித மலர்கள் உள்ளன. உயிர்களின் உள்ளத்தால் கிடைக்கும் மலர்களும் உள்ளன. பிற உயிர்களைக் கொல்லாமை, ஐந்து புலன்களையும் அடக்கும் பொறியடக்கம், பொறுமை, இறைவனை அடையச் சிந்திக்கும் அறிவு, உண்மையை மட்டுமே பேசும் வாய்மை, உண்மையான தவம், அன்பு ஆகியவையே அந்த மலர்கள்; இவற்றுள் மிகச் சிறந்த மலர் கொல்லாமையே ஆகும். இறைவனைப் பற்றிய எண்ணத்திலிருந்து சிறிதும் மாறாத எண்ணமே இறைவனுக்குச் செய்யும் பூஜைக்கு மிகச் சிறந்த தீபமாகும். இவை அனைத்தையும் உணர்ந்து செயல்படும் உயிர் சென்று அமரும் இடம் தலை உச்சியில் உள்ள சகஸ்ரதளமாகும். அங்கே அமர்ந்த உயிர் இறைவனையே அடைந்து பேரின்பம் பெறுகின்றது.

வரி வாரியாக

  • வரி 1

    குருவாக இருந்து இறைவனின் திருவடிகளைப் பற்றிக்கொள்ள வழிகாட்டும் இறைவனுக்குச் செய்யும் பூஜைக்குப் பலவித மலர்கள் உள்ளன. உயிர்களின் உள்ளத்தால் கிடைக்கும் மலர்களும் உள்ளன.

  • வரி 2

    பிற உயிர்களைக் கொல்லாமை, ஐந்து புலன்களையும் அடக்கும் பொறியடக்கம், பொறுமை, இறைவனை அடையச் சிந்திக்கும் அறிவு, உண்மையை மட்டுமே பேசும் வாய்மை, உண்மையான தவம், அன்பு ஆகியவையே அந்த மலர்கள்; இவற்றுள் மிகச் சிறந்த மலர் கொல்லாமையே ஆகும்.

  • வரி 3

    இறைவனைப் பற்றிய எண்ணத்திலிருந்து சிறிதும் மாறாத எண்ணமே இறைவனுக்குச் செய்யும் பூஜைக்கு மிகச் சிறந்த தீபமாகும்.

  • வரி 4

    இவை அனைத்தையும் உணர்ந்து செயல்படும் உயிர் சென்று அமரும் இடம் தலை உச்சியில் உள்ள சகஸ்ரதளமாகும். அங்கே அமர்ந்த உயிர் இறைவனையே அடைந்து பேரின்பம் பெறுகின்றது.

திருமந்திரம் பாடல் #197

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout