தொடர்ந்து படிக்கread this section continuously
அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின்செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொருதவ்விக்கொ டுஉண்மின் தலைப்பட்ட போதே.
உரைmeaning
பொய்யும் புரட்டும் பேசி அறவழிகளை அழிக்காதீர்கள். பொறாமையும் கோபமும் கொண்டு பிறரின் பொருளைப் பிடுங்கிக்கொள்ளாமல் இருங்கள். எண்ணமும் செயலும் சிறப்புடையதாக மாறி, வாழ்வு சிறந்திருக்கும்போது, உணவு உண்ணும்போது யாராவது வந்து பசிக்கிறது என்றால், ஒரு கைப்பிடி அளவாவது உணவை அவருக்கு அளித்தபின் உண்ணுங்கள். இப்படியெல்லாம் வாழ்ந்தால், உடல் அழிந்து உயிர் பிரிந்தாலும், இறைவனை அடைந்து பேரின்பம் அடையலாம்.
Do not speak falsehood and deceit and destroy the paths of righteousness. Do not, out of envy and anger, seize the belongings of others. When your thought and action have both become excellent and your life is flourishing, if someone comes to you hungry while you are eating, give them at least a handful of your food before you eat. If you live in this way, then even when the body perishes and the soul departs, you can reach God and attain supreme bliss.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பொய்யும் புரட்டும் பேசி அறவழிகளை அழிக்காதீர்கள்.
Do not speak falsehood and deceit and destroy the paths of righteousness.
- வரி 2Line 2
பொறாமையும் கோபமும் கொண்டு பிறரின் பொருளைப் பிடுங்கிக்கொள்ளாமல் இருங்கள்.
Do not, out of envy and anger, seize the belongings of others.
- வரி 3Line 3
எண்ணமும் செயலும் சிறப்புடையதாக மாறி, வாழ்வு சிறந்திருக்கும்போது, உணவு உண்ணும்போது யாராவது வந்து பசிக்கிறது என்றால்,
When your thought and action have both become excellent and your life is flourishing, if someone comes to you hungry while you are eating,
- வரி 4Line 4
ஒரு கைப்பிடி அளவாவது உணவை அவருக்கு அளித்தபின் உண்ணுங்கள். இப்படியெல்லாம் வாழ்ந்தால், உடல் அழிந்து உயிர் பிரிந்தாலும், இறைவனை அடைந்து பேரின்பம் அடையலாம்.
give them at least a handful of your food before you eat. If you live in this way, then even when the body perishes and the soul departs, you can reach God and attain supreme bliss.
திருமந்திரம் பாடல் #196





