திருவருட்பா · 2அருட்பெருஞ்ஜோதி அகவல்

Arutperunjoti Akaval Audio

1 / 3

0:000:00
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் சோதி
1
அருட்சிவ நெறிசா ரருட்பெரு நிலைவாழ்
அருட்சிவ பதியா மருட்பெருஞ் ஜோதி
2
ஆகம முடிமேல் ஆரண முடிமேல்
ஆகநின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
3
இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்
அகமறப் பொருந்திய வருட்பெருஞ் ஜோதி
4
ஈனமின் றிகபரத் திரண்டின்மேற் பொருளாய்
ஆனலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
5
உரைமனங் கடந்த வொருபெரு வெளிமேல்
அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ் ஜோதி
6
ஊக்கமு முணர்ச்சியு மொளிதரு மாக்கையும்
ஆக்கமு மருளிய வருட்பெருஞ் ஜோதி
7
எல்லையில் பிறப்பெனு மிருங்கடல் கடத்தியென்
அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
8
ஏறா நிலைமிசை யேற்றியென் றனக்கே
ஆறாறு காட்டிய வருட்பெருஞ் ஜோதி
9
ஐயமுந் திரிபு மறுத்தென துடம்பினுள்
ஐயமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
10
ஒன்றென விரண்டென வொன்றிரண் டெனவிவை
யன்றென விளங்கிய வருட்பெருஞ் ஜோதி
11
ஓதா துணர்ந்திட வொளியளித் தெனக்கே
ஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி
12
ஔவிய மாதியோ ராறுந் தவிர்த்தபேர்
அவ்வியல் வழுத்து மருட்பெருஞ் ஜோதி
13
திருநிலைத் தனிவெளி சிவவெளி யெனுமோர்
அருள்வெளிப் பதிவள ரருட்பெருஞ் ஜோதி
14
சுத்தசன் மார்க்க சுகத்தனி வெளியெனும்
அத்தகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
15
சுத்தமெய்ஞ் ஞான சுகோதய வெளியெனு
அத்து விதச்சபை யருட்பெருஞ் ஜோதி
16
தூயக லாந்த சுகந்தரு வெளியெனும்
ஆயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
17
ஞானயோ காந்த நடத்திரு வெளியெனும்
ஆனியில் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
18
விமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளியெனும்
அமலசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
19
பெரியநா தாந்தப் பெருநிலை வெளியெனும்
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி
20
சுத்தவே தாந்தத் துரியமேல் வெளியெனும்
அத்தகு சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
21
சுத்தசித் தாந்த சுகப்பெரு வெளியெனும்
அத்தனிச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
22
தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளியெனும்
அகர நிலைப்பதி யருட்பெருஞ் ஜோதி
23
தத்துவா தீத தனிப்பொருள் வெளியெனும்
அத்திரு வம்பலத் தருட்பெருஞ் ஜோதி
24
சச்சிதா னந்தத் தனிப்பர வெளியெனும்
அச்சிய லம்பலத் தருட்பெருஞ் ஜோதி
25
சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும்
ஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி
26
காரண காரியங் காட்டிடு வெளியெனும்
ஆரணச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
27
ஏக மனேக மெனப்பகர் வெளியெனும்
ஆகமச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
28
வேதா கமங்களின் விளைவுகட் கெல்லாம்
ஆதார மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
29
என்றா தியசுடர்க் கியனிலை யாயது
வன்றாந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி
30
சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்
அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி
31
முச்சுடர் களுமொளி முயங்குற வளித்தருள்
அச்சுட ராஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
32
துரியமுங் கடந்த சுகபூ ரணந்தரும்
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி
33
எவ்வகைச் சுகங்களு மினிதுற வளித்தருள்
அவ்வகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
34
இயற்கையுண் மையதா யியற்கையின் பமுமாம்
அயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
35
சாக்கிரா தீதத் தனிவெளி யாய்நிறை
வாக்கிய சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
36
சுட்டுதற் கரிதாஞ் சுகாதீத வெளியெனும்
அட்டமேற் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
37
நவந்தவிர் நிலைகளு நண்ணுமோர் நிலையாய்
அவந்தவிர் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
38
உபயபக் கங்களு மொன்றெனக் காட்டிய
அபயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
39
சேகர மாம்பல சித்தி நிலைக்கெலாம்
ஆகர மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
40
மனாதிகட் கரிய மதாதீத வெளியாம்
அனாதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
41
ஓதிநின் றுணர்ந்துணர்ந் துணர்தற் கரிதாம்
ஆதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
42
வாரமு மழியா வரமுந் தருந்திரு
வாரமு தாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
43
இழியாப் பெருநல மெல்லா மளித்தருள்
அழியாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
44
கற்பம் பலபல கழியினு மழிவுறா
அற்புதந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
45
எனைத்துந் துன்பிலா வியலளித் தெண்ணிய
வனைத்துந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
46
பாணிப் பிலதாய்ப் பரவினோர்க் கருள்புரி
ஆணிப்பொ னம்பலத் தருட்பெருஞ் ஜோதி
47
எம்பல மெனத்தொழு தேத்தினோர்க் கருள்புரி
அம்பலத் தாடல்செய் யருட்பெருஞ் ஜோதி
48
தம்பர ஞான சிதம்பர மெனுமோர்
அம்பரத் தோங்கிய அருட்பெருஞ் ஜோதி
49
எச்சபை பொதுவென வியம்பின ரறிஞர்கள்
அச்சபை யிடங்கொளு மருட்பெருஞ் ஜோதி
50
  1. வாடுத னீக்கிய மணிமன் றிடையே ஆடுதல் வல்ல வருட்பெருஞ் ஜோதி

    vATuta nIkkiya maNiman RiTaiyE ATutal valla varuTperunj jOti

  2. நாடகத் திருச்செய னவிற்றிடு மொருபே ராடகப் பொதுவொளி ரருட்பெருஞ் ஜோதி

    nATakat tirujjeya naviRRiTu morupE rATakap potuvoLi raruTperunj jOti

  3. கற்பனை முழுவதும் கடந்தொளி தருமோர் அற்புதச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

    kaRpanai muzhuvatum kaTantoLi tarumOr aRputaj jiRjapai yaruTperunj jOti

  4. ஈன்றநற் றாயினு மினிய பெருந்தய வான்றசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி

    InRanaR RAyinu miniya peruntaya vAnRajiR japaiyi laruTperunj jOti

  5. இன்புறு நானுளத் தெண்ணியாங் கெண்ணியாங் கன்புறத் தருசபை யருட்பெருஞ் ஜோதி

    inpuRu nAnuLat teNNiyAng keNNiyAng kanpuRat tarujapai yaruTperunj jOti

  6. எம்மையு மென்னைவிட் டிறையும் பிரியா தம்மையப் பனுமா மருட்பெருஞ் ஜோதி

    emmaiyu mennaiviT TiRaiyum piriyA tammaiyap panumA maruTperunj jOti

  7. பிரிவுற் றறியாப் பெரும்பொரு ளாயென் னறிவுக் கறிவா மருட்பெருஞ் ஜோதி

    pirivuR RaRiyAp perumporu LAyen naRivuk kaRivA maruTperunj jOti

  8. சாதியு மதமுஞ் சமயமுங் காணா ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி

    jAtiyu matamunj jamayamung kANA Atiya nAtiyA maruTperunj jOti

  9. தநுகர ணாதிக டாங்கடந் தறியுமோர் அநுபவ மாகிய வருட்பெருஞ் ஜோதி

    tanukara NAtika TAngkaTan taRiyumOr anupava mAkiya varuTperunj jOti

  10. உனுமுணர் வுணர்வா யுணர்வெலாங் கடந்த அநுபவா தீத வருட்பெருஞ் ஜோதி

    unumuNar vuNarvA yuNarvelAng kaTanta anupavA tIta varuTperunj jOti

  11. பொதுவுணர் வுணரும் போதலாற் பிரித்தே அதுவெனிற் றோன்றா வருட்பெருஞ் ஜோதி

    potuvuNar vuNarum pOtalAR pirittE atuveniR ROnRA varuTperunj jOti

  12. உளவினி லறிந்தா லொழியமற் றளக்கின் அளவினி லளவா வருட்பெருஞ் ஜோதி

    uLavini laRintA lozhiyamaR RaLakkin aLavini laLavA varuTperunj jOti

  13. என்னையும் பணிகொண் டிறவா வரமளித் தன்னையி லுவந்த வருட்பெருஞ் ஜோதி

    ennaiyum paNikoN TiRavA varamaLit tannaiyi luvanta varuTperunj jOti

  14. ஓதியோ தாம லுறவெனக் களித்த ஆதியீ றில்லா வருட்பெருஞ் ஜோதி

    OtiyO tAma luRavenak kaLitta AtiyI RillA varuTperunj jOti

  15. படியடி வான்முடி பற்றினுந் தோற்றா அடிமுடி யெனுமோ ரருட்பெருஞ் ஜோதி

    paTiyaTi vAnmuTi paRRinun tORRA aTimuTi yenumO raruTperunj jOti

  16. பவனத் தினண்டப் பரப்பினெங் கெங்கும் அவனுக் கவனா மருட்பெருஞ் ஜோதி

    pavanat tinaNTap parappineng kengkum avanuk kavanA maruTperunj jOti

  17. திவளுற் றவண்டத் திரளினெங் கெங்கும் அவளுக் கவளா மருட்பெருஞ் ஜோதி

    tivaLuR RavaNTat tiraLineng kengkum avaLuk kavaLA maruTperunj jOti

  18. மதனுற்ற வண்ட வரைப்பினெங் கெங்கும் அதனுக் கதுவா மருட்பெருஞ் ஜோதி

    matanuRRa vaNTa varaippineng kengkum atanuk katuvA maruTperunj jOti

  19. எப்பாலு மாய்வெளி யெல்லாங் கடந்துமேல் அப்பாலு மாகிய வருட்பெருஞ் ஜோதி

    eppAlu mAyveLi yellAng kaTantumEl appAlu mAkiya varuTperunj jOti

  20. வல்லதா யெல்லா மாகியெல் லாமும் அல்லதாய் விளங்கு மருட்பெருஞ் சோதி

    vallatA yellA mAkiyel lAmum allatAy viLangku maruTperunj jOti

  21. எப்பொருள் மெய்ப்பொரு ளென்பர்மெய் கண்டோர் அப்பொரு ளாகிய அருட்பெருஞ் ஜோதி

    epporuL meypporu Lenparmey kaNTOr apporu LAkiya aruTperunj jOti

  22. தாங்ககி லாண்ட சராசர நிலைநின் றாங்குற விளங்கு மருட்பெருஞ் ஜோதி

    tAngkaki lANTa jarAjara nilainin RAngkuRa viLangku maruTperunj jOti

  23. சத்தர்க ளெல்லாந் தழைத்திட வகம்புறத் தத்திசை விளங்கு மருட்பெருஞ் ஜோதி

    jattarka LellAn tazhaittiTa vakampuRat tattijai viLangku maruTperunj jOti

  24. சத்திக ளெல்லாந் தழைக்கவெங் கெங்கும் அத்தகை விளங்கு மருட்பெருஞ் ஜோதி

    jattika LellAn tazhaikkaveng kengkum attakai viLangku maruTperunj jOti

  25. முந்துறு மைந்தொழின் மூர்த்திகள் பலர்க்கும் ஐந்தொழி லளிக்கு மருட்பெருஞ் ஜோதி

    muntuRu maintozhin mUrttikaL palarkkum aintozhi laLikku maruTperunj jOti

  26. பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினுஞ் சிறிதாய் அரிதினு மரிதா மருட்பெருஞ் ஜோதி

    peritinum peritAyj jiRitinunj jiRitAy aritinu maritA maruTperunj jOti

  27. காட்சியுங் காணாக் காட்சியு மதுதரும் ஆட்சியு மாகிய வருட்பெருஞ் ஜோதி

    kATjiyung kANAk kATjiyu matutarum ATjiyu mAkiya varuTperunj jOti

  28. இன்புறு சித்திக ளெல்லாம் புரிகவென் றன்புட னெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

    inpuRu jittika LellAm purikaven RanpuTa nenakkaru LaruTperunj jOti

  29. இறவா வரமளித் தென்னைமே லேற்றிய அறவாழி யாந்தனி யருட்பெருஞ் ஜோதி

    iRavA varamaLit tennaimE lERRiya aRavAzhi yAntani yaruTperunj jOti

  30. நானந்த மில்லா நலம்பெற வெனக்கே ஆனந்த நல்கிய வருட்பெருஞ் ஜோதி

    nAnanta millA nalampeRa venakkE Ananta nalkiya varuTperunj jOti

  31. எண்ணிய வெண்ணியாங் கியற்றுக வென்றெனை யண்ணியுள் ளோங்கு மருட்பெருஞ் ஜோதி

    eNNiya veNNiyAng kiyaRRuka venRenai yaNNiyuL LOngku maruTperunj jOti

  32. மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீயது வாயினை யென்றரு ளருட்பெருஞ் ஜோதி

    mEyinai meypporuL viLangkinai nIyatu vAyinai yenRaru LaruTperunj jOti

  33. எண்ணிற் செழுந்தே னினியதெள் ளமுதென அண்ணித் தினிக்கு மருட்பெருஞ் ஜோதி

    eNNiR jezhuntE niniyateL Lamutena aNNit tinikku maruTperunj jOti

  34. சிந்தையிற் றுன்பொழி சிவம்பெறு கெனத்தொழி லைந்தையு மெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

    jintaiyiR Runpozhi jivampeRu kenattozhi laintaiyu menakkaru LaruTperunj jOti

  35. எங்கெங் கிருந்துயி ரேதெது வேண்டினும் அங்கங் கிருந்தரு ளருட்பெருஞ் ஜோதி

    engkeng kiruntuyi rEtetu vENTinum angkang kiruntaru LaruTperunj jOti

  36. சகமுதற் புறப்புறந் தங்கிய வகப்புறம் அகம்புற முற்றுமா மருட்பெருஞ் ஜோதி

    jakamutaR puRappuRan tangkiya vakappuRam akampuRa muRRumA maruTperunj jOti

  37. சிகரமும் வகரமுஞ் சேர்தனி யுகரமும் அகரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி

    jikaramum vakaramunj jErtani yukaramum akaramu mAkiya varuTperunj jOti

  38. உபரச வேதியி னுபயமும் பரமும் அபரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி

    uparaja vEtiyi nupayamum paramum aparamu mAkiya varuTperunj jOti

  39. மந்தண மிதுவென மறுவிலா மதியால் அந்தணர் வழுத்து மருட்பெருஞ் ஜோதி

    mantaNa mituvena maRuvilA matiyAl antaNar vazhuttu maruTperunj jOti

  40. எம்புயக் கனியென வெண்ணுவா ரிதய வம்புயத் தமர்ந்த வருட்பெருஞ் ஜோதி

    empuyak kaniyena veNNuvA ritaya vampuyat tamarnta varuTperunj jOti

  41. செடியறுத் தேதிட தேகமும் போகமும் அடியருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி

    jeTiyaRut tEtiTa tEkamum pOkamum aTiyaruk kEtaru maruTperunj jOti

  42. துன்பறுத் தொருசிவ துரிய சுகந்தனை அன்பருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி

    tunpaRut torujiva turiya jukantanai anparuk kEtaru maruTperunj jOti

  43. பொதுவது சிறப்பது புதியது பழயதென் றதுவது வாய்த்திக ழருட்பெருஞ் ஜோதி

    potuvatu jiRappatu putiyatu pazhayaten Ratuvatu vAyttika zharuTperunj jOti

  44. சேதனப் பெருநிலை திகழ்தரு மொருபரை யாதனத் தோங்கிய வருட்பெருஞ் ஜோதி

    jEtanap perunilai tikazhtaru moruparai yAtanat tOngkiya varuTperunj jOti

  45. ஓமயத் திருவுரு வுவப்புட னளித்தெனக் காமயத் தடைதவி ரருட்பெருஞ் ஜோதி

    Omayat tiruvuru vuvappuTa naLittenak kAmayat taTaitavi raruTperunj jOti

  46. எப்படி யெண்ணிய தென்கருத் திங்கெனக் கப்படி யருளிய வருட்பெருஞ் ஜோதி

    eppaTi yeNNiya tenkarut tingkenak kappaTi yaruLiya varuTperunj jOti

  47. எத்தகை விழைந்தன வென்மன மிங்கெனக் கத்தகை யருளிய வருட்பெருஞ் ஜோதி

    ettakai vizhaintana venmana mingkenak kattakai yaruLiya varuTperunj jOti

  48. இங்குறத் திரிந்துள மிளையா வகையெனக் கங்கையிற் கனியா மருட்பெருஞ் ஜோதி

    ingkuRat tirintuLa miLaiyA vakaiyenak kangkaiyiR kaniyA maruTperunj jOti

  49. பாருயப் புரிகெனப் பணித்தெனக் கருளியென் ஆருயிர்க் குள்ளொளி ரருட்பெருஞ் ஜோதி

    pAruyap purikenap paNittenak karuLiyen Aruyirk kuLLoLi raruTperunj jOti

  50. தேவியுற் றொளிர்தரு திருவுரு வுடனென தாவியிற் கலந்தொளி ரருட்பெருஞ் ஜோதி

    tEviyuR RoLirtaru tiruvuru vuTanena tAviyiR kalantoLi raruTperunj jOti

  51. எவ்வழி மெய்வழி யென்பவே தாகமம் அவ்வழி யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

    evvazhi meyvazhi yenpavE tAkamam avvazhi yenakkaru LaruTperunj jOti

  52. வையமும் வானமும் வாழ்த்திட வெனக்கருள் ஐயறி வளித்த வருட்பெருஞ் ஜோதி

    vaiyamum vAnamum vAzhttiTa venakkaruL aiyaRi vaLitta varuTperunj jOti

  53. சாமா றனைத்துந் தவிர்த்திங் கெனக்கே ஆமா றருளிய வருட்பெருஞ் ஜோதி

    jAmA Ranaittun tavirtting kenakkE AmA RaruLiya varuTperunj jOti

  54. சத்திய மாஞ்சிவ சத்தியை யீந்தெனக் கத்திறல் வளர்க்கு மருட்பெருஞ் ஜோதி

    jattiya mAnjjiva jattiyai yIntenak kattiRal vaLarkku maruTperunj jOti

  55. சாவா நிலையிது தந்தன முனக்கே ஆவா வெனவரு ளருட்பெருஞ் ஜோதி

    jAvA nilaiyitu tantana munakkE AvA venavaru LaruTperunj jOti

  56. சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி

    jAtiyu matamunj jamayamum poyyena Atiyi luNarttiya varuTperunj jOti

  57. மயர்ந்திடேல் சிறிது மனந்தளர்ந் தஞ்சேல் அயர்ந்திடே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி

    mayarntiTEl jiRitu manantaLarn tanjjEl ayarntiTE lenRaru LaruTperunj jOti

  58. தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல் ஆசறத் தெரித்த வருட்பெருஞ் ஜோதி

    tEjuRat tikazhtaru tiruneRip poruLiyal AjaRat teritta varuTperunj jOti

  59. காட்டிய வுலகெலாங் கருணையாற் சித்தியின் ஆட்டியல் புரியு மருட்பெருஞ் ஜோதி

    kATTiya vulakelAng karuNaiyAR jittiyin ATTiyal puriyu maruTperunj jOti

  60. எங்குல மெம்மின மென்பதொண் ணூற்றா றங்குல மென்றரு ளருட்பெருஞ் ஜோதி

    engkula memmina menpatoN NURRA Rangkula menRaru LaruTperunj jOti

  61. எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள் அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி

    emmata memmiRai yenpa vuyirttiraL ammata menRaru LaruTperunj jOti

  62. கூறிய கருநிலை குலவிய கீழ்மேல் ஆறிய லெனவுரை யருட்பெருஞ் ஜோதி

    kURiya karunilai kulaviya kIzhmEl ARiya lenavurai yaruTperunj jOti

  63. எண்டர முடியா திலங்கிய பற்பல அண்டமு நிறைந்தொளி ரருட்பெருஞ் ஜோதி

    eNTara muTiyA tilangkiya paRpala aNTamu niRaintoLi raruTperunj jOti

  64. சாருயிர்க் கெல்லாந் தாரக மாம்பரை யாருயிர்க் குயிரா மருட்பெருஞ் ஜோதி

    jAruyirk kellAn tAraka mAmparai yAruyirk kuyirA maruTperunj jOti

  65. வாழிநீ டூழி வாழியென் றோங்குபே ராழியை யளித்த வருட்பெருஞ் ஜோதி

    vAzhinI TUzhi vAzhiyen ROngkupE rAzhiyai yaLitta varuTperunj jOti

  66. மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திதை யாய்ந்திடென் றுரைத்த வருட்பெருஞ் ஜோதி

    mAyntavar mITTum varuneRi tantitai yAyntiTen Ruraitta varuTperunj jOti

  67. எச்சநி னக்கிலை யெல்லாம் பெருகவென்று அச்சந் தவிர்த்தவென் னருட்பெருஞ் ஜோதி

    ejjani nakkilai yellAm perukavenRu ajjan tavirttaven naruTperunj jOti

  68. நீடுக நீயே நீளுல கனைத்தும்நின் றாடுக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி

    nITuka nIyE nILula kanaittumnin RATuka venRaven naruTperunj jOti

  69. முத்திறல் வடிவமு முன்னியாங் கெய்துறு மத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

    muttiRal vaTivamu munniyAng keytuRu mattiRa lenakkaru LaruTperunj jOti

  70. மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும் ஆவகை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

    mUvakaij jittiyin muTipukaL muzhuvatum Avakai yenakkaru LaruTperunj jOti

  71. கருமசித் திகளின் கலைபல கோடியும் அரசுற வெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

    karumajit tikaLin kalaipala kOTiyum arajuRa venakkaru LaruTperunj jOti

  72. யோகசித் திகள்வகை யுறுபல கோடியும் ஆகவென் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

    yOkajit tikaLvakai yuRupala kOTiyum Akaven Renakkaru LaruTperunj jOti

  73. ஞானசித் தியின்வகை நல்விரி வனைத்தும் ஆனியின் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

    njAnajit tiyinvakai nalviri vanaittum Aniyin Renakkaru LaruTperunj jOti

  74. புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை அடைவதென் றருளிய வருட்பெருஞ் ஜோதி

    puTaiyuRu jittiyin poruTTE muttiyai aTaivaten RaruLiya varuTperunj jOti

  75. முத்தியென் பதுநிலை முன்னுறு சாதனம் அத்தக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி

    muttiyen patunilai munnuRu jAtanam attaka venRaven naruTperunj jOti

  76. சித்தியென் பதுநிலை சேர்ந்த வநுபவம் அத்திற லென்றவென் னருட்பெருஞ் ஜோதி

    jittiyen patunilai jErnta vanupavam attiRa lenRaven naruTperunj jOti

  77. ஏகசிற் சித்தியே யியலுற வனேகம் ஆகிய தென்றவென் னருட்பெருஞ் ஜோதி

    EkajiR jittiyE yiyaluRa vanEkam Akiya tenRaven naruTperunj jOti

  78. இன்பசித் தியினிய லேக மனேகம் அன்பருக் கென்றவென் னருட்பெருஞ் ஜோதி

    inpajit tiyiniya lEka manEkam anparuk kenRaven naruTperunj jOti

  79. எட்டிரண் டென்பன வியலுமுற் படியென அட்டநின் றருளிய வருட்பெருஞ் ஜோதி

    eTTiraN Tenpana viyalumuR paTiyena aTTanin RaruLiya varuTperunj jOti

  80. இப்படி கண்டனை யினியுறு படியெலாம் அப்படி யேயெனு மருட்பெருஞ் ஜோதி

    ippaTi kaNTanai yiniyuRu paTiyelAm appaTi yEyenu maruTperunj jOti

  81. படிமுடி கடந்தனை பாரிது பாரென அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி

    paTimuTi kaTantanai pAritu pArena aTimuTi kATTiya varuTperunj jOti

  82. ஜோதியுட் ஜோதியின் சொருபமே யந்த மாதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி

    jOtiyuT jOtiyin jorupamE yanta mAtiyen RaruLiya varuTperunj jOti

  83. இந்தசிற் ஜோதியி னியலுரு வாதி யந்தமென் றருளிய வருட்பெருஞ் ஜோதி

    intajiR jOtiyi niyaluru vAti yantamen RaruLiya varuTperunj jOti

  84. ஆதியு மந்தமு மறிந்தனை நீயே ஆதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி

    Atiyu mantamu maRintanai nIyE Atiyen RaruLiya varuTperunj jOti

  85. நல்லமு தென்னொரு நாவுளங் காட்டியென் அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி

    nallamu tennoru nAvuLang kATTiyen allalai nIkkiya varuTperunj jOti

  86. கற்பக மென்னுளங் கைதனிற் கொடுத்தே அற்புத மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி

    kaRpaka mennuLang kaitaniR koTuttE aRputa miyaRRenu maruTperunj jOti

  87. கதிர்நல மென்னிரு கண்களிற் கொடுத்தே அதிசய மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி

    katirnala menniru kaNkaLiR koTuttE atijaya miyaRRenu maruTperunj jOti

  88. அருளொளி யென்றனி யறிவினில் விரித்தே அருணெறி விளக்கெனு மருட்பெருஞ் ஜோதி

    aruLoLi yenRani yaRivinil virittE aruNeRi viLakkenu maruTperunj jOti

  89. பரையொளி யென்மனப் பதியினில் விரித்தே அரசது வியற்றெனு மருட்பெருஞ் ஜோதி

    paraiyoLi yenmanap patiyinil virittE arajatu viyaRRenu maruTperunj jOti

  90. வல்லப சத்திகள் வகையெலா மளித்தென தல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி

    vallapa jattikaL vakaiyelA maLittena tallalai nIkkiya varuTperunj jOti

  91. ஆரிய லகம்புற மகப்புறம் புறப்புறம் ஆரமு தெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

    Ariya lakampuRa makappuRam puRappuRam Aramu tenakkaru LaruTperunj jOti

  92. சூரிய சந்திர ஜோதியுட் ஜோதியென் றாரியர் புகழ்தரு மருட்பெருஞ் ஜோதி

    jUriya jantira jOtiyuT jOtiyen RAriyar pukazhtaru maruTperunj jOti

  93. பிறிவே தினியுனைப் பிடித்தன முனக்குநம் மறிவே வடிவெனு மருட்பெருஞ் ஜோதி

    piRivE tiniyunaip piTittana munakkunam maRivE vaTivenu maruTperunj jOti

  94. எஞ்சே லுலகினில் யாதொன்று பற்றியும் அஞ்சே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி

    enjjE lulakinil yAtonRu paRRiyum anjjE lenRaru LaruTperunj jOti

  95. மாண்டுழ லாவகை வந்திளங் காலையே ஆண்டுகொண் டருளிய வருட்பெருஞ் ஜோதி

    mANTuzha lAvakai vantiLang kAlaiyE ANTukoN TaruLiya varuTperunj jOti

  96. பற்றுக ளனைத்தையும் பற்றறத் தவிர்த்தென தற்றமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி

    paRRuka Lanaittaiyum paRRaRat tavirttena taRRamu nIkkiya varuTperunj jOti

  97. சமயங் குலமுதற் சார்பெலாம் விடுத்த அமயந் தோன்றிய வருட்பெருஞ் ஜோதி

    jamayang kulamutaR jArpelAm viTutta amayan tOnRiya varuTperunj jOti

  98. வாய்தற் குரித்தெனு மறையா கமங்களால் ஆய்தற் கரிய வருட்பெருஞ் ஜோதி

    vAytaR kurittenu maRaiyA kamangkaLAl AytaR kariya varuTperunj jOti

  99. எல்லாம் வல்லசித் தெனக்களித் தெனக்குனை யல்லா திலையெனு மருட்பெருஞ் ஜோதி

    ellAm vallajit tenakkaLit tenakkunai yallA tilaiyenu maruTperunj jOti

  100. நவையிலா வுளத்தி னாடிய நாடிய வவையெலா மளிக்கு மருட்பெருஞ் ஜோதி

    navaiyilA vuLatti nATiya nATiya vavaiyelA maLikku maruTperunj jOti

  101. கூற்றுதைத் தென்பாற் குற்றமுங் குணங்கொண் டாற்றன்மிக் களித்த வருட்பெருஞ் ஜோதி

    kURRutait tenpAR kuRRamung kuNangkoN TARRanmik kaLitta varuTperunj jOti

  102. நன்றறி வறியா நாயினேன் றனையும் அன்றுவந் தாண்ட வருட்பெருஞ் ஜோதி

    nanRaRi vaRiyA nAyinEn Ranaiyum anRuvan tANTa varuTperunj jOti

  103. நாயினுங் கடையே னீயினு மிழிந்தேன் ஆயினு மருளிய வருட்பெருஞ் ஜோதி

    nAyinung kaTaiyE nIyinu mizhintEn Ayinu maruLiya varuTperunj jOti

  104. தோத்திரம் புகலேன் பாத்திர மல்லேன் ஆத்திர மளித்த வருட்பெருஞ் ஜோதி

    tOttiram pukalEn pAttira mallEn Attira maLitta varuTperunj jOti

  105. எச்சோ தனைகளு மியற்றா தெனக்கே அச்சோ வென்றரு ளருட்பெருஞ் ஜோதி

    ejjO tanaikaLu miyaRRA tenakkE ajjO venRaru LaruTperunj jOti

  106. ஏறா நிலைநடு வேற்றியென் றனையீண் டாறாறு கடத்திய வருட்பெருஞ் ஜோதி

    ERA nilainaTu vERRiyen RanaiyIN TARARu kaTattiya varuTperunj jOti

  107. தாபத் துயரந் தவிர்த்துல குறுமெலா ஆபத்தும் நீக்கிய வருட்பெருஞ் ஜோதி

    tApat tuyaran tavirttula kuRumelA Apattum nIkkiya varuTperunj jOti

  108. மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே யருட்குரு வாகிய வருட்பெருஞ் ஜோதி

    maruTpakai tavirttenai vAzhvit tenakkE yaruTkuru vAkiya varuTperunj jOti

  109. உருவமு மருவமு முபயமு மாகிய அருணிலை தெரித்த வருட்பெருஞ் ஜோதி

    uruvamu maruvamu mupayamu mAkiya aruNilai teritta varuTperunj jOti

  110. இருளறுத் தென்னுளத் தெண்ணியாங் கருளி அருளமு தளித்த வருட்பெருஞ் ஜோதி

    iruLaRut tennuLat teNNiyAng karuLi aruLamu taLitta varuTperunj jOti

  111. தெருணிலை யிதுவெனத் தெருட்டியென் னுளத்திருந்துள அருணிலை காட்டிய வருட்பெருஞ் ஜோதி

    teruNilai yituvenat teruTTiyen nuLattiruntuLa aruNilai kATTiya varuTperunj jOti

  112. பொருட்பத மெல்லாம் புரிந்துமே லோங்கிய அருட்பத மளித்த வருட்பெருஞ் ஜோதி

    poruTpata mellAm purintumE lOngkiya aruTpata maLitta varuTperunj jOti

  113. உருள்சக டாகிய வுளஞ்சலி யாவகை அருள்வழி நிறுத்திய வருட்பெருஞ் ஜோதி

    uruLjaka TAkiya vuLanjjali yAvakai aruLvazhi niRuttiya varuTperunj jOti

  114. வெருள்மன மாயை வினையிருணீக்கியுள் அருள்விளக் கேற்றிய வருட்பெருஞ் ஜோதி

    veruLmana mAyai vinaiyiruNIkkiyuL aruLviLak kERRiya varuTperunj jOti

  115. சுருள்விரி வுடைமனச் சுழலெலா மறுத்தே அருளொளி நிரப்பிய வருட்பெருஞ் ஜோதி

    juruLviri vuTaimanaj juzhalelA maRuttE aruLoLi nirappiya varuTperunj jOti

  116. விருப்போ டிகலுறு வெறுப்புந் தவிர்த்தே அருட்பே றளித்த வருட்பெருஞ் ஜோதி

    viruppO TikaluRu veRuppun tavirttE aruTpE RaLitta varuTperunj jOti

  117. அருட்பேர் தரித்துல கனைத்து மலர்ந்திட அருட்சீ ரளித்த வருட்பெருஞ் ஜோதி

    aruTpEr tarittula kanaittu malarntiTa aruTjI raLitta varuTperunj jOti

  118. உலகெலாம் பரவவென் னுள்ளத் திருந்தே அலகிலா வொளிசெய் யருட்பெருஞ் ஜோதி

    ulakelAm paravaven nuLLat tiruntE alakilA voLijey yaruTperunj jOti

  119. விண்ணினுள் விண்ணாய் விண்ணடு விண்ணாய் அண்ணி நிறைந்த வருட்பெருஞ் ஜோதி

    viNNinuL viNNAy viNNaTu viNNAy aNNi niRainta varuTperunj jOti

  120. விண்ணுறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய் அண்ணி வயங்கு மருட்பெருஞ் ஜோதி

    viNNuRu viNNAy viNNilai viNNAy aNNi vayangku maruTperunj jOti

  121. காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய் ஆற்றலி னோங்கு மருட்பெருஞ் ஜோதி

    kARRinuT kARRAyk kARRiTaik kARRAy ARRali nOngku maruTperunj jOti

  122. காற்றுறு காற்றாய்க் கானிலைக் காற்றாய் ஆற்ற விளங்கு மருட்பெருஞ் ஜோதி

    kARRuRu kARRAyk kAnilaik kARRAy ARRa viLangku maruTperunj jOti

  123. அனலினு ளனலா யனனடு வனலாய் அனலுற விளங்கு மருட்பெருஞ் ஜோதி

    analinu LanalA yananaTu vanalAy analuRa viLangku maruTperunj jOti

  124. அனலுறு மனலா யனனிலை யனலாய் அனலுற வயங்கு மருட்பெருஞ் ஜோதி

    analuRu manalA yananilai yanalAy analuRa vayangku maruTperunj jOti

  125. புனலினுட் புனலாய்ப் புனலிடைப் புனலாய் அனையென வயங்கு மருட்பெருஞ் ஜோதி

    punalinuT punalAyp punaliTaip punalAy anaiyena vayangku maruTperunj jOti

  126. புனலுறு புனலாய்ப் புனனிலைப் புனலாய் அனையெனப் பெருகு மருட்பெஞ் ஜோதி

    punaluRu punalAyp punanilaip punalAy anaiyenap peruku maruTpenj jOti

  127. புவியினுட் புவியாய்ப் புவிநடுப் புவியாய் அவைதர வயங்கு மருட்பெருஞ் ஜோதி

    puviyinuT puviyAyp puvinaTup puviyAy avaitara vayangku maruTperunj jOti

  128. புவியுறு புவியாய்ப் புவிநிலைப் புவியாய் அவைகொள விரிந்த வருட்பெருஞ் ஜோதி

    puviyuRu puviyAyp puvinilaip puviyAy avaikoLa virinta varuTperunj jOti

  129. விண்ணிலை சிவத்தின் வியனிலை யளவி அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    viNNilai jivattin viyanilai yaLavi aNNuRa vamaitta varuTperunj jOti

  130. வளிநிலை சத்தியின் வளர்நிலை யளவி அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    vaLinilai jattiyin vaLarnilai yaLavi aLiyuRa vamaitta varuTperunj jOti

  131. நெருப்பது நிலைநடு நிலையெலா மளவி அருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    neruppatu nilainaTu nilaiyelA maLavi aruppiTa vakutta varuTperunj jOti

  132. நீர்நிலை திரைவளர் நிலைதனை யளவி ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    nIrnilai tiraivaLar nilaitanai yaLavi ArvuRa vakutta varuTperunj jOti

  133. புவிநிலை சுத்தமாம் பொற்பதி யளவி அவையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    puvinilai juttamAm poRpati yaLavi avaiyuRa vakutta varuTperunj jOti

  134. மண்ணினிற் றிண்மையை வகுத்ததிற் கிடக்கை யண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    maNNiniR RiNmaiyai vakuttatiR kiTakkai yaNNuRa vamaitta varuTperunj jOti

  135. மண்ணினிற் பொன்மை வகுத்ததி லைமையை யண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    maNNiniR ponmai vakuttati laimaiyai yaNNuRa vakutta varuTperunj jOti

  136. மண்ணினி லைம்பூ வகுத்ததி லைந்திறம் அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    maNNini laimpU vakuttati laintiRam aNNuRa vamaitta varuTperunj jOti

  137. மண்ணினி னாற்றம் வகுத்தது பல்வகை அண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

    maNNini nARRam vakuttatu palvakai aNNuRap purinta varuTperunj jOti

  138. மண்ணினிற் பற்பல வகைகரு நிலையியல் அண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

    maNNiniR paRpala vakaikaru nilaiyiyal aNNuRap purinta varuTperunj jOti

  139. மண்ணினி லைந்தியல் வகுத்ததிற் பல்பயன் அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    maNNini laintiyal vakuttatiR palpayan aNNuRa vakutta varuTperunj jOti

  140. மண்ணிடை யடிநிலை வகுத்ததிற் பன்னிலை யண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    maNNiTai yaTinilai vakuttatiR pannilai yaNNuRa vamaitta varuTperunj jOti

  141. மண்ணிலைந் தைந்து வகையுங் கலந்துகொண் டண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

    maNNilain taintu vakaiyung kalantukoN TaNNuRap purinta varuTperunj jOti

  142. மண்ணியற் சத்திகள் மண்செயற் சத்திகள் அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    maNNiyaR jattikaL maNjeyaR jattikaL aNNuRa vakutta varuTperunj jOti

  143. மண்ணுருச் சத்திகள் மண்கலைச் சத்திகள் அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    maNNuruj jattikaL maNkalaij jattikaL aNNuRa vakutta varuTperunj jOti

  144. மண்ணொளிச் சத்திகள் மண்கருச் சத்திகள் அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    maNNoLij jattikaL maNkaruj jattikaL aNNuRa vakutta varuTperunj jOti

  145. மண்கணச் சத்திகள் வகைபல பலவும் அண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    maNkaNaj jattikaL vakaipala palavum aNkoLa vamaitta varuTperunj jOti

  146. மண்ணிலைச் சத்தர்கள் வகைபல பலவும் அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    maNNilaij jattarkaL vakaipala palavum aNNuRa vamaitta varuTperunj jOti

  147. மண்கரு வுயிர்த்தொகை வகைவிரி பலவா அண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    maNkaru vuyirttokai vakaiviri palavA aNkoLa vamaitta varuTperunj jOti

  148. மண்ணினிற் பொருள்பல வகைவிரி வெவ்வே றண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

    maNNiniR poruLpala vakaiviri vevvE RaNNuRap purinta varuTperunj jOti

  149. மண்ணுறு நிலைபல வகுத்ததிற் செயல்பல அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    maNNuRu nilaipala vakuttatiR jeyalpala aNNuRa vamaitta varuTperunj jOti

  150. மண்ணிடைப் பக்குவம் வகுத்ததிற் பயன்பல அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    maNNiTaip pakkuvam vakuttatiR payanpala aNNuRa vamaitta varuTperunj jOti

  151. மண்ணியல் பலபல வகுத்ததிற் பிறவும் அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    maNNiyal palapala vakuttatiR piRavum aNNuRa vamaitta varuTperunj jOti

  152. நீரினிற் றண்மையும் நிகழூ ரொழுக்கமும் ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    nIriniR RaNmaiyum nikazhU rozhukkamum AruRa vakutta varuTperunj jOti

  153. நீரினிற் பசுமையை நிறுத்தி யதிற்பல வாருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    nIriniR pajumaiyai niRutti yatiRpala vAruRa vakutta varuTperunj jOti

  154. நீரிடைப் பூவியல் நிகழுறு திறவியல் ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    nIriTaip pUviyal nikazhuRu tiRaviyal Artara vakutta varuTperunj jOti

  155. நீரினிற் சுவைநிலை நிரைத்ததிற் பல்வகை ஆருறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

    nIriniR juvainilai niraittatiR palvakai AruRap purinta varuTperunj jOti

  156. நீரினிற் கருநிலை நிகழ்த்திய பற்பல ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    nIriniR karunilai nikazhttiya paRpala AruRa vakutta varuTperunj jOti

  157. நீரிடை நான்கிய னிலவுவித் ததிற்பல ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    nIriTai nAnkiya nilavuvit tatiRpala Artara vakutta varuTperunj jOti

  158. நீரிடை யடிநடு நிலையுற வகுத்தன லார்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

    nIriTai yaTinaTu nilaiyuRa vakuttana lArtarap purinta varuTperunj jOti

  159. நீரிடை யொளியியல் நிகழ்பல குணவியல் ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    nIriTai yoLiyiyal nikazhpala kuNaviyal Artara vakutta varuTperunj jOti

  160. நீரிடைச் சத்திகள் நிகழ்வகை பலபல ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    nIriTaij jattikaL nikazhvakai palapala Artara vakutta varuTperunj jOti

  161. நீரினிற் சத்தர்க ணிறைவகை யுறைவகை ஆர்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

    nIriniR jattarka NiRaivakai yuRaivakai Artarap purinta varuTperunj jOti

  162. நீரிடை யுயிர்பல நிகழுறு பொருள்பல ஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    nIriTai yuyirpala nikazhuRu poruLpala AruRa vamaitta varuTperunj jOti

  163. நீரிடை நிலைபல நிலையுறு செயல்பல ஆர்கொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    nIriTai nilaipala nilaiyuRu jeyalpala ArkoLa vakutta varuTperunj jOti

  164. நீருறு பக்குவ நிறைவுறு பயன்பல ஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    nIruRu pakkuva niRaivuRu payanpala AruRa vamaitta varuTperunj jOti

  165. நீரியல் பலபல நிரைத்ததிற் பிறவும் ஆர்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

    nIriyal palapala niraittatiR piRavum Artarap purinta varuTperunj jOti

  166. தீயினிற் சூட்டியல் சேர்தரச் செலவியல் ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    tIyiniR jUTTiyal jErtaraj jelaviyal AyuRa vakutta varuTperunj jOti

  167. தீயினில் வெண்மைத் திகழியல் பலவா வாயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    tIyinil veNmait tikazhiyal palavA vAyuRa vakutta varuTperunj jOti

  168. தீயிடைப் பூவெலாந் திகழுறு திறமெலாம் ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    tIyiTaip pUvelAn tikazhuRu tiRamelAm AyuRa vakutta varuTperunj jOti

  169. தீயிடை யொளியே திகழுற வமைத்ததில் ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    tIyiTai yoLiyE tikazhuRa vamaittatil Aypala vakutta varuTperunj jOti

  170. தீயிடை யருநிலை திருநிலை கருநிலை ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    tIyiTai yarunilai tirunilai karunilai AyuRa vamaitta varuTperunj jOti

  171. தீயிடை மூவியல் செறிவித் ததிற்பல ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி

    tIyiTai mUviyal jeRivit tatiRpala Ayvakai yamaitta varuTperunj jOti

  172. தீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    tIyiTai naTunilai tikazhnaTu naTunilai AyuRa vamaitta varuTperunj jOti

  173. தீயிடைப் பெருந்திறற் சித்திகள் பலபல ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    tIyiTaip peruntiRaR jittikaL palapala AyuRa vamaitta varuTperunj jOti

  174. தீயிடைச் சித்துகள் செப்புறு மனைத்தும் ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    tIyiTaij jittukaL jeppuRu manaittum AyuRa vamaitta varuTperunj jOti

  175. தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள் ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    tIyiTaij jattikaL jeRitaru jattarkaL Aypala vakutta varuTperunj jOti

  176. தீயிடை யுயிர்பல திகழுறு பொருள்பல ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி

    tIyiTai yuyirpala tikazhuRu poruLpala Ayvakai yamaitta varuTperunj jOti

  177. தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன் ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    tIyiTai nilaipala tikazhjeyal palapayan Aypala vakutta varuTperunj jOti

  178. தீயினிற் பக்குவஞ் சேர்குண மியற்குணம் ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    tIyiniR pakkuvanj jErkuNa miyaRkuNam Aypala vakutta varuTperunj jOti

  179. தீயிடை யுருக்கியல் சிறப்பியல் பொதுவியல் ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    tIyiTai yurukkiyal jiRappiyal potuviyal AyuRa vakutta varuTperunj jOti

  180. தீயியல் பலபல செறித்ததிற் பலவும் ஆயுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

    tIyiyal palapala jeRittatiR palavum AyuRap purinta varuTperunj jOti

  181. காற்றிடை யசையியல் கலையிய லுயிரியல் ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி

    kARRiTai yajaiyiyal kalaiyiya luyiriyal ARRali namaitta varuTperunj jOti

  182. காற்றிடைப் பூவியல் கருதுறு திறவியல் ஆற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    kARRiTaip pUviyal karutuRu tiRaviyal ARRalin vakutta varuTperunj jOti

  183. காற்றினி லூறியல் காட்டுறு பலபல ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி

    kARRini lURiyal kATTuRu palapala ARRali namaitta varuTperunj jOti

  184. காற்றினிற் பெருநிலை கருநிலை யளவில ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    kARRiniR perunilai karunilai yaLavila ARRavum vakutta varuTperunj jOti

  185. காற்றிடை யீரியல் காட்டி யதிற்பல ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    kARRiTai yIriyal kATTi yatiRpala ARRavum vakutta varuTperunj jOti

  186. காற்றினி லிடைநடு கடைநடு வகம்புறம் ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    kARRini liTainaTu kaTainaTu vakampuRam ARRavum vakutta varuTperunj jOti

  187. காற்றினிற் குணம்பல கணம்பல வணம்பல ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி

    kARRiniR kuNampala kaNampala vaNampala ARRali namaitta varuTperunj jOti

  188. காற்றிடைச் சத்திகள் கணக்கில வுலப்பில ஆற்றவு மமைத்த வருட்பெருஞ் ஜோதி

    kARRiTaij jattikaL kaNakkila vulappila ARRavu mamaitta varuTperunj jOti

  189. காற்றிடைச் சத்தர்கள் கணிதங் கடந்தன ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    kARRiTaij jattarkaL kaNitang kaTantana ARRavum vakutta varuTperunj jOti

  190. காற்றிடை யுயிர்பல கதிபல கலைபல ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி

    kARRiTai yuyirpala katipala kalaipala ARRali namaitta varuTperunj jOti

  191. காற்றிடை நானிலைக் கருவிக ளனைத்தையும் ஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    kARRiTai nAnilaik karuvika Lanaittaiyum ARRuRa vakutta varuTperunj jOti

  192. காற்றிடை யுணரியல் கருதிய லாதிய ஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    kARRiTai yuNariyal karutiya lAtiya ARRuRa vakutta varuTperunj jOti

  193. காற்றிடைச் செயலெலாங் கருதிய பயனெலாம் ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    kARRiTaij jeyalelAng karutiya payanelAm ARRavum vakutta varuTperunj jOti

  194. காற்றினிற் பக்குவக் கதியெலாம் விளைவித் தாற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    kARRiniR pakkuvak katiyelAm viLaivit tARRalin vakutta varuTperunj jOti

  195. காற்றினிற் காலங் கருதுறு வகையெலாம் ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    kARRiniR kAlang karutuRu vakaiyelAm ARRavum vakutta varuTperunj jOti

  196. காற்றியல் பலபல கணித்ததிற் பிறவும் ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    kARRiyal palapala kaNittatiR piRavum ARRavum vakutta varuTperunj jOti

  197. வெளியிடைப் பகுதியின் விரிவிய லணைவியல் அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    veLiyiTaip pakutiyin viriviya laNaiviyal aLiyuRa vamaitta varuTperunj jOti

  198. வெளியிடைப் பூவெலாம் வியப்புறு திறனெலாம் அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    veLiyiTaip pUvelAm viyappuRu tiRanelAm aLiyuRa vamaitta varuTperunj jOti

  199. வெளியினி லொலிநிறை வியனிலை யனைத்தும் அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    veLiyini loliniRai viyanilai yanaittum aLiyuRa vamaitta varuTperunj jOti

  200. வெளியிடைக் கருநிலை விரிநிலை யருநிலை அளிகொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    veLiyiTaik karunilai virinilai yarunilai aLikoLa vakutta varuTperunj jOti

  201. வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே அளிபெற விளக்கு மருட்பெருஞ் ஜோதி

    veLiyiTai muTinilai viLangkuRa vakuttE aLipeRa viLakku maruTperunj jOti

  202. வெளியினிற் சத்திகள் வியப்புற சத்தர்கள் அளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    veLiyiniR jattikaL viyappuRa jattarkaL aLiyuRa vakutta varuTperunj jOti

  203. வெளியிடை யொன்றே விரித்ததிற் பற்பல அளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    veLiyiTai yonRE virittatiR paRpala aLiyuRa vakutta varuTperunj jOti

  204. வெளியிடை பலவே விரித்ததிற் பற்பல அளிதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    veLiyiTai palavE virittatiR paRpala aLitara vamaitta varuTperunj jOti

  205. வெளியிடை யுயிரியல் வித்தியல் சித்தியல் அளிபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    veLiyiTai yuyiriyal vittiyal jittiyal aLipeRa vamaitta varuTperunj jOti

  206. வெளியி னனைத்தையும் விரித்ததிற் பிறவும் அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    veLiyi nanaittaiyum virittatiR piRavum aLiyuRa vamaitta varuTperunj jOti

  207. புறநடுவொடு கடை புணர்ப்பித் தொருமுதல் அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    puRanaTuvoTu kaTai puNarppit torumutal aRamuRa vakutta varuTperunj jOti

  208. புறந்தலை நடுவொடு புணர்ப்பித் தொருகடை அறம்பெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    puRantalai naTuvoTu puNarppit torukaTai aRampeRa vakutta varuTperunj jOti

  209. அகப்புற நடுக்கடை யணைவாற் புறமுதல் அகப்பட வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    akappuRa naTukkaTai yaNaivAR puRamutal akappaTa vakutta varuTperunj jOti

  210. அகப்புற நடுமுத லணைவாற் புறக்கடை அகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    akappuRa naTumuta laNaivAR puRakkaTai akappaTa vamaitta varuTperunj jOti

  211. கருதக நடுவொடு கடையணைந் தகமுதல் அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    karutaka naTuvoTu kaTaiyaNain takamutal aruLuRa vamaitta varuTperunj jOti

  212. தணியக நடுவொடு தலையணைந் தகக்கடை அணியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    taNiyaka naTuvoTu talaiyaNain takakkaTai aNiyuRa vakutta varuTperunj jOti

  213. அகநடு புறக்கடை யணைந்தகப் புறமுதல் அகமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    akanaTu puRakkaTai yaNaintakap puRamutal akamuRa vakutta varuTperunj jOti

  214. அகநடு புறத்தலை யணைந்தகப் புறக்கடை அகலிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    akanaTu puRattalai yaNaintakap puRakkaTai akaliTai vakutta varuTperunj jOti

  215. அகநடு வதனா லகப்புற நடுவை அகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    akanaTu vatanA lakappuRa naTuvai akamaRa vakutta varuTperunj jOti

  216. அகப்புற நடுவா லணிபுற நடுவை அகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    akappuRa naTuvA laNipuRa naTuvai akappaTa vamaitta varuTperunj jOti

  217. புறநடு வதனாற் புறப்புற நடுவை அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    puRanaTu vatanAR puRappuRa naTuvai aRamuRa vakutta varuTperunj jOti

  218. புகலரு மகண்ட பூரண நடுவால் அகநடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    pukalaru makaNTa pUraNa naTuvAl akanaTu vakutta varuTperunj jOti

  219. புறப்புறக் கடைமுதற் புணர்ப்பாற் புறப்புற அறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    puRappuRak kaTaimutaR puNarppAR puRappuRa aRakkaNam vakutta varuTperunj jOti

  220. புறத்தியல் கடைமுதற் புணர்ப்பாற் புறத்துறும் அறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    puRattiyal kaTaimutaR puNarppAR puRattuRum aRakkaNam vakutta varuTperunj jOti

  221. அகப்புறக் கடைமுத லணைவா லக்கணம் அகத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    akappuRak kaTaimuta laNaivA lakkaNam akattuRa vakutta varuTperunj jOti

  222. அகக்கடை முதற்புணர்ப் பதனா லகக்கணம் அகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    akakkaTai mutaRpuNarp patanA lakakkaNam akattiTai vakutta varuTperunj jOti

  223. வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும் ஆனற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    vAniTaik kARRum kARRiTai neruppum AnaRa vakutta varuTperunj jOti

  224. நெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும் அருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    neruppiTai nIrum nIriTaip puviyum aruppiTa vakutta varuTperunj jOti

  225. நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மே லுயிர்ப்பும் ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    nIrmEl neruppum neruppinmE luyirppum ArvuRa vakutta varuTperunj jOti

  226. புனன்மேற் புவியும் புவிமேற் புடைப்பும் அனன்மேல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    punanmER puviyum puvimER puTaippum ananmEl vakutta varuTperunj jOti

  227. பகுதிவான் வெளியிற் படர்ந்தமா பூத வகல்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    pakutivAn veLiyiR paTarntamA pUta vakalveLi vakutta varuTperunj jOti

  228. உயிர்வெளி யிடையே வுரைக்கரும் பகுதி அயவெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    uyirveLi yiTaiyE vuraikkarum pakuti ayaveLi vakutta varuTperunj jOti

  229. உயிர்வெளி யதனை யுணர்கலை வெளியில் அயலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    uyirveLi yatanai yuNarkalai veLiyil ayalaRa vakutta varuTperunj jOti

  230. கலைவெளி யதனைக் கலப்பறு சுத்த அலர்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    kalaiveLi yatanaik kalappaRu jutta alarveLi vakutta varuTperunj jOti

  231. சுத்தநல் வெளியைத் துரிசறு பரவெளி அத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    juttanal veLiyait turijaRu paraveLi attiTai vakutta varuTperunj jOti

  232. பரவெளி யதனைப் பரம்பர வெளியில் அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    paraveLi yatanaip parampara veLiyil arajuRa vakutta varuTperunj jOti

  233. பரம்பர வெளியைப் பராபர வெளியில் அரந்தெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    parampara veLiyaip parApara veLiyil aranteRa vakutta varuTperunj jOti

  234. பராபர வெளியைப் பகர்பெரு வெளியில் அராவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    parApara veLiyaip pakarperu veLiyil arAvaRa vakutta varuTperunj jOti

  235. பெருவெளி யதனைப் பெருஞ்சுக வெளியில் அருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    peruveLi yatanaip perunjjuka veLiyil aruLuRa vakutta varuTperunj jOti

  236. குணமுதற் கருவிகள் கூடிய பகுதியில் அணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    kuNamutaR karuvikaL kUTiya pakutiyil aNaivuRa vakutta varuTperunj jOti

  237. மனமுதற் கருவிகள் மன்னுயிர் வெளியிடை அனமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    manamutaR karuvikaL mannuyir veLiyiTai anamuRa vakutta varuTperunj jOti

  238. காலமே முதலிய கருவிகள் கலைவெளி ஆலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    kAlamE mutaliya karuvikaL kalaiveLi AluRa vakutta varuTperunj jOti

  239. துரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    turijaRu karuvikaL juttanal veLiyiTai arajuRa vakutta varuTperunj jOti

  240. இவ்வெளி யெல்லா மிலங்கவண் டங்கள் அவ்வயி னமைத்த வருட்பெருஞ் ஜோதி

    ivveLi yellA milangkavaN TangkaL avvayi namaitta varuTperunj jOti

  241. ஓங்கிய வண்ட மொளிபெற முச்சுடர் ஆங்கிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    Ongkiya vaNTa moLipeRa mujjuTar AngkiTai vakutta varuTperunj jOti

  242. சிருட்டித் தலைவரைச் சிருட்டியண் டங்களை அருட்டிறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    jiruTTit talaivaraij jiruTTiyaN TangkaLai aruTTiRal vakutta varuTperunj jOti

  243. காவல்செய் தலைவரைக் காவலண் டங்களை ஆவகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி

    kAvaljey talaivaraik kAvalaN TangkaLai Avakai yamaitta varuTperunj jOti

  244. அழித்தல்செய் தலைவரை யவரண் டங்களை அழுக்கற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    azhittaljey talaivarai yavaraN TangkaLai azhukkaRa vamaitta varuTperunj jOti

  245. மறைத்திடு தலைவரை மற்றுமண் டங்களை அறத்தொடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    maRaittiTu talaivarai maRRumaN TangkaLai aRattoTu vakutta varuTperunj jOti

  246. தெளிவுசெய் தலைவரைத் திகழுமண் டங்களை அளிபெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    teLivujey talaivarait tikazhumaN TangkaLai aLipeRa vakutta varuTperunj jOti

  247. விந்துவாஞ் சத்தியை விந்தினண் டங்களை அந்திறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    vintuvAnj jattiyai vintinaN TangkaLai antiRal vakutta varuTperunj jOti

  248. ஓங்கார சத்திக ளுற்றவண் டங்களை ஆங்காக வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    OngkAra jattika LuRRavaN TangkaLai AngkAka vamaitta varuTperunj jOti

  249. சத்தத் தலைவரைச் சாற்றுமண் டங்களை அத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    jattat talaivaraij jARRumaN TangkaLai attakai vakutta varuTperunj jOti

  250. நாதமாம் பிரமமும் நாதவண் டங்களை ஆதரம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    nAtamAm piramamum nAtavaN TangkaLai Ataram vakutta varuTperunj jOti

  251. பகர்பரா சத்தியைப் பதியுமண் டங்களும் அகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    pakarparA jattiyaip patiyumaN TangkaLum akamaRa vakutta varuTperunj jOti

  252. பரசிவ பதியைப் பரசிவாண் டங்களை அரசுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    parajiva patiyaip parajivAN TangkaLai arajuRa vamaitta varuTperunj jOti

  253. எண்ணில்பல் சத்தியை யெண்ணிலண் டங்களை அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    eNNilpal jattiyai yeNNilaN TangkaLai aNNuRa vakutta varuTperunj jOti

  254. அளவில்பல் சத்தரை யளவி லண்டங்களை அளவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    aLavilpal jattarai yaLavi laNTangkaLai aLavaRa vakutta varuTperunj jOti

  255. உயிர்வகை யண்ட முலப்பில வெண்ணில அயர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    uyirvakai yaNTa mulappila veNNila ayarvaRa vakutta varuTperunj jOti

  256. களவில கடல்வகை கங்கில கரையில அளவில வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    kaLavila kaTalvakai kangkila karaiyila aLavila vakutta varuTperunj jOti

  257. கடலவை யனைத்துங் கரையின்றி நிலையுற அடலன லமைத்த வருட்பெருஞ் ஜோதி

    kaTalavai yanaittung karaiyinRi nilaiyuRa aTalana lamaitta varuTperunj jOti

  258. கடல்களு மலைகளுங் கதிகளு நதிகளும் அடலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    kaTalkaLu malaikaLung katikaLu natikaLum aTaluRa vakutta varuTperunj jOti

  259. கடலிடைப் பல்வளங் கணித்ததிற் பல்லுயிர் அடலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    kaTaliTaip palvaLang kaNittatiR palluyir aTaluRa vakutta varuTperunj jOti

  260. மலையிடைப் பல்வளம் வகுத்ததிற் பல்லுயிர் அலைவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    malaiyiTaip palvaLam vakuttatiR palluyir alaivaRa vakutta varuTperunj jOti

  261. ஒன்றினி லொன்றே யொன்றிடை யாயிரம் அன்றற வகுத்த வருட்பெஞ் ஜோதி

    onRini lonRE yonRiTai yAyiram anRaRa vakutta varuTpenj jOti

  262. பத்திடை யாயிரம் பகரதிற் கோடி அத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    pattiTai yAyiram pakaratiR kOTi attuRa vakutta varuTperunj jOti

  263. நூற்றிடை யிலக்க நுவலதி லனந்தம் ஆற்றிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    nURRiTai yilakka nuvalati lanantam ARRiTai vakutta varuTperunj jOti

  264. கோடியி லனந்த கோடிபல் கோடி ஆடுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    kOTiyi lananta kOTipal kOTi ATuRa vakutta varuTperunj jOti

  265. வித்திய லொன்றா விளைவியல் பலவா அத்தகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி

    vittiya lonRA viLaiviyal palavA attakai yamaitta varuTperunj jOti

  266. விளைவிய லனைத்தும் வித்திடை யடங்க அளவுசெய் தமைத்த வருட்பெருஞ் ஜோதி

    viLaiviya lanaittum vittiTai yaTangka aLavujey tamaitta varuTperunj jOti

  267. வித்தும் பதமும் விளையுப கரிப்பும் அத்திற லமைத்த வருட்பெருஞ் ஜோதி

    vittum patamum viLaiyupa karippum attiRa lamaitta varuTperunj jOti

  268. வித்திடை முளையும் முளையிடை விளைவும் அத்தக வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    vittiTai muLaiyum muLaiyiTai viLaivum attaka vamaitta varuTperunj jOti

  269. வித்தினுள் வித்தும் வித்ததில் வித்தும் அத்திறம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    vittinuL vittum vittatil vittum attiRam vakutta varuTperunj jOti

  270. விளைவினுள் விளைவும் விளைவதில் விளைவும் அளையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    viLaivinuL viLaivum viLaivatil viLaivum aLaiyuRa vakutta varuTperunj jOti

  271. முளையதின் முளையும் முளையினுண் முளையும் அளைதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    muLaiyatin muLaiyum muLaiyinuN muLaiyum aLaitara vamaitta varuTperunj jOti

  272. வித்திடைப் பதமும் பதத்திடை வித்தும் அத்துற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    vittiTaip patamum patattiTai vittum attuRa vamaitta varuTperunj jOti

  273. பதமதிற் பதமும் பதத்தினுட் பதமும் அதிர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    patamatiR patamum patattinuT patamum atirvaRa vakutta varuTperunj jOti

  274. ஒற்றுமை வேற்றுமை யுரிமைக ளனைத்தும் அற்றென வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    oRRumai vERRumai yurimaika Lanaittum aRRena vakutta varuTperunj jOti

  275. பொருணிலை யுறுப்பியல் பொதுவகை முதலிய அருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    poruNilai yuRuppiyal potuvakai mutaliya aruLuRa vakutta varuTperunj jOti

  276. உறவினி லுறவும் உறவினிற் பகையும் அறனுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    uRavini luRavum uRaviniR pakaiyum aRanuRa vakutta varuTperunj jOti

  277. பகையினிற் பகையும் பகையினி லுறவும் அகைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    pakaiyiniR pakaiyum pakaiyini luRavum akaivuRa vakutta varuTperunj jOti

  278. பாதியு முழுதும் பதிசெயு மந்தமும் ஆதியும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    pAtiyu muzhutum patijeyu mantamum Atiyum vakutta varuTperunj jOti

  279. துணையு நிமித்தமுந் துலங்கதி னதுவும் அணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    tuNaiyu nimittamun tulangkati natuvum aNaivuRa vakutta varuTperunj jOti

  280. உருவதி னுருவும் உருவினுள் ளுருவும் அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    uruvati nuruvum uruvinuL Luruvum aruLuRa vamaitta varuTperunj jOti

  281. அருவினுள் ளருவும் மருவதி லருவும் அருளிய லமைத்த வருட்பெருஞ் ஜோதி

    aruvinuL Laruvum maruvati laruvum aruLiya lamaitta varuTperunj jOti

  282. கரணமு மிடமுங் கலைமுத லணையுமோர் அரணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    karaNamu miTamung kalaimuta laNaiyumOr araNilai vakutta varuTperunj jOti

  283. உருவதி லருவும் மருவதி லுருவும் அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    uruvati laruvum maruvati luruvum aruLuRa vamaitta varuTperunj jOti

  284. வண்ணமு வடிவு மயங்கிய வகைபல அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    vaNNamu vaTivu mayangkiya vakaipala aNNuRa vakutta varuTperunj jOti

  285. சிறுமையிற் சிறுமையும் சிறுமையிற் பெருமையும் அறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    jiRumaiyiR jiRumaiyum jiRumaiyiR perumaiyum aRitara vakutta varuTperunj jOti

  286. பெருமையிற் பெருமையும் பெருமையிற் சிறுமையும் அருணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    perumaiyiR perumaiyum perumaiyiR jiRumaiyum aruNilai vakutta varuTperunj jOti

  287. திண்மையிற் றிண்மையுந் திண்மை யினேர்மையும் அண்மையின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    tiNmaiyiR RiNmaiyun tiNmai yinErmaiyum aNmaiyin vakutta varuTperunj jOti

  288. மென்மையின் மென்மையும் மென்மையில் வன்மையும் அன்மையற் றமைத்த வருட்பெருஞ் ஜோதி

    menmaiyin menmaiyum menmaiyil vanmaiyum anmaiyaR Ramaitta varuTperunj jOti

  289. அடியினுள் ளடியும் மடியிடை யடியும் அடியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    aTiyinuL LaTiyum maTiyiTai yaTiyum aTiyuRa vakutta varuTperunj jOti

  290. நடுவினுண் ணடுவும் நடுவதி னடுவும் அடர்வுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    naTuvinuN NaTuvum naTuvati naTuvum aTarvuRa vamaitta varuTperunj jOti

  291. முடியினுண் முடியும் முடியினின் முடியும் அடர்தர வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    muTiyinuN muTiyum muTiyinin muTiyum aTartara vamaitta varuTperunj jOti

  292. அகப்பூ வகவுறுப் பாக்க வதற்கவை அகத்தே வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    akappU vakavuRup pAkka vataRkavai akattE vakutta varuTperunj jOti

  293. புறப்பூ புறத்திற் புனையுரு வாக்கிட அறத்துடன் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    puRappU puRattiR punaiyuru vAkkiTa aRattuTan vakutta varuTperunj jOti

  294. அகப்புறப் பூவகப் புறவுறுப் பியற்றிட அகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    akappuRap pUvakap puRavuRup piyaRRiTa akattiTai vakutta varuTperunj jOti

  295. புறப்புறப் பூவதிற் புறப்புற வுறுப்புற அறத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    puRappuRap pUvatiR puRappuRa vuRuppuRa aRattiTai vakutta varuTperunj jOti

  296. பாரிடை வேர்வையிற் பையிடை முட்டையில் ஆருயி ரமைக்கு மருட்பெருஞ் ஜோதி

    pAriTai vErvaiyiR paiyiTai muTTaiyil Aruyi ramaikku maruTperunj jOti

  297. ஊர்வன பறப்பன வுறுவன நடப்பன ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    Urvana paRappana vuRuvana naTappana ArvuRa vakutta varuTperunj jOti

  298. அசைவில வசைவுள வாருயிர்த் திரள்பல அசலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    ajaivila vajaivuLa vAruyirt tiraLpala ajalaRa vakutta varuTperunj jOti

  299. அறிவொரு வகைமுத லைவகை யறுவகை அறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    aRivoru vakaimuta laivakai yaRuvakai aRitara vakutta varuTperunj jOti

  300. வெவ்வே றியலொடு வெவ்வேறு பயனுற அவ்வா றமைத்த வருட்பெருஞ் ஜோதி

    vevvE RiyaloTu vevvERu payanuRa avvA Ramaitta varuTperunj jOti

  301. சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல அத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    jittira vijittira jiruTTikaL palapala attakai vakutta varuTperunj jOti

  302. பெண்ணினுள் ளாணு மாணினுட் பெண்ணும் அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    peNNinuL LANu mANinuT peNNum aNNuRa vakutta varuTperunj jOti

  303. பெண்ணினுண் மூன்று மாணினுள் ளிரண்டும் அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    peNNinuN mUnRu mANinuL LiraNTum aNNuRa vakutta varuTperunj jOti

  304. பெண்ணிடை நான்கு மாணிடை மூன்றும் அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    peNNiTai nAnku mANiTai mUnRum aNNuRa vamaitta varuTperunj jOti

  305. பெண்ணிய லாணு மாணியற் பெண்ணும் அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    peNNiya lANu mANiyaR peNNum aNNuRa vamaitta varuTperunj jOti

  306. பெண்டிறல் புறத்து மாண்டிற லகத்தும் அண்டுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    peNTiRal puRattu mANTiRa lakattum aNTuRa vakutta varuTperunj jOti

  307. பெண்ணியன் மனமு மாணிய லறிவும் அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    peNNiyan manamu mANiya laRivum aNNuRa vakutta varuTperunj jOti

  308. தனித்தனி வடிவினுந் தக்கவாண் பெண்ணியல் அனைத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    tanittani vaTivinun takkavAN peNNiyal anaittuRa vakutta varuTperunj jOti

  309. உனற்கரு முயிருள வுடலுள வுலகுள வனைத்தையும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    unaRkaru muyiruLa vuTaluLa vulakuLa vanaittaiyum vakutta varuTperunj jOti

  310. ஓவுறா வெழுவகை யுயிர்முத லனைத்தும் ஆவகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

    OvuRA vezhuvakai yuyirmuta lanaittum Avakai vakutta varuTperunj jOti

  311. பைகளின் முட்டையிற் பாரினில் வேர்வினில் ஐபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

    paikaLin muTTaiyiR pArinil vErvinil aipeRa vamaitta varuTperunj jOti

  312. தாய்கருப் பையினுட் டங்கிய வுயிர்களை ஆய்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

    tAykarup paiyinuT Tangkiya vuyirkaLai AyvuRak kAttaru LaruTperunj jOti

  313. முட்டைவாய்ப் பயிலு முழுவுயிர்த் திரள்களை அட்டமே காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

    muTTaivAyp payilu muzhuvuyirt tiraLkaLai aTTamE kAttaru LaruTperunj jOti

  314. நிலம்பெறு முயிர்வகை நீள்குழு வனைத்தும் அலம்பெறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

    nilampeRu muyirvakai nILkuzhu vanaittum alampeRak kAttaru LaruTperunj jOti

  315. வேர்வுற வுதித்த மிகுமுயிர்த் திரள்களை ஆர்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

    vErvuRa vutitta mikumuyirt tiraLkaLai ArvuRak kAttaru LaruTperunj jOti

  316. உடலுறு பிணியா லுயிருடல் கெடாவகை அடலுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

    uTaluRu piNiyA luyiruTal keTAvakai aTaluRak kAttaru LaruTperunj jOti

  317. சிசுமுதற் பருவச் செயல்களி னுயிர்களை அசைவறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

    jijumutaR paruvaj jeyalkaLi nuyirkaLai ajaivaRak kAttaru LaruTperunj jOti

  318. உயிருறு முடலையு முடலுறு முயிரையும் அயர்வறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

    uyiruRu muTalaiyu muTaluRu muyiraiyum ayarvaRak kAttaru LaruTperunj jOti

  319. பாடுறு மவத்தைகள் பலவினு முயிர்களை ஆடுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

    pATuRu mavattaikaL palavinu muyirkaLai ATuRak kAttaru LaruTperunj jOti

  320. முச்சுட ராதியா லெச்சக வுயிரையும் அச்சறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

    mujjuTa rAtiyA lejjaka vuyiraiyum ajjaRak kAttaru LaruTperunj jOti

  321. வான்முகிற் சத்தியான் மழைபொழி வித்துயிர் ஆனறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

    vAnmukiR jattiyAn mazhaipozhi vittuyir AnaRak kAttaru LaruTperunj jOti

  322. இன்புறு சத்தியா லெழின்மழை பொழிவித் தன்புறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

    inpuRu jattiyA lezhinmazhai pozhivit tanpuRak kAttaru LaruTperunj jOti

  323. எண்ணியற் சத்தியா லெல்லா வுலகினும் அண்ணுயிர் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

    eNNiyaR jattiyA lellA vulakinum aNNuyir kAttaru LaruTperunj jOti

  324. அண்டப் புறப்புற வமுதம் பொழிந்துயிர் அண்டுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

    aNTap puRappuRa vamutam pozhintuyir aNTuRak kAttaru LaruTperunj jOti

  325. தேவரை யெல்லாந் திகழ்புற வமுதளித் தாவகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

    tEvarai yellAn tikazhpuRa vamutaLit tAvakai kAttaru LaruTperunj jOti

  326. அகப்புற வமுதளித் தைவரா திகளை அகப்படக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

    akappuRa vamutaLit taivarA tikaLai akappaTak kAttaru LaruTperunj jOti

  327. தருமக வமுதாற் சத்திசத் தர்களை அருளினிற் காக்கு மருட்பெருஞ் ஜோதி

    tarumaka vamutAR jattijat tarkaLai aruLiniR kAkku maruTperunj jOti

  328. காலமு நியதியுங் காட்டியெவ் வுயிரையும் ஆலுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

    kAlamu niyatiyung kATTiyev vuyiraiyum AluRak kAttaru LaruTperunj jOti

  329. விச்சையை யிச்சையை விளைவித் துயிர்களை அச்சறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

    vijjaiyai yijjaiyai viLaivit tuyirkaLai ajjaRak kAttaru LaruTperunj jOti

  330. போகமுங் களிப்பும் பொருந்துவித் துயிர்களை ஆகமுட் காக்கு மருட்பெருஞ் ஜோதி

    pOkamung kaLippum poruntuvit tuyirkaLai AkamuT kAkku maruTperunj jOti

  331. கலையறி வளித்துக் களிப்பினி லுயிரெலாம் அலைவறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

    kalaiyaRi vaLittuk kaLippini luyirelAm alaivaRak kAttaru LaruTperunj jOti

  332. விடய நிகழ்ச்சியான் மிகுமுயி ரனைத்தையும் அடைவுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

    viTaya nikazhjjiyAn mikumuyi ranaittaiyum aTaivuRak kAttaru LaruTperunj jOti

  333. துன்பளித் தாங்கே சுகமளித் துயிர்களை அன்புறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

    tunpaLit tAngkE jukamaLit tuyirkaLai anpuRak kAttaru LaruTperunj jOti

  334. கரணேந் தியத்தாற் களிப்புற வுயிர்களை அரணேர்ந் தளித்தரு ளருட்பெருஞ் ஜோதி

    karaNEn tiyattAR kaLippuRa vuyirkaLai araNErn taLittaru LaruTperunj jOti

  335. எத்தகை யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர்க் கத்தகை யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி

    ettakai yevvuyi reNNina vavvuyirk kattakai yaLittaru LaruTperunj jOti

  336. எப்படி யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர்க் கப்படி யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி

    eppaTi yevvuyi reNNina vavvuyirk kappaTi yaLittaru LaruTperunj jOti

  337. ஏங்கா துயிர்த்திர ளெங்கெங் கிருந்தன ஆங்காங் களித்தரு ளருட்பெருஞ் ஜோதி

    EngkA tuyirttira Lengkeng kiruntana AngkAng kaLittaru LaruTperunj jOti

  338. சொல்லுறு மசுத்தத் தொல்லுயிர்க் கவ்வகை அல்லலிற் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

    jolluRu majuttat tolluyirk kavvakai allaliR kAttaru LaruTperunj jOti

  339. சுத்தமு மசுத்தமுந் தோயுயிர்க் கிருமையின் அத்தகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

    juttamu majuttamun tOyuyirk kirumaiyin attakai kAttaru LaruTperunj jOti

  340. வாய்ந்திடுஞ் சுத்த வகையுயிர்க் கொருமையின் ஆய்ந்துறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

    vAyntiTunj jutta vakaiyuyirk korumaiyin AyntuRak kAttaru LaruTperunj jOti

  341. எவையெலா மெவையெலா மீண்டின வீண்டின அவையெலாங் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

    evaiyelA mevaiyelA mINTina vINTina avaiyelAng kAttaru LaruTperunj jOti

  342. அண்டத் துரிசையு மகிலத் துரிசையும் அண்டற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

    aNTat turijaiyu makilat turijaiyum aNTaRa vaTakku maruTperunj jOti

  343. பிண்டத் துரிசையும் பேருயிர்த் துரிசையும் அண்டற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

    piNTat turijaiyum pEruyirt turijaiyum aNTaRa vaTakku maruTperunj jOti

  344. உயிருறு மாயையி னுறுவிரி வனைத்தும் அயிரற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

    uyiruRu mAyaiyi nuRuviri vanaittum ayiraRa vaTakku maruTperunj jOti

  345. உயிருறு மிருவினை யுறுவிரி வனைத்தும் அயர்வற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

    uyiruRu miruvinai yuRuviri vanaittum ayarvaRa vaTakku maruTperunj jOti

  346. காமப் புடைப்புயிர் கண்டொட ராவகை ஆமற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

    kAmap puTaippuyir kaNToTa rAvakai AmaRa vaTakku maruTperunj jOti

  347. பொங்குறு வெகுளிப் புடைப்புக ளெல்லாம் அங்கற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

    pongkuRu vekuLip puTaippuka LellAm angkaRa vaTakku maruTperunj jOti

  348. மதம்புரை மோகமு மற்றவு மாங்காங் கதம்பெற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

    matampurai mOkamu maRRavu mAngkAng katampeRa vaTakku maruTperunj jOti

  349. வடுவுறு மசுத்த வாதனை யனைத்தையும் அடர்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

    vaTuvuRu majutta vAtanai yanaittaiyum aTarpaRa vaTakku maruTperunj jOti

  350. சுத்தமு மசுத்தமுந் தோய்ந்தவா தனைகளை அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி

    juttamu majuttamun tOyntavA tanaikaLai attakai yaTakku maruTperunj jOti

  351. நால்வயிற் றுரிசும் நண்ணுயி ராதியில் ஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

    nAlvayiR Rurijum naNNuyi rAtiyil AlaRa vaTakku maruTperunj jOti

  352. நால்வயிற் படைப்பு நால்வயிற் காப்பும் ஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

    nAlvayiR paTaippu nAlvayiR kAppum AlaRa vaTakku maruTperunj jOti

  353. மூவிடத் திருமையின் முன்னிய தொழிற்கரில் ஆவிடத் தடக்கு மருட்பெருஞ் ஜோதி

    mUviTat tirumaiyin munniya tozhiRkaril AviTat taTakku maruTperunj jOti

  354. மூவிட மும்மையின் முன்னிய தொழிற்கரில் ஆவிட மடக்கு மருட்பெருஞ் ஜோதி

    mUviTa mummaiyin munniya tozhiRkaril AviTa maTakku maruTperunj jOti

  355. தத்துவச் சேட்டையுந் தத்துவத் துரிசும் அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி

    tattuvaj jETTaiyun tattuvat turijum attakai yaTakku maruTperunj jOti

  356. சுத்தமா நிலையிற் சூழுறு விரிவை அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி

    juttamA nilaiyiR jUzhuRu virivai attakai yaTakku maruTperunj jOti

  357. கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால் அரைசது மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

    karaivinmA mAyaik karumperun tiraiyAl araijatu maRaikku maruTperunj jOti

  358. பேருறு நீலப் பெருந்திரை யதனால் ஆருயிர் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

    pEruRu nIlap peruntirai yatanAl Aruyir maRaikku maruTperunj jOti

  359. பச்சைத் திரையாற் பரவெளி யதனை அச்சுற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

    pajjait tiraiyAR paraveLi yatanai ajjuRa maRaikku maruTperunj jOti

  360. செம்மைத் திரையாற் சித்துறு வெளியை அம்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

    jemmait tiraiyAR jittuRu veLiyai ammaiyin maRaikku maruTperunj jOti

  361. பொன்மைத் திரையாற் பொருளுறு வெளியை அன்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

    ponmait tiraiyAR poruLuRu veLiyai anmaiyin maRaikku maruTperunj jOti

  362. வெண்மைத் திரையான் மெய்ப்பதி வெளியை அண்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

    veNmait tiraiyAn meyppati veLiyai aNmaiyin maRaikku maruTperunj jOti

  363. கலப்புத் திரையாற் கருதனு பவங்களை அலப்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

    kalapput tiraiyAR karutanu pavangkaLai alappuRa maRaikku maruTperunj jOti

  364. விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால் அடர்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

    viTaya nilaikaLai vevvERu tiraikaLAl aTarpuRa maRaikku maruTperunj jOti

  365. தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால் அத்திற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

    tattuva nilaikaLait tanittanit tiraiyAl attiRa maRaikku maruTperunj jOti

  366. திரைமறைப் பெல்லாந் தீர்த்தாங் காங்கே அரசுறக் காட்டு மருட்பெருஞ் ஜோதி

    tiraimaRaip pellAn tIrttAng kAngkE arajuRak kATTu maruTperunj jOti

  367. தோற்றமா மாயைத் தொடர்பறுத் தருளி னாற்றலைக் காட்டு மருட்பெருஞ் ஜோதி

    tORRamA mAyait toTarpaRut taruLi nARRalaik kATTu maruTperunj jOti

  368. சுத்தமா மாயைத் தொடர்பறுத் தருளை அத்தகை காட்டு மருட்பெருஞ் ஜோதி

    juttamA mAyait toTarpaRut taruLai attakai kATTu maruTperunj jOti

  369. எனைத்தா ணவமுத லெல்லாந் தவிர்த்தே அனுக்கிர கம்புரி யருட்பெருஞ் ஜோதி

    enaittA Navamuta lellAn tavirttE anukkira kampuri yaruTperunj jOti

  370. விடய மறைப்பெலாம் விடுவித் துயிர்களை அடைவுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி

    viTaya maRaippelAm viTuvit tuyirkaLai aTaivuRat teruTTu maruTperunj jOti

  371. சொருப மறைப்பெலாந் தொலைப்பித் துயிர்களை அருளினிற் றெருட்டு மருட்பெருஞ் ஜோதி

    jorupa maRaippelAn tolaippit tuyirkaLai aruLiniR ReruTTu maruTperunj jOti

  372. மறைப்பின் மறந்தன வருவித் தாங்கே அறத்தொடு தெருட்டு மருட்பெருஞ் ஜோதி

    maRaippin maRantana varuvit tAngkE aRattoTu teruTTu maruTperunj jOti

  373. எவ்வகை யுயிர்களு மின்புற வாங்கே அவ்வகை தெருட்டு மருட்பெருஞ் ஜோதி

    evvakai yuyirkaLu minpuRa vAngkE avvakai teruTTu maruTperunj jOti

  374. கடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க் கின்பம் அடையுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி

    kaTavuLar maRaippaik kaTintavark kinpam aTaiyuRat teruTTu maruTperunj jOti

  375. சத்திகண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம் அத்துறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி

    jattikaN maRaippait tavirttavark kinpam attuRat teruTTu maruTperunj jOti

  376. சத்தர்கண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம் அத்தகை தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி

    jattarkaN maRaippait tavirttavark kinpam attakai teruTTum aruTperunj jOti

  377. படைக்குந் தலைவர்கள் பற்பல கோடியை அடைப்புறப் படைக்கும் அருட்பெருஞ் ஜோதி

    paTaikkun talaivarkaL paRpala kOTiyai aTaippuRap paTaikkum aruTperunj jOti

  378. காக்குந் தலைவர்கள் கணக்கில்பல் கோடியை ஆக்குறக் காக்கு மருட்பெருஞ் ஜோதி

    kAkkun talaivarkaL kaNakkilpal kOTiyai AkkuRak kAkku maruTperunj jOti

  379. அடக்குந் தலைவர்க ளளவிலர் தம்மையும் அடர்ப்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

    aTakkun talaivarka LaLavilar tammaiyum aTarppaRa vaTakku maruTperunj jOti

  380. மறைக்குந் தலைவர்கள் வகைபல கோடியை அறத்தொடு மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

    maRaikkun talaivarkaL vakaipala kOTiyai aRattoTu maRaikku maruTperunj jOti

  381. தெருட்டுந் தலைவர்கள் சேர்பல கோடியை அருட்டிறந் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி

    teruTTun talaivarkaL jErpala kOTiyai aruTTiRan teruTTu maruTperunj jOti

  382. ஐந்தொழி லாதிசெய் யைவரா திகளை ஐந்தொழி லாதிசெய் யருட்பெருஞ் ஜோதி

    aintozhi lAtijey yaivarA tikaLai aintozhi lAtijey yaruTperunj jOti

  383. இறந்தவ ரெல்லா மெழுந்திட வுலகில் அறந்தலை யளித்த வருட்பெருஞ் ஜோதி

    iRantava rellA mezhuntiTa vulakil aRantalai yaLitta varuTperunj jOti

  384. செத்தவ ரெல்லாஞ் சிரித்தாங் கெழுதிறல் அத்தகை காட்டிய வருட்பெருஞ் ஜோதி

    jettava rellAnj jirittAng kezhutiRal attakai kATTiya varuTperunj jOti

  385. இறந்தவ ரெழுகவென் றெண்ணியாங் கெழுப்பிட அறந்துணை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

    iRantava rezhukaven ReNNiyAng kezhuppiTa aRantuNai yenakkaru LaruTperunj jOti

  386. செத்தவ ரெழுகெனச் செப்பியாங் கெழுப்பிட அத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

    jettava rezhukenaj jeppiyAng kezhuppiTa attiRa lenakkaru LaruTperunj jOti

  387. சித்தெலாம் வல்ல திறலளித் தெனக்கே அத்தனென் றோங்கு மருட்பெருஞ் ஜோதி

    jittelAm valla tiRalaLit tenakkE attanen ROngku maruTperunj jOti

  388. ஒன்றதி ரண்டது வொன்றினி ரண்டது ஒன்றினு ளொன்றது வொன்றெனு மொன்றே

    onRati raNTatu vonRini raNTatu onRinu LonRatu vonRenu monRE

  389. ஒன்றல ரண்டல வொன்றினி ரண்டல ஒன்றினு ளொன்றல வொன்றெனு மொன்றே

    onRala raNTala vonRini raNTala onRinu LonRala vonRenu monRE

  390. ஒன்றினி லொன்றுள வொன்றினி லொன்றில ஒன்றற வொன்றிய வொன்றெனு மொன்றே

    onRini lonRuLa vonRini lonRila onRaRa vonRiya vonRenu monRE

  391. களங்கநீத் துலகங் களிப்புற மெய்ந்நெறி விளங்கவென் னுள்ளே விளங்குமெய்ப் பொருளே

    kaLangkanIt tulakang kaLippuRa meynneRi viLangkaven nuLLE viLangkumeyp poruLE

  392. மூவிரு நிலையின் முடிநடு முடிமேல் ஓவற விளங்கு மொருமைமெய்ப் பொருளே

    mUviru nilaiyin muTinaTu muTimEl OvaRa viLangku morumaimeyp poruLE

  393. எழுநிலை மிசையே யின்புரு வாகி வழுநிலை நீக்கி வயங்குமெய்ப் பொருளே

    ezhunilai mijaiyE yinpuru vAki vazhunilai nIkki vayangkumeyp poruLE

  394. நவநிலை மிசையே நடுவுறு நடுவே சிவமய மாகித் திகழ்ந்தமெய்ப் பொருளே

    navanilai mijaiyE naTuvuRu naTuvE jivamaya mAkit tikazhntameyp poruLE

  395. ஏகா தசநிலை யாததி னடுவே ஏகா தனமிசை யிருந்தமெய்ப் பொருளே

    EkA tajanilai yAtati naTuvE EkA tanamijai yiruntameyp poruLE

  396. திரையோ தசநிலை சிவவெளி நடுவே வரையோ தருசுக வாழ்க்கைமெய்ப் பொருளே

    tiraiyO tajanilai jivaveLi naTuvE varaiyO tarujuka vAzhkkaimeyp poruLE

  397. ஈரெண் ணிலையென வியம்புமே னிலையிற் பூரண சுகமாய்ப் பொருந்துமெய்ப் பொருளே

    IreN Nilaiyena viyampumE nilaiyiR pUraNa jukamAyp poruntumeyp poruLE

  398. எல்லா நிலைகளு மிசைந்தாங் காங்கே எல்லா மாகி யிலங்குமெய்ப் பொருளே

    ellA nilaikaLu mijaintAng kAngkE ellA mAki yilangkumeyp poruLE

  399. மனாதிகள் பொருந்தா வானடு வானாய் அனாதியுண் மையதா யமர்ந்தமெய்ப் பொருளே

    manAtikaL poruntA vAnaTu vAnAy anAtiyuN maiyatA yamarntameyp poruLE

  400. தானொரு தானாய்த் தானே தானாய் ஊனுயிர் விளக்கு மொருதனிப் பொருளே

    tAnoru tAnAyt tAnE tAnAy Unuyir viLakku morutanip poruLE

  401. அதுவினு ளதுவா யதுவே யதுவாய்ப் பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே

    atuvinu LatuvA yatuvE yatuvAyp potuvinuL naTikkum pUraNap poruLE

  402. இயல்பினு ளியல்பா யியல்பே யியல்பா உயலுற விளங்கு மொருதனிப் பொருளே

    iyalpinu LiyalpA yiyalpE yiyalpA uyaluRa viLangku morutanip poruLE

  403. அருவினு ளருவா யருவரு வருவாய் உருவினுள் விளங்கு மொருபரம் பொருளே

    aruvinu LaruvA yaruvaru varuvAy uruvinuL viLangku moruparam poruLE

  404. அலகிலாச் சித்தா யதுநிலை யதுவாய் உலகெலாம் விளங்கு மொருதனிப் பொருளே

    alakilAj jittA yatunilai yatuvAy ulakelAm viLangku morutanip poruLE

  405. பொருளினுட் பொருளாய்ப் பொருளது பொருளா யொருமையின் விளங்கு மொருதனிப் பொருளே

    poruLinuT poruLAyp poruLatu poruLA yorumaiyin viLangku morutanip poruLE

  406. ஆடுறு சித்திக ளறுபத்து நான்கெழு கோடியும் விளங்கக் குலவுமெய்ப் பொருளே

    ATuRu jittika LaRupattu nAnkezhu kOTiyum viLangkak kulavumeyp poruLE

  407. கூட்டுறு சித்திகள் கோடிபல் கோடியும் ஆட்டுற விளங்கு மரும்பெரும் பொருளே

    kUTTuRu jittikaL kOTipal kOTiyum ATTuRa viLangku marumperum poruLE

  408. அறிவுறு சித்திக ளனந்தகோ டிகளும் பிறிவற விளக்கும் பெருந்தனிப் பொருளே

    aRivuRu jittika LanantakO TikaLum piRivaRa viLakkum peruntanip poruLE

  409. வீடுக ளெல்லாம் விதிநெறி விளங்க ஆடல்செய் தருளு மரும்பெரும் பொருளே

    vITuka LellAm vitineRi viLangka ATaljey taruLu marumperum poruLE

  410. பற்றுக ளெல்லாம் பதிநெறி விளங்க உற்றரு ளாடல்செய் யொருதனிப் பொருளே

    paRRuka LellAm patineRi viLangka uRRaru LATaljey yorutanip poruLE

  411. பரத்தினிற் பரமே பரத்தின்மேற் பரமே பரத்தினுட் பரமே பரம்பரம் பரமே

    parattiniR paramE parattinmER paramE parattinuT paramE paramparam paramE

  412. பரம்பெறும் பரமே பரந்தரும் பரமே பரம்பதம் பரமே பரஞ் சிதம்பரமே

    parampeRum paramE parantarum paramE parampatam paramE paranj jitamparamE

  413. பரம்புகழ் பரமே பரம்பகர் பரமே பரஞ்சுக பரமே பரஞ்சிவ பரமே

    parampukazh paramE parampakar paramE paranjjuka paramE paranjjiva paramE

  414. பரங்கொள்சிற் பரமே பரஞ்செய்தற் பரமே தரங்கொள்பொற் பரமே தனிப்பெரும் பரமே

    parangkoLjiR paramE paranjjeytaR paramE tarangkoLpoR paramE tanipperum paramE

  415. வரம்பரா பரமே வணம்பரா பரமே பரம்பரா பரமே பதம்பரா பரமே

    varamparA paramE vaNamparA paramE paramparA paramE patamparA paramE

  416. சத்திய பதமே சத்துவ பதமே நித்திய பதமே நிற்குண பதமே

    jattiya patamE jattuva patamE nittiya patamE niRkuNa patamE

  417. தத்துவ பதமே தற்பத பதமே சித்துறு பதமே சிற்சுக பதமே

    tattuva patamE taRpata patamE jittuRu patamE jiRjuka patamE

  418. தம்பரம் பதமே தனிச்சுகம் பதமே அம்பரம் பதமே யருட்பரம் பதமே

    tamparam patamE tanijjukam patamE amparam patamE yaruTparam patamE

  419. தந்திர பதமே சந்திர பதமே மந்திர பதமே மந்தண பதமே

    tantira patamE jantira patamE mantira patamE mantaNa patamE

  420. நவந்தரு பதமே நடந்தரு பதமே சிவந்தரு பதமே சிவசிவ பதமே

    navantaru patamE naTantaru patamE jivantaru patamE jivajiva patamE

  421. பிரமமெய்க் கதியே பிரமமெய்ப் பதியே பிரமநிற் குணமே பிரமசிற் குணமே

    piramameyk katiyE piramameyp patiyE piramaniR kuNamE piramajiR kuNamE

  422. பிரமமே பிரமப் பெருநிலை மிசையுறும் பரமமே பரம பதந்தருஞ் சிவமே

    piramamE piramap perunilai mijaiyuRum paramamE parama patantarunj jivamE

  423. அவனோ டவளா யதுவா யலவாய் நவமா நிலைமிசை நண்ணிய சிவமே

    avanO TavaLA yatuvA yalavAy navamA nilaimijai naNNiya jivamE

  424. எம்பொரு ளாகி யெமக்கருள் புரியுஞ் செம்பொரு ளாகிய சிவமே சிவமே

    emporu LAki yemakkaruL puriyunj jemporu LAkiya jivamE jivamE

  425. ஒருநிலை யிதுவே வுயர்நிலை யெனுமொரு திருநிலை மேவிய சிவமே சிவமே

    orunilai yituvE vuyarnilai yenumoru tirunilai mEviya jivamE jivamE

  426. மெய்வைத் தழியா வெறுவெளி நடுவுறு தெய்வப் பதியாஞ் சிவமே சிவமே

    meyvait tazhiyA veRuveLi naTuvuRu teyvap patiyAnj jivamE jivamE

  427. புரைதவிர்த் தெனக்கே பொன்முடி சூட்டிச் சிரமுற நாட்டிய சிவமே சிவமே

    puraitavirt tenakkE ponmuTi jUTTij jiramuRa nATTiya jivamE jivamE

  428. கல்வியுஞ் சாகாக் கல்வியு மழியாச் செல்வமு மளித்த சிவமே சிவமே

    kalviyunj jAkAk kalviyu mazhiyAj jelvamu maLitta jivamE jivamE

  429. அருளமு தெனக்கே யளித்தரு ணெறிவாய்த் தெருளுற வளர்க்குஞ் சிவமே சிவமே

    aruLamu tenakkE yaLittaru NeRivAyt teruLuRa vaLarkkunj jivamE jivamE

  430. சத்தெலா மாகியுந் தானொரு தானாஞ் சித்தெலாம் வல்லதோர் திருவருட் சிவமே

    jattelA mAkiyun tAnoru tAnAnj jittelAm vallatOr tiruvaruT jivamE

  431. எங்கே கருணை யியற்கையி னுள்ளன அங்கே விளங்கிய வருட்பெருஞ் சிவமே

    engkE karuNai yiyaRkaiyi nuLLana angkE viLangkiya varuTperunj jivamE

  432. யாரே யென்னினு மிரங்குகின் றார்க்குச் சீரே யளிக்குஞ் சிதம்பர சிவமே

    yArE yenninu mirangkukin RArkkuj jIrE yaLikkunj jitampara jivamE

  433. பொய்ந்நெறி யனைத்தினும் புகுத்தா தெனையருட் செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே

    poynneRi yanaittinum pukuttA tenaiyaruT jenneRi jeluttiya jiRjapaij jivamE

  434. கொல்லா நெறியே குருவரு ணெறியெனப் பல்கா லெனக்குப் பகர்ந்தமெய்ச் சிவமே

    kollA neRiyE kuruvaru NeRiyenap palkA lenakkup pakarntameyj jivamE

  435. உயிரெலாம் பொதுவி னுளம்பட நோக்குக செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே

    uyirelAm potuvi nuLampaTa nOkkuka jeyirelAm viTukenaj jeppiya jivamE

  436. பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல உயிர்த்திர ளொன்றென வுரைத்தமெய்ச் சிவமே

    payirppuRu karaNap parijukaL paRpala uyirttira LonRena vuraittameyj jivamE

  437. உயிருள்யா மெம்மு ளுயிரிவை யுணர்ந்தே உயிர்நலம் பரவுகென் றுரைத்தமெய்ச் சிவமே

    uyiruLyA memmu Luyirivai yuNarntE uyirnalam paravuken Ruraittameyj jivamE

  438. இயலரு ளொளியோ ரேகதே சத்தினாம் உயிரொளி காண்கவென் றுரைத்தமெய்ச் சிவமே

    iyalaru LoLiyO rEkatE jattinAm uyiroLi kANkaven Ruraittameyj jivamE

  439. அருளலா தணுவு மசைந்திடா ததனால் அருணலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே

    aruLalA taNuvu majaintiTA tatanAl aruNalam paravuken RaRaintameyj jivamE

  440. அருளுறி னெல்லா மாகுமீ துண்மை அருளுற முயல்கவென் றருளிய சிவமே

    aruLuRi nellA mAkumI tuNmai aruLuRa muyalkaven RaruLiya jivamE

  441. அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம் இருணெறி யெனவெனக் கியம்பிய சிவமே

    aruNeRi yonRE teruNeRi maRRelAm iruNeRi yenavenak kiyampiya jivamE

  442. அருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் புரியுந் தெருளிது வெனவே செப்பிய சிவமே

    aruLpeRiR RurumpumO raintozhil puriyun teruLitu venavE jeppiya jivamE

  443. அருளறி வொன்றே யறிவுமற் றெல்லாம் மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே

    aruLaRi vonRE yaRivumaR RellAm maruLaRi venRE vakuttameyj jivamE

  444. அருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம் மருட்சுகம் பிறவென வகுத்தமெய்ச் சிவமே

    aruTjuka monRE yarumpeRaR perunjjukam maruTjukam piRavena vakuttameyj jivamE

  445. அருட்பே றதுவே யரும்பெறற் பெரும்பே றிருட்பே றறுக்குமென் றியம்பிய சிவமே

    aruTpE RatuvE yarumpeRaR perumpE RiruTpE RaRukkumen Riyampiya jivamE

  446. அருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய் பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே

    aruTTani vallapa matuvE yelAnjjey poruTTanij jittenap pukanRameyj jivamE

  447. அருளறி யார்தமை யறியார் எம்மையும் பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே

    aruLaRi yArtamai yaRiyAr emmaiyum poruLaRi yArenap pukanRameyj jivamE

  448. அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை பொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே

    aruNilai yonRE yanaittum peRunilai poruNilai kANkenap pukanRameyj jivamE

  449. அருள்வடி வதுவே யழியாத் தனிவடி வருள்பெற முயலுகென் றருளிய சிவமே

    aruLvaTi vatuvE yazhiyAt tanivaTi varuLpeRa muyaluken RaruLiya jivamE

  450. அருளே நம்மிய லருளே நம்முரு அருளே நம்வடி வாமென்ற சிவமே

    aruLE nammiya laruLE nammuru aruLE namvaTi vAmenRa jivamE

  451. அருளே நம்மடி யருளே நம்முடி அருளே நம்நடு வாமென்ற சிவமே

    aruLE nammaTi yaruLE nammuTi aruLE namnaTu vAmenRa jivamE

  452. அருளே நம்மறி வருளே நம்மனம் அருளே நங்குண மாமென்ற சிவமே

    aruLE nammaRi varuLE nammanam aruLE nangkuNa mAmenRa jivamE

  453. அருளே நம்பதி யருளே நம்பதம் அருளே நம்மிட மாமென்ற சிவமே

    aruLE nampati yaruLE nampatam aruLE nammiTa mAmenRa jivamE

  454. அருளே நந்துணை யருளே நந்தொழில் அருளே நம்விருப் பாமென்ற சிவமே

    aruLE nantuNai yaruLE nantozhil aruLE namvirup pAmenRa jivamE

  455. அருளே நம்பொரு ளருளே நம்மொளி அருளே நாமறி வாயென்ற சிவமே

    aruLE namporu LaruLE nammoLi aruLE nAmaRi vAyenRa jivamE

  456. அருளே நங்குல மருளே நம்மினம் அருளே நாமறி வாயென்ற சிவமே

    aruLE nangkula maruLE namminam aruLE nAmaRi vAyenRa jivamE

  457. அருளே நஞ்சுக மருளே நம்பெயர் அருளே நாமறி வாயென்ற சிவமே

    aruLE nanjjuka maruLE nampeyar aruLE nAmaRi vAyenRa jivamE

  458. அருளொளி யடைந்தனை யருளமு துண்டனை அருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே

    aruLoLi yaTaintanai yaruLamu tuNTanai aruNmati vAzhkaven RaruLiya jivamE

  459. அருணிலை பெற்றனை யருள்வடி வுற்றனை அருளர சியற்றுகென் றருளிய சிவமே

    aruNilai peRRanai yaruLvaTi vuRRanai aruLara jiyaRRuken RaruLiya jivamE

  460. உள்ளகத் தமர்ந்தென துயிரிற் கலந்தருள் வள்ளல்சிற் றம்பலம் வளர்சிவ பதியே

    uLLakat tamarntena tuyiriR kalantaruL vaLLaljiR Rampalam vaLarjiva patiyE

  461. நிகரிலா வின்ப நிலைநடு வைத்தெனைத் தகவொடு காக்குந் தனிச்சிவ பதியே

    nikarilA vinpa nilainaTu vaittenait takavoTu kAkkun tanijjiva patiyE

  462. சுத்தசன் மார்க்க சுகநிலை தனிலெனைச் சத்திய னாக்கிய தனிச்சிவ பதியே

    juttajan mArkka jukanilai tanilenaij jattiya nAkkiya tanijjiva patiyE

  463. ஐவருங் காண்டற் கரும்பெரும் பொருளென் கைவரப் புரிந்த கதிசிவ பதியே

    aivarung kANTaR karumperum poruLen kaivarap purinta katijiva patiyE

  464. துன்பந் தொலைத்தருட் ஜோதியால் நிறைந்த இன்ப மெனக்கரு ளெழிற்சிவ பதியே

    tunpan tolaittaruT jOtiyAl niRainta inpa menakkaru LezhiRjiva patiyE

  465. சித்தமும் வாக்குஞ் செல்லாப் பெருநிலை ஒத்துற வேற்றிய வொருசிவ பதியே

    jittamum vAkkunj jellAp perunilai ottuRa vERRiya vorujiva patiyE

  466. கையற வனைத்துங் கடிந்தெனைத் தேற்றி வையமேல் வைத்த மாசிவ பதியே

    kaiyaRa vanaittung kaTintenait tERRi vaiyamEl vaitta mAjiva patiyE

  467. இன்புறச் சிறியே னெண்ணுதோ றெண்ணுதோ றன்பொடென் கண்ணுறு மருட்சிவ பதியே

    inpuRaj jiRiyE neNNutO ReNNutO RanpoTen kaNNuRu maruTjiva patiyE

  468. பிழையெலாம் பொறுத்தெனுட் பிறங்கிய கருணை மழையெலாம் பொழிந்து வளர்சிவ பதியே

    pizhaiyelAm poRuttenuT piRangkiya karuNai mazhaiyelAm pozhintu vaLarjiva patiyE

  469. உளத்தினுங் கண்ணினு முயிரினு மெனது குளத்தினு நிரம்பிய குருசிவ பதியே

    uLattinung kaNNinu muyirinu menatu kuLattinu nirampiya kurujiva patiyE

  470. பரமுட னபரம் பகர்நிலை யிவையெனத் திரமுற வருளிய திருவருட் குருவே

    paramuTa naparam pakarnilai yivaiyenat tiramuRa varuLiya tiruvaruT kuruvE

  471. மதிநிலை யிரவியின் வளர்நிலை யனலின் றிதிநிலை யனைத்துந் தெரித்தசற் குருவே

    matinilai yiraviyin vaLarnilai yanalin Ritinilai yanaittun terittajaR kuruvE

  472. கணநிலை யவற்றின் கருநிலை யனைத்துங் குணமுறத் தெரித்துட் குலவுசற் குருவே

    kaNanilai yavaRRin karunilai yanaittung kuNamuRat terittuT kulavujaR kuruvE

  473. பதிநிலை பசுநிலை பாச நிலையெலாம் மதியுறத் தெரித்துள் வயங்குசற் குருவே

    patinilai pajunilai pAja nilaiyelAm matiyuRat terittuL vayangkujaR kuruvE

  474. பிரம ரகசியம் பேசியென் னுளத்தே தரமுற விளங்குஞ் சாந்தசற் குருவே

    pirama rakajiyam pEjiyen nuLattE taramuRa viLangkunj jAntajaR kuruvE

  475. பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே வரமுற வளர்த்து வயங்குசற் குருவே

    parama rakajiyam pakarntena tuLattE varamuRa vaLarttu vayangkujaR kuruvE

  476. சிவரக சியமெலாந் தெரிவித் தெனக்கே நவநிலை காட்டிய ஞானசற் குருவே

    jivaraka jiyamelAn terivit tenakkE navanilai kATTiya njAnajaR kuruvE

  477. சத்திய லனைத்துஞ் சித்தியன் முழுதும் அத்தகை தெரித்த வருட்சிவ குருவே

    jattiya lanaittunj jittiyan muzhutum attakai teritta varuTjiva kuruvE

  478. அறிபவை யெல்லா மறிவித் தென்னுள்ளே பிறிவற விளங்கும் பெரியசற் குருவே

    aRipavai yellA maRivit tennuLLE piRivaRa viLangkum periyajaR kuruvE

  479. கேட்பவை யெல்லாங் கேட்பித் தெனுள்ளே வேட்கையின் விளங்கும் விமலசற் குருவே

    kETpavai yellAng kETpit tenuLLE vETkaiyin viLangkum vimalajaR kuruvE

  480. காண்பவை யெல்லாங் காட்டுவித் தெனக்கே மாண்பத மளித்து வயங்குசற் குருவே

    kANpavai yellAng kATTuvit tenakkE mANpata maLittu vayangkujaR kuruvE

  481. செய்பவை யெல்லாஞ் செய்வித் தெனக்கே உய்பவை யளித்தெனு ளோங்குசற் குருவே

    jeypavai yellAnj jeyvit tenakkE uypavai yaLittenu LOngkujaR kuruvE

  482. உண்பவை யெல்லா முண்ணுவித் தென்னுள் பண்பினில் விளங்கும் பரமசற் குருவே

    uNpavai yellA muNNuvit tennuL paNpinil viLangkum paramajaR kuruvE

  483. சாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித் தேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே

    jAkAk kalviyin RaramelAng kaRpit tEkAk karapporu LIntajaR kuruvE

  484. சத்திய மாஞ்சிவ சித்திக ளனைத்தையும் மெய்த்தகை யளித்தெனுள் விளங்குசற் குருவே

    jattiya mAnjjiva jittika Lanaittaiyum meyttakai yaLittenuL viLangkujaR kuruvE

  485. எல்லா நிலைகளு மேற்றிச் சித்தெலாம் வல்லா னெனவெனை வைத்தசற் குருவே

    ellA nilaikaLu mERRij jittelAm vallA nenavenai vaittajaR kuruvE

  486. சீருற வருளாந் தேசுற வழியாப் பேருற வென்னைப் பெற்றநற் றாயே

    jIruRa varuLAn tEjuRa vazhiyAp pEruRa vennaip peRRanaR RAyE

  487. பொருந்திய வருட்பெரும் போகமே யுறுகெனப் பெருந்தய வாலெனைப் பெற்றநற் றாயே

    poruntiya varuTperum pOkamE yuRukenap peruntaya vAlenaip peRRanaR RAyE

  488. ஆன்றசன் மார்க்க மணிபெற வெனைத்தான் ஈன்றமு தளித்த வினியநற் றாயே

    AnRajan mArkka maNipeRa venaittAn InRamu taLitta viniyanaR RAyE

  489. பசித்திடு தோறுமென் பாலணைந் தருளால் வசித்தமு தருள்புரி வாய்மைநற் றாயே

    pajittiTu tORumen pAlaNain taruLAl vajittamu taruLpuri vAymainaR RAyE

  490. தளர்ந்ததோ றடியேன் சார்பணைந் தென்னை உளந்தெளி வித்த வொருமைநற் றாயே

    taLarntatO RaTiyEn jArpaNain tennai uLanteLi vitta vorumainaR RAyE

  491. அருளமு தேமுத லைவகை யமுதமும் தெருளுற வெனக்கருள் செல்வனற் றாயே

    aruLamu tEmuta laivakai yamutamum teruLuRa venakkaruL jelvanaR RAyE

  492. இயலமு தேமுத லெழுவகை யமுதமும் உயலுற வெனக்கரு ளுரியநற் றாயே

    iyalamu tEmuta lezhuvakai yamutamum uyaluRa venakkaru LuriyanaR RAyE

  493. நண்புறு மெண்வகை நவவகை யமுதமும் பண்புற வெனக்கருள் பண்புடைத் தாயே

    naNpuRu meNvakai navavakai yamutamum paNpuRa venakkaruL paNpuTait tAyE

  494. மற்றுள வமுத வகையெலா மெனக்கே உற்றுண வளித்தரு ளோங்குநற் றாயே

    maRRuLa vamuta vakaiyelA menakkE uRRuNa vaLittaru LOngkunaR RAyE

  495. கலக்கமு மச்சமுங் கடிந்தென துளத்தே அலக்கணுந் தவிர்த்தரு ளன்புடைத் தாயே

    kalakkamu majjamung kaTintena tuLattE alakkaNun tavirttaru LanpuTait tAyE

  496. துய்ப்பினி லனைத்துஞ் சுகம்பெற வளித்தெனக் கெய்ப்பெலாந் தவிர்த்த வின்புடைத் தாயே

    tuyppini lanaittunj jukampeRa vaLittenak keyppelAn tavirtta vinpuTait tAyE

  497. சித்திக ளெல்லாந் தெளிந்திட வெனக்கே சத்தியை யளித்த தயவுடைத் தாயே

    jittika LellAn teLintiTa venakkE jattiyai yaLitta tayavuTait tAyE

  498. சத்திநி பாதந் தனையளித் தெனைமேல் வைத்தமு தளித்த மரபுடைத் தாயே

    jattini pAtan tanaiyaLit tenaimEl vaittamu taLitta marapuTait tAyE

  499. சத்திசத் தர்களெலாஞ் சார்ந்தென தேவல்செய் சித்தியை யளித்த தெய்வநற் றாயே

    jattijat tarkaLelAnj jArntena tEvaljey jittiyai yaLitta teyvanaR RAyE

  500. தன்னிக ரில்லாத் தலைவனைக் காட்டியே என்னைமே லேற்றிய வினியநற் றாயே

    tannika rillAt talaivanaik kATTiyE ennaimE lERRiya viniyanaR RAyE

  501. வெளிப்பட விரும்பிய விளைவெலா மெனக்கே யளித்தளித் தின்புசெய் யன்புடைத் தாயே

    veLippaTa virumpiya viLaivelA menakkE yaLittaLit tinpujey yanpuTait tAyE

  502. எண்ணகத் தொடுபுறத் தென்னையெஞ் ஞான்றுங் கண்ணெனக் காக்குங் கருணைநற் றாயே

    eNNakat toTupuRat tennaiyenj njAnRung kaNNenak kAkkung karuNainaR RAyE

  503. இன்னரு ளமுதளித் திறவாத் திறல்புரிந் தென்னை வளர்த்திடு மின்புடைத் தாயே

    innaru LamutaLit tiRavAt tiRalpurin tennai vaLarttiTu minpuTait tAyE

  504. என்னுட லென்னுயி ரென்னறி வெல்லாம் தன்னவென் றாக்கிய தயவுடைத் தாயே

    ennuTa lennuyi rennaRi vellAm tannaven RAkkiya tayavuTait tAyE

  505. தெரியா வகையாற் சிறியேன் றளர்ந்திடத் தரியா தணைத்த தயவுடைத் தாயே

    teriyA vakaiyAR jiRiyEn RaLarntiTat tariyA taNaitta tayavuTait tAyE

  506. சினமுத லனைத்தையுந் தீர்த்தெனை நனவினுங் கனவினும் பிரியாக் கருணைநற் றாயே

    jinamuta lanaittaiyun tIrttenai nanavinung kanavinum piriyAk karuNainaR RAyE

  507. தூக்கமுஞ் சோம்புமென் றுன்பமு மச்சமும் ஏக்கமு நீக்கிய வென்றனித் தாயே

    tUkkamunj jOmpumen Runpamu majjamum Ekkamu nIkkiya venRanit tAyE

  508. துன்பெலாந் தவிர்த்துளே யன்பெலாம் நிரம்ப இன்பெலா மளித்த வென்றனித் தந்தையே

    tunpelAn tavirttuLE yanpelAm nirampa inpelA maLitta venRanit tantaiyE

  509. எல்லா நன்மையு மென்றனக் களித்த எல்லாம் வல்லசித் தென்றனித் தந்தையே

    ellA nanmaiyu menRanak kaLitta ellAm vallajit tenRanit tantaiyE

  510. நாயிற் கடையே னலம்பெறக் காட்டிய தாயிற் பெரிதுந் தயவுடைத் தந்தையே

    nAyiR kaTaiyE nalampeRak kATTiya tAyiR peritun tayavuTait tantaiyE

  511. அறிவிலாப் பருவத் தறிவெனக் களித்தே பிறிவிலா தமர்ந்த பேரருட் டந்தையே

    aRivilAp paruvat taRivenak kaLittE piRivilA tamarnta pEraruT TantaiyE

  512. புன்னிக ரில்லேன் பொருட்டிவ ணடைந்த தன்னிக ரில்லாத் தனிப்பெருந் தந்தையே

    punnika rillEn poruTTiva NaTainta tannika rillAt tanipperun tantaiyE

  513. அகத்தினும் புறத்தினு மமர்ந்தருட் ஜோதி சகத்தினி லெனக்கே தந்தமெய்த் தந்தையே

    akattinum puRattinu mamarntaruT jOti jakattini lenakkE tantameyt tantaiyE

  514. இணையிலாக் களிப்புற் றிருந்திட வெனக்கே துணையடி சென்னியிற் சூட்டிய தந்தையே

    iNaiyilAk kaLippuR RiruntiTa venakkE tuNaiyaTi jenniyiR jUTTiya tantaiyE

  515. ஆதியீ றறியா வருளர சாட்சியிற் ஜோதிமா மகுடஞ் சூட்டிய தந்தையே

    AtiyI RaRiyA varuLara jATjiyiR jOtimA makuTanj jUTTiya tantaiyE

  516. எட்டிரண் டறிவித் தெனைத்தனி யேற்றிப் பட்டிமண் டபத்திற் பதித்தமெய்த் தந்தையே

    eTTiraN TaRivit tenaittani yERRip paTTimaN TapattiR patittameyt tantaiyE

  517. தங்கோ லளவது தந்தருட் ஜோதிச் செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே

    tangkO laLavatu tantaruT jOtij jengkOl jeluttenaj jeppiya tantaiyE

  518. தன்பொரு ளனைத்தையுந் தன்னர சாட்சியில் என்பொரு ளாக்கிய என்றனித் தந்தையே

    tanporu Lanaittaiyun tannara jATjiyil enporu LAkkiya enRanit tantaiyE

  519. தன்வடி வனைத்தையுந் தன்னர சாட்சியில் என்வடி வாக்கிய என்றனித் தந்தையே

    tanvaTi vanaittaiyun tannara jATjiyil envaTi vAkkiya enRanit tantaiyE

  520. தன்சித் தனைத்தையுந் தன்சமு கத்தினில் என்சித் தாக்கிய என்றனித் தந்தையே

    tanjit tanaittaiyun tanjamu kattinil enjit tAkkiya enRanit tantaiyE

  521. தன்வச மாகிய தத்துவ மனைத்தையும் என்வச மாக்கிய வென்னுயிர்த் தந்தையே

    tanvaja mAkiya tattuva manaittaiyum envaja mAkkiya vennuyirt tantaiyE

  522. தன்கையிற் பிடித்த தனியருட் ஜோதியை என்கையிற் கொடுத்த என்றனித் தந்தையே

    tankaiyiR piTitta taniyaruT jOtiyai enkaiyiR koTutta enRanit tantaiyE

  523. தன்னையுந் தன்னருட் சத்தியின் வடிவையும் என்னையு மொன்றென வியற்றிய தந்தையே

    tannaiyun tannaruT jattiyin vaTivaiyum ennaiyu monRena viyaRRiya tantaiyE

  524. தன்னிய லென்னியல் தன்செய லென்செயல் என்ன வியற்றிய வென்றனித் தந்தையே

    tanniya lenniyal tanjeya lenjeyal enna viyaRRiya venRanit tantaiyE

  525. தன்னுரு வென்னுரு தன்னுரை யென்னுரை என்ன வியற்றிய வென்றனித் தந்தையே

    tannuru vennuru tannurai yennurai enna viyaRRiya venRanit tantaiyE

  526. சதுரப் பேரருட் டனிப்பெருந் தலைவனென் றெதிரற் றோங்கிய வென்னுடைத் தந்தையே

    jaturap pEraruT Tanipperun talaivanen RetiraR ROngkiya vennuTait tantaiyE

  527. மனவாக் கறியா வரைப்பினி லெனக்கே இனவாக் கருளிய வென்னுயிர்த் தந்தையே

    manavAk kaRiyA varaippini lenakkE inavAk karuLiya vennuyirt tantaiyE

  528. உணர்ந்துணர்ந் துணரினு முணராப் பெருநிலை யணைந்திட வெனக்கே யருளிய தந்தையே

    uNarntuNarn tuNarinu muNarAp perunilai yaNaintiTa venakkE yaruLiya tantaiyE

  529. துரியவாழ் வுடனே சுகபூ ரணமெனும் பெரியவாழ் வளித்த பெருந்தனித் தந்தையே

    turiyavAzh vuTanE jukapU raNamenum periyavAzh vaLitta peruntanit tantaiyE

  530. ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த பேறளித் தாண்ட பெருந்தகைத் தந்தையே

    IRilAp patangkaL yAvaiyung kaTanta pERaLit tANTa peruntakait tantaiyE

  531. எவ்வகைத் திறத்தினு மெய்துதற் கரிதாம் அவ்வகை நிலையெனக் களித்தநற் றந்தையே

    evvakait tiRattinu meytutaR karitAm avvakai nilaiyenak kaLittanaR RantaiyE

  532. இனிப்பிற வாநெறி யெனக்களித் தருளிய தனிப்பெருந் தலைமைத் தந்தையே தந்தையே

    inippiRa vAneRi yenakkaLit taruLiya tanipperun talaimait tantaiyE tantaiyE

  533. பற்றயர்ந் தஞ்சிய பரிவுகண் டணைந்தெனைச் சற்றுமஞ் சேலெனத் தாங்கிய துணையே

    paRRayarn tanjjiya parivukaN TaNaintenaij jaRRumanj jElenat tAngkiya tuNaiyE

  534. தளர்ந்தவத் தருணமென் றளர்வெலாந் தவிர்த்துட் கிளர்ந்திட வெனக்குக் கிடைத்தமெய்த் துணையே

    taLarntavat taruNamen RaLarvelAn tavirttuT kiLarntiTa venakkuk kiTaittameyt tuNaiyE

  535. துறையிது வழியிது துணிவிது நீசெயும் முறையிது வெனவே மொழிந்தமெய்த் துணையே

    tuRaiyitu vazhiyitu tuNivitu nIjeyum muRaiyitu venavE mozhintameyt tuNaiyE

  536. எங்குறு தீமையு மெனைத்தொட ராவகை கங்குலும் பகலுமெய்க் காவல்செய் துணையே

    engkuRu tImaiyu menaittoTa rAvakai kangkulum pakalumeyk kAvaljey tuNaiyE

  537. வேண்டிய வேண்டிய விருப்பெலா மெனக்கே யீண்டிருந் தருள்புரி யென்னுயிர்த் துணையே

    vENTiya vENTiya viruppelA menakkE yINTirun taruLpuri yennuyirt tuNaiyE

  538. இகத்தினும் பரத்தினு மெனக்கிடர் சாரா தகத்தினும் புறத்தினு மமர்ந்தமெய்த் துணையே

    ikattinum parattinu menakkiTar jArA takattinum puRattinu mamarntameyt tuNaiyE

  539. அயர்வற வெனக்கே யருட்டுணை யாகியென் னுயிரினுஞ் சிறந்த வொருமையென் னட்பே

    ayarvaRa venakkE yaruTTuNai yAkiyen nuyirinunj jiRanta vorumaiyen naTpE

  540. அன்பினிற் கலந்தென தறிவினிற் பயின்றே இன்பினி லளைந்தவென் னின்னுயிர் நட்பே

    anpiniR kalantena taRiviniR payinRE inpini laLaintaven ninnuyir naTpE

  541. நான்புரி வனவெலாந் தான்புரிந் தெனக்கே வான்பத மளிக்க வாய்த்தநன் னட்பே

    nAnpuri vanavelAn tAnpurin tenakkE vAnpata maLikka vAyttanan naTpE

  542. உள்ளமு முணர்ச்சியு முயிருங் கலந்துகொண் டெள்ளுறு நெய்யிலென் னுள்ளுறு நட்பே

    uLLamu muNarjjiyu muyirung kalantukoN TeLLuRu neyyilen nuLLuRu naTpE

  543. செற்றமுந் தீமையுந் தீர்த்துநான் செய்த குற்றமுங் குணமாக் கொண்டவென் னட்பே

    jeRRamun tImaiyun tIrttunAn jeyta kuRRamung kuNamAk koNTaven naTpE

  544. குணங்குறி முதலிய குறித்திடா தெனையே அணங்கறக் கலந்த அன்புடை நட்பே

    kuNangkuRi mutaliya kuRittiTA tenaiyE aNangkaRak kalanta anpuTai naTpE

  545. பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல் கணக்குந் தீர்த்தெனைக் கலந்தநன் னட்பே

    piNakkum pEtamum pEyula kOrpukal kaNakkun tIrttenaik kalantanan naTpE

  546. சவலைநெஞ் சகத்தின் றளர்ச்சியு மச்சமும் கவலையுந் தவிர்த்தெனைக் கலந்தநன் னட்பே

    javalainenj jakattin RaLarjjiyu majjamum kavalaiyun tavirttenaik kalantanan naTpE

  547. களைப்பறிந் தெடுத்துக் கலக்கந் தவிர்த்தெனக் கிளைப்பறிந் துதவிய வென்னுயி ருறவே

    kaLaippaRin teTuttuk kalakkan tavirttenak kiLaippaRin tutaviya vennuyi ruRavE

  548. தன்னைத் தழுவுறு தரஞ்சிறி தறியா வென்னைத் தழுவிய வென்னுயி ருறவே

    tannait tazhuvuRu taranjjiRi taRiyA vennait tazhuviya vennuyi ruRavE

  549. மனக்குறை நீக்கிநல் வாழ்வளித் தென்றும் எனக்குற வாகிய என்னுயி ருறவே

    manakkuRai nIkkinal vAzhvaLit tenRum enakkuRa vAkiya ennuyi ruRavE

  550. துன்னு மனாதியே சூழ்ந்தெனைப் பிரியா தென்னுற வாகிய வென்னுயி ருறவே

    tunnu manAtiyE jUzhntenaip piriyA tennuRa vAkiya vennuyi ruRavE

  551. என்றுமோர் நிலையாய் என்றுமோ ரியலாய் என்றுமுள் ளதுவா மென்றனிச் சத்தே

    enRumOr nilaiyAy enRumO riyalAy enRumuL LatuvA menRanij jattE

  552. அனைத்துல கவைகளு மாங்காங் குணரினும் இனைத்தென வறியா வென்றனிச் சத்தே

    anaittula kavaikaLu mAngkAng kuNarinum inaittena vaRiyA venRanij jattE

  553. பொதுமறை முடிகளும் புகலவை முடிகளும் இதுவெனற் கரிதா மென்றனிச் சத்தே

    potumaRai muTikaLum pukalavai muTikaLum ituvenaR karitA menRanij jattE

  554. ஆகம முடிகளு மவைபுகல் முடிகளும் ஏகுதற் கரிதா மென்றனிச் சத்தே

    Akama muTikaLu mavaipukal muTikaLum EkutaR karitA menRanij jattE

  555. சத்தியஞ் சத்தியஞ் சத்திய மெனவே இத்தகை வழுத்து மென்றனிச் சத்தே

    jattiyanj jattiyanj jattiya menavE ittakai vazhuttu menRanij jattE

  556. துரியமுங் கடந்ததோர் பெரியவான் பொருளென உரைசெய் வேதங்க ளுன்னுமெய்ச் சத்தே

    turiyamung kaTantatOr periyavAn poruLena uraijey vEtangka Lunnumeyj jattE

  557. அன்றத னப்பா லதன்பரத் ததுதான் என்றிட நிறைந்த வென்றனிச் சத்தே

    anRata nappA latanparat tatutAn enRiTa niRainta venRanij jattE

  558. என்றுமுள் ளதுவாய் எங்குமோர் நிறைவாய் என்றும் விளங்கிடு மென்றனிச் சித்தே

    enRumuL LatuvAy engkumOr niRaivAy enRum viLangkiTu menRanij jittE

  559. சத்திகள் பலவாய்ச் சத்தர்கள் பலவாய் இத்தகை விளங்கு மென்றனிச் சித்தே

    jattikaL palavAyj jattarkaL palavAy ittakai viLangku menRanij jittE

  560. தத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய் இத்தகை விளங்கு மென்றனிச் சித்தே

    tattuvam palavAyt tattuvi palavAy ittakai viLangku menRanij jittE

  561. படிநிலை பலவாய்ப் பதநிலை பலவாய் இடிவற விளங்கிடு மென்றனிச் சித்தே

    paTinilai palavAyp patanilai palavAy iTivaRa viLangkiTu menRanij jittE

  562. மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய் ஏற்பட விளக்கிடு மென்றனிச் சித்தே

    mUrttarkaL palavAy mUrttikaL palavAy ERpaTa viLakkiTu menRanij jittE

  563. உயிர்வகை பலவா யுடல்வகை பலவாய் இயலுற விளக்கிடு மென்றனிச் சித்தே

    uyirvakai palavA yuTalvakai palavAy iyaluRa viLakkiTu menRanij jittE

  564. அறிவவை பலவா யறிவன பலவாய் எறிவற விளக்கிடு மென்றனிச் சித்தே

    aRivavai palavA yaRivana palavAy eRivaRa viLakkiTu menRanij jittE

  565. நினைவவை பலவாய் நினைவன பலவாய் இனைவற விளக்கிடு மென்றனிச் சித்தே

    ninaivavai palavAy ninaivana palavAy inaivaRa viLakkiTu menRanij jittE

  566. காட்சிகள் பலவாய்க் காண்பன பலவாய் ஏட்சியின் விளக்கிடு மென்றனிச் சித்தே

    kATjikaL palavAyk kANpana palavAy ETjiyin viLakkiTu menRanij jittE

  567. செய்வினை பலவாய்ச் செய்வன பலவாய் எய்வற விளக்கிடு மென்றனிச் சித்தே

    jeyvinai palavAyj jeyvana palavAy eyvaRa viLakkiTu menRanij jittE

  568. அண்ட சராசர மனைத்தையும் பிறவையும் எண்டற விளக்கு மென்றனிச் சித்தே

    aNTa jarAjara manaittaiyum piRavaiyum eNTaRa viLakku menRanij jittE

  569. எல்லாம் வல்லசித் தெனமறை புகன்றிட எல்லாம் விளக்கிடு மென்றனிச் சித்தே

    ellAm vallajit tenamaRai pukanRiTa ellAm viLakkiTu menRanij jittE

  570. ஒன்றதி லொன்றன் றுரைக்கவும் படாதாய் என்றுமோர் படித்தா மென்றனி யின்பே

    onRati lonRan Ruraikkavum paTAtAy enRumOr paTittA menRani yinpE

  571. இதுவது வென்னா வியலுடை யதுவாய் எதிரற நிறைந்த வென்றனி யின்பே

    ituvatu vennA viyaluTai yatuvAy etiraRa niRainta venRani yinpE

  572. ஆக்குறு மவத்தைக ளனைத்தையுங் கடந்துமேல் ஏக்கற நிறைந்த வென்றனி யின்பே

    AkkuRu mavattaika Lanaittaiyung kaTantumEl EkkaRa niRainta venRani yinpE

  573. அறிவுக் கறிவினி லதுவது வதுவாய் எறிவற் றோங்கிய வென்றனி யின்பே

    aRivuk kaRivini latuvatu vatuvAy eRivaR ROngkiya venRani yinpE

  574. விடய மெவற்றினு மேன்மேல் விளைந்தவை யிடையிடை யோங்கிய வென்றனி யின்பே

    viTaya mevaRRinu mEnmEl viLaintavai yiTaiyiTai yOngkiya venRani yinpE

  575. இம்மையு மறுமையு மியம்பிடு மொருமையும் எம்மையு நிரம்பிடு மென்றனி யின்பே

    immaiyu maRumaiyu miyampiTu morumaiyum emmaiyu nirampiTu menRani yinpE

  576. முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள் எத்திறத் தவர்க்குமா மென்றனி யின்பே

    muttarkaL jittarkaL jattikaL jattarkaL ettiRat tavarkkumA menRani yinpE

  577. எல்லா நிலைகளி னெல்லா வுயிருறும் எல்லா வின்புமா மென்றனி யின்பே

    ellA nilaikaLi nellA vuyiruRum ellA vinpumA menRani yinpE

  578. கரும்புறு சாறுங் கனிந்தமுக் கனியின் விரும்புறு மிரதமு மிக்கதீம் பாலும்

    karumpuRu jARung kanintamuk kaniyin virumpuRu miratamu mikkatIm pAlum

  579. குணங்கொள்கோற் றேனுங் கூட்டியொன் றாக்கி மணங்கொளப் பதஞ்செய் வகையுற வியற்றிய

    kuNangkoLkOR REnung kUTTiyon RAkki maNangkoLap patanjjey vakaiyuRa viyaRRiya

  580. உணவெனப் பல்கா லுரைக்கினு நிகரா வணமுறு மின்ப மயமே யதுவாய்க்

    uNavenap palkA luraikkinu nikarA vaNamuRu minpa mayamE yatuvAyk

  581. கலந்தறி வுருவாய்க் கருதுதற் கரிதாய் நலந்தரு விளக்கமு நவிலருந் தண்மையும்

    kalantaRi vuruvAyk karututaR karitAy nalantaru viLakkamu navilarun taNmaiyum

  582. உள்ளதா யென்று முள்ளதா யென்னுள் உள்ளதா யென்ற னுயிருள முடம்புடன்

    uLLatA yenRu muLLatA yennuL uLLatA yenRa nuyiruLa muTampuTan

  583. எல்லா மினிப்ப வியலுறு சுவையளித் தெல்லாம் வல்லசித் தியற்கைய தாகிச்

    ellA minippa viyaluRu juvaiyaLit tellAm vallajit tiyaRkaiya tAkij

  584. சாகா வரமுந் தனித்தபே ரறிவும் மாகா தலிற்சிவ வல்லப சத்தியும்

    jAkA varamun tanittapE raRivum mAkA taliRjiva vallapa jattiyum

  585. செயற்கரு மனந்த சித்தியு மின்பமும் மயக்கறத் தருந்திறல் வண்மைய தாகிப்

    jeyaRkaru mananta jittiyu minpamum mayakkaRat taruntiRal vaNmaiya tAkip

  586. பூரண வடிவாய்ப் பொங்கிமேற் றதும்பி ஆரண முடியுட னாகம முடியுங்

    pUraNa vaTivAyp pongkimER Ratumpi AraNa muTiyuTa nAkama muTiyung

  587. கடந்தென தறிவாங் கனமேற் சபைநடு நடந்திகழ் கின்றமெஞ் ஞானவா ரமுதே

    kaTantena taRivAng kanamER japainaTu naTantikazh kinRamenj njAnavA ramutE

  588. சத்திய வமுதே தனித்திரு வமுதே நித்திய வமுதே நிறைசிவ வமுதே

    jattiya vamutE tanittiru vamutE nittiya vamutE niRaijiva vamutE

  589. சச்சிதா னந்தத் தனிமுத லமுதே மெய்ச்சிதா காச விளைவரு ளமுதே

    jajjitA nantat tanimuta lamutE meyjjitA kAja viLaivaru LamutE

  590. ஆனந்த வமுதே யருளொளி யமுதே தானந்த மில்லாத் தத்துவ வமுதே

    Ananta vamutE yaruLoLi yamutE tAnanta millAt tattuva vamutE

  591. நவநிலை தருமோர் நல்லதெள் ளமுதே சிவநிலை தனிலே திரண்டவுள் ளமுதே

    navanilai tarumOr nallateL LamutE jivanilai tanilE tiraNTavuL LamutE

  592. பொய்படாக் கருணைப் புண்ணிய வமுதே கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள்வா னமுதே

    poypaTAk karuNaip puNNiya vamutE kaipaTAp perunjjIrk kaTavuLvA namutE

  593. அகம்புற மகப்புற மாகிய புறப்புறம் உகந்தநான் கிடத்து மோங்கிய வமுதே

    akampuRa makappuRa mAkiya puRappuRam ukantanAn kiTattu mOngkiya vamutE

  594. பனிமுத னீக்கிய பரம்பர வமுதே தனிமுத லாய சிதம்பர வமுதே

    panimuta nIkkiya parampara vamutE tanimuta lAya jitampara vamutE

  595. உலகெலாங் கொள்ளினு முலப்பிலா வமுதே அலகிலாப் பெருந்திற லற்புத வமுதே

    ulakelAng koLLinu mulappilA vamutE alakilAp peruntiRa laRputa vamutE

  596. அண்டமு மதன்மே லண்டமு மவற்றுள பண்டமுங் காட்டிய பரம்பர மணியே

    aNTamu matanmE laNTamu mavaRRuLa paNTamung kATTiya parampara maNiyE

  597. பிண்டமு மதிலுறு பிண்டமு மவற்றுள பண்டமுங் காட்டிய பராபர மணியே

    piNTamu matiluRu piNTamu mavaRRuLa paNTamung kATTiya parApara maNiyE

  598. நினைத்தவை நினைத்தவை நினைத்தாங் கெய்துற அனைத்தையுந் தருமோ ரரும்பெறன் மணியே

    ninaittavai ninaittavai ninaittAng keytuRa anaittaiyun tarumO rarumpeRan maNiyE

  599. விண்பத மனைத்து மேற்பத முழுவதுங் கண்பெற நடத்துங் ககனமா மணியே

    viNpata manaittu mERpata muzhuvatung kaNpeRa naTattung kakanamA maNiyE

  600. பார்பத மனைத்தும் பகரடி முழுவதுஞ் சார்புற நடத்துஞ் சரவொளி மணியே

    pArpata manaittum pakaraTi muzhuvatunj jArpuRa naTattunj jaravoLi maNiyE

  601. அண்டகோ டிகளெலா மரைக்கணத் தேகிக் கண்டுகொண் டிடவொளிர் கலைநிறை மணியே

    aNTakO TikaLelA maraikkaNat tEkik kaNTukoN TiTavoLir kalainiRai maNiyE

  602. சராசர வுயிர்தொறுஞ் சாற்றிய பொருடொறும் விராவியுள் விளங்கும் வித்தக மணியே

    jarAjara vuyirtoRunj jARRiya poruToRum virAviyuL viLangkum vittaka maNiyE

  603. மூவரு முனிவரு முத்தருஞ் சித்தருந் தேவரு மதிக்குஞ் சித்திசெய் மணியே

    mUvaru munivaru muttarunj jittarun tEvaru matikkunj jittijey maNiyE

  604. தாழ்வெலாந் தவிர்த்துச் சகமிசை யழியா வாழ்வெனக் களித்த வளரொளி மணியே

    tAzhvelAn tavirttuj jakamijai yazhiyA vAzhvenak kaLitta vaLaroLi maNiyE

  605. நவமணி முதலிய நலமெலாந் தருமொரு சிவமணி யெனுமருட் செல்வமா மணியே

    navamaNi mutaliya nalamelAn tarumoru jivamaNi yenumaruT jelvamA maNiyE

  606. வான்பெறற் கரிய வகையெலாம் விரைந்து நான்பெற வளித்த நாதமந் திரமே

    vAnpeRaR kariya vakaiyelAm viraintu nAnpeRa vaLitta nAtaman tiramE

  607. கற்பம் பலபல கழியினு மழியாப் பொற்புற வளித்த புனிதமந் திரமே

    kaRpam palapala kazhiyinu mazhiyAp poRpuRa vaLitta punitaman tiramE

  608. அகரமு முகரமு மழியாச் சிகரமும் வகரமு மாகிய வாய்மைமந் திரமே

    akaramu mukaramu mazhiyAj jikaramum vakaramu mAkiya vAymaiman tiramE

  609. ஐந்தென வெட்டென வாறென நான்கென முந்துறு மறைமுறை மொழியுமந் திரமே

    aintena veTTena vARena nAnkena muntuRu maRaimuRai mozhiyuman tiramE

  610. வேதமு மாகம விரிவுக ளனைத்தும் ஓதநின் றுலவா தோங்குமந் திரமே

    vEtamu mAkama virivuka Lanaittum Otanin RulavA tOngkuman tiramE

  611. உடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி யனைத்தையு மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே

    uTaRpiNi yanaittaiyu muyirppiNi yanaittaiyu maTarppaRat tavirtta varuTjiva maruntE

  612. சித்திக்கு மூலமாஞ் சிவமருந் தெனவுளந் தித்திக்கு ஞானத் திருவருண் மருந்தே

    jittikku mUlamAnj jivamarun tenavuLan tittikku njAnat tiruvaruN maruntE

  613. இறந்தவ ரெல்லா மெழுந்திடப் புரியுஞ் சிறந்தவல் லபமுறு திருவருண் மருந்தே

    iRantava rellA mezhuntiTap puriyunj jiRantaval lapamuRu tiruvaruN maruntE

  614. மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே

    maraNap perumpiNi vArA vakaimiku karaNap peruntiRal kATTiya maruntE

  615. நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும் உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே

    naraitirai mUppavai naNNA vakaitarum uraitaru perunjjI ruTaiyanan maruntE

  616. என்றே யென்னினு மிளமையோ டிருக்க நன்றே தருமொரு ஞானமா மருந்தே

    enRE yenninu miLamaiyO Tirukka nanRE tarumoru njAnamA maruntE

  617. மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர் நலத்தகை யதுவென நாட்டிய மருந்தே

    malappiNi tavirttaruL valantaru kinRatOr nalattakai yatuvena nATTiya maruntE

  618. சிற்சபை நடுவே திருநடம் புரியும் அற்புத மருந்தெனு மானந்த மருந்தே

    jiRjapai naTuvE tirunaTam puriyum aRputa maruntenu mAnanta maruntE

  619. இடையுறப் படாத வியற்கை விளக்கமாய்த் தடையொன்று மில்லாத் தகவுடை யதுவாய்

    iTaiyuRap paTAta viyaRkai viLakkamAyt taTaiyonRu millAt takavuTai yatuvAy

  620. மாற்றிவை யென்ன மதித்தளப் பரிதாய் ஊற்றமும் வண்ணமு மொருங்குடை யதுவாய்க்

    mARRivai yenna matittaLap paritAy URRamum vaNNamu morungkuTai yatuvAyk

  621. காட்சிக் கினியநற் கலையுடை யதுவாய் ஆட்சிக் குரியபன் மாட்சியு முடைத்தாய்

    kATjik kiniyanaR kalaiyuTai yatuvAy ATjik kuriyapan mATjiyu muTaittAy

  622. கைதவர் கனவினுங் காண்டற் கரிதாய்ச் செய்தவப் பயனாந் திருவருள் வலத்தால்

    kaitavar kanavinung kANTaR karitAyj jeytavap payanAn tiruvaruL valattAl

  623. உளம்பெறு மிடமெலா முதவுக வெனவே வளம்பட வாய்த்து மன்னிய பொன்னே

    uLampeRu miTamelA mutavuka venavE vaLampaTa vAyttu manniya ponnE

  624. புடம்படாத் தரமும் விடம்படாத் திறமும் வடம்படா நலமும் வாய்த்தசெம் பொன்னே

    puTampaTAt taramum viTampaTAt tiRamum vaTampaTA nalamum vAyttajem ponnE

  625. மும்மையுந் தருமொரு செம்மையை யுடைத்தாய் இம்மையே கிடைத்திங் கிலங்கிய பொன்னே

    mummaiyun tarumoru jemmaiyai yuTaittAy immaiyE kiTaitting kilangkiya ponnE

  626. எடுத்தெடுத் துதவினு மென்றுங் குறையா தடுத்தடுத் தோங்குமெய் யருளுடைப் பொன்னே

    eTutteTut tutavinu menRung kuRaiyA taTuttaTut tOngkumey yaruLuTaip ponnE

  627. தளர்ந்திடே லெடுக்கின் வளர்ந்திடு வேமெனக் கிளர்ந்திட வுரைத்துக் கிடைத்தசெம் பொன்னே

    taLarntiTE leTukkin vaLarntiTu vEmenak kiLarntiTa vuraittuk kiTaittajem ponnE

  628. எண்ணிய தோறு மியற்றுக வென்றனை யண்ணியென் கரத்தி லமர்ந்தபைம் பொன்னே

    eNNiya tORu miyaRRuka venRanai yaNNiyen karatti lamarntapaim ponnE

  629. நீகேண் மறக்கினு நின்னையாம் விட்டுப் போகே மெனவெனைப் பொருந்திய பொன்னே

    nIkEN maRakkinu ninnaiyAm viTTup pOkE menavenaip poruntiya ponnE

  630. எண்ணிய வெண்ணியாங் கெய்திட வெனக்குப் பண்ணிய தவத்தாற் பழுத்தசெம் பொன்னே

    eNNiya veNNiyAng keytiTa venakkup paNNiya tavattAR pazhuttajem ponnE

  631. விண்ணியற் றலைவரும் வியந்திட வெனக்குப் புண்ணியப் பயனாற் பூத்தசெம் பொன்னே

    viNNiyaR Ralaivarum viyantiTa venakkup puNNiyap payanAR pUttajem ponnE

  632. நால்வகை நெறியினு நாட்டுக வெனவே பால்வகை முழுதும் பணித்தபைம் பொன்னே

    nAlvakai neRiyinu nATTuka venavE pAlvakai muzhutum paNittapaim ponnE

  633. எழுவகை நெறியினு மியற்றுக வெனவே முழுவகை காட்டி முயங்கிய பொன்னே

    ezhuvakai neRiyinu miyaRRuka venavE muzhuvakai kATTi muyangkiya ponnE

  634. எண்ணிய படியெலா மியற்றுக வென்றெனைப் புண்ணிய பலத்தாற் பொருந்திய நிதியே

    eNNiya paTiyelA miyaRRuka venRenaip puNNiya palattAR poruntiya nitiyE

  635. ஊழிதோ றூழி யுலப்புறா தோங்கி வாழியென் றெனக்கு வாய்த்தநன் னிதியே

    UzhitO RUzhi yulappuRA tOngki vAzhiyen Renakku vAyttanan nitiyE

  636. இதமுற வூழிதோ றெடுத்தெடுத் துலகோர்க் குதவினு முலவா தோங்குநன் னிதியே

    itamuRa vUzhitO ReTutteTut tulakOrk kutavinu mulavA tOngkunan nitiyE

  637. இருநிதி யெழுநிதி யியனவ நிதிமுதற் றிருநிதி யெல்லாந் தருமொரு நிதியே

    iruniti yezhuniti yiyanava nitimutaR Riruniti yellAn tarumoru nitiyE

  638. எவ்வகை நிதிகளு மிந்தமா நிதியிடை அவ்வகை கிடைக்குமென் றருளிய நிதியே

    evvakai nitikaLu mintamA nitiyiTai avvakai kiTaikkumen RaruLiya nitiyE

  639. அற்புதம் விளங்கு மருட்பெரு நிதியே கற்பனை கடந்த கருணைமா நிதியே

    aRputam viLangku maruTperu nitiyE kaRpanai kaTanta karuNaimA nitiyE

  640. நற்குண நிதியே சற்குண நிதியே நிற்குண நிதியே சிற்குண நிதியே

    naRkuNa nitiyE jaRkuNa nitiyE niRkuNa nitiyE jiRkuNa nitiyE

  641. பளகிலா தோங்கும் பளிக்குமா மலையே வளமெலா நிறைந்த மாணிக்க மலையே

    paLakilA tOngkum paLikkumA malaiyE vaLamelA niRainta mANikka malaiyE

  642. மதியுற விளங்கு மரகத மலையே வதிதரு பேரொளி வச்சிர மலையே

    matiyuRa viLangku marakata malaiyE vatitaru pEroLi vajjira malaiyE

  643. உரைமனங் கடந்தாங் கோங்குபொன் மலையே துரியமேல் வெளியிற் ஜோதிமா மலையே

    uraimanang kaTantAng kOngkupon malaiyE turiyamEl veLiyiR jOtimA malaiyE

  644. புற்புதந் திரைநுரை புரைமுத லிலதோர் அற்புதக் கடலே யமுதத்தண் கடலே

    puRputan tirainurai puraimuta lilatOr aRputak kaTalE yamutattaN kaTalE

  645. இருட்கலை தவிர்த்தொளி யெல்லாம் வழங்கிய அருட்பெருங் கடலே யானந்தக் கடலே

    iruTkalai tavirttoLi yellAm vazhangkiya aruTperung kaTalE yAnantak kaTalE

  646. பவக்கடல் கடந்துநான் பார்த்தபோ தருகே உவப்புறு வளங்கொண் டோங்கிய கரையே

    pavakkaTal kaTantunAn pArttapO tarukE uvappuRu vaLangkoN TOngkiya karaiyE

  647. என்றுயர்ச் சோடைக ளெல்லாந் தவிர்த்துள நன்றுற விளங்கிய நந்தனக் காவே

    enRuyarj jOTaika LellAn tavirttuLa nanRuRa viLangkiya nantanak kAvE

  648. சேற்றுநீ ரின்றிநற் றீஞ்சுவை தருமோர் ஊற்றுநீர் நிரம்ப வுடையபூந் தடமே

    jERRunI rinRinaR RInjjuvai tarumOr URRunIr nirampa vuTaiyapUn taTamE

  649. கோடைவாய் விரிந்த குளிர்தரு நிழலே மேடைவாய் வீசிய மெல்லிய காற்றே

    kOTaivAy virinta kuLirtaru nizhalE mETaivAy vIjiya melliya kARRE

  650. களைப்பறக் கிடைத்த கருணைநன் னீரே இளைப்பற வாய்த்த வின்சுவை யுணவே

    kaLaippaRak kiTaitta karuNainan nIrE iLaippaRa vAytta vinjuvai yuNavE

  651. தென்னைவாய்க் கிடைத்த செவ்விள நீரே தென்னைவான் பலத்திற் றிருகுதீம் பாலே

    tennaivAyk kiTaitta jevviLa nIrE tennaivAn palattiR RirukutIm pAlE

  652. நீர்நசை தவிர்க்கு நெல்லியங் கனியே வேர்விளை பலவின் மென்சுவைச் சுளையே

    nIrnajai tavirkku nelliyang kaniyE vErviLai palavin menjuvaij juLaiyE

  653. கட்டுமாம் பழமே கதலிவான் பழமே இட்டநற் சுவைசெய் யிலந்தையங் கனியே

    kaTTumAm pazhamE katalivAn pazhamE iTTanaR juvaijey yilantaiyang kaniyE

  654. புனிதவான் றருவிற் புதுமையாம் பலமே கனியெலாங் கூட்டிக் கலந்ததீஞ் சுவையே

    punitavAn RaruviR putumaiyAm palamE kaniyelAng kUTTik kalantatInj juvaiyE

  655. இதந்தரு கரும்பி லெடுத்ததீஞ் சாறே பதந்தரு வெல்லப் பாகினின் சுவையே

    itantaru karumpi leTuttatInj jARE patantaru vellap pAkinin juvaiyE

  656. சாலவே யினிக்குஞ் சர்க்கரைத் திரளே ஏலவே நாவுக் கினியகற் கண்டே

    jAlavE yinikkunj jarkkarait tiraLE ElavE nAvuk kiniyakaR kaNTE

  657. உலப்புறா தினிக்கு முயர்மலைத் தேனே கலப்புறா மதுரங் கனிந்தகோற் றேனே

    ulappuRA tinikku muyarmalait tEnE kalappuRA maturang kanintakOR REnE

  658. நவையிலா தெனக்கு நண்ணிய நறவே சுவையெலாந் திரட்டிய தூயதீம் பதமே

    navaiyilA tenakku naNNiya naRavE juvaiyelAn tiraTTiya tUyatIm patamE

  659. பதம்பெறக் காய்ச்சிய பசுநறும் பாலே இதம்பெற வுருக்கிய விளம்பசு நெய்யே

    patampeRak kAyjjiya pajunaRum pAlE itampeRa vurukkiya viLampaju neyyE

  660. உலர்ந்திடா தென்று மொருபடித் தாகி மலர்ந்துநல் வண்ணம் வயங்கிய மலரே

    ularntiTA tenRu morupaTit tAki malarntunal vaNNam vayangkiya malarE

  661. இகந்தரு புவிமுத லெவ்வுல குயிர்களும் உகந்திட மணக்குஞ் சுகந்தநன் மணமே

    ikantaru puvimuta levvula kuyirkaLum ukantiTa maNakkunj jukantanan maNamE

  662. யாழுறு மிசையே யினியவின் னிசையே ஏழுறு மிசையே யியலரு ளிசையே

    yAzhuRu mijaiyE yiniyavin nijaiyE EzhuRu mijaiyE yiyalaru LijaiyE

  663. திவளொளிப் பருவஞ் சேர்ந்தநல் லவளே அவளொடுங் கூடி யடைந்ததோர் சுகமே

    tivaLoLip paruvanj jErntanal lavaLE avaLoTung kUTi yaTaintatOr jukamE

  664. நாதநல் வரைப்பி னண்ணிய பாட்டே வேதகீ தத்தில் விளைதிருப் பாட்டே

    nAtanal varaippi naNNiya pATTE vEtakI tattil viLaitirup pATTE

  665. நன்மார்க்கர் நாவி னவிற்றிய பாட்டே சன்மார்க்க சங்கந் தழுவிய பாட்டே

    nanmArkkar nAvi naviRRiya pATTE janmArkka jangkan tazhuviya pATTE

  666. நம்புறு மாகம நவிற்றிய பாட்டே எம்பல மாகிய வம்பலப் பாட்டே

    nampuRu mAkama naviRRiya pATTE empala mAkiya vampalap pATTE

  667. என்மனக் கண்ணே என்னருட் கண்ணே என்னிரு கண்ணே யென்கணுண் மணியே

    enmanak kaNNE ennaruT kaNNE enniru kaNNE yenkaNuN maNiyE

  668. என்பெருங் களிப்பே யென்பெரும் பொருளே என்பெருந் திறலே யென்பெருஞ் செயலே

    enperung kaLippE yenperum poruLE enperun tiRalE yenperunj jeyalE

  669. என்பெருந் தவமே என்றவப் பலனே என்பெருஞ் சுகமே யென்பெரும் பேறே

    enperun tavamE enRavap palanE enperunj jukamE yenperum pERE

  670. என்பெரு வாழ்வே யென்றென்வாழ் முதலே என்பெரு வழக்கே யென்பெருங் கணக்கே

    enperu vAzhvE yenRenvAzh mutalE enperu vazhakkE yenperung kaNakkE

  671. என்பெரு நலமே யென்பெருங் குலமே என்பெரு வலமே யென்பெரும் புலமே

    enperu nalamE yenperung kulamE enperu valamE yenperum pulamE

  672. என்பெரு வரமே யென்பெருந் தரமே என்பெரு நெறியே யென்பெரு நிலையே

    enperu varamE yenperun taramE enperu neRiyE yenperu nilaiyE

  673. என்பெருங் குணமே என்பெருங் கருத்தே என்பெருந் தயவே யென்பெருங் கதியே

    enperung kuNamE enperung karuttE enperun tayavE yenperung katiyE

  674. என்பெரும் பதியே யென்னுயி ரியலே என்பெரு நிறைவே யென்றனி யறிவே

    enperum patiyE yennuyi riyalE enperu niRaivE yenRani yaRivE

  675. தோலெலாங் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும் மேலெலாங் கட்டவை விட்டுவிட் டியங்கிட

    tOlelAng kuzhaintiTaj jUzhnaram panaittum mElelAng kaTTavai viTTuviT TiyangkiTa

  676. என்பெலா நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட மென்புடைத் தசையெலா மெய்யுறத் தளர்ந்திட

    enpelA nekkunek kiyaliTai nekizhntiTa menpuTait tajaiyelA meyyuRat taLarntiTa

  677. இரத்த மனைத்துமுள் ளிறுகிடச் சுக்கிலம் உரத்திடை பந்தித் தொருதிர ளாயிட

    iratta manaittumuL LiRukiTaj jukkilam urattiTai pantit torutira LAyiTa

  678. மடலெலா மூளை மலர்ந்திட வமுதம் உடலெலா மூற்றெடுத் தோடி நிரம்பிட

    maTalelA mULai malarntiTa vamutam uTalelA mURReTut tOTi nirampiTa

  679. ஒண்ணுதல் வியர்த்திட வொளிமுக மலர்ந்திட தண்ணிய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட

    oNNutal viyarttiTa voLimuka malarntiTa taNNiya vuyirppiniR jAntan tatumpiTa

  680. உண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக் கண்ணினீர் பெருகிக் கால்வழிந் தோடிட

    uNNakai tORRiTa vurOmam poTittiTak kaNNinIr perukik kAlvazhin tOTiTa

  681. வாய்துடித் தலறிட வளர்செவித் துணைகளிற் கூயிசைப் பொறியெலாங் கும்மெனக் கொட்டிட

    vAytuTit talaRiTa vaLarjevit tuNaikaLiR kUyijaip poRiyelAng kummenak koTTiTa

  682. மெய்யெலாங் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக் கையெலாங் குவிந்திடக் காலெலாஞ் சுலவிட

    meyyelAng kuLirntiTa menmAr pajaintiTak kaiyelAng kuvintiTak kAlelAnj julaviTa

  683. மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட இனம்பெறு சித்த மியைந்து களித்திட

    manangkanin turukiTa matiniRain toLirntiTa inampeRu jitta miyaintu kaLittiTa

  684. அகங்கார மாங்காங் கதிகரிப் பமைந்திடச் சகங்காண வுள்ளந் தழைத்து மலர்ந்திட

    akangkAra mAngkAng katikarip pamaintiTaj jakangkANa vuLLan tazhaittu malarntiTa

  685. அறிவுரு வனைத்து மானந்த மாயிடப் பொறியுறு மான்மதற் போதமும் போயிடத்

    aRivuru vanaittu mAnanta mAyiTap poRiyuRu mAnmataR pOtamum pOyiTat

  686. தத்துவ மனைத்துந் தாமொருங் கொழிந்திடச் சத்துவ மொன்றே தனித்துநின் றோங்கிட

    tattuva manaittun tAmorung kozhintiTaj jattuva monRE tanittunin ROngkiTa

  687. உலகெலாம் விடய முளவெலா மறைந்திட அலகிலா வருளி னாசைமேற் பொங்கிட

    ulakelAm viTaya muLavelA maRaintiTa alakilA varuLi nAjaimER pongkiTa

  688. என்னுளத் தெழுந்துயி ரெல்லா மலர்ந்திட என்னுளத் தோங்கிய என்றனி யன்பே

    ennuLat tezhuntuyi rellA malarntiTa ennuLat tOngkiya enRani yanpE

  689. பொன்னடி கண்டருட் புத்தமு துணவே என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே

    ponnaTi kaNTaruT puttamu tuNavE ennuLat tezhunta vennuTai yanpE

  690. தன்னையே யெனக்குத் தந்தரு ளொளியால் என்னைவே தித்த என்றனி யன்பே

    tannaiyE yenakkut tantaru LoLiyAl ennaivE titta enRani yanpE

  691. என்னுளே யரும்பி யென்னுளே மலர்ந்து என்னுளே விரிந்த என்னுடை யன்பே

    ennuLE yarumpi yennuLE malarntu ennuLE virinta ennuTai yanpE

  692. என்னுளே விளங்கி யென்னுளே பழுத்து என்னுளே கனிந்த வென்னுடை யன்பே

    ennuLE viLangki yennuLE pazhuttu ennuLE kaninta vennuTai yanpE

  693. தன்னுளே நிறைவுறு தரமெலா மளித்தே என்னுளே நிறைந்த என்றனி யன்பே

    tannuLE niRaivuRu taramelA maLittE ennuLE niRainta enRani yanpE

  694. துன்புள வனைத்துந் தொலைத்தென துருவை யின்புறு வாக்கிய என்னுடை யன்பே

    tunpuLa vanaittun tolaittena turuvai yinpuRu vAkkiya ennuTai yanpE

  695. பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டா என்னுளங் கலந்த என்றனி யன்பே

    ponnuTam penakkup poruntiTum poruTTA ennuLang kalanta enRani yanpE

  696. தன்வச மாகித் ததும்பிமேற் பொங்கி என்வசங் கடந்த என்னுடை யன்பே

    tanvaja mAkit tatumpimER pongki envajang kaTanta ennuTai yanpE

  697. தன்னுளே பொங்கிய தண்ணமு துணவே என்னுளே பொங்கிய என்றனி யன்பே

    tannuLE pongkiya taNNamu tuNavE ennuLE pongkiya enRani yanpE

  698. அருளொளி விளங்கிட வாணவ மெனுமோர் இருளற வென்னுளத் தேற்றிய விளக்கே

    aruLoLi viLangkiTa vANava menumOr iruLaRa vennuLat tERRiya viLakkE

  699. துன்புறு தத்துவத் துரிசெலா நீக்கிநல் லின்புற வென்னுளத் தேற்றிய விளக்கே

    tunpuRu tattuvat turijelA nIkkinal linpuRa vennuLat tERRiya viLakkE

  700. மயலற வழியா வாழ்வுமேன் மேலும் இயலுற வென்னுளத் தேற்றிய விளக்கே

    mayalaRa vazhiyA vAzhvumEn mElum iyaluRa vennuLat tERRiya viLakkE

  701. இடுவெளி யனைத்து மியலொளி விளங்கிட நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே

    iTuveLi yanaittu miyaloLi viLangkiTa naTuveLi naTuvE nATTiya viLakkE

  702. கருவெளி யனைத்துங் கதிரொளி விளங்கிட உருவெளி நடுவே யொளிர்தரு விளக்கே

    karuveLi yanaittung katiroLi viLangkiTa uruveLi naTuvE yoLirtaru viLakkE

  703. தேற்றிய வேதத் திருமுடி விளங்கிட ஏற்றிய ஞான வியலொளி விளக்கே

    tERRiya vEtat tirumuTi viLangkiTa ERRiya njAna viyaloLi viLakkE

  704. ஆகம முடிமே லருளொளி விளங்கிட வேகம தறவே விளங்கொளி விளக்கே

    Akama muTimE laruLoLi viLangkiTa vEkama taRavE viLangkoLi viLakkE

  705. ஆரியர் வழுத்திய வருணிலை யனாதி காரியம் விளக்குமோர் காரண விளக்கே

    Ariyar vazhuttiya varuNilai yanAti kAriyam viLakkumOr kAraNa viLakkE

  706. தண்ணிய வமுதே தந்தென துளத்தே புண்ணியம் பலித்த பூரண மதியே

    taNNiya vamutE tantena tuLattE puNNiyam palitta pUraNa matiyE

  707. உய்தர வமுத முதவியென் னுளத்தே செய்தவம் பலித்த திருவளர் மதியே

    uytara vamuta mutaviyen nuLattE jeytavam palitta tiruvaLar matiyE

  708. பதியெலாந் தழைக்கப் பதம்பெறு மமுத நிதியெலா மளித்த நிறைதிரு மதியே

    patiyelAn tazhaikkap patampeRu mamuta nitiyelA maLitta niRaitiru matiyE

  709. பாலெனத் தண்கதிர் பரப்பியெஞ் ஞான்று மேல்வெளி விளங்க விளங்கிய மதியே

    pAlenat taNkatir parappiyenj njAnRu mElveLi viLangka viLangkiya matiyE

  710. உயங்கிய உள்ளமு முயிருந் தழைத்திட வயங்கிய கருணை மழைபொழி மழையே

    uyangkiya uLLamu muyirun tazhaittiTa vayangkiya karuNai mazhaipozhi mazhaiyE

  711. என்னையும் பணிகொண் டென்னுளே நிரம்ப மன்னிய கருணை மழைபொழி மழையே

    ennaiyum paNikoN TennuLE nirampa manniya karuNai mazhaipozhi mazhaiyE

  712. உளங்கொளு மெனக்கே யுவகைமேற் பொங்கி வளங்கொளக் கருணை மழைபொழி மழையே

    uLangkoLu menakkE yuvakaimER pongki vaLangkoLak karuNai mazhaipozhi mazhaiyE

  713. நலந்தர வுடலுயிர் நல்லறி வெனக்கே மலர்ந்திடக் கருணை மழைபொழி மழையே

    nalantara vuTaluyir nallaRi venakkE malarntiTak karuNai mazhaipozhi mazhaiyE

  714. தூய்மையா லெனது துரிசெலா நீக்கிநல் வாய்மையாற் கருணை மழைபொழி மழையே

    tUymaiyA lenatu turijelA nIkkinal vAymaiyAR karuNai mazhaipozhi mazhaiyE

  715. வெம்மல விரவது விடிதரு ணந்தனிற் செம்மையி லுதித்துளந் திகழ்ந்தசெஞ் சுடரே

    vemmala viravatu viTitaru NantaniR jemmaiyi lutittuLan tikazhntajenj juTarE

  716. திரையெலாந் தவிர்த்துச் செவ்வியுற் றாங்கே வரையெலாம் விளங்க வயங்குசெஞ் சுடரே

    tiraiyelAn tavirttuj jevviyuR RAngkE varaiyelAm viLangka vayangkujenj juTarE

  717. அலகிலாத் தலைவர்க ளரசுசெய் தத்துவ உலகெலாம் விளங்க வோங்குசெஞ் சுடரே

    alakilAt talaivarka Larajujey tattuva ulakelAm viLangka vOngkujenj juTarE

  718. முன்னுறு மலவிருள் முழுவது நீக்கியே என்னுள வரைமே லெழுந்தசெஞ் சுடரே

    munnuRu malaviruL muzhuvatu nIkkiyE ennuLa varaimE lezhuntajenj juTarE

  719. ஆதியு நடுவுட னந்தமுங் கடந்த ஜோதியா யென்னுளஞ் சூழ்ந்தமெய்ச் சுடரே

    Atiyu naTuvuTa nantamung kaTanta jOtiyA yennuLanj jUzhntameyj juTarE

  720. உள்ளொளி யோங்கிட வுயிரொளி விளங்கிட வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே

    uLLoLi yOngkiTa vuyiroLi viLangkiTa veLLoLi kATTiya meyyaruT kanalE

  721. நலங்கொளப் புரிந்திடு ஞானயா கத்திடை வலஞ்சுழித் தெழுந்து வளர்ந்தமெய்க் கனலே

    nalangkoLap purintiTu njAnayA kattiTai valanjjuzhit tezhuntu vaLarntameyk kanalE

  722. வேதமு மாகம விரிவும் பரம்பர நாதமுங் கடந்த ஞானமெய்க் கனலே

    vEtamu mAkama virivum parampara nAtamung kaTanta njAnameyk kanalE

  723. எண்ணிய வெண்ணிய வெல்லாந்தர வெனுள் நண்ணிய புண்ணிய ஞானமெய்க் கனலே

    eNNiya veNNiya vellAntara venuL naNNiya puNNiya njAnameyk kanalE

  724. வலமுறு சுத்தசன் மார்க்க நிலைபெறு நலமெலா மளித்த ஞானமெய்க் கனலே

    valamuRu juttajan mArkka nilaipeRu nalamelA maLitta njAnameyk kanalE

  725. இரவொடு பகலிலா வியல்பொது நடமிடு பரமவே தாந்தப் பரம்பரஞ் சுடரே

    iravoTu pakalilA viyalpotu naTamiTu paramavE tAntap paramparanj juTarE

  726. வரநிறை பொதுவிடை வளர்திரு நடம்புரி பரமசித் தாந்தப் பதிபரஞ் சுடரே

    varaniRai potuviTai vaLartiru naTampuri paramajit tAntap patiparanj juTarE

  727. சமரச சத்தியச் சபையி னடம்புரி சமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே

    jamaraja jattiyaj japaiyi naTampuri jamaraja jattiyat taRjuyanj juTarE

  728. சபையென துளமெனத் தானமர்ந் தெனக்கே அபய மளித்ததோ ரருட்பெருஞ் ஜோதி

    japaiyena tuLamenat tAnamarn tenakkE apaya maLittatO raruTperunj jOti

  729. மருளெலாந் தவிர்த்து வரமெலாங் கொடுத்தே அருளமு தருத்திய வருட்பெருஞ் ஜோதி

    maruLelAn tavirttu varamelAng koTuttE aruLamu taruttiya varuTperunj jOti

  730. வாழிநின் பேரருள் வாழிநின் பெருஞ்சீர் ஆழியொன் றளித்த வருட்பெருஞ் ஜோதி

    vAzhinin pEraruL vAzhinin perunjjIr Azhiyon RaLitta varuTperunj jOti

  731. என்னையும் பொருளென வெண்ணியென் னுளத்தே அன்னையு மப்பனு மாகிவீற் றிருந்து

    ennaiyum poruLena veNNiyen nuLattE annaiyu mappanu mAkivIR Riruntu

  732. உலகியல் சிறிது முளம்பிடி யாவகை அலகில்பே ரருளா லறிவது விளக்கிச்

    ulakiyal jiRitu muLampiTi yAvakai alakilpE raruLA laRivatu viLakkij

  733. சிறுநெறி செல்லாத் திறனளித் தழியா துறுநெறி யுணர்ச்சிதந் தொளியுறப் புரிந்து

    jiRuneRi jellAt tiRanaLit tazhiyA tuRuneRi yuNarjjitan toLiyuRap purintu

  734. சாகாக் கல்வியின் றரமெலா முணர்த்திச் சாகா வரத்தையுந் தந்துமேன் மேலும்

    jAkAk kalviyin RaramelA muNarttij jAkA varattaiyun tantumEn mElum

  735. அன்பையும் விளைவித் தருட்பே ரொளியால் இன்பையு நிறைவித் தென்னையு நின்னையும்

    anpaiyum viLaivit taruTpE roLiyAl inpaiyu niRaivit tennaiyu ninnaiyum

  736. ஓருரு வாக்கியா னுன்னிய படியெலாஞ் சீருறச் செய்துயிர்த் திறம்பெற வழியா

    Oruru vAkkiyA nunniya paTiyelAnj jIruRaj jeytuyirt tiRampeRa vazhiyA

  737. அருளமு தளித்தனை யருணிலை யேற்றினை அருளறி வளித்தனை யருட்பெருஞ் ஜோதி

    aruLamu taLittanai yaruNilai yERRinai aruLaRi vaLittanai yaruTperunj jOti

  738. வெல்கநின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர் அல்கலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி

    velkanin pEraruL velkanin perunjjIr alkalin ROngkiya varuTperunj jOti

  739. உலகுயிர்த் திரளெலா மொளிநெறி பெற்றிட இலகுமைந் தொழிலையும் யான்செயத் தந்தனை

    ulakuyirt tiraLelA moLineRi peRRiTa ilakumain tozhilaiyum yAnjeyat tantanai

  740. போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி

    pORRinin pEraruL pORRinin perunjjIr ARRali nOngkiya varuTperunj jOti

  741. மூவருந் தேவரு முத்தருஞ் சித்தரும் யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை

    mUvarun tEvaru muttarunj jittarum yAvarum peRRiTA viyalenak kaLittanai

  742. போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி

    pORRinin pEraruL pORRinin perunjjIr ARRali nOngkiya varuTperunj jOti

  743. சித்திக ளனைத்தையுந் தெளிவித் தெனக்கே சத்திய நிலைதனைத் தயவினிற் றந்தனை

    jittika Lanaittaiyun teLivit tenakkE jattiya nilaitanait tayaviniR Rantanai

  744. போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி

    pORRinin pEraruL pORRinin perunjjIr ARRali nOngkiya varuTperunj jOti

  745. உலகினி லுயிர்களுக் குறுமிடை யூறெலாம் விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க

    ulakini luyirkaLuk kuRumiTai yURelAm vilakanI yaTaintu vilakkuka makizhka

  746. சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக உத்தம னாகுக வோங்குக வென்றனை

    juttajan mArkka jukanilai peRuka uttama nAkuka vOngkuka venRanai

  747. போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி

    pORRinin pEraruL pORRinin perunjjIr ARRali nOngkiya varuTperunj jOti

  748. அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி

    aruTperunj jOti yaruTperunj jOti aruTperunj jOti yaruTperunj jOti

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout