திருவருட்பா · 83மங்களம்

புங்கவர் புகழுமாதங்கமு கந்திகழ்
எங்கள் கணேசராந் துங்கற்கு - மங்களம்.
1
போதந் திகழ்பர நாதந் தனில்நின்ற
நீதராஞ் சண்முக நாதற்கு - மங்களம்.
2
பூசைசெய் வாருளம் ஆசைசெய் வார்தில்லை
ஈசர் எமதுநட ராஜற்கு - மங்களம்.
3
பூமி புகழ்குரு சாமி தனைஈன்ற
வாமி எனுஞ்சிவ காமிக்கு - மங்களம்.
4
புங்கமி குஞ்செல்வந் துங்கமு றத்தரும்
செங்க மலத்திரு மங்கைக்கு - மங்களம்.
5
பூணி லங்குந்தன வாணி பரம்பர
வாணி கலைஞர்கொள் வாணிக்கு - மங்களம்.
6
புண்ணிய ராகிய கண்ணிய ராய்த்தவம்
பண்ணிய பத்தர்க்கு முத்தர்க்கு - மங்களம்.
7

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com