திருவருட்பா  70. அருணகிரி விளங்க வளர்ந்த சிவக்கொழுந்து

திருவிளங்கச்  சிவயோக  சித்தியெலாம்  விளங்கச் 
சிவஞான  நிலைவிளங்கச்  சிவாநுபவம்  விளங்கத் 
தெருவிளங்கு  திருத்தில்லைத்  திருச்சிற்றம்  பலத்தே 
திருக்கூத்து  விளங்கஒளி  சிறந்ததிரு  விளக்கே 
உருவிளங்க  உயிர்விளங்க  உணர்ச்சியது  விளங்க 
உலகமெலாம்  விளங்கஅரு  ளுதவுபெருந்  தாயாம் 
மருவிளங்கு  குழல்வல்லி  மகிழ்ந்தொருபால்  விளங்க 
வயங்கருண  கிரிவிளங்க  வளர்ந்தசிவக்  கொழுந்தே. 
1

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com