திருவருட்பா  109. வினா உத்தரம்

ஆகமமு  மாரணமு  மரும்பொருளென்  றொருங்குரைத்த 
ஏகவுரு  வாகிநின்றா  ரிவரார்சொல்  தோழி 
மாகநதி  முடிக்கணிந்து  மணிமன்று  ளனவரத 
நாகமணி  மிளிரநட  நவில்வார்காண்  பெண்ணே. 
1
அருளாலே  அருளிறை  அருள்கின்ற  பொழுதங் 
கனுபவ  மாகின்ற  தென்னடி  தாயே 
தெருளாலே  மருளாலே  தெரியாது  தெரியும் 
திருநட  இன்பம்என்  றறியாயோ  மகளே. 
2
அறிவாலே  அறிவினை  அறிகின்ற  பொழுதங் 
கனுபவ  மாகின்ற  தென்னடி  தாயே 
செறிவாலே  பிறிவாலே  தெரியாது  தெரியும் 
திருவருள்  உருவம்என்  றறியாயோ  மகளே. 
3

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com