திருவருட்பா  108. இன்னந் தயவு வரவிலையா

இன்னந்  தயவுவர  விலையா  -  உனக்கென்மீதில் 
என்ன  வர்மஞ்  சொலையா. 
1
அன்னம்  பாலிக்குந்தில்லைப்  பொன்னம்  பலத்திலாடும் 
அரசே  -  அரசே  -  அரசேயென்  றலறவும்  இன்னந் 
2
சின்னஞ்  சிறுவயதி  லென்னை  யடிமைகொண்ட 
சிவமே  -  சிவமே  -  சிவமேயென்  றலறவும்  இன்னந் 
3
முன்னம்  பிழைபொறுத்தா  யின்னம்  பொறாதுவிட்டால் 
முறையோ  -  முறையோ  -  முறையோவென்  றலறவும்  இன்னந் 
4
தன்னை  யறியாவென்னை  யின்ன  லுறச்செய்தாயே 
தகுமோ  -  தகுமோ  -  தகுமோவென்  றலறவும்  இன்னந் 
5
பண்டு  மகிழ்ந்தெனையாட்  கொண்டு  கருணைசெய்த 
பரமே  -  பரமே  -  பரமேயென்  றலறவும்  இன்னந் 
6
கொண்டு  குலம்பேசுவா  ருண்டோ  வுலகிலெங்கள் 
குருவே  -  குருவே  -  குருவேயென்  றலறவும் 
7
இன்னந்  தயவுவர  விலையா  -  உனக்கென்மீதில் 
என்ன  வர்மஞ்  சொலையா. 
8

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com