திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 64

பாயிரம்ஆகமச் சிறப்பு

தொடர்ந்து படிக்கread this section continuously

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்எண்ணிலி கோடி தொகுத்திடு மாயினும்அண்ணல் அறைந்த அறிவறி யாவிடின்என்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.

உரை

உயிர்கள் தன்னை அடைய இறைவன் அருளிய சிவாகமங்களைத் தொகுத்தால், அவை பல கோடிகளாக இருக்கும். இருப்பினும், இறைவனை எண்ணி அவனருள் வேண்டி, அவன் கொடுக்கும் ஞானத்தை வைத்தே அவற்றை அறிந்துகொள்ள முடியும். அவ்வாறு இறைவன் கொடுத்த ஞானத்தைக் கொண்டு ஆகமத்தை உணராமல், வெறும் வார்த்தைகளைக் கொண்டு பொருள் புரியாமல் ஓதினால், அந்த எண்ணமுடியாத கோடிகள் அனைத்தும் நீர்மேல் எழுதிய எழுத்துக்கள் போல யாருக்கும் பயனில்லாமலேயே இருந்துவிடும்.

வரி வாரியாக

  • வரி 1

    உயிர்கள் தன்னை அடைய இறைவன் அருளிய சிவாகமங்களைத் தொகுத்தால், அவை பல கோடிகளாக இருக்கும்.

  • வரி 2

    இருப்பினும், இறைவனை எண்ணி அவனருள் வேண்டி, அவன் கொடுக்கும் ஞானத்தை வைத்தே அவற்றை அறிந்துகொள்ள முடியும்.

  • வரி 3

    அவ்வாறு இறைவன் கொடுத்த ஞானத்தைக் கொண்டு ஆகமத்தை உணராமல், வெறும் வார்த்தைகளைக் கொண்டு பொருள் புரியாமல் ஓதினால்,

  • வரி 4

    அந்த எண்ணமுடியாத கோடிகள் அனைத்தும் நீர்மேல் எழுதிய எழுத்துக்கள் போல யாருக்கும் பயனில்லாமலேயே இருந்துவிடும்.

திருமந்திரம் பாடல் #64

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout