திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 108

பாயிரம்திரு மும்மூர்த்திகளின் முறைமை

தொடர்ந்து படிக்கread this section continuously

ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்பாலொத்த மேனி பணிந்தடி யேன்தொழமாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீஞாலத்து நம்மடி நல்கிடென் றானே.

உரை

இறைவனின் திருக்கோலத்தை அடியவர்களும் இறப்பில்லாத தேவர்களும் சூழ்ந்து நிற்க, பால் போன்ற வெண்ணீறு அணிந்த அவனின் திருவுடலைப் பணிந்து அடியவனாகிய யான் தொழுது நின்றேன். 'காக்கும் தொழிலைச் செய்யும் திருமாலுக்கும், படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மனுக்கும் நீ சரிசமமானவன்' என்று இறைவன் எமக்குக் கூறினான். 'ஆகையால் உலகத்திற்குச் சென்று எமது திருவடியின் திருவருளை அனைவருக்கும் வழங்கிடுக' என்று அருளினான்.

பிரம்மனும் திருமாலும் ஒரு சமயத்தில் ஆன்மாக்களாக இருந்து செய்த மாதவங்களாலேயே இறைவனிடமிருந்து படைக்கும் தொழிலையும் காக்கும் தொழிலையும் பெரும் பேறாகப் பெற்றார்கள். எனவே, மாதவம் செய்த இறைவனின் அடியவர்கள் அவர்களுக்குச் சரிசமமானவர்களே. அதனால், உலகில் இறைவனின் திருவடியைப் போற்றி அதன் பயனை மற்றவர்களுக்கும் அருளும் மாதவம் செய்த சிவனடியார்கள் அனைவருமே பிரம்மனுக்கும் திருமாலுக்கும் சரிசமமானவர்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனின் திருக்கோலத்தை அடியவர்களும் இறப்பில்லாத தேவர்களும் சூழ்ந்து நிற்க,

  • வரி 2

    பால் போன்ற வெண்ணீறு அணிந்த அவனின் திருவுடலைப் பணிந்து அடியவனாகிய யான் தொழுது நின்றேன்.

  • வரி 3

    காக்கும் தொழிலைச் செய்யும் திருமாலுக்கும், படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மனுக்கும் நீ சரிசமமானவன் என்று இறைவன் எமக்குக் கூறினான்.

  • வரி 4

    ஆகையால் உலகத்திற்குச் சென்று எமது திருவடியின் திருவருளை அனைவருக்கும் வழங்கிடுக என்று அருளினான்.

திருமந்திரம் பாடல் #108

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout