திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 107

பாயிரம்திரு மும்மூர்த்திகளின் முறைமை

தொடர்ந்து படிக்கread this section continuously

பயனறிந் தவ்வழி எண்ணும் அளவில்அயனொடு மால்நமக் கன்னியம் இல்லைநயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்வயனம் பெறுவீர் அவ்வானவ ராலே.

உரை

இறைவனை அடையவேண்டும் என்பதையே பிறவிப்பயனாக அறிந்துகொண்டு, அதற்கான வழிகள் என்னவென்று யோசிக்கும் அளவில், எந்தத் தெய்வத்தை வணங்கினாலும் ஒன்றே; இவர்களுக்குத் திருமாலும் பிரம்மனும் அன்னியர்கள் இல்லை. முக்கண் முதல்வனாகிய குருநாதன் சிவபெருமானுக்குச் சொந்தமே அவர்கள். ஆகையால் உண்மையான பயனை அடையவேண்டும் என்று எண்ணி எந்த வானவர்களை வணங்கினாலும், அதற்கான பயனைச் சதாசிவமூர்த்தியே அந்த வானவர்களாக இருந்து அருளுவார்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனை அடையவேண்டும் என்பதையே பிறவிப்பயனாக அறிந்துகொண்டு, அதற்கான வழிகள் என்னவென்று யோசிக்கும் அளவில்,

  • வரி 2

    எந்தத் தெய்வத்தை வணங்கினாலும் ஒன்றே; இவர்களுக்குத் திருமாலும் பிரம்மனும் அன்னியர்கள் இல்லை.

  • வரி 3

    முக்கண் முதல்வனாகிய குருநாதன் சிவபெருமானுக்குச் சொந்தமே அவர்கள்.

  • வரி 4

    ஆகையால் உண்மையான பயனை அடையவேண்டும் என்று எண்ணி எந்த வானவர்களை வணங்கினாலும், அதற்கான பயனைச் சதாசிவமூர்த்தியே அந்த வானவர்களாக இருந்து அருளுவார்.

திருமந்திரம் பாடல் #107

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout